பாகம் 1
பாகம் 2
************************
பாகம்: 3
-ஃபோன்ல யாரு அஷோக்? என்றார் குணா.
-தெரியல சார். எவனோ விளையாடறானா நெஜமான்னு தெரியல. மூணு கொலை முடிஞ்சிருக்கு. இன்னும் ரெண்டு பேர் பாக்கிங்கறான்.
-எ.. என்ன சொல்றீங்க அஷோக்.. இன்னும் ரெண்டு கொலையா?
-ஆமா.. சரி.. நீங்க என்ன விஷயமா வந்தீங்க?
-சொல்றேன்... உங்களுக்கு கிருஷ்ணகுமார்ன்னு யாரையாவது தெரியுமா?
-தெரியாதே.. யார் அது?
-ப்ளாக் எல்லாம் எழுதுவாரு.. இன்னைக்கு காலைல அவருக்கு உங்ககிட்டேர்ந்து ஒரு லெட்டர் போயிருக்கு.
-என்கிட்டேர்ந்தா? என்ன சொல்றீங்க?
-ஆமா.. அவரை க்ரீன் பார்க் ரெஸ்டாரண்டெக்கு வரச் சொல்லி நீங்க அவருக்கு ஏதாவது லெட்டர் எழுதினீங்களா?
-நான் ஏன் லெட்டர் எழுதறேன் குணா?
குணா பதட்டமானார். ‘நெனைச்சேன்’ என்று முணுமுணுத்தார்.
’என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க குணா’ என்றான்.
-கிருஷ்ணகுமார்ன்னு ஒருத்தர். பரிசல்காரன்ங்கற பேர்ல ப்ளாக் எழுதுவாரு. ஃப்ரான்ஸிஸ்ன்னு நம்ம டிபார்ட்மெண்ட் ஆள் ஒருத்தருக்கு அவர் ஃப்ரெண்டு. நம்ம மண்டைய உடைச்சுகிட்டிருக்கற இந்த கேஸைப் பத்தி அவர்கிட்ட சொல்லிருக்காரு.. அவரும் ஏதோ ஆர்வத்துல அதை கதை மாதிரி தன்னோட ப்ளாக்ல எழுதிட்டாரு...
-இந்த பத்திரிகைக்காரங்கதான் நடக்கறதையெல்லாம் அப்படியே எழுதறாங்களே... இதுல இவங்க வேறயா?
-இவர் பத்திரிகைச் செய்திகளையும், அவர் ஃப்ரெண்டுகிட்ட கேட்டதையும் வெச்சு எழுதிருக்கார். முக்கியமான விஷயம் இந்தக் கொலைல அவன் கைல யாமினின்னு டாட்டு குத்திருந்தது இல்லையா?
-ஆமாம்.
-அந்தப் பெயரைப் பார்த்ததும் சுவாரஸ்யத்துக்காக ரெண்டு வருஷம் முன்னாடி டெல்லில நடந்த ஒரு சில சம்பவங்களைத் தொகுத்து தன்னோட வலைல எழுதிருக்காரு.
-என்ன எழுதிருக்காரு?
-சொல்றேன்.. அதுக்கு முன்னாடி அந்த கிருஷ்ணகுமார் இப்ப எங்க இருக்காருன்னு பார்க்கணும்..
-சரி.. என் லெட்டர் பேட்ல இருந்து என்ன லெட்டர் அவருக்கு போயிருக்கு?
-அவரை க்ரீன்பார்க் ரெஸ்டாரெண்டுக்கு வரச் சொல்லி நீங்க எழுதினதா அதுல எழுதிருக்கு. அவர் தன்னோட ஃப்ரெண்டுகிட்ட கேட்டிருக்காரு. அந்த ஃப்ரெண்டு உங்ககிட்ட நேரடியா கேட்க பயப்பட்டு நான் கூட இருப்பேன்னு எனக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன்னான். நீங்க அஞ்சு மணிக்கே கிளம்பினதா ஸ்டேஷன்ல சொன்னாங்க. அதான் நான் இங்க வந்தேன்..
-சரி.. இம்மீடியட்டா அந்த கிருஷ்ணகுமாரைக் கூப்ட்டுங்க.. அவர் எங்க இருக்காரோ அங்க போகலாம்.. கிளம்பிக்கொண்டே சொன்னான் அஷோக்ராஜா.
-ஒரு நிமிஷம்..
குணா தன் அலைபேசியிலிருந்து தன் நண்பருக்கு அழைத்தார்.
-ஃப்ரான்ஸிஸ்.. நாம நினைச்ச மாதிரியே இதுல ஏதோ விவகாரம் இருக்கு. நான் இப்ப எஸ்.ஐ. வீட்லதான் இருக்கேன். சார் யாருக்கும் லெட்டர் தரலை. இம்மீடியட்டா கிருஷ்ணகுமாரோட நம்பர் கொஞ்சம் குடுங்க. அவரை க்ரீன்பார்க் போகவிடாம தடுக்கணும்...’
எதிர்முனையில் இருந்து வெறும் சிரிப்புச் சத்தம்தான் கேட்டது..
*************************************
யாமினி சிவப்பாய் இல்லை. யாமினி கருப்பாய் இல்லை. மாநிறத்தில் இருந்தாள். வேண்டிய இடத்தில் வளைவுகளும், நெளிவுகளுமாய் பார்ப்பவர்களின் அரை நிமிடத்தை அபரித்துக் கொள்ளும் அழகாய் இருந்தாள்.
கண்ணாடியில் தன்னை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள். கொண்டிருக்கும்போதே அலைபேசி அழைத்தது.
‘வந்துட்டேன்.. வந்துட்டேண்டா தடியா..’ செல்லமாகச் சொல்லிக் கொண்டே ஃபோனை ஆன் செய்யாமல் ஓடினாள். அவசர அவசரமாக தன்னுடைய ஃப்ளாட்டைப் பூட்டிவிட்டு அறைவிட்டு லிஃப்டிறங்கி ஓடினாள்.
அபார்ட்மெண்ட் வாசலில் பைக்கில் அமர்ந்திருந்தான் அவன்.
“எவ்ளோ நேரம் மேக்கப் போட? வர்றவன் போறவன்லாம் என்னைப் பார்த்துட்டுப் போறான்” – சலிப்பாய் சொன்னான் அவன்.
அவன்?
ஜெய் .யாமினியின் காதலன். கம்ப்யூட்டர் வல்லுநன். இரண்டு வருடங்களாக யாமினியைக் காதலித்துக் கொண்டிருக்கிறான். அவள் விஞ்ஞானி வசந்த் ஆதிமூலத்திடம் சேர்ந்து டெல்லிக்கு மாற்றலாகி வந்ததும், இவனும் எப்படியோ மாற்றல் வாங்கிக் கொண்டு டெல்லி வந்துவிட்டான்.
அவள் பில்லியனில் ஏறியதும் “போலாமா?’ என்று கேட்டு பைக்கை ஸ்டார்ட்டினான்.
பைக் நேராக அந்த பார்க்கினுள் நுழைந்தது. ஆங்காங்கே அமர்ந்திருந்த ஜோடிகளைத் தாண்டி, தனியிடத்தில் அமர்ந்து கொண்டார்கள் அவர்கள்.
“யாமினி... எங்க போகப்போற? ஒரு வாரத்துக்குப் பார்க்க முடியாத அளவுக்கு?”
“எங்கயும் இல்ல.. ஃபாரின்லேர்ந்து சில சயிண்டிஸ்ட்ஸ் வந்திருக்காங்க.. அவங்களுக்கு எங்க ஆராய்ச்சிகள் பத்தி ப்ராக்டிகலா சிலதை விளக்க வேண்டியதா இருக்கு. ரொம்ப கான்ஃபிடென்ஷியல்.. அதுனால ஒரு வாரம் அந்தக் காம்பவுண்டை விட்டு யாருமே வெளில வரமாட்டோம். எங்க மொத்த டீமும் உள்ளதான் இருக்கும்”
“ப்ச்.. எனக்கு இது பிடிக்கவே இல்லை யாமினி..”
“என்ன பண்றது ஜெய்.... எனக்குப் பிடிச்சிருக்கே... இந்த ப்ராஜக்ட் சக்ஸஸ் ஆச்சுன்னா அப்பறம் நான் வேலைக்கே போகல.. போதுமா?”
ஜெய் சிரித்தான். “அதெல்லாம் வேண்டாம் யாமினி.. உன் இஷ்டம் என்னமோ அதைச் செய்.. வீணா எனக்காக உன் லட்சியத்தை கைவிட வேண்டாம்...”
பிறகு கொஞ்ச நேரம் இருவருமாக பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிச் சென்றார்கள்.
காஃபி ஷாப் போய்விட்டு நேராக யாமினி குடியிருக்கும் அபார்ட்மெண்ட் வாசலில் அவளை இறக்கிவிட்டான் ஜெய். அவன் விடைபெற்றுச் சென்றதும் நேராக தன் அறைக்குச் சென்று திறந்தாள் யாமினி.
உள்ளே நுழைந்து திரும்பியவள் அதிர்ந்தாள்.
காவி நிறப்பற்களில் குரூரமான சிரிப்போடு பீரோவிற்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டான் உயரமான ஒருத்தன்.
*******************************
மூன்றாம் பாகத்தை எழுதி முடித்துவிட்டு SIGN OUT செய்ய எத்தனித்தபோது சாட்டில் வந்தார் அவர்.
‘நான் பாலா.. நேற்றைக்கு உங்களிடம் பின்னூட்டம் போட்டு கேட்டேனே.. நீங்கள் எழுதுவீர்களா என்று தெரியவில்லை. அதுதான் நானே உள்ளே வந்துவிட்டேன்..’
‘பரவாயில்லை பாலா.. உங்கள் ப்ரொஃபைலைத் திறக்கிற எல்லாருக்குமே ஒரு குழப்பம் வரும்..’
‘என்னது அது பரிசல்?’
‘உங்கள் வலையைக் க்ளிக்கினால் எப்படி ஆதியின் வலைப்பூவுக்கு செல்கிறது என்று. பிறகுதான் பார்த்தேன். அது நீங்கள் பின் தொடரும் ப்ளாக். ஒரே ப்ளாக்கைத் தான் தொடர்கிறீர்கள் போல..’
‘ஆம் பரிசல்.. சரி அதைவிடுங்கள்.. யாமினி கதை நடப்பது டெல்லியில்.. கொலைகள் நடப்பது திருப்பூரில். இரண்டுக்கும் என்ன தொடர்பு?’
‘நாளை பாருங்கள்.. தெரியும்..’
‘ஏன் இன்றைக்குச் சொல்லுங்களேன்..’
‘இல்லை.. அவசரமாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும்.. எஸ். ஐ. அஷோக்ராஜாவிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. வருகிறேன்’
சொல்லிவிட்டு, கணினியை அணைத்துவிட்டு எழுந்தேன்.
குளித்து உடைமாற்றி கிளம்பினேன்.
இரண்டு கிலோமீட்டர்கள் தாண்டியதும் ஃப்ரான்ஸிஸுக்கு ஃபோன் செய்யலாம் என்று பைக்கை ஓரங்கட்டி, பாக்கெட்டில் கைவிட்டபோதுதான் கவனித்தேன்..
ஃபோனை மறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன்..
(தொடரும்)
**************
19 comments:
I the first
\\யாமினி சிவப்பாய் இல்லை. யாமினி கருப்பாய் இல்லை. மாநிறத்தில் இருந்தாள்.\\
நேதி நேதி என்று பிரம்மம் எது என்ற கேள்விக்கு இது இல்லை,அது இல்லை என்று வேதத்தில் வரும். அந்த மாதிரி இல்ல இருக்கு நீங்க சொல்றது.
\\லிஃப்டிறங்கி ஓடினாள்.\\
புரியலியே. லிப்ட்ல இறங்கி எப்படி அதுலயே ஓட முடியும்
\\அவன் விடைபெற்றுச் சென்றதும் நேராக தன் அறைக்குச் சென்று திறந்தாள் யாமினி.\\
அபார்ட்மென்டுக்குள் வந்து அப்புறம் தான் அவள் அறையை அடைய முடியும் இல்லியா. என்னை அறையனும்னு தோணுதா உங்களுக்கு:)
அண்ணே.. ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதண்ணே.. உடம்பு தாங்காது.. சீக்கிறம் அடுத்த பாகம் வேணும்..
உங்களை வைத்து பின்னப்பட்ட கதை...... படிக்க படிக்க சுவாரஸ்யம்...
!@#$%^&*())(*&^%$#!@##$%^&*( எனக்கு இங்க மூச்சா வர மாதிரி இருக்கு....
//இரண்டு கிலோமீட்டர்கள் தாண்டியதும் ஃப்ரான்ஸிஸுக்கு ஃபோன் செய்யலாம் என்று பைக்கை ஓரங்கட்டி, பாக்கெட்டில் ///
த்ரில் கதையில் ஒரு சமுதாய சிந்தனை...அடடா......!!!
//ஃபோனை மறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன்..//
எதிர் பார்த்ததே....!!!!
க்ரிஷ்ணகுமாரன் trademark.......
நுட்பமான கதைப்பின்னல்.... இன்னும் நெறைய technical சமாச்சாரங்கள் சேர்த்தால் செம ஹிட்[தலைவர் படம் போலே] ஆகும்..!!! வா..ழ்...ள்.....
பாஸ் என்னையும் கதையில சேத்துக்குங்க!...கதை தான் என் பேர்ல வர மாட்டேங்குது!..அட்லீஸ்ட் கதையிலாவது என் பேர் வரட்டுமே!....நான் வேணா போன் பண்ணவா!....
ஹை ஸ்பீட் பரிசல்..... செமயா போகுது
கதை செம வேகமா போகுது...
கதை டாப் கியரில் போகிறது... அப்படியே மெயின்டேயின் பண்ணி ஒரு முழு நாவலா பார்ம் பண்ணுணீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்.
படபடப்பா இருக்கு பாஸ்!!!
சமூகத்துக்கு சொல்லிக்கிறேன் - பரிசலோட அந்த ஃபோனை நான் எடுக்கவில்லை. இதை பெங்களூரில் இருந்து மதியம் 2:37 (08 செப்டம்பர் 2010) இல் சுய நினைவுடன் எழுதிக் கொடுக்கிறேன்.
ப்ரியமுடன்,
--பாலா அறம்வளர்த்தான்
அசத்துறிங்க பரிசல்..
என்ன செய்ய போகிறாய் மினி? தொடரை வாசித்துவிட்டு ஒரு முடிவை எடுத்தேன்.மிஸ்.யாமினி தொடரை முழுதும் வெளிவந்த பின் வாசிப்பது என்று ஆனாலும் ஆர்வக்கோளாறால் இன்று வாசித்துவிட்டேன்.அருமை,அடுத்தது எப்போ?
beautifullllllllllll
ரொம்ப அழகா கதை போயிட்டு இருக்கு, நீங்க ஒருநாள் விட்டு ஒருநாள் பகுதிகளை போடுகிற மாதிரி இருக்கு அப்படீனா வெள்ளிகிழமை வரைக்கும் வெயிட் பண்ணனுமா கிளைமாக்ஸ் படிக்க..................
Intersting!!!!!!
மிகவும் நன்றாக நகர்கிறது யாமினி தொடர் தொரட்டும் உங்கள் கதை பயனம்
வேண்டாம் பரிசல் GreenPark போகாதீங்க ஆபத்து!!!!
பதிவு மீண்டும், மீண்டும் சூப்பரா இருக்கு.....எங்கள் வாழ்த்துகளுடன்
Post a Comment