Saturday, June 5, 2010

ஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்

ப்போதோ எழுதி, உடனே பதிவிட்ட கவிதைகள். ஒரு காரணத்திற்காக பதிவிட்ட நான்கைந்து நாட்களில் எடுத்து விட்டேன். மறுபடி ட்ராஃப்டிலேயே வைத்திருந்தேன்.

மறுபடியும் பதிவில் இருக்கட்டும் என்பதால் வெளியிடுகிறேன். ஆகவே இது ஒரு மீள்பதிவு என்று கொள்ளலாம்.

ஏற்கனவே படித்துவிட்டவர்கள் ஒரு திட்டு திட்டிவிட்டு கடந்துவிடவும்.

:-)

*****************************************


1)


தேடிக் கொண்டேயிருக்கிறேன்
தொலைத்தது எதுவென்று தெரியாமல்.

******************

2)

நியாய அநியாயம்

விழுந்த வெட்டில்
கால் துண்டாகிக் கிடந்தது.
தண்ணீருக்காக
தொண்டை தவித்தது தெரிகிறது.
கண்கள் யாரையோ தேடி
அலைபாய்கிறது.
காற்றில் துழாவும் கைகளைப்
பற்றிக் கொள்ள
எவரும் வரவில்லை.
தண்ணீர் கொடுக்க நெருங்கியவர்
என்ன காரணமோ தடுமாறுகிறார்.

கூடி நிற்கும் கூட்டம்
வேடிக்கை பார்க்கிறது.
கூட இருக்கும் அதிகாரிகளும்
அலட்சியமாய் நிற்கின்றனர்.

போயேவிட்டது உயிர்.

‘மனுசனுகளாடா நீங்க?’

அங்கே இருந்திருந்திருந்தால்
அவர்களில் ஒருவனாயிருந்திருக்கக்கூடிய
நான்
இங்கே இருப்பதால்
ஏ ஸி அறையில்
நிறுவன செலவில்
யூ ட்யூபில் பார்த்துத்
திட்டிக் கொண்டிருக்கிறேன்.

*****************************


3)


போட்ட கால்சட்டைக்கு
பொருத்தமான சட்டை தேடுவதைவிடவும்
சிரமமாக இருக்கிறது
எழுதி முடித்த கவிதைக்கு
தலைப்பு வைக்கும் வேலை.

**********************************

4)

ஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்

பச்சை ஆகாயம்
சிகப்பு நிலா
வைலட் பறவைகள்
மஞ்சள் மேகம்

‘புல்லு என்ன கலர்ப்பா’
கேட்கும் மகளுக்கு
நீலம் என்கிறேன்.

ஆகாயம் பச்சையாய் இருக்கும்போது
புற்கள் நீலத்தில் இருந்தாலென்ன?

அவர்கள் உலகில்
எல்லாமே அழகுதான்.

**************************

5)


முன்னும் பின்னும்


சாலையின் நெரிசலில்
நடக்கையில்
சற்று தூரத்தில்
அவனைப் பார்த்தேன்.
எங்கோ பார்த்த முகம்.
அவன் முகத்திலும்
அதே கேள்வி.
நெருங்கிக் கொண்டே இருந்தான்.
என்னுள் கேள்விச் சிக்கல்
அவிழாமல் முடிச்சாய்த்
தொடர்ந்தது.
கைக்கெட்டும் தூரத்தில் வந்து
கடந்து போனான்.
போனவனைத்
திரும்பிப் பார்த்து
கேட்டிருக்கலாமோவென
எண்ணினேன்.
ஆனாலும்
யாரென்று தெரியாமல்
அவனைப் பார்க்கும்போது
எனக்கிருந்த அன்பு
அறிந்து கொண்ட பின்
இருந்திருக்கும் அன்பைவிட
அதிகமாகத்தான் இருந்ததென்பதால்
விட்டுவிட்டேன்.

***************************


.

70 comments:

நீர்ப்புலி said...

kalakkal.

ஸ்வாமி ஓம்கார் said...

எண்டர் கவிதை மாதிரி இது ஜஸ்டிஃபை கவிதைகளா? :)

அருமை.

பாலகுமார் said...

அருமை...

Unknown said...

கலக்கல் :)

- அழகேசன்

Priya said...

//தேடிக் கொண்டேயிருக்கிறேன்
தொலைத்தது எதுவென்று தெரியாமல்//.....
So short & sweet!

//அவர்கள் உலகில்
எல்லாமே அழகுதான்//...
உண்மைதான்!

//சிரமமாக இருக்கிறது
எழுதி முடித்த கவிதைக்கு
தலைப்பு வைக்கும் வேலை//......
இருந்தாலும் அழகான தலைப்பைதான் வைத்திருக்கிறீர்கள்!

இரவு கவி said...

ellame superb kavitha.

ennakkku 3-vathu kavithai romba pidiththirunthathu.

2-vathu kavithai vara character thaan naanumnu nenaikiren.. :-(

அரங்கப்பெருமாள் said...

//ஏ ஸி அறையில்
நிறுவன செலவில்
யூ ட்யூபில் பார்த்துத்
திட்டிக் கொண்டிருக்கிறேன்//

நிதர்சனம்.

கவிதைகள் அருமை.

பா.ராஜாராம் said...

நம்பர் நாலு ரொம்ப நல்லா இருக்கு.

அப்பாவி முரு said...

அன்பின் பரிசல்...

யாவரும் அங்கிருந்த கலெக்டர், ஒரு டாக்டர் அடுத்ததாக இரண்டு மாண்புமிகு(!?) களை மட்டுமே திட்டியிருப்பார்கள். அங்கு இருந்த சாதாரண மனிதர்களை ஏதும் சொல்லவில்லை என புரிதல்.

Rajalakshmi Pakkirisamy said...

4th one is toooooooo good

என் நடை பாதையில்(ராம்) said...

எல்லாமே நல்லா இருக்குங்க...

Tharshy said...

அருமையான எண்ணங்கள்…பாராட்டுகள்..:)

மாதவராஜ் said...

’மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்’ கவிதையை ரசித்தேன். அழகு!

பரிசல்காரன் said...

@ Dhina

Thanks!

@ ஸ்வாமிஜி

அப்படியா இருக்கிறது? அப்படியும் இருக்கிறது!

@ பாலகுமார்

நன்றி.

@ Gatz

நன்றி அழகேசன்.

@ Priya

நன்றி ப்ரியா.

@ இரவு கவி

நான்னு மட்டும்தான் நான் நெனைக்கறேன். நம்மன்னு நெனைக்கற உரிமை எனக்கு இருக்கான்னு தெரியல. (கவிதை எழுதினா பின்னூட்டம்கூட கவிதயாவே வருமா! ச்சே..)


@ அரங்கப்பெருமாள்

நன்றி.

@ பா.ராஜாராம்

ரொம்ப நன்றி சார்.

@ அப்பாவி முரு

:-)

@ Rajalakshmi Pakkirisamy

மிக்க நன்றி.

@ ராம்

நன்றி!

@ கொற்றவை

நன்றி.

@ மாதவராஜ்

மிகவும் நன்றி ஐயா... (அடுத்த தொகுப்புக்குத்தான் ரெடி பண்றேன். இந்த முறை மிஸ்ஸாகிவிட்டது!)

ஈரோடு கதிர் said...

//அங்கே இருந்திருந்திருந்தால்
அவர்களில் ஒருவனாயிருந்திருக்கக்கூடிய
நான்//

எனக்கென்னமோ அப்படித் தோணவில்லை

......

கவிதைகள் அருமை

தராசு said...

இது என்ன இடது வலது கவிதையா தலைவா?

அற்புதம், நிதர்சனம்.

பரிசல்காரன் said...

@ ஈரோடு கதிர்

நன்றி.

@ தராசு

நன்றிங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

2, 4, 5 மூன்றும் ரொம்பவெ ரொம்பவே நல்லா இருக்கு பரிசல்..

\\யாரென்று தெரியாமல்
அவனைப் பார்க்கும்போது
எனக்கிருந்த அன்பு
அறிந்து கொண்ட பின்
இருந்திருக்கும் அன்பைவிட
அதிகமாகத்தான் இருந்ததென்பதால்
விட்டுவிட்டேன்//

.:) அதிகமாகத்தான் இருக்குமென்று முன்னாடியே முடிவெடுத்துவிட்டீர்கள்.

வெற்றி said...

2,3,5 செம கவிதை தல!
இது எல்லோர் வாழ்கையில் ஏற்படும் அனுபவம் தான்..

அன்பேசிவம் said...

தல ஓவியம் வரையும் ஒரு மகள், அழகு.

Rajasurian said...

எல்லாமே அருமை என்றாலும். நான்காம் கவிதை மிக அற்புதம்

பரிசல்காரன் said...

@ முத்துலெட்சுமி

நிறைய பேர் பார்த்தபின்னாடி அன்பைக் குறைச்சுக்கறோமே.. அதான்..

@ வெற்றி

நன்றி.

@ முரளி

நன்றி நண்பா.

@ காவேரி கணேஷ்

சரி

@ ராஜசூரியன்

நன்றி.

நர்சிம் said...

தலைப்பு ..

பரிசல்காரன் said...

@ நர்சிம்

இன்னைக்கு நாலு வார்த்தைல பின்னூட்டம் போட்டிருக்கீங்க.. அதிசயம்!

na.jothi said...

4வது கவிதை ரொம்ப பிடித்திருந்தது

2வது கவிதை கடைசி 4 வரி இல்லாம
இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு
நினைக்கிறேன்

3 சரிங்க

Unknown said...

நாலு அழகு. மற்றவற்றில் உள்ள உண்மை கசக்குது.

CS. Mohan Kumar said...

மகள் ஓவியம் வரையும் கவிதை அழகு

anujanya said...

மகள் ஓவியம் வரையும் கவிதை பிடிச்சிருக்கு.

அனுஜன்யா

கார்க்கிபவா said...

//ன்னுள் கேள்விச் சிக்கல்
அவிழாமல் முடிச்சாய்த்
தொடர்ந்தது.//

மிகவும் ரசித்த வரி


//பரிசல்காரன் said...
@ நர்சிம்

இன்னைக்கு நாலு வார்த்தைல பின்னூட்டம் போட்டிருக்கீங்க.. அதிசய//

அது நாலு எழுத்து

முத்தமிழ் said...

enna solvadhu, atthanaiyum arumai, enakku eakkamaga irukkiradhu enakkum kavidhai ezhudha therindhal nasukkana varthaikalil indha ulaga nigazhvugalai solli irukkalamena, indru mudhal muyarchi seykiren kavidhai ezhudha

Unknown said...

#2 - நிதர்சனம்

#4 - அழகு. ஒரு மகள்ன்னு சொல்றதுக்குப் பதிலா “என் மகள்”ன்னு சொல்லி இருக்கலாமோ?

மாதவராஜ் said...

//அடுத்த தொகுப்புக்குத்தான் ரெடி பண்றேன். இந்த முறை மிஸ்ஸாகிவிட்டது!//

நான்தான் மிஸ் பண்ணியிருக்கிறேன்!

விக்னேஷ்வரி said...

2,4,5 - பிரமாதம்ங்க. ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.

ந.ஆனந்த் - மருதவளி said...

போட்ட கால்சட்டைக்கு
பொருத்தமான சட்டை தேடுவதைவிடவும்.....

சட்டைகள் அதிகம் உள்ளவர்க்கே, இந்த சிரமம் இருக்கும்...

கவிதைகள் அதிகம் எழுதுவோர்க்கு, எழுதும் தலைப்பு எளிதில் பொருந்தி விடும் (அல்லது பொருத்தி விடுவர்!)

ந.ஆனந்த் - மருதவளி said...

சொல்ல மறந்து விட்டேன். கவிதைகள் நன்று நண்பரே.

பரிசல்காரன் said...

@ ஜோதி

நன்றி.

@ ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீ!

@ மோகன்குமார்

தாங்க்ஸ்!

@ அனுஜன்யா

வ வா பி ரி!

பரிசல்காரன் said...

@ கார்க்கி

அதெப்படி கவிஞருக்கு பின்னாடியே வந்து கமெண்ட் போடுவ?

@ மைதிலி

முயலுங்கள். நானெல்லாம் அப்படித்தான் ஆரம்பித்தேன்...

@ கேவியார்

அந்த ஒரு-ல பல விஷயங்களைச் சொல்றாருங்க கவிஞர்!

@ மாதவராஜ்

சாஆஆஆர்.. நீங்க இப்படியெல்லாம் சொல்லக்கூடாது! பரிந்துரைக்காம விட்டது என் கவனக்குறைவுதான்.

@ விக்னேஸ்வரி

நன்றி விக்கி.

@ ந.ஆனந்த்

சரி!

கண்மணி/kanmani said...

4th one simply superb

2nd one horrible

Rest good

கண்மணி/kanmani said...

4th one simply superb

2nd one horrible

Rest good

ஜெனோவா said...

மகள் வரைந்த ஓவியத்தை மிகவும் ரசித்தேன் சார் .. மிக அருமை !

இது அந்தக்கவிதையின் பயணத்தில் தொடர்ந்தது ;-)

மகள் போலவே
பாவித்துக்கொண்டு
கருப்புக்கலரில் சர்க்கரை கேட்டேன்
முற்றிவிட்ட
பித்து பிடித்தவன் என்பதுபோல்
பார்த்தார் கடைக்காரர் !

அன்புடன் அருணா said...

மகளின் ஓவியம் அருமை.பூங்கொத்து!

அத்திரி said...

//ஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்"//

கவிதை அருமை..... ரெண்டாவது கவிதை நிதர்சனம்

தமிழ் அஞ்சல் said...

//ஏ ஸி அறையில்
நிறுவன செலவில்
யூ ட்யூபில் பார்த்துத்
திட்டிக் கொண்டிருக்கிறேன்//


LOGIC..!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தேடிக் கொண்டேயிருக்கிறேன்
தொலைத்தது எதுவென்று தெரியாமல்.//

நிறைய பேர் வாழ்க்கை இப்படியே போய் முடிந்தும் விடுகிறது.
ரசிக்க வைத்த கவிதைகள்

Raman Kutty said...

கவிதையின் கருத்துக்கள் ஒவ்வொன்றும்.. கலக்கல்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

நான்காவது மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள் கவிதை நல்லாயிருக்குண்ணா...!

thamizhparavai said...

3m,4m பிடித்தது...

கமலேஷ் said...

அருமையாக இருக்கிறது....உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Cable சங்கர் said...

எண்டர் கவிதைகள் அளவுக்கு இல்லாட்டாலும் ..ஓரளவுக்கு ஓகே.

ஜோக்ஸ் அபார்ட்.. அருமை..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நான்காவது மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள் கவிதை நல்லாயிருக்குண்ணா...!

camma saariya podungappa, 4th magalnu thonuthu.

காற்றில் எந்தன் கீதம் said...

மிக அழகான நேர்த்தியான கவிதைகள்............ வாழ்த்துக்கள்

Unknown said...

அழகாய் இருக்கிறது..

சிநேகிதன் அக்பர் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் பரிசல்

தேசாந்திரி-பழமை விரும்பி said...

////////////
அங்கே இருந்திருந்திருந்தால்
அவர்களில் ஒருவனாயிருந்திருக்கக்கூடிய
நான்
இங்கே இருப்பதால்
ஏ ஸி அறையில்
நிறுவன செலவில்
யூ ட்யூபில் பார்த்துத்
திட்டிக் கொண்டிருக்கிறேன்.
///////////

முகத்தில் அறையும் வார்த்தைகள்...
அத்தனையும் நிதர்சனம் !!!!!!

வெள்ளிநிலா said...

எல்லோரும் இன்புற்றிருக்க அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே. பொங்கல் நல்வாழ்த்துக்கள்

நாடோடிப் பையன் said...

Beautiful poems. Kudos.

யுவகிருஷ்ணா said...

நாலாவது கவிதை ஆஹா.. ஓஹோ.. மன்னனாக இருந்தால் உங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்திருப்பேன் :-)

குசும்பன் said...

கவிதையில் அதிகம் எண்டர் இருக்கலாம், ஆனால் அலைன்மெண்ட் பிரச்சினை இருக்க கூடாது:))) அதை சரி செய்யவும்:))

பரிசல்காரன் said...

குசும்பா..

மன்னர்களில்லாத வெறும் மக்கள் கூடும் சபையில் வந்த நோக்கமென்னவோ?

அது அலைன்மெண்ட் ப்ராப்ளம் போலவா தெரிகிறது? ஐயகோ.. அது லேஅவுட் போல இல்லையா? என் செய்வேன்....

Sabarinathan Arthanari said...

நன்றாக இருக்கின்றன.

M.G.ரவிக்குமார்™..., said...

இதுக்குத் தாங்க உங்களைத் தேடுனது!.......சந்தோசமா இருக்குங்க!.......

அண்ணாமலை..!! said...

4-வது அது தனீ உலகம் பாஸ்!
3-வது எல்லா நேரமும் ஏற்படுகிறது!
2- நான் மட்டும் இருந்திருந்தா!!
1- அப்படியா?? :)

Raghu said...

ப‌ரிச‌ல்!!! சொன்னா ந‌ம்ப‌ மாட்டீங்க‌, ரொம்ப‌ நாளைக்கு முன்னாடி, உங்க‌ முத‌ல் க‌விதை மாதிரியே ஒண்ணு எழுதி வெச்சிருந்தேன்

மிக‌வும் சிர‌த்தை
எடுத்துத் தேடிக்கொண்டிருக்கிறேன்
தேடுவ‌து
எதையென்ப‌தே தெரியாம‌ல்...

குழ‌ந்தை க‌விதை சூப்ப‌ர் :)

மார்கண்டேயன் said...

//அங்கே இருந்திருந்திருந்தால்
அவர்களில் ஒருவனாயிருந்திருக்கக்கூடிய
நான்
இங்கே இருப்பதால்
ஏ ஸி அறையில்
நிறுவன செலவில்
யூ ட்யூபில் பார்த்துத்
திட்டிக் கொண்டிருக்கிறேன்//

நிதர்சனமான, நியாயமான உண்மை, உறுத்துகிறது . . . சுடுகிறது . . . வேறென்ன சொல்ல . . .

ny said...

4 okay types!

5th z better!!

கத்தார் சீனு said...

முதல் கவிதை - almost ஹைகூ!!!

இரண்டாம் கவிதை - sarcastic யதார்த்தம் !!!

மூன்றாம் கவிதை - நாங்க சட்டை போட்டுட்டுத்தான் கால் சட்டை தேடுவோம் !!!

நான்காம் கவிதை - அருமையான கவிதை...அனுபவிச்சாதான் தெரியும்...நினைக்க நினைக்க இனிமை !!!

ஐந்தாம் கவிதை - அனுபவம் !!!

வாழ்த்துக்கள் !!! கலக்குங்க !!!

HVL said...

//
ஆகாயம் பச்சையாய் இருக்கும்போது
புற்கள் நீலத்தில் இருந்தாலென்ன?

அவர்கள் உலகில்
எல்லாமே அழகுதான்.

//

நல்லாயிருக்கு.

பிரதீபா said...

மகள் ஓவியம் வரைந்தது அருமை.. ஆனா எனக்கு ஒரு ஆசை , ஒருத்தர், ஒரே ஒருத்தராச்சும் இரண்டாவது கவிதைக்கு நான் அப்படி இல்லைங்கன்னு சொல்லனும்ன்னு.

தமிழ் said...

/தேடிக் கொண்டேயிருக்கிறேன்
தொலைத்தது எதுவென்று தெரியாமல்./

அருமை