Tuesday, September 14, 2010

சவால் சிறுகதை

ட்டுரைகளுக்கு அடுத்தபடியாக அல்லது இணையாக என்னைக் கவர்பவை சிறுகதைகள். ஆனால் யதார்த்த, சோக வகைகளல்ல. சுவாரஸ்யமானதாகவும், கதையின் இறுதியில் என்னை ஓர் ‘அட!’ போட வைப்பதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

சுஜாதா அதில் விற்பன்னர். அவரது ‘சசி காத்திருக்கிறாள்’ அதில் மாஸ்டர் பீஸ்.

சரி.. இனி விஷயத்துக்கு வருவோம்.

மினி & யாமினி தொடர்களுக்குப் பிறகு நானும் ஆதிமூலகிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தபோது எல்லாருக்கும் ஒரு சிறுகதைப் போட்டி வைத்தாலென்ன என்று பேச்சு வந்தது..

அதன் விளைவாகவே சனிக்கிழமை என் பதிவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தேன். இங்கே அதை விரிவாக வெளியிடுகிறேன்.

கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

இந்த மூன்று வாக்கியங்களும் நான் கொடுத்திருக்கும் வரிசைப்படியே வருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதுங்கள். விதிகள் இரண்டு:

கதையில் கனவோ, பிளாஷ்பேக்கோ வரக்கூடாது.

காமினியைக் கெட்டவராக சித்தரிக்கக் கூடாது.

இறுதித் தேதி: அக்டோபர் 15.

*** *** *** *** *** ***

கேள்விகள்:

கதையை என் வலைப்பூவில் வெளியிட்டுக் கொள்ளலாமா?

லாம். ஒரே விஷயம் நீங்கள் வைக்கும் தலைப்புக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் ‘சவால் சிறுகதை’ என்று குறிப்பிடவும்.

வலையில் மட்டும் வெளியிட்டால் போதுமா?

போதாது. என் மின்னஞ்சல் முகவரிக்கு - kbkk007@gmail.com - கதை வந்த உங்கள் வலைப்பூ பக்க முகவரியையும், கூடவே முழுக்கதையையும் அனுப்ப வேண்டும்.

முழுக்கதையுமா? ஏன்?

நடுவர்களுக்கு உங்கள் பெயரைக் குறிப்பிடாமல் உங்கள் கதையை மட்டுமே அனுப்ப. அவர்கள் பதிவுகளைப் படிப்பவர்கள்தானெனினும் பதிவின் தலைப்பில் சவால் சிறுகதை என்றிருக்கும் கதைகளை அவர்கள் படிக்க மாட்டார்கள்.

நடுவர்கள்?

மூன்று பேர் கொண்ட குழு. (நான், ஆதி இல்லை அதில்)

இறுதித் தேதி?

கதை எழுத அக்டோபர் 15. முடிவுகள் அதிக பட்சம் நவம்பர் 15க்குள்.

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் அனுப்பலாமா?

அனுப்பலாம்.

பரிசு?

மூன்று பரிசுகள். முதல் இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்துவதா, அல்லது பரிசுக்குரிய மூன்று கதைகள் என்று தேர்வு செய்வதா என்பது நடுவர்களின் கையில். மொத்தமாக ரூ. ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

என்ன புத்தகங்கள்?

பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைத தொகுப்புகள். பிரபலம் என்றால் பிரபலம். சுஜாதாவாக இருக்கலாம்.


எத்தனை பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்?

அப்படிப்பட்ட வரைமுறை ஏதுமில்லை. ஆனால் சிறுகதை, சிறுகதையாக இருந்தால் நலம்!

விஞ்ஞானம், க்ரைம், குடும்பம், காதல்.. என்ன வகைக் கதையாக இருக்க வேண்டும்?

எந்த வகையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் தெரியப்படுத்தவும். இந்தப் போட்டி பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி கலந்து கொள்ளச் செய்யவும்.

நன்றியும் வாழ்த்துகளும்!


.

39 comments:

CrazyBugger said...

Neenga.. nallavara?? kaettavara?

சுசி said...

உங்க முயற்சிக்கு மீண்டும் பாராட்டுக்கள்..

விக்னேஷ்வரி said...

நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் கிருஷ்ணா.

Unknown said...

புதிய முயற்சிக்கு நன்றி. நான் முதன்முதலில் ஒரு சிறுகதை எழுதப்போகிறேன்.

R. Gopi said...

சொக்கா, பரிசு எனக்கில்லைன்னு நல்லா தெரியுது.

ஆனா இதனால நெறைய சிறுகதைகள் நமக்குக் கிடைக்கும். அதுவே பெரிய பரிசுதானே? (வேற என்ன சொல்லி மனசத் தேத்திக்கிறது நான்:)

விடமாட்டேன். நானும் எதாவது கிறுக்கி அனுப்புறேன். கஷ்டம் அதப் படிக்கப் போறவங்களுக்குதானே:)

R. Gopi said...

பரிசல், ஒரு டவுட்டு, ஒருத்தரே ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை அனுப்பலாமா? இல்ல ரொம்ப வெட்டியா இருக்கேன், அதான் கேட்டேன்:)

Anonymous said...

அண்ணே இன்ட்லில இணைச்சுட்டேன் உங்கள கேட்காம :)

Athisha said...

நானும் ஆதிமூலகிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தபோது //

கரெக்ஷன் - அது பிரியத்திற்குரிய ஆதிமூலகிருஷ்ணன்னு வரணும்!

DR said...

ஆயிரம் ரூபாய்க்கும் நீங்க "டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்" புத்தகம் கொடுத்துட்டீங்கன்னா ? ஙே...

தராசு said...

கதையை நானேதான் எழுதணுமா, இல்லை மண்டபத்துல இருந்து வாங்கிட்டு வந்தா ஓ.கே வா????

Thamira said...

க்ளீன் அறிவிப்பு பரிசல். நடக்கட்டும்.

Thamira said...

யோவ் தராசு.. ஒழுங்கா கதை எழுதும். அல்லது ஓடிப்போயிடும்.. சொல்லிப்புட்டேன்.

Anonymous said...

எப்படியாவது எழுத்தாளர் ஆவதுன்னு முடிவு பண்ணியாச்சு,, களத்துல குதிக்கறேன் :)

அன்பேசிவம் said...

”எல்லோருக்கும் அன்புடன்” தருவிங்களா?

நானும் வரேன் ஆட்டத்துக்கு..... :-)

வாழ்துக்கள் பரிசல், நல்ல முயற்சி

செல்வா said...

நானும் கலந்துக்கிறேன் அண்ணா ..!!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

பரிசுக்குரிய தொகைக்கு புத்தகங்களை வென்றவர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்று வையுங்கள்..சிறுகதைகள் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டியதில்லையே....

மணிகண்டன் said...

என்னுடைய சஸ்பென்ஸ் கதையை உங்களுக்கு அனுப்பிவிட்டேன். தயவு செய்து ஜ்யோவ்ராம் சுந்தரை நடுவராக போடாதீர்கள். அவருக்கு சிறுகதைகள் புரிவதில்லை. சென்றமுறை நடந்த போட்டிகளின் போது எனது கதையை நடுவர்களுக்கு அனுப்பாமல் அவரே வைத்துக்கொண்டதாக கேள்விப்பட்டேன். நீங்கள் அப்படி இருக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களது மெயிலுக்கு எனது கதையை அனுப்பிவிட்டேன். தேங்க்ஸ்.

சுஜாதாவோ / நகுலனோ - ஏதோ ஒன்று எதிர்ப்பார்க்கிறேன்.

ஆனாலும் பதிவர் ராம்ஜி யாஹூ போட்டியில் பங்கு கொண்டால் மூன்று பரிசுகளையும் தட்டி சென்றுவிடுவாரே என்ற பயம் இருக்கிறது.

vaanmugil said...

சபாஷ் சரியான போட்டி!

Unknown said...

சவாலே....சமாளி!

SARAVAN_KAVI5 said...

வணக்கம் தோழரே
நான் பதிவுலகிற்குப் புதியவன்.
நான் எவ்வாறு கலந்துகொள்வது?
தற்போது ட்விட்டரில் மட்டும் தொடர்ந்து இருக்கிறேன்.
தோழமையுடன்
சரவணன்.M

SARAVAN_KAVI5 said...

வணக்கம் தோழரே
நான் பதிவுலகிற்குப் புதியவன்.
நான் எவ்வாறு கலந்துகொள்வது?
தற்போது ட்விட்டரில் மட்டும் தொடர்ந்து இருக்கிறேன்.
தோழமையுடன்
சரவணன்.M

உண்மைத்தமிழன் said...

போட்டில கலந்துக்கிட்டாலே பரிசு உண்டுன்னு சொன்னா என்னை மாதிரி ஆசாமிகள்லாம் ஓடி வந்து கலந்துக்குவோம்..!

Asiya Omar said...

சவாலிற்கு வாழ்த்துக்கள்.

Raghav said...

எனக்கென்று வலைபூ இல்லை அல்லது வேறு வலைப்பூவில் பங்களிபதில்லை...
வலைபூகளை படிபதுண்டு, பின்னூட்டங்கள் அனுப்புவதுண்டு... சிறுகதை அனுபலாமா ??

Vidhoosh said...

இதுவரை வந்த கதைகளை எங்கேனும் தொகுத்து வழங்குங்களேன்.

Prathap Kumar S. said...

உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு பரிசல்...ஏன்னா நானும் போட்டில சேரப்போறேனே..:))

'பரிவை' சே.குமார் said...

வாழ்துக்கள் பரிசல், நல்ல முயற்சி .
நானும் கலந்துக்கிறேன்.

மதுரை சரவணன் said...

உங்க முயற்சிக்கு மீண்டும் பாராட்டுக்கள்..

Anisha Yunus said...

பரிசல் அண்ணா...முதன்முதலா ஒரு கதை எழுதியிருக்கேன். எனவே ஆறுதல் பரிசாக ஆயிரம் ரூபாயாவது தரவும் :)

Sridhar Narayanan said...

நீங்கள் கொடுத்திருந்த வாக்கியங்களின் அமைப்பில் துப்பாக்கி, போலீஸ், வைரம் என்று ஒரு த்ரில்லர் கதைக்கான டெம்பிளேட் அமைந்து இருக்கிறதை கவனித்தேன். என்னதான் ஜிலேபி சுற்றினாலும் ஏதோ வைர கடத்தலில் வந்து முடிக்குமாறு கதை அமைந்து விடுமோ என்று யோசித்து அடிஷனல் சவாலாக வேறு வடிவில் எழுதி பார்க்கலாமே என்று முயற்சித்தேன். கொஞ்சம் நீளமான கதையாக அமைந்துவிட்டது. தொடர்ந்து இந்த சவால் போட்டிக்கு வேறு சில கதைகளும் எழுதி பார்க்கலாம் என்றும் நினைத்திருக்கிறேன் :)

சவாலான போட்டிக்கு உங்களுக்கும், பதிவர் ஆதிமூலகிருஷ்ணனுக்கும் நன்றிகள்.

சி.பி.செந்தில்குமார் said...

பரிசல் சார்,என்னை மாதிரி வெட்டாஃபீசுக்கு ஏதாவது ஜோக் போட்டி வைக்கலாமே/?இருந்தாலும் ட்ரை பண்றேன்.நல்ல முயற்சி

Unknown said...

ஏங்க, இருக்கிற புத்தகங்களையே வைக்க நம்ம குடிசைல அனுமதிக்க மாட்டேங்கிறாங்க.பரிசை ரூவாயா கொடுத்துடுங்களேன்!!!!

Madhavan Srinivasagopalan said...

//நாஞ்சில் பிரதாப் said...

உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு பரிசல்...ஏன்னா நானும் போட்டில சேரப்போறேனே..:))//


sema kaamedy, naanjilu..

அப்பாதுரை said...

இப்பொழுது தான் உங்கள் அறிவிப்பைப் படித்தேன் (நன்றி: தீராத விளையாட்டுப் பிள்ளை).
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

அவசரமா கதை எழுதுற மெசினு ஒண்ணு கண்டுபிடிக்கப் போறேன். பிடிச்சுட்டு திரும்ப வரேன்.

முரளிகண்ணன் said...

நல்ல முயற்சி, உங்களுக்கும், ஆதிக்கும் வாழ்த்து கலந்த நன்றிகள்.

Ramesh said...

எனது கதையையும் எழுதிவிட்டேன்..எங்கே இதில் பங்கு பெற நேரம் கிடைக்காமல் போய் விடுமோ என்று வருந்திக் கொண்டே இருந்தேன்.. நல்ல வேலை.. கடைசி நேரத்தில் கடைசி நாளான இன்று நேரம் கிடைத்து எழுதி அனுப்பிவிட்டேன்..

கதிர்கா said...

நம்மளயும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க. கதை ரெடி!!

கதிர்கா said...

தமிழ் இணையத்தளங்களில் ஒரு நல்ல நிகழ்வு. அதற்கு ஏற்பாடு செய்த பரிசல்காரருக்கு நன்றி. அவரின் இந்த போட்டிக்கு பலர் கதைகள் எழுதி அனுப்பி இருப்பர். அவரும் எல்லோரது கதைகளின் லிங்க்-களையும் கண்டிப்பாக வெளியிடுவார். அதற்குமுன் ஒரு சிலர் விருப்பபடலாமென நினைத்து என்னால் தொகுக்க முடிந்த தளங்களை இங்கே வெளியிட்டுள்ளேன்.
http://kathirka.blogspot.com/2010/10/blog-post_1830.html

Unknown said...

ஐ, நீங்க கதையை எழுதி இந்திய நேரம் 12மணின்னு மொக்கையா சொன்னா சரியாப் போச்சா? ஒரு நாளைக்கு ரெண்டு தடவை 12மணி வருது. நான் அமெரிக்காவுல உக்காந்துட்டு இந்திய நேரம் கொண்டாட முடியாதா என்ன?

போட்டியில இல்லன்னாலும் பரவால்லன்னு எழுதிட்டேன் - பதிவுலக விஷயங்கள் கொண்ட த்ரில்லர்:-‍) http://kekkepikkuni.blogspot.com/2010/10/blog-post_15.html