Monday, July 7, 2008

ஒரு டைரிக்குறிப்பும், ஒரு காதல் மறுப்பும்


‘அந்த ஸ்கூட்டர் உன்னை நோக்கித்தான் வருகிறது’ என்று என் மூளை கண்டுகொண்டு, மூளை கைக்கும், காலுக்கும் ‘பிரேக்கைப் பிடி’ என்று செய்தி அனுப்பி, அது செயல்படுத்துமுன் அந்த விபத்து நடந்துவிட்டது.


எண்பது கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த என் பைக், எதிரே வந்த ஸ்கூட்டரில் மோதி, அந்த ஸ்கூட்டரில் இருந்தவர் தடுமாறி, பின் சீட்டில் குழந்தையுடன் அமர்ந்த அவர் மனைவி தூக்கியெறியப்பட்டு, அவர் ஒரு புறமும், மனைவி ஒருபுறமும் விழுந்தனர். என் கண் முன்னே அவரது மனைவியுடன் அமர்ந்திருந்த மூன்று அல்லது நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தை பத்தடி உயரத்தில் பறந்து அருகிலிருந்த கல் குவியலில் விழுந்தது.


“அவ ரொம்ப உறுதியா இருக்காங்க. நீங்க சொன்னாலும் கேப்பா-ன்னு எனக்குத் தெரியல”

“ஏய்.. என்னடி சொல்ற நீ? அடிக்கற அடில கேப்பாளா இல்லயான்னு தெரிஞ்சுடும். நம்ம காதல் கல்யாணத்துனால சொத்தெல்லாம் விட்டுட்டு வந்து, இந்த இருபது வருஷமா கஷ்டப்பட்டு கார், பங்களான்னு வாங்கி ஊர்ல பெரிய மனுஷன்னு பேர் எடுத்திருக்கேன். நம்ம பொண்ணுக்கு எம்.எல்.ஏ பையனை முடிச்சு வைக்கணும்-ன்னு படாதபாடு பட்டு பேச்சுவார்த்தை நடத்தி எல்லாம் கைகூடி வர்ற நேரத்துல-அவ எவனோ ஊர் பேர் தெரியாதவன லவ் பண்ணுவாளாம், நான் அட்சதை போடணுமாம். வரட்டும். பேசிக்கறேன்”


முழுக்க முழுக்க என் தவறினால்தான் அந்த விபத்து நேர்ந்தது. ஆனால் எனக்கு ஒன்றும் பெரிய அடியில்லை. எதிரே வண்டி ஓட்டியவருக்கும், அவரது மனைவிக்கும் கை, கால்களில் சிராய்ப்பு. ஆனால் தூக்கியெறியப்பட்ட குழந்தைக்கு கண்ணருகே பலத்த அடிபட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. என்னால்தான் அந்தக் குழந்தைக்கு இந்த நிலைமை என்றறிந்ததும் சேர்ந்த கூட்டம் என்னை அடிக்குமளவு வந்துவிட்டது. என் மனைவி அவசரமாய் பிரசவ வலியினால் பக்கத்து வீட்டுக்காரர்களால் மருத்துவமனை சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததால், அந்தப் பதட்டத்தில் பைக் ஓட்டியதால்தான் இது நேர்ந்ததாகச் சொன்னேன். அந்தக் குழந்தையின் தந்தை கூட்டத்தினரை சமாதானப் படுத்தி, ஒரு காரை அழைத்து குழந்தையை அவசரமாய் மருத்துவமனை அழைத்துச் செல்ல ஏறினார். அருகில் என் மனைவி சேர்க்கப்பட்டிருந்த பிரபல மருத்துவமனைக்கே காரை விடச் சொன்னேன் நான். அந்தக் குழந்தையின் வலது கண்ணருகே ரத்தம் வழிந்துகொண்டிருப்பதை பார்க்க, தாங்கவில்லை என்னால்.


“என்னப்பா.. இதென்ன பிஸினஸா? காதல் கல்யாணத்துனால உங்க வாழ்க்கைல எதை இழந்துட்டீங்க? இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு தேவையான பணத்தை சேர்த்தியாச்சு.. சொந்தக்காரங்களைப் பத்தி ஏன் கவலைப் படறீங்க? அவங்க என்ன செஞ்சாங்க உங்களுக்கு?”

“ஏய்.. என்ன எதிர்த்து எதிர்த்துப் பேசற?”


“ஐயோ.. என்னங்க இது.. வளர்ந்த புள்ளையை அடிக்கறீங்க?”.


“நீ சும்மா இருடி...”


“அப்பா.. என்னை அடிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி நான் தேர்ந்த்தெடுத்த ஆள் சரியானவரா, இல்லியா-ன்னு பாருங்க. அவரை கூட்டீட்டு வந்திருக்கேன். வெளிலதான் வெயிட் பண்றாரு. பேசுங்க”


மருத்துவமனையில் டாக்டர் சொன்னதைக் கேட்டதும் இடி இறங்கியது போல, மயங்கிச் சரிந்தார் அவரது மனைவி. வலது கண்ணருகே பலத்த அடி பட்டுவிட்டதால், கண்ணின் நரம்பு நேரடியாக பாதிக்கப் பட்டுவிட்டதாகவும் பார்வை திரும்பக் கிடைப்பது மிகவும் கஷ்டம்தானென்றும் கூறினார் டாக்டர். பிரசவ வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த என் மனைவியை சென்று பார்க்கக் கூட மனமில்லாமல் அமர்ந்திருந்தேன் நான். அந்தப் பையனின் அப்பாவோ.. சிறிது நேரம் அழுதவராய்.. என் அருகே வந்து “என் மேலயும் தப்பு இருக்குங்க.. என் விதி அப்படி. நீங்க உங்க மனைவியை பாருங்க. நாம அப்புறமா சந்திக்கலாம்” என்றார். அவரது நண்பர்களும், சொந்தங்களும் என்னை சபித்தபடி இருக்க நான் குனிந்த தலையுடன் என் மனைவியைப் பார்க்கச் சென்றேன்..


“வணக்கம் அங்கிள்”

“ம்..ம்..”

“என் பேர் விக்னேஸ்வர். சின்னதா ஒரு கார்மெண்ட் ஃபேக்டரி வெச்சிருக்கேன். எந்தவிதமான் கெட்ட பழக்கமும் இதுவரைக்கும் இல்ல. அம்மா அஞ்சு வருஷம் முன்னாடி தவறீட்டாங்க. அப்பா மட்டும்தான். என் காதல் அவருக்கு தெரியும். ரொம்ப நல்ல மனுஷன். அம்மா பேர்ல ஒரு டிரஸ்ட் வெச்சு நடத்தீட்டு வர்றார். எனக்கு மாசம் ஐம்பதாயிரத்துக்கு குறையாம வருமானம் வரும். சொந்த வீடு, கார் –ன்னு செட்டில் ஆகிட்டேன். ஆனா எனக்கொரு குறை இருக்கு..”

“விக்னேஷ்..”

“நீ பேசாம இரு ரம்யா. சார்.. உங்க பொண்ணுக்கு இதுபத்தி தெரியும்.. உங்ககிட்ட இப்போதைக்கு சொல்ல வேண்டாம்ன்னா.. ஆனா எனக்கு மறைக்க விருப்பமில்ல”

என் மனைவிக்கு பெண்குழந்தை பிறக்க, அதற்குப்பிறகு அன்றிரவு அவரை சந்தித்தேன். அவரது பையனுக்கு கண்பார்வை வர வாய்ப்பிலை என்றும், அப்போதைக்கு ஆர்ட்டிஃபீஷியலாக கண் பொருத்த முடிவு செய்துவிட்டதாகவும் கூறினார். மருத்துவசெலவுக்கு பணம் தருவதாக நான் சொன்ன போதும், கேஸ் போடச் சொல்லி அவர் தரப்பிலிருந்து பலபேர் சொன்ன போதும் எல்லாவற்றையும் மறுத்தார். என் வாழ்க்கையில் நான் செய்த இந்தப் பாவத்திற்கு என்ன பரிகாரம் செய்யப் போகிறேன்?

“எனக்கு வலது கண் இல்ல. சார். நீங்க பார்க்கறது ஆர்ட்டிஃபீஷியல் கண்” என்றான் விக்னேஸ்வர்.

"நீ.. நீ.. அந்த விக்னேஸ்வரா? சோபாவை விட்டு எழுந்தார் ரம்யாவின் அப்பா.

27 comments:

நந்து f/o நிலா said...

//‘அந்த பைக் உன்னை நோக்கித்தான் வருகிறது’ என்று என் மூளைக்கு//

அந்த ஸ்கூட்டர் உன்னை நோக்கித்தான்னுதானே வர வேண்டும்?

கதை நல்லா இருக்கு க்ருஷ்ணா.

பரிசல்காரன் said...

ரெண்டு இடத்துல ஸ்கூட்டர்-ன்னு மாத்தீட்டேன். இன்னும் ஸ்பேஸ் பிராப்ளமெல்லாம் கரெக்ட் பண்ணீட்டு தமிழ்மணத்துல போடலான்-நிருக்கேன். அதுக்குள்ளே ஒரு குட்டு! நன்றி நந்து! மாத்தீடறேன்!

rapp said...

நல்ல கதை, வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

நன்றி raap!

கடைசி பாராக்களை எவ்வளவு முயற்சித்தும் ஸ்பேஸ் சரி செய்ய முடியவில்லை!

VIKNESHWARAN ADAKKALAM said...

//எந்தவிதமான் கெட்ட பழக்கமும் இதுவரைக்கும் இல்ல. //

அவ்வ்வ்வ்... நான் அவன் இல்லை....

VIKNESHWARAN ADAKKALAM said...

கதையை அருமையாக கொண்டு சென்று முடித்து இருக்கின்றீர்கள்... சூப்பர்... வாழ்த்துக்கள்...

VIKNESHWARAN ADAKKALAM said...

நீங்கள் சொல்வது போல் பதிவில் எந்தப் பிரச்சனையும் தெரியவில்லை... சரியாக தான் இருக்கிறது....

Anonymous said...

வாழ்த்துக்கள், நல்ல கதை.

கடைசி 2 பாரக்களை செலக்ட் செய்து, eraser tool மூலம் remove format செய்தபின், போதிய இடைவெளி விட்டு மீண்டும் கலர் மாற்றினால் சரியாகும்.

ambi said...

சூப்பர் பரிசல். எப்படி லிங்க் பண்ண போறிங்க?னு ரொம்ப ஆவலா வேக வேகமா படிச்சேன். ஆனா முழுக்க படிச்சேன்பா. :))

கதை நல்லா இருக்கு.

ஒரு வேளைக்கு ஒரு போஸ்ட் போடற உங்க வேகத்துக்கு என்னால படிச்சு பின்னூட்டம் குடுக்க முடியல. டூ விடாதீங்க மறுபடியும். :p

கிரி said...

கதைனாலே எனக்கு இப்ப பீதி ஆகுது

anujanya said...

கே.கே.

நல்லா இருக்கு. பின்னூட்டம் போடும் நபர்களில் உங்கள் பாசும் இருக்கிறாரா? ஒரு நாளில் இத்தனை பதிவு போட்டு கலக்குறீங்க.

அனுஜன்யா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வழக்கம்போல இந்த கதையும் நன்றாக இருந்தது..

பரிசல்காரன் said...

மிக்க நன்றி விக்கி.. உங்களுக்கு நான் சொன்ன ஸ்பேஸ் பிரபலம் புரியவில்லை. வடகரை வேலன் சரியாகக் கண்டுகண்டார்.

@ வடகரை வேலன்

என்ன சொல்வதென்று தெரியவில்லை! (நன்றி என்றால் உதைக்க வருவீர்கள்!! ஒரு பின்னூட்டத்தைப் போட்டு விட்டீர்கள், உங்களை அழைத்து சரியாக வரும் வரை தொல்லை செய்துவிட்டேன்!)

@ ambi

நன்றி. உங்க வருகையை காணோமே-ன்னுதான் கேட்டேன்.

@ கிரி..

//கதைனாலே எனக்கு இப்ப பீதி ஆகுது//

ஆமாமா.. இப்போதான் வெயிலானும் நானும் பேசிட்டிருந்தோம்.. படிச்சவங்களும் பீதி ஆயிட்டதா கேள்வி..

@அனுஜன்யா
//ஒரு நாளில் இத்தனை பதிவு போட்டு கலக்குறீங்க.//

ஒரு நாளைக்கு ஒண்ணுதாங்க போடறேன்.. அதுக்கே இப்படியா?

@ கயல்விழி முத்துலட்சுமி

தேங்க்சுங்க கயலக்கா.. எல்லாம் நீங்க தர்ற உத்வேகம்தான்!

பரிசல்காரன் said...

அட! இப்போதான் பார்த்தேன்... என் சைட் "எட்டாயிரம்" ஹிட்ஸ் தொட்டுடுச்சு! யாராச்சும் பார்ட்டி வைங்கப்பா..

☼ வெயிலான் said...

// கதைனாலே எனக்கு இப்ப பீதி ஆகுது //

:)))

/// ஆமாமா.. இப்போதான் வெயிலானும் நானும் பேசிட்டிருந்தோம்.. படிச்சவங்களும் பீதி ஆயிட்டதா கேள்வி... ///

:))))))

Vijay said...

லிங்க் சூப்பர். கிளைமாக்ஸ் வரைக்கும் கதையில தொய்வே இல்ல.."கீப் இட் அப்"பு :))

வெண்பூ said...

நல்ல கதை மற்றும் நல்ல முடிவு. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் "பேரலல்"லாக சொன்ன முறை நன்றாக இருந்தது.

சின்னப் பையன் said...

Soooper.....

பரிசல்காரன் said...

நன்றி vijay, வெயிலான் & ச்சின்னப்பையன்

@ வெண்பூ
//கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் "பேரலல்"லாக சொன்ன முறை நன்றாக இருந்தது.//

நல்ல வேளை.. புரிஞ்சுட்டீங்க! என் ஃப்ரண்ட் ஒருத்தருக்கு அரை மணி நேரமா ரெண்டுக்கும் உள்ள லிங்க்-ஐ புரிய வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு!

பரிசல்காரன் said...

latha ananth
to me

show details 4:25 PM (6 hours ago)


ரெண்டு கண்ணாலயும் படிச்சேன். ஒரு வாயால பாராட்றேன். "சபாஷ்!"

லதானந்த்

சென்ஷி said...

//ambi said...
சூப்பர் பரிசல். எப்படி லிங்க் பண்ண போறிங்க?னு ரொம்ப ஆவலா வேக வேகமா படிச்சேன். ஆனா முழுக்க படிச்சேன்பா. :))

கதை நல்லா இருக்கு.

ஒரு வேளைக்கு ஒரு போஸ்ட் போடற உங்க வேகத்துக்கு என்னால படிச்சு பின்னூட்டம் குடுக்க முடியல. டூ விடாதீங்க மறுபடியும். :p
//

இதுக்கு ரிப்பீட்டே போட்டா அம்பி என்கூட டூ விட்டுடுவாரோன்னு கூட கவலையா இருக்கு :))

கதை ரொம்ப நல்லா இருக்குதுங்க.

பரிசல்காரன் said...

@ சென்ஷி

என்ன சென்ஷி.. அப்பப்ப காணாம போய்டறிங்க?

கயல்விழி said...

நானும் ரெண்டு கதைக்கும் என்ன லிங்க் இருக்க முடியும் என்று புரியாமல் ஆவலோடு படித்தேன். மீண்டும் நல்ல கதை பரிசில் அவர்களே.

Anonymous said...

நல்ல கதை...வாழ்த்துக்கள். இன்றைக்கு நான் படிக்கும் முதல் கதையே உங்களுடையதுதான்!

ரசிகன் said...

கதை அருமை:) தொடருங்க நிறைய:)

பரிசல்காரன் said...

நன்றீகள் இனியவள் புனிதா, கயல் & ரசிகன் (ரசிகன்யாநீ!)

ரோகிணிசிவா said...

telling, but towards end was able to guess !!!!
good try