Monday, September 21, 2009

பட்டறை அனுபவம் - பார்ட்-2

ற்கனவே ஏழேமுக்கால் லட்சத்துக்கு கொஞ்சம் கம்மியான என் வாசகப் பெருமக்களிடம் அளித்திருந்த வாக்குப்படி, இன்றைக்கு சிறுகதைப் பட்டறைக்கு முன்னும், பின்னும் இடையிலும் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு இது....

*******************

சிறுகதைப் பட்டறைக்கு சனிக்கிழமை இரவு திருப்பூரிலிருந்து நான்கு பேர் கொண்ட குழு (நாலுபேரெல்லாம் குழுவாடான்னு கேட்கப்படாது!) கிளம்புவது என்று முடிவான பின், இரயிலேறுமுன் சிறு ஆலோசனைக் கூட்டம் கூட்டுவது என்று முடிவானது. அதன்படி திருப்பூரின் மிக முக்கியமான ஹோட்டல் ஒன்றில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் வெயிலான், முரளிகுமார் பத்மநாபன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

கோவையிலிருந்து இரயிலில் வந்துகொண்டிருந்த அண்ணாச்சி வடகரைவேலன் கேட்டிருந்த முக்கியமான ஆவணம் ஒன்றை நாங்கள் கேட்காமலே வரவழைத்துத் தந்த செந்தில்நாதனின் தம்பிக்கு நன்றி!

*******************

சென்னையில் அதிகாலையில் வந்திருந்து எங்களை வரவேற்றார் கார்க்கி. அவர் வீட்டில் குளித்து உடைமாற்றி ஹோட்டல் நோக்கி பயணிக்கும்போது முன்சென்ற ஆட்டோ ஒன்றில் ‘பெண்IN திருமண வயது’ என்றெழுதியிருந்தது. INஐ மட்டும் ஆங்கிலத்தில் எழுதியதேன் என்று வியந்து பேசிக் கொண்டு வந்தபோது செந்தில்நாதன் அவர் படித்த ஓர் ஆட்டோ வாசகம் சொன்னார். அசத்தலாக இருந்தது..

“பெண்ணின் திருமண வயது – அவள் தந்தையின் வருமானத்தைப் பொறுத்தது”

***************************

குறித்த நேரத்துக்கு முன்பே பட்டறைக்குப் போக வேண்டும் என்ற எங்கள் தீர்மானத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டது. அது ‘மு’வுக்கு பதில் ‘பி’.

அதன்படி சென்று சேர்ந்தபோது பதிவர் முரளிகண்ணன், கேபிள்சங்கர் எல்லாம் அமர்ந்து நுழைவுக்கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். எந்த உருவத்தைப் பார்த்தால் பயந்து பணம் கொடுத்து விடுவார்கள் என்று உணர்ந்து அதன்படி ஓங்குதாங்கான ஆட்களையே அமர்த்தியிருந்த சிவராமன் அண்ணாவின் சமயோசிதம் பிரமிக்க வைத்தது! (அந்த நேரம் அக்னிபார்வை வந்திருக்கவில்லை என்பதியறிக)

‘அக்னிபார்வைக்கும், எனக்கும் ஒரே டிக்கெட்டா?’ என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது எனக்கு மட்டுமே கேட்டது! (புரியாதவர்களுக்கு: அக்னிபார்வையின் (வினோத்) பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டபோது ஸ்டுடியோக்காரர் சொன்னாராம்.. “மாக்ஸி சைஸ்லதான் வரும் பரவால்லியா?” அப்பேர்ப்பட்ட உடம்புக்குச் சொந்தக்கார்ர் அவர்!)

***************************
பாஸ்கர் சக்தி பேசும்போது ரமேஷ் வைத்யாவைக் குறிப்பிட்டது, குறிப்பிடத்தக்கது. இவரின் முதல் கதையை ‘கதைக்காகா கதை’ என ரமேஷ் வைத்யா விமர்சித்ததைக் குறிப்பிட்டார். அவரது நேர்மையான விமர்சனமே தன்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது என்றார். பாஸ்கர் சக்தி எழுதி விகடனில் வெளிவந்த தக்ளி சிறுகதையை பலர் நினைவு வைத்திருந்தார்கள்.

**********************

பாஸ்கர் சக்தியிடம் ஒரு பதிவர் ‘ஏங்க இப்பல்லாம் காமெடி கதையே வர்றதில்லை’ என்று கேட்டபோது அவரது நண்பரான இன்னொரு பதிவர் ‘நீயெல்லாம் கதை எழுதற-ங்கறதே காமெடிதானே?’ என்று கேட்டதும் ‘கொல்’லென சிரித்தது அரங்கம்! ஆனால் அவர் கேட்டது உண்மையாகவே சீரியஸான கேள்வி!

***************************

கூட்டத்தில் பேச வந்திருந்த நால்வர் பாஸ்கர் சக்தி, சா.தேவதாஸ், யுவன் சந்திரசேகர், பா.ராகவன். இவர்கள் எனக்கெல்லாம் தெரியும் என அமராமல் ஒருவர் பேசும்போது மற்ற மூவரும் அவ்வளவு உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தது கவனிக்க வேண்டிய அம்சமாக இருந்தது. அதுவும் பா.ரா பேசும்போது யுவனும், யுவன் பேசும்போது பா.ரா-வும் வெளிக்காட்டிய முக பாவங்களைக் கவனித்தவர் கற்றாரைக் கற்றாரே காமுறுவருக்கு அர்த்தம் கண்டிருப்பர்.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ‘எனக்கெதுக்கு பட்டறையெல்லாம்’ என்பது போல கேமராவும் கையுமாக ஃபோட்டோ எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள் கேபிள் சங்கரும், ஆதியும். ‘இருடி... முடிஞ்சதும் ஆன் த ஸ்பாட் சிறுகதைப் போட்டி இருக்கு’ என்று பயமுறுத்தியபின்தான் (கேமரா) பொட்டியை மூடிவிட்டு அமர்ந்தார்கள்.

************************

யுவன் பேசும்போது ‘நான் மிகவும் மதிக்கும், பெரிய எழுத்தாளரொருவர்..’ என்று பீடிகையோடு சொல்ல ஆரம்பித்தபோது, ‘சாரு தானே?’ என்று கூட்டத்திலிருந்தொரு குரல் கேட்டது. ‘நீங்க இப்படியெல்லாம் நெனைக்கக் கூடாதுன்னுதானே நான் அப்படியெல்லாம் சொன்னேன்..’ என்று சிக்ஸரடித்தார்!

யுவனின் டைமிங் சென்ஸ் அடிக்கடி க்ளாப்ஸை அள்ளியது!

************************

லையுலகம் பற்றி கேட்டபோது அதுபற்றிய பேருண்மை ஒன்றை இறுதியில் சொல்கிறேன் என்றார் யுவன். அது, அவர் வலையுலகம் பக்கமே வருவதில்லை என்பதுதான். “எனக்கு யாராவது மெயில் பண்ணினா கூட அவங்களே கூப்ட்டு ‘மெயில் அனுப்பிருக்கேன்’னாதான் திறந்து பார்ப்பேன்” என்று யதார்த்தமாகச் சொன்னது பிடித்திருந்தது. இசை பற்றிய குறிப்புகளுக்காக மட்டுமே இணையம் திறப்பாராம். மற்றபடி நோ நெட்!

**************************

திமூலகிருஷ்ணன், இடைவேளையில் கார்க்கியோடு பேசிக் கொண்டிருந்தபோது ஒட்டுக் கேட்டது:-

ஆதி: “ரெண்டு நாள் போதும்ப்பா.. முடியாதுன்னு சொல்லாத..”

கார்க்கி:பார்க்கலாம் சகா. ரம்ஜான் லீவுல முடியுமான்னு தெரியல. எப்படியும் டிசம்பருக்குள்ள டேட்ஸ் தர்றேன்”

ஏதாவது பேரிச்சம்பழ விவகாரமோன்னு கொஞ்சம் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டதில் தெரிந்த விஷயம். ஆதி, கார்க்கியை வைத்து மீண்டுமொரு குறும்படம் இயக்க இருக்கிறார். ‘இந்த தடவை ஹெவியான சப்ஜெக்டுங்க’ என்று ஆதி சொன்னபோது கார்க்கி சிரிப்பை அடக்க முடியாமல் திணறியது, மூன்றாவது குறும்படமாக எடுக்க வேண்டிய அம்சம்!

***************************

குறிப்பெடுத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட நோட்டில் ‘சிறுகதை’ என்று பெரிய எழுத்துகளில் எழுதி, ‘இந்தச் சிறுகதைக்கு உங்கள் பின்னூட்டம் தேவை’ என்று ஒவ்வொரு கைகளுக்காய்க் கொடுத்து விட்டுக் கொண்டிருந்தார் ஒரு பதிவர். அதில் நான் ‘மீ த 12த்’ என்று கிண்டலாக எழுதிவிட்டு நிமிர்ந்தபோது பா.ரா. பேசிக் கொண்டிருந்தார்.. “ப்ளாக்ல இந்த மீ த ஃபர்ஸ்ட் ஒரு தீராத வியாதி.. அது எப்ப ஒழியுமோ அப்பதான் உங்களுக்கெல்லாம் நல்லது”

*************************

‘பா.ரா.-வை பார்த்தபின்னாடிதான் ஒரு முடிவுக்கே வந்தேன்’ என்றார் என் நண்பர் ஒருவர். ‘நாளைக்கே..’ என்றவர் ஆரம்பிக்க ‘நாலைஞ்சு கதை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பப் போறீங்களா?’ என்று ஆர்வமாய்க் கேட்டேன்.

“இல்லைங்க.. நாளைக்கே என் மீசையை எடுத்துடப் போறேன்.. அவரு பாருங்களேன்.. மீசையை எடுத்த பின்னாடி பத்துவயது குறைஞ்சு தெரியறாருல்ல?” என்றார்.

அது சரி!

********************************************

பி.கு: கூட்டம் முடிந்தபின்னே நண்பர் ஒன்றுகூடி பிக்னிக் போனது மற்றுமொரு நல்ல அனுபவம்!


.

28 comments:

Cable சங்கர் said...

arumai

Anonymous said...

நான் மீ த பர்ஸ்டு போடலாம்னு நெனச்சேன். கேபிள் முந்திக்கிட்டார்(திருந்தாத ஜென்மங்கள்) :)

Anonymous said...

திருந்தாத ஜென்மம்னு நான் என்னைத்தான் சொன்னேன்.

குப்பன்.யாஹூ said...

t is good but this background color made me to difficult to read the text.

அறிவிலி said...

பட்டறை ஒன்றை விட பட்டறை இரண்டில் அழகு(சுவை) அதிகம்.

தராசு said...

டெம்பிளேட்ட மாத்துங்க தல, பழையது நல்லாருந்துச்சு.

//‘நீங்க இப்படியெல்லாம் நெனைக்கக் கூடாதுன்னுதானே நான் அப்படியெல்லாம் சொன்னேன்..’ என்று சிக்ஸரடித்தார்!//

கலக்கல்.

கார்க்கிபவா said...

சகா, கலக்கல் தொகுப்புகள்..

மத்தவங்க சொல்றாங்கன்னு டெம்ப்ளேட்ட மாத்தாதிங்க.. நல்லாத்தான் இருக்கு.. செல்க்ட் செய்தவருக்கு ஏதாவ்து கொடுங்க

SurveySan said...

அண்ணாச்சி, கண்ணு தெரீல. கலரை மாற்றவும்.

தராசு said...

//மத்தவங்க சொல்றாங்கன்னு டெம்ப்ளேட்ட மாத்தாதிங்க.. நல்லாத்தான் இருக்கு.. செல்க்ட் செய்தவருக்கு ஏதாவ்து கொடுங்க//

இப்ப தெரியுது, யாரு உங்கள இப்படியெல்லாம் கெடுக்கறாங்கன்னு....,,

உண்மைத்தமிழன் said...

பதிவுக்கு நன்றி பரிசலு..!

ஆனா தளத்தை ஓப்பன் பண்ணா ஒண்ணுமே தெரியலை.. மொதல்ல கலரை மாத்து சாமி..!

பரிசல்காரன் said...

@ All

நான் டெம்ப்ளேட்டையெல்லாம் மாத்தல. சில சிஸ்டத்துல பேக்ரவுண்ட் கலர் வெள்ளைக்கு மாறாம, ப்ரவுனியாவே இருக்கறதா தகவல் வந்தது. ஏன்னு தெரியல...

நர்சிம் said...

எப்போ நடந்தது?

அறிவிலி said...

இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் பேக் கிரவுண்ட் ப்ரவுனாக வருகிறது, கூகிள் க்ரோமில் சரியாக வருகிறது.

பரிசலுக்கு எதிராக மைக்ரோசாஃப்டின் சதி???????

அன்பேசிவம் said...

//“பெண்ணின் திருமண வயது – அவள் தந்தையின் வருமானத்தைப் பொறுத்தது” // இதை நான் சிவகாசி - தென்காசி செல்லும் வழியில் பார்த்தேன், ஆட்டோவை நிறுத்தி அவருக்கு ஒரு வாழ்த்தையும் சொல்லிவிட்டுதான் வந்தேன்

☼ வெயிலான் said...
This comment has been removed by the author.
SurveySan said...

ஈ. மடல் அனுப்பிருக்கேன்.

இந்த ஃபைல் தான் ப்ரச்சனை. டெம்ப்ளேட்டிலிருந்து தற்காலிகமா தூக்கிடுங்க.
http://www.templatesimages.com/images/Outdoorsy/content-top.jpg

பரிசல்காரன் said...

பழைய டெம்ப்ளேட்டில் சில பிரச்சினை. சீக்கிரமே வேறு நல்ல டெம்ப்ளேட் மாற்றபடும். அதுவரை இந்த பேசிக் டெம்ப்ளேட் தொடரும்.
இப்படிக்கு,

பரிசலின் அட்மினிஸ்ட்ரேட்டர்

butterfly Surya said...

பிக்னிக்கா எங்கே..??

ஒ. அதுவா..?? ரைட்டு..

மேவி... said...

மொக்கை பட்டறை எதாவது நடந்தால் சொல்லுங்க ...... நான் எல்லாம் சிறு கதை எழுதினால் என்ன ஆகும் இந்த உலகம் ...... நீங்க எல்லாம் தப்பிச்சிங்க

மேவி... said...

ரொம்ப கஷ்டமா இருக்கு ..... இந்த template உங்க பதிவை பார்க்கும் போது.... soon change பண்ணுங்க

samundi said...

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

selventhiran said...

ஆதி-கார்க்கி :)

Karthikeyan G said...

மத்தவங்க சொல்றாங்கன்னு டெம்ப்ளேட்ட மாத்தாம இருக்காதீங்க .. இந்த template
நல்லா இல்ல.

:-)))

ஊர்சுற்றி said...

இப்படி எழுத பரிசல்காரனால் மட்டுமே முடியும். நல்ல தொகுப்பு! அழகான பூச்சரம்.

விக்னேஷ்வரி said...

நல்ல தொகுப்பு பரிசல்.

Beski said...

ரசிக்கும்படியான எழுத்து.
---
பா.ராகவன் அவர்களுடைய powerpoint presentationஐ இங்கே தொகுத்துள்ளேன்.
http://www.yetho.com/2009/09/blog-post_22.html

மங்களூர் சிவா said...

/
நண்பர் ஒன்றுகூடி பிக்னிக் போனது மற்றுமொரு நல்ல அனுபவம்!
/

அருமை!

க.மு.சுரேஷ் said...

"ஆணின் திருமண வயது அவன் வருமானத்தைப் பொறுத்தது”