அரங்கநாதர் சிலை முதல்ல பிரம்மாகிட்டதான் இருந்ததாம். யார் வீட்லயாவது ஏதாவது அரிய பொருளை, வித்தியாசமானதைப் பார்த்தா ‘ச்சே.. இது நமக்குக் கிடைச்சா தேவலாமே’னு நெனைப்போமில்லயா? (எனக்கு சில புக்ஸைப் பார்த்தா அப்படித் தோணும்க!) அப்படி பிரம்மர்கிட்ட இருந்த அரங்கநாதரை நினைச்சு, சூரியகுலத்தைச் சேர்ந்த இஷ்குவாகு மன்னன் பிரம்மனை நோக்கி தவம் புரிந்து அவர் வந்து ‘இன்னாபா வோணும் ஒனக்கு?’ ன்னு கேட்டப்போ, ‘ஒன்னாண்ட கீற ரங்கநாதரைக் குடுப்பா’ன்னு கேட்டாராம்.
என்னடா இது நாம ரொம்ப பிரியமா பூச பண்ற ரங்கநாதரைக் கேட்டுட்டாரே’ன்னு பிரம்மர் தடுமாறினப்போ ரங்ஸ் வந்து ‘என் அர்ச்சை பூமிக்குச் செல்லவேண்டியது அவசியம்’னாராம்.
அர்ச்சை?
பகவானுக்கு ஐந்து நிலைகள் இருக்காம். பரம், விபவம், வியூகம், அந்தர்யாமி, அர்ச்சை.
பரம் – வைகுண்டத்துல காட்சி தர்ற வடிவம்
விபவம் – ராமர், கிருஷ்ணர் மாதிரியான அவதாரங்கள்
வியூகம் – ஸங்கர்ஷன், பிரத்யும்னன், அநிருத்தன் மாதிரியான திருமேனிகளுடன் பகவான் காட்சி தர்றது
நம்ம மனசுல நினைச்சு வணங்கறது – அந்தர்யாமி
நெக்ஸ்ட் – இப்போ சிலாரூபமா வணங்கறோமே.. அதான் அர்ச்சை.
சரி.. 'பகவானே சொல்லீட்டாரே’ன்னு பிரம்மா அந்த ரங்கநாதரை இஷ்குவாகு கிட்ட குடுத்துடறாரு.
இஷ்குவாகுவோட பரம்பரைல அடுத்தடுத்து வர்ற எல்லாருமே அதை வணங்கீட்டு வர்றாங்க.. யார் யாரு...?
பகீரதன், ரகு, திலீபன், அஜன், தசரதன்.. நெக்ஸ்ட் நம்ம ராமன்.
இந்த ராமன் என்ன பண்றாரு.. தன்னோட பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு அந்த ரங்கநாதரை கிஃப்டா குடுத்துடறாரு.
விபீஷணன் அதை எடுத்துக்கிட்டு இலங்கைக்கு ரிட்டர்ன் போறப்போ காவிரிக்கரைல அதை வெச்சுட்டு ரெஸ்ட் எடுத்தாராம். மறுபடி எடுக்க ட்ரை பண்ணினப்போ அது நகரவே இல்லையாம்! விபீஷணன் மகா டென்ஷனாய்ட்டாராம்! ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் லங்காவாய்ட்டாராம்.
அப்ப, அந்த வழியா வந்த சோழமன்னன் தர்மவர்மா “சார்.. இப்ப இன்னாத்துக்கு இந்த பீலிங்கு? இங்கனயே இருந்துட்டுப் போகட்டுமே? ரங்ஸுக்கு வேணுங்கற பூஜையை நான் செய்றேன்’ங்றாரு. விபீஷணன் வெக்ஸா இருக்கறப்போ ரங்கநாதர் வந்து ‘விபீஷணா.. டோண்ட் வொர்ரி. நான் இங்கதான் இருக்கணும்கறது நியதி. அது ஏன்னு அடுத்த பாரால பரிசல்காரன் எழுதியிருக்கான் படிச்சுக்கோ. உன் வருத்தத்தைப் போக்க நீ இருக்கற இலங்கை உள்ள தெற்கு நோக்கிப் பார்த்தபடி நான் இருப்பேன்’ ன்னாராம்.
அது ஏன் தர்மவர்மா அரசாண்ட காவிரிக்கரையில் நிலை கொண்டது. அதுக்கும் ஒரு ஸ்டோரி இருக்கு. (எனக்கு புராணக் கதைல பிடிச்சதே இதுதான். எல்லாத்துக்கும் ஒரு லிங்க் இருக்குது!) தசரதர் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்துல எல்லா நாட்டு மன்னர்களும் கலந்துகிட்டபோ தர்மவர்மாவும் கலந்துகிட்டாரு. அப்போ தசரதர் வெச்சிருந்த இந்த ரங்கநாதரை பார்த்த தர்மவர்மா ‘ஷோக்காகீதே.. இது என்னாண்ட இருந்தா டெய்லி பூஜை பண்ணி கும்பிடலாமே’ன்னு மனசுல நினைச்சு சந்திரபுஷ்கரணி-ங்கற தடாகத்தின் கரையில் தவமிருந்தானாம். அப்போ சில ரிஷிகள் வந்து ‘யெஸ்.... இட் வில் ஹேப்பன்!’ என்று சொல்லீட்டுப் போனாங்களாம். அத நம்பி தவத்தை முடிச்சுகிட்டாராம். அதான் இப்போ விபீஷணன் மூலமா நிறைவேறுது.
அப்படி தன்னிடத்துக்கு வந்த ரங்கநாதனுக்கு தர்மவர்மா கோயில் கட்டினாலும், ஒரு முறை காவிரில வெள்ளம் வந்து கோயிலை முழுமையா மூடிடுச்சாம். பின்னால வந்த கிள்ளிவளவன்ங்கற மன்னன் ஒருதபா காட்டுக்குப் போனப்போ ஒரு கிளி திரும்பத் திரும்ப சில செய்யுள்களைச் சொல்லிகிட்டிருந்ததாம். அது சொன்னதிலிருந்து அங்க எங்கியோ ரங்கநாதர் இருக்கார்ன்னு கண்டுகிட்ட அவர் பூமியை தோண்டி ,மணலையெல்லாம் அகற்றி ரங்கநாதரைக் கண்டுபிடிச்சு, கோயிலை சீரமைத்தாராம்.
கிளிசொன்னதால கன்டுபிடிக்க்கப்பட்டதால் இந்தக் கோயில்ல கிளிமண்டபம்னு ஒண்ணு ஸ்பெஷலா இருக்கு!
இந்தக் கதைகளை நான் சொல்லி முடிக்கும்போது, க்யூவில் முன்னால் இருக்கறவங்க வெளியேற ஆரம்பிச்சாங்க. என்னடான்னு விசாரிச்சா ‘4 மணிக்குத்தான் கதவு திறக்குமாம். மணி ரெண்டுதான் ஆகுது’ ன்னு சொன்னாங்க. நாமளும் போலாமான்னு நெனைக்கறப்போ உமா ‘வேண்டாங்க. இன்னைக்கு தரிசனம் பண்ணாமப் போறதில்ல’ன்னு சொல்ல, போறவங்களுக்கு வழிவிட்டு நாங்க க்யூவுல முன்னாடி முன்னாடி போய்ட்டே இருந்தோம்.
கதவுலேர்ந்து 25,30வது ஆளா நாங்க முன்னேறினப்போ டக்னு கதவு திறந்து விட்டாங்க. அப்பத்தான் எவனோ புரளியைக் கிளப்பியிருக்கான்னு தெரிஞ்சது.
உள்ளபோய் ஸ்பெஷல் டிக்கெட் வாங்கீட்டு, நல்ல திவ்ய தரிசனம்! முடிச்சுட்டு பரமபத வாசல் வழியா வெளில வந்தோம்!
*******************
சரி... இனி சில கொசுறுத் தகவல்கள்...
கர்ப்பகிரகத்துக்குள்ள இருக்கற ரங்கநாதரை தரிசிக்கறப்போ காலிலிருந்து தலையைப் பார்க்கணுமாம். அதாவது நாம நிக்கற நிலையிலேர்ந்து வலதுபுறமா இருக்கற அவரோட காலை முதல்ல பார்க்கணுமாம். அப்படிப் பார்க்கறப்போ பக்கத்துல நிக்கற கோயில் ஆசாமிகள் நம்மளை இழுத்து இந்தப் பக்கம் வாங்கன்னு சொல்றப்போ அப்படியே தலைநோக்கிப் பார்த்தவாறே வெளியேறலாமாம்.
ஸ்ரீரங்கம் பக்கத்துல இருக்கற குணசீலம் சிறப்பு வாய்ந்ததாம். அதாவது திருப்பதிக்கு வர்றேன்னு நீங்க வேண்டிகிட்டா, அங்க போக முடியலீன்னாலும், குணசீலம் போனா உங்க வேண்டுதல் நிறைவேறினமாதிரிதானாம். ஆனா அதே சமயம் குணசீலம் வர்றேன்னு வேண்டிகிட்டு, திருப்பதி போனா அக்சப்டட் கிடையாதாம்.
கோயில்களைச் சுத்தியும் கடைகள் இருக்கறது ஓக்கே. நேத்து யாரோ சொன்னமாதிரி அவங்களுக்கு வியாபாரம் ஆகணுமே. ஆனா, ராஜகோபுரத்துகிட்டயே ‘அவ்ளோதான் இனி உள்ள செருப்போட போக முடியாது. இங்கயே விடுங்க. பூஜை சாமான் வாங்கீட்டுப் போங்க’ன்னு நச்சரிக்கற கும்பலைத்தான் தாங்கவே முடியல.
விசேஷ நாட்கள், கூட்டமிருக்கற நாட்கள்ல பூஜைக்கு தேங்காய், பழம், பூ வாங்கீட்டுப் போறது வேஸ்ட். அப்படியே பையை வாங்கி தட்டத்துல வெச்சு டக்னு மறுபடி எடுத்து கைல குடுத்துடறாங்க. அவங்களைச் சொல்லி குத்தமில்ல. அந்தக் காசை கோயிலைச் சுத்தி இருக்கற கையேந்தி நிக்கற முதியவர்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் குடுக்கலாம்.
கோயிலுக்குள்ளும் மனுஷனால விடமுடியாத விஷயம் செல்ஃபோன். எங்க பார்த்தாலும் செல்ஃபோன் ரிங்டோனைக் கேட்க முடிஞ்சுது. கொடுமையான சினிமாப் பாட்டெல்லாம் கோயிலுக்குள்ள கேட்டுது! (நான் சைலன்ஸ்ல வெச்சிருந்தேன். மெய்ன் சந்நிதானத்துக்குள்ள ஆஃப் பண்ணீட்டேன்!) அதுவும் ரங்கநாதர் சந்நிதிக்குள்ள ஒரு ஃபோன் அடிக்கவும், எங்கடா ரங்கநாதர் சாய்ச்சுப் பிடிச்சிருக்கற கையை எடுத்து ‘யெஸ்... டெல் மீ ஆண்டாள்..’ ம்பாரோன்னு நெனைச்சேன். நல்லவேளை அப்படி நடக்கல. (அப்படி நடந்தாதான் நல்லவேளை இல்ல!?!)
வெளில உட்கார்ந்துகிட்டிருக்கறப்போ ஒருத்தர் பேசிகிட்டிருந்தார். கையை தலைக்கு சாய்மானம் குடுத்தபடி இருக்கற ரங்கநாதரோட சிலைல, கை கொஞ்சம் கொஞ்சமா இறங்கீட்டே வருதாம். முதல்ல எல்லாம் வலது கண்ணை ஒட்டி கை, காதை மூடியபடி இருக்குமாம், இப்போ கை அப்படியே பிடரிப்பக்கம் போய்டுச்சாம்.
நான் ஒண்ணும் சொல்லல.
29 comments:
தலைவரே அடுத்து எங்க ஊர்ல மீனாட்சி அம்மன் கோயில்னு ஒன்னு இருக்கு. வந்து அத பத்தியும் ஒரு கட்டுரை சுவராசியமா எழுதிக் கொடுங்க.
super .. நல்லா சுவாரசியமா இருந்தது.. அப்பறம் தொடருதா ?
நல்ல சுவாரஸ்யம் கே.கே. அங்கங்கே உங்க டச்.
//ஆனா அதே சமயம் குணசீலம் வர்றேன்னு வேண்டிகிட்டு, திருப்பதி போனா அக்சப்டட் கிடையாதாம்.//
//(அப்படி நடந்தாதான் நல்லவேளை இல்ல!?!)//
இன்னிக்கு திருப்பூர் பக்கம் கும்பிட்டாலே புண்ணியம்னு நினைக்கிறேன்.
அனுஜன்யா
‘யெஸ்... டெல் மீ ஆண்டாள்..’ Touche!
கடைசி பத்தி - நாமக்கல் ஆஞ்சனேயர் வளர்கிறார் என்று சொல்கிறமாதிரி இருக்கே!
உள் புரளியை விட வெளிப் புரளி பயங்கரமாக இருக்கு.(நான் போகும் போது என்னை கை நீட்டி புடிச்சிடபோறாரே,என்று)
அருமையாக இருக்கு.
//ஆசாமிகள் நம்மளை இழுத்து இந்தப் பக்கம் வாங்கன்னு சொல்றப்போ அப்படியே தலைநோக்கிப் பார்த்தவாறே வெளியேறலாமாம்.//
இதிலேயே தெரியலையா அந்த சாஸ்திரம் எதுக்குனு..
//முரளிகண்ணன் said...
தலைவரே அடுத்து எங்க ஊர்ல மீனாட்சி அம்மன் கோயில்னு ஒன்னு இருக்கு. வந்து அத பத்தியும் ஒரு கட்டுரை சுவராசியமா எழுதிக் கொடுங்க.
//
நாங்களும் அங்கன தான்.. எழுதுங்க..
பரிசல்..மிக அருமையான சொல்லாடல்கள்.. நிறைய சொல்ல வேண்டும்.. என்றாலும் ஒரே வார்த்தையில்..அருமை..
பரிசல்காரரே,
அருமை. அருமை.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூராயிரம்.. ஆண்டு முயற்சி செய்தாலும் அனைவராலும் இது போல சுவாரசியமாக எழுத முடியாது.
அருமையான பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்
இதான்யா உன்னோட பலம்.
போரடிக்கிற புராணக் கதையைக் கூட தோள்ல கைபோட்டு குழந்தைக்கு சொல்ற மாதிரி, சும்மா கலோக்கியல கலந்து கட்டி சொல்லுறே பாரு அது.
அடுத்த பார்ட்டு இருக்கா சாமி?
ரங்கனாதனை தரிசித்த உன்னைத் தரிசிக்க இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கு.
//அதாவது திருப்பதிக்கு வர்றேன்னு நீங்க வேண்டிகிட்டா, அங்க போக முடியலீன்னாலும், குணசீலம் போனா உங்க வேண்டுதல் நிறைவேறினமாதிரிதானாம். ஆனா அதே சமயம் குணசீலம் வர்றேன்னு வேண்டிகிட்டு, திருப்பதி போனா அக்சப்டட் கிடையாதாம்.//
பரிசல்!
இந்த மாதிரி ஊருக்கு ஒரு கோயில் இருக்குன்னு நினைக்கறேன்! மொண்டிப்பாளையம் நிச்சயம் நீங்க கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கறேன்! பதிவு உபயோகமா இருந்துச்சு!
வார்ப்புருல்ல ஏதோ பிரச்சனைன்னு நினைக்கறேன். ஒரு இடுகையோட நிரந்தர சுட்டியை சொடுக்கினா அதில மறுமொழியாளர்களோட பேரையேக் காணோம்! ஏதாச்சும் பார்த்துப் பண்ணுங்க பாஸூ!
கே கே எப்படி இருக்கீங்க?
அருமையான பதிவு பரிசல்..
ஹி..ஹி.. நான் கூட நீங்க கோவில்ல இருக்குறப்ப கூப்பிட்டதை சொல்லாததுக்கு நன்றி.. :)))
@ முரளிகண்ணன்
பண்ணீட்டாப் போச்சு...!
@ மு.க
அவன் திருவிளையாடல்கள் தொடரும்.
@ அனுஜன்யா
//இன்னிக்கு திருப்பூர் பக்கம் கும்பிட்டாலே புண்ணியம்னு நினைக்கிறேன். //
ண்ணா.. பாவம்ணா நான்.. ஏன் இப்படி?
நன்றி Ramesh, Raju, வடுவூர் குமார்
@ கார்க்கி & நர்சிம்
:-)
@ ஸ்வாமி ஓம்கார்
நன்றி ஸ்வாமிஜி!!
@ வேலன்
//போரடிக்கிற புராணக் கதையைக் கூட தோள்ல கைபோட்டு குழந்தைக்கு சொல்ற மாதிரி, //
குழந்தைக்கு சொன்னதுதாண்ணா இது...!!!
@ வெங்கி
சரி பண்ணணும்!!
@ கிரி
நல்லாயிருக்கேன் நண்பா!
@ வெண்பூ
போட்டுக் குடுத்துடீங்களே பார்ட்னர்!!
‘யெஸ்... டெல் மீ ஆண்டாள்..’ ம்பாரோன்னு நெனைச்சேன். Kalkeerga Parisal. This comment is as good as ” என்கிட்ட ஃபோன் இருக்கே”
Chancee Illa -
Massattra Kodi
********* அதாவது திருப்பதிக்கு வர்றேன்னு நீங்க வேண்டிகிட்டா, அங்க போக முடியலீன்னாலும், குணசீலம் போனா உங்க வேண்டுதல் நிறைவேறினமாதிரிதானாம். ஆனா அதே சமயம் குணசீலம் வர்றேன்னு வேண்டிகிட்டு, திருப்பதி போனா அக்சப்டட் கிடையாதாம்.
**************
ஒருகாலத்துல கீழ்ப்பாக்கம் போக வேண்டியவங்க எல்லாரையும் குணசீலம் அனுப்பிக்கிட்டு இருந்தாங்க !
பிரமாதமா எழுதி இருக்கீங்க பரிசல். அடுத்தமுறை சீரங்கம் வந்தா முன்னாடி சொல்லுங்க. அழைச்சிகிட்டு போய் காட்டறேன் இல்லாட்டி நண்பர்கள் கிட்ட சொல்றேன் ! ராமானுஜர் சந்நதி அப்புறம் சிங்க பெருமாள் கோவில் (அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்துல முதல்முதலா கிளாஸ் ஆரம்பிச்ச எடமும் கூட) ரெண்டும் மிஸ் பண்ணிட்டீங்க போல.
பயணக்கட்டுரை அற்புதம்.
நல்லா எழுதித் த்ள்ளீட்டீங்க!
கோவில் கட்டிண்து நாகப் பட்டிந்த்துப் புத்த விஹாரத்துத் தங்கத்தைத் திருடியாக்கும்.
அங்கே சிங்கப் பெருமாள் கோவில்லே எல்லாரும் அர்ச்சகர் ஆகலாம்னு எல்லா பசங்களும் மந்திரம்,ஸ்லோகம்,திருக்குறள்,
திருவாசகம்னு எல்லாம் போட்டு நிமித்துறாங்காளாச்சும்.
சாமி தூங்கின்னே இன்னா செய்றாரு பாத்தீங்களா?
அண்ணே..
பெரியார் ஏதோ சொல்கிறார் அதையும் தான் கேட்டு வைப்போமே...
அவர் யாரென்றே தெரியவில்லை என்றால்...மறுபடியும் பேசுவம்
சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள் :
நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால் , அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே அதாவது 'நாமத்தையே' சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டுபோய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான்- ஓடக்காரன் துணையோடு. அவர்களை ஆற்றுவெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் 'பார்வானத்துறை' ( பார் வானம் - சுடுகாடு, பார்வணம் -சிரார்த்தம் செய்யும் இடம் ) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு அன்று கொல்லப் பட்டவர்க் கெல்லாம் 'முக்தியும்' அளிக்கப்பட்டதாம் ('திருமங்கை ஆழ்வார் வைபவம்' என்ற நூல் ஆதாரப்படி)
சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின் போது திறக்கப்படுகின்றதே 'சொர்க்கவாசல்' -அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?
இந்த புனைவு கதையை எழுதிய எழுத்தாளர் பெயர் தெரிந்ததா?
இந்த காலத்துக்கு ஏற்ற மொழி நடையில் கலக்கலாக எழுதியுள்ளீர்கள்.
superb.
Alanganallur-Tamilan,
உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அறிவு.
நீங்களே புத்தகம் வெளியிடுகிறீர்களோ?
நல்லா எழுதியிருக்கீங்க. போன பாகமும் சூப்பர் ("கம்பன் வீட்டுத் தறியும் எச்சரிக்கை1,2ன்னு போர்டு வைக்கிறது").
//‘ஷோக்காகீதே.. இது என்னாண்ட இருந்தா டெய்லி பூஜை பண்ணி கும்பிடலாமே’ன்னு மனசுல நினைச்சு// பேட்டைய தாண்டினு போய்கிற ஆட்டோவ வலிய கூப்பிட்றீங்க நைனா. அரசாங்கங்கள் (அன்றும்!) இப்படித்தான் உருவாக்கப் படுகின்றனன்னு சொல்றீங்களா?
//இலங்கைக்கு ரிட்டர்ன் போறப்போ காவிரிக்கரைல அதை வெச்சுட்டு ரெஸ்ட் எடுத்தாராம்//
//புராணக் கதைல பிடிச்சதே இதுதான். எல்லாத்துக்கும் ஒரு லிங்க் இருக்குது// அப்படின்னுட்டு, (மலைக்கோட்டை) பிள்ளையார் தலையில விபீஷணன் குட்டி குழியாச்சே, அந்த கதையை சொல்லலையே? தண்டனை: 'ராக்ஃபோர்ட்' கதை (போய்வந்து) அடுத்து எழுதவும். ஒரு முறை எழுதினால் போதும்.
//
விபீஷணா.. டோண்ட் வொர்ரி. நான் இங்கதான் இருக்கணும்கறது நியதி. அது ஏன்னு அடுத்த பாரால பரிசல்காரன் எழுதியிருக்கான் படிச்சுக்கோ. .................
// :D
Conversation எல்லாம் சூப்பரா இருந்தது... :)
//டோண்ட் வொர்ரி. நான் இங்கதான் இருக்கணும்கறது நியதி. அது ஏன்னு அடுத்த பாரால பரிசல்காரன் எழுதியிருக்கான் படிச்சுக்கோ.//
கோயமுத்தூர் குசும்பு........?
மொத்தத்துல சூப்பரப்பு
தல.. நல்லா எழுதறிங்க.. எனக்கும் கோயம்த்தூரு தான்.. சூலூர்.. பெருமையா இருக்கு.. கலக்கல் தொடரட்டும்..
அப்றம்.. இஷ்வாகு இல்ல.. இக்ஷ்வாகு.. மாத்திடுங்களேன்.. ஏன்னா.. இக்ஷ்வாகு வம்சோத்பவாய;னு தான் ராமர சொல்லுவாங்க..
தல.. நல்லா எழுதறிங்க.. எனக்கும் கோயம்த்தூரு தான்.. சூலூர்.. பெருமையா இருக்கு.. கலக்கல் தொடரட்டும்..
அப்றம்.. இஷ்வாகு இல்ல.. இக்ஷ்வாகு.. மாத்திடுங்களேன்.. ஏன்னா.. இக்ஷ்வாகு வம்சோத்பவாய;னு தான் ராமர சொல்லுவாங்க..
நல்ல சுவையான பயணம் என்று தெரிகிறது. அருமை.
தலபுராணங்கள் சொல்வதற்கும் உண்மைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதை அங்கிருப்பவர்கள் தெரிந்திருந்தாலும் சொல்வதில்லை.
அரங்கத்தில் இருக்கும் கரியவனின் திருமேனி கற்சிலை அல்ல. சுதைக்கட்டு. அதாவது சுண்ணாம்புச்சிலை. சுண்ணாம்புச்சிலைகளுக்கு நீராட்டு கூடச் செய்யப்படுவதில்லை. சமயபுரத்திலும் சுதைச்கட்டுதான்.
இது போன்ற சுதைக்கட்டுகளை இடம் விட்டு இடம் கொண்டு செல்ல முடியாது. அதே போல மாற்றிக் கட்டிக் கொள்ளலாம். முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. சுதைக்கட்டு சிதையச் சிதைய புதுக்கட்டு செய்வார்கள். ஆனால் இந்தக் காலத்தில் அப்படிச் செய்தால் முன்னம் சொன்ன கதைகளைச் சொல்ல முடியாது என்பதும் உண்மை.
அதே போல வால்மிகி இராமாயணத்திலோ உத்தரராமாயணத்திலோ வீடணன் விடைபெற்றுக் கொள்ளும் போது திருவுருவத்தைப் பரிசாகக் கேட்கவும் இல்லை. கம்பராமாயணத்திலும் அவ்வாறே.
ஆனால் நம்பிக்கைகள் நம்பிக்கைகள் என்ற பெயரில் நம்பிக்கைக்களாக இருக்கின்றன. :) இந்தக் கோயிலில் மட்டுமல்ல பெரும்பாலான கோயில்களில் அப்படித்தான்.
நாங்கள் சென்ற ஆண்டு சென்ற போது சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.500ஆக இருந்தது. இப்போது எவ்வளவு?
Post a Comment