சென்னையில் திருடியவன்
நெல்லையில் கைது
அமெரிக்க டாலர்
மதுரையின் அச்சடிப்பு
கேரள மந்திரவாதி
ஆந்திராவில் மோசடி
கோவைத் தொழிலதிபர்
மும்பையில் தலைமறைவு
யாதும் ஊரே
் சொத்து மறுத்த தந்தை
சுட்டு வீழ்த்தினான் மகன்
காதலை எதிர்த்த கணவனை
கழுத்து நெறித்துக் கொன்றாள் மனைவி
வரதட்சிணைக் கொடுமையில்
அண்ணியை கொன்றான் ஒருவன்
வயல் வரப்புத் தகராறில்
அண்ணனைக் கொன்றான் தம்பி.
யாவரும் கேளிர
-----------------------------------------------------
சகுனம்
வெளியில்
சுமங்கலிப்பெண்
வருகிறாளாவென
பார்க்கச் சொல்கிறான்
மனைவியிடம்!
4 comments:
//சகுனம்
வெளியில்
சுமங்கலிப்பெண்
வருகிறாளாவென
பார்க்கச் சொல்கிறான்
மனைவியிடம்!//
கடைசி கவிதை நச்சுன்னு இருக்குது...
பத்தினி பேர கேட்டா நளாயினி பேர சொன்ன கதை மாதிரி :))
/சென்னையில் திருடியவன்
நெல்லையில் கைது
அமெரிக்க டாலர்
மதுரையின் அச்சடிப்பு
கேரள மந்திரவாதி
ஆந்திராவில் மோசடி
கோவைத் தொழிலதிபர்
மும்பையில் தலைமறைவு
யாதும் ஊரே/
நல்ல இருக்கிறது
நல்லா இருக்கு. இன்னும் கவிதை எழுதுங்கள்.
//
சகுனம்
வெளியில்
சுமங்கலிப்பெண்
வருகிறாளாவென
பார்க்கச் சொல்கிறான்
மனைவியிடம்!
//
நச்
Post a Comment