Saturday, July 26, 2008

ஆபரேஷன் சென்ஷி

அது ஒரு ஜூலை மாத மாலை.

கோவி.கண்ணன், முத்துலெட்சுமி கயல்விழி, வெண்பூ மற்றும் சில பதிவர்கள் அந்த காவல் நிலையத்திற்குள் செல்கின்றனர்.

“இன்ஸ்பெக்டரைப் பாக்கணும்”

‘வாங்க.. என்ன பிராது?’ வரவேற்கிறார் இன்ஸ்பெக்டர் வடகரைவேலன்.

”நாங்கெல்லாம் வலைப்பதிவர்கள்... பிளாக்கர்ஸ்ன்னு சொல்லுவாங்க” கோவியார் ஆரம்பிக்கிறார்.

“யாருலே சொல்லுதாக அப்பிடி?”

`ம்க்கும்! வெளங்குன மாதிரிதான்’ என்று மனசுக்குள் நினைத்த வெண்பூ, முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களைப் பார்த்து...

“கயலக்கா”

“அப்படிக் கூப்பிடாதீங்க”

“சரி.. சரி.. முத்தக்கா.. இந்த இன்ஸ்பெக்டர் ஏதாவது கோக்குமாக்கா கேக்கறதுக்கு முன்னாடி நீங்க எல்லாத்தையும் விலாவாரியா சொல்லீடுங்க”

”நாங்க இணையத்துல எங்க படைப்புகளை எழுதீட்டு இருக்கோம். எங்கள்ல ஒருத்தரான சென்ஷி-ங்கறவரை கொஞ்ச நாளா காணல. அது சம்பந்தமா ஒரு புகார் கொடுக்க வந்தோம்”

“ஓஹோ!” என்று புகாரை வாங்கி அவர்களை அனுப்பிவிட்டு ”வெயிலான்.. இங்க வாங்க” என்று அழைக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டர் வெயிலானிடம் புகாரை விளக்குறார் வேலன்.

“உங்களை நம்பி இந்தப் புகாரைக் குடுத்திருக்காங்க. இத கண்டுபிடிக்கலைன்னா உங்க மானம் கப்பலேறிடும்”

“நீ வேற கப்பல், கிப்பல்ன்னு பயமுறுத்தாதய்யா. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீசர் வரப் போறாருல்ல. அவர்கிட்டயே இத ஒப்படைக்கலாம்”

அடுத்த சில மணிநேரங்களில்.. கௌபாய் மீஜிக் பின்னணியில் ஒலிக்க, பெரிய மீசையும் தொப்பியுமாய் தனது ஜீப்பில் வந்திறங்கினார் க்ரைம் பிராஞ்ச் ஸ்பெஷல் ஆபீசர் லதானந்த். கூடவே அவரது பெட் கென்சி வாலாட்டியபடி வருகிறது.

வந்ததுமே இன்ஸ்பெக்டரை அழைக்கிறார்.

“ஏனுங்... எதுனா கேசு வந்துச்சுங்களாக்கும்?”

“ஆமாங்..“ என்று அவர் போலவே பேசவும் தனது மீசை துடிக்க ஒரு முறை முறைக்கிறார். உடனே வெயிலானை அழைத்து “அந்தப் புகாரை கொண்டாங்க” என்கிறார் வேலன்.

வெயிலான் அந்தப் புகாரோடு லதானந்திடம் வருகிறார்.

“அங்கிள்.....”

“அடக்கெரகமே.. என்னதிது.. இங்கிதம் இல்லாம... நானென்ன ஒனக்கு ஒரம்பரையாக்கும்? ச்சொம்மா அங்கிளு, ஆட்டுக்குட்டீன்னு. நானிப்போ ஆபீசர். தெரியுமில்ல?”

“சொரிங்க ஆபீசர்”

” `கெதக்’க்குங்குது எனக்கு. என்ரா சொன்ன?”

”சாரிங்க ஆபீசர்”

“ஆங்...” என்றபடி புகாரைப் படிக்கிறார். உதட்டைச் சுழித்தபடி “ம்க்கும்.. ஒரு எளவும் புரியல. என்னமோ வலைன்ராங்க, பதிவுன்ராங்க. தமிழ்மணம்ரானுங்க... நமக்கு வாய்மணம்தான் தெரியும்” என்று முனகியபடி தனது நண்பர் அப்பநாய்க்கம்பாளையம் அரங்கமுத்துசாமிக்கு தொலைபேசுகிறார்.

“அய்யா... இந்த வலைப்பதிவு, தமிழ்மணம்ங்கறதப்பத்தி ஒங்களுக்கு தெரியுமா”

“குற்றாலக்குறவஞ்சியிலே ஒரு காட்சி. தலைவன் தலைவியோடு ஊடல் கொள்கிறான். மலைகளும் மலைசார்ந்த இடமுமான..”

“இவரு வேற” என்று ஃபோனைத் துண்டித்தவராய் வெயிலானை அழைக்கிறாய்.

“வெயிலு... என்ன பண்ணலாம்?”

“நேரா ரூம் போட்டு, எனக்கு வோட்....” என்று சொல்ல ஆரம்பிக்க

“யோவ்... யோவ்.. வாய மூடு. அதெல்லாம் இங்கன பேசிராத. நம்ம இன்ஸ்பெக்டரைக் கூப்பிடு”

“இல்லீங்க. நமக்கு அந்தப் பழக்கமில்லைங்க” என்று வேலனின் குரல் பின்னால் கேட்கிறது.

“அட... அதில்ல. நீரு கம்ப்யூட்டர் சமாச்சாரத்துல கில்லாடியாச்சே... கொஞ்சம் இதெல்லாம் என்னன்னு பாரும்”

“அதத்தான் பாத்துட்டிருந்தேன்” என்று அவர்களை கம்ப்யூட்டர் அருகே அழைத்துச் செல்கிறார்.

“இதுதான் தமிழ்மணம்” திறந்துவைக்கப்பட்டிருந்த இணையப் பக்கத்தைக் காண்பிக்கிறார்.

பொறுமையாகப் பார்க்கிறார் லதானந்த். “இதென்ன... மட்டுறுத்தல், நடந்தது என்ன”

“அதெல்லாம் தொறந்துடாதீங்க. நமக்கு வேணாம். இதுல சென்ஷி-ங்கற பேரு இங்க இருக்கு பாருங்க”

“அட.. ஆமா...” என்று திறக்கிறார்கள். ஒரு சில பின்னூட்டங்களில் அவரது பெயர். அதில் ஒரு வலைப்பதிவருக்கு தொலைபேசுகிறார்.

”சென்ஷி வந்தாரா”

“இப்போதான் இங்க வந்து பின்னூட்டம் போட்டாரு. இதோ இருக்காரு. இருங்க லைன் தர்றேன்”

“வணக்கம்” என்கிறார் சென்ஷி.

“அட! ஆளப் புடிச்சுட்டனாட்ட இருக்கு” என்று சந்தோஷத்துடன் கூறுகிறார் லதானந்த். `இது சென்ஷிதானான்னு தெரியலயே’ என்று வேலனிடம் சந்தேகமாய்க் கேட்டவாறு எதிர்முனையில் பேசுகிறார். “எங்க ராசா இருக்க நீ? ஒன்னையக் காணோமின்னு புகார் வந்திருக்கு ராசா”

“நிறப்பிரிகையின் இருவேறு துருவங்களாய் கருதப்பட்டாலும் கருப்பு வெள்ளை பிரியாதது போல, இந்தப் பதிவுலகத்தை பூரணமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் என் போன்றவர்களை, எல்லையில்லா பிரபஞ்ச சக்தியாயும், பரிணாமக் குறியீடாகவும் இருக்கும் இணையத்திலிருந்து பிரிக்க முடியாது. ஆயினும்”

“அட.. எங்கன இருக்கன்னு தானப்பா கேட்டேன்”

“மீட்சிகளின் வழி கசியும் உதிரம்போல, காலச் சூழலும் இணையத்தொல்லைகளும் என்னை அடர் கானகத்தினுள் சிக்கிக்கொண்ட பெண்ணாய் தவித்து, பின்நவீனத்துவ”

“ஆஹா.. இது சென்ஷியேதாங்க” வேலன் உற்சாகமாகிறார்.


”எப்படிச் சொல்றீரு?”

“இந்தப் பின்நவீனத்துவத்துக்கு அவருதான் பேடண்ட் வாங்கீருக்காரு”

”சரி.. சரி.. இருங்க... என்ன சொல்றாருன்னு கேப்பம்”

“சாட்சியாய் விளங்கும் தெளிவற்ற பாதையினூடே இருட்டில் தவிக்கும் குழந்தாயாய் மனம் பல நிமிஷகணங்களில்”

”நிமிஷ கணமா? ஐய.. தல சுத்துதே ராசா”

“எதிராளியின் மீதும், எழுத்தின்மீதும் பழியைச் சுமத்தி தப்பித்துச் செல்லும் வழியில், தெளிந்த நீரோடையின் வடிவ உற்பத்தி வரும் பிரதிபலிப்பில் தொக்கித் தெரியும் நவீனத்துவம் எதேச்சாதிகாரமாய் ஒருத்தரிடமே ஒற்றைப்புள்ளியாய் மாட்டிக்கொண்டு தவிக்கும் சூழலில்...”

இங்கே லதானந்த்தின் செல்ஃபோன் வெடித்துச் சிதறுகிறது.

”அடக் கெரகமே.. பாலாஜிகிட்ட என்ன பதில் சொல்றது?” என்று உடைந்த ஃபோனை விரக்தியாய்ப் பார்த்தபடி “வேலன் சென்ஷி இப்படியாக என்ன காரணம்?” என்று கேட்க வேலன் அழைக்கிறார்.

“சார்... இங்கே பாருங்கள். தொலைதூர அடர் கானகத்தே வெளிச்சப் புள்ளியாய் ஒரு அடையாளம் தென்படுவதுபோல...”

“யோவ்... என்னாச்சுய்யா ஒனக்கு?”

“ச்சே” என்று தலையை சிலுப்பிக் கொள்கிறார் வேலன். “இதப் படிங்க” என்று ஒரு வலைப் பக்கத்தைக் காட்டுகிறார்.

படித்து, பிறகு கொஞ்ச நேரம் இணையத்தைப் புரட்டியவர் உற்சாகமாய் நிமிர்கிறார்.

“ஜீப்பை எடு.. வேலன் உக்காருங்க. அடரஸ் தெரியுமா?” என்று ஜீப்பில் தாவுகிறார்.

“வெயிலான் குடுத்தாப்ல” வேலன் சொல்ல, ஜீப் பயணிக்கிறது.

“வெரிகுட் வேலன். சரியான துப்பு கொடுத்தீங்க. ஒங்க சந்தேகம் நெசந்தேன். அவனப் புடிச்சு, முட்டிக்கு முட்டி தட்டினா எல்லாம் தெரியும்”

“ஆமா... சார். ஒழுங்கா கும்மி, மொக்கைன்னு இருந்தவரை கேள்விகேட்டு இப்படி ஆக்கிட்டான்”

“அதுமில்லாம அவன் எழுதியிருந்ததயெல்லாம் படிச்சீங்கள்ல? எப்பப் பாரு பழசையே பேசிகிட்டு, சரக்கே இல்லாத ஆசாமி அவன்” என்றவாறு அந்த வீட்டின் முன் நிறுத்தி காலிங்பெல்லை அழுத்துகிறார்.


------------------------------

பரிசல்காரன்: “ச்சே.. ஒரு மொக்கைப் பதிவு போடலாம்னா யாரோ வந்து கூப்பிடறாங்க.. இருங்க யாருன்னு பாத்துட்டு வர்றேன்”

95 comments:

பரிசல்காரன் said...

இந்தப் பதிவு யாரையும் புண்படுத்த அல்ல. தயவு செய்து யாரும் காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்!!!

நான் என்னதான் சீண்டினாலும் கோபப்படாமல், என்னைத் திட்டாமல் ரொம்ப சீரியஸாகவே எழுதிக் கொண்டிருக்கும் சென்ஷியை மறுபடி மொக்கைப் பக்கம் இழுக்கும் முயற்சியேயன்றி வேறில்லை!


`மல்லாகப் படுத்துட்டு விட்டத்தப் பாக்கறதுல என்னா சொகம்' ன்னு வடிவேலு சொல்றா மாதிரி இந்தமாதிரி ஒரு மொக்கைப் பதிவு போட்டுட்டு வர்ற சந்தோஷம் இருக்கே... ஆஹா!

Anonymous said...

வே பரிசலு,

உம்ம நாங்க கைது பன்னுதம்ல. என்னமும் அலப்பற பன்னுனன்னு தெரிஞ்சுது, மவனே பிறந்த நாள் கொண்டாடீறுவோம். சாகிரத, ஆமா சொல்லிப்புட்டேன்.

புதுகை.அப்துல்லா said...

மல்லாகப் படுத்துட்டு விட்டத்தப் பாக்கறதுல என்னா சொகம்' ன்னு வடிவேலு சொல்றா மாதிரி இந்தமாதிரி ஒரு மொக்கைப் பதிவு போட்டுட்டு வர்ற சந்தோஷம் இருக்கே... ஆஹா!
//

ekalappai not working.i will come later

Thamiz Priyan said...

பரிசல், செமயா கலக்கிட்டீங்க..... :)))

Thamiz Priyan said...

///“கயலக்கா”
“அப்படிக் கூப்பிடாதீங்க”
“சரி.. சரி.. முத்தக்கா..///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பரிசல்காரன் said...

வேலண்ணாச்சி... ச்சே... இன்ஸ்பெக்டரே... அங்கிளுக்கு தனியா கவனிச்சிருக்கம். அவரு ஒதவுவாருல்ல!

@ புதுகை அப்துல்லா

NHM ரைட்டர் இல்லியா?

@ தமிழ் பிரியன்

தேங்க்சோ தேங்க்சு!

முரளிகண்ணன் said...

லதானந்த் அவர்கள் எண்ட்ரி பல்ராம் நாயுடுவை தோற்கடித்துவிட்டது

முரளிகண்ணன் said...

\\இந்தப் பதிவு யாரையும் புண்படுத்த அல்ல. தயவு செய்து யாரும் காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்!!!
\\

புண்பட்டது வயிறு. சிரித்து சிரித்து

கோவி.கண்ணன் said...

//இந்தப் பதிவு யாரையும் புண்படுத்த அல்ல. தயவு செய்து யாரும் காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்!!!//

நீங்க யாரையும் முன்படுத்தி தான் எழுதி வருகிறீர்கள், யாரையும் புண் படுத்தவில்லை... பொருளற்ற கவலை. புலம்பாதீர்கள்

:)

கலக்கலான நகைச்சுவை பரிசல் !

கோவி.கண்ணன் said...

//முரளிகண்ணன் said...
லதானந்த் அவர்கள் எண்ட்ரி பல்ராம் நாயுடுவை தோற்கடித்துவிட்டது

26 July, 2008 9:23 AM
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.....

Anonymous said...

// “அடக்கெரகமே.. என்னதிது.. இங்கிதம் இல்லாம... நானென்ன ஒனக்கு ஒரம்பரையாக்கும்? ச்சொம்மா அங்கிளு, ஆட்டுக்குட்டீன்னு. நானிப்போ ஆபீசர். தெரியுமில்ல?” //

:)))

பல தளங்கள்ல கலக்குறீங்களே!

பரிசல்காரன் said...

@ முரளி கண்ணன்
//புண்பட்டது வயிறு. சிரித்து சிரித்து//

ரொம்ப ரசிச்சேன்!
நன்றி!

@ கோவி.கண்ணன்

//நீங்க யாரையும் முன்படுத்தி தான் எழுதி வருகிறீர்கள், யாரையும் புண் படுத்தவில்லை... பொருளற்ற கவலை. புலம்பாதீர்கள்//

நன்றி தலைவா! வர வர எதுக்குமே பயமாயிருக்குங்க!

உங்களுக்கு வேற ஒரு டயலாக் வெச்சிருந்தேன்.. அதாவது சிங்கைலேர்ந்து ஜோசப் பால்ராஜும், ஜெகதீசனும் பதிவர் மாநாட்டு வேலைய விட்டுட்டு அங்க என்ன பண்றிங்க-ன்னு திட்டறதாவும் அதுனால நீங்க கேசைக் குடுத்துட்டு போறதாவும்...

எடிட் பண்ணீட்டேன்!

பரிசல்காரன் said...

@ வெயிலான்

//பல தளங்கள்ல கலக்குறீங்களே!//

இருந்தாலும் `உக்கார்ந்தா சமதளம், எழுந்தா அதகளம்'-ங்கற ஆளப் புடிக்க முடியலையே???

குசும்பன் said...

பரிசல்காரன் said...
தயவு செய்து யாரும் காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்!!!///

காயப்பட்டிருந்தால் டிஞ்சர்தானே தடவனும் இது என்னா புச்சா மன்னிக்கவும்.

குசும்பன் said...

“இதுதான் தமிழ்மணம்” திறந்துவைக்கப்பட்டிருந்த இணையப் பக்கத்தைக் காண்பிக்கிறார்.//

என்னய்யா இது இவனை அவன் திட்டுறான், அவன் இவனை திட்டுறான் என்னயா ஒரே இரத்த பூமியா இருக்கு என்று அல்லவா சொல்லி இருக்கனும்.

குசும்பன் said...

//”நாங்க இணையத்துல எங்க படைப்புகளை எழுதீட்டு இருக்கோம்.//

அப்ப நான் எழுதுவதும்(???) படைப்பு என்ற பிரிவில் வருமா?? அல்லது குப்பை என்ற பிரிவில் வருவா?

குசும்பன் said...

சென்ஷியை பயமுறுத்த வேண்டுமா? குசும்பன் உங்க ஆபிஸ் போன் நம்பரை கேட்டார் என்று மட்டும் சொல்லுங்க!!!

போன் நம்பரா !!!! அவனா!!! என்று அலறல் சத்தம் கேட்கும்:)))

குசும்பன் said...

கோவிக்கு சிறு பாத்திரமே கொடுத்ததை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறார் நண்பர் ஜெகதீசன்.

பரிசல்காரன் said...

எனது தனிப்பட்ட வேண்டுகோளை ஏற்று வரிகை புரிந்து ஆசிகளை அள்ளி வழங்கிய தலைவர் குசும்பனுக்கு என் நன்றிகள் உரித்தாகுக!

rapp said...

:):):):):):):)

rapp said...

//அப்ப நான் எழுதுவதும்(???) படைப்பு என்ற பிரிவில் வருமா?? அல்லது குப்பை என்ற பிரிவில் வருவா?
//
:):):)

பரிசல்காரன் said...

@ குசும்பன்
//என்னய்யா இது இவனை அவன் திட்டுறான், அவன் இவனை திட்டுறான் என்னயா ஒரே இரத்த பூமியா இருக்கு என்று அல்லவா சொல்லி இருக்கனும்.//

அத சொல்லி நம்மளுது ரத்தபூமியாயிட்டா?

rapp said...

supero super

பரிசல்காரன் said...

//அப்ப நான் எழுதுவதும்(???) படைப்பு என்ற பிரிவில் வருமா?? அல்லது குப்பை என்ற பிரிவில் வருவா?//

உங்களுதெல்லாம் காலத்தைக் கடந்து நிக்கும் காவியம்-ங்க!

//சென்ஷியை பயமுறுத்த வேண்டுமா? குசும்பன் உங்க ஆபிஸ் போன் நம்பரை கேட்டார் என்று மட்டும் சொல்லுங்க!!!//

அப்ப நீங்கதான் அவர் தலைமறைவுக்கு காரணமா? இருங்க போலீஸ் ஜீப்பை திருப்பி விடறேன்!

பரிசல்காரன் said...

//கோவிக்கு சிறு பாத்திரமே கொடுத்ததை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறார் நண்பர் ஜெகதீசன்.//

அவரது உண்ணாவிரதத்தை ஊக்குவிக்கும் விதமாக கோவைப் பதிவர்கள் சார்பில் நாலு பிளேட் தலைப்பாகட்டு பிரியாணி அனுப்பிவைக்கப்படுகிறது!

பரிசல்காரன் said...

@ rapp

என்னங்க வெட்டியாபீசர்..

நம்ம பொழப்பு எப்படி சிரிப்பா சிரிக்குது பாருங்க!

வெண்பூ said...

கலக்குறீங்க பரிசல். தனியா உக்காந்து சிரிச்சிட்டு இருந்தேன்.. நல்ல ஹியூமர் சென்ஸ் உங்களுக்கு.. உங்க குடும்பத்தார்கள் கொடுத்து வைத்தவர்கள்.

//இந்தப் பதிவு யாரையும் புண்படுத்த அல்ல. தயவு செய்து யாரும் காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்!!!//

இதெல்லாம் எதுக்கு? இது போட்டதுதான் வருத்தமா இருக்கு...

Thamira said...

//கலக்குறீங்க பரிசல். தனியா உக்காந்து சிரிச்சிட்டு இருந்தேன்.. நல்ல ஹியூமர் சென்ஸ் உங்களுக்கு.. உங்க குடும்பத்தார்கள் கொடுத்து வைத்தவர்கள்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.....

பரிசல்காரன் said...

@ வெண்பூ

ரொம்பப் பாராட்டீட்டிங்க! நன்றி!

(குடும்பத்தார்கள் குடுத்துவெச்சவங்க-ன்னா சீக்கிரமே சேது ஆய்டுவீங்க, அவங்க நிம்மதியா இருப்பாங்கன்னு அர்த்தமில்லையே?)

புண்படுத்தியிருந்தா மன்னிப்புன்னு கேட்டது ஒரு ஃபார்மாலிட்டி! மத்தபடி நம்ம கோஷ்டியப் பத்தி நமக்குத் தெரியாதா.. எதத்தான் நாம சீரியஸா எடுத்திட்டிருக்கோம்!?!

@ தாமிரா..

உங்க கூட டூ!

சின்னப் பையன் said...

வழக்கம்போல சூப்பரோ சூப்பர்... :-)))))

ஜெகதீசன் said...

//
குசும்பன் said...
கோவிக்கு சிறு பாத்திரமே கொடுத்ததை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறார் நண்பர் ஜெகதீசன்.
//
ஹிஹிஹி......
குசும்பனுக்கு எந்தப் பாத்திரமும் தராத மகிழ்சியைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன்!!!
:P

ஜெகதீசன் said...

//
அவரது உண்ணாவிரதத்தை ஊக்குவிக்கும் விதமாக கோவைப் பதிவர்கள் சார்பில் நாலு பிளேட் தலைப்பாகட்டு பிரியாணி அனுப்பிவைக்கப்படுகிறது!
//
பிரியாணி வந்து சேர்ந்தது....
தயிர் வெங்காயம் மிஸ்ஸிங்... விரைவில் அனுப்பிவைக்கவும்

SP.VR. SUBBIAH said...

வெயிலு சொன்ன வோட்காவை நீங்க பதிவிலே பரிசுன்னனு
அறிவித்திருந்தால் போதுமே சாமி,
சென்ஷி ஓடி வந்திருப்பாரே!
எதுக்குப் போயி புகாரெல்லாம்?

புதுகை.அப்துல்லா said...

அண்ணே யாரும் ரூம்போட்டு யோசிச்சா கூட இவ்வளவு நல்லா எழுத முடியாது. அசத்தல்ணே.

புதுகை.அப்துல்லா said...

காலையில மொதல்லே நா வந்தாலும் இந்த கலப்பை என் காலை வாரி விட்டுருச்சு. இப்போ வந்தா எல்லாரும் எல்லாத்தையும் எழுதிட்டாங்க. பதிவு தான் போட முடியலன்னாலும் வரவர பின்னூட்டம் கூட போட முடியலண்ணே. :))

ராஜ நடராஜன் said...

நானும் அப்துல்லா அண்ணா ஸ்டைல பரிசு(பெரிசு) அண்ணா! நீங்க எங்கோ போயிட்டீங்க சொல்லிக்கிறேன்.

ஜெகதீசன் said...

//
அது ஒரு ஜூலை மாத மாலை.
//
ஏன் காலை இல்லை?

Thamira said...

//பதிவு தான் போட முடியலன்னாலும் வரவர பின்னூட்டம் கூட போட முடியலண்ணே// சிரித்து மகிழ்ந்தேன் அப்துல்லா!.

பரிசலுக்கு :
அதென்ன டூ? நா உங்க கூட த்ரீ! (கொஞ்சம் பயந்துகொண்டே கூப்பிடுறேன். அல்லாரும் கொஞ்சம் நம்ப கடைக்கும் வாங்களேன். சாப்புடுற ஐட்டம் ஒண்ணு வைச்சிருக்கேன். தமிழ்மணம் முகப்பிலே தெரிய மாட்டேங்குது)

ஜெகதீசன் said...

டெஸ்ட்டு....

ஜெகதீசன் said...

சோதனை

குசும்பன் said...

ஜெகதீசன் said...
ஹிஹிஹி......
குசும்பனுக்கு எந்தப் பாத்திரமும் தராத மகிழ்சியைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன்!!!
:P//

அட்லீஸ்ட் பிச்சை பாத்திரமாவது கொடுங்கப்பா:((((

வெண்பூ said...

//ஜெகதீசன் said...
சோதனை
//

யாருக்கு? (பரிசலோட இடுகை அவ்ளோ மட்டமாவா இருக்கு?)

வெண்பூ said...

//பரிசல்காரன் said...
@ வெண்பூ

ரொம்பப் பாராட்டீட்டிங்க! நன்றி!
//
அச்ச‌ச்சோ!!! ந‌ம்பிட்டீங்க‌ளா!!! ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ருங்க‌ நீங்க‌...

//
(குடும்பத்தார்கள் குடுத்துவெச்சவங்க-ன்னா சீக்கிரமே சேது ஆய்டுவீங்க, அவங்க நிம்மதியா இருப்பாங்கன்னு அர்த்தமில்லையே?)
//
புரிஞ்சிடுச்சா!!! :)


//
புண்படுத்தியிருந்தா மன்னிப்புன்னு கேட்டது ஒரு ஃபார்மாலிட்டி! மத்தபடி நம்ம கோஷ்டியப் பத்தி நமக்குத் தெரியாதா.. எதத்தான் நாம சீரியஸா எடுத்திட்டிருக்கோம்!?!
//
ஹி...ஹி.. ஹி.. க‌ரெக்டா புரிஞ்சி வெச்சிருக்கீங்க பரிசல்...

Thamiz Priyan said...

வலைச்சரத்தில் பதிவர்

குசும்பன் said...

ஜெகதீசன் said...
பிரியாணி வந்து சேர்ந்தது....
தயிர் வெங்காயம் மிஸ்ஸிங்... விரைவில் அனுப்பிவைக்கவும்///

வந்தது கோழிகால் பிரியாணி அல்ல...காக்கா பிரியாணி அதுக்கும் தயிர் வெங்காயம் வேண்டுமா?

குசும்பன் said...

பரிசல்காரன் said...
எனது தனிப்பட்ட வேண்டுகோளை ஏற்று வரிகை புரிந்து ஆசிகளை அள்ளி வழங்கிய தலைவர் குசும்பனுக்கு என் நன்றிகள் உரித்தாகுக!///

நானே ஆசிவாங்கும் நிலையில் இருக்கிறேன்:)

குசும்பன் said...

பரிசல்காரன் said...
அத சொல்லி நம்மளுது ரத்தபூமியாயிட்டா?//

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் யாரு வாங்கிதருவார்கள் என்ற கவலை வேண்டாம், வலையிலும் ஒரு கைப்புள்ள இருக்கிறார் அவர் வாங்கி தருவார்.

குசும்பன் said...

rapp said...
//அப்ப நான் எழுதுவதும்(???) படைப்பு என்ற பிரிவில் வருமா?? அல்லது குப்பை என்ற பிரிவில் வருவா?
//
:):):)///

இதுக்கு ஸ்மைலி போட்டு என் பதிவுகளை குப்பை பிரிவில் சேர்த்துவிட்டீர்களே rapp:((((

குசும்பன் said...

பரிசல்காரன் said...
அப்ப நீங்கதான் அவர் தலைமறைவுக்கு காரணமா? இருங்க போலீஸ் ஜீப்பை திருப்பி விடறேன்!///

இப்பதான் லதானந் சார் பதிவில் போய் கும்மிட்டு வருகிறேன், கோப பட்டு அவரே ஜீப்பை எடுத்துக்கிட்டு வந்துடுவார் சிரமம் வேண்டாம் நண்பரே!!!

வெண்பூ said...

//இதுக்கு ஸ்மைலி போட்டு என் பதிவுகளை குப்பை பிரிவில் சேர்த்துவிட்டீர்களே rapp:(((( //

பொய் சொல்லாதீங்க குசும்பன். இந்த கமெண்ட்டுக்கு முன்னால மட்டும் உங்க பதிவுகள் எந்த பிரிவுல இருந்ததாம்? (உண்மையை சொன்னா கோவிச்சிக்கப்படாது)

குசும்பன் said...

பரிசல்காரன் said...
உங்களுதெல்லாம் காலத்தைக் கடந்து நிக்கும் காவியம்-ங்க!//

அவ்வ்வ்வ் வந்து உம் பதிவில் கும்மியது குத்தமா!!! அதுக்கு இப்படி சொல்லி அவமான படுத்தனுமா? நல்லாஇருங்க:(((

இப்படிக்கு
நொந்து நூடுல்ஸ் ஆன மனதோடு
குசும்பன்

குசும்பன் said...

வெண்பூ said...
பொய் சொல்லாதீங்க குசும்பன். இந்த கமெண்ட்டுக்கு முன்னால மட்டும் உங்க பதிவுகள் எந்த பிரிவுல இருந்ததாம்? (உண்மையை சொன்னா கோவிச்சிக்கப்படாது)///

நாம என்னைக்கு கோச்சுக்கிட்டோம்:(((
அதை வழி மொழிந்தமைக்கு மிக்க நன்றி.

ரிப்பிட்டேய் போட ஆட்கள்கள் வருவார்கள்!!!

பரிசல்காரன் said...

குசும்பனை நம்பினோர் கைவிடப்படார் என்பது மறுபடியொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது!

பரிசல்காரன் said...

வாத்தியார் ஐயா, ச்சின்னப்பையன், ஜெகதீசன் மற்றும் கும்மிக்கு குசும்பனுக்கு உதவிய வெண்பூ ஆகியோருக்கு நன்றி சொல்லும் இவ்வேளையிலே, ஒரு வருத்தம்..

லதானந்த், முத்துலெட்சுமி-கயல்விழி, சென்ஷி - ஆகியோர் எங்கே?

பரிசல்காரன் said...

குசும்பன்

உங்க எல்லா பின்னூட்டத்துக்கும் தனித்தனியா பதில் போடலன்னு கோவிச்சுக்காதீங்க. இங்க கனாளாஇக்கு (ஞாயிறு) காலை 6 மணிலேர்ந்து, திங்கள் காலை 6 மணிவரை பவர் கட்டாம்! அதுக்குள்ள ஏதாவது பதிவெழுதி போடணும்! அதுனால ரிலாக்ஸா பதில் சொல்ல நெரமில்ல!

கிரி said...

//நல்ல ஹியூமர் சென்ஸ் உங்களுக்கு.. உங்க குடும்பத்தார்கள் கொடுத்து வைத்தவர்கள்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அருமையா எழுதி இருக்கீங்க கே கே.

Venkatramanan said...

பரிசல்!
கலக்கலா இருக்கு!அதுவும் லதானந்தோட வசனம்லாம் அவரே இவ்வளவு வட்டார வழக்கெல்லாம் உபயோகப்படுத்தமாட்டார்னு (குறைந்த வரிகளுக்குள்) நினைக்கறேன்!

//“இவரு வேற” என்று ஃபோனைத் துண்டித்தவராய் வெயிலானை அழைக்கிறாய்.//

//“அட.. எங்கன இருக்கன்னு தானப்பா கேட்டேன்”//

//“ஆஹா.. இது சென்ஷியேதாங்க” வேலன் உற்சாகமாகிறார். “இந்தப் பின்நவீனத்துவத்துக்கு அவருதான் பேடண்ட் வாங்கீருக்காரு”//

//“சாட்சியாய் விளங்கும் தெளிவற்ற பாதையினூடே இருட்டில் தவிக்கும் குழந்தாயாய் மனம் பல நிமிஷகணங்களில்”//

//இங்கே லதானந்த்தின் செல்ஃபோன் வெடித்துச் சிதறுகிறது. ”அடக் கெரகமே.. பாலாஜிகிட்ட என்ன பதில் சொல்றது?” என்று உடைந்த ஃபோனை விரக்தியாய்ப் பார்த்தபடி//

//“யோவ்... என்னாச்சுய்யா ஒனக்கு?”//

தொடர்ந்து சிரிப்பலைகள்!
தொடர்ந்து இப்படியான நகைச்சுவைப் பதிவுகளை எதிர்பார்க்கறேன்!

அன்புடன்
வெங்கட்ரமணன்!

லதானந்த் said...

எனக்கு எழுத நேரமில்லாட்டி கோஸ்ட் ரைட்டரா நீங்க எழுதலாம். தேரீட்டீங்க

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

பரிசல்காரன் said...
தயவு செய்து யாரும் காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்!!!///

காயப்பட்டிருந்தால் டிஞ்சர்தானே தடவனும் இது என்னா புச்சா மன்னிக்கவும்.

/

ripeatey.......

மங்களூர் சிவா said...

/
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

மல்லாகப் படுத்துட்டு விட்டத்தப் பாக்கறதுல என்னா சொகம்' ன்னு வடிவேலு சொல்றா மாதிரி இந்தமாதிரி ஒரு மொக்கைப் பதிவு போட்டுட்டு வர்ற சந்தோஷம் இருக்கே... ஆஹா!
/
ரிப்பீட்டே
:)

மங்களூர் சிவா said...

/
முரளிகண்ணன் said...

லதானந்த் அவர்கள் எண்ட்ரி பல்ராம் நாயுடுவை தோற்கடித்துவிட்டது
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

“இதுதான் தமிழ்மணம்” திறந்துவைக்கப்பட்டிருந்த இணையப் பக்கத்தைக் காண்பிக்கிறார்.//

என்னய்யா இது இவனை அவன் திட்டுறான், அவன் இவனை திட்டுறான் என்னயா ஒரே இரத்த பூமியா இருக்கு என்று அல்லவா சொல்லி இருக்கனும்.

மங்களூர் சிவா said...

கோவிக்கு சிறு பாத்திரமே கொடுத்ததை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறார் நண்பர் ஜெகதீசன்.

மங்களூர் சிவா said...

//அப்ப நான் எழுதுவதும்(???) படைப்பு என்ற பிரிவில் வருமா?? அல்லது குப்பை என்ற பிரிவில் வருவா?
//
:):):)

தமிழன்-கறுப்பி... said...

நானும் கலந்துக்கவா...

தமிழன்-கறுப்பி... said...

நம்ம தலைவர் சென்ஷி யை அடிக்கடி வம்புக்கிழுக்கிற பரிசல்காரனை வன்மையாக கண்டிக்கிறேன்..:))

இப்படிக்கு

சென்ஷி-பின்நவீனத்துவ ரசிகர் மன்ற

துணைச்செயலாளர்...

தமிழன்-கறுப்பி... said...

\\\
நிறப்பிரிகையின் இருவேறு துருவங்களாய் கருதப்பட்டாலும் கருப்பு வெள்ளை பிரியாதது போல, இந்தப் பதிவுலகத்தை பூரணமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் என் போன்றவர்களை, எல்லையில்லா பிரபஞ்ச சக்தியாயும், பரிணாமக் குறியீடாகவும் இருக்கும் இணையத்திலிருந்து பிரிக்க முடியாது. ஆயினும்”
\\\

அவரை கேள்வி கேட்டு கேள்வி கேட்டு நீ பின்நவீனத்துக்கு மாறிட்டியேப்பு...;)

தமிழன்-கறுப்பி... said...

\\\
மீட்சிகளின் வழி கசியும் உதிரம்போல, காலச் சூழலும் இணையத்தொல்லைகளும் என்னை அடர் கானகத்தினுள் சிக்கிக்கொண்ட பெண்ணாய் தவித்து, பின்நவீனத்துவ”
\\\

பாத்துங்க நீங்க பின் நவீனத்துவவாதியா மாறிட்டு வாறிங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...
\\\
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

மல்லாகப் படுத்துட்டு விட்டத்தப் பாக்கறதுல என்னா சொகம்' ன்னு வடிவேலு சொல்றா மாதிரி இந்தமாதிரி ஒரு மொக்கைப் பதிவு போட்டுட்டு வர்ற சந்தோஷம் இருக்கே... ஆஹா!
/
ரிப்பீட்டே
:)

\\\

இதுக்கு நானும் ரிப்பீட்டு...:)

சென்ஷி said...

:((

என்ன கொடும சார் இது..

சென்ஷி said...

//SP.VR. SUBBIAH said...
வெயிலு சொன்ன வோட்காவை நீங்க பதிவிலே பரிசுன்னனு
அறிவித்திருந்தால் போதுமே சாமி,
சென்ஷி ஓடி வந்திருப்பாரே!
எதுக்குப் போயி புகாரெல்லாம்?
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

ஆசானே... நீங்களுமா...

நான் உங்ககிட்ட வோட்கா பிடிக்கும்னு எப்ப சொன்னேன். வோட்காவும் பிடிக்கும்னு தானே சொன்னேன் :)

சென்ஷி said...

//நான் என்னதான் சீண்டினாலும் கோபப்படாமல், என்னைத் திட்டாமல் ரொம்ப சீரியஸாகவே எழுதிக் கொண்டிருக்கும் சென்ஷியை மறுபடி மொக்கைப் பக்கம் இழுக்கும் முயற்சியேயன்றி வேறில்லை!//

தொடர்ச்சியா ரெண்டு பதிவுல மொக்கைன்னு லேபிள் குத்தலைங்கறதுக்காக இப்படி ஒரு கொலவெறியா :))

சென்ஷி said...

////முரளிகண்ணன் said...
லதானந்த் அவர்கள் எண்ட்ரி பல்ராம் நாயுடுவை தோற்கடித்துவிட்டது
//

மறுக்கா சொல்லேய் :))

சென்ஷி said...

//குசும்பன் said...
சென்ஷியை பயமுறுத்த வேண்டுமா? குசும்பன் உங்க ஆபிஸ் போன் நம்பரை கேட்டார் என்று மட்டும் சொல்லுங்க!!!

போன் நம்பரா !!!! அவனா!!! என்று அலறல் சத்தம் கேட்கும்:)))
//

மாப்ள.. உன் பேர சொன்னாலே பயந்துட்டு இருக்கற புள்ளைய இப்படில்லாம் அழ வைக்கப்படாது. அவ்வளவுதான் நான் சொல்வேன் :)

பரிசல்காரன் said...

// லதானந்த் said...

எனக்கு எழுத நேரமில்லாட்டி கோஸ்ட் ரைட்டரா நீங்க எழுதலாம். தேரீட்டீங்க/

சரிங்... பண்ணிடலாங்...

(இன்னொரு முக்கியமான பாராட்டாக இதை எடுத்துக் கொள்கிறேன்!)

பரிசல்காரன் said...

//தமிழன்... said...

நம்ம தலைவர் சென்ஷி யை அடிக்கடி வம்புக்கிழுக்கிற பரிசல்காரனை வன்மையாக கண்டிக்கிறேன்.///

இதற்கு முதலில் பதில் சொல்லும் கடமையிம் நானிருக்கிறேனென எண்ணுகையில், என் மனம் உவகை கொள்கிறது.

அதாவது, மீள்சதுர வட்டத்திலே முக்கோணமாய் சிக்கிக் கொண்ட எனது சென்ஷியுடனான நட்பு, அவரது வராத வருகையிலே பீதியடைந்ததன் விளைவே இத்தகு பதிவுகள்! மற்றபடி அவரை இழிவுபடுத்தும் எவ்வித நோக்கமும் எனக்கிருப்பதாய் நீங்கள் நினைத்தீரானால்...

சரி.. விடுங்க!

சென்ஷி said...

//“நிறப்பிரிகையின் இருவேறு துருவங்களாய் கருதப்பட்டாலும் கருப்பு வெள்ளை பிரியாதது போல, இந்தப் பதிவுலகத்தை பூரணமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் என் போன்றவர்களை, எல்லையில்லா பிரபஞ்ச சக்தியாயும், பரிணாமக் குறியீடாகவும் இருக்கும் இணையத்திலிருந்து பிரிக்க முடியாது. ஆயினும்”//

முடியல..... :(

சென்ஷி said...

எனது ஆப்பு ரேசன் சென்ஷி

Natty said...

:) LOL

பரிசல்காரன் said...

என்னத்தச் சொல்ல!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதே நாளில் சேட் லிஸ்டில் சென்ஷியை ஓட்டிக்கொண்டிருந்த பரிசல் பற்றி "என்னைப் பாடாப்படுத்தறாங்கன்னு"சென்ஷீக்கிட்டே இருந்து ஒரு தகவல் வந்ததே.. பரிசலுக்கு தண்டனை கிடைச்சாகனும்.. கவனிங்க ..

ஆனாலும் உங்களுக்கு பதிவெழுத எதாச்சும் சரக்கு கொடுக்கற பலசரக்கு கடைக்காரர் சென்ஷி தான்னு இப்பத்தான் தெரிந்தது

நேற்று முழுதும் இணையம் எட்டிப்பார்க்காததால் தாமதம். பேருக்கு விளம்பரம் போட்டத்துக்கு நன்றி :)

Sridhar V said...

//“சாட்சியாய் விளங்கும் தெளிவற்ற பாதையினூடே இருட்டில் தவிக்கும் குழந்தாயாய் மனம் பல நிமிஷகணங்களில்”

”நிமிஷ கணமா? ஐய.. தல சுத்துதே ராசா”//

அண்ணா! கலக்கிட்டீங். ஐ லவ் லதானந்த் கேரக்டர்.

சென்ஷியோட பதில் பதிவும் சூப்பர்.

இதெல்லாம் 'மொக்கை'யே கிடையாது. சிறந்த நகைச்சுவைன்னுதான் நான் சொல்லுவேன் :-)

நிஜமா நல்லவன் said...

//`ம்க்கும்! வெளங்குன மாதிரிதான்’ என்று மனசுக்குள் நினைத்த வெண்பூ, முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களைப் பார்த்து...

“கயலக்கா”

“அப்படிக் கூப்பிடாதீங்க”//

கயலக்கான்னு கூப்பிடுறது தான் பிடிக்கும்னு சொன்னவங்களை அப்படி கூப்பிடாதீங்கன்னு இந்த வலையுலம் சொல்லவச்சிடுச்சே:(

நிஜமா நல்லவன் said...

//நானென்ன ஒனக்கு ஒரம்பரையாக்கும்?//

எந்த அகராதியில இதுக்கு அர்த்தம் தேடலாம்?

நிஜமா நல்லவன் said...

//“இந்தப் பின்நவீனத்துவத்துக்கு அவருதான் பேடண்ட் வாங்கீருக்காரு”//

ரிப்பீட்டேய்....!

நிஜமா நல்லவன் said...

//முரளிகண்ணன் said...
லதானந்த் அவர்கள் எண்ட்ரி பல்ராம் நாயுடுவை தோற்கடித்துவிட்டது//

ரிப்பீட்டேய்...!

நிஜமா நல்லவன் said...

செம கலக்கல் பரிசலாரே. படிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியல. பக்கத்தில் எல்லோரும் வித்தியாசமா பார்க்குறாங்க:)

பரிசல்காரன் said...

முத்துலெட்சுமிக்கா நன்றி! இப்போதான் நிம்மதியா இருக்குது!!

@ ஸ்ரீதர் நாராயணன்

//இதெல்லாம் 'மொக்கை'யே கிடையாது. சிறந்த நகைச்சுவைன்னுதான் நான் சொல்லுவேன் :-)//

இதை நானே வழிமொழிஞ்சுக்கறேன்! (வேறவழி??)

@ நிஜமா நல்லவன்

நீங்க நிஜமாவே நல்லவர்தாங்க!

////நானென்ன ஒனக்கு ஒரம்பரையாக்கும்?//

எந்த அகராதியில இதுக்கு அர்த்தம் தேடலாம்?//

லதானந்த் அகராதிலேயே அர்த்தம் இருக்கு.

ஒரம்பரை = Guest

//செம கலக்கல் பரிசலாரே. படிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியல. பக்கத்தில் எல்லோரும் வித்தியாசமா பார்க்குறாங்க:)//

நன்றியோ நன்றி!

பரிசல்காரன் said...

மன்னிக்கவும்...

தப்பா சொல்லீட்டேன்

ஒரம்பரை = Relation

VIKNESHWARAN ADAKKALAM said...

நன்றாக சிரித்தேன்... சிறப்பாக இருந்தது...

பரிசல்காரன் said...

நன்றி விக்கி!

(என்னடா காணலியேன்னு நெனச்சேன்!)

ஜோசப் பால்ராஜ் said...

திங்கட் கிழமை காலையில அலுவலகத்து வந்ததும் இதப்போயா நான் படிக்கணும், சுத்தி இருக்கவன் எல்லாம் என்னடா ஆச்சு இவனுக்குன்னுல பார்குறாய்ங்க.

லதானந் மாமா பாஷையில அடக்கெரகமே, என்ரா ஆச்சு இவனுக்குனு பார்குறாய்ங்க.

சிரிப்ப அடக்கவே முடியலீங்க, அதுலயும் நீங்க சென்ஷி சொல்றதா எழுதியிருக்க பி.ந. உரையாடல் இருக்கே, தாங்க முடியல.

ஏனுங்க கேட்ட கேள்விக்கு யாருக்குமே புரியாதமாதிரி நீட்டி முழக்கி எதையாவது சொல்றதுக்கு பேருதான் பி.ந வா?

இருந்தாலும் நீங்க எங்க தலைவர் கோவி.க அண்ணாவுக்கு ரொம்ப குறைச்சலான பங்கு கொடுத்ததையும், அதை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட எங்கள் துணை தலைவர் ஜெகதீசன் அவர்களுக்கு பிரியாணி அனுப்பியதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
(அனுப்புனது தான் அனுப்புனீங்க, எனக்கும் சேர்த்து அனுப்பியிருக்கலாம்ல?)

பரிசல்காரன் said...

//அனுப்புனது தான் அனுப்புனீங்க, எனக்கும் சேர்த்து அனுப்பியிருக்கலாம்ல?)//

விடுங்க, பதிவர் மாநாட்டுல குடுத்துட்டாப் போச்சு!

Saminathan said...

என்ன கொடும சார் இது...

ச.முத்துவேல் said...

சும்மா ரெண்டு பக்கம் படிச்சேங்ணா.அணா ..கோயம்புத்தூர் குசும்புங்கிறது இதுதானாங்ண்ணா?
இப்பத்தாண்ணா பாக்கிறேன்.
கலக்குறீங்ணோவ்.