Saturday, January 17, 2009

படிக்காதவன் – விமர்சனம்


விஜய்க்கு போக்கிரி ஹேங் ஓவர் போல தனுஷின் டீமுக்கு பொல்லாதவன் ஹேங் ஓவர்.

படிக்காத ஹீரோ, படித்த பெண்ணை காதலித்து அவரை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளும், இடைவரும் இடையூறுகளை வெல்வதும்தான்... ஹாஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... படிக்காதவன்.

படிக்காத தனுஷ், அவர்கள் வீட்டினரிடம் நல்லபேர் வாங்கிக் கொண்டு அப்பா பிரதாப்போத்தனிடம் திட்டு வாங்கும்போது ‘ஆஹா’ படம் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால் அந்தப் படம் போல் அப்பாவுக்கு அடங்கியிராமல் வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசுகிறார். ‘ஒண்ணு அவன் வீட்டில் இருக்கணும். இல்ல நான் இருக்கணும்’ என்று (எல்லா தனுஷ் பட அப்பாக்கள் போலவே) பிரதாப்போத்தன் சொல்லும்போது அம்மா மீராகிருஷ்ணனிடம் ‘அப்பாவைப் போகச் சொல்லும்மா’ என்பதிலிருந்து ஒவ்வொரு முறையும் அவரை டீஸ் செய்கிறார். படிக்காதவன் என்று திட்டுவதால் ரோஷம் வந்து டிகிரி வாங்க டுடோரியல் காலேஜ் போய், காலேஜை மூட வைக்கிறார்.

“நீ ஒரு பொண்ணைக் காதலிக்கற. அவ பேர் கீதான்னு வெச்சுக்க. அவள நீ கல்யாணம் பண்ணிகிட்டு அவ ஐ.ஏ.எஸ். படிச்சா கீதா ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ன்னு போடுவாங்க. அப்போ, நீ படிக்காமயே உம் பேருக்குப் பின்னாடி டிகிரி வருமில்ல?” என்று அசத்தலான ஐடியா தருகிறார்கள் நண்பர்கள். (சபாஷ்: வசனகர்த்தா சுராஜ்)

அதன்படி தமன்னாவைக் காதலித்து பல கஷ்டங்களுக்குப் பின் (அவருக்கல்ல.. நமக்கு!) கைபிடிக்கிறார்.

சிம்புபோல ஓவர் பந்தா விடாமல் ‘நான் சின்னப்பையன்ணா” என்று சொல்லிகொண்டே ஃபைட் செய்வதிலிருந்து பல விஷயங்களை தனுஷிடம் ரசிக்க முடிகிறது. பல இடங்களில் அவரது எக்ஸ்ப்ரஷனுக்கு கைதட்டல். டான்ஸிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

தமன்னா. கேடியிலும், வியாபாரியிலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்து விளம்பரங்கள் மூலம் ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளதை தியேட்டர் கரகோஷங்களில் உணரமுடிகிறது. ஸ்ட்ரெக்ச்சர் மெய்ன்டெய்னில் ஸ்ரேயாவை விட ஒரு பாய்ண்ட் முன்னே நிற்கிறார். ஒரு சில ஆங்கிளில் சிம்ரனை நினைவுபடுத்துகிறார். (முகத்தில் அல்ல. உடலில்) முயற்சித்தால் பெரிய ரவுண்ட் வரலாம்.

காஃபி ஷாபில் வில்லன்கள் தனுஷை அடிப்பதுபோல காட்டி, அது தமன்னாவின் ஆட்கள் என்று தனுஷ் நினைப்பது போல ஒரு ஸ்க்ரீன்ப்ளே பண்ணியிருக்கலாமே, அதைவிடுத்து அவரே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகும் அரதப்பழசான ஐடியாவை ஏன் எடுத்தார்கள் என்று சலித்துக் கொண்டிருக்கும் நமக்கு இடைவேளையின் ட்விஸ்ட் உண்மையிலேயே சூப்பர். ஆனால் இடைவேளைக்குப் பின் படத்தை ஆந்திராவுக்குக் கொண்டுபோய், நமக்கு ஆத்திரத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள். இடைவேளைக்குப் பின்தான் விவேக் என்ட்ரியே என்பதால் படம் தொய்வில்லாமல் போகும் என்று நினைத்தால் அதிலும் மண். தன் பாணியில் அட்வைஸ் சொல்வதா, வடிவேலு பாணியில் அடிவாங்கிச் செல்வதா என்று விவேக் தடுமாறிக் கொண்டிருக்கிறார். செல் முருகா.... ப்ளீஸ்... காப்பாத்து!

பொங்கல் ரிலீஸ் படங்கள் எல்லாமே இடைவேளை வரை ஓடினால் போதும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எடுக்கப்பட்டதா?

யப்பா.... டைரக்டர்களா.. ஒரு வில்லன் போதும்ப்பா.. வர வர எல்லாருமே ரெண்டு மூணு வில்லன்களைக் காமிச்சு, ஹீரோவை டார்ச்சர் பண்றதுக்கு பதிலா எங்களை டார்ச்சர் பண்றீங்கப்பா.. அதுவும் எல்லாருக்குமே திடீர்னு தெலுங்குப் பாசம்வேற.. முடியல!

சுமனுக்கும், சாயாஜி ஷிண்டேவுக்குமான சண்டை எதற்கு என்பது ‘நீ என் பையனைக் கொன்னுட்ட’ என்று ஒரு வரியில் சொல்லப்பட்டதால் ரசிகர்களிடம் அதற்கான பதற்றம் இல்லை. எப்போதும் அவர்கள் ஆட்கள் பார்த்துக் கொண்டாலும் ரமானந்த் சாகரின் ராமாயண சீன் போல எதிரெதிராக மோதிக் கொள்ளும் (மோதிக் கொல்லும்) அளவுக்கான பகையை ஒன்றிரண்டு சீன்கள் மூலம் ரசிகர்கள் மனதில் கொண்டுசெல்லத் தவறிவிட்டார் டைரக்டர். அதேபோல சுமனை நல்லவன் என்று காட்ட டைரக்டர் முயற்சிப்பது ஏனென்று புரியவில்லை. படம் முடிந்த மாதிரி இருக்கும்போது, அடுல் குல்கர்ணியைக் கொண்டுவந்து தனுஷையும், படம் பார்க்கும் நம்மையும் அநியாயத்துக்கு சோதிக்கிறார்.

வழக்கமான தனுஷ் படம்போலவே, அவருடன் ஒத்தைக்கு ஒத்தை சண்டையிட்டு ஜெயித்து... படம் முடிஞ்சுடுச்சா என்று நாம் நினைக்க நினைக்க படம் முடிந்துவிடுகிறது.

படிக்காதாவன் – இடைவேளைக்குப் பின் பிடிக்காதவன்.

18 comments:

வெண்பூ said...

இதென்ன இந்த நேரத்துக்கு.. ஊர் சுத்திட்டு வந்தது டயர்டா இல்லையா?

ILA (a) இளா said...

adappaavigala, pongalla onnu kooda theratha?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இப்ப ஜேம்ஸ்பாண்ட் படம் வந்த மாதிரி ஒரெ படம் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கும்.

தணுஷ் படம், விஜய் படம், அவ்ளோதான், பேர் முக்கியமே கிடையாது.
இதில் சிம்பு தனி ஸ்பெஷல்


பேசாம புதிய பறவை ரீ ரிலீஸ் பண்ணியிருக்கலாம். கோப்ப்பால்.. வசனத்துக்காவே பார்த்துக் கொண்டிருக்கலாம்.

முரளிகண்ணன் said...

\\(முகத்தில் அல்ல. உடலில்) முயற்சித்தால் பெரிய ரவுண்ட் வரலாம்.
\\

\\செல் முருகா.... ப்ளீஸ்... காப்பாத்து!
\\

பட வசனங்களை விட உங்க பஞ்ச் நல்லாயிருக்கு

வால்பையன் said...

இதுக்கு நிறைய பேர் இருக்காங்க!
உருப்படியா எதாவது பதிவு போடுங்க!

கணினி தேசம் said...

ஸ்ட்ரெக்ச்சர் மெய்ன்டெய்னில் ஸ்ரேயாவை விட ஒரு பாய்ண்ட் முன்னே நிற்கிறார். ஒரு சில ஆங்கிளில் சிம்ரனை நினைவுபடுத்துகிறார்.

பக்கத்துல தங்கமணி இல்லையோ..ரொம்ப உன்னிப்பா ரசிச்சிருக்கீங்கபோல ?

படிக்காதாவன் – இடைவேளைக்குப் பின் பிடிக்காதவன்.

உஸ்.அப்பப்ப்பா...எப்பதான் இவிக திருந்துவாங்களோ.!!

கணினி தேசம் said...

வால்பையன் said...

இதுக்கு நிறைய பேர் இருக்காங்க!
உருப்படியா எதாவது பதிவு போடுங்க!
//
அட.ஆமா..., ஆணி அதிகம்னு சொன்னீங்க.. இது மாதிரி படங்களுக்காக எழுதி உங்க நேரத்தை செலவழிக்க வேண்டாமே.

நன்றி.

narsim said...

//ஸ்ட்ரெக்ச்சர் மெய்ன்டெய்னில் ஸ்ரேயாவை விட ஒரு பாய்ண்ட் முன்னே நிற்கிறார்//

ம்ம்.. நல்ல பாய்ண்ட்

narsim said...

// வெண்பூ said...
இதென்ன இந்த நேரத்துக்கு.. ஊர் சுத்திட்டு வந்தது டயர்டா இல்லையா?
//

.. எந்த நேரத்துல கமெண்ட்.. வெண்பூ வாழ்க!!

கார்க்கிபவா said...

// வால்பையன் said...
இதுக்கு நிறைய பேர் இருக்காங்க!
உருப்படியா எதாவது பதிவு போடுங்க//

இதுல எனி உள்குத்து?

பரிசல்காரன் said...

@ வால்பையன்

நண்பா... விமர்சனம் எழுதறது ஒரு கலை. அதுல ட்ரெய்னிங் எடுத்துட்டிருக்கேன்ப்பா.. கோச்சுக்கக் கூடாது.. ஹி..ஹி..

Kumky said...

இவரு ரொம்ப நல்லவருப்பா...பல பேர் சொல்றத கேட்ருக்கேன்..இது செல்பேசிட மட்டுந்தான் பொருந்தும்னு நெனச்சேன்.
ஆனா எங்கள காப்பாத்த நீங்க எம்மாம் சிரமப்படுறீங்கன்னு நெனக்கறப்ப...கண்ணு கலங்குது பரிசல்.

Kumky said...

சக்தி மசாலா பழைய விளம்பரங்களை பார்த்திருப்பவர்கள் அவ்வளவு எளிதாக தம்ம்மன்னாவை மறந்திருக்க முடியாது.

Sanjai Gandhi said...

ரைட்டு.. பார்த்த மாதிரி தான்.. :)

.. மதியம் மெஸ்ல பசங்க கடைசி அரை மணி நேரம் தவிர எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னாங்களே..

ஏன் தமிழ் சினிமா இப்படி வறண்டு கெடக்கு? :(

Kumky said...

SanJaiGan:-Dhi said...
ரைட்டு.. பார்த்த மாதிரி தான்.. :)

ஏன் தமிழ் சினிமா இப்படி வறண்டு கெடக்கு? :(
நம்மல்லாம் டைரக்ஸனுக்கு போகாததால்தான் தோஸ்த்...

Mahesh said...

//நண்பா... விமர்சனம் எழுதறது ஒரு கலை. அதுல ட்ரெய்னிங் எடுத்துட்டிருக்கேன்ப்பா.. கோச்சுக்கக் கூடாது.. ஹி..ஹி..//

போனாப் போகுதுன்னு விடறேன்... வில்லு, இதுக்கெல்லாம் விமர்சனம் தேவையா? ஒரெ லைன் போதும். வில்லு - விஜய் படம், படிக்காதவன் - தனுஷ் படம். அவளோதான்... எல்லாருக்கும் புரிஞ்சுரும் :))))

Anonymous said...

தன்மத்ராவுக்கு விமர்சனம் எழுதுறேன்னு சொன்ன ஞாபகம்.

படிக்காதவனுக்கெல்லாம் உங்க விமர்சனமே பெரிய விருது.

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..