தன் எதிரில் பட்டவர்களுக்கெல்லாம் சலிக்காமல் கை கூப்பி ”வணக்கம்.. வணக்கம்” என்றவாறே அந்த ப்ரிவ்யூ தியேட்டருக்குள் நுழைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
உள்ளே உலக நாயகன் கமலஹாசனும், கே.எஸ்.ரவிகுமாரும் அவரை எழுந்து நின்று வரவேற்க..
“நோ..நோ.. உக்காருங்க. லேட்டாயிடுச்சா?”
” இல்ல ரஜினி. என்னிக்கு நீங்க லேட்டா வந்திருக்கீங்க? படத்தை போட்டுடலாமா”
“ஓயெஸ்.. ஓயெஸ்..”
அனைவரும் தயாராக சூப்பர்ஸ்டாருக்காக தசாவதாரம் ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்டப்பட்டது.
படம் முடிந்ததும் எழுந்து கமலை கட்டிக் கொண்டார் ரஜினி.
“கிரேட்.. கிரேட்..! எப்டி எப்டி இவ்ளோ திங்கிங்க், இவ்ளோ ஸ்ட்ரெய்ன்..”
“ஆக்சுவலி, நான் ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணி நடிச்சது கோவிந்த் கேரக்டர்தான். ஏன்னா மத்த எந்த கேரக்டரோட சாயலும் இல்லாம நான் என்னை மாதிரியே நடிக்கணுமே.. அதான் எனக்கு கஷ்டமா இருந்தது..”
“ஹஹ்ஹஹ்ஹஹா.. யு ஆர் ரைட்! அந்த மாதிரி தசாவதாரம் ங்கற பேருக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு கேரக்டரையும்..”
“நான் சொல்றேன் சார்” இடைமறித்தார் கே.எஸ்.ரவிகுமார்.
“அதாவது தசாவதாரம்ன்னு பேர், பத்து வேஷம்.. எல்லாம் சரி. அந்த வேஷங்களுக்கும் விஷ்ணுவோட பத்து அவதாரங்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கணும்ன்னு நெனைச்சோம்”
“இண்ட்ரஸ்டிங்க்!”
“உதாரணமா நம்பி கடல்ல மூழ்கும்போது மீனைக் காட்டி அந்த ஷாட்டை முடிச்சிருப்போம்”
“மச்சாவதாரம்?”
“யெஸ். அப்புறம் கோவிந்த். ஒரே பொண்ணு பின்னாடி சுத்துவாரு. ராமர்! பேரே கோவிந்த் ராமசாமிதான்! ஜப்பானிய கேரக்டர் வில்லனை கையாலயே வதம் பண்ணுவார். நரசிம்ஹ அவரதாரம். அதுமில்லாம அவர் பேரே ஸிம்ஹ நரஹசி-ன்னு வெச்சிருந்தோம். Infact ஜப்பான்ல அப்படி ஒரு பேர் இருக்கு ”
”யா யா ஐ நோ”.
“அப்புறம் தாடி வெச்சிருக்கற அவதார் சிங் – பரசுராமன். பரசுராம அவதாரம் தாடியோட இருக்கும். மூணு அடி உயர பாட்டி - வாமனன். பலராம் நாயுடு - பலராமன். எட்டடி உயர கலிபுல்லா – கல்கி. கல்கிதான் பெரிய அவதாரம். அதுனால எட்டடின்னு உருவகம் பண்ணிகிட்டோம். பூவராகன் கருப்பா இருப்பார்.. கிருஷ்ணாவதாரம்”
“ஆல்சோ.. அசினை சந்தானபாரதி துகிலுரிக்கும்போது அவர் வருவாரு.”
“ஆமா சார்”
“வாவ்.. வாட் எ வொர்க்.. வாட் எ டெடிகேஷன்!”
“கமல் சார் பத்து வேஷத்துல படத்துல நடிச்சிருக்காரு. அதில்லாம அசோஷியேட் டைரக்டர், ஸ்கிரிப்ட் ரைட்டர், டயலாக் ரைட்டர்-ன்னு பல அவதாரங்கள் ஸ்கீரீனுக்கு வெளில பண்ணிருக்கார்”
”யு ஆர் ரைட் ரவிகுமார்!.. இப்படிப்பட்ட ஒரு ஆளுக்கு ஒண்ணுமே குடுக்காம இங்கிருந்து போறதா” என்ற ரஜினி தன் உதவியாளரை அழைத்து...
“ஸ்வீட் என்னாச்சு?”
“சார் ஜிலேபிதான் இருந்தது”
“ஒகே.. ஒகே” என்றபடி ஒரு ஜிலேபியை எடுத்து கமலுக்கு கொடுக்கப் போக..
“முதல்ல குசேலனுக்குதான்” என்று கமல் கூறி ஜிலேபியை கையில் வாங்குகிறார்.
"குசேலனா..? அவரு இன்னும் சிவாஜிதான் சார். ரிலீசானாத்தான் குசேலனா மாறுவாரு” என்கிறார் ரவிகுமார்.
"அப்படியா? அப்ப இந்தாங்க சிவாஜி வாயிலே ஜிலேபி யைப் போடுங்க” என்றபடி ரஜினிக்கு கமல் ஊட்டப் போக அந்த இடமே கலகலப்பானது.
-------------------------------------
பின் குறிப்பு 1: சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தலைப்பிலான ரிலே ரேஸில் என்னையும் சேர்த்துக் கொண்ட (நீயா கெஞ்சி கூத்தாடி வாங்கிட்டு டயலாக்கப் பாரு!!) கயல்விழி முத்துலட்சுமி மேடத்துக்கு என் நன்றிகள்.
பின்குறிப்பு 2: ஜெயா மற்றும் விஜய் டி.வியில் தசாவதாரம் பட விமர்சனம் செய்யப்பட்டபோது கே.எஸ்.ரவிக்குமார் கூறிய சில விஷயங்களை பதிவாக எழுத நினைத்திருந்தேன். அந்த நேரத்தில் இந்த ரிலேரேஸ் வாய்ப்பு வர, இரண்டையும் கலந்து கொஞ்சம் கற்பனையுடன் இப்பதிவை எழுதினேன்.
பின்குறிப்பு 3: எனக்குப் பிறகு இதை நான் யாரிடமாவ்து தள்ள வேண்டும். அவரை விட்டால் வேறு யார் எனக்கு.. ஆகவே திருவாளர் லக்கிலுக் அவர்களே.. சுமையை உங்களிடம் இறக்கி வைக்கிறேன்!