Tuesday, January 13, 2009

வில்லு - விமர்சனம்
விஜய் பிரபுதேவா காம்பினேஷன். போக்கிரியின் ஹேங் ஓவர் இன்னும் போகவில்லை. கிட்டத்தட்ட அதே முகங்கள்.

ராணுவத்தில் மேஜரான தனது அப்பா விஜய்யை கொன்று தேசத்துரோகி பட்டம் கட்டிய பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட வில்லன் க்ரூப்பை மகன் விஜய் பழிவாங்கும் அக்மார்க் தெலுங்குக் கதை.

விஜய் தனது ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுகிறார். ப்ரூஸ்லியா, ஜெட்லியா என்று கேட்கும்போது ‘கில்லிடா’ என்று எகிறி அடிப்பது, வடிவேலுவிடம் லிஃப்ட் கேட்டு அவருக்கு ஆப்பு வைப்பது, நயன்தாராவை ஜொள்ளுவது, தன் அம்மாவைப் பார்த்து உருகுவது, பிரகாஷ்ராஜிடம் சரிக்கு சரி நிற்பது என்று தனக்கிட்ட பணியை தட்டாமல் செய்திருக்கிறார்.

ஆனால் அந்த மேஜர் விஜய்? சாரிங்ணா.. மைனராத்தான் இருக்கீங்க. மேஜர்லாம் உங்களுக்கு சரிவரலண்ணா...

தான் அமைக்கும் டான்ஸ் ஸ்டெப்களில் எம்.ஜி.ஆரின் ஸ்டைலை அடிக்கடி காட்டும் பிரபுதேவா இதில் டைட்டில் சாங்கில் ஆரம்பித்து பல இடங்களில் தானொரு எம்.ஜி.ஆர்.ரசிகன் என்று பறைசாற்றியிருக்கிறார். (எம்.ஜி.ஆரைக் காட்டியதெல்லாம் பிரபுதேவா தானாகச் செய்ததா அல்லது எஸ்.ஏ.சியின் தூண்டுதலா என்பது டைட்டிலுக்கு முன் 'உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்' என்று நற்பணிமன்றக் கொடியைக் காட்டுவதால் சந்தேகம் வருகிறது.)

இடைவேளை வரை.. ஏன் அந்த ஃப்ளாஷ்பேக் முன்பு வரை நல்ல வேகம்தான். ஆனால் ஃப்ளாஷ்பேக்குக்கு அப்புறம் ஜல்லியடிக்க ஆரம்பிக்கிறது. குருவியில் மண்ணுக்குள் போன ஹீரோ ஆற்றுக்குள் இருந்து வருவது போல, இதில் புதையுண்ட பிறகு புயல் வந்து மண்ணை விலக்கி.. போதும்டா சாமி. ஏம்ப்பா.. இதையெல்லாம் விஜய் ரசிகர்களே ரசிக்க மாட்டாங்களேன்னு யூனிட்ல யாருமே யோசிக்கமாட்டீங்களா? கொஞ்சம் ரூம் போட்டு யோசிச்சுப் பண்ணியிருந்தா கில்லியாகக் கூடிய கதையை எப்படிக் கொண்டு போக என்று தெரியாமல் சொதப்பிவிட்டார்கள். இடைவேளையின்போது நல்லாத்தானே இருக்கு என்று தோன்றிய படம் க்ளைமாக்ஸின் ஜவ்வால் ‘ஆளை விட்டாப் போதும்’ என்று சொல்ல வைக்கிறது.

நயன்தாரா-ளம். அவ்வப்போது சோர்ந்துவிடும் ரசிகர்களை உயிர்ப்போடு வைக்கிறார் நயன்தாரா. முகபாவனைகள், உடைக் குறைப்பு என்று இளைஞர்களைத் தாறுமாறாகப் பந்தாடுகிறார். போதாத குறைக்கு சரக்கடித்து விஜயுடன் மல்லுக்கு நிற்கிறார்.

வடிவேலுவின் கால்ஷீட் கிடைத்த அளவுக்கு சீன்கள் அமைக்க டைரக்டர் திணறியிருப்பது அந்த மாட்டு ஃபைட்டிலேயே தெரிகிறது. இடைவேளைக்கு முன் ஓரளவுக்கு இருந்தவரை இடைவேளைக்குப் பின் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

படத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் இசை. பாடல்களில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் வழக்கமான தெலுங்குவாடை இருப்பினும் துள்ளலாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இடைவேளைக்குப் பின் வரும் பல காட்சிகளில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பில்லாவை நினைவுபடுத்துகின்றன.

பீமன்கிட்ட கதையக் கேட்ட விஜய், பிரபுதேவாகிட்ட கதையையும் கேட்டு கொஞ்சம் மாத்தச் சொல்லியிருக்கலாம்.

எனக்கென்னவோ படம் திருப்தியா என்றால் 50-50தான். ஆனால் ஓடிவிடும் என்றுதான் தோன்றுகிறது. குருவியால் இதற்கு நல்லபேர். அவ்வளவுதான் சொல்லமுடியும். (என்ன இருந்தாலும் அந்த அளவுக்கு போரடிக்கல என்று ரசிகர்கள் பேசிச் செல்வதைக் கேட்க முடிந்தது.)

வில்லு - குறி தவறிவிட்டது.

25 comments:

Cable சங்கர் said...

படம் ரொம்ப சொதப்பல் என்று ரிப்போர்ட் தலைவரே.. பொங்கல் வாழ்த்துக்கள்.பரிசல்

Mahesh said...

ப்ரபுதேவா - விஜய் கூட்டணின்னு தெரிஞ்சதுமே நினைச்சேன்.. போக்கிரி வெற்றில சூட்டோட சூடா குளிர் காயறாங்கன்னு... ரொம்பவே சொதப்பல் போல... அதுவும் விஜயயெல்லாம் மேஜர் ட்ரெஸ்ல கற்பனை பண்ணிக்கூட பாக்க முடியல... ஏற்கெனவே கலெக்டர், IPSனு களேபரம் பண்ணதே ஜீரணம் ஆகல.

SPIDEY said...

//பீமன்கிட்ட கதையக் கேட்ட விஜய், பிரபுதேவாகிட்ட கதையையும் கேட்டு கொஞ்சம் மாத்தச் சொல்லியிருக்கலாம்.//
hah ha ha

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அது அப்படித்தான்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஏற்கெனவே கலெக்டர், IPSனு களேபரம் பண்ணதே ஜீரணம் ஆகல.//

விஜய் ஹீரோ ஆனபோதும் இதே மாதிரிதான் சொன்னார்கள்.

அதையெல்லாம் பொருட்படுத்தியிருந்தால் விஜய் இவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ ஆகியிருப்பாரா என்ன?

Ganesan said...

பரிசல்,


வில்லு விஜய் என்ற பழைய கதானாயகர்கள் கதையை விட்டு, என்றும் மார்கண்டேயன், வீர தளபதி, அகிலாண்ட நாயகன் JKR பற்றிய பதிவு பாருங்கள்.

http://kaveriganesh.blogspot.com/

வெண்பூ said...

மொத நாளே பாத்தாச்சா.. கலக்குங்க..

☼ வெயிலான் said...

படம் பார்த்துட்டு எழுதுன விமர்சனமா? இல்லை சுவரொட்டி பார்த்துட்டு எழுதுனதானு கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லாருக்கும் ;)

M.G.ரவிக்குமார்™..., said...

அந்த பாரதியார் GETUP - ஐ விடவா மேஜர் GETUP?
அவரே சொன்ன மாதிரி எவ்வளவோ பண்றாரு இதை பண்ண மாட்டாரா?

ஷாஜி said...

//எம்.ஜி.ஆரைக் காட்டியதெல்லாம் பிரபுதேவா தானாகச் செய்ததா அல்லது எஸ்.ஏ.சியின் தூண்டுதலா//

--அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

---SAC - இல்லாட்டி குருவி 175 days, சச்சின் 150 days, ஆதி 100+ days ஓட்ட முடியுமா?

ஷாஜி said...

//இதையெல்லாம் விஜய் ரசிகர்களே ரசிக்க மாட்டாங்களேன்னு யூனிட்ல யாருமே யோசிக்கமாட்டீங்களா?//

-மொதல்ல விசய் யோசிச்சாரா?

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைக்க
http://www.focuslanka.com

Nilofer Anbarasu said...

//ஆனால் ஓடிவிடும் என்றுதான் தோன்றுகிறது.//
குருவியவே (175 நாள்) ஓட்டுனவணுங்க இத ஓட்டமாட்டானுங்களா?

pudugaithendral said...

இந்தப்பதிவை கார்க்கி இன்னும் படிக்கலியாடி இருக்கு.

நான் ஏதாவது சொன்னா தம்பி மனசு வருத்தப்படும் :) நல்ல நாளும் அதுவுமா என்னத்துக்கு மனசு வருத்தம்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் பரிசல்

ரமேஷ் வைத்யா said...

டாக்டருக்கு எதிராக அவதூறு பரப்பிய பரிசலாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இப்படிக்கு
கார்க்கிதாஸன்

வால்பையன் said...

இதுக்கெல்லாம் நேரம் இருக்கா?

Anonymous said...

//அதுவும் விஜயயெல்லாம் மேஜர் ட்ரெஸ்ல கற்பனை பண்ணிக்கூட பாக்க முடியல... ஏற்கெனவே கலெக்டர், IPSனு களேபரம் பண்ணதே ஜீரணம் ஆகல.//க்கிகிகிகி

Truth said...

இந்த படத்த பாக்க நண்பர்கள் கூட்டம் அலை பாயுது. சொன்னா கேக்க மாட்டாய்ங்க. அனுவவிச்சாத் தான் தெரியுமாம்.

இந்த பட அனுபவமும் இப்படித் தான் இருக்க போகுது. http://memynotepad.blogspot.com/2009/01/new-year-eve.html

Kavi said...

நானும் நேத்து பார்த்திட்டேன். முன்பாதி சூப்பர் பின்பாதி சொதப்பல்!
விஜய் வர வர ரொம்ப இளமையாகிட்டே போகிறாரே என்ன ரகசியம்? நயன்தாராவும் அழகா இருக்கிறாங்க!

வடிவேலு நகைச்சுவை போக்கிரி அளவுக்கு இல்லை ஆனாலும் பரவாயில்லாம இருந்திச்சு!

ஒரு தடவை பார்க்கலாம்!

பரிசல்காரன் said...

// வெயிலான் said...

படம் பார்த்துட்டு எழுதுன விமர்சனமா? இல்லை சுவரொட்டி பார்த்துட்டு எழுதுனதானு கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லாருக்கும் ;)//

துண்டைப் போட்டுத் தாண்டவா முடியும்? விடி நைட் வேல ரமேஷு. ஒரு ரவுண்டு போய்ட்டு, மறுபடி சர்ப்ரைஸா நைட் ஃபேக்டரி ரவுண்ட்ஸ் போணுமே.. தூங்கினா எந்திரிக்க மாட்டோமேன்னு அப்படியே தியேட்டருக்குள்ள புகுந்துட்டோம்ல!

கார்க்கிபவா said...

சரியான விமர்சணம் சகா.இதத்தான் சொல்லிட்டு இருக்கேன். ஒரு ஆக்ஷன் படத்தில் இருக்க வேண்டியதை வச்சு விமர்சணம் செய்து படம் நல்லாயில்லைன்னு சொன்னா ஒத்துக்கறேன். ஆனா இது ஏதோ உலக சினிமா ரேஞ்சுக்கு நினைச்சு இது நொட்ட, ஓட்டைன்னு சொன்னா எப்படி?

//விஜய் தனது ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுகிறார். ப்ரூஸ்லியா, ஜெட்லியா என்று கேட்கும்போது ‘கில்லிடா’ என்று எகிறி அடிப்பது, வடிவேலுவிடம் லிஃப்ட் கேட்டு அவருக்கு ஆப்பு வைப்பது, நயன்தாராவை ஜொள்ளுவது, தன் அம்மாவைப் பார்த்து உருகுவது, பிரகாஷ்ராஜிடம் சரிக்கு சரி நிற்பது என்று தனக்கிட்ட பணியை தட்டாமல் செய்திருக்கிறார்.//

இப்படி நீங்க சொன்னா அவரு என்ன நல்ல நடிகர்ன்னா அர்த்தம்? அவரு வேலை என்னவோ அதை செய்றாருன்னுதானே அர்த்தம். அத புரியாம விமர்சணம் எழுதறவங்கள என்ன சொல்றது?

//ஆனால் அந்த மேஜர் விஜய்? சாரிங்ணா.. மைனராத்தான் இருக்கீங்க. மேஜர்லாம் உங்களுக்கு சரிவரலண்ணா...//

மிகச்சரி.. ஆனா 34 வயசுல மைனராத் தெரியறாரே,அது பெரிய விஷமில்லையா? விஜய் படத்த விஜய் படமா பார்த்து துவைச்சு காயப் போட்டதுக்காக நன்றி சகா..

//இடைவேளை வரை.. ஏன் அந்த ஃப்ளாஷ்பேக் முன்பு வரை நல்ல வேகம்தான்.//

என் கருத்தும் அதுதான்.. படம் ஓடிடுமில்ல?

பாசகி said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!!

Natty said...

பொங்கல் வாழ்த்துக்கள் பரிசல்...

குடுகுடுப்பை said...

என்னோட புரிதலையும் பாருங்க
குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.

butterfly Surya said...

அப்பா... முடியலை...

மேஜர் சரவணன்... என்ன கொடுமை சார் இது.... ?????

கடவுளே... எனக்கு இந்த 2009ல் நல்ல புத்தி கொடுப்பா..