என்ன எழுதுவதென்று தெரியாமல் ஒரு பதிவை ஆரம்பிப்பது இதுதான் முதல் முறை! வலையுலகில் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்காமல் நேரடியாக அவியல் எழுத உட்கார்ந்து விட்டேன்!
********************************************
இன்றுதான் பார்த்தேன். நேற்று நான் எழுதியது ஐம்பதாவது பதிவு! ஐம்பதாவது பதிவிற்கு பிரபல பதிவர் "பைத்தியக்காரன்" எழுதிய மாதிரி ஏதாவது உருப்படியாக எழுத வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்து, கடைசியில் ஞாபகமே இல்லாமல் போய்விட்டது! ஆனால் ரொம்ப மொக்கையாக இல்லாமல், ஓரளவிற்கு உருப்படியான பதிவென்றுதான் நினைக்கிறேன்..
*************************************************
இன்றைக்கு வந்து தமிழ்மணத்தை மேய்ந்து கொண்டிருந்தபோது.. அங்கங்கே நமீதாமயமாகி இருந்தது! என்னதான் இருக்கிறது நமீதாவிடம் என்று பார்க்க அவரது சில புகைப் படங்களைப் பார்த்தேன். (இல்லீன்னா ஒண்ணுமே தெரியாது!!) மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.. ஏதோ இருக்கிறதல்லவா அவரிடம்?
***********************************
எனக்கு பின்னோட்டம் இடுபவர்கள் அளிக்கும் ஊக்கம் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது.. (உடனே எல்லாரும் நிறுத்தீடாதீங்க!! கவிஞர் வாலி (எனக்கு புடிச்ச கவிஞர்! இவரைப் பத்தி தனியே ஒரு பதிவு போடப் போறேன்!) ஒருமுறை சொன்னார்..
"ஊக்கு விற்பவனையும்
ஊக்குவித்தால்
அவன் ஒருநாள்
தேக்கு விற்பான்!"
சூப்பர் இல்ல?
***********************************
ஊருக்கு வந்ததில் இருந்து இங்கே ரொம்ப நாள் கழித்து சந்திக்கும் நண்பர்களின் "இப்போ பத்திரிகைக்கு கதை, கவிதை எழுதிப் போடறியா?" என்ற கேள்விக்கு, "இப்போ BLOG ஆரம்பிச்சு அதுல எழுதிட்டிருக்கேன்" என்றால் அடுத்ததாக வரும் கேள்வி..
"ஒரு படைப்புக்கு எவ்வளவு கிடைக்கும்?" என்பதுதான்..
இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை!
"எனக்கு ஆத்மார்த்தமான மகிழ்ச்சி கிடைக்கிறது" என்றால் கொஞ்சம் தள்ளிப் போய் சிரிக்கிறார்கள்!
*************************************
எங்கே இந்தக் கவிஞர்கள் வரிசையில் இன்றைய கவிஞர் "கல்யாணராமன்".
இவரது ஒரு சின்ன கவிதை (ஹைக்கூ என்று சொல்லலாமா? ம்ஹூம்!) அவ்வப்போது என் மனதில் வந்து போகும்..
"அறைந்து சாத்தப்படும்
கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி?"
26 comments:
அப்படியா? இந்த போட்டோல எனக்கு அது தெரியலயே? (I mean அவங்களோட திறமை, acting etc)
\\எனக்கு பின்னோட்டம் இடுபவர்கள் அளிக்கும் ஊக்கம் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது.. (உடனே எல்லாரும் நிறுத்தீடாதீங்க!!\\
:-)))))))))))))
@ வெண்பூ..
தெரியற மாதிரி போடலாம்தான்.. அடிவாங்க நான் தயாரில்ல!!
@ முரளி கண்ணன்...
என்ன கிண்டலா சிரிக்கறீங்க போல? (ஆமா, இவ்ளோ நாளா காணோம், நமீதா படம் போட்ட உடனே வந்துட்டீங்க?)
பிரசன்ட் கிருஷ்ணா. நமீதா ஆராய்ச்சிய நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? அவங்கள நான் இந்த ஜனவரி 21 தேதி நுங்கம்பாக்கம் தாஜ்ல பார்த்தேன். நேர்ல பார்க்க இப்படி ஜைஜாண்டிக்கா இல்ல, அழகாவும் இருந்தாங்க.
//இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை!
"எனக்கு ஆத்மார்த்தமான மகிழ்ச்சி கிடைக்கிறது" என்றால் கொஞ்சம் தள்ளிப் போய் சிரிக்கிறார்கள்//
அவங்களாவது பரவாயில்லை.. தங்கமணி தள்ளிவிட்டு சிரிக்கிறாள்... அவ்வ்வ்வ்....
என்ன இப்படி பண்ணிட்டீங்க... தலைவி படத்தை பாக்காமெயும் இருக்க முடியல... அலுவலகத்திலே பாக்கவும் முடியல... அவ்வ்வ்வ்வ்...
/////"அறைந்து சாத்தப்படும்
கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி?"////
ஒரு மணித்துளிகள் வெளியில் நின்று கொண்டிருப்பவர் மனநிலைக்குச் சென்றுவிட்டேன். கவிதையும் பதிவும் அருமை. அதென்ன? பதிவின் முகப்பில் சேலைசுற்றிய கழுதையின் நிழற்படம். தங்களுக்குக் கவிதைகளைப் பிடிக்கும் என்றிருந்தேன். கழுதைகளையும் பிடிக்குமோ?
// "அறைந்து சாத்தப்படும்
கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி?" //
நீங்கள் கண்டு கேட்டு ரசித்த கவிதைகள் மிக அருமை....
சென்ற காரியம் முடிந்ததா
//"ஒரு படைப்புக்கு எவ்வளவு கிடைக்கும்?" என்பதுதான்..
இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை!
"எனக்கு ஆத்மார்த்தமான மகிழ்ச்சி கிடைக்கிறது" என்றால் கொஞ்சம் தள்ளிப் போய் சிரிக்கிறார்கள்!//
ஒரு நல்ல படைப்பாளிக்குச் சன்மானம் எழூதிய படைப்பில் கிடைக்கும் திருப்தியே.
//ஊருக்கு வந்ததில் இருந்து இங்கே ரொம்ப நாள் கழித்து சந்திக்கும் நண்பர்களின் "இப்போ பத்திரிகைக்கு கதை, கவிதை எழுதிப் போடறியா?" என்ற கேள்விக்கு, "இப்போ BLOG ஆரம்பிச்சு அதுல எழுதிட்டிருக்கேன்" என்றால் அடுத்ததாக வரும் கேள்வி..
"ஒரு படைப்புக்கு எவ்வளவு கிடைக்கும்?" என்பதுதான்..//
அடுத்த முறை கேட்டா, உலகம் முழுதுமிருந்து நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்னு சொல்லுங்க :-)
//"அறைந்து சாத்தப்படும்
கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி?"//
சூப்பர் :-)
//ஏதோ இருக்கிறதல்லவா அவரிடம்? //
Tummy?
//"அறைந்து சாத்தப்படும்
கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி?"//
அதிர வைக்கும் எளிய வரிகள்...
நமிதாவிடம் என்ன இருக்கிறது என கேட்டதிற்காக உங்களை 'இண்டர்நேஷனல் நமிதா ரசிகர் மன்ற' சார்பில் விசாரனைக்கு அழைக்கிறோம்...
//ஒரு மணித்துளிகள் வெளியில் நின்று கொண்டிருப்பவர் மனநிலைக்குச் சென்றுவிட்டேன். கவிதையும் பதிவும் அருமை. அதென்ன? பதிவின் முகப்பில் சேலைசுற்றிய கழுதையின் நிழற்படம். தங்களுக்குக் கவிதைகளைப் பிடிக்கும் என்றிருந்தேன். கழுதைகளையும் பிடிக்குமோ?//
உங்களை நீதி மன்றதிற்கு அழைக்கிறோம்... வரும்போது மறக்காமல் மன்னிப்புக் கடிதம் ஒன்றை 500 பக்கங்களுக்கு தட்டச்சு செய்து கொண்டு வரவும்.
//அடுத்த முறை கேட்டா, உலகம் முழுதுமிருந்து நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்னு சொல்லுங்க :-)//
இது பயிண்ட்...
ரிப்பீட்டுகிறேன்...
//"ஒரு படைப்புக்கு எவ்வளவு கிடைக்கும்?" என்பதுதான்..//
அடுத்த முறை கேட்டா, உலகம் முழுதுமிருந்து நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்னு சொல்லுங்க :-)
//
கொஞ்சம் முயற்சி செஞ்சா தங்கமணியும் கிடைப்பாங்கனு சொல்லுங்க. ஆனா அதுக்கப்புறம் உங்களுக்கு விழும் அடிக்கு நான் பொறுப்பில்லை. :p
ஐம்பது அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.
கடைசிக் குறிப்பு படிச்சீங்களா? சத்தத்தையே காணோம்?
தேக்கு விற்பவனையும்
தேக்கியே வைத்தால்
ஊசிப்போய்
ஊசி விற்பானோ - மீண்டும்
அனுஜன்யா
கிருஷ்ணா,
வலியுணர்த்தும் கவிதை.
//"அறைந்து சாத்தப்படும்
கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி?//
கடைசி வரியில் `பற்றி?` தேவையா?
இல்லாமலே கவிதை முழுமையாக இருக்கிறதல்லவா?
தொடருங்கள்
ரொம்ப நல்லாருக்கு நமீதாவும் நச்னு ஒரு கவிதையும்
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா..!
எல்லோருக்கும் பொதுவாக ஒரு நன்றி! (யாருய்யா அது `ஒரு நன்றியை எத்தனை பேர் எப்படி பங்கு போட்டுக்கறது-?" ன்னு கேக்கறது,. ஒ.. சென்ஷியாரா?)
அப்பாலிக்க வந்து வூடு கட்றேன்!
//பரிசல்காரன் said...
எல்லோருக்கும் பொதுவாக ஒரு நன்றி! (யாருய்யா அது `ஒரு நன்றியை எத்தனை பேர் எப்படி பங்கு போட்டுக்கறது-?" ன்னு கேக்கறது,. ஒ.. சென்ஷியாரா?)
அப்பாலிக்க வந்து வூடு கட்றேன்!
//
அட நாம சும்மா போனாலும் வுட மாட்டிங்க போலருக்குது... :))
எப்படி கரெக்டா வந்துட்டோம் பார்த்தீங்களா :))
எங்க இப்படி எல்லாம் நமீதா படத்தை போட்டு எங்களை அதிர்ச்சி அடைய வைக்கறீங்க ...
எல்லோரும் உங்க கவிதைய பற்றி சொல்லிட்டாங்க..நான் புதுசா சொல்வதற்கு என்ன இருக்கு
அப்புறம் உங்க 50 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்
எங்கே பார்த்தாலும் நமீதா மயம். It's nauseating!!!.
இவர் இருக்கும் குண்டுக்கு பாலிவுட்டில் துணை நடிகை வேடம் கூட கிடைப்பது கஷ்டம். அதனால் தான் மும்பை நடிகை தமிழ் படத்தில் வந்து நடிக்கிறார்.
//இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை!
"எனக்கு ஆத்மார்த்தமான மகிழ்ச்சி கிடைக்கிறது" என்றால் கொஞ்சம் தள்ளிப் போய் சிரிக்கிறார்கள்!//
:) :)
very funny.
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் :)
\\"அறைந்து சாத்தப்படும்
கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி?"\\
சூப்பர்
Post a Comment