Wednesday, April 22, 2009

ஆட்டோக்காரர் சொன்ன ‘ஆவி’க்கதை

பேய், பிசாசு, ஆவிகள் இதன் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை - காரணம் இதுவரை இவற்றில் எதையும் கண்டதில்லை, உணர்ந்ததில்லை.

இதில் ஆவி மட்டும் அவ்வப்போது என் சந்தேகத்தை கிளப்பிச் செல்லும்.

இரண்டொரு வருடங்களுக்கு முன் என்னுடம் பணி புரிந்த நண்பர் ஒருவரது மகள் கொஞ்ச நாட்களாகவே ‘எனக்கு கப்பக்கிழங்கு வேணும்’ ‘டீ வேண்டாம். கட்டங்காபி போதும்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறாள். பத்தாவது படிக்கும் அவளுடைய இந்த நடவடிக்கை மாறுதல்களைப் பார்த்து நண்பர் புலம்ப ‘கூட படிக்கற பொண்ணுக யாராவது மலையாளீஸ் இருப்பாங்க. அவ வீட்டுக்குப் போய் பழகியிருக்கலாம்’ என்று சமாதானப் படுத்தினோம்.

அடுத்த ஒரு சில நாட்களில் நண்பருக்கு அவரது மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு. போய்ப் பார்த்ததில் மதிய உணவுக்கு உட்கார்ந்த மகள் தட்டில் இருந்த சோறை வீசி எறிந்து ‘எனக்கு புழுங்கலிரிசிதான் பிடிக்கும்னு ஒனக்குத் தெரியாதா? எத்தனை நாளா இந்த கேடுகெட்ட சாப்பாட்டை சாப்பிடறது?’ என்று கத்தியிருக்கிறாள். கத்தியது சுத்தமான மலையாளத்தில். நண்பருக்கோ, அவரது வீட்டாருக்கோ மலையாளம் தெரியவே தெரியாது. குரல் வேறு அடியோடு மாறிவிட்டிருந்தது.

உடனே பயந்து போய் அவர்கள் வீட்டாரும், அக்கம்பக்கத்தவரும் என்னென்னவொ சொல்ல நாங்கள் ‘நல்ல சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டீட்டுப் போங்க’ என்று அட்வைஸினோம். அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று க்ளூக்கோஸ் ஏற்றிக் கொண்டிருக்கும்போது (அந்தப் பெண் மயங்கிவிட்டிருந்தாள்) திடீரென விழித்துக் கொண்ட அவள் ‘அவனை உள்ள வரவேண்டாம்னு சொல்லு. அவனை உள்ள வரவேண்டாம்னு சொல்லு’ என்று கூச்சல் போட்டாள். (Again மலையாளத்தில்தான்)

என்னவென்று நாங்கள் வெளியே சென்று பார்த்தபோது நண்பரின் நண்பர் சர்ச்சிலிருந்து பாதிரியாரை அழைத்து வந்திருந்தார். பாதிரியாரும் அறையினுள் காலடி எடுத்து வைக்க மறுத்து (ரொம்ப கெட்ட சாத்தான் அவகிட்ட இருக்கு. நீங்க சாயந்திரமா ஜெபக்கூட்டத்துக்கு அவளை எப்படியாவது கூட்டீட்டு வாங்க) திரும்பச் சென்று விட்டார்.

அதற்குப் பிறகு நாங்கள் விசாரித்ததில் வந்த பேயின் பெயர் மிஸ்டர்.ராஜன். பூர்வீகம் கோழிக்கோடாம். அவர் காதலித்த பெண்ணை வேறு யாருக்கோ கல்யாணம் செய்து வைத்ததால் மிஸ்டர்.ராஜன் சார் தற்கொலை செய்து கொண்டாராம். இவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மிஸ்டர். ராஜன் சாரின் முன்னாள் காதலியும், அன்னாள் யாரோவின் மனைவியுமான அந்த அபலைப்பெண்ணும் தற்கொலை செய்து கொண்டாளாம். தற்கொலை செய்து கொண்ட தனது முன்னாள் காதலியைத் தேடி மிஸ்டர்.ராஜன் சார் ஊர் ஊராக, நாடு நாடாக அலைந்து கொண்டிருக்கிறாராம். நண்பரின் மகள் சற்றேறக்குறைய மிஸ்டர்.ராஜன் சாரின் முன்னாள் காதலியின் சாயலை ஒத்து இருப்பதால் கொஞ்ச நாள் தங்கிவிட்டுப் போக வந்தாராம்.

“‘ஏண்டா டோங்கிரி.. காதலியை வாழ விடாம முட்டாள் தனமா தற்கொலைக்குத் தூண்டி சாகடிச்சுட்டு, ஆவியான பின்னாடியும் கள்ளக்காதலாடா?’ என்று கேட்டீர்களா அவனை?” என்று கேள்வி கேட்டபோது டரியலாகிப்போன பாதிரியார்..

“அப்படிச் சொல்லி சாத்தானை நாம் உசுப்பேற்றக் கூடாது. ‘இதோ பார்.. இந்தப் பெண் உன் காதலியின் சாயலில் இருக்கிறாளல்லவா.. இவளை நீ இப்படித் துன்புறுத்தலாமா’ என்று கேட்டு சாந்தப்படுத்தி அனுப்பினோம்” என்றார்.
.
’டீ காபி குடுத்து அனுப்ச்சீங்களா’ என்று கேட்க நினைத்து எதுக்கு வம்பு.. அந்த காதலியின் புருஷன் என் சாயலில் இருந்து தொலைத்தால் என்ன செய்வது என்று கேட்காமல் வந்துவிட்டேன்.

இன்னொரு சம்பவம் மிகச் சமீபத்தில் நடந்தது.

ஒரு ஞாயிறு. நிறுவனத்தில் பணி புரியும் சௌந்தர்யா என்ற பெண் அவரது அறையில் திடீரென காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருப்பதாகவும், பேய் பிடித்திருப்பதாகவும் அவசர அழைப்பு வரவே சென்றோம். அந்தப் பெண் சௌந்தர்யா அவளது அறை முன் நின்றுகொண்டு அவள் முன் நின்று கொண்டிருந்த அவளது துறை நிர்வாகியைப் பார்த்து... (விஷயம் கேள்விப்பட்டு வந்திருந்தார்)

“ஏண்டா.. சௌந்தர்யா லேட்டா வந்தாலோ, லீவு போட்டாலோ என்ன ஏதுன்னு கேட்காம திட்டுவியா நீ? என்னடா நினைச்சுகிட்டு இருக்க நீ? அவ என்கிட்ட எப்படி அழுதா தெரியுமா? அவளுக்காகத்தாண்டா நான் வந்திருக்கேன்” என்று ஏசிக் கொண்டிருந்தாள்.

அதில் குறிப்பிடப்பட வேண்டிய ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ஃப்ரெண்டு பேய் அமெரிக்கன் இங்க்லீஷில் ஏசியது. அந்தப் பெண் சௌந்தர்யாவுக்கோ ஏ,பி,சி,டியைத் தவிர ஈயிலிருந்து இசட் வரை ஒன்றுமே தெரியாது!

நான் போய் ‘வெல்கம் டூ திருப்பூர். நீங்க எங்கிருந்து வர்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா’ என்று கேட்டபோது

“என் பேர் சங்கவி சார். என்னை உங்களுக்குத் தெரியலியா?” என்றாள்/றது.

‘தெரியல’ என்று சொன்னல் என் மீது பாய்ந்து வந்து ’இப்பத் தெரியுதா’ என்று கேட்கும் அபாயம் இருந்ததால்..

“சரி.. நீ ஏன்ம்மா சௌந்தர்யாவுக்காக வந்த? விடு நாங்க பார்த்துக்கறோம்” என்றதுக்கு கன்னா பின்னான்னு எங்களையும் வறுத்தெடுத்தாள்/தது.

கொஞ்சம் ஆஜானுபாகுவாக இருக்கும் எங்கள் HR மேனேஜர் ஒரு மிரட்டு மிரட்டவே ‘சரி எனக்கு அரியர்ஸ் பணம் குடுங்க. அப்பத்தான் போவேன்’ என்றாள்/றது.

“எந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கு? செக்கா குடுக்கலாமா?” என்று நான் கேட்டதற்கு.. மீண்டும் என்னை முறைத்தாள்/தது.

“அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம், நீ மொதல்ல வண்டில ஏறு” என்றதற்கு “சரி.. செட்டில்மெண்டாவது குடுங்க. நான் செட்டில்மெண்ட் வாங்காம போய்ட்டேன் அப்போ” என்று அவள் சொல்ல, மேலும் மிரட்டி காரில் ஏற்றி அவள் (சௌந்தர்யா) வீட்டில் கொண்டு போய் விட்டோம்.

அந்த ஃப்ரெண்டு பேய் சொன்ன க்ளூவை வைத்து இன்க்ரிமெண்ட் சமயத்தில் அரியர்ஸும் வாங்காமல், செட்டில்மெண்டும் வாங்காமல் நின்றவர்களில் சங்கவி என்ற பெயரில் யாராவது இருக்கிறார்களா என்று விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

(சங்கவி, சௌந்தர்யா என்ற பெயர்கள் மாற்றப்பட்ட பெயர்களே)

கொஞ்சம் கூட ஆங்கில அறிவே இல்லாத அந்தப் பெண் அமெரிக்கன் ஸ்லாங்கில் பேசியது எப்படி?

இதை எழுதும்போது கடந்த வருடம் நடந்த சம்பவம் ஒன்றும் ஞாபகத்திற்கு வருகிறது.

சென்னையோ, பெங்களூரோ சென்று விட்டு திருப்பூரிலிருந்து அதிகாலையில் நான் இருக்கும் இடத்துக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன். திருப்பூரிலிருந்து 7, 8 கிலோ மீட்டர். வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் ஆட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்ததில்

“இந்த சவாரி முடிச்சுட்டு கோயமுத்தூர் அர்ஜெண்டா போகணும்க” என்றார்.

“ஏன்.. காலங்காத்தாலயேவா? அப்பறம் ஏன் சவாரி வந்தீங்க?” இது நான்.

“பல்லடத்துல ஃப்ரெண்டு வெய்ட் பண்றார்ங்க. உங்க ஏரியா வழியாத்தானே போகணும். அதான்...” என்றவரிடம் “கோயமுத்தூர்ல என்ன அர்ஜெண்ட் வேலை” எனக் கேட்க... சொன்னார்..

“எங்க பெரியப்பாகிட்ட பேசணும்”

“ஓ.. கோயமுத்தூர்ல அவர் எங்க இருக்கார்?”

“எங்க பெரியப்பா கோயமுத்தூர் இல்லைங்க. திருப்பூர்தான்”

“அங்க போயிருக்காரா?”

“இல்லைல்லங்க. எங்க பெரியப்பா செத்துட்டார்ங்க”

(சீரியலிலும், மர்மக் கதைகளிலும் தொடரும்போட கிடைக்கும் நல்லதொரு இடத்தை தவறவிடக்கூடாது. அதனாலும் ஆட்டோக்காரர் சொன்ன கதையை முழுவதுமாய் எழுதினால் ‘எனக்குப் போட்டியா?’ என்று உண்மைத்தமிழன் கோபித்துக் கொள்ளும் அளவு பெரியதாக வந்துவிடும் என்பதாலும்...)


-நாளை தொடரும்

53 comments:

Mahesh said...

காலங்காத்தால "ஆவி" பறக்க காஃபியோட உங்க ஆவி கதையும் படிச்சாச்சு !! காஃபியை விட இது இண்டெரெஸ்டிங்கா இருக்கே !!

Mahesh said...

ஆமா...ஆட்டோ டிரைவர் என்ன கோவைல ஆவி அமுதா மாதிரி யாராவது மீடியேட்டரைப் பாக்க போனாரா?

ஸ்வாமி ஓம்கார் said...

இந்த சப்ஜக்ட் எல்லாம் போன மாசமே நாங்க பதிவா போட்டாச்சு :)

இருந்தாலும் கிருஷ்ணா வாயால கேட்கனுமே அத்தான் :) தொடருங்க தொடருங்க.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

லக்கலக்கலக்கலக்கலக்க.................

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஆவியான பின்னாடியும் கள்ளக்காதலாடா?’ என்று கேட்டீர்களா அவனை?”//


ஒரு சூப்பர்ஹிட் படம் ரெடி......

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//“ஏண்டா.. சௌந்தர்யா லேட்டா வந்தாலோ, லீவு போட்டாலோ என்ன ஏதுன்னு கேட்காம திட்டுவியா நீ? என்னடா நினைச்சுகிட்டு இருக்க நீ? அவ என்கிட்ட எப்படி அழுதா தெரியுமா? அவளுக்காகத்தாண்டா நான் வந்திருக்கேன்” என்று ஏசிக் கொண்டிருந்தாள்.
//


அந்நியள்.........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது கூட


நீங்க எழுதியதா


சபையில யாராவது எழுதி அனுப்பியதா


தோழர்.........

ஆ.சுதா said...

ஆவியை பற்றி உங்கள் அனுபவம் மிரட்டகூடிதாகதான் இருக்கின்றது.
இப்பட பல பேருடைய இனுபவத்தை
படித்தும் கேட்டும் இருந்தாலும்
இதுவும் பயமுறுத்ததான் செய்கிறது.
ஏன்னா பேய், பிசாசு, ஆவிகள் இதன் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சும்மா சொல்ல்லாம்
ஆனால் அதன் பயம் நம்மோடு எப்போதும் இருந்து கொண்டேதானிருக்கறது.

நிகழ்காலத்தில்... said...

\\பேய், பிசாசு, ஆவிகள் இதன் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை - காரணம் இதுவரை இவற்றில் எதையும் கண்டதில்லை, உணர்ந்ததில்லை.\\

என்னைப் பொருத்தவரையும் இதேதான்.

சாமி, பேய் எல்லாம் தொழிலகத்தில்
வருவதெல்லாம், நம் கவனத்தை ஈர்க்கவும், தன்னை முக்கியப்படுத்தவும், முன்னிலைப்படுத்தவுமே.

உடனடியாக வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். எந்த விதத்திலும்
ஊக்கப்படுத்துவதில்லை.

இமைசோரான் said...

எனக்கும் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது, ஆனால் எங்கள் பெரியம்மாவின் பெண்...ஒரு நாள் இது போல் பேசும் வரை. திருப்பூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படித்து, தமிழ் நாட்டிலே சென்னை கூட சென்றதில்லை அவர், திடீரென்று ஒரு நாள் சர்வ சரளமாக ஹிந்தியில் பேச தொடங்கியிருந்தார். சில காலம் மருத்துவ, மாந்த்ரீக சிகிச்சைகளுக்குப் பின்னர் குணமடைந்து சகஜ நிலைக்குத்திரும்பினார். பின்னர் ஒரு நாள் அவரைக்காண சென்றபோது எதேச்சையாக ஒன்றிரண்டு வார்த்தைகள் ஹிந்தியில் பேசிப்பார்த்தேன், அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

நம்முடைய ஆள் மனதில் நம் வாழ்வினில் நடக்கும் சில சம்பவங்களும், செய்திகளும் அழியாமல் பதிந்து விடும் என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள். சிலருக்கு பூர்வ ஜென்ம சம்பவங்கள் கூட ஆழ்மனதில் பதிந்து இருக்கலாம். அதற்கு ஏற்றாற்போல் சந்தர்பங்களும் சூழ் நிலைகளும் அமையுமானால் சில சமையம் அவை ஆழ்மனதில் இருந்து மேலழும்பி நமது கான்சியஸ் நினைவுகளில் வந்து நம்மை அதைப்போலவே செயல்பட வைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. மல்டிபில் பெர்சனலிடி என்று சொல்லப்படும் (ஸ்கிட்சோபொனிக்) எனப்படும் மன பாதிப்பும் இவ்வகையே. சாமி வந்து ஆடுவதும், பேய் பிடிப்பதும், ஆவி ஆட்கொள்வதும் இவ்வகையே.

ஆவியை கூல் படுத்தி அனுப்பும் பாதிரியாரும், பேய் ஓட்டும் சாமியாரும் ஒரு வகையில் அறிவியல் பூர்வமாக அறியாத மன நல நிபுணர்களே. ஆனால் பெரும் பாலான சமயங்களில் அவர்கள் போலியாக இருப்பது தான் வேதனை.

மிக்க நன்றி பரிசல், நீண்ட நாடகளுக்குப் பிறகு இச்செய்திகளை மீன்டும் எண்ணிப் பார்க்க வைத்த பதிவு.

என்.இனியவன் said...

காதில பூ வைக்கிற என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
நீங்கள் பூமாலையை சுத்துறீங்க.

ஒவ்வொரு பதிவிலயும் உங்கட வாசகர்களை ஒவ்வொரு விதமா
ஏமாற்ற கிளம்பிட்டீங்க போல.
எங்களை பார்க்க பாவமாயில்லை.

//எதுக்கு வம்பு.. அந்த காதலியின் புருஷன் என் சாயலில் இருந்து தொலைத்தால் என்ன செய்வது என்று கேட்காமல் வந்துவிட்டேன்.//
இது பரிசல் style.
சுஜாதா style போலவும் இருக்கு.

பதிவின் முடிவில் "யாவும் கற்பனையே" என்று தானே போடுவீங்க.

என்.இனியவன் said...

உண்மையில் நடந்தது என்றால் நம்பமுடியவில்லை.
மன நோய் என்றால் தெரியாத மொழியில் பேசமுடியுமா?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

"மன நோய்" , Even well educated people like us are not fully aware of what it is....?

Find here a little booklet on the same:
http://www.scribd.com/doc/13886299/Anbusivams-Mana-Nalam-Penuvom

Dear Parisal, thanks for giving a relevant platform to share this.

Subankan said...

எனக்கும் இதில எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் இப்படியான கதைகளைக் கேட்கும்போது சின்னக் குழப்பம் வந்துவிடுகிறது இல்லையா? லோசன் அண்ணா எழுதிய இதையும் படியுங்கள்.

பரிசல்காரன் said...

@ Mahesh

மிக்க நன்றி மகேஷ்ஜி. உங்க ரெண்டாவது கேள்விக்கு பதில் ஆமாம்!

@ ஸ்வாமி ஓம்கார்

அப்படியா ஸ்வாமிஜி.. உண்மையா சொல்றேன். படிக்கல, இருங்க படிச்சுடறேன்.

@ SUREஷ்

நானே எழுதினதுதாங்க நண்பரே..

@ ஆ.முத்துராமலிங்கம்

//பேய், பிசாசு, ஆவிகள் இதன் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சும்மா சொல்ல்லாம்
ஆனால் அதன் பயம் நம்மோடு எப்போதும் இருந்து கொண்டேதானிருக்கறது.//

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

@ அறிவே தெய்வம்

இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு நீங்கள் சொல்வதை முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறேன்.

narsim said...

பேய், பிசாசு, ஆவிகள் இதன் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சும்மா சொல்ல்லாம்
ஆனால் அதன் பயம் நம்மோடு எப்போதும் இருந்து கொண்டேதானிருக்கறது//

rpt

பரிசல்காரன் said...

@ இமைசோரான்

மிக மிக நன்றி இமைசோரான். உங்கள் பகிர்தலுக்கும் ஆதரவுக்கும்.

@ என்.இனியவன்

// காதில பூ வைக்கிற என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
நீங்கள் பூமாலையை சுத்துறீங்க.

ஒவ்வொரு பதிவிலயும் உங்கட வாசகர்களை ஒவ்வொரு விதமா
ஏமாற்ற கிளம்பிட்டீங்க போல.
எங்களை பார்க்க பாவமாயில்லை.//

என்னங்க இப்படிச் சொல்லீட்டீங்க? உங்க பின்னூட்டத்துக்கு மேல இமைசோரானோட பின்னூட்டத்தைப் பாருங்க. அவருக்கும் இந்த மாதிரி அனுபவம் கிடைச்சிருக்கு.

நீங்கள் என்னை வந்து சந்தித்தால் இந்த இருவரில் முதலில் சொன்ன நண்பரின் வீட்டுக்கு உங்களை அழைத்துச் சென்று நிரூபிக்கிறேன்!!!

(வரும்போது மறக்காமல் செக்புக், அல்லது க்ரெடிட் கார்டு எடுத்து வரவும்)

//Anbusivam said...

"மன நோய்" , Even well educated people like us are not fully aware of what it is....?

யார்கிட்ட சொல்லியிருக்கீங்க? என்கிட்டயா இல்ல பின்னூட்டத்துல யார்கிட்டயாவதா? நான் படிச்சதெல்லாம் வெறும் அனுபவம்தான் நண்பா!!

Find here a little booklet on the same:
http://www.scribd.com/doc/13886299/Anbusivams-Mana-Nalam-Penuvom

Dear Parisal, thanks for giving a relevant platform to share this//

நன்றியெல்லாம் எதுக்குங்க? இதுதானே இணையத்தின் வெற்றி?

@ சுபாங்கன்

லோஷனின் அதைப் படித்திருக்கிறேன் நண்பா. நன்றி!

பரிசல்காரன் said...

@ நர்சிம்

Nanri!

சென்ஷி said...

:-))

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!

Kumky said...

ஏங்க பேய் வந்து அதுவும் மலையாளி பேய்...ப்லோக் படிச்சுட்டு உங்கள வந்து கேள்வி கேட்கப்போவுதா?(ராஜன்... சார்?)

Kumky said...

இனிமேட்டு கம்பேணில எதாவது பாக்கி வசூலிக்க எம்ப்ளாயீஸ்க்கு நல்லதொரு வழி கிடைத்திருக்கிறது போல...
அதுவும் உங்களை குறி வச்சால் நல்ல பலன் கிடைக்கும்...உடனே செட்டில்மெண்ட்.

Kumky said...

அடிக்கடி பேய சந்திச்சு இப்படி சுவாரஸ்யமா எழுதுங்க பரிசல்..ரொம்ப நல்லாருக்கு.
(உண்மையிலேயே சந்திக்க விரும்பினால் ஒரு வாரம் லீவ் போட்டுவிட்டு இங்கு வரவும்)

தராசு said...

//’டீ காபி குடுத்து அனுப்ச்சீங்களா’ என்று கேட்க நினைத்து எதுக்கு வம்பு.. அந்த காதலியின் புருஷன் என் சாயலில் இருந்து தொலைத்தால் என்ன செய்வது என்று கேட்காமல் வந்துவிட்டேன்.//

இப்பிடி வேற ஒரு எண்ணமிருக்கா, அவன் ஒரு மலையாள சேட்டன், உங்க சாயல்ல இருக்க வாய்ப்பே இல்லை.

பரிசல்காரன் said...

@ சென்ஷி

24 மணிநேரம்

@ கும்க்கி

ஒகேனக்கல் அருவிப்பகுதிகளில் மிஸ்டர். ராஜன் அலைந்து கொண்டிருக்கலாம். யார் கண்டார்கள். வருகிறேன்!!

@ தராசு

:-))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) ஆவியை நம்ப வச்சிடுவீங்க போலயே..

என்.இனியவன் said...

இப்படி அனுபவம் எனக்கு ஏற்படாததால் எனக்கு நம்ப முடியாமல் இருக்கலாம்.

ஆனால் பேய் என்றால் எனக்கு சரியான பயம்,
7 மணி ஆகிவிட்டதென்றால் வீட்டில் தனிய இருக்க பயம். ......................இப்படி
எனது பேய்ப் பயத்தை சொல்ல தொடக்கினால் தெனாலி ரேஞ்சுக்கு போகும்.

எமது அறிவுக்கு புலப்படாத மர்மங்கள் இருந்து கொண்டே தான் இருக்குது.

புன்னகை said...

என்னோட நெருங்கிய உறவுல இப்படி ஒரு ஆவிக்கதை ரொம்ப சமீபத்துல நடந்துச்சுங்க! ஒரு மெகா சீரியல் எடுக்கும் அளவுக்கு ஒரு பெரிய கதை! :-)

Unknown said...

கொஞ்சம் பயமா தான் இருக்கு...

Truth said...

பரிசல், சரியான இடத்துல தான் தொடரும் போட்டிருக்கீங்க. :-)
ஆவி, பேய் பத்தின விஷயங்கள நம்ப எனக்கும் விருப்பம் இல்ல தான். ஆனா நீங்க சொல்ற மாதிரி சில விஷயங்கள கேட்ட பிறகு, அத பத்தி ஆராய்ச்சி பண்ண கூட கொஞ்சம் தயக்கம் தான். எனக்கு தெரிஞ்சவங்க வீட்டுல இப்படி ஒன்னு நடந்தது. அத பத்தி கொஞ்சம் நாள் நானும் யோசிச்சேன். அப்றொம அதுல இருந்து ஒரு கதைய உருவாக்கினேன்.
இங்கே இருக்கு படிங்க. spelling mistakes இருக்கும், நான் முன்னமே சொன்ன மாதிடி என்னோட தாய் மொழி தமிழ் இல்லேங்க, so forgive my spelling mistakes :-)

Bleachingpowder said...

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்........


பயமுறுத்தீட்டீங்களே தல!!!!!

வசந்த் ஆதிமூலம் said...

சோக்கா எழுதிகிற... த்ரிலா கீதுபா...
கொஞ்சம் உடான்ஸ் மிக்ஸ் பண்ணாமாரிகீது.
இட்ஸ் ஒகே மா.. கலாசு மாமே...

மணிகண்டன் said...

பரிசல், அனைவருக்கும் பதில் சொல்ல நேரம் கிடைக்கலன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க தான ! இப்ப எப்படி எல்லாருக்கும் பதில் சொல்றீங்க ? ஒருவேளை, ஏதாவது ஆவி பதில் சொல்லுதான்னு பயமா இருக்கு !

தீப்பெட்டி said...

என்ன பாஸ் இது. இதுல எத்தனை சதவீதம் உடான்ஸ் :-))

பாத்து ஆவியே கிடையாதுனு சொல்லிட்டு இருந்த என் பிரண்டு போன மாசம்தான் செத்து போனான். அவன் மட்டும் இந்த பதிவ படிச்சான்..அவ்ளவுதான் இந்த பதிவ படிச்ச யாரையாவது பிடிச்சு உங்களை எதிர்த்து பின்னூட்டம் போட.. இல்ல.. போட்டுட்டே..... இருக்கப்போறான்.

பி.கு)- அவனுக்கு 108 பாஷை தெரியும்....:-(

பரிகாரமும் சொல்லிடுறேன்.;-) அவனுக்கு நமீதா-னா ரொம்ப பயம்.
ஒண்ணுக்கு ரெண்டா நமீதா படத்த பதிவுல போட்டு தொடருங்க பாஸ்.

பரிசல்காரன் said...

@ முத்துலலெட்சுமி கயல்விழி

நம்பாதீங்க.. நம்பாதீங்க..

@ என்.இனியவன்

கல்யாணமாய்டுச்சா நண்பா? ஆனா சரியாப்பூடும்!

@ புன்னகை

சொல்லுங்களேன்.. சுவாரஸ்யமா இருக்கும்.

@ ஸ்ரீமதி

பயமா? உங்களுக்கா? நோ.. நோ..!

@ Truth

தாய்மொழி தமிழ் இல்லாம இப்படி எழுதறது நெசமாலுமே பாராட்டுக்குரியது. BTW உங்க கதைலயும் ராஜன் கேரக்டர் இருக்கே!

@ Bleaching Powder

ரொம்ப பக்திமானா இருக்கீங்க!!

@ வசந்த் ஆதிமூலன்

//கொஞ்சம் உடான்ஸ் மிக்ஸ் பண்ணாமாரிகீது. //

பேசினத மட்டும் எழுதினா மெர்சலாய்டும் மாமே.. ச்சும்மா கலந்து கட்டி அடிக்கத்தாவலயா? அதான்..

டாங்ஸூப்பா!

(உங்க பேரு சூப்பர்ங்க.. ஏதாவது ஒரு கதைல கேரக்டர் பேரா கொண்டுவந்துக்கட்டுமா?)

@ மணிகண்டன் said...

பரிசல், அனைவருக்கும் பதில் சொல்ல நேரம் கிடைக்கலன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க தான //

ஆமா.. குசும்பனும், வால்பையனும் என் கண்ணைத் திறந்துட்டாங்க. :-))) மத்தபடி இது ஆவியெல்லாம் இல்ல.

@ தீப்பெட்டி said...

என்ன பாஸ் இது. இதுல எத்தனை சதவீதம் உடான்ஸ் //


சம்பவங்கள்ல இல்ல. விவரணைல வேணும்னா இருக்கலாம்.

உங்க ஃப்ரெண்டு என் டைப்பு போல. எனக்கும் நமீ ப்ரியம்!

priyamudanprabu said...

///

-நாளை தொடரும்

////


sssssssssss

VIKNESHWARAN ADAKKALAM said...

பரிசல் இது சிறுகதை தானே?

நீங்க பல்ப்பு கொடுக்க போற விசயம் தெரியாம மக்கள்ஸ் அவுங்க அனுபவங்களை பகிர்ந்திருக்காங்க போல... :))

நடத்துங்க... நடத்துங்க...

//உண்மைத்தமிழன் கோபித்துக் கொள்ளும் அளவு பெரியதாக வந்துவிடும் என்பதாலும்//

இது சூப்பர்... :))

வால்பையன் said...

//பேயின் பெயர் மிஸ்டர்.ராஜன். பூர்வீகம் கோழிக்கோடாம்.//

நான் கூட தண்ணி போட்டா இங்கிலிஷ் பேசுவேன். என்னை எதாவது இங்கிலீஷ்காரன் பேய் பிடிச்சிருக்குமா தல!

என்.இனியவன் said...

//வால்பையன் said...
நான் கூட தண்ணி போட்டா இங்கிலிஷ் பேசுவேன்.//

comment இல கூட வஞ்சகம் இல்லாமல் தண்ணி கலந்திருக்கிறார்.

நான் கூட உங்களது முதல் பதிவில வால் பையன் பற்றி தப்பாக comment போட்டுவிட்டோமோ என்று feel பண்ணினேன்.

வால்பையன் said...

//நான் கூட உங்களது முதல் பதிவில வால் பையன் பற்றி தப்பாக comment போட்டுவிட்டோமோ என்று feel பண்ணினேன். //

இது எப்போ நடந்தது!
எனக்கு ஞாபகம் இல்லையே!

மங்களூர் சிவா said...

நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதிய
:))))

மங்களூர் சிவா said...

//எதுக்கு வம்பு.. அந்த காதலியின் புருஷன் என் சாயலில் இருந்து தொலைத்தால் என்ன செய்வது என்று கேட்காமல் வந்துவிட்டேன்.//

டரியல்......
:)))))))

Kathir said...

செம டெரரா இருக்குண்ணே பதிவு...

பரிசல்காரன் said...

@ பிரியமுடன் பிரபு

நன்றி

@ விக்னேஸ்வரன்

சிறுகதையா? பெருங்கதைங்க! பேய் பிசாசு ஆவி பொய்தான். ஆனா நான் எழுதியிருக்கற விஷய்ங்கள் உண்மை.

@ வால்பையன் & என்.இனியவன்

வாலு.. நேத்தைய பதிவுலதான்.

நான் உங்களுக்காக வக்காலத்து வாங்கியிருக்கேன். டோண்ட் வொர்ரி!

நன்றி மங்களூர் சிவா & கதிர்

ஆகாய நதி said...

ம்ம்ம்... இந்த ஆவி பற்றிய விவாதம் முடியாத ஒன்று! எனக்கு இதில் நம்பிக்கை இல்லை ஆனால் இந்த ஆவி கதைகள் கேட்பதில் ஆர்வமுண்டு... சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க...

எம்.எம்.அப்துல்லா said...

நைட் 12 மணிக்கு இந்த பின்னூடத்தப் போடுரதால அப்துல்லா பேருல ஆவி போட்டுருச்சோன்னு நினைக்காதிங்க! கொச்சின் போய்ட்டு இப்பதான் சென்னை வந்து சத்தியமா நாந்தான் இந்த பின்னூட்டத்தப் போடுறேன்

:))

பெருசு said...

பரிசலு, ரெட்டக்கண்ணு பாலத்துக்கு கீழே போகும்போது தலையக்குனிஞ்சி போகணும்.

இல்லாட்டி தலைமுட்டி பேய் வந்து புடிச்சுக்கும்.


சிவன் தியேட்டர்லே செகண்ட் ஷோ பாத்திட்டு கருவம்பாளையம் வழியா போங்க.

ராயபுரம் லேடிஸ் ஹாஸ்டல் வழியாதான் போவன்னு அடம் புடிச்சீங்கன்னா,
நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லே.


சாந்தி தியேட்டர்லே செகண்ட் ஷோ பாத்தா,நேரா மேட்டுப்பாளையம் வழியாவே போங்க.
ரிங் ரோடு வழியா போனீங்கன்னா

அப்புறமா நாங்கெல்லாம் ஹிந்தியிலேயும் மலையாளத்துலேயும் பதிவு படிக்க வேண்டி வரும்.

கோபிநாத் said...

போன பதிவில் இது நான் இல்லைன்னு ஒரு குண்டை போட்டிங்க இப்ப ஆவிக்கதை...வர வர உங்க பதிவுக்கு வரவே பயமாக கீது தல :)

பரிசல்காரன் said...

@ ஆகாயநதி

இதோ எழுதிகிட்டே இருக்கேன் நண்பா. கரண்ட் வேலையைக் காமிச்சிடுச்சு!

@ எம்.எம்.அப்துல்லா

நீங்க எப்பவுமே இரவுப்பறவைதானேண்ணே...

@ பெருசு

பூச்சாண்டி காட்டறீங்களே பெருசு.. எப்பனாதான் எளுதறீக.. உங்க ராகம் பாடற பதிவு படிச்சு பலபேர்கிட்ட சொன்னா.. அப்பாலிக்கா ப்ளாக்கு பக்கம் வரவே இல்ல நீங்க (உங்க ப்ளாக் பக்கம்தான்..) பொறவு எதுனா எளுதினீகளா என்ன?

திருப்பூர்ல எங்கன இருக்கீங்கன்னு சொன்னீங்னா ஒரு சந்திப்பு போடலாமில்லீங்...

@ கோபிநாத்

சனரன்சக வலைப்பூல்லியா? அப்படித்தாம்லே இருக்கும்...
@

सुREஷ் कुMAர் said...

//
கொஞ்சம் கூட ஆங்கில அறிவே இல்லாத அந்தப் பெண் அமெரிக்கன் ஸ்லாங்கில் பேசியது எப்படி?
//
இப்டி நெறையா எடத்துல மேட்டர பாதியிலேயே விட்டுட்டு, வேற மேட்டருக்கு தாவிடுரின்களே.. இதயெல்லாம் எப்போப்பா கம்ப்லீட் பண்ணுவீக..?

सुREஷ் कुMAர் said...

ஹய்யா.. மீ த 50'th..

adhivya said...

koteshwari
nenga pei irukunu nabalainu ninaikuren but nan nambaren irandha piragu atthma enru onru kandipaga irukudhu nan adhhai anubhavichiruken

Kumky said...

ஏப்புரல் மாசத்துல போட்ட பதிவுக்கு இப்போ பின்னூட்டமா? மெய்ல்ல பாலோ போட்டது தப்பா.....அய்யாமாருங்களே தாய்குலங்களே ....இப்போ பேய் இருக்குது என்று எல்லோரும் நம்பலாம்தானே.....