1987. டில்லியில் ஆகாரா ’87 என்றொரு ஷோ. ஹோட்டல் தொழிலுக்குத் தேவையான உபகரணங்களின் கண்காட்சி. எல்லாமே மிக விலையுயர்ந்த இயந்திரங்கள். ஹோட்டல் முதலாளிகளெல்லாம் கூடிக் குழுமி (ரெண்டும் ஒண்ணுதானே?) ஒவ்வொரு ஸ்டாலாக பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளை வேட்டி, சட்டையோடு ஒருவர் ஒரு ஸ்டாலில் இருந்த இயந்திரத்தைப் பற்றி விசாரிக்க இவரது வேட்டி சட்டை உருவம் பார்த்து எள்ளலாகவே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இயக்கிக் காட்டுமாறு கேட்கிறார் இவர். “இந்த மிஷின் பல லட்சம் மதிப்புள்ளது. ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் கட்டுங்கள். இயக்கிக் காட்டுகிறோம்” என்று திமிராகச் சொல்கிறார்கள். ஒரு லட்சத்துக்கான விஜயா பேங்க் செக்கை நீட்டுகிறார் இவர். அவர்கள் அலட்சியமாய் வாங்கி இயக்கிக் காட்ட ‘ஓக்கே. அந்த ஒரு லட்சத்தை அட்வான்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று அந்த இயந்திரத்தை ஆர்டர் செய்கிறார். இவர்கள் சந்தேகமாய் விஜயா பாங்கை அழைத்து கணக்கு எண்ணைச் சொல்லிக் கேட்க “அவர் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய ஹோட்டல் அதிபர்” என்று சொல்கிறார்கள்.
மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அந்த நிறுவனத்தினர், ஓரிரு மாதங்களுக்குப் பிறகு இயந்திரத்தை இவருக்கு அளித்தபோது ஒரு விஷயம் சொன்னார்களாம். ஜெர்மனியில் அவர்களது நிறுவன முதலாளியின் அறையில் அந்த ஒரு லட்ச ரூபாய் செக் ஃப்ரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டதாம். உருவத்தை, உடையை வைத்து எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காக.
அவர்.. அன்னபூர்ணா கௌரிசங்கர் ஹோட்டல்ஸ் – தாமோதரசாமி.
**************************
லண்டனில் ஒரு நிறுவனத்திற்கு ஜப்பானிலிருந்து ஒரு இயந்திரம் வாங்கப்பட்டது. மிக விலையுயர்ந்த அந்த இயந்திரத்தில் ஏதோ கோளாறு. சரி செய்ய மெக்கானிக்கை அனுப்பச் சொல்ல, ஜப்பானிலிருந்து 22, 23 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வருகிறார். ஏர்ப்போர்ட்டிலிருந்து வந்ததும் தங்கும் அறைக்குச் செல்லாமல் நேராக அந்த நிறுவனத்திற்குப் போய் என்ன குறை என்று பார்க்க விழைகிறார். நிறுவன அதிகாரிகள் ‘இந்தச் சின்னப் பையனா ரிப்பேர் பண்ணப் போறான்’ என்று நினைத்தபடி என்ன குறை என்பதை விளக்குகிறார்கள். இவன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, இவனுக்குத் தேவையான உபகரணங்கள் குறித்த லிஸ்ட்டை அவர்களிடம் குடுத்து ஓய்வெடுத்து விட்டு நாளை வருவதாய்ச் சொல்லிச் செல்கிறான்.
நிறுவனத்திலிருப்பவர்கள் ஜப்பானில் அந்த இயந்திரம் வாங்கிய அலுவலகத்திற்கு இவ்வளவு மதிப்பு வாய்ந்த இயந்திரத்தை ஒரு கத்துக்குட்டி கைவைப்பதா என்று தங்கள் அதிருப்தியை ஃபேக்ஸில் வெளிப்படுத்த, அவர்கள் உணர்வை மதித்து நாளையே வேறொரு ஆளை அனுப்புவதாய் பதிலளிக்கிறார்கள்.
அடுத்தநாள் 45 வயதுள்ள ஒருவரோடு அந்த இளைஞனும் வந்து சரி செய்கிறார்கள்.
எல்லாம் முடிந்து அந்த நிறுவன அதிகாரி இளைஞரிடம் “தப்பா நெனைக்கக் கூடாது. ரொம்ப அருமையான கண்டுபிடிப்பான இந்த இயந்திரம் பழுதாகக் கூடாதுன்னுதான் ஒரு சீனியரை அனுப்பச் சொன்னோம்” என்கிறார்கள்.
உடனே சொல்கிறார் அந்த சீனியர்.. இளைஞரைக் காட்டி..
‘அருமையான கண்டுபிடிப்புன்னா அதுக்கு இவரைத்தான் பாராட்டணும். அவர்தான் அந்த டீமோட R & D சீஃப். தன்னோட மிஷின்ல குளறுபடியான்னு நம்பாமத்தான் தானே போய்ட்டு வரேன்னு கிளம்பினார். நான் ரிப்பேர் பண்ற மாதிரி நடிச்சேனே தவிர, இவர்தான் எல்லாம் பண்ணினார்”
நிறுவன அதிகாரிகள் முகத்தில் ஈயாடவில்லை.
****************************
பெர்னாட்ஷா ஒரு பழைய புத்தகக்கடையில் தேடுதலில் இருந்தபோது, அவர் எழுதி கையொப்பமிட்டு தன் நண்பனுக்குக் கொடுத்த புத்தகம் அங்கே இருப்பதைக் கண்டார். என் கையெழுத்துக்கு அவனவன் ஆலாய்ப் பறக்கிறான். இவன் வாங்கி, பழைய கடைக்குப் போட்டிருக்கிறானே என்று நினைத்த அவர், அதை வாங்கி மறுபடி அவனுக்குக் கொடுத்து அவன் மூக்குடைக்க வேண்டும் என்று நினைத்து, கடைக்காரனிடம் விலை கேட்டார்.
“20 டாலர் வரும். மொத பக்கத்துல எவனோ கையெழுத்துங்கற பேர்ல கிறுக்கிவெச்சுட்டான். அதுனால 15 டால்ர் குடுங்க போதும்”
******************************
சாக்ரடீஸ் அவசர அவசரமாக அந்த டாக்ஸியை அணுகினார். அவருக்கு இன்னும் 20 நிமிடங்களில் ரேடியோ ஸ்டேஷன் போக வேண்டி இருந்தது. அங்கே அவரது உரைக்காக காத்துக் கொண்டிருப்பர்கள்.
“சவாரியெல்லாம் வரமுடியாதுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல ரேடியோல சாக்ரடீஸ் பேசுவாரு. அதக் கேட்கணும். அதுனால இந்த நேரத்துல அங்கயும் போக மாட்டேன்” என்கிறார் ட்ரைவர்.
சாக்ரடீஸூக்கு பூரிப்பு தாங்கவில்லை. ‘அட!’ என்று மகிழ்ந்தவாறே ஒரு நூறு ரூபாய் நோட்டைப் போல ஒரு தொகையை பையிலிருந்து எடுத்து நீட்டி ‘அந்த சாக்ரடீஸ் நான்தான்ப்பா’ என்று சொல்ல எத்தனித்தார். காசைப் பார்த்ததுமே கண்கள் விரியச் சொன்னார் டாக்ஸி ட்ரைவர்.. “சரி... நூறு ரூபா தர்றீங்க... வாங்க. சாக்ரடீஸாவது ஒண்ணாவது... பொழப்பைப் பார்க்கலாம்”
*******************************
(நியூட்டனா, தாமஸ் ஆல்வா எடிசனா என்று ஞாபகமில்லை. நியூட்டன் என்று வைத்துக் கொள்வோம்....)
தனது அறிவியல் சாதனம் ஒன்றின் கண்டுபிடிப்பைப் பற்றி
ஒவ்வொரு ஊராக தனது காரில் போய் விளக்கமளித்துக் கொண்டே வருகிறார் நியூட்டன். இப்போது போல தகவல் தொழில்நுட்பம் அப்போது இல்லை. இவரே ஊர் ஊராகப் போய் இவரது கண்டுபிடிப்பைப் பற்றிப் பேச வேண்டும். ஒரு கட்டத்தில் சோர்ந்து போகிற நியூட்டன் தனது ட்ரைவரிடம் “இந்த ஊர்ல நீயே பேசு. இங்க என்னை யாருக்கும் தெரியாது. இத்தனை தடவை நான் பேசினதைக் கேட்டில்ல.. பேசிடுவதானே?” என்கிறார். ட்ரைவரும் சம்மதிக்கிறார்.
அதேபோல ட்ரைவர் அந்தக் குறிப்பிட்ட கண்டுபிடிப்பைப் பற்றி விளக்கம் அளித்துவிட்டு, போக முற்படுகையில் ஆளாளுக்கு சந்தேகம் கேட்க ஆரம்பிக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் போகிறது. காரில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் நியூட்டனுக்கு பதட்டமாகிறது. டக்கெனச் சொல்கிறார் ட்ரைவர்
“பல ஊர்களுக்குப் போய் வந்ததால் மிகவும் களைப்பாக உணர்கிறேன். உங்களது இந்தச் சின்னச் சின்னச் சந்தேகங்களை என் ட்ரைவரே தீர்த்து வைப்பார்”
****************************
இது ரொம்ப லேட்டஸ்ட்....
புனேவில், ரயில் நிலையத்தில் ஒரு ஷூட்டிங். ஹீரோவுக்கான ஷாட்கள் முடிந்துவிடவே, ‘நீங்க கேரவனுக்குப் போங்க’ என்று சொல்கிறார் டைரக்டர். ஹீரோ கையில் ஒரு புத்தகத்தோடு நகர்கிறார். ஒரு சில ஷாட்கள் முடிந்து பேக்கப் சொல்லிக் கிளம்பும்போது ஹீரோவைக் காணவில்லை. தேடுகிறார்கள்.. போர்ட்டர்களிடம் விசாரிக்க, அவர்கள் ஒரு தூணின் மறைவைக் காட்டுகிறார்கள். ஒரு போர்ட்டரிடமிருந்து வாங்கிய துண்டை மடித்துத் தலையணையாக்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அந்த ஹீரோ. டைரக்டர் பதட்டமாகி... “என்ன சார் இது” என்று கேட்க... “நோ.. நோ... கொஞ்ச நேரம் பார்த்துட்டுப் போலாம்னு நெனைச்சேன்.. அப்படியே தூங்கிட்டேன்.” என்கிற அவரது எளிமையைக் கண்டு யூனிட்டே பிரமிக்கிறது.
டைரக்டர் – ஷங்கர்.
படம் – சிவாஜி.
ஹீரோ..... வேற யாரு!
*
24 comments:
என்ன தல.. புதிய அவியலா..? நிறைய படிக்கிறீங்க போலருக்கே..? சூப்ப்ர் கம்பைலிங்க்..
@ சங்கர்
தல... எத்தனை மணிக்குப் பதிவு போட்டாலும் மொத கமெண்ட் அடிச்சு விடறீங்களே.. ஏதாவது சாஃப்ட்வேர் ப்ரோக்ராம் பண்ணிவெச்சிருக்கீங்களா?
அண்ணே கலக்கலோ கலக்கல்... நன்னா இருக்கு...
//தல... எத்தனை மணிக்குப் பதிவு போட்டாலும் மொத கமெண்ட் அடிச்சு விடறீங்களே.. ஏதாவது சாஃப்ட்வேர் ப்ரோக்ராம் பண்ணிவெச்சிருக்கீங்களா?//
அது என்ன மாயமோ.. தெரியல.. நான் ஆன் லைன்ல இருக்கிறப்ப எல்லாம் நீங்க் பதிவ போடறீங்க.. சாப்வேர் எல்லாம் இல்லை சாமி.. அது சரி.. உங்க வில்லு விமர்சனத்திலேர்ந்து விகடனல வந்தது பத்தி..?
அண்ணே சாக்ரட்டீஸ் காலத்துல டாக்ஸி, ரேடியோவா???
4 வது சாக்ரடீஸ் இல்லை.அவர் வாழ்ந்த காலத்தில் வானொலி கிடையாது.அந்த நபர் வின்சென்ட் சர்ச்சில்.
5 வது ஐன்ஸ்டீன்
மற்றபடி எல்லாம் அருமை.
//அண்ணே சாக்ரட்டீஸ் காலத்துல டாக்ஸி, ரேடியோவா???//
காரணம், நீங்கள் சொல்லியிருப்பது போல நிறைய நிகழ்ச்சிகளை பெயர் மற்றும் மாற்றி மாற்றி சொல்லுவார்கள்
நன்றாக உள்ளது அண்ணா!!!
எல்லாமே அருமையான தகவல்கள் ..
சாதம் ....சாம்பார்...ரசம்...கூட்டு ...பொரியல்...அப்பளம்...ஊறுகாய் எல்லாம் வச்சு திருப்தியா சாப்பிட்ட ஒரு உணர்வு வருதே உங்க பதிவுல உள்ள தகவல்களைப் படித்ததில்.தகவல் களஞ்சியமா இருப்பீங்க போலஇருக்கே?!
நல்லா இருக்குங்க...
// உருவத்தை, உடையை வைத்து எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காக.//
நச் மேட்டர் தல..
ஆஹா அருமையினா தகவல்கல்
அருமையான தகவல் தொகுப்புங்க
// எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே சாக்ரட்டீஸ் காலத்துல டாக்ஸி, ரேடியோவா???//
Sorry Anna.. as Babu told //காரணம், நீங்கள் சொல்லியிருப்பது போல நிறைய நிகழ்ச்சிகளை பெயர் மற்றும் மாற்றி மாற்றி சொல்லுவார்கள்//
Thats the confusion...
Who knows.. in future the same story may come as 'Once M M Abdhullaa told' like that....
//உருவத்தை, உடையை வைத்து எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காக.//
ஆமாங்க.
காசுன்னு வந்த பெர்ண்டாவது, சாக்ரடீஸாசவது.
அந்த டிரைவர் கதை எனக்கு ஏற்கனவே தெரியும் யாரோ சொல்லி இருக்காங்க. தாமஸ் ஆல்வா எடிசன் கூட இருந்து டிரைவரும் புத்திசாலியாக்கி இருக்காரு. இல்லையா?
Who knows.. in future the same story may come as 'Once M M Abdhullaa told' like that....
//
அண்ணே உங்களுக்கு எப்பவுமே என்னையவிட லொல்லு ஜாஸ்தி :)))
தல நீங்க ஒரு திறந்த புத்தகம் தல.. தல தல
எனக்கு இதுக்கு மேல பேச்சு வல்ல தல .................
சாக்ரடீஸ்க்கு நூறு ’ரூபாய்’? சரி, ஏதோ ஒரு கரன்சி. தொகுப்பு எல்லாம் கலக்கல்.
ரஜினியை சாக்ரடீஸ், எடிசன், பெர்னாட்ஷா லெவல்ல வச்சிட்டீங்க... :-)
ஒரு போர்ட்டரிடமிருந்து வாங்கிய துண்டை மடித்துத் தலையணையாக்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அந்த ஹீரோ. டைரக்டர் பதட்டமாகி... “என்ன சார் இது” என்று கேட்க... “நோ.. நோ... கொஞ்ச நேரம் பார்த்துட்டுப் போலாம்னு நெனைச்சேன்.. அப்படியே தூங்கிட்டேன்.” என்கிற அவரது எளிமையைக் கண்டு யூனிட்டே பிரமிக்கிறது.///
பெருந்தலைகள்
எல்லாம்
ரொம்ப
எளிமையாத்தான்
இருக்கிறார்கள்!!
இன்றைக்கு (Jan 25th) "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சியில் ஒரு அம்மா தான் ரூபாய 650 க்கு ஒரு பள்ளியில் வேலை செய்வதாகவும், வேலை செய்வரை தன்னை யாரும் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை என்றும், ஆனால் தான் தன்னால் முடிந்த வரை பிள்ளைகளுக்கு நல்ல பாடம் சொல்லி தந்தாகவும் சொல்லி அழுதார். நாம் இப்ப அவருக்கு உதவி செய்ய நினைத்தாலும், அது காலம் கடந்த உதவி என்று நினைக்கிறேன். உதவ வேண்டாம் என்று சொல்லவில்லை, என்னுடைய வேண்டுகோள், உங்களை போன்ற பதிவர்களுக்கு:
நம்மில் வாழ்ந்து கொண்டு இருக்கும், இவரை போன்ற ஆயிரமாயிரம் மனிதர்களை அடையாளம் கண்டு இந்த உலகுக்கு அடையாளம் காட்ட முயற்சி செய்யுங்கள். "காலத்தே செய்த உதவி".
அந்த அம்மா சொன்ன போது அரங்கத்தில் இருந்த அனைவர் கண்ணிலும் கண்ணீர், அதனால் இது சில காலம் முன்னால் தெரிந்து இருந்தால் அவருக்கு நல்ல உதவி கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
Check this out, welcoming everyone's contribution.
http://2020dreams.blogspot.com/
கடைசி மேட்டரில் முரண்படுகிறேன்.
ஒரு மனிதன் எளிமையாக இருப்பதை விசயமாக்கினால், எளிமையே ஒரு விளம்பரம் ஆகிவிடும்.
:-))
ரொம்ப பழசுங்க...இருந்தாலும் மேட்டர் சுவாரஸ்யமா இருக்கு,.
அத்தனையும் அழகு.! (என்னத்த சொல்லி புதுசா பாராட்டுறதுன்னு ஒரு பதிவு போடவும்)
Post a Comment