Tuesday, June 2, 2009

யப்பா.. சாமீ.. முடியல...


01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எந்தப் பெயரைக் கேட்கிறீர்கள்? பரிசல்காரனா.. கிருஷ்ணகுமாரா? பரிசல்காரன் வந்த காரணம்... இதோ இங்கே இருக்கிறது. கிருஷ்ணகுமார்.. ம்ம்ம்.. குருவாயூர் கோவிலில் சோறு கொடுத்துவிட்டு, பழனி வந்து எனக்கு மொட்டையடித்தார்களாம்... அப்போது கிருஷ்ணன்+குமார் என்று முடிவு செய்து கிருஷ்ணகுமார் என்று பெயர் வைத்தார்களாம். (வரலாறு முக்கியம் அமைச்சரே!) இரண்டுபெயர்களும் மிகப்பிடிக்கும்!

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இரண்டாவது கேள்வியே பவுன்ஸராக இருக்கிறது... சமீபத்தில் அழுதது என்று வேண்டுமானால் சொல்லலாம்.. அது சர்வம் படத்திற்குப் போகலாம் என்று நண்பன் அழைத்தபோது!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

Signatureஆ? Handwritngஆ?

Handwritng முதலில் அழகாக இருந்தது. இப்போது இல்லை. Signature முதலில் என்னமோ மாதிரி இருப்பதாகப் பட்டது. இப்போது இல்லை. இரண்டாவது பிடிக்கும். ஏனென்றால் முதலில் அது Signatureஆக இருந்து, இப்போது அதைப் போட்டால் பலர் Autograph என்பதால். (ச்ச்ச்ச்சே!)

4).பிடித்த மதிய உணவு என்ன?

ஹையோ! உணவு குறித்த கேள்வின்னாலே அலர்ஜிங்க எனக்கு.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அலைவரிசையைப் பொறுத்து.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டிலுமே நனையப் பிடிக்கும்.

(இந்தக் கேள்விக்கு குளிக்க’ என்கிற பதம் தவறென்று நினைக்கிறேன். இவற்றில் குளிப்பதைவிட நனைதலைத்தான்தான் மிக விரும்புவார்கள்... இல்லையா? அருவி ஒருபடி மேல். (அருவி என்றது விக்ரமாதித்யன் கவிதை நினைவுக்கு வருகிறது... எங்கே யாராவது சொல்லுங்கள் பார்ப்போம்!)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
வாட்ச். என்னுடைய வாட்ச்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

டித்த – எதுவுமே இல்லையோ என்று இந்தக் கேள்விக்கு அரைமணிநேரமாக யோசித்துக்கொண்டிருப்பது.

டிக்கா – கோபப்பட வேண்டிய விஷயங்களுக்குகூட கோபப்டாமல் அட்ஜஸ்ட் செய்து கொண்டு GOODDY GOODY இமேஜுக்காக ரோஷமற்றிருப்பது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

டித்த: – எனக்கு அவரை எத்தனை சதவிகிதம் பிடிக்கிறதோ அதைவிட ஒருசதவிகிதமாவது அதிகமாக அவருக்கு என்னைப் பிடிக்கிறது என்பது.

டிக்கா: என் பி - டித்த, டிக்காதவை பற்றி எழுத எனக்கிருக்கும் உரிமையைவிட, என் சரிபாரிதியின் பி-டித்த, டிக்காதவை பற்றி எழுத அவர் எனக்குக் கொடுத்திருக்கும் உரிமையை மிக மதிப்பதால்... இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதைத் தவிர்க்கிறேன்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

இளையராஜாவின் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்தறேன்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
இப்போது இரவு 2.33. வீட்டில் மேலாடை ஏதுமில்லை. கீழாடை பெர்முடாஸ். பிஸ்கெட் கலர். (ஐயா.. இந்த தொடரை ஆரம்பிச்ச கேள்வித் திலகமே.. இந்தக் கேள்வியின் மூலம் தாங்கள் எம்மை வாசிக்கும் வாசகர்களுக்கு சொல்ல விரும்பும் சேதி என்னவோ?)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இப்போது ஏதுமில்லை. அடிக்கடி கந்தசாமி படப்பாடல்கள்.. அனைத்தும்.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிப்புற வர்ணமா.. எழுதும் வண்ணமா? எப்படியிருந்தாலும் நல்ல பேனாவாக எழுதும் வண்ணம் இருத்தல் பிடிக்கும். (11வது கேள்வியின் ப்ராக்கெட் வாசகங்கள் இதற்கும் பொருந்தும்)

14.பிடித்த மணம்?
பவிழமல்லிப் பூவாசம்.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

வடகரை வேலன்: ஒருவர் குறித்த குறைகளை சம்பந்தப்பட்டவர்களிடமும், நிறைகளை பிறரிடம் சொல்லும் இவரது குணம்.

எம்.எம்.அப்துல்லா: தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும், பிறரது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் வித்தியாசம் இருப்பினும், பிறருடன் பழகுகையில் அவர்களுக்கு விருப்பு வெறுப்புகளை உணர்ந்து அவர்களுக்குத் தக்கவாறு நடந்து கொள்ளும் பாங்கு. (இதுக்கு ஸ்டேட் பாங்கு-க்கும் எந்த சம்பந்தமில்லை)

பைத்தியக்காரன்: இவரது வாசிப்பனுபவம்.

மூவரையும் அழைக்கக் காரணம் அடுத்து அவர்கள் எழுதட்டுமென்றுதான். சரியா?

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

இந்தத் தொடருக்கு அழைத்த இனியவனின், இந்தத் தொடர் குறித்த கேள்வி பதிலின் 15வது கேள்வியின் முதல் பதிலின் இரண்டாவது வரி மிகப்பிடித்திருப்பதால்....

அவரது எல்லா பதிவும் பிடிக்கும்! (நல்லவேளை சுஜாதா இல்லை....)

(அந்த பதிலிலிருந்தே அவர் எவ்வளவு நகைச்சுவை உணர்வு மிக்கவர் என அறியலாம்!)

17. பிடித்த விளையாட்டு?

மூன்று குழி வெட்டி, அதில் கோலிக் குண்டை கடத்திக் கடத்தி ஒரு விளையாட்டு விளையாடுவோம்.. சிறுவயதில். அதற்கிணையான சுவாரஸ்யம் இதுவரை வேறெந்த விளையாட்டிலும் நான் அடையவில்லை.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை! (ஐயா சாமீ... கேள்வியின் நாயகா... முடியல.)

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நகைச்சுவை கலந்த செண்டிமெண்டான சண்டையிருக்கும் காதல் த்ரில்லர் படங்கள். (காதலே த்ரில்தானே?!?)

20.கடைசியாகப் பார்த்த படம்?

ராஜாதிராஜா எனும் லோ க்ளாஸ் கிங் காவியம்.

21.பிடித்த பருவ காலம் எது?

பருவகாலம் என்றாலே படமும் பிடிக்கும். படிக்கவும் பிடிக்கும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

திசை அறியும் பறவைகள்.


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தெரியவில்லை. (யப்பா சாமீ!)


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

டித்த: உங்களுக்கு மணியார்டர் வந்திருக்கு எனும் போஸ்ட்மேனின் குரல்.

டிக்கா: சாலையில் தேவையில்லாமல் கேட்கும் ஹாரன் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

யோசிச்சுச் சொல்றேன்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இல்லை. எனக்கிருக்கும் எந்தத் திறமையுமே, உலகில் ஏதோவொரு மூலையில் வேறு யாருக்காவது இருக்கும்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

மனைவி, குழந்தைகள் சுமையுடன் நடக்க கணவன் சிகரெட் பிடித்தபடி முன்னே நடக்கும் காட்சி.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பேசிக்கலி ஐயாம் எ சோம்பேறி.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கோவா. (இதுவரை போனதில்லை. கேள்விப்பட்டவரை..)

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எப்படியும் என்றில்லாமல் இப்படித்தான் என்று இருக்கவேண்டுமென்று ஆசை.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
வலைமேய்தல். அலைபேசல். (மனைவி இல்லதப்போ இவற்றை நான் செய்தால் அவர்களுக்குப் பிடிக்கும்!)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

LIFE IS BEAUTIFUL

.

44 comments:

தீப்பெட்டி said...

kalakkitinga boss..

லக்கிலுக் said...

//கிருஷ்ணகுமாரா? //

இந்தப் பெயர் கொஞ்சம் ரேர் ஆன பெயர். சிறுவயதில் செய்திகளில் இப்பெயரை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். கேரளாவை சார்ந்த மத்திய அமைச்சர் ஒருவரின் பெயர் என்பதாக நினைவு.

எனக்கு ஆரம்பத்தில் இந்தப் பெயர் பிடிக்கவில்லை. பிற்பாடு மாவீரன் கிட்டு என்கிற வெங்கட்டின் இயற்பெயரும் இதுதான் என்று கேள்விப்பட்டதிலிருந்து இப்பெயரை நேசிக்க ஆரம்பித்தேன் :-)

Athisha said...

யப்பா சாமீ முடியல..

சென்ஷி said...

:)

சந்தோசம்.. மகிழ்ச்சி :)

Vijay Anand said...
This comment has been removed by the author.
Vijay Anand said...

இன்னும் எத்தனை பேர் "என்னைப்பற்றி 32 கேள்விகள்" பதில் சொல்ல போறீங்க !
இப்பவே கண்ண கட்டுதே ?
விஜய்

1) http://aveenga.blogspot.com/2009/06/32.html

2) http://www.parisalkaaran.com/2009/06/blog-post.html

.
.
.
32) ?

ஜெகதீசன் said...

:)

Thamira said...

யோவ்.. மொக்ஸ், இதே தொடரின் திசைதிருப்பப்பட்ட பகுதியைத் தொடர‌ நான் உம்மை அழைத்தேன்ல.!

இந்தத்தொடரின் வெற்றி சிந்தனைக்குரியது. இது சுயதம்பட்டம், தற்புகழ்ச்சி ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்கும் நாசூக்கான தொடர். ஆகவே இது வென்றது என நினைக்கிறேன். இதை எழுதுபவர் இதை மிகவும் ரசிக்கக்கூடும். ஆனால் படிப்பவர்கள்.? முதலில் படிப்பதற்கான ஆர்வமாவது இருக்குமா? துவக்கத்தில் இருந்த மைல்டான ஆர்வம் கூட எனக்கு இப்போது இல்லை. அல்லது உங்களைப்போன்ற விஐபி பதிவர்களோடது வாசிக்கப்படலாம். பிறரது சந்தேகத்துக்கிடமானதே..

கே.என்.சிவராமன் said...

அழைப்புக்கு நன்றி பரிசல்... நாளை பதிவிடுகிறேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நாடோடி இலக்கியன் said...

very interesting ...parisal

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க பரிசல்.. சிகரெட் ஆடவன் பதில் அருமை.

எம்.எம்.அப்துல்லா said...

//அருவி என்றது விக்ரமாதித்யன் கவிதை நினைவுக்கு வருகிறது... எங்கே யாராவது சொல்லுங்கள் பார்ப்போம

//"அருவியை நீர் வீழ்ச்சி என்றால் வலிக்கிறது".

Suresh said...

நல்லா இருக்கு அனைத்து பதிலுக்கு நல்ல பதில்கள் நீங்க எல்லாம் கூப்பிட்டால் எழுதுவிங்களோ என்று தான் கூப்பிடவில்லை தொடர் பதிவுக்கு.. இல்லைனா கண்டிபா ஐடியா இருந்தது..

நான் பதிவு எழுத வந்துக்கு நீங்களும் உங்க ஒரு பதிவும் காரணம் நண்பா ..

Suresh said...

//LIFE IS BEAUTIFUL.//

சிறப்பு

உங்க பெயர் காரண பதிவை முன்னமே படித்துவிட்டேன்

ஸ்ரீ.... said...

பதிவு அருமை. இளையராஜா பற்றிப் பதிவிட்டிருக்கிறேன். நேரமிருந்தால் வாசித்துக் கருத்தளியுங்கள்.

ஸ்ரீ....

தமிழ் said...

நன்றி நண்பரே

iniyavan said...

நான் இந்த பதிவை எழுதிம்போது ஏதோ பரிட்சைக்கு எழுதுவதுபோல் பய பக்தியுடன் எழுதினேன்.

அதே கேள்விகளுக்கு, இதோ பரிசலின் டச்சுடன் பதில்கள்.

ரமேஷ் வைத்யா said...

டித்த: குயுக்தி

டிக்கா: நதிங்

தராசு said...

//நகைச்சுவை கலந்த செண்டிமெண்டான சண்டையிருக்கும் காதல் த்ரில்லர் படங்கள். (காதலே த்ரில்தானே?!?)//

பிடிச்ச படம் பார்த்து பல யுகங்கள் ஆயிருக்குமே தல‌???????

குசும்பன் said...

:)))))

மணிநரேன் said...

26, 27, 32-ம் கேள்விக்கான பதில்கள் மற்றவற்றைவிட அருமையாக எனக்கு தோன்றுகிறது.

அ.மு.செய்யது said...

ப‌தில்க‌ள் இன்ட்ஸ்ர‌ஸ்டிங்...

(இந்த‌ சினிமாக்கார‌ங்க‌ தான் அப்ப‌டினா நீங்க‌ளுமா ?? )

பரிசல்காரன் said...

நன்றி தீப்பெட்டி.

@ லக்கிலுக்

நீங்கள் குறிப்பிடுவது எஸ்.கிருஷ்ணகுமாரைத் தானே? எனக்கும் நீங்கள் சொல்வது நினைவில் வருகிறது. ஆனால் அப்போது நான் உங்களை விட ச்சின்னவன் என்பதால் அவ்வளவாக நினைவிலுமில்லை...

@ அதிஷா

சரி. நன்றி

@ சென்ஷி

சரி. நன்றி

@ விஜய் ஆனந்த்

அதுசரி!

@ ஜெகதீசன்

:-))

லக்கிலுக் said...

//நீங்கள் குறிப்பிடுவது எஸ்.கிருஷ்ணகுமாரைத் தானே? எனக்கும் நீங்கள் சொல்வது நினைவில் வருகிறது. ஆனால் அப்போது நான் உங்களை விட ச்சின்னவன் என்பதால் அவ்வளவாக நினைவிலுமில்லை...//

சித்தப்பா!

நீங்க என்ன சொல்லி கொடுத்தீங்களோ அதை இங்கே வந்து அப்படியே பின்னூட்டமா போட்டுட்டேன். இந்த மாதிரி ரிவீட் அடிச்சீங்கன்னா எப்படி? புள்ளையை கிள்ளி உட்டுட்டு தொட்டிலை ஆட்டுறீங்களே?

பரிசல்காரன் said...

@ ஆதிமூலகிருஷ்ணன்

//இதே தொடரின் திசைதிருப்பப்பட்ட பகுதியைத் தொடர‌ நான் உம்மை அழைத்தேன்ல.!//

எப்ப்ப்ப்ப்போ?

--உங்களைப்போன்ற விஐபி பதிவர்களோடது வாசிக்கப்படலாம்--

ஏன்ய்யா இந்தக் கொலவெறி?

@ பைத்தியக்காரன்

அண்ணா... நன்றிங்ண்ணா!

@ நாடோடி இலக்கியன்

ரசித்தேன்!

@ நர்சிம்

நீங்க அத குறிப்பிட்டுச் சொல்வீங்கன்னு கணிச்சேன் பாஸு!

@ அப்துல்லா

சரி. முழுசா சொல்றது? (எப்படி டைரிக்குறிப்பில்லாம இன்னொண்ணு எழுதக் கூப்ட்டு கட்டுடைச்சுட்டோம்ல? :-)))

@ சுரேஷ்

//நான் பதிவு எழுத வந்துக்கு நீங்களும் உங்க ஒரு பதிவும் காரணம் நண்பா ..//

உங்களைப் போன்றவர்களின் இந்த வார்த்தைகள்தான் எனக்கு வரங்கள். (ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா!)

@ ஸ்ரீ

வரேன்!

@ திகழ்மிளிர்
நன்றி! (விக்ரமாதித்யனின் அந்தக் கவிதை என்னான்னு சொல்லவேல்ல? உங்களுக்குத்தான் கவிதைகள் மிகப்பிடிக்குமே?)

@ இனியவன்

மிக்க நன்றி நண்பா. அழைத்து இப்படியொரு வாய்ப்பு வழங்கியமைக்கு!

முரளிகண்ணன் said...

nice answers parisal

பரிசல்காரன் said...

@ ரமேஷ் வைத்யா

நான் காண்பது நனவா.. கனவா? நன்றி அண்ணா!

@ தராசு

:-))))

@ குசும்பன்

:-)))))))))))))))))

@ மணிநரேன்

குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு நன்றி நண்பா!

@ அ.மு.செய்யது

எங்களிலிருந்துதானே அவர்கள்!

@ லக்கிலுக்

//புள்ளையை கிள்ளி உட்டுட்டு தொட்டிலை ஆட்டுறீங்களே//

பார்றா.. பழமொழிகூட சிச்சுவேஷனா சொல்றாரு!

பரிசல்காரன் said...

@ முரளிகண்ணன்

தேங்கஸ் மு.க!

Anonymous said...

:)

|Nalla irukkudhu..

AvizhdamDesigns said...

இன்னொரு கலைஞரா..?

AvizhdamDesigns said...

இன்னொரு கலைஞரா..?

Sanjai Gandhi said...

:))

//அல்லது உங்களைப்போன்ற விஐபி பதிவர்களோடது வாசிக்கப்படலாம். பிறரது சந்தேகத்துக்கிடமானதே..//

புரியுது... மைண்ட வச்சிக்கிறேன்.. :)

thamizhparavai said...

எல்லா பதிலும் அருமை.. எனக்குப் பிடித்த பதில்கள் 10 மற்றும் 26 கேள்விக்க்கான பதில்கள் பரிசல்...
இந்தக் கேள்விகளுக்கு இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியுமான்னு வியக்கிறேன்..

வால்பையன் said...

ஒரு இடத்திலுங்கள் ஆழ்மன வெளிப்பாடு தெரிகிறது கவனித்தீற்களா

ஹூடிபாபா!............

கலையரசன் said...

கேள்வி பதில விடுங்க பாஸ்..
உங்க கிட்ட புடிச்சது,
இப்ப வந்த பதிவரா இருந்தும்
அவர் அழைச்சி நீங்க எழுதுனிங்க
பாருங்க.. யூ ஆர் ரியலி கிரேட்!

ஆனா சிலபேர அழைத்தாலும்,
அவனுங்க காட்ற புளிப்பு இருக்குதே...
உங்க பாஷயில சொன்ன.. யப்பா சாமீ!

கோபிநாத் said...

குட் ;))

\\இளையராஜாவின் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்தறேன்\\\

ஆகா...நிறைய விஷயம் இருக்கும் போல..கொஞ்சம் அவரை பத்திதான் எழுதுங்களோன் அண்ணாச்சி ;)

பட்டாம்பூச்சி said...

பதிவு நல்லா இருக்கு :)

Kumky said...

நல்லது.

Rajalakshmi Pakkirisamy said...

:) :) :)

பழமைபேசி said...

//18.கண்ணாடி அணிபவரா?

இல்லை!//

தவறான விடை. அல்ல என்பதே சரி!

வசந்த் ஆதிமூலம் said...

பரிசல் பரிசல் ன்னு ஒரு நல்லவன் இருந்தான். எங்கப்பா அவன ?

அன்பேசிவம் said...

வணக்கம் பரிசல் சார். உங்களோட முதல் கேள்விக்கும் கடைசி கேள்விக்குமான பதில்கள்தான் கிட்டத்தட்ட என்னுடைய பதில்களும். இன்றும் என்னுடைய கடிதங்களில் கையெழுத்தின் கீழ் Life is Beautiful என்று போடுவது வழக்கம்.

Deepa said...

//(மனைவி இல்லதப்போ இவற்றை நான் செய்தால் அவர்களுக்குப் பிடிக்கும்!)//

இது ரொம்ப நல்ல பதில்!

Rajalakshmi Pakkirisamy said...

//நகைச்சுவை கலந்த செண்டிமெண்டான சண்டையிருக்கும் காதல் த்ரில்லர் படங்கள். (காதலே த்ரில்தானே?!?)//

he he he :) :) :)