Thursday, July 3, 2008

புரியும் புதிர்!


அம்மாவின் சேலை ஜாக்கெட்டும்

அக்காவின் சுடிதாரும்

அப்பாவின் வேஷ்டி சட்டையும்

தம்பியின் பேண்ட்டும்

சலவைக்குப் போனது.

இன்னும்

எனக்கு

வேலை கிடைக்கவில்லை!



13 comments:

கோவி.கண்ணன் said...

//அம்மாவின் சேலை ஜாக்கெட்டும்அக்காவின் சுடிதாரும்
அப்பாவின் வேஷ்டி சட்டையும்தம்பியின் பேண்ட்டும்
சலவைக்குப் போனது.இன்னும்
எனக்குவேலை கிடைக்கவில்லை!
//

சலவை வேலையெல்லாம் நாம் அவமானம் என்று நினைத்தாலும் அதைச் சிலர் செய்கிறார்கள்...ஆனால் நாமோ தகுதியான வேலைக் கிடைக்கும் என்று சோம்பேறியாக இருப்பதாகச் சொல்கிறீர்களா ?

வேலைக்குப் போகவில்லை என்பதற்காக உங்கள் தூணிகளை அவர்கள் கண்டு கொள்ள வில்லை என்று சொல்கிறீர்களா ?

புரியல்ல.

ராமலக்ஷ்மி said...

வேலை கிடைக்காதவனின் வேதனையை வித்தியாசமாய் சொல்லியிருக்கிறீகள். பாராட்டுக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை அருமை.. கோவியோட பதில் முதல் கோணம் வித்தியாசமா இருக்குன்னு தோணுது..
இரண்டாவது கோணம் தான் எனக்கு பட்டது ராமலக்ஷ்மி க்கு பட்டது..

பரிசல்காரன் said...

கண்ணன் சார்.. நீங்க ரெண்டாவதா சொல்லிருக்கற அர்த்தத்துலதான் எழுதினேன்.

ஆனா, நீங்க குறிப்பிட்ட முதல் அரத்தம் அருமையிலும் அருமை!

ராமலட்சுமி அம்மா..

மிக்க நன்றி!

பரிசல்காரன் said...

@ கயலக்கா..

எப்படிங்க? நான் இப்பொதான் கோவியோட முதல் அர்த்தத்துக்கு பின்னூட்டம் போட்டேன்.. அப்புறம்தான் பார்க்கறேன்.. நீங்களும் அதையே எழுதிருக்கீங்க! கிரேட்!

anujanya said...

கண்ணன், ராமலக்ஷ்மி சொல்லியதுபோல் வேலை கிடைக்காத துயரம்தான் இது. அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கொள்ள வேண்டாம். இவருக்கே சற்று தாழ்வு மனப்பான்மை இருந்திருக்கக்கூடும்.

வேலையில்லாத் திண்டாட்டம் இப்போதும் தலை விரித்து ஆடுகிறதா?

வாழ்த்துக்கள் கே.கே. என்னொரு நல்லா கவிதைக்கு

rapp said...

ஆஹா நல்ல உள்குத்து கவிதையா இருக்கே:) (நிஜமாவே வித்தியாசமான விதத்துல அணுகி இருக்கீங்க)

Selva Kumar said...

வித்தியாசமான கவிதை....

:-))

பரிசல்காரன் said...

நன்றி வெட்டியாபீசர்..

வாங்க வழிப்போக்கன்.. போற வழில அப்பப்ப இங்கயும் வந்துட்டுப் போங்க!

rapp said...

y no new post?????????

பரிசல்காரன் said...

சிஸ்டம் புட்டுகிச்சுங்க. (வைரஸ்) இதோ அடிச்சுட்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல போட்டுடறேன்!

சின்னப் பையன் said...

//வேலைக்குப் போகவில்லை என்பதற்காக உங்கள் தூணிகளை அவர்கள் கண்டு கொள்ள வில்லை என்று சொல்கிறீர்களா //

இப்படித்தான் நானும் நினைத்தேன்!!!...

ஒரே கவிதையில் பல்வேறு அர்த்தங்களைக் கொண்ட கதைகளை வழங்கும் பரிசலுக்கு ஒரு... சாரி.. சாரி... மூணு... ஓஓஓ.

பரிசல்காரன் said...

@ ச்சின்னப்பையன்..

அய்யய்யோ. நான் ஒரு அர்த்தம் மட்டும்தான் நெனச்சு எழுதினேன்.. இன்னொரு அர்த்தம் இதுல இருக்கறதா கண்டுபிடிச்சது நண்பர் கோவி கண்ணன்!

இப்படித்தான் கவிஞர் என்னமா எழுதிருக்காரு'ன்னு நாம நெனைக்கறோம்.. நாம சொளும்போதுதான் அவங்களுக்கே `அட இதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா'ன்னு தெரியும் போல!