Monday, September 6, 2010

மிஸ்.யாமினி-Part 2

பகுதி - 1 இங்கே....

** ** ** ** ** ** ** ** ** ** **

பகுதி – 2

ஷோக்ராஜா வெறுப்பின் உச்சத்தில் இருந்தான். அணிந்திருந்த காக்கி உடை என்றைக்கும் இல்லாத அளவு கசங்கியிருந்தது. அவிழ்த்து எறிந்தான்.

குளியலறைக்குப் போய்க் குளித்து விட்டு உடை மாற்றி வந்து ஹாலில் அமர்ந்தான்.

ஃபாரன்ஸிக் குணா கொடுத்த ரிப்போர்ட் படி, இந்தக் கொலையிலும் ஒரு தடயமும் சிக்கவில்லை. இது நகரத்தில் நடக்கும் மூணாவது கொலை. முதல் இரண்டு கொலைகளை அசைபோட ஆரம்பித்தான் அஷோக்ராஜா.

முதல் கொலை: ஒரு டாக்டர். அவரது பிரம்மாண்ட வீட்டின் மொட்டை மாடியில் இறந்து கிடந்தார். சுற்றிலும் ரத்தத் திட்டுகள். தகவல் அறிந்து அஷோக்ராஜா போய்ப் பார்க்கும்போது டாக்டரின் மனைவி மயக்கமாய் இருந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் எதனால் இறப்பு என்று தெரியவில்லை என்று வந்தது. ஒரே தகவல்: அவரது வலது புஜத்தில் ஊசி போடப்பட்டிருந்தது என்பது. ஆனால் எந்த விஷமும் ஏற்றப்பட்டதாக மருத்துவ ரிப்போர்ட் காண்பிக்கவில்லை. டாக்டருக்கு நகரத்தில் அவ்வளவாக நல்லபேர் இருக்கவில்லை. எதிரிகள் யாராவது இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர் வைத்தியம் பார்த்ததில் யாருக்காவது ஏதாவது நேர்ந்து அதன் காரணமான கொலையாக இருக்கலாம் என்ற ரீதியில் டிபார்ட்மெண்டில் பேசிக்கொண்டார்கள். அஷோக்கிற்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. காரணம் அந்த மாதிரி உணர்ச்சி வேகத்தில் கொலை செய்கிறவர்கள் இவ்வளவு ப்ரொஃபஷனலாகச் செய்ய மாட்டார்கள்.

இரண்டாவது கொலை: ஒரு கல்லூரி மாணவன். மதியம் நண்பர்களோடு சாப்பிட்டு விட்டு மறுபடி கல்லூரி போக பைக்கை ஸ்டார்ட் செய்தவன் அங்கேயே மூர்ச்சையாகி விழுந்திருக்கிறான். அவன் சாப்பிட்ட உணவிலோ, சாப்பிட்ட பின் போட்ட பீடாவிலோ எதிலும் விஷமிருப்பதாக டாக்டர் ரிப்போர்ட் காண்பிக்கவில்லை. அவனோடு உணவருந்திய மற்ற நண்பர்கள் பூரண ஆரோக்யத்தோடுதான் இருந்தார்கள். அப்புறம் எப்படி என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அஷோக்ராஜா யோசித்துக் கொண்டிருக்கும்போது அவன் செல்ஃபோன் சிணுங்கியது.

எடுத்தான்.

-ஹலோ.. அஷோக் ஹியர்

-வணக்கம். என்ன அஷோக்.. ரொம்ப மண்டை காஞ்சு போயிருக்க போலிருக்கு. இன்னைக்கு மீட்டிங்ல உனக்கு செம டோஸாமே?

-நீ யாரு?

-அது இப்போதைக்கு வேண்டாம். உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்றதுக்காக ஃபோன் பண்ணினேன்.. அஷோக் பேசிக் கொண்டிருக்கும்போதே, அறைக்கதவு தட்டப்பட பேசிக் கொண்டே சென்று

-என்ன விஷயம் சொல்லு

கதவைத் திறந்தான். வெளியே ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் குணா நின்று கொண்டிருந்தார். சைகையாலேயே உள்ளே அழைத்தான்.

செல்ஃபோனை அவருக்குக் காட்டி ‘எதுவும் பேசவேண்டாம்’ என்றான்.

-அஷோக்.. மூணு கொலைலயும் சம்பந்தம் இருக்குங்கறதத் தவிர வேறெதுவும் உன்னால கண்டுபிடிக்க முடியல. உனக்கொரு குட் நியூஸ் இருக்கு.

-என்ன -இன்னும் ரெண்டு கொலை பாக்கி இருக்கு. முடிஞ்சா அதைத் தடுக்கப் பாரு..

தொடர்ந்து இவன் ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்க, எதிர்முனை துண்டானது.

-ச்சே என்றபடி ஃபோனைத் தூக்கி எறிந்தான் அஷோக்.

*****************************

சந்த் ஆதிமூலம் சொன்னதும் நடுவில் அமர்ந்திருந்த யாமினி எழுந்தாள்.

எல்லாரும் ஒட்டுமொத்தமாய் கைதட்டிக் கொண்டிருக்க அதை ஏற்றுக் கொள்வது போல தலையசைத்தபடி தன் சீஃப் வசந்த் ஆதிமூலத்தை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

“யாமினி ஈஸ் எ யங் அண்ட் ப்ரேவ் கேர்ள். எங்கள் டீமில் அவள் சேர்ந்து ஆறு மாதமாகிறது. இவளது அறிவியல் அறிவும் அயராத உழைப்பும் இந்தக் குறுகிய காலத்தில் இவளை எங்கள் டீமில் முக்கிய இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது”

“மிஸ்டர் வசந்த் ஆதிமூலம்.. எனக்கொரு சந்தேகம்..”

“சொல்லுங்கள் மிஸ்டர் ஆல்பர்ட்”

“இப்போது யாமினி உங்கள் மருந்தை உட்கொண்டு ஆண் போல மாறும்போது அவளது நினைவுகளில் பெண்ணாய் இருந்தபோது நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் இருக்குமா?”

“நினைவுகளில் எந்த மாறுபாடும் இருக்காது மிஸ்டர் ஆல்பர்ட்” சொன்ன வசந்த் ஆதிமூலம் அனைவரையும் நோக்கி தன் பார்வையை வீசினார்.

“வெல் ஃப்ரெண்ட்ஸ். இதோடு இந்த மீட்டிங் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் மாலை இந்த சோதனை முயற்சி தொடங்கும். அதற்கடுத்த நாள் யாமினி ஒரு ஆண்போல உங்கள் முன் இருப்பாள். இரண்டு தினங்கள் சோதனை முயற்சிக்குப் பின் மீண்டும் பெண்ணாக மாறுவாள். ஒரு முக்கியமான விஷயம். இந்த சோதனை முயற்சி மிக மிக ரகசியமானது. அரசாங்கத்தின் சில முக்கிய அதிகாரிகளுக்கும் நமக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. நீங்களெல்லோரும் ஒரு ப்ராஜக்ட் விஷயமாக வந்திருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பதையே இன்னும் ஒரு வாரத்துக்குத் தொடருங்கள்”

மீட்டிங் நிறைவு பெற்றதும் ஒவ்வொருவராய் வந்து யாமினியின் கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

‘யு ஆர் எ ப்ரேவ் கேர்ள்’

‘வாழ்த்துகள் யாமினி... ஒரு முக்கியத்துவமான வரலாற்று நிகழ்வில் நீங்கள் பெயர் பெற்றிருக்கிறீர்கள்..’

ஒவ்வொருவருக்கும் புன்னகையால் நன்றி சொல்லிக் கொண்டிருந்த யாமினியை அழைத்தார் வசந்த் ஆதிமூலம்.

“எஸ் சார்..”

“யாமினி... நாளை முழுதும் உனக்கானது. நாளை மறுநாள் காலை ஒன்பது மணிமுதல் நீ என்னோடு இருக்க வேண்டும். சில மருத்துவசோதனைகள் முடிந்தபின், மாலை ஆறு மணிக்கு பரிசோதனை ஆரம்பமாகிவிடும். இரவு வழக்கம்போல அல்லாமல் எட்டு மணிக்கெல்லாம் நீ உறக்கத்துக்கு செல்ல வேண்டும். காலை எழும்போது நீ ஆணாக மாறியிருப்பாய்”

“எஸ் சார்.. நாளை என் உணவு முறையில் ஏதாவது மாற்றம் தேவையா?”

“இல்லை...” என்றவர் “இப்போது நீங்கள் கலையலாம்” என்று தன் குழுவினருக்குக் கட்டளையிட்டார்.

எல்லோரும் கலைந்து சென்றதும் வசந்த் ஆதிமூலம் தன் ப்ளாக்பெர்ரியை உசுப்பினார். மெய்ல் பாக்ஸைத் திறந்தார். ஒரு வரியில் டைப்பினார்.

அனுப்பினார்:

“ALL WELL PLANNED. ARRANGE FOR RED RUM TONIGHT.. CHEERS!”

*******************************

ந்த டிபார்ட்மெண்ட் வாசலை என் பைக் கடந்தபோது அலறத் தொடங்கியது செல்ஃபோன். ஓரமாக நிறுத்தி விட்டு ஃபோனை காதுக்குக் கொடுத்தேன்.

“ஹலோ... பரிசல்காரன்தானே..”

“ஆமாங்க... நீங்க?”

“வணக்கம்.. என் பேர் வினோத் ப்ரகதீஷ். வினுங்கற பேர்ல ப்ளாக் எழுதிட்டிருக்கேன்”

“தெரியும் வினு.. பார்த்திருக்கேன். சமீபத்துல கூட மகாபலிபுரத்தை ஃபோட்டோ எடுத்துப் போட்டீங்களே..”

“வாவ்.. ஞாபகம் வெச்சிருக்கீங்க போல.. நன்றி... ஆமா இரண்டாம் பாகம் எப்ப போடப்போறீங்க?”

“போட்டாச்சு.. படிச்சுக்கோங்க..”

“சரி.. எனக்கொரு சந்தேகம்.. வசந்த் ஆதிமூலம்தான் வில்லன்கறேன் நான். கரெக்டா?”

“தெரியல வினு.. அதை கதை எப்படிப் போகுதுங்கறதப் பொறுத்தது...”

“சரி.. முதல் பாகத்துல கொலை செய்யப்பட்டது யாமினியா இல்லையா.. அதையாவது சொல்லுங்க”

“அதுவும் தெரியல.. நாளைக்கு டாக்டர் ரிப்போர்ட் வந்தா தெரியும்..”

பேசிக் கொண்டிருக்கும்போதே “சார்... பைக்கை இன்னும் ஓரமா நிறுத்திட்டுப் பேசுங்க சார்.. இப்படி பாதி ரோட்லதான் நிறுத்துவீங்களா?” என்று போலிஸ்காரர் திட்டும் குரல் கேட்கவே இன்னும் ஓரம் கொண்டு போனேன் பைக்கை..

எதிர்முனையில் வினு “சாரி பரிசல்.. ட்ராஃபிக்ல இருக்கீங்கன்னு நினைக்கறேன்.. நான் அப்பறம் கூப்டறேன்’ என்று வைத்தார்..

என்னை விரட்டிய போலீஸ்காரர் என் பின்னால் மறுபடி வந்து நின்றார்.

“உங்க பைக்லேர்ந்து விழுந்தது பாருங்க.. இந்தாங்க” என்று ஒரு கவரை நீட்டினார்.

நான் அந்தக் கவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் அருகில் வந்து நின்ற ஜீப்பில் ஏறி மறைந்தார்.

நான் கவரைத் திருப்பி எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.

“From: Ashok Raja, Sub-Inspector of Police, Tirupur South" என்றிருந்தது.

** ** ** **

(தொடரும்..)

இந்த வாரத்துக்குள்ளாக முடியப்போகிற மினி தொடரின் இரண்டாம் பாகம் இது..


.

20 comments:

vinu said...

me firstuuuuuuuuuuu


nijamaava post sommentai klick pannunathu veara eathavathu villangam varummaaa

vinu said...

yea yea yea me the first and seconduuuuuuuuuuuuuadichommulla adichoomulla solli adichoomulla

Ŝ₤Ω..™ said...

அப்போ நான் 3வது தானா??
:((((

ப்ரியமுடன் வசந்த் said...

கதையில் வரும் மூணாவது பாகம் செம இண்ட்ரெஸ்டிங்க்!

//குளியலறைக்குப் போய்க் குளித்து விட்டு வந்து ஹாலில் அமர்ந்தான். //

ஹீரோமட்டும் அப்டியா? நீங்களுமா? ;)

vinu said...

wow wow wow karcheepu podura avasaruthulla sorry sir, postai padikkama konjam munthri kottaiya nadanthukkittean, appuram postai padichathu karukkunnu manasullaonnu thaikkira maathiri irrunthathu............


thanks for your intro, ennaiyum chutti kaattuveengannu naan ninaichu kooda paakulai santhosathulla neenga koduththa linkai poi killi paarthean enn kangalai ennaaleayea namba mudiyalai athu naan naan naaneathaan thanks sir, sir enna sir thanks bro, thanks saga...........

M.G.ரவிக்குமார்™..., said...

//ALL WELL PLANNED. ARRANGE FOR RED RUM TODAY NIGHT.. CHEERS!”//

TODAY NIGHT IS WRONG! TONIGHT IS CORRECT!......
THANKS!......

பரிசல்காரன் said...

@ ப்ரியமுடன் வசந்த் & ரவிக்குமார்

மாத்திடறேன்!

நன்றி!!

vinu said...

பைக் கடந்தபோது அலறத் தொடங்கியது செல்ஃபோன். ஓரமாக நிறுத்தி விட்டு ஃபோனை காதுக்குக் கொடுத்தேன் - cute


இந்த வாரத்துக்குள்ளாக முடியப்போகிற மினி தொடரின் இரண்டாம் பாகம் இது

-இதை இதை இதை தான் ரொம்ப ஆவலாக எதிர் பார்க்கிறோம்

Thuvarakan said...

இன்னும் 7 நாட்கள் காத்திருக்க வேண்டுமா முழுக்கதையும் படிக்க?

நேரமிருந்தால் என் வலைத்தளம் பார்த்து முன்னேற்ற அறிவுரை தரவும்(ப்ளீஸ்).

www.vtthuvarakan.blogspot .com

சுசி said...

கதையா?? கவரா??

இப்டி பண்ணக் கூடாது பரிசல். பகுதி 2 ங்கிறதால 2 சஸ்பென்சா??

ஆவ்வ்..

வினோ said...

எத்தனை விஷயத்தை தான் யோசிக்கிறது?

R. Gopi said...

Present sir.

பாலா அறம்வளர்த்தான் said...

எனக்கு முதல் பகுதி ரசிக்கவில்லை. ஆனால், அந்த மூன்றாவது பாகத்தில் பரிசலைப் பார்த்தவுடன், 'அட' என்று நினைத்துக் கொண்டேன். (இதை சுஜாதா meta-fiction என்று கணையாழியில் எழுதி இருந்ததாக ஞாபகம்) இந்த வாரம் அசத்திட்டீங்க பாஸ்!!!

BTW, உங்க கதைல என்னைமாதிரி பின்னூட்டமிஸ்ட்டுகளும் வருவாங்களா? :-)

Mohan said...

அடுத்த பாகத்திற்கான ஆர்வத்தை,கடைசி வரியில் அழகாக கொண்டு வந்திருக்கிறீர்கள்!

கார்க்கிபவா said...

ம்ம்..ஸ்மூத்

vaanmugil said...

ம்....... சூப்பர்

மின்னுது மின்னல் said...

நல்லா போகுது பாஸ்

LeoRajesh said...

good story.

பிரதீபா said...

என்ன அநியாயம்? ஒரே நாள்-ல அந்தப் பொண்ணு ஆனா மாறிடுவாளா? நம்ப முடியலையே டாக்டர் !! :)

பொன்கார்த்திக் said...

சகா மிரட்டல் அடுத்து எப்ப?