Wednesday, September 29, 2010

ஸ்ஸ்ஸ்...ப்ப்பாஆஆஆஆஆ..

ன்னை எழுத அழைத்த அன்னுவிற்காக....

*********************************


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பரிசல்காரன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. காரணம் ஏற்கனவே கூறியதுதான்.. இங்கே படித்தால் தெரியும்..

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

இதற்கும் இரண்டாவது பதிலில் குறிப்பிட்டிருக்கும் இணைப்பைக் க்ளிக்கினால் போதுமானது. (அதுக்காக காலடி எடுத்து வைக்கறதெல்லாம் பெரிய வார்த்தைங்க.. தவிரவும்... வலைப்பதிவுன்னா கைவிரலடிதானே எடுத்து வைக்கணும்??)


4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ம்க்கும்..

முதலில் அப்போதைய அமெரிக்க ப்ரசிடெண்ட் GEORGE W BUSHஷிடம் என் வலைப்பூவைப் பிரபலமாக ஆக்க, அவரை இந்தியா -சிங்கப்பூர் - இங்கிலாந்து - பாரீஸ் - லண்டன் - நார்வே - ஃப்ரான்ஸ் என்று என் வாசகர்கள் வசிக்கும் மூலை முடுக்கிற்கெல்லாம் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டேன். அவர் மறுத்ததால் அடுத்து நடந்த தேர்தலில் அவருக்கெதிரான டெமாக்ரடிக் கட்சிக்கு நான் ஆதரவளித்து ஒபாமாவை ப்ரசிடெண்ட் ஆக்கிய விபரம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அடுத்ததாக.. சச்சின் டெண்டுல்கரை எனது வலைப்பூவின் ப்ராண்ட் அம்பாசிடராக ஆக்கும் முயற்சிகள் மேற்கொண்டேன். அவர் ‘ ப்ராண்ட் பி எம் டபிள்யூவாகவோ, ப்ராண்ட் புகாட்டியாகவோ வேண்டுமானால் வருவேன், ப்ராண்ட் அம்பாசிடராக வரமாட்டேன்’ என்று வட்டதிட்டமாகக் கூறியதால் எங்களிருவருக்கும் லேசான மனக்கசப்பு நேர்ந்து அப்போதைய காலகட்டத்தில் இது குறித்து BARஆளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

மேலும்..

என்னது போதுமா? சரி.. சரி..


5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


1) என் மனைவி, மகள்களின் பெயர்களை அப்படியே குறிப்பிடுவேன். விளைவு என்றால் எல்லாருடைய அன்பும், யார் அழைத்தாலும் உமா, மீரா, மேகா எப்படி இருக்காங்க என்ற விசாரிப்பு கிடைப்பதும்தான்.

2) முன்பெல்லாம் மகள்களின் ஃபோட்டோஸ் போடுவேன்.. சென்னை சென்றபோது ஒருமுறை ‘என் மருமகள்கள் ஃபோட்டோஸ் போட்டா மண்டைலேயே குட்டுவேன்’ என்று அப்துல்லா மிரட்டல் விடுக்கவே அதைக் குறைத்துக் கொண்டேன்..


6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நான் எழுதாவிட்டால் இந்த தமிழையும் தமிழ் உலகத்தையும் காப்பாற்ற யாருமில்லையே என்ற ஆற்றாமையில் பதிவெழுதுகிறேன்.

(யாருய்யா இந்தப் பதிலுக்குச் சிரிக்கறது.. சீரியஸா சொல்றேனாக்கும்.. ஆமா..)

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒரு வலைப்பூவுக்கே போதும் போதும்ங்க தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிக்கறாங்க.. இதுல மொழிவாரி வலைப்பூக்களா? கிழிஞ்சது போங்க..


8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.

எல்லார் மேலயும் பொறாமை உண்டு. ஏதாவது ஓர் பதிவில் அவர்கள் தொட்டிருக்கும் விஷயம் + அதை எழுதியிருக்கும் விதத்தைப் படித்து ‘நாம் எழுதினால் இப்படி வந்திருக்காதே’ என்று பொறாமைப் பட்டிருக்கிறேன்..

கோபம்? To Be Honest... ஒருவர் மீது வந்ததுண்டு..! ஏன் எதற்கு என்பது வேண்டாமே...


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.

‘தொடர்புகொண்டு’ மீன்ஸ், பின்னூட்டங்களில்லாமல் அலைபேசியில் அல்லது நேரில் என்ற அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். அப்படியானால் என் கஸின் க்ரேசி கிரி.

படித்துவிட்டு அவன் சொன்னது: ‘வேணாண்ணா.. விட்டுடலாம்.. ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டுட்டா பின்னாடி சரிபண்றது ரொம்பக் கஷ்டம்’

ப்ச்.. நல்ல விஷயத்தைச் சொல்லி எவன் கேட்டிருக்கான் சொல்லுங்க...?


10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தெரியவேண்டியவை அனைத்தும் தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.. அதுனால இந்தக் கேள்வியை சாய்ஸ்ல விட்டுடலாம்.

இந்தத் தொடரை தொடர நான் அழைப்பது...



































ஹலோ.. ஹலோ... ப்ச்.. உங்களைத்தாங்க.. நில்லுங்க.. எங்க ஓடறீங்க?..

ச்சே.. யாரையும் காணோமே......




.

டிஸ்கி: எல்லா கேள்விகளுமே ஏற்கனவே நான் எழுதிட்ட மாதிரியே இருக்கு. அப்படி எழுதியிருந்து, மெனக்கெட்டு தேடி அதைக் கண்டுபிடிச்சு ‘அன்னைக்கு அப்படிச் சொல்லிருக்கீங்களே.. இன்னைக்கு இப்படிச் சொல்லிருக்கீங்களே’ன்னெல்லாம் கேள்வி கேட்டு கோர்ட்டுல நிக்க வெச்சீங்கன்னா.. பிச்சுப்புடுவேன் பிச்சு.. ஆமா..




.

21 comments:

Anisha Yunus said...
This comment has been removed by the author.
மதுரை சரவணன் said...

arumaiyaana pakirvu . yaarungka antha thamil kadaisivarai sollave illai . ungkalukku therinchcha ponnaa.. summa otturen..neengka kaththu koduththathu thaan.

Anisha Yunus said...

//நான் எழுதாவிட்டால் இந்த தமிழையும் தமிழ் உலகத்தையும் காப்பாற்ற யாருமில்லையே என்ற ஆற்றாமையில் பதிவெழுதுகிறேன்.//

ஆஹா...நீங்களும் என்னை மாதிரி தமிழை காப்பாத்தறதுக்காகவே வலையுலகிற்கு வந்தீங்களா....பாத்தீங்களான்னா, என்ன இருந்தாலும் ஒரே மாவட்டத்துல ஒரு காலத்துல இருந்தோமில்ல..? என்ன சொல்றீங்? அருமையான எளிமையான சுய புராணம்!! நன்றி, நன்றி. (ஒரு பிழை இருந்ததால் முன்னர் போட்ட மறுமொழியை நீக்கிவிட்டேன்!)

கொல்லான் said...

//கோபம்? To Be Honest... ஒருவர் மீது வந்ததுண்டு..! ஏன் எதற்கு என்பது வேண்டாமே...//

சரி. யாரென்று சொல்லலாம் அல்லவா?

மேவி... said...

நல்லாயிருக்கு ....ஆனா இது எந்த இலக்கியவகையை சேர்ந்ததுன்னு கண்டுபிடிக்க முடியலையே ....

"இல்லை. காரணம் ஏற்கனவே கூறியதுதான்.. இங்கே படித்தால் தெரியும்.."

அதை இங்க சொல்லாம இன்னொரு பதிவுக்கு லிங்க் தந்து இருக்கீங்களே ???? என்னையொரு கருது திணிப்பு (ஒருவேளை அந்த பதிவு ஹிட் அடிக்கவில்லையோ ???? ஹி ஹி ஹி ஹி ஹி )

ஆமாம் .... இன்னொரு விஷயத்தை சொல்லாம விட்டுடீங்களே : உங்க பதிவை இராமலிங்க ராஜு படிச்ச பிறகு தான் .... கண்ட மேனிக்கு ரிப்போர்ட் எழுதி மாட்டிகிட்டராமே ????

மேவி... said...

அப்பாவின் மீசை

(எல்லாம் ஒரு விளம்பரம் தான்)

மேவி... said...

திருவள்ளுவரே விரும்பி படிக்கும் ஒரு பதிவு உங்களுடையது தான்ன்னு கேள்வி பட்டேன் ...

Mahesh said...

ஸ்ஸ்ஸ்...ப்ப்பாஆஆஆஆஆ..

நிகழ்காலத்தில்... said...

இது உங்களாளதான் முடியும் பரிசல் :))

Prathap Kumar S. said...

பரிசல் உங்களுக்கு புஷ், ஒபாமா, சச்சினையெல்லாம் தெரியும்னு சொல்லவே இல்லை...
அவங்களுக்கு உங்களை தெரியுமா??? :)))

சிவராம்குமார் said...

னன்றி பரிசில்! டமிலை நீங்கடான் கப்பதணும்!

Unknown said...

சுயசொரிதலுக்கு ஒரு அளவே இல்லையா.. பார்த்து குரங்கு மாதிரி ரொம்ப சொறிஞ்சி புண்ணாகி செப்டிக் ஆகி விட போகிறது.. இப்படி ஒரு கும்பலே கிளம்பிட்டிங்க போல..

செல்வா said...

//(யாருய்யா இந்தப் பதிலுக்குச் சிரிக்கறது.. சீரியஸா சொல்றேனாக்கும்.. ஆமா..)//

கண்டிப்பா நான் சிரிக்கலை அண்ணா..!!
ஹி ஹி ஹி ..

ஹுஸைனம்மா said...

//நான் எழுதாவிட்டால் இந்த தமிழையும் தமிழ் உலகத்தையும் காப்பாற்ற யாருமில்லையே //

வாரிசைக் கண்டுபிடிக்கிறதுக்குத்தான் சிறுகதைப் போட்டி அறிவிச்சுருக்கீங்க போல!!

சுசி said...

அசத்தல் பரிசல்.. அட்டகாசமான பதில்கள்..

ஐயாக்கள் மட்டும் தான் சிரிப்பாங்களா?? நாங்களும் சிரிச்சோம்ல..
//(யாருய்யா இந்தப் பதிலுக்குச் சிரிக்கறது.. //

சுசி said...

அய்யய்யோ.. இன்னைக்கு நான் இல்லைங்க :))

தெய்வசுகந்தி said...

:))))))))))!!

'பரிவை' சே.குமார் said...

நகைச்சுவை இழையோடும் பதில்கள்.
அருமைங்க.

சுரேகா.. said...

நல்லா இருக்கு!

ஒரு பதிவைப் படிங்க வந்தவங்களை லின்க் குடுத்து எச்சாவா ரெண்டு பதிவு படிக்க வச்ச பாரு!

நீர் கலைஞனய்யா!

jeevan said...

பரிசல் அண்ணா தங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்..

ம.தி.சுதா said...

பரிசல் அண்ணே நிங்க சொல்வதைப் பார்க்கையில் நான் எழுத வராமல் விட்டிருந்தால்....