Monday, June 21, 2010

ராவணன் - 15

தை - எல்லா பதிவுகளிலும் படித்திருப்பீர்கள். படிக்காவிட்டாலும் இராமயணம் தெரிந்திருக்கும். விமர்சனமும் நிறைய படித்திருப்பீர்கள். படம் பார்க்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள் நிச்சயம் எப்படியாவது பார்த்து விடுவீர்கள். என்னாத்துக்குப் பார்த்துட்டு என்று நினைப்பவர்கள் என் விமர்சனம் பார்த்து ஒன்றும் முடிவை மாற்றிக் கொள்வீர்கள் என்று தோன்றவில்லை. ஆகவே விமர்சனம் என்று முழுதாக இல்லாமல் ராவணன் சம்பந்தமான என் எண்ணச் சிதறல்கள்....

*************************************************

1) திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டரில் பையாவிற்குப் பிறகு சுறாவை திரையிடவில்லை. சக்தி ஃப்லிம்ஸ் அதிபர் திரு. சுப்ரமணியத்தின் தியேட்டர். கையச் சுட்டுக்கறதுதான் மிச்சம் என்று நினைத்திருப்பதாக கேள்வி. மொழியாக்கப் படங்களை இரண்டு வாரமாக திரையிட்டவர்கள் ராவணனை நம்பி எடுத்திருந்தார்கள்.


2) ஆன்லைனில் வெளியிட்ட ஒரு மணிநேரத்திற்கெல்லாம் வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்தது. சனிக்கிழமை இரவுக் காட்சிக்கு சென்றோம். வந்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் மணிரத்னபுராணம் பாடிக் கொண்டிருந்தார்கள்.

3) தியேட்டர் வாசலில் விக்ரம் ரசிகர் மன்ற கட் அவுட்கள். சற்றுத் தள்ளி நாப்பது அடிக்கு நீஈஈஈளமாக ஒரு கட் அவுட் இருந்தது. யாருக்கு என்று பார்த்தேன். ‘நவரச நாயகன் கார்த்திக்’ பல வேடங்களில் இருந்தார்.





4) விக்ரம் ப்ருத்வியின் மனைவி ஐஸ்வர்யாராவைக் கடத்துவதற்கான பின்னணியான ஃப்ளாஷ்பேக் எந்தவித சலனத்தையும் பார்வையாளார்களிடையே ஏற்படுத்தவில்லை. ஷங்கரின் இந்தியன் கஸ்தூரி மரண ஃப்ளாஷ்பேக்கையும், ஜீன்ஸின் நாசர்-கீதாவை ராதிகா சந்தேகித்து வசவும் ஃப்ளாஷ்பேக்கையும் உதாரணமாகச் சொல்லலாம். (சட்டென்று நினைவுக்கு வருகிறது. தட்ஸ ஆல்)

5) மேக்கிங்- அபாரம். ஒவ்வொரு காட்சியும் பிரமாதமாய் இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை பிரமாதப்படுத்தியிருப்பவர்கள் காமிராமேன்கள் சந்தோஷ் சிவனும், மணிகண்டனும்தான். எந்தகாரணம் கொண்டும் சின்னத்திரையில் பார்த்துவிடாதீர்கள்.


6) வசனம் – சொதப்பல். சுஜாதாவை மிஸ் செய்கிறோம் என்பது தெரிகிறது.

7) பின்னணி இசையில் புதிய உத்திகளை ரஹ்மான் பரீட்சித்திருக்கிறார் என நினைக்கிறேன். எனக்கு பின்னணி இசை மிகவும் பிடித்திருந்தது. இசைக்கருவிகள் என்றில்லாமல் கோரஸை வைத்து அதிக இடங்களில் பின்னணி இசை கோர்க்கப்பட்டிருந்தது கவர்ந்த்து. அதுவும் அரேபிய பாணியில் பெண் குரல் ஒன்று பாடுமே, மிகவும் அருமை.

8) ராவணன், ராமன், சீதா, லஷ்மணன், அனுமார், விபீஷணன் எல்லாரையும் வேறு வகைகளில் காண்பித்திருக்கிறார்கள். ஆனால் புராதனமான கதையை நவீனமாக்குகிறேன் பேர்வழி என்று சொதப்பியிருக்கிறார்கள். சீதை பாதியில் ராவணனிடம் சலனப்படுவது போலவே பொதுஜனங்கள் நினைக்கும் வண்ணம் ஐஸ்வர்யாராயின் கதாபாத்திரம் குழப்புகிறது.

9) பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் குறையில்லை. ஆனால் மிகவும் எதிர்ப்பார்த்திருந்த ‘உசுரே போகுதே’ தவறான இடத்தில் வருகிறது. இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கலாம். அந்த இடத்தில் ‘கோடு போட்டா’ பாடலை நுழைத்திருக்கலாம்.


10) ‘சோத்துல பங்கு கேட்டா இலையப் போடு இலையை
சொத்துல பங்கு கேட்டா தலையைப் போடு தலையை’

‘வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குப் புரிகின்றது
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்குப் புரிகின்றதா?’

வைரமுத்து = வைரமுத்து!

11) ஆர்ட் டைரக்டர் படம் நெடுக வியாபித்து உழைத்திருக்கிறார். அவருக்கும் ஷொட்டு. ப்ரியாமணி கல்யாணம் நடைபெறும் இடம், கோடு போட்டா’ பாடல் நடைபெறும் இடம் எல்லாம் ஆர்ட் டைரக்‌ஷனா லொகேஷனா என்று தெரியவில்லை. லொகேஷன் ஒவ்வொன்றும் மிகப் பிரமாதம். கண்ணிலேயே நிற்கிறது.

12) போலீசாக ப்ருத்விராஜ். அப்படி என்ன விக்ரம் தப்பு செய்தார் என்று இவர் துரத்துகிறார் என்பதே தெரியவில்லை. ஒருவரி வசனத்திலாவது போலீஸ் அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. அதனால் விக்ரம் மீது பரிதாபமோ, ஹீரோயிஸமோ ஒன்றுமே பார்வையாளனுக்குத் தோன்றவில்லை. அதேபோல அவனைப் பிடிக்கப் பாடுபடுகிறாரே எஸ்.பி என்று ப்ருத்விராஜ் பக்கமும் பார்வையாளன் சாயமுடியவில்லை. கிடைத்த கேப்பில் ஐஸ்வர்யா ராயை ஸ்க்ரீனில் சைட்டடித்துத் தொலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. (இது பொதுக்க்ருத்து. எனக்கு ஐஸ் மாதிரியான அழகு ‘பொம்மைகள்’ பிடிப்பதில்லை!)

13) ஐஸ்வர்யா படம் முழுவதும் ஜாக்கெட்டைத் திருப்பிப் போட்ட மாதிரியான காஸ்ட்யூமில் இருக்கிறார். அவ்வளவு இறக்கம். உலக அழகி என்பதற்காக இப்படிக் காட்ட வேண்டியதில்லை.

14) விக்ரம், பிரபு, கார்த்திக் என்று ஒவ்வொருவரும் முதலில் ஸ்க்ரீனில் காண்பிக்கப்படும்போது கைதட்டல் பெறுகிறார்கள். ஆனால் மூன்றோ நான்கோ சீன்களில் வந்தாலும், வரும் சீன்களில் எல்லாம் கைதட்டல் வாங்குவது ஒரே ஒருவர். அவர் - ரஞ்சிதா.

15) விக்ரம் – நடிப்பு வழக்கம்போல அபாரம். மணிரத்னத்தின் சிரமப்படலும் படம் முழுக்கத் தெரிகிறது. ஆனால் நாங்கள் - அட்லீஸ்ட் நான் - மணிரத்னத்திடம் அடுத்ததாக எதிர்பார்ப்பது தமிழுக்கான தமிழ் ரசிகர்களுக்கான ABC செண்டர்களுக்கான ஒரு படம். செய்வீர்களா?


ராவணன் – பார்ப்பதற்கு முன் பேச வைத்த அளவிற்கு பார்த்த பிறகு பேச வைக்கவில்லை.

.

கொசுறு:- படம் ஆரம்பிக்குமுன் மக்களிடையே மணிரத்னபுராணம் என்று சொன்னேனல்லவா? படம் முடிந்தபிறகு ஓர் இளம்பெண் சொன்னது: ‘விக்ரம், ஐஸு, ப்ருத்விராஜ்ன்னு மூணு பேரை வெச்சுகிட்டு ஒரு ரொமாண்டிக்கான படம் எடுக்காம என்ன படம் எடுத்திருக்காங்க?’

.

27 comments:

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் தியேட்டர விட்டு வந்தேன்!

பிரதீபா said...

சரிதான் , ஊருக்கு வரும்போது பாத்துக்கறேன்.. :-)

nellai அண்ணாச்சி said...

உங்களால நூறு ரூபாய் மிச்சம்

சுசி said...

//ராவணன் – பார்ப்பதற்கு முன் பேச வைத்த அளவிற்கு பார்த்த பிறகு பேச வைக்கவில்லை.//

இன்னமும் டிக்கட் புக் பண்ணலை. இப்போ புக் பண்ண வேணாம்னு தோணுது.

கோவி.கண்ணன் said...

//13) ஐஸ்வர்யா படம் முழுவதும் ஜாக்கெட்டைத் திருப்பிப் போட்ட மாதிரியான காஸ்ட்யூமில் இருக்கிறார். அவ்வளவு இறக்கம். உலக அழகி என்பதற்காக இப்படிக் காட்ட வேண்டியதில்லை.//

:) சுஜாதா வசனம் இங்கு வந்துட்டு !

ஷர்புதீன் said...

அண்ணன் கோவி கண்ணன் அவர்களை வழிமொழிகிறேன்

தராசு said...

இங்க ஹிந்தில மேட்டரே வேற மாதிரி இருக்குது தல. அபிஷேக் பச்சன், விக்ரம், கோவிந்தான்னு மூணு பேர் தான் என்னெனமோ பண்றாங்க.

செல்வா said...

nalla vela sonnenka...!!!

M.G.ரவிக்குமார்™..., said...

நபநப! நல்ல பதிவு!நன்றி பரிசல்!..

அண்ணாமலை..!! said...

// ராவணன் – பார்ப்பதற்கு முன் பேச வைத்த அளவிற்கு பார்த்த பிறகு பேச வைக்கவில்லை //

நிறைய படம் இந்த மாதிரிதான் இப்ப ஆகிப்போகுது பரிசல்!
சில படங்கள் தான் சைலண்டா வந்து
சதம் போட்டுருது!

கோவி.கண்ணன் said...

//இங்க ஹிந்தில மேட்டரே வேற மாதிரி இருக்குது தல. அபிஷேக் பச்சன், விக்ரம், கோவிந்தான்னு மூணு பேர் தான் என்னெனமோ பண்றாங்க. //

அப்படி ஒன்றும் இல்லை, காட்சிக்கு காட்சி கேமரா ஆங்கிள் உட்பட எல்லாம் ஒரே மாதிரி தான், நடிகர்கள் வேற அம்புட்டு தான்.

அன்பேசிவம் said...

ஹி ஹி ராவணன் பத்துதலையிலும் வலி......

செல்வம் said...

ஹி..ஹி... நானும் பார்த்துட்டேன்.

என் நண்பன் கூறியதைப் போல நல்லா எடுத்திருக்கிறார்கள் ...ஆனால் நல்ல படம் இல்லை.

ராவணனை நல்லவனாகக் காட்டி விட்டு, ஆனால் அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படுபவன் தான் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பதையும்,

ராமன் சந்தேகப்பட்டாலும், அது ராஜ தந்திரமேயன்றி வேறில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பதையும்,

மேட்டுக்குடி என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்து ராவணனை புரட்ச்சியாளனாக காட்ட முயன்றிருப்பதையும் பார்த்த பிறகு தான்...மணிரத்னம் வழக்கம் போல அவரது வழியில் தான் படம் எடுத்துள்ளார் என்பது தெரிந்தது.

same sree sakthi...

same blood

இப்படிக்கு

கடலையூர் செல்வம்

விக்னேஷ்வரி said...

கொசுறு நச்.

Unknown said...

//.. வரும் சீன்களில் எல்லாம் கைதட்டல் வாங்குவது ஒரே ஒருவர். அவர் - ரஞ்சிதா. ..//

நீங்க வேற, கோபில நான் உட்கார்ந்திருந்த வரிசைக்கு பின்னாடி வரிசைல நாலஞ்சு பொண்ணுக உட்கார்ந்துருந்தாங்க. ரஞ்சி திரைல வந்த உடனே "ஏய், ரஞ்சிதாடி.."ன்னு ஒரு குரல் வந்துச்சு.. :-)))

R.Gopi said...

நவரச நாயகனும், பிரபுவும் படத்தில் ஒரு காட்சியில், ஒரே ஃப்ரேமில் வந்த போது ஏனோ “அக்னி நட்சத்திரம்” படம் ஞாபகத்திற்கு வந்தது...

காலம் தான் எவ்ளோ மாறிடிச்சு...

பழூர் கார்த்தி said...

அப்படியொன்னும் படம் மோசமில்லைங்க.. கலை, ஒளி, ஓலிப்பதிவிற்காகவே படத்தைப் பாராட்டலாம்.. ஹி ஹி.. இன்னும் நம் கருத்து சிதறல்கள் இங்கே

Anonymous said...

படம் நல்லா இல்லை. ஆனா உங்க விமர்சனம் நல்லா இருக்கு.

Bruno said...

//சற்றுத் தள்ளி நாப்பது அடிக்கு நீஈஈஈளமாக ஒரு கட் அவுட் இருந்தது. யாருக்கு என்று பார்த்தேன். ‘நவரச நாயகன் கார்த்திக்’ பல வேடங்களில் இருந்தார்.//

அவரை மரத்துக்கு மரம் தாவ வைத்து, அதன் பிறகு கூட சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஒரு மங்கி தொப்பி அணியவைத்து..... சத்தியமா கட் அவுட் வைத்தவர்கள் நொந்திருப்பார்கள்

Bruno said...

//
13) ஐஸ்வர்யா படம் முழுவதும் ஜாக்கெட்டைத் திருப்பிப் போட்ட மாதிரியான காஸ்ட்யூமில் இருக்கிறார். அவ்வளவு இறக்கம். உலக அழகி என்பதற்காக இப்படிக் காட்ட வேண்டியதில்லை.//

நீங்க கூட மணிரத்னம் படத்துக்கு வசனம் எழுதலாம் !!

Bruno said...

//. ஆனால் மூன்றோ நான்கோ சீன்களில் வந்தாலும், வரும் சீன்களில் எல்லாம் கைதட்டல் வாங்குவது ஒரே ஒருவர். அவர் - ரஞ்சிதா.//

சென்னையிலும் அதே நிலைமை தான்

Bruno said...

//
ராவணன் – பார்ப்பதற்கு முன் பேச வைத்த அளவிற்கு பார்த்த பிறகு பேச வைக்கவில்லை.
//

சூப்பர்

Unknown said...

பரிசல்காரன் விமர்சன பார்வை, பார்ப்பன பார்வை.

Anonymous said...

அய்யா இதைதான் பல ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். மணிரத்னத்தை திட்டும் ஒரே ஆள் நான்தான் என்று பல நூறாண்டுகளாக ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். அய்யா என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? மணிரத்தினம் வீட்டின் வெளியில் நிர்வாண போராட்டம் நடத்தலாம் என்று இருக்கிறேன். அதற்க்கு அதிகம் செலவாகும். நிர்வாணம் என்றால் சுமாவா, பெரியாரே நிர்வாணமாக ரஷ்யாவில் நின்றார்.அய்யா இதைதான் பல ஐநூறு ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். அதற்க்கு அதிகம் செலவாகும்.நேற்று வீட்டில் செம வறுமை, நேராக டீக்கடை சென்று ஒரு அப்சொலுட் வோட்கா தொடை நனைய சாந்தி அடித்தேன். அய்யா இதைதான் பல ஆயிரம் ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன். ராவன் ஹிந்தியில் கிழித்து தோரணம் கட்டிவிட்டாகள் அய்யா, இதை என்னவென்று சொல்வது.

ஏன் அய்யா ஒரு எழுத்தாளன் ரோட்டோரம் ரம் அடிப்பது தவறா? சொல்லுங்கள். இதை தவறு என்று பிரான்சில் சொன்னால் ரோடில் ரத்த ஆறு ஒடுமையா ரத்த ஆறு ஓடும். தெரியாமல் தான் கேட்கிறேன், ரஜினி வைப்பது போல் என்னால் ஆயிரம் ரூபாய் டிப்ஸ் வைக்க முடியாது. இது ஒரு எழுத்தாளனின் தலைவிதி. அய்யா இதைதான் பல பத்தாயிரம் ஆண்டுகளாக எழுதியும், கூறியும் வருகிறேன்.

Thamira said...

ஆச்சரியமாக இருக்கிறது (ஆக்சுவலா 'இருந்தது', படிச்சு ரொம்ப நாளாவுது. இப்பதான் பின்னூட்டம் போடுகிறேன்). நானும் முதலில் இப்படித்தான் 1, 2, 3 போட்டு எழுத ஆரம்பித்தேன். அப்புறமா மாற்றி வழக்கம் போல எழுதினேன். :-))

Thamira said...

ஆச்சரியமாக இருக்கிறது (ஆக்சுவலா 'இருந்தது', படிச்சு ரொம்ப நாளாவுது. இப்பதான் பின்னூட்டம் போடுகிறேன்). நானும் முதலில் இப்படித்தான் 1, 2, 3 போட்டு எழுத ஆரம்பித்தேன். அப்புறமா மாற்றி வழக்கம் போல எழுதினேன். :-))

ஷர்புதீன் said...

//இது பொதுக்க்ருத்து. எனக்கு ஐஸ் மாதிரியான அழகு ‘பொம்மைகள்’ பிடிப்பதில்லை//

நீ(ங்கள்) என் இனமப்பா