படம் ஆரம்பித்ததுமே எப்போது சூப்பர் ஸ்டார் வருவார் என்கிற ஆவல் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது..
படத்தில் ரஜினிக்கு இணையாக நாம் பாராட்ட நினைப்பது பசுபதியின் கேரக்டர்.. அந்த கேரக்டருக்கு இவரை விட்டால் வேறு யாரையும் நாம் நினைத்துப் பார்க்க முடியவில்லை! முடிவெட்டும் தொழிலாளியாய் வாழ்ந்திருக்கிறார். தனது தொழில் கொஞ்சம் சுணக்கம் அடையும் போது, மனசுக்குள் வருந்துவதை முகத்தில் காட்டாமல் மனைவியிடம் நடிக்கும் காட்சிகளில் நான் மனதில் பதிகிறார். குழந்தையின் பள்ளிக் கட்டணத்தை கட்ட முடியாமல் மருகும் போதும், தனது ஊருக்கு வரும் பால்ய நண்பர் சூப்பர் ஸ்டாரிடம் உதவி கேட்க தயங்கி போகாமலே விடும்போதும் தனது கூத்துப் பட்டறை அனுபவ நடிப்பால் எல்லோரையும் கலங்கடிக்கிறார். சபாஷ் பசுபதி..
ரொம்ப நாளைக்குப் பிறகு மீனா!! இவ்வளவு நாள் ஏன் இந்த அழகான.. திறமையான நடிகையை கண்டு கொள்ளாமல் விட்டது தமிழ் சினிமா என்று நினைக்க வைக்கிறது.. நிச்சயம் இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல செகண்ட் இன்னிங்க்சை துவக்கும்..
ரஜினி! படத்தில் இவர் வந்த பிறகு படம் முழுவதும் நிறைந்து நிற்கிறார்! அதுவும் சூப்பர் ஸ்டாராகவே நடிக்கிறார் என்றால் சும்மாவா? அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாது எல்லோருக்கும் நிச்சயம் அவரது உண்மையான கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாய் வசனங்கள் அமைத்திருப்பது பி.வாசுவின் சாமர்த்தியம்!
இறுதிக் காட்சியில் பள்ளியில் அவரது உரையை முடித்துக் கொண்டு பசுபதியை தேடுவதும், பசுபதியை அவரது வீட்டிற்கே சென்று சந்திப்பதும் நாம்மை நெகிழ வைக்கும் காட்சிகள்..
இசை.. ஜி.வி.பிரகாஷ்குமார்! சூப்பர் ஸ்டாரின் படத்துக்கு இசையமைக்கிறோம் என்கிற பதட்டமிலாமல் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்! ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகிவிட்ட "சினிமா சினிமா சினிமாதான்" பாடலின் இசையும், வரிகளும் (வாலி!!) நம்மை கட்டிப் போடுகின்றன. அந்தப் பாடலை தியேட்டரில் சரியாக கேட்கவே முடிவதில்லை! விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் , த்ரிஷா என்று நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருப்பதால் ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரைப் பிளக்கிறது!
மொத்தத்தில்.. ரஜினி நடித்து பி.வாசு டைரக்ஷனில் வெளிவந்திருக்கும் பசுபதி படம்!
(இப்போ என்ன பண்ணுவீங்க??)
22 comments:
சற்றுமுன் தான் 'நான் கடவுள்' விமர்சனம் படித்தேன்.
குசேலன் விமர்சனம் அருமை.
சூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே அடுத்தப்படத்தின் விமர்சனம் எழுத முடியுமா ? ரோபோ திரைக் கதை இங்கே பாருங்க.
fantastic
இப்போ என்ன பண்ணுவீங்கன்னா... என்னபண்ணுவோம் எழுதனதை வாசிப்போம்... அவ்வளவு தான் :) நானெல்லாம் இன்னும் தசாவதாரமே எழுதலை.. விமர்சனங்களைப்படிக்கவே நேரம் பத்தலை..
எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க இப்படி, லதானந்த் அங்கிள் என்னடான்னா 'நான் கடவுள்' படத்துக்கு விமர்சனம் எழுதுறாரு, நீங்க என்னாடான்னா குசேலன் படத்துக்கு....
விமர்சன வியாதி ரொம்ப வேகமா பரவிட்டு இருக்கு டோய்...
ஹா ஹா ஹா இனி அடுத்ததா உருள போகும் தலை நம் தலையா :-))))
எல்லோரும் ஒரு முடிவோடதான்யா இருக்காங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சைக்கிள் கேப் ல எ லாரி ஓட்டுற ஆளுங்க ....இனி லாரி ஓட்டுற கேப் ல சைக்கிள் ஓட்ட சொன்னா ...ஸ்டார்ட் மியூசிக் ..
கிருஷ்ணா,
நல்ல பார்ம்ல இருக்கிங்க.
அடிச்சு ஆடுங்க.
ஹிஹி, இத இத இததான் நான் எதிர்பார்த்தேன். :))
சரியாதான் கிழம்பி இருகிங்க...
அடப்பாவிகளா, இப்பவே நான் கடவுள், குசேலன், ரோபோன்னு ஆரம்பிச்சிட்டீங்களா?
உங்க சுறுசுறுப்புக்கும் துர்த்துருப்புக்கும் ஒரு அளவில்லையாப்பா? ஏங்க எல்லாருக்கும் இந்த கொலைவெறி?
இப்படி எத்தனை பேர் கிளம்பிருக்கீங்க?
சிவாஜி வாயில் ஜிலேபி விளையாட்ட்டை பத்தி சொன்னா நீங்க விளையாட்டுக்கு தயாருன்னு சொன்னீங்களே.. பதிவுல பின்னூட்டம் போட்டுட்டு அதுக்கு பதில் என்ன போட்டிருக்கோம்ன்னு பாக்க வரக்கூட நேரமில்லாத பிசி மேன் போல நீங்க..
நன்றி கோவி. கண்ணன்..
//சூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே அடுத்தப்படத்தின் விமர்சனம் எழுத முடியுமா//
பண்ணீட்டா போச்சு!
நன்றி முகுந்தன்..
நன்றி கயல்விழி முத்துலெட்சுமி..
நன்றி வெண்பூ.. (நேற்றுதான் வால்பையனின் பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்து நல்ல பெயர் என்று நினைத்தேன்.. இன்று என் வலையில் விழுந்து விட்டீர்கள்!!)
//சற்றுமுன் தான் 'நான் கடவுள்' விமர்சனம் படித்தேன்//
//லதானந்த் அங்கிள் என்னடான்னா 'நான் கடவுள்' படத்துக்கு விமர்சனம் எழுதுறாரு, நீங்க என்னாடான்னா குசேலன் படத்துக்கு//
அது ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை! நாளை என் பதிவில் சொல்கிறேன்! Very interesting!!
@ கிரி..
//சைக்கிள் கேப் ல எ லாரி ஓட்டுற ஆளுங்க ....இனி லாரி ஓட்டுற கேப் ல சைக்கிள் ஓட்ட சொன்னா ...ஸ்டார்ட் மியூசிக் //
டண்டக்க..டண்டக்க.. டண்டக்க.. டண்டக்க..
@ வேலன்..
//நல்ல பார்ம்ல இருக்கிங்க.//
மிக முக்கியமான பாராட்டாக இதை எடுத்துக் கொள்கிறேன்! நன்றி வேலன்!!
அம்பி.. எதிர்பார்த்தது கிடைச்சுதா?
விக்கி.. இன்னைக்கு ஒண்ணுதானா??
@ rapp
//எல்லாருக்கும் இந்த கொலைவெறி?//
அடுத்தவன் நம்மளை மொக்கை போடறதுக்குள்ள நாம முந்திக்கறது தான்!
@வெயிலான்
//இப்படி எத்தனை பேர் கிளம்பிருக்கீங்க?//
நானும் அங்கிளும்.. (டாப்சிலிப் தினங்கள்-ன்னு யார் பதிவெழுதப் போறீங்க?)
(((அடப்பாவி. தனித்தனியா போட்டிருந்தா பத்து பின்னூட்டம் கணக்குல வந்திருக்குமே!! நீ வேஸ்ட்டுடா கிருஷ்ணா!)
//பதிவுல பின்னூட்டம் போட்டுட்டு அதுக்கு பதில் என்ன போட்டிருக்கோம்ன்னு பாக்க வரக்கூட நேரமில்லாத பிசி மேன் போல நீங்க//
மன்னிக்கணும் கயல்விழி மேடம்..
கொஞ்சம் வேலைப் பளு!
இப்போ பாத்துடறேன்..
படம் வர்றதுக்குள்ள விமர்சனமா... பரிசல்ல கட்டி என்னை கடலில் தூக்கிப்போட்ட உணர்வு.. இந்த பதிவு பார்த்ததும்.... மனதில் தோன்றிது தமிழ்சினிமா பதிவெல்லாம் சும்மா டைம்பாஸ் தான்...
//கயல்விழி முத்துலெட்சுமி said...
இப்போ என்ன பண்ணுவீங்கன்னா... என்னபண்ணுவோம் எழுதனதை வாசிப்போம்... அவ்வளவு தான் :) நானெல்லாம் இன்னும் தசாவதாரமே எழுதலை.. விமர்சனங்களைப்படிக்கவே நேரம் பத்தலை..
//
ரிப்பீட்டே :))
(இது உங்க பதிவுல என் மொதல் ரிப்பீட்டேன்னு நினைக்கறேன் :) )
//"குசேலன் - முதல் விமர்சனம்!!"//
படிச்சாலே சும்மா கலங்குதுல்ல...! ஹி ஹி....! நன்றாக இருக்கிறது.
@ தமிழ்சினிமா..
//இந்த பதிவு பார்த்ததும்.... மனதில் தோன்றிது தமிழ்சினிமா பதிவெல்லாம் சும்மா டைம்பாஸ் தான்...//
உங்கள் தன்னடத்துக்கு என் வணக்கங்கள்.. வருகைக்கு நன்றிகள்! அடிக்கடி வாங்க..
@ சென்ஷி....
//(இது உங்க பதிவுல என் மொதல் ரிப்பீட்டேன்னு நினைக்கறேன் :) )//
நான் இல்லீன்னு நினைக்கறேன்..
@சினிமா நிருபர்..
//படிச்சாலே சும்மா கலங்குதுல்ல...! ஹி ஹி....! நன்றாக இருக்கிறது.//
நன்றி.. இந்த நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு அல்ல. இந்த விமர்சனம் எழுதும் முன் சில தகவல்களுக்காக உங்கள் பிளாக்கிற்கு வந்தேன்!!
// நேற்றுதான் வால்பையனின் பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்து நல்ல பெயர் என்று நினைத்தேன்.. //
இதுல உள்குத்து ஒண்ணும் இல்லையே பரிசல்? எதும் கெட்ட வார்த்தை மாதிரி கூட தெரியலயே?
இல்லல்ல..
நிஜமா நல்ல பேர்!
அட்றா சக்கை... அட்றா சக்கை... அட்றா சக்கை...
நன்றி ச்சின்னப்பையரே..
அடிக்கடி வாங்க..
//ரொம்ப நாளைக்குப் பிறகு மீனா!! இவ்வளவு நாள் ஏன் இந்த அழகான.. திறமையான நடிகையை கண்டு கொள்ளாமல் விட்டது தமிழ் சினிமா என்று நினைக்க வைக்கிறது..//
தென்னாலி படத்தில் கடைசி சீனில் மீனா வரும்போது நான் நினைத்தது அவர் ஜோதிகாவை விட அழகாக இருக்கிறார் என்பதே.
தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இருக்கும் ஒரு கெட்ட பழக்கம், ஒரு நடிகை என்றால் அவர் எத்தனை அழகாக இருந்தாலும், எத்தனை திறமையாக நடித்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
நடிகர்கள் எல்லாம் தாத்தாவானாலும் ஹீரோவாக நடிக்கிறார்கள். என்ன கொடுமை சார் இதெல்லாம்?
Post a Comment