Tuesday, September 28, 2010

28 செப்டம்பர் 2010



நிறுவனத்தின் வேனை ஓட்டிச்சென்ற ஓட்டுனரை ட்ராஃபிக் போலீஸ் பிடித்து ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். அவரும் காண்பித்திருக்கிறார். காண்பிக்கும்போது ‘டைமாச்சு சார்.. கொஞ்சம் டெலிவரி அர்ஜெண்ட்’ என்று ஏதோ பேசியிருப்பார் போல. சார்ஜெண்டுக்குக் கோவம் வந்து ‘உன் மேல கேஸ் போடாம விடக்கூடாதுய்யா' என்று வாகனத்தைச் சுற்றிச் சுற்றி வந்து எதையெதையோ குறிப்பெடுத்துக் கொண்டாராம். ட்ரைவர் மறுபடியும் ‘என்னத்தை சார் தேடறீங்க.. எல்லாம் கரெக்டாதானே இருக்கு’ என்று கேட்கவும் ‘எங்க கரெக்டா இருக்கு? நீ ஷேவிங் பண்ணாம வந்திருக்கியே’ என்று சொன்னாராம். கடைசியில் விளக்கு முகப்பில் கறுப்பு ஸ்டிக்கர் இல்லாததற்கு ஃபைன் கட்டச் சொன்னாராம்.

அலுவலகத்தில் இதுபற்றி கிண்டலாகப் பேசிக் கொண்டிருக்கையில், காவலர் செய்தது சரிதான் என்றும்... வாகனம் ஓட்டுகையில் ட்ரைவர் முகச்சவரம் செய்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துச் சட்டம் சொல்கிறது என்றும் சொன்னார் சக நண்பர் ஒருவர். அப்படியா? யாருக்காவது இதுபற்றித் தெரியுமா?

*** *** *** *** ***

வி


ஒரு நண்பர்.. ஒரு வாக்கியத்தில் இரண்டு முறை ‘வந்து பாத்தீங்கன்னா’ என்ற பதத்தைப் பயன்படுத்துவார். ஒருமுறை அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தபோது எண்ணினேன்.. பதினைந்து நிமிடப் பேச்சில் பதினெட்டு முறை ‘வந்து பாத்தீங்கன்னா’ வந்துபோனது. ‘அதை மட்டும் சொல்றதை நிறுத்தினீங்கன்னா உங்க எனர்ஜி நிறைய சேவ் ஆகும் சார்’ என்று அவரிடமே கூறினேன்.

‘கரெக்ட்தான் கிருஷ்ணா.. ஆனா அது.. வந்து பாத்தீங்கன்னா.. அப்படி சட்னு ஆகறதில்லை. ஏன்னு.. வந்து பாத்தீங்கன்னா.. எனக்கே தெரியாம அது வருது.. வீட்ல.. வந்து பாத்தீங்கன்னா.. அவங்களும் இதைச் சொல்லுவாங்க.. ஆனா.. வந்து பாத்தீங்கன்னா..’

‘கொஞ்சம் வேலையிருக்கு சார். இப்ப வந்துடறேன்’ என்று வந்துவிட்டேன். பிறகு வந்து பார்க்கவேயில்லை அவரை!

நான் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை ‘சரியா’ அல்லது ‘புரிஞ்சுதா’. என் நண்பன் ஒருவர் ‘பக்கா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். இன்னொருவர்.. ‘சான்ஸே இல்ல’. அதிகம் பேர் இந்த சான்ஸே இல்லையைத்தான் பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். சகா கார்க்கி இந்த சான்ஸே இல்லையை அழகாக ‘வாய்ப்பே இல்ல சகா’ என்பான்.

நீங்க எந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?

*** *** ** *** *** ***



ரசித்த எஸ்ஸெம்மெஸ்:

‘நேத்து ஒரு பொண்ணை ரேப்லேர்ந்து காப்பாத்தீட்டேண்டா..’

‘வெரிகுட்ரா! எப்படி?’

‘செல்ஃப் கண்ட்ரோல் மச்சி.. செல்ஃப் கண்ட்ரோல்!’



ரசித்த கேள்வி பதில்:

‘சூர்யா – கார்த்தி இருவருக்குமான போட்டியில் ஜெயிப்பது யார்?’

‘சிவகுமார்’

(தினகரன் – நாட்டாமை பதில்கள்)

ரசித்த பதிவு:


ரமேஷ் வைத்யாவின் ‘ஐயடிகள் காடவர்கோன் தொடர்கதை’


ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்:


‘இறகைப் போலே அலைகிறேனே’ – நான் மகான் அல்ல


ரசிக்கும் விஷயம்:

எங்கள் சவால் சிறுகதைப் போட்டிக்கு நண்பர்களின் ஆர்வமான பங்களிப்பும் அவர்களின் வித விதமான வித்தியாசமான கதைகளும்!


ல்


ட்விட்டர் அப்டேட்ஸ்:

# கிருஷ்ணஜெயந்திக்கு அவரை வீட்டுக்கு அழைக்கிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு அவரை கடலில் போடுகிறார்கள். பாச்சுலர்ஸை யாருமே மதிக்கறதில்லைப்பா!

# பொண்ணுக்கு 25க்கு மேல இருந்தா கல்யாணம் என்றார். வயசு ஜாஸ்தியா இருக்கே என்றேன். நான் சொன்னது சம்பளம் என்கிறார். #பேராசை

# செல்லில் காதலர்கள் எஸ்ஸெம்மெஸ் அனுப்பிக்கொள்ளும் வேகம் பிரமிக்க வைக்கிறது. ஒருநாள் மொபைல் வழியாகவே அவர்கள் ஜூனியர்ஸ் குதித்து வரக்கூடும்.

# ரோட்ல இறங்கினா பொண்ணுங்க செல்லை காதுல வெச்சுக்க ஆரம்பிச்சுடறாங்க’ என்று திட்டாதீர்கள். எதிர்முனையில் இருப்பது உங்கள் மகனாக இருக்கக்கூடும்

# திருமணநாள் வாழ்த்துச் சொல்ல அழைத்த நண்பர் சொன்னார்: ‘உனக்கு வாழ்த்துக்கள்.. சிஸ்டருக்கு ஆறுதல்கள்’ #தெளிவாத்தான் யோசிக்கறாங்கப்பா..!

# அசின் நீச்சலுடையில் நடிக்கிறார் என்று நினைத்து விட்டேன். ‘அரசின் சிக்கன நடவடிக்கை’ என்பதை ”அசின்” சிக்கன நடவடிக்கை என்று படித்து...

# திரு.ஜேகேரித்தீஷைப் பற்றிய செய்திகள் ஒன்றையும் காணோம் கொஞ்ச நாளாகவே. என்ன மாதிரியான மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்? ச்சே!

# ராஜபக்‌ஷே அத்தனை குண்டு வீசி அத்தனை பேரோட ஆயுளைக் குறைச்சப்ப வராத கோவம் ரந்தீவ் ஒரு நோபால் வீசி ஒரு செஞ்சுரியைக் குறைச்சதுக்கு வருது!


***************************************************

வேண்டுகோள்:

கேபிள் சங்கரின் இந்தப் பதிவில் முதல் பத்தியில் சொல்லியிருக்கும் விஷயத்திற்கு உதவப்போகும் உங்களுக்கு அட்வான்ஸ் நன்றி!


.

22 comments:

சுசி said...
This comment has been removed by the author.
சுசி said...

அவியல் அசத்தலா இருக்கு..

//நீங்க எந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?//

சொல்லுவேன்.. அப்புறம் பல கொலைகள் விழுறதோட, பலர் ரெட் ரம் வெறியோட அலையும் சாத்தியக் கூறுகளும் இருக்கிறதால சொல்லல :)

சுசி said...

செல்ஃப் கண்ட்ரோல் சூப்பர் :))

ஹாய் அரும்பாவூர் said...

# திரு.ஜேகேரித்தீஷைப் பற்றிய செய்திகள் ஒன்றையும் காணோம் கொஞ்ச நாளாகவே. என்ன மாதிரியான மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்? ச்சே!


அப்புறம்

துளசி கோபால் said...

//வாகனம் ஓட்டுகையில் ட்ரைவர் முகச்சவரம் செய்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துச் சட்டம் சொல்கிறது //

மெய்யாலுமா?

அப்போ பஞ்சாபிகள் வாகனம் ஓட்ட முடியாதா!!!!!

R. Gopi said...

பரிசல், கிட்டத்தட்ட நான் யோசிச்சு வெச்சிருந்த எல்லா மேட்டரையும் எழுதிட்டீங்க.

நாம நெனச்சத எழுதி இருக்காரேன்னு சந்தோஷப் படவா இல்ல ஒரு பதிவு போச்சேன்னு வருத்தப்படவா?

சரி ஒரு பெரிய பின்னூட்டமாவது போட்டு மனச ஆத்திக்கிறேன்:(

இது எனக்குப் புரியாத அதிசயம். எந்த வார்த்தையும் நான் அடிக்கடி பயன்படுத்துவதில்லை. நானும் நண்பர்களை விசாரித்துவிட்டேன். மின்னஞ்சலில் பயன்படுத்தும் ப்ளீஸ், இட் வில் பி கிரேட், ஹவ் யு காட் எ சான்ஸ் என்பவைதான் நினைவிற்கு வருகின்றன.

\\ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்:

‘இறகைப் போலே அலைகிறேனே’ – நான் மகான் அல்ல\\

இதை என் வலைப்ப்பூவின் முகப்பிலேயே சொல்லி இருக்கிறேன்.

\\# ரோட்ல இறங்கினா பொண்ணுங்க செல்லை காதுல வெச்சுக்க ஆரம்பிச்சுடறாங்க’ என்று திட்டாதீர்கள். எதிர்முனையில் இருப்பது உங்கள் மகனாக இருக்கக்கூடும்\\

இதற்கு இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்க்கிறேன். அம்மாவும் நானும் இதப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னது:
"கால் சென்டரில் வேலை பார்க்கிறார்கள். செல் போன் பேச அனுமதி இருக்காது. கிட்டத்தட்ட ஒரு ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு போனைப் பார்க்கிறார்கள். எவ்வளவோ அழைப்புகள், குறுஞ்செய்திகள் வந்திருக்கும். சில முக்கியமானவையாக இருக்கலாம். அழைத்திருந்தது அப்பாவாகவோ, அண்ணனாகவோ, கணவனாகவோ கூட இருக்கலாம். வேறு யாராவது உறவினராக இருக்கலாம். ஒரு பெண் ரோட்டில் போனில் புன்னகையுடன் பேசினாலே அவளை ஏன் தவறாகப் பார்க்க வேண்டும். அப்படியே காதலனுடன் பேசினால்தான் என்ன சிக்கல். நீயும் ஒன பொண்டாட்டியும் பேசாத பேச்சையா மத்தவங்க பேசிடப் போறாங்க?"

ம், பெங்(ண்)களூரை என்னை விட நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்.

\\# திரு.ஜேகேரித்தீஷைப் பற்றிய செய்திகள் ஒன்றையும் காணோம் கொஞ்ச நாளாகவே. என்ன மாதிரியான மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்? ச்சே!\\

இது மீள்ஸ்!

R. Gopi said...
This comment has been removed by the author.
Thamira said...

சுவாரசியமான பகுதிகள். :-)

கார்க்கிபவா said...

பதிவு.. வாய்ப்பே இல்ல சகா..

சூப்பர்..

என் நண்பன் ஒருவன் “வச்சிக்கின்னு” என்ற வார்த்தை பயன்படுத்துவான்.. எங்க ஸ்கூல் சார் ஒருவர் “ஷெக்க” என்ற வார்த்தையை prefixஆக பயன்படுத்துவார்.

“ஷெக்க உன்னை எல்லாம் நாள் முழுக்க முட்டி போட வைகக்ணும்டா”

அவர் அதை ஸ்டைலாக பயனப்டுத்த ஆரம்பித்தி ஒட்டிக்கொண்டதாக சொல்வார்.

பொண்ணுங்க செல்ஃபோனுக்கு இன்னொரு இண்டென்ர்ஸ்டிங் ரீசன் இருக்கு. சென்னைக்கு புதிதாக வந்த போது எல்லாமே புதுசா இருக்கும். தனிமையை போக்கவும், துணைக்கு ஆள் இருக்காங்க என்ற நம்பிக்கையும் அலைபேசி கொடுக்கும். அதுவே பழகிவிடும்..

மத்தபடி ஃபோனிலே பேசிட்டு இருக்கிறது எனக்கு பிடிக்காது. நேரில பார்த்துடணும் :)

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...


வி

ல்!

சுஜாதா

சா

ல்!

அரபுத்தமிழன் said...

ரசித்த எஸ்ஸெம்மெஸ் சிரிக்க வைத்தது

ரமேஷ் வைத்யா said...

//ரசித்த பதிவு//
தான் பட்டது போதாதுன்னு...

நண்பேன்!

ரமேஷ் வைத்யா said...

//ஒரு நண்பர்.. ஒரு வாக்கியத்தில் இரண்டு முறை ‘வந்து பாத்தீங்கன்னா’ என்ற பதத்தைப் பயன்படுத்துவார். //

உங்களுக்கு நீங்களே நண்பராண்ணா?

Arun said...

"super சார் கலக்கிடிங்க..." நான் அடிக்கடி use பண்ற words.. உங்க ப்ளாக் கு கரெக்டா பொருந்துது சார் என்னோட words.
வாழ்த்துகள் மேல் மேலும் வளர..

Ŝ₤Ω..™ said...

கிருஷ் அண்ணா.. போக்குவரத்து சட்டத்தில் விதிமீறல்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை பற்றி இங்கே விளக்கமா குடுத்துருக்காங்க..

http://www.indiandrivingschools.com/traffic-offences-and-penalties.html
-------------
எங்க ஸ்கூல் சார் ஒருத்தர் "I mean"ன்னு அடிக்கடி சொல்லுவாரு.. இப்படித்தான் ஒரு நாள் கணக்கெடுத்தப்போ 45 மணிநேர கிளாஸ்ல அவர் 168முறை சொல்லியிருந்தாரு..
இதையே கவணிச்சிட்டு இருந்ததால, அவரு என்ன mean பன்னாருன்னு கவணிக்க விட்டுட்டேன்..ஹிஹிஹி
-------------
தலைவர் ரித்தீஷ் பற்றி நீங்களாவது ஞாபகம் வச்சியிருக்கீங்களே.. உங்களுக்கு கோடி புண்ணியம்..
-------------

Unknown said...

என்னுடைய தமிழ் பேராசிரியர், ஒரு மணி நேர வகுப்பில் "வந்து" என்ற வார்த்தையை சாதரணமாக அறுபது எழுபது முறை பயன்படுத்துவார்..

நண்பனொருவன் சரக்கடித்தால், "actuala " என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவான்..

:-)))

செல்வா said...

//அப்படியா? யாருக்காவது இதுபற்றித் தெரியுமா?//
எனக்கு தெரியாது ..! நீங்க சொன்னதால தெரிஞ்சிகிட்டேன் .!!

மாதேவி said...

ட்விட்டர் அப்டேட்ஸ் :)))))

Jawahar said...

அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை பற்றி எழுதியிருந்தீர்கள். என் சகோதரர் விவசாயத் துறையில் பணியாற்றிய போது அவரது அதிகாரி ‘உங்களுக்கு’ என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்.

ஜி.டி.நாயுடுவின் காய்கறி இஞ்செக்‌ஷன் அப்போது ரொம்பப் பிரபலம்.

“இஞ்செக்‌ஷன்ல என்ன பெனெஃபிட்?” என்று கலக்டர் டி.வி.அந்தோணி கேட்டார்.

ஒரு புடலங்காயை எடுத்துக் கொண்ட அதிகாரி சொன்ன பதில் சுவாரஸ்யமானது:

“இஞ்செக்‌ஷன் போட்டா நீளமா ஆய்டும் உங்களுக்கு”

http://kgjawarlal.wordpress.com

Anisha Yunus said...

அண்ணா, உங்களை ஒரு மெகா தொடருக்கு அழைத்துள்ளேன். எந்த வேலையிருந்தாலும் தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும். ப்ளீஸ். :)
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

Ramesh.K.S said...

VERY GOOD KRISHNA KEEP IT UP FOR YOUR CREATIVE BLOG FOR ALL