Tuesday, September 15, 2009

அவியல் 15.09.09

அறிவிப்பு:-

இந்த அவியல் சென்னை - உரையாடல் பட்டறைக்குப் போகுமுன் எழுதி வைத்திருந்தது. உரையாடல் சிறுகதைப் பட்டறை குறித்த அனுபவங்கள் இரு தினங்களுக்குள்ளாக வெளிவரும் என்பதை அனைவர்க்கும் அறிவித்துக் கொள்கிறேன்!

************************************

கே
ரளா, திருச்சூர் மாவட்டம் ஷொர்ணூர் அருகே ‘பாரதப்புழை’ எனப்படும் மிகப் பெரிய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஆற்றில் அடிக்கடி நடக்கும் மணல் திருட்டைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் பலவிதமான போராட்டங்கள் நடத்தி, கடைசியாக மணல் நிரப்பும் போராட்டம் நடத்தலாம் என்று முடிவெடுத்தார்கள். அதாவது லாரி லாரியாக மணல்களைக் கொண்டுவந்து, ஆற்றின் கரையோரத்தில் கொட்டி சமன்படுத்தலாம் என்று போராட்டக் குழுவினர் நினைத்தார்கள். செய்தும் காட்டினார்கள்.

இதை என்னிடம் சொன்னவரிடம் கேட்டேன்.. “ரொம்ப நல்ல விஷயமாச்சே..”

“அதான் இல்ல...”

“ஏன்?”

“பதினைஞ்சு இருவது லாரி நிறைய மணலைக் கொண்டுவந்து, ட்ராஃபிக் ஜாமாக்கி எல்லாரோட கவனத்தை இதுல திருப்பறதுதான் திட்டம். போராட்டத்துக்கு முதல்நாள் நைட் அவ்ளோ மணலுக்கு என்ன பண்ணன்னு வேற வழியில்லாம, இரவோட இரவா யாருக்கும் தெரியாம அங்கிருந்தே மணலை அள்ளி லாரில போட்டுட்டு அடுத்த நாள் வந்து அங்கியே கொட்டினாங்களாம்....!”

அதுசரி!

************************

கிரேசி கிரி பற்றி எழுதி ரொம்ப நாளாச்சு. இவன் டூவீலர் ஓட்டிக் கொண்டு போகும்போது யாரையோ சடக்கென்று முந்த அவர் தடுமாறி ‘என்னய்யா வண்டி ஓட்டற?’ என்று கேட்டிருக்கிறார். இவன் “ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ங்க” என்றுவிட்டு வந்திருக்கிறான். இது நடந்தது ரொம்ப நாளைக்கு முன். லேட்டஸ்டாக யாரோ இதே போல கோவமாக ‘எப்படி ஓட்டற பாரு’ என்று திட்டியதற்கு இவன் சொன்னானாம்.. “சின்ன வயசுலயே பழகீட்டேன்ல..”

***********************

நினைத்தாலே இனிக்கும் விமர்சனத்தில் ஒரு கண்டனத்தை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன். படத்தில் நாயகர்கள் சினிமாவுக்குப் போகிறார்கள். அங்கே திருநங்கைகளுக்கு நடுவே இவர்கள் அமர்ந்திருப்பது போலவும் அதனால் இவர்கள் அவதிப்படுவது போலவும் கீழ்த்தரமாக நகைச்சுவை என்ற பெயரில் காட்டியிருக்கிறார்கள். எத்தனை வருடப் பழைய காமெடி அது.. இன்னுமா இப்படி அவர்களைக் கேவலப்படுத்துவது?

படத்தில் கடுப்பேற்றிய இன்னொரு அம்சம் பின்னணி இசை. ஒரே இரைச்சலாகவே இருந்தது.

*************************


எங்கள் ஊரான உடுமலைப்பேட்டையில் குட்டைத் திடலில்தான் மகாத்மா காந்தி சிலையை வைத்திருப்பார்கள். இந்த முறை அந்த வழியாகப் போகும்போது உடன் வந்தவர் கேட்டார். “காந்தி எப்படி இருக்காருன்னு பார்க்கலாம்” நான் சொன்னேன்.. “அவர் அப்படியேதான் இருக்காரு.. நாமதான் மாறிட்டோம்...”

முக்கியமான விஷயம்.. மிகப்பெரிய பள்ளமாக, அழுக்கும் குப்பை நீருமாய் குட்டையாய் இருந்த அந்த இடத்தை காந்தி வந்துதான் மேடாக்கினார் என்பது உண்மை.

***********************

இந்த வார எப்படி இப்படியெல்லாம்..

ஏதோ ஒரு ஜாலியான வாக்குவாதத்தில் என் மனைவியைப் பற்றி ஏதோ சொன்னதும் அவருக்கு சப்போர்ட்டாக என் மகள் மீராவும் எதையோ சொன்னாள். நான் கேட்டேன்.. “உனக்கு முன்னாடியே உங்கம்மாவைப் பத்தி எனக்கும் தெரியும் மீரா..” என்றேன். டக்கெனச் சொன்னாள் அவள்:

“நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”

*****************

37 comments:

Unknown said...

// “நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”//


சபாஷ் மீரா.....

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?.....

ராஜா சந்திரசேகர் said...

உங்கள் மகள் சொன்னது அருமை பரிசல்

Thamira said...

கடைசிப்பகுதி : இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு இத வேற சமாளிக்க வேண்டியிருக்குமா? இருக்குறது பத்தாதா? அடச்சே.!

கைப்புள்ள said...

//“நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”//

நச்.
:)

கார்க்கிபவா said...

//கடைசிப்பகுதி : இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு இத வேற சமாளிக்க வேண்டியிருக்குமா? இருக்குறது பத்தாதா? அடச்சே//

ஹிஹிஹிஹி..அப்படின்னு வராம அடச்சே வந்தா எனக்கு கோவம் வருது சகா

எம்.எம்.அப்துல்லா said...

//“நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”

//

அண்ணே உங்க பொண்ணுக்கும் ஒரு பிளாக் ஆரமிச்சு குடுங்கண்ணே.

தராசு said...

//ஏதோ ஒரு ஜாலியான வாக்குவாதத்தில் என் மனைவியைப் பற்றி ஏதோ சொன்னதும் அவருக்கு சப்போர்ட்டாக என் மகள் மீராவும் எதையோ சொன்னாள். //

ஒண்ணு ஜாலியா இருக்கணும், இல்லண்ணா வாக்குவாதம் இருக்கணும்,

அதென்ன தலைவா ஜாலியான வாக்குவாதம்????????

வால்பையன் said...

//“நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”//


தேவையா இது!
நம்மளை வச்சு எப்பவும் அடுத்தவங்களை எடை போடக்கூடாது!

மீரா அவுங்க அம்மா மாதிரி புத்திசாலி!
உங்களை மாதிரி இல்ல!

தினேஷ் said...

மீரா டாப் டாக்...

‘பாரதப்புழை’ -- என்னத்த செய்ய

நினைத்தாலே இனிக்கும் -- திருந்த மாட்டானுக

மாதவராஜ் said...

தமிழ்ச்சினிமாவின் முகத்தில் அறையும் விதமாக, நினைத்தாலே இனிக்கும் படத்தை முன்வைத்து விமர்சனம் செய்ததை வரவேற்கிறேன்.

மீரா.... மீன்குஞ்சு!
ரசித்தேன்.

Prabhu said...

கேரளான்னு சொன்னதும் ஏதோ அழகான பொண்ணப் பத்தி சொல்வீங்கன்னு நெனச்சு ஏமாந்துட்டேன்!

கோபிநாத் said...

\\“நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”\\\

கலக்கல் மீரா ;)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சபாஷ் மீரா..:)

அன்பேசிவம் said...

தல, தேங்க்ஸ் என்னொட பதிவை சுட்டி காட்டியதற்க்கு. மீரா குட்டியை கேட்டதாக சொல்லவும்.

மண்குதிரை said...

meera sonnathai rasiththeen

unmaiyilee aval puththisaalithaan

Mahesh said...

மீராவிடம் மூக்குடைபட்ட பரிசல் வாழ்க !!

//முக்கியமான விஷயம்.. மிகப்பெரிய பள்ளமாக, அழுக்கும் குப்பை நீருமாய் குட்டையாய் இருந்த அந்த இடத்தை காந்தி வந்துதான் மேடாக்கினார் என்பது உண்மை.//

இல்லையே. அந்தக் குட்டையை நிரப்பி மேடாக்கரதுக்கு முன்னாடியே நடுவுல அந்த மண்டபம் இருந்ததே. பிற்பாடு முனிசிபாலிட்டி ஷாப்பிங் காம்ப்லக்ஸ் கட்டும்போது, மாரியம்மன் தேர் நோம்பிக்கு விளையாட்டு திடல் கட்ட, நாராயணகவி மணி மண்டபம் கட்டும்போதுன்னு கொஞ்சம் கொஞ்சமா மேடு ஆயிடுச்சு. சொல்லப்போனா, அந்தக் குளத்தை பராமரிச்சு இருக்கணும். நல்ல நீர் ஆதாரத்தை இழந்துட்டோம். :(

KarthigaVasudevan said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

கடைசிப்பகுதி : இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு இத வேற சமாளிக்க வேண்டியிருக்குமா? இருக்குறது பத்தாதா? அடச்சே.!//

ஒரே சிரிப்பா போச்சு ...மீரா பேச்சு. குட் பெண் குழந்தைனா அப்படித் தான் இருக்கணும் அம்மாவுக்கு சப்போர்ட்டா .

T.V.ராதாகிருஷ்ணன் said...

சபாஷ் மீரா

மங்களூர் சிவா said...

//
“பதினைஞ்சு இருவது லாரி நிறைய மணலைக் கொண்டுவந்து, ட்ராஃபிக் ஜாமாக்கி எல்லாரோட கவனத்தை இதுல திருப்பறதுதான் திட்டம். போராட்டத்துக்கு முதல்நாள் நைட் அவ்ளோ மணலுக்கு என்ன பண்ணன்னு வேற வழியில்லாம, இரவோட இரவா யாருக்கும் தெரியாம அங்கிருந்தே மணலை அள்ளி லாரில போட்டுட்டு அடுத்த நாள் வந்து அங்கியே கொட்டினாங்களாம்....!”

அதுசரி!
//

:)))

இரவுப்பறவை said...

இத நெனச்சு சிரிக்கறதா அழுகறதா?

மீரா - விளையும் பயிர்...

குட்ட மொக்கு நல்லா இருக்குங்களா?? :-)

Truth said...

//எப்படி இப்படியெல்லாம்..
சூப்பர் :-)

உங்களோட கிருஷ்ணகதா என்ன ஆச்சு?

Kumky said...

:--))))

Unknown said...

தங்கத் தலைவி மீரா வாழ்க... இப்பிடியே போட்டுத் தாக்கு கண்ணு... உங்கப்பாவுக்கு தன்னை மொக்கையாக்க யாருமில்லைன்னு நெனைப்பு

வரதராஜலு .பூ said...

//இந்த வார எப்படி இப்படியெல்லாம்..

ஏதோ ஒரு ஜாலியான வாக்குவாதத்தில் என் மனைவியைப் பற்றி ஏதோ சொன்னதும் அவருக்கு சப்போர்ட்டாக என் மகள் மீராவும் எதையோ சொன்னாள். நான் கேட்டேன்.. “உனக்கு முன்னாடியே உங்கம்மாவைப் பத்தி எனக்கும் தெரியும் மீரா..” என்றேன். டக்கெனச் சொன்னாள் அவள்:

“நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..///

அப்படிப்போடு

சூப்பரு

Cable சங்கர் said...

ஸ்மார்ட் ஆன பதில் :)

selventhiran said...

அடுத்த திருப்பூர் பதிவர் சந்திப்பிற்கு மீரா இல்லாமல் வரக்கூடாது என்று கட்டளை இடுகிறேன்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

//“நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”//
இதையே தான் பாராட்டணும்னு நினைத்தேன்
ஆனால் எல்லோரும் சொல்லிட்ட தாலே வேணாம்
அமிர்தவர்ஷிணி அம்மா மாதிரி அப்பபோ மீராவின் புத்திசாலி தனத்தை
குறிப்பிடவும் ரசிக்கும் படி இருக்கிறது

பாலகுமார் said...

“நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”

அருமை.. சூப்பர்.. கலக்கல்..

ச.பிரேம்குமார் said...

//நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”
//

உக்காந்து யோசிப்பாங்களோ??? ரொம்ப நாள் கழிச்சு பின்னூட்டம் போட்டே ஆகனும்னு நினைக்க வச்சிருச்சு மீராவின் இந்த குறும்பு. வாழ்த்துகள் மீரா

ச.பிரேம்குமார் said...
This comment has been removed by the author.
வெட்டிப்பயல் said...

//“நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”//

Kalakal :)

I liked this Avial :)

ப்ரியமுடன் வசந்த் said...

//எங்கள் ஊரான உடுமலைப்பேட்டையில் குட்டைத் திடலில்தான் மகாத்மா காந்தி சிலையை வைத்திருப்பார்கள். இந்த முறை அந்த வழியாகப் போகும்போது உடன் வந்தவர் கேட்டார். “காந்தி எப்படி இருக்காருன்னு பார்க்கலாம்” நான் சொன்னேன்.. “அவர் அப்படியேதான் இருக்காரு.. நாமதான் மாறிட்டோம்...”//

ஆமாங்க நானும் அந்தபக்கம் போகும்போதெல்லாம் யோசிச்சுருக்கேன்

அப்பறம் அந்த மாரியம்மன் கோவில் தேர் உலாவும் அந்த குட்டைத்திடலில் உலாவருவதும் அதன் மீது வாழை பழம் எறிவதும், திருவிழா நேர வான வேடிக்கையும் அந்த குட்டைத்திடலில் தான், நான் சைக்கிள் ஓட்டி பழகியதும் அந்த குட்டைத்திடலில் தான்,

Anonymous said...

அவியல்ல க்ரேஸி கிரியும் மீராவும் கலக்கல்.

Romeoboy said...

valli said...
// “நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”//


சபாஷ் மீரா.....

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?.....


repeat heaaaaa...


என்னுடையதும் கொஞ்சம் எட்டி பாருங்க .
http://ennaduidu.blogspot.com/2009/09/blog-post.html

நாஞ்சில் நாதம் said...

அவியல்ல க்ரேஸி கிரியும் மீராவும் கலக்கல்.

Saminathan said...

//“நீங்க பொறந்து இருவது வருஷம் கழிச்சுதான் எங்கம்மாவைப் பாத்தீங்க.. நான் பொறந்ததுலேர்ந்து அவங்களைப் பார்த்துகிட்டிருக்கேன்..”//

எப்படி இப்டியெல்லாம்...?

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லவங்க. எப்படியெல்லாம் மணல் திருடி விழிப்புணர்வு கொண்டு வர்றாங்க பாருங்க.

கிரி பத்தி ரெகுலரா எழுதுங்க பரிசல். நல்லாருக்கு.

நினைத்தாலே இனிக்கும் பார்க்கலாமா, வேணாமா....

மீரா உங்க பொண்ணு. அதான் இப்படி.