Saturday, January 31, 2009

நாகேஷுக்கு இதயாஞ்சலி :-(


அவர் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர். வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு நடிக்கப் போக முடிவெடுக்கிறார்.

“நீ கைகாட்டினா ரயிலே நிக்கிதுய்யா. அத விட்டுட்டு சினிமாக்கு நடிக்கப் போறியா?” எனக் கேட்கிறார் மேலதிகாரி.

“இப்போ நான் கைகாட்டினாத்தான் நிக்கிது. நான் பெரிய ஆளா வந்து எனக்காக ட்ரெய்னை நிக்க வைப்பேன்” என்கிறார் அவர். அப்படியே நடக்கவும் செய்தது பின்னாளில்.

அவர் நாகேஷ்!

************************************

‘என்ன சார் மிகக் குறைஞ்ச டைம் ஆயுளிருக்கற நீர்க்குமிழிய டைட்டிலா வெச்சிருக்கீங்க?” என்று பாலச்சந்தரிடம் நாகேஷ் கேட்டபோது “ஆனா சினிமால நீ ரொம்ப வருஷம் இருப்பய்யா” என்றாராம். இருந்துகாட்டினார் இவர்!

என்ன எழுதவென்றே தோன்றவில்லை.

எப்பேர்ப்பட்ட நடிகன்! பேச்சில்லாமல் நடித்து பேர் வாங்கலாம். பேச்சுமூச்சில்லாமல் நடித்து மகளிர் மட்டுமில் பேர் வாங்கிய மனுஷனல்லவா இவர்!

கமலஹாசனின் வலதுகரம் போன்றவர். அவருக்கு இது பேரிழப்பு.

நீர்க்குமிழி

எதிர்நீச்சல்

சர்வர் சுந்தரம்

அனுபவி ராஜா அனுபவி

தில்லானா மோகனாம்பாள்

திருவிளையாடல்

அபூர்வ சகோதரர்கள்

மகளிர்மட்டும்

அவ்வை சண்முகி

தசாவதாரம்

ப்ச்!

19 comments:

Cable சங்கர் said...

அவர் வாழும் காலத்தில் வழக்கம் போல நமது அரசும், அவரை மதித்து விருதளிக்க தவறிவிட்டது.. பரிசல்..

ராமலக்ஷ்மி said...

மாபெரும் கலைஞன். காலத்தை வென்று நிற்கும் அவரது படங்கள்!

anujanya said...

மிக வருத்தமான தருணம். நீங்கள் கூறிய படங்களுடன் அவர் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த மேலும் சில படங்கள் - பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், பட்டணத்தில் பூதம் etc.

அனுஜன்யா

இராகவன் நைஜிரியா said...

அன்னாரின் மறைவிற்கு என் அஞ்சலிகள்.

தமிழ் திரை உலகின் ஒரு நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது.

Nilofer Anbarasu said...

May his soul rest in peace :(

Anonymous said...

பரிசல்,

காதலிக்க நேரமில்லை படத்த மறந்துட்டீங்களே.

வருத்தமா இருக்குங்க. தகுதியுள்ள கலைஞனுக்கு விருதுகள் எதுவும் கொடுத்து மரியாதை செய்ய மறந்துவிட்டோம்.

சிம்பா said...

காலத்தை வென்று நிற்கும் மாபெரும் கலைஞன்.

அவர் மறைவிற்கு என் அஞ்சலிகள்.

Thamira said...

என் பிரியமான கலைஞனுக்கு இதய அஞ்சலி.!

கணினி தேசம் said...

ஆ..அப்படியா? எப்போ?

உங்கள் பதிவின் மூலம்தான் தகவலறிந்தேன். மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.


நிஜமாவே தமிழ்த் திரை உலகிற்கு பேரிழப்புதான். நிகரற்ற நடிகர். நல்ல மனிதர்.
அவருக்கு எனது அஞ்சலி.

selventhiran said...

இட்டு நிரப்பிவிட முடியாத வெற்றிடம் :(

சகாதேவன் said...

"சபாஷ் சரியான போட்டி" போல மறக்க முடியாத இரண்டு வார்த்தைகள் -
'ஐயாம் செல்லப்பா'
'எனக்கில்லே, எனக்கில்லே'
'மாது வந்திருக்கேன்'
சகாதேவன்

Gajen said...

உங்கள் தலைப்பை கண்டவுடன் ஏதோ விபரீதம் நடந்துவிட்டதாக உணர்ந்தேன்..ஐயோ...எவ்வளவு பெரிய இழப்பு..அவருடைய ஆரம்ப கால படங்களை பார்க்காவிட்டாலும் தாயாரின் வற்புறுத்தலின் பேரில் நிறைய பார்க்கும் வாய்ப்பு கிட்டியது..'நம்மவர்' இல் மகள் தற்கொலை பண்ணி கொண்ட பின்னும் அவளுடைய இறுதி கிரியைக்கு பின்னும் அவர் காட்டிய reactions இருக்கே..அப்பப்பா...அந்த இரு காட்சிகளிலும் நிச்சயம் கமலை பின் தள்ளி விட்டார்.அந்த மகா கலைஞரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்!

செல்வம் said...

பரிசல்...உங்கள் பதிவைப் பார்க்காமல்தான் நானும் பதிவு போட்டேன். எனக்கும் ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை. மகாகலைஞன் அவர்.

vijisvr said...

It is a sad day for us all...A star has vanished from earth and gone to the heaven leaving us all with only his evergreen memories. I enjoyed his silent acting from 'Magalir mattum', it was so enjoyable! Thiruvilaiyaadal dharumi is a classic and how many ever times one sees it brings out hearty laughter! I pray god for shri.Nagesh's soul to rest in peace and give strength and support to his family to bear his irreplacable loss.

மற்றும் ஒரு காதலன் said...

Please visit "http://valibarsangam.wordpress.com/" & read post on Nagesh.

put your comments too.

உயிரோடை said...

//பேச்சுமூச்சில்லாமல் நடித்து மகளிர் மட்டுமில் பேர் வாங்கிய மனுஷனல்லவா இவர்//

குழுமத்தில் உங்கள் மடல் கண்டதும் முதலில் நினைத்தது மகளிர் மட்டுமில் நகேஷின் நடப்பை தான்.

எப்பேர்பட்ட நடிகர் அவர்.

அசோசியேட் said...

எப்படிப்பட்ட அருமை யான நடிகர் ! காலம் உள்ளவரையில் தமிழுலகம் அவர் பெயரை மறக்காது. மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சிறந்த நகைச்சுவை அல்லவா அவருடையது.!!!!

VASAGAN said...

நாகேஷ் ஒரு சகாப்தம். காதலிக்க நேரமில்லை படத்தில் அவர் நடித்த அந்த நகைச்சுவை காட்சி சொல்லும் அவரின் நடிப்பின் திறமையை. நாகேஷ்க்கு நிகர் நாகேஷ்தான்.

VASAGAN said...

நாகேஷ் ஒரு சகாப்தம். காதலிக்க நேரமில்லை படத்தில் அவர் நடித்த அந்த நகைச்சுவை காட்சி சொல்லும் அவரின் நடிப்பின் திறமையை. நாகேஷ்க்கு நிகர் நாகேஷ்தான்.