Saturday, September 19, 2009

உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்


மேலே படத்தில் காண்பது நீங்கள்..நான் உட்பட நம்மைப் போல் ஒருவன்தான். மும்பையில், கோவையில், சென்னையில் குண்டு வெடிக்கிறதா அது நமக்கு வெறும் செய்திதான். கொஞ்சம் தெரிந்த ஆசாமிகள் ஏதாவது மரணமடைந்தவர்கள் லிஸ்டில் இருந்தால் ஒரு எக்ஸ்ட்ரா ‘உச்’ உறுதி. அதேபோல தியாக மரணம் (உன்னிகிருஷ்ணன், ஹேமந்த் கார்க்கரே) என்றால் அதன் காரணமாக இருக்கும் தீவிரவாதத்தை எதிர்த்த கவிதைகளும், விவாதங்களும் சூடுபறக்கும். கொஞ்ச நாள் கழித்து எந்திரன் ஸ்டில்களோ, வேட்டைக்காரன் வெளியீட்டுத் தேதியோ மீடியாக்களில் முந்திக் கொள்ளும்.


இப்படி இருக்கும் சாமான்யன் - COMMON MAN - கொஞ்சம் வேறு விதமாக சிந்திக்க ஆரம்பித்தால்?சாதாரணமான ஒரு காலை நேரம். நகரின் முக்கியமான போலீஸ் ஸ்டேஷன் உட்பட ஆறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்துவிட்டு வீட்டுக்கு காய்கறியும், வேறு சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு கட்டிக் கொண்டிருக்கும் நிலையிலுள்ள ஒரு மிகப்பெரிய கட்டிட மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு போலீஸ் கமிஷனரை ஆட்டு விக்கிறான் ஒரு பொதுஜனம். அவனது கோரிக்கை, கைது செய்து வைத்திருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமென்பதே.

கமிஷனர் இதை எப்படிக் கையாளுகிறார், அவன் கமிஷனரை எப்படி ஆட்டுவிக்கிறான் என்பதே உன்னைப் போல் ஒருவன்!

ஒரு நாள். காலை ஏழு டூ மாலை ஏழுதான் முழுக்கதையும்.

பின்னி எடுத்துவிட்டார்கள்! ஒரே ஸ்க்ரீனில் பத்து உடை, உடல்மொழியோடு அசத்திய கமலுக்கு ஒரே உடை. சாதாரணப் பொதுஜனத்தின் பயத்தை ஒரு ஷாட்டில் தன் உடல்மொழிமூலம் காட்டியிருப்பார் (போலீஸ் ஜீப்பைப் பார்க்கும் அந்தக் கடைசி காட்சி) - Class!

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் - இரண்டு. வசனங்கள் & இசை.

கமிஷனர் மோகன்லாலுக்கும், ஹோம் செக்ரட்டரி லக்‌ஷ்மிக்கும் நடக்கும் விவாதம் - மிகவும் குறிப்பிடத்தக்கது. (Blaming, Responsibility)

அதேபோல கமலுக்கும், மோகன்லாலுக்கும் நடக்கும் Common Man, Super Man, Invisible Man விவாதமும்.

இந்தப் படத்திற்கு காமெடி தேவையில்லை என்றாலும் பரத் ரெட்டி தன் மனைவியிடம் ‘எதுக்காவது நீ யெஸ்னு சொல்லியிருக்கியா’ எனும்போது கையிலிருக்கும் குழந்தையைக் காட்டி ‘இதுக்கு?’ என்பது, எம்.எஸ். பாஸ்கரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பேசும் வசனங்கள் உட்பட பல வசனங்களில் அங்கங்கே சிரிக்க வைக்கிறார் இரா.முருகன்.

இன்னொன்று பின்னணி இசை. ஸ்ருதி கலக்கியிருக்கிறார். முக்கியமாக இரண்டு இடங்களைக் கவனியுங்கள். ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வாஷ் ரூமில் பாமை கமல் வைக்கும்போது வரும் பின்னணி இசை. இன்னொன்று கமல் அந்தக் கட்டத்தின் மேலேறிப் போகும் சீன். அத்தனை பெரிய மாடி ஒவ்வொன்றாய் ஏறுவதை சலிக்காமல் ரசிகனைப் பார்க்க வைப்பது இசை. குறிப்பிட்ட இடத்தில் இசை நின்று, அவர் படியேறுவதன் சப்தங்களை மட்டும் கொடுத்து, மாடியை அடையும்போது மீண்டும் பின்னணி இசை கொடுத்து.... ஸ்ருதி.. ஹாட்ஸ் ஆஃப் டு யூ!

மோகன்லால், லக்‌ஷ்மி, பரத் ரெட்டி, கணேஷ், அனுஜா ஐயர் அந்த கம்ப்யூட்டர் இளைஞன் எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாய் செய்திருக்கிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் - A MUST WATCH MOVIE

கேபிள் சங்கர்ஜிக்கு:- அந்த கம்ப்யூட்டர் இளைஞன் மேமாதம் படத்தில் வினீத்துடன் சிறுவனாய் நடித்தவன்தானே?


.

31 comments:

குப்பன்.யாஹூ said...

That boy is sadhileelavathi maarugo maarugo song . I read in cable sankar or jackie shankar blog.

Indian said...

And the director is the "photographer" kid in the movie Salangai Oli.

நாடோடி இலக்கியன் said...

கமல், வாய்ஸ் மாடுலேசனிலேயே பின்னியிருக்கிறார்.மோகன்லாலின் நடிப்பைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் பரிசல்.//அந்த கம்ப்யூட்டர் இளைஞன் மேமாதம் படத்தில் வினீத்துடன் சிறுவனாய் நடித்தவன்தானே? //

எனக்கும் அப்படித்தான் தோணுச்சு.

வந்தியத்தேவன் said...

அளவான் தெளிவான விமர்சனம் படமும் கலக்கல்தான் இப்போதான் பார்த்துவிட்டு வாறன்.

//அந்த கம்ப்யூட்டர் இளைஞன் மேமாதம் படத்தில் வினீத்துடன் சிறுவனாய் நடித்தவன்தானே? //

அந்தச் சிறுவன் சதிலீலாவதியில் பெரிய எஞ்ஜினியராக வருவான் என கமலும் சரளாவும் புகழும் அதே சிறுவன் தான் என்ன இப்போ அவர் நிஜத்திலும் எஞ்ஜினியர் தான்(சவுண்ட் எஞ்ஜினியர்

Prasanna Rajan said...

//
அந்த கம்ப்யூட்டர் இளைஞன் மேமாதம் படத்தில் வினீத்துடன் சிறுவனாய் நடித்தவன்தானே?
//

ஆமாங்க. அவரு பேரு ஆனந்த். இந்த படத்தைப் பற்றியும், இதன் ஒரிஜினலான ’எ வெட்நஸ்டே’ திரைப்படத்தைப் பற்றியும் எனது வலைப் பதிவில் எழுதியிருக்கிறேன்.

☼ வெயிலான் said...

பரிசல்,

கம்ப்யூட்டர் இளைஞனின் பெயர் - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. சதிலீலாவதியில் கமலுடன் நடித்தவர்.

அவரின் வலைத்தளம் -
http://mdeii.blogspot.com/

அன்பேசிவம் said...

தல லால் போலிஷ் உடையிலிருந்து மாறி படியிறங்கி வருவது, கேர்ள் பிரண்ட் சார் என்று பையன் சொல்லும்போது வரும் ஒரு நையாண்டி பார்வை, துப்பாகியால் கண்ணீரை துடைக்கும் கமல், இசை மற்றும் சம்பாசனைகள் மூலமாகவே மிரட்டி வெடிமருந்து விற்ற உண்மையை வாங்கும் காட்சி, இன்னும் நிறைய சொல்லலாம்.
இங்கே எனக்கு பவர் சட்டோவ்ன். கஸ்டமரின் இடத்திலிருந்து எழுதுகிறேன்.

chandru / RVC said...

அளவான, நல்ல விமர்சனம் பரிசல்.

manjoorraja said...

வெட்னஸ்டே படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா?

Unknown said...

படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம் கிருஷ்ணா...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல விமர்சனம்!!

பார்முலா சினிமா"க்களின் மத்தியில் "உன்னைப்போல் ஒருவன்" கம்பீரமாக நிற்கிறான்

Thamira said...

நானும் பார்த்துட்டேன் பரிசல். மாலையில் பதிவு போடுகிறேன்..

swizram said...

நல்ல விமர்சனம் பரிசல் அண்ணா...

snkm said...

படத்தை பார்க்க வைக்கும் விமர்சனம்! நன்றிகள் பல!

sanban said...

நல்ல நேர்மையான விமர்சனம்.

முருகானந்தம் said...

சூப்பர் விமர்சனம். :)

என் விமர்சனம் இங்கே http://kaluguppaarvai.blogspot.com/

இளவட்டம் said...

பரிசல்.டைரக்டர் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியே சார்.கமல் படத்துக்கு இயக்குனர் தேவையில்லைன்னு நெனைச்சிட்டிங்களா?

Cable சங்கர் said...

இல்லை.. சதிலீலாவதியில் கமல் பையனாக வந்தவன்..:)

rathinamuthu said...

படம் நன்றாகத் தான் இருந்தது. ஆனாலும் original (A wednesday) ன் பக்கத்தில் இது வரவில்லை. original பார்த்து விட்டீர்களா? இல்லை என்றால் முதலில் பார்க்கவும். நான் ஒரு அதி தீவிர கமல் ரசிகன். எனினும் நஸ்ருதீன் ஷா compare செய்தால் கமல் கொஞ்சம் குறைவு தான். ஹிந்தியில் இருந்த விறுவிறுப்பு இதில் குறைவே. கமலே ஒரு பேட்டியில் நஸ்ருதீன் ஷா போல் தன்னால் முடியாது என்று சொன்னதாக ஞாபகம்.

மங்களூர் சிவா said...

படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம்

Ganpat said...

Test

Saminathan said...

என்ன ப்ரதர், வாரம் 2 படம் பார்க்கற மாதிரி தெரியுது....

வெண்ணிற இரவுகள்....! said...

பிறருக்கு வாய்ப்பு கொடுத்து அடக்கி வாசிக்கிறார் உலக நாயகன் தன்னை முன்னிறுத்துவதை விட படைப்பிற்கு முக்கியதுவம்
கொடுத்து இருக்கிறார் முதன் முறையாக. computer engineer என்றால் பார்ப்பானாக தான்
இருக்க வேண்டுமா உலக நாயகனே அந்த ABHIVATHAYE வசனம் மனதை நெருடியது
"உன்னை போல் ஒருவன்" பாடலில் எதற்கு PAVITHRANAYA SATHURNAAM மந்திரம்.
மந்திரம் சொல்லட்டும் தவறில்லை "நாத்திகம்" பேச வேண்டாம் உலக நாயகனே.இந்த நெருடல்களை தவிர உலக நாயகன் உலக நாயகன் தான்

butterfly Surya said...

அளவாய் அருமையான விமர்சனம்.

உன்னைப் போல் ஒருவன் - A MUST WATCH MOVIE //// Exactly...

விக்னேஷ்வரி said...

கமல் படம் பார்ர்க்காமல் எப்படி இருப்பது. ஆனால் கூட்டிப் போக ஆளில்லை. யாராவது சிக்கினா போயிடலாம். :)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

//என்ன ப்ரதர், வாரம் 2 படம் பார்க்கற மாதிரி தெரியுது//
வாரம் 2 padama ? எல்லா நல்ல படமும் வந்த அன்றே பார்த்திர மாதிரி தெரியுது அதெப்படிப்பா மே மாதம் படத்தில வர்ற சின்ன பையான்லாம் நினைவு இருக்குது

samundi said...

உன்னைபோல ஒருவன் குறித்த அருமையான விமர்சனம் http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post.html

Sanjai Gandhi said...

ஆனாலும் தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் போனது தன் தவறு தான் என்று தெரிந்தும் குத்திக் காட்டுவது டூ மச்சி.. நல்ல பொழுதுபோக்கு படம்..

வே. இளஞ்செழியன் said...

படத்திலிடம் பெற்ற நுணுக்கங்களை மட்டுமே நீங்கள் பார்த்துள்ளதாக தெரிகின்றது. படத்தின் மையக்கரு சிறுபிள்ளைத்தனமாக எனக்குப் பட்டது. எனது எதிர்வினை: http://perfectmalaysia.blogspot.com/2009/09/blog-post.html

Unknown said...

This is remake of wednesday where naseerudin shah and anupam kher played their roles in a drastical way but sure our kamal played in the role equivalent ot naserudin shah

Prasanna said...

ஒரிஜினல் சில இடங்களில் மிஞ்சினாலும், தமிழ் பதிப்பும் நிச்சயம் சிறந்தது தான். மிக நுனுக்கமாக பல வேலைகள் செய்யப்பட்டு இருந்தது (எல்லா கமல் படங்களை போலவே). ஹிந்தி யில் முதலில் பார்த்தவர்களுக்கு அந்த பிம்பங்களை மனதை விட்டு இறக்கி வைக்க முடியாது. அதனால் தமிழ் பதிப்பு சிறிது குறைத்து தெரியலாம்.

மேலும் நடிகர் நஸ்ருதீன் தீவிரவாதியாக நடிக்க வாய்ப்பு உண்டு. அதனால் கடைசி வரை அந்த suspense காப்பாற்ற பட்டது. கமல் விஷயதில் அப்படி இல்லை. அவர் கண்டிப்பாக கடைசியில் எதாவது செய்வார் என்று எதிர்பார்ப்பு முதல் முறை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இருக்கும் அல்லவா.