Thursday, July 10, 2008

வார்த்தை விளையாட்டு

நண்பர்களோடு இருந்தாய்

பேசமுடியவில்லை.

என்னோடு இருந்தாய்

பேசி முடியவில்லை.

-கற்றது தமிழ் விளம்பரத்தில்
..........

இரவில் நீ என்னை அணைக்க மறந்தால்

பகலில் நான் உன்னை அணைக்க நேரிடும்

-கேஸ் சிலிண்டர்

.......................

பக்கம் தந்த குமுதம், பக்கம் நின்ற வாசகர்கள் அனைவருக்கும் நன்றி!

-`கொஞ்சம் தேனீர் நிறைய வானம்’ தொடரின் முடிவில் குமுதத்தில் வைரமுத்து

...........................

வாக்குப் போட்டவனை சாவடிப்பதால்தான், அது வாக்குச்சாவடி!

-அப்துல்காதர் (அகடவிகடம்)

...........................

பெண்பார்க்க வந்த இடத்தில் மாப்பிள்ளை பெண்ணின் அண்ணனிடம் ஒரு டைரியைக் கொடுத்து..

“இது என்னோட past. இத என்னோட present-ஆ Future ல எனக்கு மனைவியாகப்போற உங்க தங்கச்சிகிட்ட குடுத்துடுங்க...

-பாலச்சந்தர் சீரியல் ஒன்றில்

...........................................

சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, இன்சமாம், ஜெயசூர்யா, கவிஞர் வாலி இவங்க எல்லாரும் பத்தாயிரத்தைக் கடந்தவர்கள்அவர்கள் Bat-ஆல்... இவர் பாட்டால்!

-பிரகாஷ்ராஜ் (கவிஞர் வாலிக்கு நடந்த பாராட்டுவிழா ஒன்றில்)

.......................................

டி,வி.எஸ்ஸின் கார் விளம்பரம் ஒன்றில்..

We were in the car business, Before the car were in the business!

...................................

ஆடியபோது அசையாமல் பார்த்தேன்

அசையாமலிருந்தபோது ஆடிப்போனேன்

-நாட்டியப் பேரொளி பத்மினி மறைவின்போது வந்த எஸ்.எம்.எஸ்

..............................

என் தம்பி கிரேசி கிரியைப் பற்றி சொல்லியிருக்கிறேனல்லவா.. அவன் ஒரு விலாசம் தேடிப் போய்க்கொண்டிருந்தபோது எதிரில் வந்த ஒருவரிடம் கேட்டிருக்கிறான்..

"இந்த அட்ரஸ் எங்கிருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்”

“நேராப் போனீங்கன்னா ஒரு Dead End வரும்”

“ஆமாமா.. DEAD ன்னாலே END தானே?”

”இல்லீங்க.. Dead End-ன்னா...”

“எல்லாருக்குமே End, Dead தாங்க”

அவரு அட்ரசை சொல்லாமயே போய்ட்டாராம்.

..............................................


கிரேசி கிரி மேட்டரை நாளைக்குப் போடப்போற அவியல்ல போடலாம்ன்னுதான் நினைச்சேன்.. அது ஒரு நல்ல வார்த்தை விளையாட்டு-ங்கறதால இதுலயே போட்டுட்டேன்.. இந்த மாதிரி நிறைய வார்த்தை விளையாட்டுகள் குறிப்பெடுத்து வெச்சிருக்கேன்.. உங்களுக்குப் பிடிச்சிருந்தா அப்பப்ப போடறேன்..

32 comments:

rapp said...

நல்ல நல்ல வரிகள எடுத்து மேற்கோள் காட்டிருக்கீங்க, வாழ்க உங்கள் பணி

ச.பிரேம்குமார் said...

ரொம்பவே ரசிக்கும் படியான வார்த்தை விளையாட்டுகள். தொடர்ந்து பதியுங்கள்

anujanya said...

திருப்பூர்க்காரனைத்
திருப்பிப் போட்டால்
காரே பரிசில் கிட்டும்
ம்ம், தொடங்கட்டும்

அனுஜன்யா

சங்கணேசன் said...

வணக்கம்
பரிசல்காரருக்கு பரிச்சயமானவன் பேசுகிறேன் .....எழுதுகிறேன்..
தாமதமாக வந்தாலும் தற்போது வந்துவிட்டேன் ....இது தற்காலிகமாக இருக்காது ... உங்கள் வண்ணங்கள் தொடரட்டும் ... கை வண்ணம் , சொல் வண்ணம், எழுத்து வண்ணம் இவையெல்லாம் ...
மற்ற நண்பர்களை சந்திப்பதிலும் மகிழ்ச்சி ...
உங்கள் பதிப்புகள் அனைத்தும் சுவை .... செரித்த பின்புதான் சொல்கிறேன் ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வார்த்தைகள் பழமொழிகள் .. கவிதைகள் கதைகள் என்று குறிப்பெடுத்து குறிப்பெடுத்துபரண் நிறைந்து விட்டதோ.. ? :) நன்றாகவே இருந்தது வார்த்தை விளையாட்டு.

கயல்விழி said...

உங்க அவியல்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் இன்ஃபார்மேட்டிவாகவும் இருக்கு :)

பரிசல்காரன் said...

@ rapp

ரொம்ப தேங்க்சுங்க.. மொத ஆளா வந்துட்டீங்களே.. உங்க வீடல் இருக்கற எதாவது பரிசை நீங்களே எடுத்து என் சார்பா வெச்சுக்கோங்க..

பரிசல்காரன் said...

@ பிரேம்குமார்

முதல் வருகைக்கு நன்றி! தொடர்ந்து வாருங்கள்.. என் எழுத்தையும் வாருங்கள்!

@ அனுஜன்யா

//திருப்பூர்க்காரனைத்
திருப்பிப் போட்டால்
காரே பரிசில் கிட்டும்
ம்ம், தொடங்கட்டும் //

மொதல்லருந்தே இருக்கா, இல்ல இப்போதான் இப்படி ஆச்சா அனுஜன்யா?

(திருப்பூர்காரனை” க்குப் பதிலா.. பரிசல்காரனை- ன்னு போட்டிருந்தா நேரடியா எல்லாருக்கும் புரிஞ்சிருக்குமோ?)

Jokes Apart... நீங்களும் வார்த்தை விளையாட்டுல கலக்குறீங்க! ஏற்கனவே வாலி கவிதைக்கு உங்க பின்னூட்டத்துல இருந்த கவிதையை என் கஸின் கிரேசி கிரி எப்பப் பாத்தாலும் சிலாகிச்சு சொல்லிட்டே இருப்பான்..

பரிசல்காரன் said...

@ sangganesan

வாங்கய்யா...வாங்க!

(இவருதான் என்னை வலையில எழுதச் சொல்லி முதல்ல சொன்னவரு! நாளைக்கு அந்தக் கதையை சொல்றேன்)

கணேஷ்..

http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx

இந்த லிங்க்-ல போய் NHM Writer பதிவிறக்கம் பண்ணிக்கோங்க.. தமிழ்ல டைப் பண்ண ஈஸியா இருக்கும்.

//தாமதமாக வந்தாலும் தற்போது வந்துவிட்டேன் ....இது தற்காலிகமாக இருக்காது ..//

தற்காலிகமா இருந்தா விட்டுடுவோமா? நேர்ல வந்து பீறாய்ஞ்சிடமாட்டோம்?

பரிசல்காரன் said...

@ கயல்விழி முத்துலெட்சுமி

//வார்த்தைகள் பழமொழிகள் .. கவிதைகள் கதைகள் என்று குறிப்பெடுத்து குறிப்பெடுத்துபரண் நிறைந்து விட்டதோ//

வார்த்தைகள் பழமொழிகள்-தாங்க குறிப்புல இருக்கு... கதை, கவிதை சொந்தமா யொசிச்சதுதாங்கக்கா...

சந்தேகமா?

பரிசல்காரன் said...

@ கயல்விழி

//உங்க அவியல்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் இன்ஃபார்மேட்டிவாகவும் இருக்கு//

இன்ஃபார்மேட்டிவா? அதுசரி!

உங்க அளவுக்கு இன்ஃபர்மேஷனெல்லாம் நம்மனால தர முடியுமா?

வெண்பூ said...

//வாக்குப் போட்டவனை சாவடிப்பதால்தான், அது வாக்குச்சாவடி!
-அப்துல்காதர் (அகடவிகடம்)
//

இது சூப்பர்.

//பிடித்திருந்தால்//

இல்லைன்னு சொன்னா நிறுத்தவா போறீங்க? நடத்துங்க,,, நடத்துங்க...

☼ வெயிலான் said...

இது பிடிச்சிருக்கு!!!!!!!! க்ருஷ்ணா

Bee'morgan said...

வாவ்.. ஒவ்வொரு வரியும் நச்னு இருக்கு.. :) ரொம்ப நல்லா தேடிப்பிடிச்சுருக்கீங்க.. பரிசல் காரனின் பயணங்கள் தொடரட்டும்..

பரிசல்காரன் said...

@ வெண்பூ

//இல்லைன்னு சொன்னா நிறுத்தவா போறீங்க//

ஹி..ஹி.. ஒரு மரியாதைதான்..

@ வெயிலான்

நன்றி. என்ன நேத்து ஆளையே காணோம்? நேத்தைய பதிவப் பத்தி ஃபோன்லயே சொல்லிட்டதால பயந்துபோய் வராம விட்டுட்டீங்களா?

@ bee'morgan

//பரிசல்காரனின் பயணங்கள் தொடரட்டும்//

வழித்துணையாய் நீங்களெல்லாம் வருவீர்களானால்.. தொடரும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காணாமல் போன கவிஞர்களைத் தேடி உங்களுக்கு பிடித்த கவிதைகளை பதிவு போட்டுவருகிறீர்களே அதைத்தான் ..குறிப்பிட்டேன்.. உங்கள் கவிதைகதைகளை சந்தேகப்படவில்லை.. பிடித்தவற்றை சேர்த்துவைத்து இருப்பதே பெரிய பொதியா இருக்கும்போலயே என்று கேட்க நினைத்தேன்..

(காத்திருந்தகாதலி 7 ம் பாகம் எழுதி இருக்கிறேன்.)

ராமலக்ஷ்மி said...

வார்த்தை விளையாட்டு தொடரட்டும்.
வைரமுத்து,அப்துல்காதர்,டிவிஎஸ் விளம்பரங்களில் வார்த்தைகள் துள்ளி விளையாடுகின்றன:)!

பரிசல்காரன் said...

@ கயல்விழி முத்துலெட்சுமி

//பிடித்தவற்றை சேர்த்துவைத்து இருப்பதே பெரிய பொதியா இருக்கும்போலயே என்று கேட்க நினைத்தேன்./

புரிஞ்சுதுக்கா.. ச்ச்சும்மா கேட்டு வெச்சேன்..

//காத்திருந்தகாதலி 7 ம் பாகம் எழுதி இருக்கிறேன்//

வடகரை வேலன் சந்தோஷமா கூப்ட்டு சொன்னார்.. பல பேரோட சொதப்பல்களை நீங்க இலகுவா சரி பண்ணீட்டீங்கன்னு. இன்னும் படிக்கலக்கா.. படிக்கறேன்..

பரிசல்காரன் said...

@ ராமலட்சுமி

நன்றிங்க்கா..

//வார்த்தை விளையாட்டு தொடரட்டும்.//

கண்டிப்பா.. ஏதோ.. நாமெல்லாம் தமிழுக்கு செய்யற ச்சின்ன விளம்பரம் இது!

அகரம் அமுதா said...

ஒவ்வொன்றும் அழகிய பொன்மொழிகள் பொன்றவை. சேகரித்தளித்தமைக்கு வாழ்த்துக்கள். அழகிய அரியவற்றை அறியத்தருகிறீர்கள். வாழ்த்துக்கள்

சின்னப் பையன் said...

நல்ல தொகுப்பு.... சூப்பர்...

கயல்விழி said...

//இன்ஃபார்மேட்டிவா? அதுசரி!

உங்க அளவுக்கு இன்ஃபர்மேஷனெல்லாம் நம்மனால தர முடியுமா?//

இதில் ஏதும் sarcasm இல்லையே பரிசல்?

VIKNESHWARAN ADAKKALAM said...

மேலும் வார்த்தை விளையாட்டுகளை போடுங்க... நல்ல பதிவு... வாழ்த்துக்கள்....

பாபு said...

நல்ல collection ,particular-aa TVS விளம்பரம்,பிரகாஷ்ராஜ் ,தமிழ் M.A போன்றவை

Sen22 said...

Nalla Irukkuthunga... Yella varigalum...

சென்ஷி said...

//கயல்விழி said...
உங்க அவியல்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் இன்ஃபார்மேட்டிவாகவும் இருக்கு :)
//

ரெண்டு தபா மறுக்காச் சொல்லேய் :)))

பரிசல்காரன் said...

@ அகரம் அமுதா

நன்றி அகரம்.அமுதா...
உங்கள் பார்வை இருக்கும்வரை.. என் பணி தொடரும்..

@ ச்சின்னப்பையன்

சரிங்க..

@ கயல்விழி
ஹி...ஹி...

@vikneswaran

போட்டுடலாம்..

@ babu & sen22
நன்றீ!

@ சென்ஷி

என்ன சென்ஷி.. அதுதான் ஏதோ அறியாப்புள்ள...
நீங்களுமா என்னை நம்பீட்டிருக்கீங்க..?

முகவை மைந்தன் said...

நல்லா இருக்கு நடத்துங்க! ஆதரவைச்
சொல்லவே வந்தேன் உணர்ந்து.

இது குறள் வெண்பா. உங்கெளுக்கென உடனே செய்தது. முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

நானானி said...

நல்லாவே...ருக்கு வார்த்தை விளையாட்டு.

கோவி.கண்ணன் said...

வார்த்தை விளையாட்டு ரசித்தேன். எப்படித்தான் நினைவு வைத்து எழுதுகிறீர்களோ. பாரட்டத்தக்கது.

நானும் ஒன்னு சொல்லிட்டுப் போறேன்

ஒருவர் : "ஒரு முட்டாளைப் பார்த்து முட்டாளேன்னு கூப்பிட்டால் அவனுக்கு கோவம் வருமா ? வராதா ?"

மற்றொருவர் : "தெரியல...உன்னை நான் இதுவரை அது போல் கூப்பிட்டது இல்லை"

:)))

Boston Bala said...

அருமை. தொடரவும்

பரிசல்காரன் said...

ஸ்பெஷல் வெண்பாவுக்கு மிக்க நன்றி முகவை மைந்தன்!

நன்றீ நனானி..

@ கோவி கண்ணன்

//எப்படித்தான் நினைவு வைத்து எழுதுகிறீர்களோ. பாரட்டத்தக்கது.//

ஐயே... நன்ன் யாராவ்து மணிகேட்டாலே மணிபாத்து சொல்றதுக்குள்ள அவரு என்ன கேட்டாரு-ன்னு யோசிக்கற ஆளு! நினைவு வெச்சு எழுதறதா?

இதெல்லாம் குறிப்பெடுத்து வெச்சதுங்க!

@ Boston Bala

கண்டிப்பா தலைவா!