Monday, June 22, 2009

தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் டென் எதிர்பார்ப்புகள்

10. கண்டேன் காதலை
தமிழ்சினிமாவில் இந்தி படங்களை ரீமேக் செய்வது குறைவு. இந்தப் படம் JAB WE MET என்ற சூப்பர் ஹிட் இந்திப் படத்தின் ரீமேக். பரத் - தமன்னா நடிக்கும் இந்தப் படம் கதை விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப் படுகிறது. (பர்சனலாக பரத்-தை ஷாகீத் கபூரின் இடத்தில் பொருத்திப் பார்க்க மனம் மறுக்கிறது!)


9. மெட்ராஸ் பட்டிணம்

ஆர்யா நடிக்கும் இந்தப் படம் 1940களின் சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.

8. இது மாலை நேரத்து மயக்கம்
தனுஷ் ஆண்ட்ரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம். ஆனால் செல்வராகவனின் பிஸி ஷெட்யூல் காரணமாக இந்தப் படம் தற்போதைக்கு நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் உலாவருகின்றன.


7. விண்ணைத்தாண்டி வருவாயாகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கம். சிம்பு-த்ரிஷா நடிப்பில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் வரவிருக்கும் படம்.


6. கோவா
சென்னை 600028 மற்றும் சரோஜா பட வெற்றிக்கூட்டணி.

5. ஆடுகளம் & ஆதவன்
ஐந்தாம் இடத்தை இரண்டு ‘ஆ’ படங்கள் பகிர்ந்து கொள்கின்றன. முதலாவது தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ஆடுகளம். பொல்லாதவன் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது!

அடுத்தது ஆதவன். கமர்ஷியல் ஹிட் கொடுப்பதில் நம்பர் ஒன் இயக்குனரான கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம். சூர்யா படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புள்ள அம்சமாக இருக்கிறது.


4. அசல்சரணின் இயக்கத்தில் அஜீத்!


3. வேட்டைக்காரன்விஜய்...!


2. உன்னைப்போல் ஒருவன்
A WEDNESDAY என்ற இந்தி சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக். கமலுடன் மோகன்லாலும் இணைந்து நடித்துள்ளார்.


1. எந்திரன்


என்ன சொல்ல?.

(thanks for the images: sify, galatta, behind woods... )

47 comments:

தராசு said...

தொடர்ந்து இரண்டாவது சினிமா பதிவு,

பரிசல் கொஞ்சம் தடம் மாறுதோ?

உண்மைத்தமிழன் said...

"மாலை நேரத்து மயக்கம்" கைவிடப்பட்டது என்கிறார்கள்..!

லிஸ்ட்டில் "ஆயிரத்தில் ஒருவனை" விட்டுவிட்டீர்களே..!

பரிசல்காரன் said...

@ தராசு

ஆமாம்! ஆனால் ஆச்சர்யப்படத்தக்க ஒரு காரணம் இருக்கிறது!

@ உ.த.


மா.நே.ம - ஒத்திப் போடப்பட்டுள்ளது! கைவிடப்படவில்லை. அந்தப் படத்தின் இணை இயக்குன்ர் தந்த தகவல்!’


ஆ.ஒ - மேக்ஸிமம் முடிந்துவிட்டது! அப்படியென்றால் கந்தசாமியையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்!

Raju said...

அந்த கட்சியிலிருந்து பெட்டி வந்துருச்சா...!

லக்கிலுக் said...

//மா.நே.ம - ஒத்திப் போடப்பட்டுள்ளது! கைவிடப்படவில்லை. அந்தப் படத்தின் இணை இயக்குன்ர் தந்த தகவல்!’//

கைவிடப்பட்டு விட்டதாக ஹீரோயின் ஆண்ட்ரியா பேட்டி :-)

தனுஷ் பிஸியாகிவிட்டாராம். அண்ணனுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாதாம்.

நையாண்டி நைனா said...

/*அந்த கட்சியிலிருந்து பெட்டி வந்துருச்சா...!*/

மாப்பி டக்கு..
அவரு நடிச்ச படத்தோட ரீலு பொட்டி வருறதே சந்தேகம்...
ஆவ்வ்வ்.....

நையாண்டி நைனா said...

(பர்சனலாக பரத்-தை ஷாகீத் கபூரின் இடத்தில் பொருத்திப் பார்க்க மனம் மறுக்கிறது!)

பர்சனலாக உங்களிடம்...

அதை அந்த புரட்யூசரே கவலை படலை... நீங்க போயி....

Tweety said...

// @ தராசு
தொடர்ந்து இரண்டாவது சினிமா பதிவு,
பரிசல் கொஞ்சம் தடம் மாறுதோ?

@பரிசல்

ஆமாம்! ஆனால் ஆச்சர்யப்படத்தக்க ஒரு காரணம் இருக்கிறது! //

@Tweety

வணக்கம் டைரக்டர் ஸார். ப்ரொட்யூசர் கிடைச்சிட்டாரா! உங்க படத்துக்கு ஹீரோ வேனும்னா என்னை காண்டாக்ட் பண்ணுங்க. வெளியே தேடாதீங்க..

பரிசல்காரன் said...

@ டக்ளஸ்

எந்தக் கட்சி நண்பா? சொல்லுங்க போய் வாங்கிக்கறேன்?

@ லக்கிலுக்

அப்டியா?

@ நையாண்டி நைனா

சரியாச் சொன்னேள் போங்கோ!

@ Tweetty

:-))))

Venkatesh Kumaravel said...

ம.நே.ம ட்ராப் ஆகிவிட்டதாக செல்வா சொன்னார். அதற்காக தொடங்கியவற்றை ஆ.ஒ-வுடன் இணைத்துவிட்டதாக (கார்க்கி சிலாகித்து எழுதியிருக்கும் பாடல் விமர்சனத்துக்கான பாடல் உட்பட) சொல்லியிருந்தார்.

தமிழன்-கறுப்பி... said...

jab we met இதை தமிழில் எப்படி எடுக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இந்தியில் ஒன்றரை முறை பார்த்திருக்கிறேன் :)

ஆனா ஷகீத் கபூரை பிடிக்கும்
இந்த பாத்திரத்துக்கு பரத்தை விட வினய் பொருந்துவார் என்று நினைக்கிறேன்..மற்றும் படி பரத் செய்யக்கூடியவர்.

எதிர்பார்க்கிற படம்-
ஆடுகளம்
விண்ணைத்தாண்டி வருவாயா

க.பாலாசி said...

நாடோடிகள் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். சமுத்திரக்கனி, சசிக்குமார் கூட்டணி.

க.பாலாசி said...

"நாடோடிகள்" இதையும் சேர்த்துக்கொள்ளலாம். சமுத்திரக்கனி, சசிக்குமார் கூட்டணி.

வசந்த் ஆதிமூலம் said...

யோவ்... நீ வேற ஏன்யா ? இருக்கிற படத்த பார்த்து மண்ட காஞ்சது போதாதா ? தமிழ் சினிமா வும் திருந்தாது. நாமளும் திருந்தமாட்டோம்.

பிச்சைப்பாத்திரம் said...

டிரெயிலர் போட்டே ஒரு பதிவ முடிச்சிட்டீங்க போலிருக்கு. உங்க கிட்ட இருந்து கத்துக்கங்க வேண்டியது நிறைய இருக்கும் போலிருக்கே. :-)

btw, நான் எதிர்பார்ப்பது மெட்ராஸ் பட்டிணமும், ஆடுகளமும்தான். நாடோடிகளும் கொஞ்சம் எதிர்பார்ப்பை தருது. நண்பர்ன்றதால அருண் வைத்தியநாதனோட 'அச்சமுண்டு அச்சமுண்டு' எப்படியிருக்குன்ற எதிர்பார்ப்பும் இருக்கு. டப்பிங் படமாயிருந்தாலும் அதன் முக்கியத்துவம் கருதி 'பழசி ராஜா'வையும் (http://jeyamohan.in/?p=2698) லிஸ்டில சேத்துக்கலாம்.

Prabhu said...

சிம்பும், த்ரிஷா சாங் சூட்டிங் நெட்ல ரிலீஸ் ஆயிருந்தது, பாத்தீங்களா?

Unknown said...

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா சார்....!!!!

பரிசல்காரன் said...

@ வெங்கிராஜா

அப்படியா?!!??!!??

@ தமிழன் கறுப்பி

வினய் யா? அவ்வ்வ்வ்.... சரிதான்!

@ பாலாஜி

விரைவில் வெளியாகப்போகும் படங்களை சேர்க்கவில்லை நண்பா. கந்தசாமியும் விரைவில் வருவதால் சேர்க்கவில்லை. அண்டர் ப்ரொடக்‌ஷன் மட்டுமே...

@ வ.ஆ.மூ

நீங்க ஒரு நல்ல டாக்டரைப் பாரப்்பது அவசியம்!

@ சுரேஷ் கண்ணன்

தல.. ஓ! சினிமா பத்தி எழுதினா வருவீங்களா? அப்ப சரி!

அச்சமுண்டு அச்சமுண்டு அருண் உங்க நண்பரா? காஃபி வி அனுல ரொம்ப தெளிவா சில விஷயங்களைப் பகிர்ந்துகிட்டார்! ஹாட்ஸ் ஆஃப் சொல்லுங்க அவருக்கு!

// pappu said...

சிம்பும், த்ரிஷா சாங் சூட்டிங் நெட்ல ரிலீஸ் ஆயிருந்தது, பாத்தீங்களா?/

Pappu.. சிம்பு மேட்டர்ன்னாலே நெட்ல தான் ஃபர்ஸ்ட் ரிலீஸ் போல!

பரிசல்காரன் said...

நன்றி லவ்டேல் மேடி!

நர்சிம் said...

பிரசண்ட் ஸார்

மதிபாலா said...

மக்களின் இயக்கம் தான் பெரிய எதிர்ப்பார்ப்பு போல

பரிசல்காரன் said...

@ நர்சிம்

ஏன்? இல்ல ஏன்னு கேக்கறேன்.. என்னடா எழுதறன்ன சொல்லாம சொல்றீங்களோ?

@ மதிபாலா

என்ன சொல்ல வாரீக??

FunScribbler said...

10) jab we met படமே ஏண்டா பாத்தோம்னு இருந்துச்சு? :)

9)இப்படி ஒரு படம் இருக்கா?

8) செல்வராகவன்...வாவ்!! பாத்தே ஆகனுமே

7)confirm! first day first show!

6) confirm! first day first show!
5) இந்த படமெல்லாம் விமர்சனங்கள் படிச்ச பிறகு தான் போய் பார்ப்பேன்:)

4)ம்ம்ம்....இதுக்கு தலைவலி மருந்து freeyaa கொடுப்பாங்களா?

3)இதுக்கும் கொடுப்பாங்களா?

2) ஹிந்தியில் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. கமல் இதை வித்தியாசமா எடுக்குறேன்னு ஏதாச்சு கொத்துபரோட்டா செஞ்சு விடுவாரோன்னு பயமா இருக்கு.

1) ம்ஹும்....நான் பொறந்ததுலேந்து எடுத்துகிட்டு இருக்காய்ங்க....

இரும்புத்திரை said...

வாரணம் ஆயிரம் - கௌதம் மேனனின் அப்பாவின் கதையை சொன்ன படம் . அதில் வந்தது எல்லாம் கௌதம் மேனனின் வாழ்வில் நடந்தது தான்.

வாரணம் ஆயிரம் படத்தில் காதல் தோல்வியில் இருந்து கௌதம் (சூர்யா) மீண்டு வந்த பிறகு இராணுவத்தில் சேருவார் .

ஆனால் உண்மையில் அவர் சேர்ந்தது ராஜீவ் மேனனின் உதவியாளராக - இந்த கதை தான் விண்ணைத் தாண்டி வருவாயா .

கதையில் த்ரிஷா சிம்புவின் தங்கையின் தோழி . வாரணம் ஆயிரம் படத்தில் திவ்யா சூர்யாவின் தங்கையின் தோழி .

ஆக மொத்தம் இரண்டு கதையும் ஒன்று தான் . இரண்டையும் குப்பையில் தான் போட வேண்டும் (பாடல்களை நான் சொல்லவில்லை).

தமிழ் ரசிகர்களைப் போல முட்டாள்கள் இருக்கும் வரை இந்த முட்டாள்கள் எடுத்த கதையையே எடுப்பார்கள் .

பரிசல்காரன் said...

@ தமிழ்மாங்கனி

கலக்கல் பின்னூட்டங்கள் தமிழ்! நன்றி

@ arvind

//தமிழ் ரசிகர்களைப் போல முட்டாள்கள் இருக்கும் வரை//

பாராட்டுக்கு நன்றி!

இரும்புத்திரை said...

//@ arvind

//தமிழ் ரசிகர்களைப் போல முட்டாள்கள் இருக்கும் வரை//

பாராட்டுக்கு நன்றி!
//

antha lista naanum undu

Subha said...

what happened parisal...want to give tough competition to cable?

Thamira said...

eஎnன்nன்aஅ iஇpப்pப்aஅdட்iஇ iஇRற்aஅnன்gக்kக்iஇdட்dட்Iஈnன்gக்kக்aஅ?? nன்nன்uஉ kக்Eஏdட்kக்aஅ wந்iஇnன்aஅiஇsச்sச்Eஏnன்....

Iஈ kக்aஅlல்aஅpப்pப்aஅiஇ eஎpப்pப்iஇdட்iஇ aஅdட்iஇkக்kக்uஉtட்hஹ்uஉ pப்aஅaஅrர்uஉnன்gக்kக்aஅ....??

hஹ்iஇhஹ்iஇ....

Thamira said...

என்ன இப்பிடி இறங்கிட்டீங்கன்னு கேட்க நினைச்சேன்.

ஈ கலப்பை எப்படி அடிக்குது பாருங்க.. ஹிஹி..

(முந்தைய பின்னூட்டத்தின் தமிழாக்கம்)

ILA (a) இளா said...

ஆயிரத்தில் ஒருவன் இதுல வராதுங்களா?

ILA (a) இளா said...

//மா.நே.ம - ஒத்திப் போடப்பட்டுள்ளது//பிரச்சினை பண்ணினது சோனியாவாம். ஆண்டிரிய நடிக்கிறது பிடிக்கலைன்னு சொல்ல, செல்வராகவன் ட்ராப் பண்ணிட்டதா சொல்லிக்கிறாங்க

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//ஹிந்தியில் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. கமல் இதை வித்தியாசமா எடுக்குறேன்னு ஏதாச்சு கொத்துபரோட்டா செஞ்சு விடுவாரோன்னு பயமா இருக்கு.//

Repeat.

Beski said...

தகவல்களுக்கு நன்றி.

வால்பையன் said...

இன்னும் ஒரு மாசத்துக்கு உங்கலை கையில புடிக்க முடியாது, படம் பார்த்து விமர்சனம் எழுதுறதுல்ல பிஸியாயிருவிங்க கரைக்டா

Muruganandan M.K. said...

"என்ன சொல்ல?..."
தப்பிப்பா, கிண்டலா?

Unknown said...

"ஆயிரத்தில் ஒருவNN" விட்டுவிட்டீர்களே..

சிவா said...

மணிரத்னத்தை உங்களுக்கு பிடிக்காது போல....

எம்.எம்.அப்துல்லா said...

நான் எதிர்பார்க்கும் படம் இங்க லிஸ்டில் இல்லண்ணா :)

Manoj (Statistics) said...

கலைஞர், விஜய T.R. போன்றோரின் புதிய படத்தினை காணவும் நாம் ஆவலாக உள்ளோம்.....

CrazyBugger said...

Kandasaamy engae poittaaru?

sdc said...

Can u joint with sugasini?

Super than
Vera enna solla.

Aduthathu cinema venaam

Nat Sriram said...

என்னங்க சேரனின் பொக்கிஷம் படத்தை விட்டுடீங்க? டிரைலரே நல்லா மிரட்டலா இருக்கே..பார்த்தீங்களா?

கிர்பால் said...

//
ஆமாம்! ஆனால் ஆச்சர்யப்படத்தக்க ஒரு காரணம் இருக்கிறது!
//

சேனல்ல சேர்ற plan எதுவும் இல்லியே!!! ஏற்கனவே ஒவ்வொருத்தனும் விமர்சனம்-ன்ற பேர்ல படங்களுக்கு விளம்பரம் பண்ணி கொல்றானுக...

Kumky said...

ஓ...சினிமாவா..?

நாஞ்சில் நாதம் said...

பரிசல்

அடுத்த பதிவ போடுங்க ஒரு வாரம் ஆச்சு.

நாஞ்சில் நாதம் said...

பரிசல்

அடுத்த பதிவ போடுங்க ஒரு வாரம் ஆச்சு.

கார்த்தி said...

வேட்டைக்காரன் 3ம் இடம் தாங்கமுடியவில்லை