Thursday, July 3, 2008

அவள் ஒரு தொடர்கதை

நிம்மதியாய் ஒரு
கவிதை புனைகையில்
தேவையற்று மனதுள்
தெரிகிறது
பிரிந்த காதலியின் முகம்.


மெல்லிய மல்லிகை வாசனையில்
பரிசளித்த மோதிரத்தில்
சேர்ந்து நடந்த பாதைவழி
செல்ல நேர்கையில் என
பலப்பொழுதும்
மனதை ஒடித்து
வெறுமையாக்கும்
அவள் நினைவுகள்.


இனிமேலுமிந்த
காதல் வலையில்
வீழ்தலே கூடாதென்றுதான்
நினைத்திருந்தேன்...
.
.
.
.
.
.
காலையில் எதிர்வீட்டில்
புதிதாக வந்த குடும்பத்தில்
‘பளிச்'சென்ற சிரிப்போடு ஒரு
பச்சைத் தாவணியைப்
பார்க்கும் நொடிவரை!

17 comments:

Anonymous said...

//காலையில் எதிர்வீட்டில்
புதிதாக வந்த குடும்பத்தில்
‘பளிச்'சென்ற சிரிப்போடு ஒரு
பச்சைத் தாவணியைப்
பார்க்கும் நொடிவரை!//

ஒன்னுஞ் சரியில்ல. இப்படித் தாவணிப் பைத்தியம் பிடிச்சிருக்கே. உமாட்டச் சொல்லி மாட்டிவிட வேண்டீதுதான்.

தங்கமணி கைல அடி வாங்கி நெம்ப நாளாச்சோ?

ஸ்டர்ட் ம்யூஜிக்.

தமிழன்-கறுப்பி... said...

///நிம்மதியாய் ஒரு
கவிதை புனைகையில்
தேவையற்று மனதுள்
தெரிகிறது
பிரிந்த காதலியின் முகம்.///

ம்ம்ம்...

கோவி.கண்ணன் said...

//தங்கமணி கைல அடி வாங்கி நெம்ப நாளாச்சோ? //

அவருக்கு கல்யாணமே ஆகலை !
:)))))

தமிழன்-கறுப்பி... said...

///காலையில் எதிர்வீட்டில்
புதிதாக வந்த குடும்பத்தில்
‘பளிச்'சென்ற சிரிப்போடு ஒரு
பச்சைத் தாவணியைப்
பார்க்கும் நொடிவரை!///

அடக்கடவுளே...:))

கோவி.கண்ணன் said...

///நிம்மதியாய் ஒரு
கவிதை புனைகையில்
தேவையற்று மனதுள்
தெரிகிறது
பிரிந்த காதலியின் முகம்.///

மருந்து குடிக்கும் போது குரங்கை நினைக்கக் கூடாதுன்னு சொன்னால் மனது கேட்குமா ?
:)

தமிழன்-கறுப்பி... said...

///மெல்லிய மல்லிகை வாசனையில்
பரிசளித்த மோதிரத்தில்
சேர்ந்து நடந்த பாதைவழி
செல்ல நேர்கையில் என
பலப்பொழுதும்
மனதை ஒடித்து
வெறுமையாக்கும்
அவள் நினைவுகள்.///

ம்ம்ம்...


(இது முன்னாடி வரவேண்டிய கமன்ட்)

தமிழன்-கறுப்பி... said...

///நிம்மதியாய் ஒரு
கவிதை புனைகையில்
தேவையற்று மனதுள்
தெரிகிறது
பிரிந்த காதலியின் முகம்.///

கவிதைகளை கற்றுக்கொடுத்ததே அவள்தானே எப்படி மறக்கும்...

லதானந்த் said...

ஏம்ப்பா பரிசு!

உன்ர வயசு 45க்கு மேலன்ரது தெரிஞ்சு போச்சு!

தாவணின்னா பொண்ணுங்க சல்வாரைக் காணோம் கம்மீசக் காணோம்னு ஓடுற காலத்தில் இப்படி எ்ழுதுறியே?

என்னோட சிஷ்யப் பிள்ளை இப்படி இருக்கலாமா?

பரிசல்காரன் said...

வேலண்ணே..

எவ்வளவு நாளா இந்தப் ப்ளான்?

நன்றி தமிழன், கவிதையை புழிஞ்சி காயப் போட்டுட்டிங்க!!

கண்ணன் சார்..

சத்தியமா இந்த தங்கமணி மேட்டர் என்னான்னு தெரியல!

லதானந்த் அங்கிள்..

நாந்தான் என் ப்ரொஃபைல்லயே சொல்லிருக்கேனே, என் வயசு 34 -ன்னு! இதுல பொய் சொல்லி என்ன கிடைக்கப் போடது.. அதுவுமில்லாம உங்களை மாதிரி, சீனியர்ஸ், இல்ல ஜூனியர்ஸை விட என்னை மாதிரி மிடில் ஏஜுக்குதான் இப்போ மார்க்கெட்!

anujanya said...

நல்லா இருக்கு

அனுஜன்யா

பரிசல்காரன் said...

சரிங்க அனுஜன்யா!

(கவிதை போட்டா மட்டும்தான் வருவீங்கபோல!)

வெண்பூ said...

கவிதை ரொம்ப நல்லா எழுதுறீங்க பரிசல். இதுவும் இதற்கு முன்னதும் அருமை.

rapp said...

என் அளவுக்கு இல்லைனாலும், ஏதோ பரவால்லைங்கற ரகத்தில் இருக்கு கவித:):):) (கவிதையோட கருத்து சூப்பர்)

பரிசல்காரன் said...

நன்றி வெண்பூ!

@ rapp

ஐயோ.. உங்க அளவுக்கு எழுதமுடியுமா என்ன? அதுவும், கும்ப்ளே-வை ஆம்பிளை என்று கண்டுபிடித்த உங்க கவிதையை நெனச்சாலே புல்-பூண்டெல்லாம் அரிக்குது எனக்கு! (ச்ச்சும்ம்மா!)

rapp said...

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். இந்த பயங்கலந்த மரியாதை வேறெந்த கவிஞருக்கு இல்ல விஞ்ஞானிக்கு(ஐயோ அடுத்த படைப்ப கொடுத்திடுவாங்களோன்னு) கெடைக்கும் சொல்லுங்க?

சின்னப் பையன் said...

//காலையில் எதிர்வீட்டில்
புதிதாக வந்த குடும்பத்தில்
‘பளிச்'சென்ற சிரிப்போடு ஒரு
பச்சைத் தாவணியைப்
பார்க்கும் நொடிவரை!//

சூப்பர்.. இப்படித்தான் இருக்கணும். அப்போதான் ஒரு ஸ்வாரசியம் இருக்கும். (ம்ம். எங்க வீட்டு எதிர்லே ஒரு பெரிய மைதானம்தான் இருக்கு. வீடே இல்லை... அவ்வ்வ்..)

பரிசல்காரன் said...

ச்சினப்பையன்..

நீங்க `குடுத்து' வெச்சது அவ்வளவுதான்!