Tuesday, June 9, 2009

தற்கொலை செய்ய க்யூ!

இரண்டு நாட்களுக்கு முன் வாசகர் (அவர் அப்படித்தாங்க எழுதியிருந்தார்.. நீ கிழிக்கற கிழிப்புக்கு வாசகரான்னெல்லாம் கேட்கப்படாது!) ஒருவரிடமிருந்து மின்னஞ்சல். அன்றைய நாளிதழில் வந்த செய்தியை ஸ்கேனில் அனுப்பியிருந்தார்.
அதாவது சுவிட்சர்லாந்து நாட்டில் தற்கொலை செய்து கொள்ள 800 பேர் காத்திருக்கிறார்களாம்! அதை குறிப்பிட்டிருந்த வாசகர் “நீங்கள் இதை கற்பனை செய்து ஏற்கனவே உங்கள் வலையில் எழுதியிருந்தீர்கள் என்று ஞாபகம். அதை தேடினேன் கிடைக்கவில்லை..” என்று வருந்தியிருந்தார்! (?!?)

வேலைப்பளுவில் எழுத நேரமில்லாமல் இருக்கும் எனக்கு இந்த மெயில் தெய்வம் போல கண்ணில் பட்டது. ஆகவே அவருக்காக இதோ போன வருடம் எழுதிய ’க்யூவுல நின்னு சாவுங்க’ என்ற பதிவின் மீள்பிரசுரம்!


*************************

சமீபத்தில், (1999-ல்) பழனிக்குச் சென்றிருந்த போது விஞ்ச்சில் செல்ல ஒரு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட க்யூவில் நிற்க வேண்டிவந்தது. அப்போது க்யூவில் ஒருத்தர் “க்யூவுல நிக்கவெச்சு சாகடிக்கறாங்க” என்று புலம்பினார். உடனே வீறுகொண்டு எழுந்த எனது கற்பனைக் குதிரை சிந்தித்தது.

ஒரு வேளை சாவதற்கு க்யூவில் நிற்க வேண்டுமென்றால் எப்படியிருக்கும் என்று. உடனே (அங்க க்யூவுல நின்னு அல்ல.. வீட்டுக்கு வந்து..) அதை எழுதி எல்லா பிரபல பத்திரிகைகளுக்கும் மாறி மாறி அனுப்பினேன். ”போடா... நீயுமாச்சு.. உன் கற்பனையுமாச்சு” என்று எல்லோராலும் நிகாரிகரிக்கப்பட்டு வெற்றிகரமாக என்னிடமே அது பாசத்தோடு வந்து சேர்ந்தது.இந்த வலையெழுத ஆரம்பித்த பிறகு (நான்: இதையே இன்னும் எத்தினி நாள்தான் சொல்லுவ? இப்போ நீயும் ஓரளவு சீனியர்டா. மனசாட்சி: ஏய்ய்ய்ய்..அடங்கு!) அந்தப் பிரதியை வீடு முழுவதும் தேடிவிட்டேன். கிடைக்கவே இல்லை! (நல்லவேளை!) விட்டுவிடுவோமா? ஏதோ கொஞ்சம் மனதிலிருப்பதை மறுபடி எழுத்தில் வடிக்கிறேன். (ஏண்டா.. ஒரு பதிவுக்கே இவ்ளோ பெரிய முன்னுரை! உன் எழுத்தையெல்லாம் புத்தகமா வெளியிட்டா, அதோட முன்னுரைக்கே இன்னொரு புத்தகம் இணைப்பா குடுக்கணும் போலிருக்கே!)

-------------------------------

ஊட்டி.தற்கொலை முனைக்கு கொஞ்சம் முன்னால் இருக்கும் கல்லா (COUNTER) ஒன்றின் முன் மிக நீண்ட க்யூ. எல்லாரும் தற்கொலை செய்து கொள்ள, டிக்கெட்டுக்காக க்யூவில் காத்திருக்கிறார்கள். இன்னும் டிக்கெட் கல்லா திறக்கப்படவில்லை. க்யூவில் நிற்பவர்களிடமிருந்து பல சலசலப்புகள்...“இவனுங்ககூட இதே எழவாப் போச்சு. சரியான நேரத்துக்கு வந்து தொறந்து தொலைய மாட்டீங்கறானுங்க”


“அவனுங்க தொறந்தா போதும், நாமதான் தொலையணும்!”

“யாரு.. சண்முகனா.. யோவ் நீ எங்கய்யா இங்க? நேத்துவரைக்கும் நல்லாத்தானே இருந்த? ஏன், உங்க கல்யாணத்துக்கு நீ காதலிக்கற அந்தப் பொண்ணு வீட்ல சம்மதிக்கலியா?”

“அவங்க வீட்ல சம்மதிச்சுட்டாங்க.. அவதான் கல்யாணத்துக்கு சம்மதிக்கல. ஆமா உனக்கென்னாச்சு?”

“அத ஏன் கேக்கற! என் லவ்வருக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு!”

“உன் லவ்வர்.. அந்த கிழக்கு வீதி புவனாதானே?”

இந்தப் பெயரைக் கேட்டதும் பின்னாலிருந்து ஒரு குரல்..

“அவளை நிச்சயம் பண்ணினத நெனச்சிதான் நானும் இந்தக் க்யூவில நின்னுட்டிருக்கேன்!”

“அடப்பாவி.. அப்போ அவ ஃப்ரீதானா.. நான் உடனே கிளம்பறேன்” என்றபடி முதலாமவன் கிளம்புகிறான்.

இப்போது கல்லாவில் டிக்கெட் கொடுக்கும் பையன் வருகிறான்.

”ஏம்ப்பா, இவ்ளோ லேட்டு?”

”எமகண்டம் ஆரம்பிக்காம குடுக்கக்கூடாதுன்னு எங்க ஓனர் சொல்லிருக்காரு” என்று சொன்னபடி அங்கிருக்கும் புகைப்படமொன்றுக்கு மாலையணிவித்து மரியாதை செய்கிறான்.

“யாருப்பா அந்த ஃபோட்டோல இருக்கறது?”

“அதுதான் எங்க ஓனர்!”

“ஓனர் உயிரோட இல்லையா?”

“மொத டிக்கெட்டே அவருக்குத்தானே கொடுத்தேன்”

“அடப்பாவி” என்று வருத்தப்பட, கல்லா ஆசாமி டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கிறான்.


“டிக்கெட் எவ்வளவுப்பா?”

“ஒண்ணு ஏழரை ரூவா”

“ஏழரையா? சரிதான்.. கம்மி பண்ண மாட்டீங்களா?”

“குடும்பத்தோட வாங்கினா 50% தள்ளுபடி உண்டு”

“50% தள்ளுபடியா?”

“ஆமா.. 50% மட்டும் வாங்கீட்டு, நாங்களே தள்ளிவிட்டுடுவோம்”

“ஓ! அதுதான் `தள்ளு’படியா?.. சரி ஒரு டிக்கெட் குடு” என்றபடி 50 ரூபாய் நோட்டை நீட்டுகிறான்.

“யோவ்.. சாவுகிராக்கி. மொதல்லயே ஏன்யா இப்படி எழவெடுக்கற? சில்லறை குடுக்கறதுக்கென்ன?”

இந்தமாதிரி நாட்டுல நடக்கற சில்லறைப் பிரச்சினைக்காகத்தான் நான் தற்கொலை முடிவே எடுத்தேன். மரியாதையா பாக்கி குடு”

“சரி.. இந்தா”

“என்ன 50 காசு குறையுது?”

“வரும்போது வாங்கிக்கயேன்”

“எங்க வரும்போது? நீ மேல வரும்போதா?”

“அட.. இவன் வேற.. இந்தா 50 காசுக்கு பதிலா சாக்லேட்”

“எந்த நேரத்துல சாக்லேட் குடுக்கறான் பாரு” சலித்துக் கொண்டபடி அவன் டிக்கெட் வாங்கிக் கொண்டு போக, தற்கொலை முனைக்கருகே சில பிச்சைக்காரர்கள்..

“ஐயா.. சாமீ.. இருக்கறதெல்லாம் போட்டுட்டு போயிடுங்கய்யா”

அவன் யோசித்துவிட்டு, இருக்கும் காசையெல்லாம் போடுகிறான்.

ஐயா.. சட்டை பேண்டையும் கழட்டிக் குடுத்துட்டுப் போங்கய்யா”

போங்கடா.. திடீன்னு புன்னைகை மன்னன் கமலஹாசன் மாதிரி பொழச்சுட்டேன்னா? ***யோடயேவா வர முடியும்?”

"என்ன சொல்றீகன்னு தெரியலயே சாமி?”

“திடீர்ன்னு உயிர் பிழைச்சுட்டேன்னா ஜட்டியோடயேவா வரமுடியும்ன்னு கேட்டேன்” (எல்லாம் தமிழ்மண பயம்தான்!)

கொஞ்சம் தள்ளி கையில் பேக்குடன் நிற்கும் ஒருவர்....

“நம்ம கிட்ட ஒரு இன்ஷ்யூரன்ஸ் போடுங்க. ஒருவேளை நீங்க பொழச்சுட்டாலும், உங்க உயிரை எடுக்க ஆகற செலவை எங்க கம்பெனி ஏத்துக்கும்”

“உயிர வாங்காமப் போறியா?”

அப்போது தூரத்தில் ஒரு பெண்....

“சண்முகம்.. ஐ லவ் யூ! உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கறேன்” என்று கத்தியபடி ஓடிவருகிறாள்.

உடனே சந்தோஷமடைந்த சண்முகம் அவளை நோக்கிப் போக, க்யூவில் நின்றிருந்த சிலர்..

“டிக்கெட்டை என்கிட்ட குடுத்துட்டுப் போங்க சார்” என்றபடி அவனைச் சூழ்கின்றனர்.

“யோவ்.. தள்ளுங்கய்யா.. இந்த டிக்கெட்டை தூக்கி எறியறேன்.. யாருக்குக் கிடைக்குதோ அவங்க எடுத்துக்கங்க” என்றபடி வீசுகிறான். அந்த டிக்கெட் தற்கொலைப் பள்ளத்தாக்கை நோக்கிப் பறக்க அங்கிருந்த செக்யூரிட்டிகள் கூட்டத்தை ”டிக்கெட் இருந்தா மட்டும் இந்தப் பக்கம் வாங்க” என்று விரட்டுகின்றனர். கூட்டம் மறுபடி வந்து க்யூவில் நிற்கிறது. அதிலிருந்த ஒருத்தர் கேட்கிறார்..

“அதெப்படி அவன் மட்டும் டிக்கெட் வாங்கீட்டு சாகாமப் போறான்? உங்க ரூல்ஸ்படி டிக்கெட் வாங்கினா திரும்பப் போகக்கூடதில்ல?”

கல்லா ஆசாமி சொல்கிறான்...“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”*

37 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நகுலனின் வாக்குமூலம் படித்திருக்கிறீர்களா?

ஸ்வாமி ஓம்கார் said...

முன்னுரை கிளாசிக் :)

கதை அதைவிட சூப்பர்...

இதை படிச்சு நானும் லைனுல நிக்கலாம்னு முடிவு பண்ணீட்டேன் :) முடியல..:)

Beski said...

நன்றாக இருந்தது...

நாஞ்சில் நாதம் said...

பரிசல்

தற்கொலை செய்ய க்யூ! வருத்தபட வேண்டிய செய்தி.

உங்கள் பதிவு நல்லா இருக்கு. அந்த வாசகருக்கு ஞாபக சக்தி அதிகம் போல.

தேடி தேடி கதை(ல)க்குறீங்க

நாஞ்சில் நாதம்

Unknown said...

“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”

அனுபவமோ

தராசு said...

ரைட்டு.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வித்தியாசமான ,சுவாரசியமான கற்பனை.ரசித்தேன்.

ரமேஷ் வைத்யா said...

பரிசல்,
இதற்கு ஸ்விஸ்ஸுக்குப் போவானேன்? நான் போகும் வழியில் ஆறு கடைகளின் முன் தற்கொலை செய்துகொள்ள க்யூவில் அல்ல முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள். வாழ்க எம்.ஜி.ஆர். நாமம்.

பதிவு மிகவும் சுவாரசியம். ஏனோ நிராகரிக்கப்பட்டது.

Vijayashankar said...

அருமையான எழுத்துக்கள்.

இதிலியே கொஞ்சம், விஷ்கென்று விமானம் மேலெழும்பி ஆகாயத்தில் பறந்தது... கணேஷ், வசந்த் என்று இரு கேரக்டர்கள் வந்து போனால், சூப்பர் ஹிட்.

--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு

வினோத்குமார் said...

super annachi

Bleachingpowder said...

என்னது !!!! வேட்டைக்காரன் அட்வான்ஸ் புக்கிங் அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா?????

சரவணன் said...

கற்பனை கதை மிகவும் நன்றாக இருக்கிறது.

லக்கிலுக் said...

விதர்பாவில் இதெல்லாம் நிஜமாகவே நடந்திருக்கக் கூடும் என்பதுதான் கொடுமை :-(

அன்புடன் அருணா said...

கலக்கல்ஸ்!

Unknown said...

Kalakkal post ;

Superb !

AvizhdamDesigns said...

போங்கடா.. திடீன்னு புன்னைகை மன்னன் கமலஹாசன் மாதிரி பொழச்சுட்டேன்னா? ***யோடயேவா வர முடியும்?”

"என்ன சொல்றீகன்னு தெரியலயே சாமி?”

“திடீர்ன்னு உயிர் பிழைச்சுட்டேன்னா ஜட்டியோடயேவா வரமுடியும்ன்னு கேட்டேன்”"தமிழனுக்கு உயிரை விட
மானம் தான் பெருசு ங்கறதை நிரூபிச்சுட்டீங்க...!"

“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”


இதுக்கு பேர் தான்
final டச்சிங்'கா ண்ணா..!

நல்லாத்தான் எழுதுறீங்க போங்க..!

AvizhdamDesigns said...

கல்லா ஆசாமி கல்யாணத்துக்கு முன்னால சினிமா தியேட்டர்ல டிக்கெட் கொடுத்துட்டு இருந்தாராம்.
கல்யாணத்துக்கு அப்புறம் தான் இங்க டிக்கெட் கொடுக்க வந்திருக்காராம்

Truth said...

பரிசல், இதையும் ஒரு முறை படிக்கிறீங்களா?

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல கற்பனை.

கோபிநாத் said...

:-)))

Unknown said...

அருமையான கற்பனை..

தீப்பெட்டி said...

கதை கலக்கலோ கலக்கல்...
:)))

கடைக்குட்டி said...

ஜூப்பரு :-)

(கடப்பக்கம் மொய் வெக்க நெம்ப நாளா காணோமே???)

ஊர்சுற்றி said...

//
கல்லா ஆசாமி சொல்கிறான்...“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!” //

:))))))

கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணலாம்னா உங்க பதிவுக்கு வந்தா போதும்னு நினைக்கிறேன்! மனச லேசாக்கினதுக்கு ரொம்ப நன்றி பரிசல்.

முரளிகண்ணன் said...

கலக்கலான பதிவு பரிசல்

manalveedu said...

nanbare
arumaiyana yezhthu sovaraiyam vaithirrukirathu ungalkku
thodrungal
mikka nandri
harikrishnan
9894605371

நர்சிம் said...

கலக்கல்...பரிசல்.

"உழவன்" "Uzhavan" said...

இப்படி காமடி பதிவை படிச்சதுகப்புறம் எவனாவது சாவானா??

பிரபாகர் said...

டியர் பரிசல்,

கல்யாணம் பண்ணிக்கறது, தற்கொலை இல்லை, அதிலிருந்து குறை உசுரா பொழச்சு கடைசிவரைக்கும் கஷ்டப்படறது.

பிரபாகர்.

பட்டாம்பூச்சி said...

கலக்கல்!
:))))

மங்களூர் சிவா said...

/
“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”
/

ROTFL
:)))))

குசும்பன் said...

சூப்பர்!

Sukumar said...

இதுதான் நான் படிக்கும் உங்கள் முதல் பதிவு. பிரபல பதிவர் பரிசல்னு கேள்விபட்டிருக்கேன்.. நீங்கள் என் பிரபலாமாக இருக்கிறீர்கள் என இந்த ஒரு பதிவே சொல்கிறது....அருமையான கற்பனை.....

// “ஓனர் உயிரோட இல்லையா?” - மொத டிக்கெட்டே அவருக்குத்தானே கொடுத்தேன் //
// “அட.. இவன் வேற.. இந்தா 50 காசுக்கு பதிலா சாக்லேட்” //

கலக்குறீங்க போங்க....
விகடனில் முத்திரை பதித்ததற்கு வாழ்த்துக்கள்...

கிர்பால் said...

முன்னுரை அருமை...

Thuvarakan said...

// “என்ன 50 காசு குறையுது?”//

அருமை பணத்தாசை பற்றிய அருமையான விளக்கம்.

நான் said...

எல்லோர் மனதிலும் சிறுமூலையில் தற்கொலை உணர்ச்சி இருக்குமோ.....

Anonymous said...

kadasi part touching :-)