Monday, June 23, 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)


தன் எதிரில் பட்டவர்களுக்கெல்லாம் சலிக்காமல் கை கூப்பி ”வணக்கம்.. வணக்கம்” என்றவாறே அந்த ப்ரிவ்யூ தியேட்டருக்குள் நுழைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

உள்ளே உலக நாயகன் கமலஹாசனும், கே.எஸ்.ரவிகுமாரும் அவரை எழுந்து நின்று வரவேற்க..

“நோ..நோ.. உக்காருங்க. லேட்டாயிடுச்சா?”

” இல்ல ரஜினி. என்னிக்கு நீங்க லேட்டா வந்திருக்கீங்க? படத்தை போட்டுடலாமா”


“ஓயெஸ்.. ஓயெஸ்..”


அனைவரும் தயாராக சூப்பர்ஸ்டாருக்காக தசாவதாரம் ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்டப்பட்டது.


டம் முடிந்ததும் எழுந்து கமலை கட்டிக் கொண்டார் ரஜினி.


“கிரேட்.. கிரேட்..! எப்டி எப்டி இவ்ளோ திங்கிங்க், இவ்ளோ ஸ்ட்ரெய்ன்..”


“ஆக்சுவலி, நான் ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணி நடிச்சது கோவிந்த் கேரக்டர்தான். ஏன்னா மத்த எந்த கேரக்டரோட சாயலும் இல்லாம நான் என்னை மாதிரியே நடிக்கணுமே.. அதான் எனக்கு கஷ்டமா இருந்தது..”


“ஹஹ்ஹஹ்ஹஹா.. யு ஆர் ரைட்! அந்த மாதிரி தசாவதாரம் ங்கற பேருக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு கேரக்டரையும்..”



“நான் சொல்றேன் சார்” இடைமறித்தார் கே.எஸ்.ரவிகுமார்.


“அதாவது தசாவதாரம்ன்னு பேர், பத்து வேஷம்.. எல்லாம் சரி. அந்த வேஷங்களுக்கும் விஷ்ணுவோட பத்து அவதாரங்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கணும்ன்னு நெனைச்சோம்”


“இண்ட்ரஸ்டிங்க்!”


“உதாரணமா நம்பி கடல்ல மூழ்கும்போது மீனைக் காட்டி அந்த ஷாட்டை முடிச்சிருப்போம்”


“மச்சாவதாரம்?”


“யெஸ். அப்புறம் கோவிந்த். ஒரே பொண்ணு பின்னாடி சுத்துவாரு. ராமர்! பேரே கோவிந்த் ராமசாமிதான்! ஜப்பானிய கேரக்டர் வில்லனை கையாலயே வதம் பண்ணுவார். நரசிம்ஹ அவரதாரம். அதுமில்லாம அவர் பேரே ஸிம்ஹ நரஹசி-ன்னு வெச்சிருந்தோம். Infact ஜப்பான்ல அப்படி ஒரு பேர் இருக்கு ”


”யா யா ஐ நோ”.


“அப்புறம் தாடி வெச்சிருக்கற அவதார் சிங் – பரசுராமன். பரசுராம அவதாரம் தாடியோட இருக்கும். மூணு அடி உயர பாட்டி - வாமனன். பலராம் நாயுடு - பலராமன். எட்டடி உயர கலிபுல்லா – கல்கி. கல்கிதான் பெரிய அவதாரம். அதுனால எட்டடின்னு உருவகம் பண்ணிகிட்டோம். பூவராகன் கருப்பா இருப்பார்.. கிருஷ்ணாவதாரம்”


“ஆல்சோ.. அசினை சந்தானபாரதி துகிலுரிக்கும்போது அவர் வருவாரு.”


“ஆமா சார்”


“வாவ்.. வாட் எ வொர்க்.. வாட் எ டெடிகேஷன்!”


“கமல் சார் பத்து வேஷத்துல படத்துல நடிச்சிருக்காரு. அதில்லாம அசோஷியேட் டைரக்டர், ஸ்கிரிப்ட் ரைட்டர், டயலாக் ரைட்டர்-ன்னு பல அவதாரங்கள் ஸ்கீரீனுக்கு வெளில பண்ணிருக்கார்”

”யு ஆர் ரைட் ரவிகுமார்!.. இப்படிப்பட்ட ஒரு ஆளுக்கு ஒண்ணுமே குடுக்காம இங்கிருந்து போறதா” என்ற ரஜினி தன் உதவியாளரை அழைத்து...


“ஸ்வீட் என்னாச்சு?”


“சார் ஜிலேபிதான் இருந்தது”


“ஒகே.. ஒகே” என்றபடி ஒரு ஜிலேபியை எடுத்து கமலுக்கு கொடுக்கப் போக..


“முதல்ல குசேலனுக்குதான்” என்று கமல் கூறி ஜிலேபியை கையில் வாங்குகிறார்.


"குசேலனா..? அவரு இன்னும் சிவாஜிதான் சார். ரிலீசானாத்தான் குசேலனா மாறுவாரு” என்கிறார் ரவிகுமார்.


"அப்படியா? அப்ப இந்தாங்க சிவாஜி வாயிலே ஜிலேபி யைப் போடுங்க” என்றபடி ரஜினிக்கு கமல் ஊட்டப் போக அந்த இடமே கலகலப்பானது.


-------------------------------------

பின் குறிப்பு 1: சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தலைப்பிலான ரிலே ரேஸில் என்னையும் சேர்த்துக் கொண்ட (நீயா கெஞ்சி கூத்தாடி வாங்கிட்டு டயலாக்கப் பாரு!!) கயல்விழி முத்துலட்சுமி மேடத்துக்கு என் நன்றிகள்.



பின்குறிப்பு 2: ஜெயா மற்றும் விஜய் டி.வியில் தசாவதாரம் பட விமர்சனம் செய்யப்பட்டபோது கே.எஸ்.ரவிக்குமார் கூறிய சில விஷயங்களை பதிவாக எழுத நினைத்திருந்தேன். அந்த நேரத்தில் இந்த ரிலேரேஸ் வாய்ப்பு வர, இரண்டையும் கலந்து கொஞ்சம் கற்பனையுடன் இப்பதிவை எழுதினேன்.


பின்குறிப்பு 3: எனக்குப் பிறகு இதை நான் யாரிடமாவ்து தள்ள வேண்டும். அவரை விட்டால் வேறு யார் எனக்கு.. ஆகவே திருவாளர் லக்கிலுக் அவர்களே.. சுமையை உங்களிடம் இறக்கி வைக்கிறேன்!

27 comments:

லதானந்த் said...

அன்புப் பரிசு!

ஒன்னோட இந்தப் பதிவுக்கு நாந்தான் மொதோ பின்னூட்டம் போட்ருக்கேன்.

நெம்ப நல்லா எழுதறே! தொடர்ந்து எழுது!
ஆசசீர்வாதம்

பரிசல்காரன் said...

ஐ!! இதுக்குத்தானே காத்திருந்தேன்!

நன்றி அங்கிள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பூவராகவன் கிருஷ்ணன் .. திரௌபதி காப்பாத்த வந்தாரா..சே. உள்ள இன்னும் என்னன்னா வச்சிருக்காங்க படத்துல இத்தனை நுணுக்கங்களா.. இதைப்போய் வாய்க்குவாய் கண்டபடி பேசறாங்களே... நல்லா இருக்கு பதிவு.. என்ன ஒருத்தரை தான் கூப்பிட்டிருக்கீங்க.. அதுவும் பாச ப்ளாக்மெயிலா கூப்பிட்டிருக்கீங்க லக்கி லுக்கை..

வெண்பூ said...

"சிவாஜி வாயிலே ஜிலேபி"ன்னு வரதுக்காக இவ்ளோ பெரிய மொக்கப்பதிவா? ம்ம்ம்ம்ம் மொக்கயா இருந்தாலும் நாங்க ரசிச்சமுல்ல....

SP.VR. SUBBIAH said...

திருப்பூர்க்காரர்களுக்கு பணத்தேடலில் மட்டும்தானே ஆர்வமும், முனைப்பும், நேரமும் இருக்கும்?

அங்கிருந்து கொண்டு பதிகிறீர்களா?

ஆச்சரியம்தான்!

கோவி.கண்ணன் said...

கே கே,

உரையாடல் மிகவுல் இயல்பாக இருக்கிறது, ப்ர்வீயூ த்யேட்டருக்கு சென்று ஒட்டுக் கேட்டீர்களா ? :)

ambi said...

நல்லா குடுக்கறாங்க பா அல்வா, சாரி ஜிலேபி. :))

அகரம் அமுதா said...

அய்ய்ய்ய்யயோ! தசாவதாரத்துக்குள்ள இத்தனை விஷயமா? படிக்கவே ஆச்சரியமாக் கீது. வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

@ கயல்விழி முத்துலட்சுமி

//என்ன ஒருத்தரை தான் கூப்பிட்டிருக்கீங்க..//

அட.. எத்தனை பேரை வேணா கூப்பிடலாமா? இது எனக்கு தெரியாம போச்சே...

@ வெண்பூ

//இவ்ளோ பெரிய மொக்கப்பதிவ//

இது மொக்கையா.. அட ஆண்டவா.. அப்டீன்னா
நம்ம ரியல் மொக்கைய எடுத்துவுட்டா என்ன பண்ணுவீங்க?

@ sp.vr.subbiah

வாத்தியாரைய்யா..

உங்க வருகையால் பீரின்பம் ச்சே.. பேரின்பம் அடைந்தேன்!

அடிக்கடி வாருங்கள்..

@ கோவி. கண்ணன்

//ப்ர்வீயூ த்யேட்டருக்கு சென்று ஒட்டுக் கேட்டீர்கள//

ம்ம்ம்.. எதுனா கிளப்பி வுட்டுடாதீங்க.. ப்ரிவ்யூ தியேட்டர் வாட்ச்மேனுக்கு வேலை போயிடப் போகுது..

மிக மிக நெஞ்சார்ந்த நன்றிகள் அம்பி, விக்கி, அகரம்.அமுதா.. உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை செலுத்துகிறது..

கோவி.கண்ணன் said...

இது டிப்ஸ்...

உங்களுக்கு விசயமே தெரியவில்லை
அதாவது பின்னூட்ட திரட்டியில் உங்கள் இடுகை கீழே சென்று மறைந்தத உடனே அல்லது அதற்கு சற்று மேலேயே இருக்கும் போது நீங்கள் ஒவ்வொன்றாக மறுமொழி இடவேண்டும், அதுவும் தனித்தனியாக இடவேண்டும் அப்பொழுதுதான் உங்கள் பதிவு தமிழ்மண முகப்பில் (மறுமொழி திரட்டியில்) இருக்கும்.

:)

ராமலக்ஷ்மி said...

விஷ்ணுவின் தசா அவதாரத்தையும் இந்த பத்து கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கிறதா? புதிய செய்தி எனக்கு.

கே எஸ் ரவிக்குமார், யூகி சேது இருவரும் மதனுடன் சேர்ந்து பெரியத் தொட்டியில் படத்தை அலசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிழிந்து காயப் போடும் வரைக் காத்திருக்கப் பொறுமையில்லை. அவர்கள் அரை மணி அலசியதை அழகாய் அரை நிமிடத்தில் வாசிக்கக் கொடுத்திருக்கிறீர்கள்.

சிவாஜி வாயிலும் ஜிலேபியைத் திணித்து விட்டீர்கள் அதுவும் அவரது ஆத்ம நண்பர்(போட்டியாளர்) கமல் கையால்....

அப்படியே நம்ம சிவாஜியையும் பாக்கறது....

Anonymous said...

கலக்கீட்டிங்க கிருஷ்ணா,

இஷ்டம் போல எழுதுவதை விட இதைப் போல் ஒரு கட்டுக்குள் கற்பனை செய்து வெற்றி பெறுவதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்.

எதிபாராத திருப்பதில் ஒரு எதிர்பாராத சவால்.

சிவாஜி வாயிலே ஜிலேபியில் ஏற்கனவே ஜாம்பவான்கள் எழுதியிருக்க, அதைவிட சிறப்பாக அமைக்க வேண்டும் என்றொரு சவால்.

இரண்டிலும் வெற்றி. வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

//உங்களுக்கு விசயமே தெரியவில்லை
அதாவது பின்னூட்ட திரட்டியில் உங்கள் இடுகை கீழே சென்று மறைந்தத உடனே அல்லது அதற்கு சற்று மேலேயே இருக்கும் போது நீங்கள் ஒவ்வொன்றாக மறுமொழி இடவேண்டும், அதுவும் தனித்தனியாக இடவேண்டும் அப்பொழுதுதான் உங்கள் பதிவு தமிழ்மண முகப்பில் (மறுமொழி திரட்டியில்) இருக்கும்.//

கோவி. கண்ணன்ஜி..

இந்த மேட்டர் எனக்கு தெரியும்.. நான் அலுவலகத்துல எப்பெப்போ கம்ப்யூட்டர்ல உக்கார முடியுதோ அப்போ மட்டும்தான் பின்னூட்டம் போட முடியும். ஒருத்தர்க்கு மட்டும் போட்டுட்டு மத்தவங்களை விட்டா நல்லா இருக்காது. அதுனால கிடச்ச கேப்ல எல்லாருக்குமா கெடா வெட்டினேன்!

சரி.. இப்போ உங்களுக்கு மட்டும் பதில்..

ராமலட்சுமி மேடத்துக்கும், என் அண்ணனுக்கும் (வ.வே) அப்புறமா..

பரிசல்காரன் said...

@ ராமலட்சுமி மேடம்..

//பெரியத் தொட்டியில் படத்தை அலசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிழிந்து காயப் போடும் வரைக் காத்திருக்கப் பொறுமையில்லை.//

இந்த வார்த்தைப் பிரயோகத்தை வெகுவாக ரசித்தேன்!

வருகைக்கு நன்றி! அடிக்கடி வாங்க! (இதை அடிக்கடி சொல்லுவேன்!)

கண்ணன் சார்.. அடுத்ததா எங்க அண்ணனுக்கு (வடகரை வேலன்) பின்னூட்ட பதில் போட்டுக்கறேன்! ஓகே தானே?

rapp said...

கிருஷ்ணா இவ்வளவு தாமதமாக பின்னூட்டமிட்டதற்கு மன்னிக்கவும். அழகான குட்டிக் கதை. நெம்ப பிடிச்சிருக்கு. எனக்கு இந்த விஷயம் நிஜமாகவே கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கு. எப்படி எல்லாரும் இந்த வரிக்கு ஒரு கதை உருவாக்கறீங்கன்னு.

rapp said...

உங்க எல்லாருக்கும் ஐடியா குடுப்பது இயக்குனர் பேரரசா இல்லை கானல் நீர் பட இயக்குனரா? சும்மா சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க.

rapp said...

//ஆசசீர்வாதம்//லதானந்த் சார் கொஞ்சம் பிழையில்லாமல் வாழ்த்தினா மேலும் நல்லா இருக்கும்.
ஜாலியாத்தான் சொன்னேன், யாரும் கடுப்பாகிடாதீங்க.

ராமலக்ஷ்மி said...

////பரிசல்காரன் said...
@ ராமலட்சுமி மேடம்..

//பெரியத் தொட்டியில் படத்தை அலசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிழிந்து காயப் போடும் வரைக் காத்திருக்கப் பொறுமையில்லை.//

இந்த வார்த்தைப் பிரயோகத்தை வெகுவாக ரசித்தேன்!

வருகைக்கு நன்றி! அடிக்கடி வாங்க! (இதை அடிக்கடி சொல்லுவேன்!)////

நன்றி. ஆனா பின்னூட்டத்தின் கடைசி வரிய சரியாப் படிக்கல போலிருக்கே:))!

ரமேஷ் வைத்யா said...

நன்றாக இருக்கிறது. நகைச்சுவை கைவருகிறது. இன்றைக்குத்தான் தற்செயலாக உங்கள் போஸ்ட்டுகள் அனைத்தையும் படித்தேன். எனக்கும் கொஞ்சம் மலரும் நினைவுகள் கிளர்ந்தன.
‍ ஸோமா வனதேவதா.

சின்னப் பையன் said...

சூப்பர்... நல்லா இருக்கு... இன்னும் இந்த சிவாஜி.. ஜிலேபி முடியலையா....

பரிசல்காரன் said...

ராமலட்சுமி மேடம்..

//அப்படியே நம்ம சிவாஜியையும் பாக்கறது....// அப்புறம் உங்க ஜானி ஜானி கதையையும் படிக்கச் சொல்லிருக்கீங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் போடப் போற பதிவு மூலமா இப்போதைய என் நிலைமை உங்களுக்கு புரியவரும்.

அப்புறமா படிக்கறேனே.. ப்ளீஸ்..

பரிசல்காரன் said...

@ rapp..

நன்றி ராப்!

வேறென்ன சொல்ல அன்பை அழகாய் வெளிப்படுத்த?

பரிசல்காரன் said...

ரமேஷ் வைத்யா said...

நன்றாக இருக்கிறது. நகைச்சுவை கைவருகிறது. இன்றைக்குத்தான் தற்செயலாக உங்கள் போஸ்ட்டுகள் அனைத்தையும் படித்தேன். எனக்கும் கொஞ்சம் மலரும் நினைவுகள் கிளர்ந்தன.
-ஸோமா வனதேவதா

அடக்கடவுளே...
என் எல்லா கடிதங்களிலும் நான் குறிப்பிடும் ‘ஒரு மனசு அறியாதா தன்னைப் போல் இன்னொன்றை' என்று ‘அறிவித்த ஸோமா வனதேவதாவும், ரமேஷ் வைத்யாவும் ஒருவரா?

அட.. இந்தப் பின்னூட்டத்திற்குப் புறகு நானும் எனக்குப் பிடித்த கவிதைகளை எழுதி வைத்த என் பழைய நோட்டை எடுத்துப் பார்க்கிறேன்..

ஆமாம்.. `இருந்தாலும்' என்றகிற தலைப்பின் ஸோமா வனதேவதா என்கிற பெயரில் தான் எழுதியிருக்கிறீர்கள்.. புத்தக வடிவில் வரும்போது ரமேஷ் வைத்யா என்று வெளியிட்டுள்ளீர்கள்!

உங்கள் பின்னூட்டம் எனக்கு கிடைத்த விருது!

அடிக்கடி வந்து என்னை ஊக்குவியுங்கள்!

வேறென்ன சொல்ல.. காலம் கடத்தி வைத்திருந்த எழுதும் நிமிடங்களை எனக்கு மீட்டுத் தந்த வலையுலகத்திற்கு நன்றியை தவிர..

பரிசல்காரன் said...

@ ச்சின்னப்பையன்

//சூப்பர்... நல்லா இருக்கு... இன்னும் இந்த சிவாஜி.. ஜிலேபி முடியலையா....//

எப்படி முடியும்? எல்லாருமே ஜிலேபி குடுக்கறதோட நிறுத்திடறோமே.. சாப்பிட்டு முடிக்கற மாதிரி யாரும் சொல்லலியே?

ராமலக்ஷ்மி said...

//இன்னும் கொஞ்ச நேரத்துல நான் போடப் போற பதிவு மூலமா இப்போதைய என் நிலைமை உங்களுக்கு புரியவரும்.//

அங்கே போயிட்டுதான் இங்கே வாரேன். கடமையை ஆற்றி விட்டு தந்தையின் ஆசிர்வாதங்களுடன் திரும்பி வாருங்கள்.

தமிழன்-கறுப்பி... said...

அட இந்த ஜிலேபியை நான் படிக்கலையே..
சூப்பரு இந்த ஜிலேபி அதோட ரஜினி பேசுற மாதிரியே வசனங்கள் குடுத்திருக்கிங்க...

கிரி said...

ஹல்வா யாரும் கொடுக்கலையா :-)))

உங்க பதிவு சூப்பர் ஸ்டார் மாதிரி சூப்பர்