Wednesday, September 23, 2009

ஒன்..டூ..த்ரீ................

1: இணையத்தில் ‘கட்டுக் கதையாக’ உலவும் ஒரு செய்தி.... (False News?)


பரா வின்ஃப்ரே (Opera Winfrey)வின் டாக் ஷோ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.




டாமி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger) பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர். உலகப் புகழ் பெற்ற Tommy தயாரிப்புகளின் மூலகர்த்தா.

ஓபராவின் டாக் ஷோ ஒன்றில், டாமியைப் பேட்டி காண்கிறார் அவர்.

ஓபரா கேட்கிறார். “இனவாதத்தை தூண்டும் விதமாய், உங்களைக் குற்றஞ்சாட்டி நீங்கள் பேசியதாக சில அறிக்கைகள் வந்ததே அவை உண்மையா.. நீங்கள் அப்படிப் பேசினீர்களா?”

அவர் சொன்னதாய் வந்த அறிக்கையையும் படிக்கிறார். அது இதுதான்..

“'If I'd known African-Americans, Hispanics, Jewish and Asians would buy my clothes, I WOULD NOT have made them so nice. I wish these people would NOT buy my clothes, as they are made for upper class white people”


டாமி சொல்கிறார்: “ஆம். நான் அப்படிச் சொன்னேன்”

ஓபரா உடனே “ ஷோவை விட்டு வெளியே செல்லுங்கள்” என்று அவரை வெளியேற்றி விடுகிறாராம்!

எப்படியெல்லாம் கதை கட்டுகிறார்கள் பாருங்கள்!

** ** ** ** ** **
2:

ஜோஹன்னஸ்பெர்குக்கும், லண்டனுக்கும் இடையில் பறக்கும் ப்ரிடிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடந்தது இது...

50 வயதுள்ள ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. கறுப்பர் ஒருவருக்கு அருகில் அவருக்கு சீட். பெண்மணியால் பொறுக்க முடியவில்லை. விமானப் பணிப்பெண்ணை அழைக்கிறார்.

பணிப்பெண்: “சொல்லுங்கள்... என்ன விஷயம்?”

வெள்ளைக்காரப் பெண்மணி: “என்ன விஷயமென்று தெரியவில்லையா? என்னை எங்கே அமரவைத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். இப்படி ஒரு விலக்கப்பட்டவரோடு பயணிக்க எனக்கு அருவருப்பாக இருக்கிறது. உடனே எனக்கு வேறு சீட் ஒதுக்குங்கள்”

பணிப்பெண் அவரைப் பொறுமையாய் இருக்கச் சொல்லிவிட்டு விமான கேப்டனிடம் பேசிவிட்டு வருகிறேனெனச் செல்கிறாள்.

சிறிதுநேரத்திற்குப் பிறகு வந்து “மன்னியுங்கள் மேடம்.. எகானமி க்ளாஸில் எல்லா சீட்களும் நிரம்பி விட்டதால் பிஸினஸ் க்ளாஸிலாவது சீட் இருக்குமென பார்க்கப் போனேன். அங்கும் ஒரு சீட்டும் இல்லை.”

வேகமாக இடைமறிக்க வந்த அந்தப் பெண்மணியைக் கையமர்த்தி நிறுத்திய பணிப்பெண் தொடர்கிறாள்:

“ஆனாலும் இப்படி ஒரு பயணியோடு பயணிக்கும் கஷ்டத்தைக் கொடுக்க எங்கள் கேப்டனுக்கு விருப்பமில்லை.. எனவே” என்றவள் சொன்னது கருப்பரின் பக்கம் பார்த்து! “சார்.. தயவுசெய்து உங்கள் உடமை ஏதுமிருப்பின் எடுத்து வாருங்கள். உங்களுக்காக கேப்டன் முதல் வகுப்பில் சீட் ஒதுக்கி காத்திருக்கிறார். இன்றைக்கு நீங்கள் எங்கள் விருந்தினர்”

சுற்றியமர்ந்தவர்களெல்லாம் ஒருநிமிடம் தொடர்ந்து கைதட்டினார்கள்!

**************************
3:


னக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தர். தனியார் நிறுவனத்துல குறிப்பிடத்தக்க பதவில வேலை செய்யறாரு. (பாருங்களேன் முரணை... அந்தப் பதவியைக் குறிப்பிடாம-குறிப்பிடத்தக்க பதவி-ன்னு சொல்றேன்...!)

வேலை சார்பாக அரசு அலுவலகங்களுக்கு போறதும், வேலை சம்பந்தமா பலருக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதும் அவர் வேலைகள்ல அடக்கம். ஒரு குறிப்பிட்ட வேலைக்காக, அதுக்கான அதிகாரியை தொடர்ந்து சந்திச்சிட்டு இருக்காரு நண்பர். வேலை முடியற நேரம். லஞ்சமா ஐந்திலக்கத்தைத் தொடும் ஒரு தொகையைப் பேசி முடிச்சிருக்காங்க.

பேசிவெச்சுட்ட ஒரு நாள்ல இவர் அங்க போறாரு. தேநீர் உபசரிப்பெல்லாம் முடிஞ்சு, ‘எங்க வெச்சு தர?’ன்னு கேட்டிருக்காரு இவர். ‘இங்கயே கொடுங்களேன்’னு சொல்லிருக்காரு அந்த அதிகாரி.

இந்த நேரத்துல அந்த நண்பரை நான் ஃபோன்ல கூப்டிருக்கேன். என் நண்பர் ஃபோனை எடுக்காம பாக்கெட்ல கையை விட்டு காசை எடுக்க முயற்சி பண்ணிகிட்டிருந்தார். திடீர்னு அந்த அதிகாரி எழுந்து ‘மொதல்ல வெளில போங்க... இப்படியெல்லாம் என்கிட்ட நடந்துக்கக் கூடாது’ன்னு ஒரு தினுசா கத்தி இவரை வெளில விரட்டிருக்காரு.

இவர் வெளில வந்து, என்னான்னு புரியாம வேறொரு மத்தியஸ்தர் மூலமா அந்த அதிகாரிகிட்ட பேச, தன்னோட நண்பர் ஒருத்தரை அனுப்பி, பணத்தை வாங்கிகிட்டு வேலையை முடிச்சுக் குடுத்துட்டாரு.

இது நடந்து ரொம்ப நாள் கழிச்சு அன்னைக்கு ஏன் அப்படி நடந்துகிட்டீங்கன்னு நண்பர் கேட்க, அவர் சொன்னது சுவாரஸ்யமான விஷயம்:

அவரோட நோக்கியா ஃபோன்ல எனக்கு அவர் ஸ்பெஷலா ஒரு ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்காரு. Chat Alert ங்கற அந்த டோன் ஒரு மாதிரி விட்டு விட்டு அடிக்கும். அன்னைக்கு நான் கூப்டப்ப, அடிச்ச ரிங் சத்தத்தைக் கேட்டு அந்த அதிகாரி, ஏதோ ரெகார்டிங் நடக்குதுன்னு நெனைச்சிருக்காரு. அதான் விஷயம்!

‘நல்ல நேரத்துல கூப்டீங்க பாஸூ’ம்பாரு இப்பவும் என்னைப் பார்த்தா!

** ** ** ** ** ** ** ** ** **

டிஸ்கி: மொத ரெண்டு மேட்டருமே இனவாதம்ங்கறதப் பேசுது. அது ரெண்டுக்கும் மூணாவதுக்கும் சம்பந்தமில்லை. இந்த மாதிரி உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு நெனைக்கற ஏதோ மூணு விஷயங்களை குறிச்சு வெச்சு, அப்பப்ப எழுதிட்டிருந்தேன். அது திடீர்னு நின்னுபோச்சு. (நீ எழுதறதே நின்னுபோச்சே.. இது மட்டுமான்னு கேட்கறீங்கதானே?) ஒன் டூ த்ரீன்னு தலைப்பு வெச்சுத் தொலைச்சாச்சு. அதுனால இந்த மூணாவது மேட்டர். அதுமில்லாம இந்த மூணாவது விஷயம் ரொம்ம்ம்ம்........ப நாளா உங்ககிட்ட சொல்லணும்னு நெனைச்சுட்டே இருந்தது. அப்பாடான்னு இருக்கு இப்பத்தான்!



.

26 comments:

Sridhar V said...

Tommy Hilfiger / Oprah winfrey விஷயம் ஒரு தவறான செய்தி. கிட்டத்தட்ட பதினைந்து வருடமாக இணையத்தில் உலவும் பொய் இது. ஃபிலிப்பைன்ஸ் வானொலியில் ஒருவர் வதந்தியாக கிளப்பிவிட்ட செய்தியை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

நேரில் பார்த்த மாதிரி எழுதுவது சுவாரசியமாக இருக்கும் என்றாலும் செய்தியை உறுதிபடுத்திக் கொண்டு எழுதுங்கள். hoax slayer சைட்கள் நி்றைய இருக்கின்றன.

பரிசல்காரன் said...

//நேரில் பார்த்த மாதிரி எழுதுவது சுவாரசியமாக இருக்கும் என்றாலும் செய்தியை உறுதிபடுத்திக் கொண்டு எழுதுங்கள்//

இங்கதான் சிக்கலே. எனக்கு ஓபராவையும் தெரியாது, டாமியையும் தெரியாது! கேட்ட நண்பர், ஆமாங்க நானும் கேள்விப்பட்டேன்னாரு. எடுத்துப் போட்டுட்டேன்! ஸாரி நண்பா. திருத்தி விடுகிறேன்.. ஒரு குறிப்பு போட்டுடறேன்! ஓகே?

Dr.Sintok said...

//நேரில் பார்த்த மாதிரி எழுதுவது சுவாரசியமாக இருக்கும் என்றாலும் செய்தியை உறுதிபடுத்திக் கொண்டு எழுதுங்கள்.//நம்ம பாராவுக்கும் இது பொருந்தும்......:)

பரிசல்காரன் said...

@ சிண்டோக்

மொத பாரா கரெக்ட் பண்ணீட்டேன், மூணாவது பாரா நான் சாட்சி- உண்மைதான்.

நீங்க சொல்றது ரெண்டாவது பாராவா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்,

இனவாதம் என்பது மிகவும் கொடூரமான விஷயம். இது மனிதனுக்கு மட்டுமே உண்டு. ஒரு கழுதை மற்ற ஒரு கழுதையை விலக்கியது இல்லை.

ஒரு மயில் தோகை குறைவாக இருக்கும் மற்றொரு மயிலை விலக்கியது இல்லை.

ஆனாலும் இது போன்ற சம்பவங்களை கேட்கும் பொழுது ஏதோ எனக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. நம் மனித இனம் என நினைப்பதாலோ என்னவோ..தெரியவில்லை.

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ் பர்க்கில் நடந்த சம்பவம் போன்று பாஸிட்டிவான விஷயங்களை எழுதுங்கள்.

இரண்டாம் துணுக்கில் அந்த ஆப்ரிக்கரை குறிக்க நீங்களும் ’கறுப்பர்’ என குறிப்பிட வேண்டுமா?

நாமே இப்படி இருந்தால் நிறவாதமும் இனவாதமும் ஒழியுமா?

நிறமற்ற இனமற்ற
ஸ்வாமி ஓம்கார்

ILA (a) இளா said...

4..5..6..

Mahesh said...

//ஒரு கழுதை மற்ற ஒரு கழுதையை விலக்கியது இல்லை.
//

பாயிண்டு !!!

Cable சங்கர் said...

அதெப்படி நீங்க ஆப்பிரிக்க அமெரிகக்ரை கறுப்பர்னு சொல்லலாம்..?

அப்பாடி இன்னைக்கு ஒரு ப்ரச்சனை கிடைச்சிருச்சு..:)

தராசு said...

ஒன், டூ, த்ரீ,

கெட் செட், கோ

வல்லிசிம்ஹன் said...

ஆப்ரிக்க அமெரிக்கர் செய்தி கைகளைத்தட்ட வைத்தது. நன்றி பரிசல்.

பரிசல்காரன் said...

@ ஸ்வாமி ஓம்கார்

//இரண்டாம் துணுக்கில் அந்த ஆப்ரிக்கரை குறிக்க நீங்களும் ’கறுப்பர்’ என குறிப்பிட வேண்டுமா?//

கறுப்பு குறைபாடு என்று நான் நினைக்காததால் அப்படி குறிப்பிடுகிறேன். அதை குறை என்று நினைப்பதால் உங்களுக்கு தவறாகப் பட்டிருக்கிறது.

:-)))

@ இளா

சரி!

@ மகேஷ்

அதுசரி!

@ கேபிள் சங்கர்

கருப்புன்னா கேவலம்கற பொதுப்புத்திதான் உங்களை இப்படி கேட்க வைக்குது. மாற்று சிந்தனையை வளர்த்துக்கோங்க.. (எப்படி?)

நன்றி தராசு & வல்லிசிம்ஹன்!

Unknown said...

ரொம்ப வேலையோ அண்ணா?? மூணாவதுல நீங்க எதாவது செஞ்சிருக்கனும் பாஸ்...

Beski said...

ரெண்டுல வற்ர கேப்டன் கவர்ந்துவிட்டார்.
---
மூனு மேட்டர் சுவாரஸ்யம்.

இப்படி ரிங்டோன் வச்சே காமெடி பண்றவங்களும் இருக்காங்க. உதாரணத்துக்கு, நம்ம நண்பன் ஒருவன் மேசேஜ் டோனா டொய்ங், பார்ரா, ஸ்ஸ்ப்பா... இப்படிப்பட்ட ரிங்டோன்களை வைத்துக்கொண்டு அவனுடைய ஆபீஸ் மீட்டிங்கில் உட்கார்ந்துகொள்வான். முன்னால் யாராவது பேசிக்கொண்டிருக்கும்போது மெசேஜ் ‘டொய்ங்’ என வரும்போது இவனது சுற்றம் மட்டும் அடக்க முடியாமல் சலசலக்கும். சில நேரங்களில் சரியாகப் பேச்சுடன் பொருந்தும்போது சிலரால் சிரிப்பை அடக்க முடியாமல், எழுந்து வெளியே ஓடுவதும் நடந்திருக்கிறதாம்.
---
பகிர்தலுக்கு நன்றி.

பரிசல்காரன் said...

@ ஸ்ரீமதி

நான்தான் ஃபோன் பண்ணினேனே.. அந்த நண்பர்தான் அத சரியா பயன்படுத்திக்கல!

@ எவனோ ஒருவன்

சிரிப்பா இருக்குல்ல...

நர்சிம் said...

ரிங் டோன் மேட்டர் கலக்கல்..

எனக்குத் தெரிந்த ஒரு அக்கவுண்டண்ட் அவரோட நம்பர கூப்ட்டா காலர் ட்யூன்ல இத வச்சிருக்காரு

“வரும்..ஆனா..வராது”

பணம் எப்ப கிடைக்கும்னு கேட்டுப் போன் பண்ற பார்ட்டிகள் பேசாமலே வச்சுரவேண்டியது தான்.

Unknown said...

//.. எவனோ ஒருவன் said...

ரெண்டுல வற்ர கேப்டன் கவர்ந்துவிட்டார்.
---
மூனு மேட்டர் சுவாரஸ்யம். ..//

ரிப்பீட்டு..

Prabhu said...

முதல் ரெண்டு மேட்டர் உண்மையா? இவ்வளவு நல்ல விஷயங்கள் உண்மையா இருக்குமான்னு சந்தேகம் தான்.

////கறுப்பு குறைபாடு என்று நான் நினைக்காததால் அப்படி குறிப்பிடுகிறேன். அதை குறை என்று நினைப்பதால் உங்களுக்கு தவறாகப் பட்டிருக்கிறது.////

இந்த அப்ரோச் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு. உயரம், குள்ளம் மாதிரி உருவ அடையாளம். அவ்வளவுதான்.

அமுதா கிருஷ்ணா said...

இனவாதம் பேசுகிறவர்களை அப்படியே நடுக்கடலில் தள்ளணும்...

R.Gopi said...

//தயவுசெய்து உங்கள் உடமை ஏதுமிருப்பின் எடுத்து வாருங்கள். உங்களுக்காக கேப்டன் முதல் வகுப்பில் சீட் ஒதுக்கி காத்திருக்கிறார். இன்றைக்கு நீங்கள் எங்கள் விருந்தினர்”

சுற்றியமர்ந்தவர்களெல்லாம் ஒருநிமிடம் தொடர்ந்து கைதட்டினார்கள்!//

சூப்ப‌ர் நெத்திய‌டி... இதோ நானும் அந்த‌ கைத‌ட்ட‌லில் இணைகிறேன்...

//‘நல்ல நேரத்துல கூப்டீங்க பாஸூ’ம்பாரு இப்பவும் என்னைப் பார்த்தா!//

ந‌ல்லா பூந்தேய்யா ந‌டுவுல‌... ல‌ஞ்ச‌ பூஜையில் ப‌ரிச‌ல்...

நல்லா கீதுபா....

Cable சங்கர் said...

/கருப்புன்னா கேவலம்கற பொதுப்புத்திதான் உங்களை இப்படி கேட்க வைக்குது. மாற்று சிந்தனையை வளர்த்துக்கோங்க.. (எப்படி?)
//

அப்ப பிரச்சனை கிடையாதா..? நான் விட மாட்டேன்.. அது எப்படி பொது புத்தின்னு சொல்லலாம்.?

Romeoboy said...

அது என்னவோ உலகத்துல இனவாதம் என்றாலே அது கறுப்பர் வெள்ளையர் என்கிற சுற்றுக்குள் தான் முதலில் தொடங்குகிறது.

என்னவோ சரி 3 விசயமும் சூப்பர் .

Sridhar V said...

//இங்கதான் சிக்கலே. எனக்கு ஓபராவையும் தெரியாது, டாமியையும் தெரியாது! //

கூகுள் இருக்கையில் கவலையென்ன :) விரல்நுனியில் தகவல்கள் கிடைச்சிடுதே.

உரிமை துறப்பு (Disclaimer)க்கு நன்றி பரிசல் :)

sriram said...

//கறுப்பு குறைபாடு என்று நான் நினைக்காததால் அப்படி குறிப்பிடுகிறேன். //

இது உண்மையில் குறைபாடே கிடையாது. மெலனின் என்கிற பிக்மெட் கம்மியா இருந்தா வெள்ளைத்தோல், அதுவே குறையில்லாமல அதிகமாக இருந்தால் கருப்புத் தோல்.

Scientific ஆ சொன்னா கருப்புத் தோலில் குறைபாடு ஏதும் இல்லை
குறை மனிதர்களின் மனங்களில் இருக்கு

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

செந்தில் நாதன் Senthil Nathan said...

Sriram நல்ல தகவல்...
//
கறுப்பு குறைபாடு என்று நான் நினைக்காததால் அப்படி குறிப்பிடுகிறேன். அதை குறை என்று நினைப்பதால் உங்களுக்கு தவறாகப் பட்டிருக்கிறது.
//
நானும் உங்க பக்கம் தான் தலைவா.. நான் அமெரிக்கா வந்த பிறகு அவங்கள பத்தி நெறைய தெரிஞ்சுகிட்டேன்.. ரெம்பவே பாசகார பசங்க.. :-)

செந்தில் நாதன் Senthil Nathan said...

four..five..six eppo?

சுரேகா.. said...

அந்த் இரண்டாவது மேட்டர்தான் சூப்ப்ர்!
(அது உண்மையிலேயெ நடந்ததா?)

மூன்றாவது...
அந்த ஆளை அப்படியே லஞ்ச ஒழிப்புத்துறைல பிடிச்சுக்குடுக்காம...
! :(