Friday, January 30, 2009

ஊட்டியும் பதிவர்களும் - பார்ட் 1

“கிருஷ்ணா… ஜனவரி 26 லீவுதானே... சனி, ஞாயிறு, திங்கள் எங்கியாவது போலாமா?” – வடகரைவேலன் அண்ணாச்சி கேட்டபோது “சனிக்கிழமை கஷ்டம்ணா. ஞாயிறு, திங்கள்ன்னா ஓக்கே” என்றேன். எங்கே போவது, யார் யார் போவது எதுவுமே அப்போது முடிவாகவில்லை. வெயிலானும், நானும், அண்ணாச்சியும் போகத் திட்டமிட்டோம். எல்லாவற்றையும் அண்ணாச்சி தலையில் போட்டுவிட்டு நான் திரும்ப என் வேலையில் மூழ்கிவிட்டேன். பிறகொருநாள் மெயிலைப் பார்க்கும்போதுதான் தாமிரா, கார்க்கி, செல்வேந்திரன், சஞ்சய், தமிழ்ப்ரியன், கும்க்கியெல்லாம் வருவதாக அறிந்தேன்.

சனிக்கிழமை இரவே நானும், வெயிலானும் திருப்பூரிலிருந்து புறப்பட்டு கோவை சென்றோம். கடைசி நேரத்தில் டூரிலிருந்து ஜகா வாங்கினார் தொழிலதிபர் சஞ்சய். கோவத்தில் அவருக்கு அறை விடலாம் என்றால், அவர் அறையை எங்களுக்கு விட்டுத் தந்து இரவு தங்க உதவினார்.

தமிழ்ப்ரியனைச் சந்தித்தது இன்ப ஆச்சரியம். கார்க்கி, கும்க்கி, அண்ணாச்சியெல்லாரும் காத்திருந்தனர்.

சனிக்கிழமை இரவு சஞ்சயின் வீட்டில் சீட்டுக் கச்சேரியும், (நல்லாப் படிங்கப்பா.. சீட்டுக் கச்சேரி.. சிட்டுக் கச்சேரியில்ல!) பேச்சுக் கச்சேரியுமாய் ஆரம்பித்தது.

கார்க்கி ஹேக் ஆன ப்ளாக்கர் கணக்குகளைக் கண்டுபிடித்துக் கொடுத்துக் கொடுப்பதில் உள்ள நுண்ணரசியலைப் பற்றிப் பேசும்போது தமிழ்ப்ரியன் ஒரு பிட்டைப் போட்டார். ஒருவேளை நீங்க்ளே ஹேக் பண்ணி, கண்டுபிடிச்சுத் தர்றீங்களோ? என்று கேட்டார் கார்க்கியிடம்!

(கார்க்கி இந்த இடத்துல ஒரு தகவல்: நீங்க எழுதின சிறுகவிதைக்கு இது இன்ஸ்பியரேஷனோ? – பொத்திவெச்ச மல்லிகைப் பொட்டு பாட்டுல வர்ற ‘சின்னக் காம்புதானே பூவத் தாங்குது’ வரிகள்!)

கும்க்கி இங்கேயே தனது தீவிர வாதத்தை (தீவிரமான வாதம்க! தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது!) ஆரம்பிச்சார். திருமங்கலத்துல 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கடன்கள் மீட்கப் பட்டிருப்பதாய் வெயிலான் சொன்னபோது சிவக்க ஆரம்பித்த அவர் கண்கள் அப்போதே எங்களை எச்சரித்தது. ‘அங்கே ஆன செலவைப் பத்திதான் எல்லாரும் பேசறீங்க. அதுக்குப் பின்னாடி இருக்கற பாலிடிக்ஸ் பத்தி யோசிங்க” என்றார். அப்ப எலக்‌ஷன் என்ன விளையாட்டு செய்தியா? பாலிடிக்ஸுக்குப் பின்னாடி இருக்கற பாலிடிக்ஸைப் பத்தி பேசறீங்களா. ‘சரி பேசுங்க’ என்றோம் ஆனால் பேசவே இல்லை. (எங்க பேச விட்டீங்கன்னு அவரு கேட்கறது இங்கே என் காதுல விழுது)

காரசாரமான விவாதம் நடந்துகிட்டிருக்கறப்போ, தமிழ்ப்ரியன் ஒண்ணுமே பேசல. அண்ணாச்சி சொன்னார்: “நாங்க இங்கே பதிவாப் போட்டுட்டு இருக்கோம். நீங்க பின்னூட்டமாவது போடுங்க” அதுக்கும் தமிழ்ப்ரியன் வெறும் ஸ்மைலிதான் போட்டார். சாருவைப் பற்றியும் பேச்சு வந்தது. சாருவை படிக்காம ஒதுக்க முடியாது. படிச்சுட்டு ஒதுக்கணும் என்று கருத்து வந்தது. அப்போ ஒருத்தர் சொன்னார்: ‘கோணல் பக்கங்கள் 1, கோணல் பக்கங்கள் 2, கோணல் பக்கங்கள் 3 இந்த நாலு புக்கையும் நிச்சயமாப் படிக்கணும்” என்றார். மூன்று புத்தகங்களைச் சொல்லி, நாலு புத்தகம் என்று சொல்வதிலிருந்து அளவு தெரிந்து, அதோடு நிறுத்திக் கொண்டு சீட்டுக் கச்சேரியை ஆரம்பித்தோம்.

காலை எழுந்தபோது, சஞ்சயைக் காணவில்லை. எஸ்கேப் ஆகியிருந்தார்.

காலை எழுந்து நானும், அண்ணாச்சியும், தமிழ்ப்ரியனும் இரயில்வே ஸ்டேஷன் சென்று தாமிராவை அழைத்து வந்தோம். தமிழ்ப்ரியன் அங்கேயே வடை ச்சே... விடை பெற்றுக் கொண்டார். பயணத்தில் கலந்து கொள்ளாவிடினும், எங்களைச் சந்திக்க நேரமொதுக்கி வந்த அவர் அன்புக்கு கண்ணீர் மல்க நன்றிகூறி.. (சரி.. சரி.. எனக்கே ஓவராத்தான் இருக்கு! விடுங்க) அறைக்கு வந்தபோது செல்வேந்திரனும் வந்து சேர்ந்திருந்தார்.எல்லாரும் குளித்து (கார்க்கியைக் காட்டிக் கொடுக்க மனமில்லை) கிளம்பினோம். ஒன்றுமே பேசாவிட்டாலும் தானொரு சரக்குள்ள ஆசாமி என்பதை கும்க்கி நிரூபித்த தருணங்கள் அவை.

ஊட்டிக்கு செல்லும் வழியில் ஒரு வ்யூ பாய்ண்டில் ஆரம்பித்த எங்கள் விவாதம் எதுவரை சென்றது?

தொட்டபெட்டாவில் தாமிரா எடுத்து நாங்கள் ரசித்த அந்த இயற்கை அழகின் ரகசியம்

அங்கே எங்களைச் சந்தித்த லதானந்த் அங்கிள் அளித்த பரிசு என்ன?

மசினகுடி காட்டேஜுக்கு அருகில் இருந்த வோடஃபோனிலிருந்து வந்த இளம்பெண்கள் அறையில் நடந்தது என்ன?

இன்னும் முக்கியமாக எங்கள் விவாதத்தின் மூலம் நாங்கள் இந்த நல்லுலகுக்குச் சொல்லும் சேதி என்ன? (ம்க்கும்!)

அடுத்த பார்ட்டில் (‘யி’ இல்ல) பார்க்கவும்!

16 comments:

Mahesh said...

மசினக்குடி காட்டேஜ்... அடுத்த காட்டேஜில் இளம் பெண்கள்... இவ்வளவுக்கு நடுவுல நீங்க என்ன விவாதிச்சுருக்க முடியும்? :))) என்னடா போட்டோவுல எல்லாருக்கும் ஒரு காது சிவப்பா (சிலருக்கு கன்னம்) இருக்கேனு பாத்தேன் :)

கார்க்கிபவா said...

நான் தான் முதல்ல

கார்க்கிபவா said...

/
(கார்க்கி இந்த இடத்துல ஒரு தகவல்: நீங்க எழுதின சிறுகவிதைக்கு இது இன்ஸ்பியரேஷனோ? – பொத்திவெச்ச மல்லிகைப் பொட்டு பாட்டுல வர்ற ‘சின்னக் காம்புதானே பூவத் தாங்குது’ வரிகள்//

இல்லீங்கண்ணா.. இத ஏற்கனவே பல பேர் எழுதியதாக சொன்னாலும், நான் படித்ததில்லை.. ஏதோ புதுசா எழுதிவிட்ட சந்தோஷம் என்னக்குள்..

கார்க்கிபவா said...

/எல்லாரும் குளித்து (கார்க்கியைக் காட்டிக் கொடுக்க மனமில்லை)//

நாலு மணிக்கு தூங்கியவன ஏழு மணிக்கே எழுப்பி குளிக்க சொல்லிவிட்டு அவர் தூங்கிவிட்டார் கும்க்கி. சரியென்றி பாதி தூக்கத்தில் முக்கால் கண்ணை மட்டும் திற்ந்து முழுக் குளியல் போட்டுவிட்டு, இரண்டாவதாக குளிப்பவரை தேடினால் மூன்று அறையிலும் யாருமில்லை.(பழசு பழசு).. டிமெ இருந்ததால் மீண்டும் தூஙிவிட்டேன்.. அதான் அப்படியிருக்கு மூஞ்சி.. நீங்க ஏன் சொல்ல மாட்டிங்க..

Cable சங்கர் said...

எனக்கென்னவோ நிறைய விஷயஙக்ளை எடிட் செஞ்ச் எழுதினாப்புல இருக்கே..

anujanya said...

டெண்டுல்கரும் சேவாகும் விளாசித் தள்ளும்போது, கரண்டு போற மாதிரி 'தொடரும்' போட்டதற்கு கடும் கண்டனங்கள். பதிவு சும்மா 'விர்ருன்னு' துவங்கி டேக் ஆப் ஆகும்போது ....யோவ், சீக்கிரம் முழுப் பதிவும் போடு. இல்லாட்டி பின்னூட்டத்திலேயே ஒரு கவித எழுதிடுவேன் :)

அனுஜன்யா

Anonymous said...

இவ்வளவு சுவராஸ்யமா உன்னைத்தவிர வேறு யாராலும் எழுதமுடியாதென்பதால்தான் உன்னை எழுதுமாறு கட்டாயப்படுத்தினேன். என் கோரிக்கைக்கு செவிசாய்த்ததற்கு நன்றி.

Thamira said...

கலக்கல் ஆரம்பம் பரிசல்.! பட்டையை கிளப்புங்க..

Thamira said...

....யோவ், சீக்கிரம் முழுப் பதிவும் போடு. இல்லாட்டி பின்னூட்டத்திலேயே ஒரு கவித எழுதிடுவேன் :)

அனுஜன்யா////

ஹிஹி.. அவருக்கு சப்போர்ட் பண்ணி நானும் எழுதிடுவேன்.. காக்க வைக்காம சீக்கிரம் எழுதுங்க.. ஜாக்கிரதை.!

Venkatramanan said...

//காரசாரமான விவாதம் நடந்துகிட்டிருக்கறப்போ, தமிழ்ப்ரியன் ஒண்ணுமே பேசல. அண்ணாச்சி சொன்னார்: “நாங்க இங்கே பதிவாப் போட்டுட்டு இருக்கோம். நீங்க பின்னூட்டமாவது போடுங்க” அதுக்கும் தமிழ்ப்ரியன் வெறும் ஸ்மைலிதான் போட்டார். //
அக்மார்க் பரிசல்!

//‘கோணல் பக்கங்கள் 1, கோணல் பக்கங்கள் 2, கோணல் பக்கங்கள் 3 இந்த நாலு புக்கையும் நிச்சயமாப் படிக்கணும்” என்றார். மூன்று புத்தகங்களைச் சொல்லி, நாலு புத்தகம் என்று சொல்வதிலிருந்து அளவு தெரிந்து,//
கலக்கல்!!

☼ வெயிலான் said...

அட்டகாசம் பண்றீங்க பரிசல்!

கூடிய விரைவில் நானும் ஒரு ஐபாட் வாங்கலானு இருக்கேன் ;)

சுற்றுலா சம்பந்தமான மற்ற சுட்டிகளை கீழே இணைக்கலாமே பரிசல்!

எம்.எம்.அப்துல்லா said...

//என்னடா போட்டோவுல எல்லாருக்கும் ஒரு காது சிவப்பா (சிலருக்கு கன்னம்) இருக்கேனு பாத்தேன் :)
//

நல்லவேளை மகேஷ் அண்ணே...நம்ப ரெண்டுபேரும் போகல :)

ஆதவா said...

செம சுவாரசியம்ங்க... அடைப்புக் குறியில அளப்படை பண்ணினது ஒவ்வொண்ணும் இதழோரத்து குறுகுறுப்புகள்..

அடுத்த பார்ட்டி(யி)ல் பார்ப்போம்...

narsim said...

//அனுஜன்யா said...
டெண்டுல்கரும் சேவாகும் விளாசித் தள்ளும்போது, கரண்டு போற மாதிரி 'தொடரும்' போட்டதற்கு கடும் கண்டனங்கள். பதிவு சும்மா 'விர்ருன்னு' துவங்கி டேக் ஆப் ஆகும்போது ....யோவ், சீக்கிரம் முழுப் பதிவும் போடு. இல்லாட்டி பின்னூட்டத்திலேயே ஒரு கவித எழுதிடுவேன் :)

அனுஜன்யா
//

ரிப்பீட்டேய்ய்ய்..

சொல்லாம போனதும் இல்லாம பார்ட் பார்ட்டா வேற பதிவா.. நல்லா இருங்க..

Truth said...

//மசினகுடி காட்டேஜுக்கு அருகில் இருந்த வோடஃபோனிலிருந்து வந்த இளம்பெண்கள் அறையில் நடந்தது என்ன?//

என்னமோ நடந்த மாதிரியே க்ளைமேக்ஸ்ல ஒரு பிட்டு போட்டிருக்கீங்க. ஆனா, ஒரு மன்னும் இருக்காதுன்னு நினைக்கிறேன். வெயிட்டிங் நெக்ஸ்டு பதிவுக்கு :-)

Sanjai Gandhi said...

//கடைசி நேரத்தில் டூரிலிருந்து ஜகா வாங்கினார் சஞ்சய். கோவத்தில் அவருக்கு அறை விடலாம் என்றால்//

அடப்பாவி மக்கா.. ஒரு ப்ளானோட தான் கிளம்பி வந்திங்களா? நல்ல வேளை நான் ஹால்ல படுத்துகிட்டதால தப்பிச்சேன்.. :))