Saturday, September 12, 2009

ஈரம் - விமர்சனம்


ஒரு அபார்ட்மெண்டில் குறிப்பிட்ட ஃப்ளாட்டிலிருந்து வழிகிற நீர் ஃப்ளாட்டை முழுதும் ஈரமாக்கி பைப்பில் வழிய, என்னவென்று பார்க்கிறார் வாட்ச்மேன். படத்தின் நாயகி சிந்துமேனன் குடியிருக்கும் ஃப்ளாட்டிலிருந்து வழிகிறது நீர்.

‘மேடம் மேடம்’ என்று கதவு தட்டுகிறார்..

அங்கே.....

**************************

கல்யாணியம்மா பாத்திரம் கழுவ பைப்பைத் திறக்கிறார். தண்ணீர் வரவில்லை.
வெறுப்போடு மாவரைக்க கிரைண்டரைப் போடுகிறார். மின்சாரமில்லை. அப்போது தொலைபேசி மணி ஒலிக்கிறது. போய் எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். திடீரென்று சிங்க்’கில் திறந்து வைத்திருக்கும் பைப்பிலிருந்து தண்ணீர் வருகிறது. ஓரத்தில் வைத்திருக்கும் கரண்டி வழியே, வழிகிற நீர்.. நேராக.....

*****************************

தியாகராஜன் வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார். திடீரென புயல் காற்று வீசுகிறது. மழைத்துளி கன்னத்தில் விழுகிறது. குடையைத் திறக்க முயற்சிக்கிறார். குடை அவர் கையை விட்டுப் பறந்து செல்கிறது. பறந்து செல்லும் குடையின் முனை அவரை நோக்கி நிற்கிறது. எதுவோ, என்னவோ அவரைக் கலவரப்படுத்த மிரள்கிறார்.. இரண்டடி பின்வாங்குகிறார். திடீரென அந்தக் குடை பறந்து வந்து அவர் கழுத்தில்....

**************************

இந்த மூன்று சம்பவங்களுக்கும் தொடர்புடைய மிஸ்டர். எக்ஸைத் தேட, அவன் சிக்குகிறான். ஒரு தியேட்டரில்... அவனைத் தொடரும் அசிஸ்டெண்ட் கமிஷனர், டாய்லெட்டில் அவன் பயங்கரமான தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவனைத் தாக்குவது யாரென்று பார்க்கிற ஏ.சி-க்கு அதிர்ச்சி....

*********************

கொலைகளை விசாரிக்கும் அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆதி. அவ்வப்போது நடக்கும் சம்பவங்களிலிருந்து தனக்கும் சிந்துவுக்குமான காதலை அவர் நினைவு கூர்வது நல்ல திரைக்கதை.


மிருகம் படத்தில் நடித்த ஆதி, இதில் ரொம்ப நல்லா பண்ணிருக்காரு. அண்டர்ப்ளே. ஆனா குரல்ல போலீஸ் ஆஃபீஸரா இருக்கறப்ப காமிக்கற அதே விறைப்பை, காதல் பண்ணும்போதும் காமிக்கறாரு. மத்தபடி நல்லா பண்ணிருக்காரு. (குரல் அவரோடதா.. உண்ணி மேனனா? மலையாள வாடை!)

ஹீரோயின் - சிந்து மேனன். ஸ்பெஷலா ஒண்ணுமில்ல. சாதாரண குடும்பப் பொண்ணா வந்து, குடும்பப் பொண்ணா சாகறாங்க.

சிந்துவின் கணவனாக நந்தா. அவருக்கும் நல்ல ஸ்கோப். இடைவேளை வரை ஒன்றுமில்லாமல்... இடைவேளையிலிருந்து க்ளைமாக்ஸ் வரை மிக நல்ல வேடம்.சிந்துவின் தங்கையாக சரண்யா மோகன். நத்திங் க்ரேட் அண்ட் நத்திங் வேஸ்ட்.

கடைசியில் ப்ரஸ்மீட்டில் வில்லன் வாக்குமூலம் கொடுக்கும்போது, ‘எதுக்குய்யா இப்படி ஃபார்மலா திருந்தின மாதிரி காமிக்கறாங்க’ என்று நாம் யோசிக்கும்போது ஒரு சின்ன டயலாக் மூலம் ‘அட’ என்று நிமிர வைக்கிறார் இயக்குனர் அறிவழகன்.

படத்தில் ப்ளஸ்.. மேக்கிங். ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஏதோ ஒரு இடத்தில் ஈரம் தெரிகிறது. அதைத் திணிக்காமல் யதேச்சையாகக் காண்பித்ததில் இயக்குனர் மிளிர்கிறார்.

இன்னொரு ப்ளஸ் பின்னணி இசை. தமன். மிரட்டலா இருக்கு.

ஈரம் - ஷங்கர் தயாரிப்பென்றால் தைரியமாகப் பார்க்கலாம் என்று நிரூபிக்கிற படம்.


.

23 comments:

Cable சங்கர் said...

அருமையான படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம் பரிசல்

மேவி... said...

ஹ்ம்ம் .... நல்ல இருக்கு சார் .....

நீங்க சொல்றதை பார்த்தால் ... ஒரு இங்கிலீஷ் படத்தில் காற்றை வைத்து வில்லன் எல்லோரையும் பினிஷ் பண்ணுவான்... அந்த படம் தான் நியாபகம் வருது எனக்கு

அன்பேசிவம் said...

தலைவரே எங்க பார்த்தீங்க?
இடைவெளைக்கு பிறகு எல்லொருக்கும் தெரிந்தகதைதான் என்றாலும் கடைசி காட்சிவரை உட்கார வைத்தது இயக்குனரின் வெற்றிதான். கேமிராவும் இசையும் இன்னமும் கொஞசம் மிரட்டியிருக்கலாமென்பது என் கருத்து.
Dark Water பார்த்திருகிங்களா?

Unknown said...

உங்க விமர்சனமே படம் பார்த்த மாதிரி இருக்கு கிருஷ்ணா .....
கிளைமேக்ஸிம் சொல்லிட்டா நாங்க பரிசல்லையே படம் பார்த்துருவோம்...

Unknown said...

shall we discuss this film in lunch ???????????

sorry sir... neenga romba busyia irrukeengalla !!!!

வால்பையன் said...

பாவம் இந்த புள்ள சினிமாபார்க்க கூட நேரமில்லாம கஷ்டப்பட்டிருக்கும்!

அகல்விளக்கு said...

//
‘மேடம் மேடம்’ என்று கதவு தட்டுகிறார்..

அங்கே.....


ஓரத்தில் வைத்திருக்கும் கரண்டி வழியே, வழிகிற நீர்.. நேராக....


இரண்டடி பின்வாங்குகிறார். திடீரென அந்தக் குடை பறந்து வந்து அவர் கழுத்தில்....

அவனைத் தாக்குவது யாரென்று பார்க்கிற ஏ.சி-க்கு அதிர்ச்சி....

//


உங்க புது முயற்சி நன்னாருக்கு...

கண்டிப்பா இந்தப்படத்த பாக்கணும்.

Muthukumar said...

romba naalukkapuram oru nalla padamnu solranga..apdiya?

ஊர்சுற்றி said...

வாவ்.... பார்க்கணுமே!

Eswari said...

// வால்பையன் said...
பாவம் இந்த புள்ள சினிமாபார்க்க கூட //நேரமில்லாம கஷ்டப்பட்டிருக்கும்!//

நானும் தான்

தராசு said...

இதுக்கு மட்டும் நேரம் இருக்குதாக்கும், மத்ததெல்லாம் எழுதச் சொன்னா எதோ விளம்பரம் மாதிரி, இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...... அப்பிடி, இப்பிடின்னு சாக்கு போக்கு சொல்றீங்க.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நல்ல ஒரு விமர்சனம்
நல்ல விஷயங்களை சொல்லி ஆவலை தூண்டும் விதமாய்
//எதுக்குய்யா இப்படி ஃபார்மலா திருந்தின மாதிரி காமிக்கறாங்க’ என்று நாம் யோசிக்கும்போது ஒரு சின்ன டயலாக் மூலம் ‘அட’ என்று நிமிர வைக்கிறார் இயக்குனர் அறிவழகன்.// சொல்ல வேண்டாத நல்ல விஷயங்களை மறைத்து really wonderful

Unknown said...

இதுக்குப் பேர்தான் விமர்சனம்.. இப்பவே படத்தைப் பார்க்க ஒரு குறுகுறுப்பு வந்திருக்கு... உங்ககிட்ட பல ‘விமர்சகர்கள்' நிறைய படிக்கலாம்

டவுசர் பாண்டி... said...

உண்மைதமிழன் அம்புட்டு சொகமில்லைன்னு பொலம்பிருக்காரு...

நீங்க என்னடான்னா....

இருங்கப்பா கேபிள் என்னா சொல்றாருன்னு பார்த்துட்டு வர்றேன்.

ஒரு படத்துக்கு எம்பூட்ட்ட்ட்ட்ட்டு ப்ளாக் படிக்கறது.

குப்பன்.யாஹூ said...

Whoever shouted that Bloggers blindly criticising Kandasamy film must read this positive review post.

T.V.ராதாகிருஷ்ணன் said...

படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம் பரிசல்

மங்களூர் சிவா said...

அருமையான படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம் பரிசல். என்ன ஒன்னு மங்களூர்ல ரிலீஸ் ஆகுமான்னு தெரியலை.

Thamira said...

என்னடா என்னை மாதிரியே ரெம்ம்ம்ப அழக்க்க்க்கா ஒரு ஹீரோன்னு பார்த்தேன். பேரும் என்னோடதுதானா? நல்லாருக்கட்டும்..

செந்தில் நாதன் Senthil Nathan said...

அழகான விமர்சனம்!! கேபிள் ஷங்கரும் நல்லா இருக்குனு சொல்றார்!! பார்த்து புட வேண்டியது தான்!!

ஊடகன் said...

தரமான படம் , தாமான விமர்சனம்.......

ஊடகன் said...

தரமான படம் , தரமான விமர்சனம்.......

selventhiran said...

பொறுப்பான விமர்சனம் பரிசல்!

விக்னேஷ்வரி said...

விமர்சனமே இந்த நடையா.... கண்டிப்பா படம் பார்த்திடலாம்.