Monday, January 19, 2009

அவியல் – ஜனவரி 19 ‘2009

பொங்கல் விடுமுறையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மீட் பண்ணிவிட்டு வரலாம் என்று திடீர் முடிவாகி, போய்விட்டு வந்தோம். நல்ல கூட்டம். நல்ல தரிசனம். அங்கிருந்து சமயபுரம் மாரியம்மனையும் தரிசித்து வந்தோம். கோயிலைப்பற்றியும் பயண அனுபவம் பற்றியும் இரண்டொரு நாளில் எழுதுகிறேன். இப்போதைக்கு, இரண்டே இரண்டு சம்பவங்கள்..

கோயிலின் க்யூவில் நிற்கும்போது மூன்று அல்லது நான்கு வயதுள்ள ஒரு குழந்தையிடம் அப்பா கேட்டார்.

“நீ என்ன பாப்பா வேண்டிக்கப்போற?”

அவள் கன்னத்தில் கைவைத்து யோசித்தவாறே, “என்ன வேண்டிக்கறது?” என்று திருப்பிக் கேட்டாள்.

“அப்பா கொஞ்சம் ஒல்லியாகணும். நீ கொஞ்சம் குண்டாகணும்ன்னு வேண்டிக்க” என்றார் அவர்.

இவள் சரி என்று கம்பிமேல் ஏறி விளையாடி விட்டு, ஐந்து நிமிட இடைவெளியில் கேட்டாள்..

“அப்படி ஆய்ட்டோம்னா அடுத்த தடவை வரும்போது அப்படியே மாத்தி வேண்டிக்கணுமா?”

சுற்றி இருந்தவர்களெல்லாம் பிரமித்துப் போக, அவள் அப்பாவின் கண்களில் பெருமிதம்!

**************

கோயிலை ஒட்டிய பெட்டிக் கடை ஒன்றில் அறிவிப்பு.

எச்சரிக்கை 1: இன்று துக்ளக் வரவில்லை.

எச்சரிக்கை 2: நாளை வரலாம்.




துக்ளக் பாணியிலேயான இந்த அறிவிப்பை வியந்து பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டு எழுதிய கடைக்காரருக்கு கைகொடுத்துப் பாராட்டியபோது ‘ஒவ்வொரு தடவையும் இப்படித்தாங்க எழுதுவேன்” என்றார் அவர்.

பின்ன? சுஜாதா ஊர்ல இருந்துகிட்டு இந்தக் க்ரியேடிவிட்டிகூட இல்லைன்னா எப்படி!

**************

யானைகளுக்கு காசும், தேங்காயும் கொடுத்தால் பாகனிடம் கொடுத்துவிடுகிறது. பழம் கொடுத்தால் 'லபக்’கென்று வாயில் போட்டுக் கொள்கிறது. எப்படிப் பழக்கியிருக்கிறார்கள் என்று வியந்து கொண்டிருக்கும்போதே பாகன் அடுத்து நின்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்..

“ரெண்டு ரூபா, அஞ்சு ரூபா காயினாக் குடுங்க. ஒரு ரூபா காயினைப் பாத்தா கோவப்படும்”

அடுத்த நிமிடம் ஐந்தாறு பேர் கொத்தாக எஸ்கேப்பானார்கள்.

நல்லாக் கெளப்புறாய்ங்கய்யா பீதிய!

**************

குமுதம் டாப் டென் ப்ளாக்கரில் ஆறாவதாக அடியேனை தேர்வு செய்திருந்தார்கள். நன்றி குமுதத்துக்கும் உங்களுக்கும். கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. கம்பனை எழுதினாலும், காளை பிடி பற்றி எழுதினாலும் மிரட்டும் நர்சிம், எப்போதாவது புனைவு எழுதினாலும் அபார நடையில் தரமாக எழுதும் முரளிகண்ணன் என்று சிலரின் எழுத்துக்கள் ‘டேய்... ஜாக்கிரதை’ என்று பயமுறுத்துகின்றது. தாமிரா, கார்க்கி போன்றவர்களுக்கு இன்னும் கிடைக்க வேண்டிய பல பாராட்டுகள் முழுமையாகச் சென்று சேரவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

இந்த நேரத்தில் நான் எனக்குக் கிடைத்திருக்கும் நண்பர்களுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நல்லாயிருப்பதை நல்லாயிருக்கு என்றும், ‘புகழ்தலின் வைதலே நன்று’ என்று நாலடியார் சொன்னது போல, கேவலமாக இருப்பதை ‘இதுக்கு நீங்க இன்னைக்கு லீவு விட்டிருக்கலாம்’ என்றும் இடித்துரைக்கும் அவர்கள் இல்லாவிட்டால் நான் சீரழிந்திருப்பேன்.

*************

திருமங்கலம் இடைத்தேர்தலில் பணம் விளையாடியதாகப் பரவலான பேச்சு இருக்கிறது. இங்கே எங்கள் அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவர் ‘சார்.. அஞ்சாயிரம் தர்றேங்கறாரு சார். எங்க வீட்டு ஓனர். எங்க வீட்ல நானும் என் வொய்ஃபும் போனா பத்தாயிரம் சார்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார். ‘லீவு தரமாட்டாங்களே’ என்று கேட்டதற்கு ‘சார்.. ரெண்டு மாச சம்பளம் ஒரே நாள்ல கெடைக்குது சார். லாஸ் ஆஃப் பே-ன்னாலும் பரவால்ல.. போகணும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்குள் இருந்த இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிச கிருஷ்ணகுமார், அவர் வீட்டு ஓனரைப் பார்த்து இதெல்லாம் நிஜம்தானா என்று விளக்கமாய்க் கேட்கச் சொல்லிக் கொண்டே இருந்தான். சரி என்று அவரிடம் பேசியதற்கு அடுத்த நாள் அவரது வீட்டுக்குப் போனேன்.

பயில்வான் ரங்கநாதனுக்கு அண்ணன் போல பெரிய மீசையோடு ஒருத்தர் கதவு திறந்து தடித்த குரலில் ‘என்ன வேணும்’ என்று கேட்க ‘இது பதினஞ்சாம் நம்பர் வீடுதானே’ என்று கேட்டு ஓடி வந்துவிட்டேன்!

****************

இளையராஜாவின் இசையில் ‘நான் கடவுள்’ பாடல்கள்தான் இப்போதைய என் ஃபேவரைட். (இன்னும் நந்தலாலா கேட்கவில்லை) மாதா உன் கோயிலில் பாட்டை, மெட்டெல்லாம் மாற்றாமல் அழகாக ரீ-மிக்ஸில் தந்திருக்கிறார். அது எப்படி இவர் இசையில் ஒலிக்கும் தபேலா மட்டும் அப்படிப் பேசுகிறதோ! அந்தப் பாடலின் புதிய வெர்ஷனான 'அம்மா உன் பிள்ளை நான்' பாட்டில் எந்த இடத்தில் ராஜா BEATஐ ஆரம்பிக்கிறார் என்பதை முதல்முறையிலேயே ஊகிக்க முடிந்தால் நீங்கள் க்ரேட்!


பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் பாடல் ஏற்கனவே ராஜாவின் ரமண மாலை-யில் இளையராஜாவின் குரலிலேயே கேட்ட பாடல். அற்புதமான பாடல். ராஜாவின் அருமையான வரிகள். இதில் கே.ஜே.யேசுதாஸ்... ச்சே... மது பாலகிருஷ்ணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் எனக்கு இரண்டு கேள்விகள்...

ரமணமாலையில் தான் பாடும்போது பிட்ஷைப் (BITSHAI) பாத்திரம் என்று பாடியவர் மது பாலகிருஷ்ணனை பிச்சைப் (PICCHAI) பாத்திரம் என்று பாடவிட்டது ஏன்?

சரணத்தில்

அம்மையும் அப்பனும் தந்ததால் – இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததால்
இம்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட


என்பதில் ஒவ்வொரு வரிகளின் முடியும் ‘ல்’ மது பாலகிருஷ்ணன் பாடும்போது சரியாகக் கேட்கவே இல்லை. அதுவும் ஆதியின் வல்வினை சூழ்ந்ததால் என்பது சூழ்ந்ததா என்றுதான் முடிக்கிறார். ராஜா பாடும்போது அழுத்தமாக அந்த ‘ல்’ல்லை பாடியிருப்பார்.

இதிலென்ன பெரிய தவறு என்று தோன்றுகிறதா? இம்மையை நான் அறியாததால் என்பதில் அடக்கமும், இம்மையை நான் அறியாததா என்பதில் இறுமாப்பும் தெரிகிறதே!!!

நிச்சயமாக ராஜா இதைக் கண்டுக்காமல் விட்டிருக்க மாட்டார். முதலாவது பிட்ஷை, பிச்சையானது எல்லோருக்கும் புரியட்டும் என்பதால் இருக்கலாம். இரண்டாவது... என் சிற்றறிவிற்கு எட்டவில்லை!

ஆனால் திரும்பத்திரும்ப கேட்க வைக்கிற பாடல்.

34 comments:

நட்புடன் ஜமால் said...

\\“அப்படி ஆய்ட்டோம்னா அடுத்த தடவை வரும்போது அப்படியே மாத்தி வேண்டிக்கணுமா?”\\

சூப்பர் ...

நட்புடன் ஜமால் said...

\\கோயிலை ஒட்டிய பெட்டிக் கடை ஒன்றில் அறிவிப்பு.

எச்சரிக்கை 1: இன்று துக்ளக் வரவில்லை.

எச்சரிக்கை 2: நாளை வரலாம்.

\\

ஹா ஹா

சிரித்தேன் - இரசித்தேன் ...

நட்புடன் ஜமால் said...

\\அடுத்த நிமிடம் ஐந்தாறு பேர் கொத்தாக எஸ்கேப்பானார்கள்.\\

அப்ப நீங்க ... (விளம்பர பாணியில் படிக்கவும்)

நட்புடன் ஜமால் said...

\\குமுதம் டாப் டென் ப்ளாக்கரில் ஆறாவதாக அடியேனை தேர்வு செய்திருந்தார்கள். \\

வாழ்த்துக்கள்ங்கோ ...

நட்புடன் ஜமால் said...

\\என்று கேட்டு ஓடி வந்துவிட்டேன்!\\

ஹா ஹா ஹா ...

அத்திரி said...

அவியல் எப்பவும் போல் அருமையான சுவை...... யானை மேட்டர் உண்மையா?? நீங்க முயற்சித்து இருக்கலாம்>>>!!!!!!!!!!!!!

பரிசல்காரன் said...

@ ஜமால்

தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி..


@ அத்திரி

//யானை மேட்டர் உண்மையா?? நீங்க முயற்சித்து இருக்கலாம்//

நல்ல எண்ணம்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

புருனோ Bruno said...

//“அப்படி ஆய்ட்டோம்னா அடுத்த தடவை வரும்போது அப்படியே மாத்தி வேண்டிக்கணுமா?”//

குழந்தைகள் புத்திசாலிகள்

புருனோ Bruno said...

//பின்ன? சுஜாதா ஊர்ல இருந்துகிட்டு இந்தக் க்ரியேடிவிட்டிகூட இல்லைன்னா எப்படி!//

சுஜாதாவின் க்ரியேடிவிட்டி !!

உங்கள் க்ரியேடிவிட்டிக்கு பாராட்டுக்கள்

புருனோ Bruno said...

//கம்பனை எழுதினாலும், காளை பிடி பற்றி எழுதினாலும் மிரட்டும் நர்சிம், எப்போதாவது புனைவு எழுதினாலும் அபார நடையில் தரமாக எழுதும் முரளிகண்ணன் என்று சிலரின் எழுத்துக்கள் ‘டேய்... ஜாக்கிரதை’ என்று பயமுறுத்துகின்றது. தாமிரா, //

அவர்கள் 2008ன் சிறந்த புதிய எழுத்தாளர்கள் பட்டியலில் வர வேண்டியவர்கள் என்பது என் கருத்து

Mahesh said...

/எச்சரிக்கை 1: இன்று துக்ளக் வரவில்லை.

எச்சரிக்கை 2: நாளை வரலாம்.
//

அட.. குமுதத்துல பரிசல்காரன்..
பரிசல்காரன்ல நான்...

லாஜிக்கலாப் பாத்தா நானும் குமுதம் டாப் 10ல... :))))))))

ஆயில்யன் said...

//துக்ளக் பாணியிலேயான இந்த அறிவிப்பை வியந்து பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டு எழுதிய கடைக்காரருக்கு கைகொடுத்துப் பாராட்டியபோது ‘ஒவ்வொரு தடவையும் இப்படித்தாங்க எழுதுவேன்” என்றார் அவர்.

பின்ன? சுஜாதா ஊர்ல இருந்துகிட்டு இந்தக் க்ரியேடிவிட்டிகூட இல்லைன்னா எப்படி!///


கலக்கலான மேட்டர் !

நிறைய மனிதர்கள் தங்கள் எல்லைக்குள் இது போன்று பல அசாதாரண விசயங்களை மிகச்சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறார்கள்!

:)))

Mahesh said...

க்ருஷ்ணா... வர வர நம்ம கடைப் பக்கம் வெயிலுக்குக் கூட ஒதுங்கறதில்ல... இதெல்லாம் நல்லால்ல.. ஆமாம்.. :))))))

ஆயில்யன் said...

//திரும்பத்திரும்ப கேட்க வைக்கிற பாடல்.//

இளையராஜா ரமணமாலையில பாடியதையே அப்படியே போட்டிருந்திருக்கலாம்ன்னு கூட எனக்கு தோணுச்சு! பட் இந்த குரலிலும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு!

அதனாலதான் திரும்ப திரும்ப கேக்க வைக்கிது :)

முன்பு மாதா உன் கோவிலில் பாடிய ஜானகியே, அம்மா உன் பிள்ளை நான் பாடியிருந்தால்...! நினைச்சுப்பார்த்தேன், இனிமையாக இருந்திருக்கும்!
ஆனாலும் சாதனா சர்கம் குறையொன்றுமில்லை! :)

கார்க்கிபவா said...

காலையிலே திகட்ட திகட்ட விருந்து வச்சிட்டிங்க சகா..அருமையான‌ அவியல்..

//தாமிரா, கார்க்கி போன்றவர்களுக்கு இன்னும் கிடைக்க வேண்டிய பல பாராட்டுகள் முழுமையாகச் சென்று சேரவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.//

நானும் காலர தூக்கி விட்டுக்கலாம்..நீங்க சொன்னதுக்காக...தொடர் உற்சாகத்திற்கு நன்றி :)))))

கோவி.கண்ணன் said...

//“ரெண்டு ரூபா, அஞ்சு ரூபா காயினாக் குடுங்க. ஒரு ரூபா காயினைப் பாத்தா கோவப்படும்”//

கோபம் வந்தால் தூக்கிப் போட்டு மிதிக்கனும். பாகனை !
:)

Anonymous said...

நல்ல அவியல் கிருஷ்ணா.

துக்ளக் மேட்டர் சூபர்.

Cable சங்கர் said...

//எச்சரிக்கை 1: இன்று துக்ளக் வரவில்லை.

எச்சரிக்கை 2: நாளை வரலாம்.

//

ஹா..ஹா.. தீவிரமான துக்ளக் வாசகர் போலும் அந்த கடைக்காரர்.

அது சரி உங்களுடய போஸ்டிலிம், லக்கியின் போஸ்டிலும் லிங்க் கொடுத்திருப்பது நீங்களே கொடுப்பதா..? அல்லது அந்த பதிவர் ஏற்படுத்தியதா..?

வெண்பூ said...

சுவையான அவியல் பரிசல்..

யானை மேட்டர் சூப்பர்.. நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்து செக் செய்திருக்கலாம். :)))

//
நர்சிம், எப்போதாவது புனைவு எழுதினாலும் அபார நடையில் தரமாக எழுதும் முரளிகண்ணன் ...

தாமிரா, கார்க்கி போன்றவர்களுக்கு இன்னும் கிடைக்க வேண்டிய பல பாராட்டுகள் முழுமையாகச் சென்று சேரவில்லை
//
உங்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறேன்..

பாட்டு கேட்கறதோட மட்டுமில்லாம பயங்கரமா ஆராய்ச்சி பண்ணுறீங்க.. அவ்ளோதான் சொல்லுவேன்..

Ramesh said...

அட.. குமுதத்துல பரிசல்காரன்.. சூப்பர் ...

Saidai Prem said...

குமுதத்துல உங்களுக்கு கிடைச்ச பாராட்டுகளுக்கு எனது வாழ்த்துக்கள்.. நல்லா எழுதறீங்க...

பாண்டி-பரணி said...

//தாமிரா, கார்க்கி போன்றவர்களுக்கு இன்னும் கிடைக்க வேண்டிய பல பாராட்டுகள் முழுமையாகச் சென்று சேரவில்லை //
அடுத்தவரையும் ஏற்று பாரட்ட வாழ்த்த நினைக்கும் உங்கள் குணம் இதனாலே நீங்கள் மேன்மேலும் வலர வாழ்த்துக்கள்
கார்க்கி நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு அவரின் எழுத்து தேர்ந்த எழுத்து

\அடுத்த நிமிடம் ஐந்தாறு பேர் கொத்தாக எஸ்கேப்பானார்கள்.\\

:)உங்கள் வீட்ல மொத்தம் 4 பேர்தானே ?!

பாண்டி-பரணி said...
This comment has been removed by the author.
Anonymous said...

அம்மா உன் பிள்ளை நான்...20 முறையாவது கேட்டி
ருப்பேன்.அலுக்கவேயில்லை. ரீமிக்ஸ் எப்படி இருக்கணும்னு காமிச்சுட்டார் ராஜா...வேறென்ன..ராஜா ராஜாதான். குமுதம் பட்ட்டியல் - வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

//அப்படி ஆய்ட்டோம்னா அடுத்த தடவை வரும்போது அப்படியே மாத்தி வேண்டிக்கணுமா?//

How smart...! :)

அந்த துக்ளக் அறிவிப்பு ரொம்பவே அருமை.. :)

narsim said...

நன்றாக சமைத்து, அன்லிமிடடாக‌ கொடுத்த மாதிரி இருக்கிறது அவியல்.. அருமை.. அருமை..

அந்த பயில்வான் ரங்கநாதன் மேட்டர் கலக்கல் தல‌

ரமேஷ் வைத்யா said...

நான் கடவுளை விட நந்தலாலா பட்டையைக் கிளப்புகிறது. ஒரு குறவர் பாட்டு இருக்கிறது. சரோஜா அம்மாள் என்பவர் உடுக்கு அடித்துக்கொண்டே பாடியிருக்கிறார். இருதய பலவீனம் உள்ளவர்கள் கேட்பதைத் தவிர்த்தல் நலம். எல்லாப் பாடல்களுமே மெலடியில் மிளிர்கின்றன. பேரனோடு ராஜா பாடியிருக்கும் பாட்டில் அவர் குரலுக்கு இருபது வயது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சில காலமாகத்தான் உங்கள் பதிவுப்பக்கம் வருகிறேன்.

அவியல்பதிவுகள் குறிப்பாகவும்-இது மிக நன்று-,மற்ற சில குறிப்பிட்ட பதிவுகளும் ரசிக்கும்படி இருக்கின்றன.

வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

சுவையான அவியல். நான் சொல்ல நினைச்சத எல்லோரும் முன்னாலேயெ சொல்லிட்டதால எல்லோருக்கும் ரிப்பீட்ட போட்டுக்குறேன்

என்.இனியவன் said...

//குமுதம் டாப் டென் ப்ளாக்கரில் ஆறாவதாக அடியேனை தேர்வு செய்திருந்தார்கள்.//
வாழ்த்துக்கள்.

துக்ளக் பாணியிலேயான அறிவிப்பு super. ரசித்தேன்.
சுஜாதா பாணியிலேயே இருக்கு.

உங்களுடைய அவியல் சூப்பருங்கோ. அடிக்கடி அவியுங்கோ.

Thamira said...

ஒன்று கூட சோடை போகாமல் அத்தனையும் அழகு.! டாப் 10 குறித்த கருத்து உங்கள் 'உயர்விலும் பணிவு' குணத்தை காட்டுகிறது. நீங்கள் தொடவிருக்கும் உயரம் இன்னும்.. இன்னும்.. வாழ்த்துகள் பரிசல்.!

சின்னப் பையன் said...

சூப்பர் அவியல். போட்டு தாக்குங்க...

ரிஷபன்Meena said...

துக்ளக்" அறிவிப்பு அழகு. பெட்டிக் கடை என்பது ஒரு முழு நேர வேலை. அதை அலுத்துக் கொள்ளாமால் ரசனையுடன் செய்யும் கடைக்காரர் பாரட்டுக்குரியவர்

வால்பையன் said...

அந்த கடைக்காரர் மேட்டர் ஜூப்பர்!

மற்றதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை