பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4
** ** ** ** **
பகுதி - 5
“உங்க வாக்குமூலத்துக்கு ரொம்ப நன்றி குணா” – தெளிவாகக் கேட்டது சப் இன்ஸ்பெக்டர் அஷோக்ராஜாவின் குரல்.
குணா பதட்டமாய் நிமிர்ந்தார். ஆனால் திமிரான குரலில் தொடர்ந்தார்: “எனக்குத் தெரியும் அஷோக்.. நீ என்னை மோப்பம் பிடிச்சுடுவன்னு.. உன்னை
ஏமாத்தறதுக்காகத்தான் என் ஃப்ரெண்டை விட்டு நான் உன்கூட இருக்கறப்பவே உனக்கு மிரட்டல் விடுத்தேன். ஆனா நீ எப்படியோ என்னைத் தொடர்ந்து வந்துட்ட.. சரி.. அப்படியே நில்லு. உனக்கும் எமலோகம் போற நேரம் வந்தாச்சு” என்று கையிலிருந்த பிஸ்டலை அஷோக்கை நோக்கி நீட்டினார்.
கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான் அஷோக். “என்ன குணா.. உண்மையான பிஸ்டலை உன்கிட்ட கொடுக்க நானென்ன முட்டாளா...? அது டம்மி துப்பாக்கி.. அதிலேர்ந்து வந்தது டம்மி புல்லட்”
அஷோக் சொல்ல “என்னது?” என்று பெரிய எழுத்தில் அதிர்ச்சிகாட்டிய குணா விழுந்து கிடந்த என்னைப் பார்த்தான்.
நான் எழுந்தேன். மார்புப் பகுதியில் மறைத்து வைத்திருந்து சிந்தப்பட்ட செயற்கை ரத்தத்தால் உடல் முழுவதும் பிசுபிசுப்பாக இருந்தது. பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு மினி ரெகார்டரை எடுத்து அஷோக்ராஜா கையில் ஒப்படைத்தேன்.
எல்லாவற்றையும் அதிர்ச்சி விலகாத கண்களில் கவனித்துக் கொண்டிருந்தான் குணா. அஷோக்ராஜாவின் கையில் முளைத்திருந்த துப்பாக்கி அவனை அசையவிடாமல் செய்தது.
“என்ன குணா.. அப்படிப் பார்க்கறீங்க? உங்க மேல சந்தேகப்புள்ளி எங்க விழுந்தது தெரியுமா? காலேஜ் பையன் இறந்தப்ப நாம அந்த பீடா கடைல நின்னு விசாரிச்சுகிட்டிருந்தோம். அப்ப அந்த கடைக்காரன் யூனிஃபார்ம்ல இருந்த என்னை விட்டுட்டு உனக்கு விஷ் பண்ணினான். நான் அதை சாதாரணமாத்தான் எடுத்துகிட்டேன். நீங்க இறந்தவனோட பாடிகிட்ட போனப்ப ‘அவரை உனக்கு முன்னாடியே தெரியுமா’ன்னு கேட்டதுக்கு ஒரு மணிநேரம் முன்னாடி நீங்க அங்க பீடா வாங்கிச் சாப்டதா சொன்னான். எனக்கு எங்கயோ நெருடலா இருந்தது.
அப்ப உங்க பின்னணியை விசாரிச்சப்ப நீங்க டெல்லிலேர்ந்து விருப்பமா ட்ரான்ஸ்ஃபர் கேட்டு இங்க வந்திருக்கறது தெரிஞ்சது. அந்தப் பையனுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீணா நான் குழப்பிக்கறேன்னு விட்டுட்டேன்..
கடைசியா பார்க்ல அந்த டாட்டூ குத்திருந்தவன் கொலையைப் பத்தி விசாரிச்சப்ப அவன் தங்கியிருந்த ரூம்ல அவன் இதுக்கு முன்னாடி டெல்லிலயோ, பாம்பேலயோ இருந்தவன்னு சொன்னாங்க. ஆனா யாருக்கும் தெளிவா தெரியல. நீங்க வேற டெல்லில இருந்தீங்களா.. உங்களைப் பத்தி இன்னும் டீடெய்ல்டா விசாரிச்சப்ப உங்க தம்பி ஆக்ஸிடெண்ட்ல இறந்த விஷயமும் வெளில தெரிஞ்சது.. உடனே நான் பரிசல்கிட்ட ஒரு வேலை செய்யச் சொன்னேன்..”
நான் தொடர்ந்தேன்..
“அவர் என்கிட்ட கண்டிப்பா இந்தக் கொலைகளுக்கும் குணாவுக்கும் ஏதோ லிங்க் இருக்கு. ஆனா என்னான்னு தெரியல. நீங்க யாமினி விஷயத்தையும், இதையும் லிங்க் பண்ணி தொடர் மாதிரி எழுதுங்க.. அதை எப்படியாவது குணா பார்வைல பட வெச்சுடறேன். அதுக்கப்பறம் அவர் ரியாக்ஷன் என்னான்னு பார்க்கலாம்னு சொன்னார்”
“முட்டாள்தனமா இருக்கு நீ சொல்றது.. நான் உன்கிட்ட நடந்த்தையெல்லாம் சொன்னது நேத்துதான். நீ அதுக்கு முன்னாடியே யாமினியை ஒருத்தன் வந்து கொலை பண்ணினதா சொன்னியே அதெப்படி?”
“அது என் யூகம் குணா” அஷோக்ராஜா இடைமறித்துச் சொன்னான். “இந்த மூணு கொலைகள்லயும் அகோனைட் என்கிற விஷம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அரசு டாக்டர் என்னிடம் சொன்னார். அகோனைட் விஷத்தால் ஒருவர் இறந்தால் எந்தப் பரிசோதனையிலும் கண்டுபிடிக்க முடியாதாமே? ஆக, அதே விஷத்தால் யாமினி இறந்தாள் என்று எழுதினால் உன்னிடமிருந்து என்ன ரியாக்ஷன் வருமென்று பார்க்க அப்படி எழுதச் சொன்னேன்”
குணா குரல் உடைந்தபடி சொன்னான்: “யாமினி இறந்தது உண்மை. ஜெய் இறந்த மறுநாள் வசந்த் ஆதிமூலம் கெஸ்ட் ஹவுஸில் நானே அவர்கள் பேசுவதைக் கேட்டேன். ஆனால் எப்படிக் கொன்றார்கள் என்று தெரியவில்லை..”
“ஓகே குணா... அமைதியான முறையில் சரணடைவதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை” என்ற அஷோக் குணாவை முன் நடத்தி நின்று கொண்டிருந்த போலீஸ் படையிடம் ஒப்படைத்தான்.
பிறகு என்னிடம் திரும்பி “என்ன பரிசல்.. எப்படி ஃபீல் பண்றீங்க?” என்றான்.
“எப்படி உணர்கிறீர்கள் பரிசல்?”னு கேளுங்க. அப்பறம் யாராச்சும் வந்து என்ன நெனைச்சா சுத்தத்தமிழ், நெனைச்சா வழக்குத் தமிழான்னு கேள்வி கேட்டு வைப்பாங்க” என்றேன் நான்.
அஷோக் சிரித்துக் கொண்டிருக்கும்போதே ஃபோன் அடிக்க எடுத்தான்.
“ஹலோ.. நான் சுசி பேசறேன்”
“எந்த சுசி?”
“எந்த சுசி? நார்வே சுசியா?”
“அட.. உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“பரிசல் சொல்லிருக்காருங்க.. அதுவும் ப்ரொஃபைல்ல Industry: Bankingன்னு போட்டு Occupationல நீங்க போட்டிருக்கற விஷயத்துக்கு நான்தான் உங்களைத் தேடி வரணும்..”
“ஐயையோ.. அது சும்மா போட்டதுங்க..”
“சரி..பரிசல்கிட்ட பேசணுமா?””
“இல்லை. அவர் ஃபோன்ல கூப்டப்ப உங்ககூட இருந்தாலும் இருப்பாருன்னாங்க. ஆக்சுவலா நான் பேச நினைக்கறது உங்ககூடதான்”
“சொல்லுங்க..”
“ஏன் குணா, அந்தக் கொலைகாரன், இதோ இந்தப் பார்ட்ல நீங்க எல்லாரும் இப்படி விளக்கம் கொடுத்து கழுத்தறுக்கறீங்க?”
“வேற என்ன பண்றது சுசி? அவரென்ன முழுநீளத் தொடர்கதையா எழுதறாரு? அவரே எப்படியாவது முடிச்சா சரின்னு இருக்காரோ என்னமோ”
“சரி.. இன்னொரு கேள்வி..”
“இருங்க பரிசல்கிட்டயே தர்றேன்” என்று ஃபோனை நீட்ட ‘நான் பாட்டுக்கு அவியல் பொரியல்னு எதையாவது எழுதிட்டு போய்ட்டே இருந்திருப்பேன்யா.. இப்படி மாட்டிவிட்டுட்டயே..’’ என்று மனதுக்குள் சலித்தவாறே.. என்ன கேட்கப் போகிறார்களோ என்று சற்றே பயந்தவாறே... “ஹலோ...” என்றேன்.
(முற்றும்)
. . . .
.
24 comments:
:-)
சொல்ல வார்த்தை இல்லை!!!
:((
விற்ற்ற்ற்ற்ற்ன்னு போன ராக்கெட் தொபகடீர்னு விழுந்த மாதிரி ஆச்சிண்ணே.. போன வாரம் வரை சும்மா ஜ்ஜிவ்வுன்னு இருந்துச்சி.. அதிலும் முடிக்கும் போது பரிசல் சுடப்பட்டவுடனே தொடரும் போட்டது அசத்தல்.. எனக்கு இப்படி முடிச்சது பிடிக்கலண்ணே.. மன்னிச்சிக்கோங்க..
கதை சொல்லி இருந்த ஸ்டைல் சூப்பரா இருந்திச்சி.. ராஜேஷ்குமாரோட ஸ்டைல் தெரிஞ்சது..
3 பகுதியா பிரிச்சி.. போக போக இணைச்சி.. முடிவில 1 ஆக்கின யுக்தி நல்லா இருந்துச்சிண்ணே..
பரிசல் என்ன இப்படி முடிச்சுடீங்க?
//“ஹலோ...” என்றேன்.//
”ஹலோ.. பரிசல் நான் சுசி பேசறேன்.. என்னோட இன்னொரு கேள்வி என்னன்னா உங்க கடைசி ஆசை என்ன பரிசல்??”
என்று கேட்கும்போதே மெயிலில் செண்ட் பட்டனை தட்டினார். அங்கே கடல் தாண்டி, கண்டம் தாண்டி மின்னஞ்சல் பறந்து கொண்டிருந்தது..
//“ALL WELL PLANNED. ARRANGE FOR RED RUM TONIGHT.. CHEERS!”//
ஆவ்வ்வ்வ்.. பரிசல்.. உங்க கால காட்டுங்க சாமி..
நான் இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..
இப்போ 113 அவசர உதவிக்கு கால் பண்ற ரேஞ்சுக்கு ஆக்கிட்டிங்க.
ரொம்ப நன்றி.
கதை முடிவு ஓரளவு ஊகிச்சது தான். உங்களையும் இணைச்சு எழுதினதால வித்தியாசமா, சுவாரசியமா இருந்துது.
எங்களையும் சேர்த்துக் கொண்ட புது முயற்சிக்கு மீண்டும் நன்றிகள்.
சூப்பர்.
எனகீன்னவோ முதல் அத்தியாயம் தான் ரொம்பப் பிடிச்சது (அதுலதான் நான் வரேன், ஹி ஹி)
கதையில் பரிசலும் (நாங்களும் :-)) வந்தது சுவாரஸ்யமாக இருந்தது. உண்மையிலேயே என்னால் கண்டுபிடிக்க முடியாத திருப்பங்களும், ஆங்காங்கே 'அட' போட வைக்கும் வரிகளும் இருந்தன - இருந்தாலும் என்னவோ குறைகிறது பரிசல். அல்லது, நாங்கள் உங்களிடம் நிறைய எதிர் பார்க்கிறோமோ?
எதற்கும் கொஞ்ச நாள் கழித்து திரும்பவும் படித்துவிட்டு எழுதுகிறேன்.
Nalla irundadu
கதை சொல்லி இருந்த ஸ்டைல் சூப்பரா இருந்திச்சி.
நன்றாக இருந்தது நண்பரே! நடையும் (ஓட்டம்?) அருமை. கடைசி பகுதி மட்டும் கொஞ்சம் காரம் கம்மி, சம்ரதாயமாக இருந்தது, மற்றபடி அருமை. வாழ்த்துக்கள் நண்பரே!
ராஜேஷ்குமாரின் கதை சொல்லும் பாணி.
புத்திசாலித்தனமாக உங்களை இணைத்துக்கொண்டது மற்றும் சில பதிவர்களில் ப்ரொபைலை பார்க்கவைத்த யுக்தி நன்றாக இருந்தது.
அதுதான் எல்லோரும் சொல்லிடாகலேன்னு விட்டுட்டு போக முடியலை அப்புறம் வாசகர்களையும் கதாப்பாதிரங்கலாக்கி இறுதியில் author டூ என்பது புதுமையாக இருந்தது எதற்கும் இனி கொஞ்சம் கவனமாக இருங்கள் யாரேனும் தொடர் கொலைக்கு[கதைக்கு] உங்களை இனி அடிகடி கூப்பிடலாம் ha haha ha
நன்றி
super..
ஆரம்பித்திலிருந்த விறுவிறுப்பு குறையாமல் அருமையாக எழுதியிருக்கீங்க கிருஷ்ணா. இந்த மூளையை மறுபடியும் அலுவலகத்திற்கே அர்ப்பணித்து விடாமல் கொஞ்சம் இதை விட சிறப்பா, சுவாரசியமா பரிசல்காரன் கதாபாத்திரமில்லாமல் எழுதி நாவலாக வெளியிடுங்களேன்.
ரசிகையின் வேண்டுகோள். ;)
கதை அருமையா இருக்கு! கதையில் நீங்கள் வருவது சூப்பர்.
'பின்னோக்கி' சொன்னது போல எனக்கும் ராஜேஷ் குமார் பாணியின் முடிவு என்று தோணுது. விளக்கம் கொடுத்தே கொல்றிங்க! முடிவுதான் நெருடல் என்னும் அதிகமாக வேண்டும் உங்களிடமிருந்து.
இப்படிக்கு
உங்கள் வாசகன்.
பரிசல்.. இதுக்கு கண்டு கொள்ளாமல் விடப்பட்ட ஒரு பிண்ணுட்டம்' ன்னு சொல்லலாம்.. இல்லை .. 3 X 3 = 3; ன்னு சொல்லலாம்.. இன்னொன்னு.. no more tail teasers.. direct blogging.. (Dont allow me to do that)
//ப நி ம க ச ப ம, க ரி ம க ம ப ப த நி ச ப ந..
2 September 2010 7:44 PM
vanila said...
பதிவு நிகல்காலத்திய மடிக் கணினி சம்பந்தமான பகிர்வாய் மண'ந்து-முடிந்தாலும், கட்டுரை'யின் ரிச்னெஸ் மனம் கவர்ந்தது . மற்ற படி பதிவு தன்-நிகரற்றது. சபாஷ் பரிசல் நன்றி..//
இத மாதிரி ஒரு கதை எழுத முடியுமா.. புரிஞ்சுதா....
either blogging is waste of time.. or reading that.. mean that they have got their time on their own.. time is time.. I'm saying bye.. bye.. to you.. as well my friends on my own.. Karki, NArsim, aathi, selvaa, Lathananth uncle, Omkaar, athisha, kusumban & Lucky.... Bye.. whom i used to follow..
நல்ல கதை!! சொன்ன ஸ்டைல் நல்லா இருந்தது!
நைஸ்
பரிசல் வாழ்த்துக்கள்!!! கதை சூப்பர். கதை சொல்லப்பட்ட விதம் ரொம்ப வித்யாசமா இருந்தது.
ஒரு சின்ன கருத்து. 4 ம் பாகத்துலையே குணா தான் கொலையாளின்னு தெரிஞ்சப்புரம் முடிவு என்னன்னு ஈசியா யூகிக்க முடிஞ்சது. அதனால கடைசி பாகத்தை படிக்க பெரிசா ஆர்வம் இல்லாம போச்சி. குணா தான் கொலையாளின்ரத கடைசி பாகத்துலையே சொல்லி இருக்கலாம்.
overall it was a thrilling experience to read the story.
eathirpaartha mudivuthaan parisalidam innum konjam eathirpaarthen
மர்மக் கதைகளிலேயே ஒரு வித்தியாசமான முயற்சி பரிசல்! வெல்டன்!
Post a Comment