Monday, June 16, 2008

குட்டி கவிதைகள்

பங்களா கட்டி முடித்து
குடிசைக்குள் நுழைந்தார்
மேஸ்திரி.

சுடச் சுடச் தோசைசுட்டு
ஆறியபின் தின்கிறாள்
மனைவி.

ரோஜாவுக்காக தினமும் நீரூற்றுகிறேன்
எண்ணிக்கையில் என்னமோ
முட்களே முந்துகின்றன.

தீவைத்தேன் சிகரெட்டுக்கு
எரியத் தொடங்கியது
என் உயிர்.

கறுப்பு துரதிர்ஷடம்
புத்தகத்தில் படித்தேன்
கறுப்பெழுத்தில்.

ஒருவகைப் பூவைமட்டுமே
சூடிக்கொள்ள முடிகிறது
வருத்தப்பட்டது பூச்செடி!

கண்டுபிடித்தவனுக்கு பாராட்டு
பயன்படுத்தியவனுக்கு கைவிலங்கு
துப்பாக்கி.

நண்பன் செயலிழந்ததற்கு
எனக்கும் தண்டனையா
கவலைப்பட்டது கால்செருப்பு.

ஏழைகள் குறை கேட்க
எம்.எல்.ஏ. வருகிறார்
அகற்றுங்கள் குடிசைகளை.

22 comments:

rapp said...

நிஜமாகவே நெம்ப நெம்ப நல்லா இருக்கு. எல்லாமே ஐரணி வகையைச் சார்ந்த க்யுட் வாக்கியங்கள். அதெல்லாம் சரி, இன்னும் தூங்கப்போகாமல் என்ன செய்யறீங்க? இப்ப தமிழ்நாட்ல மணி இரண்டு இருக்கும்ல?

பரிசல்காரன் said...

மிக்க நன்றி ராப்! தசாவதார பின்னூட்டாத்திற்கு பதில் சொல்லும்போதே இந்தகேள்வி வரும்னு நெனச்சேன்! இன்னைக்கு நடக்க இருந்த கோவைப் பதிவர் சந்திப்பு கேன்சலானதால, கோவைக்கு brother-in-law வீட்டுக்கு போய் இன்னைக்கு மதியம் முதல் நல்ல தூக்கம்! இப்போ தூக்கம் வர மாட்டீங்குது! ஒகே.. இப்போ போறேன்! குட் நைட்!

rapp said...

ஏனுங்க கிருஷ்ணா, மச்சினர் வீட்டுக்குப்போய் நல்லா புரளி மற்றும் தற்பெருமை பேசி நாலுப்பேரை வெருப்பேத்தாம, என்னங்க நீங்க நல்லப் பிள்ளயாட்டமா தூங்கிட்டீங்க?

கோவி.கண்ணன் said...

ஹைக்கூ பாணி கவிதைகள் அருமை...இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள் நன்றாக வருகிறது உங்களுக்கு.

// நண்பன் செயலிழந்ததற்கு
எனக்கும் தண்டனையா
கவலைப்பட்டது கால்செருப்பு.//

நண்பன் செயலிழந்ததற்கு
எனக்கும் தண்டனையா
கவலைப்பட்டது 'ஒரு'கால்செருப்பு. -என்றிருந்தால் எளிமையாக புரியும்

தமிழ் said...

/கண்டுபிடித்தவனுக்கு பாராட்டு
பயன்படுத்தியவனுக்கு கைவிலங்கு
துப்பாக்கி./

நல்ல இருக்கிறது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரசித்தேன்... ரொம்ப நல்லா இருக்கு.
ஒருகால் செருப்பு ங்கறது கோவியைப்போலவே எனக்கும் தோண்றியது.
ரோஜாவுக்காக கவிதை ரொம்ப பிடித்தது..

VIKNESHWARAN ADAKKALAM said...

எல்லாமே கலக்கல் துளிப்பாக்கள்.. சூப்பர்... வாழ்த்துக்கள்...

ambi said...

ரசித்தேன்... ரொம்ப நல்லா இருக்கு.

Also your prev posts too... :)

பரிசல்காரன் said...

அன்புள்ள கோவி, திகழ்மிளிர், கயல்விழி, அம்பி & விக்கி..
மிக்க நன்றி!

கண்ணன்.. முதலில் அந்தக் கவிதையை இப்படித்தான் எழுதினேன்..


நண்பன் செயலிழந்ததற்கு
எனக்கும் தண்டனையா
வருத்தப் பட்டது
வலதுகால் செருப்பு.

பிறகு இந்த ‘வருத்தப்பட்டது’ என்கிற வார்த்தை இன்னோரு கவிதையில் வருவதால் மாற்றிவிட்டேன்.

கருத்திற்கு மிக்க நன்றி!

Bleachingpowder said...

எப்படிங்க இதல்லாம் வருது உங்களுக்கு வருது. மல்லாக்க படுத்து யோசிப்பிங்களோ :-) ரொம்ப நல்லாயிருக்கு இது மாதிரி நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அப்புறம்,என்னோட ப்ளாக்கையும் மதிச்சு பின்னூட்டம் இட்டதற்கு ரொம்ப மகிழ்ச்சி பரிசல்காரரே.

நாலஞ்சு வருசம ஆணி புடுங்குனதுல்ல தமிழ் எழுத்தே கொஞ்சம் மறந்து போச்சு அதனால தமிழ்ல பதிவு போட ரொம்ப பயமாயிருக்கு (ஆங்கிலம் மட்டும் என்ன வாழுதாம் அதுவும் cut copy paste தான்) அதுவும் தமிழ்மணத்துல சேர்ந்தா சின்ன தப்பிருந்தாலும் டவூசரை அவுத்துடுவாங்க.

கொஞ்ச வருசம் முன்னாடி வரை எனக்கு தெரிஞ்ச இலக்கிய எழுத்தாளார்கள்னா அது ராஜேஷ்குமாரும் சுபாவும் தான் இலக்கிய இதழ்னா அது விகடன் குமுதம் தான். இந்த அறிவ வச்சுகிட்டு தமிழ்ல எப்படிங்க பதிவு போடுறது.

இதுபோக எனக்கு எந்த ஒரு கருத்தையும், யாரையும் ஒரு நாளைக்கு மேல ஆதரிக்கவோ எதிர்கவோ முடியாது (இல்லைங்க சின்ன வயசுல தலையில அடியல்லாம் படல)

அரசியலை பத்தி எழுத சத்தியமா தைரியமில்லை,எவன் அடிவாங்கறது இது பிஞ்சு உடம்பு.

சரி கடவுளை பக்தி உண்டானு கேட்டா, ஒருவேலை இருந்தாலும் இருக்கும்னு பயந்து சாமி கும்பிடற பகுத்தறிவாதி நான்.

ஏதாவது பயணகட்டுரை எழுதலாம்ன சமிபத்தில் போன நாடு தாய்லாந்து :-) இதப்போய் நான் எங்க எழுத. இப்பொ சொல்லுங்க பரிசல்காரரே நான் என்னத்த எழுதறது தமிழ்ல.

word verification எடுத்து விடுங்கள்னு சொல்லிடீங்க, இப்பொ அததான் தேடிட்டு இருக்கேன்

சென்ஷி said...

கவிதையெல்லாம் ரொம்ப நல்லா இருக்குதுங்க...

பரிசல்காரன் said...

//ஒருவேளை இருந்தாலும் இருக்கும்னு பயந்து சாமி கும்பிடற பகுத்தறிவாதி நான்//

ஹா..ஹா..ஹா.. ரொம்ப ரொம்ப ரசித்தேன் பிளீச்சிங்பவுடரே! (அய்யோ.. என்னய்யா பேரு இது! கக்கூஸ்ல வைக்கற ஐட்டத்த கம்ப்யூட்டருக்கு கொண்டுவந்துட்டீக!)

பரிசல்காரன் said...

வருகைக்கு நன்றி சென்ஷி!

கோகுலன் said...

பரிசல்காரன்,

நல்ல பெயர் ங்க..

இன்றூ தான் உங்க வலைப்பக்கம் வந்தேன்..

குட்டி கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.. அருமை..

அனைத்தும் வரிசையாக ஒரு சோகமாகவே அமைந்தன..

நன்று..

//ஒருவகைப் பூவைமட்டுமே
சூடிக்கொள்ள முடிகிறது
வருத்தப்பட்டது பூச்செடி!
//
சூப்பர்..

Anonymous said...

உங்க கவிதைகளப் பார்த்ததும்,

எத்தனை பேர் இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்

கவிதைதான் ஞாபகம் வந்தது.

உங்க கவிதகளில் நல்ல அடர்த்தியும் செறிவும் உள்ளது.

முரண்தொடை வகையைச் சார்ந்த்தவை இக்கவிதைகள்.

தொடருங்கள்.

சின்னப் பையன் said...

பரிசல் -> எல்லா கவிதையும் சூப்பர்... எல்லாம் தன்னாலே வருதா.. இல்லே அறை போட்டு யோசிக்கிறீங்களா?...

சின்னப் பையன் said...

//ரோஜாவுக்காக தினமும் நீரூற்றுகிறேன்
எண்ணிக்கையில் என்னமோ
முட்களே முந்துகின்றன.//

என்னங்க, ரோஜா கடப்பாரை எடுத்துக்கிட்டு போஸ் கொடுத்திருக்காங்களே, பாக்கலியா?...

பரிசல்காரன் said...

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கோகுலன்..

வடகரை வேலன்.. உங்களுக்கு எப்படி நன்றிசொல்ல? பின்னூட்டத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த கவிதையை ஏற்கனவே மிக ரசித்து, என்னை பாதித்த கவிதைகள் என்றொரு நோட்டில் எழுதிவைத்திருந்தேன். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் அதை எழுதியது யாரென்று பார்க்கும் ஆவலில், அதை எடுத்து கவிதைகள் முழுவதும் படித்துக்கொண்டிருந்தேன்! நீங்கள் குறிப்பிட்ட கவிதையை எழுதியது "ஆடலரசன்".. எனக்குப் பிடித்த கவிதைகளைக் கொண்டே ஒரு பதிவு போடலாமென இருக்கிறேன்!

ச்சின்னப்பையன்.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி! (அந்த போஸ் நான் பார்க்கவில்லையே? நேத்து பேப்பர்ல ரோஜா காதுல பூ வெச்சுகிட்டு ஒரு போஸ்தான் நான் பார்த்தேன்!)

anujanya said...

கே.கே.,

எல்லாமே நச். மிகவும் பிடித்தது 'ஒருவகைப் பூ'. இன்னமும் நான் ஹைக்கூ எழுத வேண்டுமா என்று யோசிக்கிறேன். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

பரிசல்காரன் said...

மிக்க நன்றி அனுஜன்யா. இதையெல்லாம் ஹைக்கூன்னு சொன்னா சுஜாதா சார் எழுந்துவந்து ஒதப்பாரு! (அதுக்காகவாவது சொல்லலாம்.. இல்லயா?
//இன்னமும் நான் ஹைக்கூ எழுத வேண்டுமா என்று யோசிக்கிறேன். //
இதெல்லாம் ரொம்ப ஓவருங்க..

King... said...

நல்லா இருக்கு...

பரிசல்காரன் said...

வருகைக்கு நன்றி King!