Wednesday, July 23, 2008

பலசரக்கு... பழைய சரக்கு!

கி.வா.ஜகந்நாதனைத் தெரியுமில்லையா உங்களுக்கு? சிலேடைப் பேச்சிலே வல்லவர்…! இனி மேலே (ச்சே...) கீழே படியுங்கள்..

சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!

********************

”எங்க தாத்தா செத்துட்டார். `காலமானார்’ பகுதியில விளம்பரம் கொடுக்கணும். எவ்வளவு செலவாகும்?”

”செண்டிமீட்டருக்கு 150 ரூபாய்”

“அடேங்கப்பா.. எங்க தாத்தா ஆறு அடி, மூணு செண்டிமீட்டராச்சே! கட்டுப்படியாகாது..”

****************************

குணாவும். ஜனாவும் வாடகைப் படகை எடுத்துக்கொண்டு ஏரியில் மீன் பிடிக்கப் போனார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறைய மீனகள் கிடைக்க, குஷியானான் குணா. “டேய்.. ஜனா.. இந்த இடத்தைக் குறிச்சு வெச்சுக்கோ. நாளைக்கும் இங்கேயே வரலாம்” என்றான்.

மறுநாள்... படகுத்துறை நோக்கிப் போகும்போது “ஜனா.. நான் சொன்னமாதிரி அந்த இடத்தை நீ குறிச்சு வெச்சிருக்கதானே?” என்று கேட்டான் குணா.

“பின்னே? அந்தப் படகோட அடிப்பாகத்துல ஒரு பெருக்கல் குறி போட்டு வெச்சிருக்கேனே” என்று ஜனா சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் குணா. ரொம்ப டென்ஷனோடு கேட்டான்... “முட்டாள்... முட்டாள்.. இன்னைக்கும் அந்தப் படகே வாடகைக்குக் கிடைக்குமாடா?”

***************************

“குருவே.. நல்வாக்கு அருளுங்கள்” - சிஷ்யன் கேட்டான்.

“அப்பன் இறக்கிறான். மகன் இறக்கிறான்.. மகனுக்கு மகன் இறக்கிறான்” – புன்சிரிப்புடன் சொன்னார் குரு.

“என்ன குருவே... இதுவா நல்வாக்கு?”

“யோசித்துப் பார். இந்த வரிசையில் எல்லாம் நடந்தால் எத்தனை நிம்மதி! வரிசை தப்பி அப்பா இருக்கும்போதே மகனோ, மகன் இருக்கும்போதே அவன் பிள்ளைடோ இறந்தால் எத்தனை துக்கம்?”

**********************

நெப்போலியன் : “என்னோட டிக்‌ஷனரியில IMPOSSIBLE என்கிற வார்த்தையே இல்லை!”

உடனே சொன்னான் நம்மாளு ஒருத்தன்.. “அதெல்லாம் டிக்‌ஷனரி வாங்கறப்பவே பாத்திருக்கணும்”

*************************

மருந்துக் கடைக்காரரிடம் ஒரு பெண் விஷம் கேட்கிறாள்.

“டாக்டர் சீட்டு இல்லாம அதெல்லாம் தர முடியாது”

“என் வீட்டுக்காரர் சின்னவீடு வெச்சிருக்கார். அவருக்கு சாப்பாட்டுல கலந்து கொடுக்கணும்”

“எத வெச்சு அவர சந்தேகப்படறீங்க?”

“இதோ பாருங்க” என்று அவள் கணவன் வேறொருத்தியுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பிக்கிறாள்.

உடனே மருந்துக் கடைக்காரர் இரண்டு விஷ பாட்டில்களைத் தருகிறார்.

“எதுக்கு ரெண்டு?”

“ஃபோட்டோல உன் புருஷனோட இருக்கறது என் பொண்டாட்டி. ரெண்டு பேருக்கும் குடு!”

***********************


போலீஸ்காரங்க கோவிச்சுக்கக் கூடாது..!

காட்டுல ஒரு முரட்டுப் புலி. அதைப் பிடிக்க பலநாட்டுப் போலீசும் முயற்சிக்கறாங்க. தமிழ்நாட்டுப் போலீஸ் உள்ளே புகுந்த ஒரு மணி நேரத்துல புலியைப் பிடிச்சுட்டதா செய்தி பரவுது. டி.வி.காரங்க, பத்திரிகைக்காரங்க எல்லாம் வேகமா காட்டுக்குள்ள போய்ப் பாத்தா...

தமிழ்நாட்டுப் போலீஸ் சுத்தி நிக்க, நடுவுல ஒரு கரடி பரிதாபமா மிரள மிரள நின்னுட்டிருந்ததாம். போலீஸ்காரங்க அத லத்திசார்ஜ் பண்ணிகிட்டே சொல்லீட்டிருந்தாங்க.....

“புலின்னு ஒப்புக்கோ.. புலின்னு ஒப்புக்கோ”

-------------------------

இது ஒரு `ஏ’ ஜோக்.... வேணாங்கறவங்க படிக்காதீங்க..!

உள்ளாடை வாங்கிய இளம்பெண் கடைக்காரரைக் கேட்டாள்.

“இதுமேல எம்பிராய்டரில எழுதித் தரமுடியுமா?”

“சொல்லுங்க மேடம் என்னன்னு எழுதணும்?”

“`இங்கே எழுதியிருப்பதை நீ படிக்க முடிந்தால் நாம் மிக நெருங்கிவிட்டோம் என்று அர்த்தம்’ அப்படீன்னு எழுதணும்”

“ஆங்கிலத்திலா... ஹிந்தியிலா.. எந்த மொழியில எழுத?”

“ப்ரெய்லியில் எழுதுங்க”

32 comments:

கோவி.கண்ணன் said...

//பலசரக்கு... பழைய சரக்கு! //

பழைய சரக்கும் சிலசமயம் கிக்காகத்தான் இருக்கும். வைன் (WINE) புட்டியில் எந்த ஆண்டுத் தயாரிப்பு என்று போட்டு இருப்பார்கள். அதில் பழசுக்குத்தான் மவுசு.


//“ஆங்கிலத்திலா... ஹிந்தியிலா.. எந்த மொழியில எழுத?”

“ப்ரெய்லியில் எழுதுங்க”//

சொற்களால் சொல்ல முடியாத காதல் எழுத்தில் காட்டுவது - அவை விழியற்றோருக்கும் கூட இருக்கும் என்றே இந்த ஜோக் சொல்கிறது. சிரிக்க முடியாவிட்டாலும் சிந்திக்க வைக்கிறது.

Unknown said...

நல்லபதிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்

பரிசல்காரன் said...

@ கோவி.கண்ணன்

//சொற்களால் சொல்ல முடியாத காதல் எழுத்தில் காட்டுவது - அவை விழியற்றோருக்கும் கூட இருக்கும் என்றே இந்த ஜோக் சொல்கிறது. சிரிக்க முடியாவிட்டாலும் சிந்திக்க வைக்கிறது.//

அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க கண்ணன் சார்!!

@ sharevivek

முதல் வருகைக்கு நன்றி.. (இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்? ஷேர்மார்க்கெட்ல இருக்கீங்களா?)

வெண்பூ said...

ஒரு சிலது ஏற்கனவே படிச்சதுன்னாலும், பல துணுக்குகளை முதல் முறை படிக்கிறேன். வழக்கம் போல‌ சிரிக்க வைத்தது.
:)
****

//சொற்களால் சொல்ல முடியாத காதல் எழுத்தில் காட்டுவது - அவை விழியற்றோருக்கும் கூட இருக்கும் என்றே இந்த ஜோக் சொல்கிறது. சிரிக்க முடியாவிட்டாலும் சிந்திக்க வைக்கிறது.//

ஆஹா...கோவி.கண்ணன் இவ்ளோ நல்லவரா? கண்ணன் அந்த ஜோக்கை பரிசல் எடிட் பண்ணிட்டார். அந்த பொண்ணு என்ன சொல்லிச்சின்னா,

"இருட்டுல தடவிப் படிக்கறதுக்கு ஈஸி ப்ரெய்லிதான், அதுலயே போட்டுறுங்க"

கோவி.கண்ணன் said...

//"இருட்டுல தடவிப் படிக்கறதுக்கு ஈஸி ப்ரெய்லிதான், அதுலயே போட்டுறுங்க"//

ஓ அப்படியா ?

அடப்பாவமே பரிசல் இவ்வளவு மோசமாகவா எழுதி இருக்கார் ?
:)

சரி...அவ்வளவு தூரம் கை சென்ற போது அதில் எழுதி இருப்பதையெல்லாம் ஒருவன் பொறுமையாக படிப்பான் என்று தோனல.
:)

லதானந்த் said...

புன்முறுவல் வரவழைத்தது. வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

பழைய சரக்கும் சிலசமயம் கிக்காகத்தான் இருக்கும். வைன் (WINE) புட்டியில் எந்த ஆண்டுத் தயாரிப்பு என்று போட்டு இருப்பார்கள். அதில் பழசுக்குத்தான் மவுசு.

மங்களூர் சிவா said...

நல்லபதிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்

மங்களூர் சிவா said...

ஒரு சிலது ஏற்கனவே படிச்சதுன்னாலும், பல துணுக்குகளை முதல் முறை படிக்கிறேன். வழக்கம் போல‌ சிரிக்க வைத்தது.

Anonymous said...

தலைப்பு நல்லாருக்கு..... ;)

பரிசல்காரன் said...

@ வெண்பூ

கரெக்ட் வெண்பூ! எதுக்கு அவ்ளோ டீட்டயிலா சொல்வானேன்னு எடிட் பண்ணினேன். !

@ கோவி. கண்ணன்
//சரி...அவ்வளவு தூரம் கை சென்ற போது அதில் எழுதி இருப்பதையெல்லாம் ஒருவன் பொறுமையாக படிப்பான் என்று தோனல.//

அட! இதப்பாருடா!

பரிசல்காரன் said...

நன்றி லதானந்த் அங்கிள்!

@ மங்களூர் சிவா...

என்ன வர வர பின்னூட்டங்களையும் பிட் அடிக்கறாங்களா? போங்க சார்!

@ வெயிலான்

கவனிச்சுப பாராட்டினதுக்கு நன்றி!

Anonymous said...

பழசானாலும் நல்லா ரசிக்கற நகைச்சுவையாத்தான் இருக்கு. இன்னும் இருந்தா போடுங்க

பரிசல்காரன் said...

@ சின்ன அம்மணி

நன்றிங்க! அப்பப்ப போடறேன்!

KANALI said...

குரு, சிஷ்யன் உரையாடலை மிகவும் ரசித்தேன்!

Anonymous said...

நல்லாஇருக்கு நண்பா!
இன்னும் நிறையப் போடுங்க!

கிரி said...

//“புலின்னு ஒப்புக்கோ.. புலின்னு ஒப்புக்கோ”//

ஹா ஹா ஹா ஹா இப்படி தான் பலருக்கு அடி விழுது செய்யாத தப்புக்கு :-)

ambi said...

மெல்லிய புன்சிரிப்பை வரவழைத்தது.

கோவி அண்ணா நல்லவர்னு தெரியும், இவ்ளோ நல்லவர்னு இன்னிக்கு தான் தெரிஞ்சது. :p

பரிசல்காரன் said...

நன்றி கிரி!!

@ ambi

அதேதான் நானும் நெனச்சேன்!!!

rapp said...

எல்லா ஜோக்ஸும் சூப்பர், கலக்கல். வாழ்த்துக்கள்

rapp said...

//சொற்களால் சொல்ல முடியாத காதல் எழுத்தில் காட்டுவது - அவை விழியற்றோருக்கும் கூட இருக்கும் என்றே இந்த ஜோக் சொல்கிறது. சிரிக்க முடியாவிட்டாலும் சிந்திக்க வைக்கிறது//
இதை இப்படி யோசிப்பீங்கன்னுதான் அவர் ஏ ஜோக்குன்னு போட்டிருக்கார், அப்படியும் பிடிவாதமா??????????

Thamira said...

போலீஸ் ஜோக் பலமுறை படித்தது. 'ஏ' ஜோக் மற்றும் 'குரு' ஜோக் பிரமாதம்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

\\“முட்டாள்... முட்டாள்.. இன்னைக்கும் அந்தப் படகே வாடகைக்குக் கிடைக்குமாடா?”
\\
எனக்கு பிடிச்சது இந்த ஜோக் தான் !
எல்லாமே நன்றாகத்தான் இருந்தது !
அன்புடன்,
அருப்புக்கோட்டை பாஸ்கர்

சின்னப் பையன் said...

குரு சொன்னது மிகவும் சரி....

ஏ ஜோக் ஆஆஆ...:-)))

Anonymous said...

நல்லாயிருக்கு கிருஷ்ணா,

கிவாஜா சிலேடை அருமை. அவரது ‘தள்ளாதவன்' சிலேடை தெரியுமா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சும்மா இதழ் தலைப்புகள் மாதிரியே இந்த தலைப்பும் ரொம்ப பொறுத்தமா இருக்கு அழகா..:)

கயல்விழி said...

//“புலின்னு ஒப்புக்கோ.. புலின்னு ஒப்புக்கோ”//

LOL!!

இதில் ஏதும் உள்குத்து இல்லையே??

இதில் ஒரு துணுக்கை கூட இதுவரை நான் படித்ததில்லை என்பதால் என்னைப்பொறுத்த வரையில் 'புது சரக்கு'

புதுகை.அப்துல்லா said...

உடனே மருந்துக் கடைக்காரர் இரண்டு விஷ பாட்டில்களைத் தருகிறார்.

“எதுக்கு ரெண்டு?”

“ஃபோட்டோல உன் புருஷனோட இருக்கறது என் பொண்டாட்டி. ரெண்டு பேருக்கும் குடு!”

//

haa..haa..haaa

புதுகை.அப்துல்லா said...

அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க கண்ணன் சார்!!
//

:))

பரிசல்காரன் said...

நன்றி வெட்டியாபீசர்! (பரவாயில்ல.. இன்னைக்கு 2 பின்னூட்டமா??)

//@ தாமிரா

போலீஸ் ஜோக் பலமுறை படித்தது. 'ஏ' ஜோக் மற்றும் 'குரு' ஜோக் பிரமாதம்.//

`குரு' - ஜோக் இல்லீங்க... தத்துவம்!

நன்றி அருவை.பாஸ்கர்!

நன்றி ச்சின்னப்பையன்!

பரிசல்காரன் said...

@ வடகரை வேலன்

தெரியும்ண்ணா.. அத அடுத்த வாரத்துக்காக வெச்சிருக்கேன்!

@ முத்தக்கா...
நன்றி

என்னக்கா கயல்விழியினால பேரையே மாத்தீட்டீங்களா???

@ கயல்விழி..

//இதில் ஒரு துணுக்கை கூட இதுவரை நான் படித்ததில்லை//

ஒருத்தராவது இப்ப்டி சொல்றதக் கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்கு!

கயல்... எங்க கயலக்காவைப் பேரை மாத்தவெச்சுட்டீங்கள்ல? அவ்வ்வ்வ்வ்..

@ புதுகை அண்ணன்..

நன்றிங்க அண்ணா!! (ஹி..ஹி..)

VIKNESHWARAN ADAKKALAM said...

//முட்டாள்... முட்டாள்.. இன்னைக்கும் அந்தப் படகே வாடகைக்குக் கிடைக்குமாடா?”//

புத்திசாளிங்க...