Tuesday, September 1, 2009
அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டம் என்றால் உங்களுக்கு என்ன ஞாபகத்து வரும்?
எனக்கு ஒரு சம்பவம்தான் எப்போதும் நினைவிலிருக்கும்.
நகரத்து சந்தடிகள் இல்லாத ஒரு கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவன் பாண்டி. (இது உண்மையான பெயரல்ல) 34, 35 வயது. திருமணமாகவில்லை. ‘இப்படி வேலையெதுவும் பார்க்காம வெட்டியா ஊரைச் சுத்தறியே’ என்ற பெற்றோரின் ஏச்சு. ஒருமாதிரி பித்துப் பிடித்தவனைப் போலத்தான் திரிந்து கொண்டிருந்தான் அவன்.
ஊர் பிரசிடெண்டைப் பார்த்து ஏதாவது வேலை கேட்கலாம் என்று போனான். அவரோ வேறொரு கவலையில் இருந்தார்..
ஊர் பிரசிடெண்டுடைய பெண்ணை, திருமணத்துக்காக வந்து பார்த்துச் சென்ற மாப்பிள்ளை வீட்டார்கள், பெண் பிடித்திருப்பதாய் சொன்னாலும், இவரால் முடியாத தொகை + நகையை வரதட்சிணையாகக் கேட்டிருக்கிறார்கள். நல்ல இடம். ஆனால் அவ்வளவு பணம் புரட்ட வாய்ப்பில்லை என்பதால் அந்த வரனையே மறந்துவிடலாமா என்ற கவலையிலிருக்கிறார் அவர்.
இவன் வேலை கேட்கப்போக ‘கட்டிங்குக்கு அம்பது ரூவா வெச்சுக்க’ என்று சொல்லி காசைக் கொடுத்து அனுப்பிவிடுகிறார் அவர். (கட்டிங் என்றால் மது அருந்துதல் என்பதறிக!)
டாஸ்மாக்குக்கு இரண்டு கிலோ மீட்டர் தள்ளிப் போக வேண்டும். வெறுப்போடு முக்கியச் சாலையிலுள்ள திட்டு ஒன்றின் மீது அமர்கிறான். ஏதேனும் டூ வீலர், வேன், லாரி வந்தால் தொற்றிக் கொள்ளலாம் என்று.
ஒன்றிரண்டு டூவீலர்கள் அவன் கைகாட்டியும் கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்தில் வருகிறது ஒரு டாடா சுமோ. இவன் கைகாட்டாமலே இவனருகே வந்து நிற்கிறது.
“பக்கத்துல ஒயின் ஷாப் எங்க இருக்கு?” - காரிலிருந்து எட்டிப்பார்த்த ஒரு தலை கேட்கிறது.
‘ஆஹா’ என மனசுக்குள் மகிழ்ந்தவனாய் - வழிந்தபடி - “நானும் அங்கதான் போகணும்க” என்கிறான் இவன். எட்டிப்பார்த்த தலைக்குச் சொந்தக்காரர் திரும்பி மற்றொரு தலையைப் பார்க்க அவர் சரியென்பதுபோல ஆமோதிக்க ஏற்றிக் கொள்கிறார்கள்.
“நீங்க இந்த ஊரா?” - காரில் இருந்த ஒருவர் கேட்கிறார்.
“ஆமாங்க” என்கிறான் இவன்.
“இந்தப் பக்கம் இப்படித்தான் எப்பயுமே காத்து இவ்ளோ வேகமா வீசிகிட்டே இருக்குமா?”
“ஆமாங்க... எல்லாமே பொட்டக்காடு. சுத்தியும் ஒரு கட்டடமும் இல்ல, ஒண்ணுமில்ல. வெறும் காத்துதான் அடிக்கும்”
கார் டாஸ்மாக் போய் நின்று சரக்கோடு பேச்சு ஆரம்பமானபோதுதான் இவனுக்குத் தெரிகிறது.. அவர்கள் காற்றாடி ஆலை வைக்க நிலம் தேடிக் கொண்டு வந்தவர்கள் என்று.
அடித்தது ஜாக்பாட் என்று நினைத்துக் கொள்கிறான். இவன் வருந்தியபோதெல்லாம் கட்டிங்குக்கு காசு கொடுத்த ப்ரசிடெண்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும், அதுமட்டுமின்றி அவரில்லாமல் இது சாத்தியமுமில்லை என்பதால் அவரையும் ஆள்விட்டு அழைத்து வருகிறான்.
எந்த எந்த இடம் யார் யாருடையது, அந்த நிலத்தின் வில்லங்கங்கள், மூலப் பத்திரங்கள் எல்லாம் சேர்க்கும் பொறுப்பு தன்னுடையது என்று ஏற்றுக் கொள்கிறான். ஊரில் எல்லாரிடமும் பேசி, நிலத்தின் மதிப்பை நிர்ணயம் செய்வதிலிருந்து இந்த வேலையை முடித்துக் கொடுக்கும் பொறுப்பை ப்ரசிடெண்ட் ஏற்றுக் கொள்கிறார்.
ஏக்கர் இரண்டாயிரத்துக்குக் கூட போகாது என்று நினைத்திருந்த நிலங்கள் எல்லாம் தாறுமாறான விலைக்குப் பேசப்பட்டது. இரண்டே மாதத்தில் கடகடவென வேலைகள் நடந்தேறின. செண்ட் ஒன்றுக்கு இவ்வளவு என இருவருக்கும் கமிஷன்!
இப்போது அவன், அவனல்ல. அவர்.
சொந்த வீடு கட்டி, கார் வாங்கி, சொந்தக்காரர்கள் ‘35 எல்லாம் வயசா என்ன மாப்ள? உம்னு சொல்லு எம்பொண்ணத் தாரேன்’ என்று இரண்டு காலிலும் நிற்கிறார்கள். இவன் அதையெல்லாம் சிரி்ப்போடு - வேண்டாமென்று மறுத்து - தான் சுற்றித் திரிந்தபோது தன்னை நன்றாக கவனித்துக் கொண்ட பெற்றோரைப் பார்த்துக் கொள்வதே போதுமென இருக்கிறான். இருக்கிற பணத்தில் ஒரு பகுதியை குறைந்த வட்டிக்கு விட்டும், தன் விவசாய நிலத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.
பிரசிடெண்ட் வரதட்சிணை அதிகம் கேட்ட அந்த மாப்பிள்ளையைப் புறந்தள்ளி நகரத்தில் மிகப் பெரிய பிரமுகர் ஒருவரது மகனை மாப்பிள்ளையாக்கிக் கொண்டார். தடபுடலாக ஊரே வியக்கும் வண்ணம் திருமணம்.
‘அன்றைக்கு அவன் அங்கு வந்து உட்காராமல் இருந்தால் இதெல்லாம் கிடைக்குமா.. அதிர்ஷ்டக்காரண்டா அவன்’ என்கிறார்கள்.
அதிர்ஷ்டமென்பதையெல்லாம் மீறி இப்படி இரு சந்தர்ப்பம் கிடைத்தபோது வேலை செய்த அவன் மூளையும், இரண்டே மாதங்களில் பேயாய் உழைத்து முடித்துக் கொடுத்த அவன் திறத்தையும்தான் எனக்குப் பாராட்டத் தோன்றியது.
ஞாயிறு் ஊருக்கு அந்த வழியாகப் போகும்போது சாலையோரம் இருக்கும் அந்தத் திட்டைப் பார்த்தேன்.
யாரோ ஒருவன் பீடியோடு அமர்ந்திருந்தான்.
.
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
//‘35 எல்லாம் வயசா என்ன மாப்ள? உம்னு சொல்லு எம்பொண்ணத் தாரேன்’ என்று இரண்டு காலிலும் நிற்கிறார்கள்.//
அதுக்குண்ணு ஒரு அதிர்ஷ்டம் வேணும் தல..,
//
சொந்த வீடு கட்டி, கார் வாங்கி, சொந்தக்காரர்கள் ‘35 எல்லாம் வயசா என்ன மாப்ள? உம்னு சொல்லு எம்பொண்ணத் தாரேன்’//
சொல்லுவாங்க ஏன்னா பணம் இருக்கே!
//
என்று இரண்டு காலிலும் நிற்கிறார்கள். இவன் அதையெல்லாம் சிரி்ப்போடு - வேண்டாமென்று மறுத்து - தான் சுற்றித் திரிந்தபோது தன்னை நன்றாக கவனித்துக் கொண்ட பெற்றோரைப் பார்த்துக் கொள்வதே போதுமென இருக்கிறான். இருக்கிற பணத்தில் ஒரு பகுதியை குறைந்த வட்டிக்கு விட்டும், தன் விவசாய நிலத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.
//
நல்ல முடிவு எடுத்து இருக்கிறா(ன்) இல்லே இருக்கிறார்!
\\அதிர்ஷ்டமென்பதையெல்லாம் மீறி இப்படி இரு சந்தர்ப்பம் கிடைத்தபோது வேலை செய்த அவன் மூளையும், இரண்டே மாதங்களில் பேயாய் உழைத்து முடித்துக் கொடுத்த அவன் திறத்தையும்தான் எனக்குப் பாராட்டத் தோன்றியது\\
நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்
//
அதிர்ஷ்டமென்பதையெல்லாம் மீறி இப்படி இரு சந்தர்ப்பம் கிடைத்தபோது வேலை செய்த அவன் மூளையும், இரண்டே மாதங்களில் பேயாய் உழைத்து முடித்துக் கொடுத்த அவன் திறத்தையும்தான் எனக்குப் பாராட்டத் தோன்றியது
//
அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும் போதாது!
அறிவும் போட்டி போட்டு கொண்டு வேலை செய்துள்ளது.
அதாவது சமயோசித புத்தியும் கூட செம வேலை செய்துள்ளது
என்பது இங்கே குறிப்பிடத்தக்கது!!
ஒவ்வொருவருக்கும் எதாவது வகையில் அதிர்ஷ்டம் கதவை தட்டிக்கொண்டு தான் உள்ளது. பயன் படுத்த தெரிய வேண்டும்!
அவன் / அவர் அந்த மேட்டை விட்டு நகர்ந்தது தான், அதிர்ஷ்டத்திற்கு காரணம்!
--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு
http://www.vijayashankar.in
\\அதிர்ஷ்டமென்பதையெல்லாம் மீறி இப்படி இரு சந்தர்ப்பம் கிடைத்தபோது வேலை செய்த அவன் மூளையும், இரண்டே மாதங்களில் பேயாய் உழைத்து முடித்துக் கொடுத்த அவன் திறத்தையும்தான் எனக்குப் பாராட்டத் தோன்றியது\\
இதுக்கு பாராட்டலேன்னா அப்பறம் எதுக்கு பாராட்றது?
அதிர்ஷ்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....................
ஸ்பாண்டெனியஸாக யோசித்ததில்தான் அவன் வெற்றி பெற்றான்.. அது மட்டுமில்லாமல். அதை பணமாக்க, யாரை சேர்த்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அவர்களையும் சேர்த்து கொண்டு, உழைப்பை மூலதனமாக்கியது வெறும் அதிர்ஷடம் என்று மட்டும் சொல்ல கூடாது
சரியான உழைப்பு, எதிர்காலம் குறித்த நுண்ணிய உணர்வு, ஒழுக்கம், நேர்மை, இப்படி எல்லாம் இருந்தால் தான் தலைவரே முன்னேற முடியும்.
அதிர்ஷ்டம் எல்லாம் சோம்பேறிகளின் கூப்பாடு.
@ சுரேஷ்
ஏன்? ஏன் இப்படி?
@ ரம்யா
நன்றி ரம்யா.
@ நிகழ்காலத்தில்
நன்றி சிவா!
@ ரம்யா
//சமயோசித புத்தியும் கூட செம வேலை செய்துள்ளது
என்பது இங்கே குறிப்பிடத்தக்கது!!//
கரெக்ட்!
@ விஜயஷங்கர்
//அவர் அந்த மேட்டை விட்டு நகர்ந்தது தான், அதிர்ஷ்டத்திற்கு காரணம்!//
நிஜம்!
@ மகேஷ்
கரெக்டு!
@ அத்திரி
ம்ம்ம்
@ கேபிள் சங்கர்
கூட்டும் முக்கியம்.. இல்லியா தல?
@ தராசு
சரியா எடை போட்டுச் சொல்லிருக்கீங்க!
//அதிர்ஷ்டமென்பதையெல்லாம் மீறி இப்படி இரு சந்தர்ப்பம் கிடைத்தபோது வேலை செய்த அவன் மூளையும், இரண்டே மாதங்களில் பேயாய் உழைத்து முடித்துக் கொடுத்த அவன் திறத்தையும்தான் எனக்குப் பாராட்டத் தோன்றியது.//
இதுதான் திறமையை சரியான நேரத்தில் வெளிப்படுத்தணும்.
nALLA organise panna therinthavanukku thaan luck adikkum
இந்த கதையில் நீங்க அதிர்ஷ்டம் என்று சொல்வது பாண்டியின் சமயத்துக்கு ஏற்றது போல் யோசிக்கும் திறமையை தான் ....
அதிர்ஷ்டகாரனுக்கு தொடர்ந்து அதிர்ஷ்டம் அடித்து கொண்டு இருந்தால் தான் அவன் அதிர்ஷ்டகாரன் .......
என்ன செய்வது தொடர்ந்து ஒருவனுக்கே அதிர்ஷ்டம் அடிப்பது இல்லை
இதை கவிதை வடிவில் சொல்லி இருந்தால் இன்னும் நல்ல இருந்திருக்கும் ...
charlie chaplinukku 70 vayasu la oru chinna ponnai marriage panninare..... athukku peyar ennanga????
நம்மால் காரணம் சொல்ல முடியாத விஷயஙக்ளுக்கு கடவுளையோ, அல்லது அதிர்ஷ்டம் என்றோ பெயரிட்டு கொள்கிறோம்..
"கார்க்கி said...
நம்மால் காரணம் சொல்ல முடியாத விஷயஙக்ளுக்கு கடவுளையோ, அல்லது அதிர்ஷ்டம் என்றோ பெயரிட்டு கொள்கிறோம்.."
என்றோ செய்த வேலைக்கு என்றோ பலன் கிடைக்கும் போது காரணம் தெரியாமல் அதை அதிர்ஷ்டம் என்று சொல்லி விடுகிறோம்
:)))))))))))
// என்றோ செய்த வேலைக்கு என்றோ பலன் கிடைக்கும் போது காரணம் தெரியாமல் அதை அதிர்ஷ்டம் என்று சொல்லி விடுகிறோம் //
சரியாதான் சொல்லிருக்காரு.
என்ன இருந்தாலும் இந்த மாதிரி சீக்கிரம் வளர சுக்கிரன் எங்கயோ அடிச்சிருக்கணும்.
டாஸ்மாக் போனா அதிர்ஷ்டம் அடிக்குமுன்னு சொல்றீங்க? ரைட்டு தலைவா..
அந்த திட்டு எங்கேயிருக்குன்னு சொல்லுங்க! ”உங்ககிட்ட” அம்பது ரூபா வாங்கிட்டு நானும் போய் உட்காந்துகிறேன்!
"ஜானி வாக்கர் said...
// என்றோ செய்த வேலைக்கு என்றோ பலன் கிடைக்கும் போது காரணம் தெரியாமல் அதை அதிர்ஷ்டம் என்று சொல்லி விடுகிறோம் //
சரியாதான் சொல்லிருக்காரு.
என்ன இருந்தாலும் இந்த மாதிரி சீக்கிரம் வளர சுக்கிரன் எங்கயோ அடிச்சிருக்கணும்."
AAPPU ADIKKAMAL VITTARE.... ATHU VARAIKKUM SANTHOSHAM ENTRU POGA VENDIYATHU THAN
//இதை கவிதை வடிவில் சொல்லி இருந்தால் இன்னும் நல்ல இருந்திருக்கும் ...//
லக்கி வந்துட்டே இருக்காராம்...
//அதிர்ஷ்டமென்பதையெல்லாம் மீறி இப்படி இரு சந்தர்ப்பம் கிடைத்தபோது வேலை செய்த அவன் மூளையும், இரண்டே மாதங்களில் பேயாய் உழைத்து முடித்துக் கொடுத்த அவன் திறத்தையும்தான் எனக்குப் பாராட்டத் தோன்றியது.//
உண்மைதான்
The harder you try - the luckier you get என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஆனாலும், கார்க்கி சொல்வது போல் சில சமயம் நமக்கே ஏன் என்று தெரியாமல் நல்லது நடக்கும். கேள்வி கேக்காம சரின்னு அதப் புடிச்சுக்கணும் :)
அனுஜன்யா
யோவ் மேவி, என்னது இதை கவிதை வடிவில் ....
நா இங்க வரவேணாம்னா நேர சொல்லுங்க :)
என்ன திடீர்னு அதிர்ஷ்டம் பத்தி? ஏதாவது பெரிசா ஜெயிச்சீங்களா?
//அந்த திட்டு எங்கேயிருக்குன்னு சொல்லுங்க! ”உங்ககிட்ட” அம்பது ரூபா வாங்கிட்டு நானும் போய் உட்காந்துகிறேன்!//
-வால் அண்ணா, பக்கத்துல எனக்கும் ஒரு துண்டு போட்டுருங்க..
"அனுஜன்யா said...
யோவ் மேவி, என்னது இதை கவிதை வடிவில் ....
நா இங்க வரவேணாம்னா நேர சொல்லுங்க :)"
தல இதேக்கே பயந்த எப்புடி ????? வாழ்க்கையில் ஆயிரம் வரும் எல்லாத்தையும் பார்த்து தான் அகனும் .........
அந்த கொடுமை எல்லாம் நீங்க பார்த்து தான் ஆகனும்....ஹீ ஹீ ஏஏஏ
விளையாட்டுக்கு சொன்னேன் ...... கரு நல்ல இருக்கு ... கட்டாயம் நல்ல கவிதையாய் வரும் ..........
பரிசல் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு
குடி குடியை கொடுக்கும். :))
:-)))
பரிசலானந்தா ஃபுல் ஃபார்முல இருக்கீங்க... கதைகள் ரெடி... காவியும் கமண்டலமும் இருந்தால் காத்தாலை இல்லாமலே காசு கொட்டும்... கிளம்பிருவோமா..!
பிரசிடெண்ட் தன் பொண்ணையே அந்த அதிஷ்ட காரனுக்கு கொடுத்துடுவார்னு நெனைச்சேன்........
நான் இதுல வாலு கட்சி. திட்டு எங்க இருக்குன்னு சொல்லுங்க !
நல்லாருக்கு. தலைப்பு "அதிர்ஷ்டம்?" னு இருந்திருக்கலாம்.
Nice masala both the pic r good
http://gkpstar.googlepages.com/
wishes
Post a Comment