Thursday, June 18, 2009

அவியல் 18.06.2009

நம்ம நண்பர் வெயிலான்கிட்ட ஒரு பிரபல பதிவர் உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக ஒரு கதை எழுதி கருத்து கேட்டிருக்கார். இவர் படிச்சு முடிச்சதும் அந்தப் பதிவர் ச்சாட்ல வந்து “கதை எப்படி இருக்கு?”ன்னு கேட்டிருக்கார். வெயிலானும் சீரியஸா.. “நல்லா இருக்கு. ஆனா ஏதோ ஒண்ணு குறையறா மாதிரி இருக்கு”ன்னிருக்கார். உடனே அந்தப் பதிவர் கேட்டார்...

“குறையறது ஒருவேளை கதையா இருக்குமோ?”

ரொம்பக் குசும்பு பிடிச்ச பதிவர்யா அவர்!

******************

சமீபத்தில் அண்ணாச்சி வடகரை வேலன் ஒரு அருமையான விஷயம் சொன்னார்.. ‘நாட்ல மக்கள் தொகைப் பெருக்கத்தை கம்மி பண்ணினதுல கல்வி நிறுவனங்களோட பங்கு பாராட்டத்தக்கது’ன்னார். ‘என்னண்ணா சொல்றீங்க’ன்னு கேட்டா.. “அவனுக வாங்கற ஃபீஸ் வகையறாவையெல்லாம் பார்த்து ஒரு குழந்தை பெத்துகிட்டு கரையேத்தறதே பெரிய விஷயம்ன்னு முடிவுக்கு வந்துடறாங்களே’ன்னார்.

சரிதான்!

********************

திருப்பூரின் வரலாற்றின் முதல்முறையாக வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியும் காட்டிவிட்டார்கள் திருப்பூர் வலைப்பதிவாளர்கள் பேரவையின் தலைவர் வெயிலானும், பொருளாளர் சாமிநாதனும். சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பித்த வடகரை வேலனுக்கு நன்றி. முதல் மீட்டிங் என்பதால் திருப்பூர் பற்றிய பிரச்சினைகளே அதிகம் அலசப்படட்து. ஓரளவு அந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டியதும் அடுத்த சந்திப்பில் இலங்கைப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினைகளை எல்லாம் அலசலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சாருவின் நெருங்கிய நண்பரான திருப்பூர் சிவா (நிகழ்காலம்) வந்து சாருவைப் பற்றி ஒன்றுமே பேசாமல் போனது அவர் போனபிறகும் பேசப்பட்டலாமென்று நினைத்தால் பேசப்படாமலே எல்லாரும் பிரியவேண்டியதாயிற்று.

சிவா.. நெக்ஸ்ட் டைம் ப்ளீஸ்....

****************************

எழுத்து என்பது ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பைப் போல, ஒரு மலரின் இதழ்விரிதல் போல.. சரி விடுங்க... அப்படி இருக்க வேண்டுமென நினைப்பதால் நிறைய எழுதுவதில் ஒரு சுணக்கம் வந்து விடுகிறது. மன உளைச்சல்கள், வேலைப்பளு, நேரமின்மை, சிஸ்டம் வைரஸ் பிரச்சினை என்று சாத்தான்களின் துரத்துதல்களுக்கு பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன். இடையில் நேரமிருக்கும்போது வார்த்தைகள் வந்துவிழாமல் தவிக்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றிற்கிடையிலும் ‘ஏன்ப்பா எழுதல’ என்று கேட்கும் நண்பர்களால் உயிர்ப்போடிருக்கிறேன்.

***************************

கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்களில் கீபோர்ட் தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

********************************

மின்னஞ்சலில் வந்த செய்தி ஆச்சர்யமானதாக இருந்தது. ஆனால் உண்மையா என்று தெரியவில்லை.

அதாவது ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். (உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்) அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்!

உண்மையா ஆபீசர்ஸ்?

**********************
ஜூனியர் விகடனில் ஒரு சாமியார் பற்றிய கட்டுரை வந்திருந்தது. ரமேஷ் என்ற எனது நண்பர் ஒருவர் அந்த சாமியாரை சந்தித்து எக்குத்தப்பாக கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவரைச் சென்று சந்தித்திருக்கிறார். “என்ன என்னைக் கிண்டல் பண்ண வந்தியா?” என்று இவரைப் பார்த்த மாத்திரத்தில் கேட்டிருக்கிறார். (‘இல்லை.. அடுத்ததா பரிசல் எப்போ பதிவு போடுவார்ன்னு கேட்க வந்தேன்’ என்று சொல்லியிருந்திருக்க வேண்டும். சாமியார் ’தெரியலயேப்பா..’ என்று அழுதிருப்பார்!) இவர் அதிர்ந்து போய் ‘இல்ல.. உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன்” என்றிருக்கிறார். உடனே அந்த சாமியார் “அதுக்கு நீ நேரடியாவே போய்க் கடவுளைப் பாரு” என்று சொல்லியிருக்கிறார். “எங்க போய்ப் பார்க்க?” என ரமேஷ் கேட்க.. “வீட்டுக்குப் போ... வீட்டுக்குள்ள போறதுக்குள்ள யாராவது உங்கிட்ட சாப்பிடற விஷயத்தைப் பத்தி பேசுவாங்க. அவங்கதான் உனக்கு கடவுள்”ன்னு சொல்லியிருக்கிறார்.

இவர் பயணித்து வீட்டுக்குள் போக கேட்டை திறக்கும்போது.. பின்னாலிலிருந்து வந்த அவரது அம்மா “டேய் கடைக்குப் போய்ட்டு வரேன். உனக்கு உப்புமா செஞ்சு வெச்சிருக்கேன். போய் சாப்பிடு” என்றிருக்கிறார்.

“எனக்கு Mystic விஷயங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை கிருஷ்ணா. ஆனா இதை என்னன்னு சொல்றதுன்னு தெரியல” என்றார் ரமேஷ்.

(இதற்கு ஜ்யோவ்ராம் சுந்தரிடமிருந்து என்ன பின்னூட்டம் வரும் என்று எனக்கும் நர்சிம்முக்கும் நன்றாகத் தெரியும்!)

51 comments:

கே.என்.சிவராமன் said...

வெல்கம் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

முரளிகண்ணன் said...

செமை டேஸ்ட் அவியல்.

தராசு said...

//மின்னஞ்சலில் வந்த செய்தி ஆச்சர்யமானதாக இருந்தது. ஆனால் உண்மையா என்று தெரியவில்லை.

அதாவது ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். (உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்) அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்!

உண்மையா ஆபீசர்ஸ்?//

இதுக்குத்தான் அப்பப்ப மத்தவங்க கடைக்கும் போய் பாக்கணும்னு சொல்றது. ஒரு ப்திவே போட்டிருக்கேன் போய் பாருங்க.
http://tharaasu.blogspot.com/2009/06/blog-post_16.html

கோவி.கண்ணன் said...

நீண்ட நாள்களுக்கு பிறகு அவியல் நன்றாக கிண்டி இருக்கிறீர்கள்

வம்பு விஜய் said...

வாங்க அண்ணே,

என்னோட பதிவுக்கு வந்து ஊக்கம் கொடுத்திங்க அதுக்கு தான் நன்றி ...

அந்த சாமியார் மேட்டர் நல்லா இருக்குணே

லோகு said...

ATM PIN NO: 8888 நு இருந்தா என்ன பண்ணுவீங்க..

கார்க்கிபவா said...

//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்களில் கீபோர்ட் தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன/

qwerty கீபோர்டுதான் அனைவரும் உபயோகிக்கிறார்கள். அதயே வாங்கலாம். சேம்சங், டெல் என எல்லா நிறுவனமும் தயாரிக்கின்றன.

அப்புறம் சகா, கீபோர்டு இல்லாம எப்படி இவ்ளோ நாள் பதிவு போட்டிங்க?

நர்சிம் said...

//அதாவது ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். (உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்) அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்!//

சுத்தம்... என்னோட பின் நம்பர்..0660.வெளங்குனாப்புலதான்...

Karthikeyan G said...

//மின்னஞ்சலில் வந்த செய்தி ஆச்சர்யமானதாக இருந்தது. ஆனால் உண்மையா என்று தெரியவில்லை.

அதாவது ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். (உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்) அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்!

உண்மையா ஆபீசர்ஸ்?//

இல்லை.. இது செம டுபாக்கூரு.
FYI :http://www.hoax-slayer.com/reverse-pin-ATM.shtml

கே.என்.சிவராமன் said...

//அப்புறம் சகா, கீபோர்டு இல்லாம எப்படி இவ்ளோ நாள் பதிவு போட்டிங்க?//

:-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நட்புடன் ஜமால் said...

“குறையறது ஒருவேளை கதையா இருக்குமோ?”

ரொம்பக் குசும்பு பிடிச்ச பதிவர்யா அவர்!\\

பிசி - யானவரோ!

நட்புடன் ஜமால் said...

எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. \\

மைக்ரோஸாஃப்ட் இல்லாங்காட்டி HP or Dell


(இப்படி குசும்பாக இங்கே பின்னூட்டலாமா என்று தெரியவில்லை -
தவறென்றால் மன்னிக்கவும்)

நட்புடன் ஜமால் said...

ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். (உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்) \\

பரிசோதித்து பார்க்க இயலாத உண்மை

(நான் ஆபிஸர் இல்லை)

Beski said...

/குறையறது ஒருவேளை கதையா இருக்குமோ//
இதுக்குத்தான் நா கத எழுதுறதே இல்ல...
--
நல்லாருக்கு.
--

அருண் said...

Yamaha PSR-i425. In CBE, you can get it for 15K

தீப்பெட்டி said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்தாலும் நல்ல சுவையான அவியலோட வந்துருக்கீங்க..

அவியல் ரொம்ப சுதேசியா இருக்கு. எல்லாம் உள்ளூர் பதிவுலக காயும், திருப்பூர் கறியுமா சேந்து பண்ணியிருக்கீங்க.. அதுவும் நல்ல ருசிதான்..

//“எனக்கு Mystic விஷயங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை கிருஷ்ணா. ஆனா இதை என்னன்னு சொல்றதுன்னு தெரியல” என்றார் ரமேஷ்//

வயசானாலே இப்படித்தான் பாஸ்..

நம்பவும் முடியாது தைரியமா எதுத்துறவும் முடியாது..

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரொம்ப பிசின்னு..அவியல் இல்லாம விட்டுடுவீங்களோன்னு நினைச்சேன்..அவியல் ரொம்ப ருசி.,
புதியபறவையில்...உன் மனைவி பெயர் அல்லி என்று இருக்குமே..கதைதான் சாமியார் கதையும்.
:-)))

வினோத்குமார் said...

really interestin matter about samiyar

பரிசல்காரன் said...

@ பைத்தியக்காரன்

அண்ணா... ரொம்ப நாள் கழிச்சு நான் எழுதினதுக்கு ரொம்ப நேரம் கழிச்சு வராம உடனே வந்ததுக்கு சந்தோஷம்..!

@ முரளிகண்ணன்

நன்றி

@ தராசு

ஹி..ஹி..

@ கோவி.கண்ணன்

நன்றி.

@ விஜய்

அது எங்க கடமைங்ணா..

KARTHIK said...

welcome back தல

கீ போர்ட் வேணுமா நம்ம ஜீவ்ஸ்ணாகிட்ட சொல்லிவைங்க செகண்ஸ்ல நல்லதா வந்தா சொல்லுவாரு எதுக்கு புதுசெல்லாம்.

குசும்பன் said...

//நம்ம நண்பர் வெயிலான்கிட்ட ஒரு பிரபல பதிவர் உரையாடல் சிறுகதைப் //

எழுதவந்து இவ்வளோ நாள் ஆவுது ஒழுங்கா தப்பு இல்லாம எழுத தெரியலை... ”பிரபல பதிவரான வெயிலான்கிட்ட ஒரு பதிவர் உரையாடல் சிறுகதைப்.....” அப்படி வரனும்.

அப்துல்லா பாட்டை கேட்ட கொடுமை பத்தாதுன்னு உங்க மியுஜிக் கொடுமையையும் கேட்கனும் என்று எங்க தலையில் எழுதி இருக்கும் பொழுது என்ன செய்யமுடியும் ஏதோ பார்த்து செய்யுங்க எசமான்.

நாஞ்சில் நாதம் said...

அவியல் நல்லாருக்கு

அவியல்ல 2வது கரண்டி (அண்ணாச்சி வடகரை வேலன் மேட்டர்) உண்மை.

வலைப்பதிவர் சந்திப்பில் நூலகம் மேட்டர் பேசுனீங்களா (பழைய அவியல் மேட்டர்)

Unknown said...

நல்ல சுவையான அவியல்..

//.. சாமியார் ’தெரியலயேப்பா..’ என்று அழுதிருப்பார்!..//
//.. கார்க்கி said...
அப்புறம் சகா, கீபோர்டு இல்லாம எப்படி இவ்ளோ நாள் பதிவு போட்டிங்க? ..//

:-)

Kumky said...

பதிவர் சந்திப்பு பற்றி விரிவா போடலாமே கே.கே.
இன்னமும் உங்களுக்கு சாரு ஜுரம் விடலியா?
சற்று போதுமான அளவு ஓய்வெடுத்துவிட்டதை போல் தோன்றுகிறது.அதற்காக இவ்வளவு இடைவெளி வேண்டுமா?
கிடார் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி என்று வாங்கிவந்த கிடார் ஒரு வாரத்திலேயே பரணுக்கு போய் லீவ் நாட்களில் பையன் டொய்ங்க்கிகொண்டிருக்கிறான்.
அந்த மாதிரி இல்லாமல் ஒழுங்கா கத்துகிட்டீங்கன்னா எங்களுக்கு ஆட்சேபணையில்லை.ஏன்னா அத கூடவே தூக்கிட்டு வந்து எங்களுக்கு வாசித்து காட்ட முடியாது.
ஏடிஎம் மில் தவறாக எண் உள்ளிட்டால் 3 தடவை கேட்கும்.ஆனால் கார்டு வெளியே வராது.3 தடவையும் தவறான எண் கொடுத்தால் கார்டை முழுங்கிவிடும்.பணமும் வராது என்பது உன்மைதான்.
சில பல விஷ்யங்கள் நம் அறிவுக்கு எட்டாமல்தான் இன்றளவும் நடக்கின்றன.நேரடி அனுபவமில்லையென்றால் நாம் அதை ஏற்க்கப்போவதில்லை.அது போலத்தான் ரமேஷ் விஷயமும்.

பட்டாம்பூச்சி said...

ப்ரெசென்ட் சார்.
அவியல் அருமை.

FunScribbler said...

//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்//

வாழ்த்துகள்:)

வகுப்பிற்கு போங்க..கொஞ்ச நாள் கழித்து உங்களுக்கு எந்த கீபோர்ட் வசதிபடுமோ அதை வாங்கி கொள்ளுங்க.

கீபோர்ட் ஆசிரியரிடமே கேட்கலாம். நான் வைத்து கற்று கொள்ளும் கீபோர்ட் yamaha psr e403.

RaGhaV said...

//(உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்)

என்னோட PIN 7777.. நான் என்ன செய்யுரது..? :-(

Thamira said...

வெல்கம் பேக்கு.!

Thamira said...

எல்லாமே வழக்கம்போல ரசனையானவை..

லோகு said...
ATM PIN NO: 8888 நு இருந்தா என்ன பண்ணுவீங்க..
//

எப்பூடி.?

ஸ்வாமி ஓம்கார் said...

அவியல்
--------
ரொம்ப நாள் பட்டினி இருந்தவனுக்கு சில கவளம் சோறு... :)

//“வீட்டுக்குப் போ... வீட்டுக்குள்ள போறதுக்குள்ள யாராவது உங்கிட்ட சாப்பிடற விஷயத்தைப் பத்தி பேசுவாங்க. அவங்கதான் உனக்கு கடவுள்”//

ரெண்டு இண்டியாகாரன் சந்திச்சுகிட்ட கண்டிப்பா சாப்பாடு பத்த்தி தான் பேசுவாங்க..
இது என்னோட வெளிநாட்டு மாணவர் சொன்னது.

எனக்கும் அந்த கடைசி மாட்டருக்கும் சம்பந்தம் இல்ல..:)

//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்களில் கீபோர்ட் தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
//

வாசிப்பு அனுபவம் குறைவுனு உங்களையும் அந்த பதிவர் சொல்லிட்டாரோ :) ? அதுனால கத்துக்கறீங்களா?

Mahesh said...

ராப்பூரா முழிச்சு கிட்டிப்புள்ளு உலகக் கோப்பையை விளம்பரங்களுக்கு நடுவுல அப்பப்ப கொஞ்சூண்டு பாத்தீங்களா? நல்லா வேணும் !!

போனாப் போகுது... வெல்கம் பேக் !!

MSK / Saravana said...

அவியல் கலக்கல் :)

Vijayashankar said...
This comment has been removed by the author.
நிகழ்காலத்தில்... said...

\\\அவர் போனபிறகும் பேசப்பட்டலாமென்று நினைத்தால் பேசப்படாமலே எல்லாரும் பிரியவேண்டியதாயிற்று.

சிவா.. நெக்ஸ்ட் டைம் ப்ளீஸ்....\\\

என்ன பரிசல்., அடுத்த முறை நான் வேண்டாமா :))

சாருவின் நண்பர் என்று எந்த யோசனையும் வேண்டாம்.,

அவரின் நடுநிலையான நண்பர் நான், நீங்களும் என் நெருங்கிய நண்பர்தான்.

போற்றினாலும், விமர்சித்தாலும் என்னால் எதுவும் வெளியாகாது.

feel free

Athisha said...

அப்புறம் ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போலருக்கு..

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா பாட்டை கேட்ட கொடுமை பத்தாதுன்னு உங்க மியுஜிக் கொடுமையையும் கேட்கனும் என்று எங்க தலையில் எழுதி இருக்கும் பொழுது என்ன செய்யமுடியும் ஏதோ பார்த்து செய்யுங்க எசமான்.

//

வாடி..வா.. ஒருநாள் ஒங்க வீட்டுக்கு வந்து நான்பாடி பரிசல் கீபோர்டு வாசிக்க...

அப்புறம்???

அப்புறமென்ன...நாங்களே செத்துருவோம் :)

ILA (a) இளா said...

//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்//
உதவலாமே

ALIF AHAMED said...

http://www.buttonbeats.com/images/piano.exe


www.buttonbeats.com


try this :)

Hema said...

// ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்!//



அந்த வழிப்பறிக்காரர்கள் கத்தியை சொருகிட்டா என்ன பண்றது?
தயவு செய்து அதற்கு ஒரு பதிவு போடவும்.

பரிசல்காரன் said...

@ லோகு

சரிதான். யோசனையே இல்ல எனக்கு!

@ கார்க்கி

இதுக்கு உன்னை ஃபோன்ல திட்டிட்டதால இங்க பொழச்சுப் போன்னு விடறேன்!

@ நர்சிம்

:-))))))))))

@ நன்றி கார்த்திகேயன், கனகராசு சீனிவாசன்,

@ நட்புடன் ஜமால்

//தவறென்றால் மன்னிக்கவும்)//

இதுக்கு மன்னிக்கமாட்டேன்! (நட்புடன்னு வெச்சுகிட்டு எதுக்கு இப்படியெல்லாம் கேள்வி.. அதும் எங்கிட்ட?!?!)

நன்றி எவனோ ஒருவன்.

@ அருண்

அதைத்தான் நண்பர் ஒருத்தரும் சொன்னார்! ரொம்ப தேங்க்ஸ் ஃப்ரெண்டு!

மிக்க நன்றி தீப்பெட்டி, டிவிஆர் ஐயா, வினோத்!

பரிசல்காரன் said...

@ கார்த்திக்

அப்படியா தல? புது தகவல். கேகக்றேன்!

@ குசும்பன்

யோவ்.. அடங்கமாட்டியா நீயி?

@ நாஞ்சில் நாதன்

இல்ல தோழரே!

@ பட்டிக்காட்டான்

நன்றி

@ கும்க்கி

கிடாரைத் தூக்கிப் போட்டது நீங்களா.. உங்க வீட்டம்மணியா?

@ பட்டாம்பூச்சி... தமிழ்மாங்கனி

மிக்க நன்றி!

@ ராகவேந்திரன்

திரும்பி ஏடிஎம்முக்கு முதுகைக் காமிச்சுட்டு அடிச்சுப்பாருங்க!

@ ஆதி

நல்லா திட்டுங்கய்யா..

@ ஸ்வாமிஜி..


//வாசிப்பு அனுபவம்..//

!!!!!

@ Mahesh

சரியாச் சொன்னீங்க!

@ Saravanakumar MSK, Vijay

நன்றி

பரிசல்காரன் said...

@ மணிநரேன்
நன்றி

@ நிகழ்காலத்தில்

சிவா.. ச்சும்மாங்க! சீரியஸாய்ட்டீங்களா???

@ அதிஷா, அப்துல்லா, ILA, மின்னுது மின்னல் & Hema

ரொம்ப ரொம்ப நன்றீங்க...

Anbu said...

http://anbu-openheart.blogspot.com/2009/06/blog-post_18.html

Anbu said...

ஏ.டி.எம் பற்றிய தகவலுக்கு..புகைப்படங்களுடன்

http://anbu-openheart.blogspot.com/2009/06/blog-post_18.html

☼ வெயிலான் said...

// @ குசும்பன்

யோவ்.. அடங்கமாட்டியா நீயி? //

:)

பரிசல்காரன் said...

நன்றி அன்பு

நன்றி வெயிலு!

வெண்பூ said...

அவியல் வழக்கம்போலவே அருமையான ருசி.. அந்த கடைசி மேட்டர் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்குது. ஆனால் இன்னொரு விசயம் கவனிச்சீங்களா, நீங்க வெளிய போய்ட்டு திரும்பி வர்றதுகுள்ள யாராவது உங்ககிட்ட கண்டிப்பா சாப்பாட்டைப் பத்தி பேசியிருப்பாங்க "டீ குடிக்கலாமே / எங்க வீட்டுக்கு எப்ப சாப்புட வரப்போறே? / சாப்டாச்சா? / கூல்ட்ரிங்ஸ் எதுனா சாப்பிடலாமா?" இப்படி? அதனால பொதுப்படையா அவரு சொன்னாருன்னும் சொல்லலாம்.

செந்தில்குமார் said...

அவியல் அருமை !!

பரிசல்காரன் said...

கரெக்ட்தான் வெண்பூ!

நன்றி செந்தில்!

வால்பையன் said...

//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்களில் கீபோர்ட் தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.//

கீபோர்ட் இல்லாம எப்படி டைப் அடிக்கிறிங்க!
ஒன்னும் புரியலையே!

வால்பையன் said...

//இதற்கு ஜ்யோவ்ராம் சுந்தரிடமிருந்து என்ன பின்னூட்டம் வரும் என்று எனக்கும் நர்சிம்முக்கும் நன்றாகத் தெரியும்!//

இப்படியெல்லாம் எழுதி ஜ்யோவ்ராம் சுந்தர் கிட்ட பின்னூட்டம் வாங்கலாம்னு மனகோட்டை கட்டாதிங்க!

அதுக்கு வேற டெக்னிக் இருக்கு!