Thursday, June 17, 2010

அட்வைஸ்கள் இலவசம்

யாராவது எனக்கு அட்வைஸ் பண்ணினா - சரின்னு கேட்டுக்குவேன். ஃபாலோ பண்றேனோ இல்லையோ என்பது ரெண்டாவது விஷயம். சின்ன வயசுலேர்ந்து இப்ப வரைக்கும் டக்னு ஞாபகம் வர்றதுல சிலது இன்னைக்கு எழுதலாம்னு உட்கார்ந்தேன். டக்னு டைரில பார்த்தா ஃப்ரெண்டு அனுப்ச்ச லெட்டர்ல இருந்த க்ரீட்டிங்ல எல்லாமே நல்ல நல்ல விஷயமா இருந்தது... அதுல சில...


சிரியுங்கள்:

ஒரு நாளைக்கு பலபேரோடு பழகுகிறோம். நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு ஒரே தடவை பார்ப்பவரைப் பார்த்ததுமே இதயத்திலிருந்து ஒரு புன்னகையை வழங்குவோம். அவர் உங்களைப் பார்க்க வந்த நண்பராய் இருக்கலாம். அலுவல் விஷயமாக வந்தவராய் இருக்கலாம். அல்லது நீங்கள் போய் பார்க்கும் நபராய் இருக்கலாம். Etc.. etc.. ஆனால் உங்கள் மனைவியைப் பார்த்து அப்படி சிரிப்பை உதிர்த்திருக்கிறீர்களா? உங்களோடே பணிபுரியும் ஒருவரைப் பார்த்து சிரிக்கும்போது அதே மலர்ச்சியோடு சிரித்திருக்கிறீர்களா? உங்களுக்கு சல்யூட் அடிக்கும் செக்யூரிடியைப் பார்த்து சந்தோஷத்தை முகம் முழுதும் செலுத்திச் சிரித்திருக்கிறீர்களா? இல்லை வெற்று குட் மார்னிங்கை மட்டும் கொடுத்திருக்கிறீர்களா? யோசித்துப் பாருங்கள். ‘இவனைத்தான் இன்னைக்குப் பூராவும் பார்க்கப் போறோமே’ என்ற எண்ணம்தான் எல்லாருக்கும் இருக்கிறது. நம்முடனே இருப்பதை, உடனடியாகக் கிடைப்பதை நாம் மதிப்பதில்லை. அப்படி இருக்காதீர்கள். அவர்களுக்கும் இதயத்திலிருந்து ஒரு புன்னகையை பரிசளியுங்கள்.


கேளுங்கள் – 1:

உங்கள் அஸிஸ்டெண்ட், நண்பன் யாரிடமும் ஒரு வேலையைச் சொல்லும்போது கேள்வியாக கேளுங்கள்: உதா: ‘கணேஷ்.. அதை எடுத்துக் கொடு’ என்பதற்குப் பதில் ‘ஒரு நிமிஷம் கணேஷ்... அதை எடுத்துத் தர்றியா’ நாளைக்குள்ள அதை முடி’ என்பதற்குப் பதில் “நாளைக்குள்ள அதை முடிக்கணும். முடியும்லப்பா?”

கேளுங்கள் – 2:

எந்த முக்கியச் செயலையும் செய்யுமுன் அதோடு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு ஆலோசனை செய்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் அது உங்கள் முழு அதிகாரத்துக்குட்பட்ட செயலாக இருந்தாலும். ஏதேனும் சிறு தவறு நேர்ந்து, அது அந்த சம்பந்தப்பட்டவருக்குச் செல்லும்போது அவர் அவரது அதிகாரத்தின் எல்லைக்குள் அதை சரி செய்ய முயல்வார். (நம்மகிட்ட சொல்லிட்டுதானே செஞ்சான்.. பாவம்..) அதுவுமில்லையா.. பிரச்சினை வரும்போது நமக்கு சப்போர்டாக நாலு வார்த்தை பேசுவார்.


மௌனமாயிருங்கள் - 1:


ஒருவர் பேசும்போது நடுவே பேசாமல் மௌனமாயிருங்கள். அவர் முழுதும் பேசி முடிக்கும்வரை உன்னிப்பாக கவனியுங்கள். அவர் பேசும்போது அது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் தோன்றினாலும் இடைமறிக்காதீர்கள். ஒருவனை மிக எரிச்சலூட்டும் விஷயம், அவன் பேசும் சுவாரஸ்யத்தை, இடைமறித்துக் கெடுப்பதுதான்.


மௌனமாயிருங்கள்-2:


ஏதேனும் மேலதிகாரி சொல்வதில் உங்களுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். எதிர்கருத்துச் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்ளாதவராய் இருக்கலாம். மௌனமாய் இருங்கள். சொல்லற்க பயனிலாச் சொல். நீங்கள் சொல்லியும் பயனில்லாத இடத்தில், ஏதும் சொல்லி எந்தப் பயனுமில்லை. அப்படி அவர் ஏற்கிறவராய் இருந்தாலும் அவர் பேசும்போது எதுவும் பேசாதீர்கள். அதற்காக அவர் முடித்த பின்னர் ‘என்ன முடிச்சுட்டீங்களா... இப்ப நான் பேசவா?’ என்று ஆரம்பிக்காதீர்கள். வேறொரு சந்தர்ப்பத்தில் உங்கள் தரப்பைச் சொல்லுங்கள்.


தனியாக சாப்பிடாதீர்கள்:


இது உங்கள் சாப்பாட்டை பங்கு போட்டுக் கொண்டு சாப்பிடுங்கள் என்றர்த்தமல்ல. சாப்பிடும்போது வீட்டிலிருந்தால் குடும்ப உறுப்பினர்களுடன், அலுவலகமென்றால் நண்பர்களுடன் அமர்ந்து உண்ணுங்கள். மகிழ்ச்சியோடு சாப்பிட்டால் உடலுக்கும் மனதுக்கும் நலம்.


பெயர் மிக முக்கியம்:

ஒருவனை அவர் பெயரிட்டே அழையுங்கள். நிறைய பேர் பணி புரியும் சூழலில் பெயர் தெரியவில்லையென்றால் – கவலைப்படாதீர்கள். கேளுங்கள்.

‘உன் பேரென்னப்பா’

‘குமார் சார்’

‘இங்க பாரு குமாரு...’ என்று ஆரம்பியுங்கள். அந்த சம்பாஷணை முடியும் வரை, நான்கைந்து முறை அவன் பேரை உச்சரியுங்கள். நான் ஹோட்டலுக்குப் போனால் சர்வர், ஆட்டோவில் போனால் ட்ரைவர் என்று முடிந்தவரை பேரைக் கேட்டுக் கொள்வேன்.

நெகடீவ் + பாஸிடிவ்:

எந்தச் செயலிலும் இறங்குமுன் நெகடிவ் எனர்ஜியை அண்ட விடாதீர்கள். நிச்சயம் இது என்னால் முடியும் என்ற பாஸிடிவ் எனர்ஜியோடே இருங்கள். அதே சமயம் முடியாவிட்டால் என்ன என்று யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். அது வெறும் முன்னேற்பாட்டுக்காகத்தானே ஒழிய, அதையே நினைத்துக் கொண்டிராதீர்கள்.

இன்றைக்கு இவ்வளவுதான். நாளைக்கு இது தொடரலாம்.. அல்லது வேறொரு நாளில் தொடரலாம்..


.

31 comments:

creativemani said...

சிரிச்சிக்கிட்டே கேட்டுக்குறேன்... :)

sriram said...

நல்ல அட்வைஸ் பரிசல்..

//அன்புடன்-மணிகண்டன் said...
சிரிச்சிக்கிட்டே கேட்டுக்குறேன்..//
பரிசல் சீரியஸா சொல்றாரு, உனக்கு என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு மணி??
:)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஷர்புதீன் said...

ஒஹ் நீங்கதான் அந்த "காப் மேயர்" ரா?!!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நம்முடனே இருப்பதை, உடனடியாகக் கிடைப்பதை நாம் மதிப்பதில்லை. //
இதை தான் நிறைய பேர் புரிவதில்லை.

இன்னும் முழு ஜோஷோட எழுத ஆரம்பிக்கலயே why parisal ?

தெய்வசுகந்தி said...

நல்ல அட்வைஸ்ங்க!!!!!!!!!!

தராசு said...

பாருங்கள் :

யாருடன் பேசினாலும் அவர் கண்களை பார்த்து பேசுங்கள்.

பைலை பார்த்துக் கொண்டோ, சுவரில் தொங்கும் கிராஃபை பார்த்துக் கொண்டோ பேசுவதில் எதிரிலிருப்பவரின் கவனம் சிதற வாய்ப்புள்ளது.

பார்க்காதீர்கள் :

எதிரிலிருப்பவர் அணிந்திருக்கும் சட்டையையோ, டையையோ, அல்லது காதணியையோ, உதட்டுச் சாயத்தையோ பார்த்து பேசினால், உங்கள் பேச்சின் வீரியம் நீர்த்துப் போகும்.

Prathap Kumar S. said...

இந்த காதுல கேட்டு அந்த காதுல.................... விடலை...
உண்மையிலேயே வாங்கி உள்ள்ப்போட்டுக்கிட்டேன்..:)) நன்றி பரிசல்...

செல்வா said...

naanum appadithaan anna., yaaravathu advise pannina kettukkuven... but enakku pidicha follow pannuven, illana vittruven..

பெசொவி said...

//நாஞ்சில் பிரதாப் said...
இந்த காதுல கேட்டு அந்த காதுல.................... விடலை...

//

நான் இந்த காதில வாங்கி அந்த காதுலதான் விட்டேன். (அந்த காது என் நண்பனுடைய காது)

கார்க்கிபவா said...

//ஒருவர் பேசும்போது நடுவே பேசாமல் மௌனமாயிருங்கள். அவர் முழுதும் பேசி முடிக்கும்வரை உன்னிப்பாக கவனியுங்க/

ஹிஹிஹி..இதுல எனக்கு எதுவும் மெசெஜ் இல்லையே...

உங்களுக்கு நான் சொல்ற ஒரே அட்வைஸ்>. யாருக்கும் அட்வைஸ் பண்ணாதிங்க..அப்புறம் நாங்க எல்லாம் உருப்பட்டுடுவோம்

அண்ணாமலை..!! said...

நல்ல கருத்துகள் பரிசல்!

ஆனா,
ஏதோ.. ஒன்னு குறைச்சலா இருக்கு!
ஆங்..! அறிவுரை-யினூடே வரும் மெல்லிய நகைச்சுவையான நடை..!

சீரியஸா அட்வைஸ் சொன்னதுனால அப்படி இருக்கலாம்னு நினைக்கிறேன்!

ஆனா, நல்ல,உபயோகமான பதிவு பரிசல்!
:)

விக்னேஷ்வரி said...

ம், சும்மா போற போக்குல அறிவுரை குடுக்காம நீங்க ஃபாலோ பண்றதை சொல்லிருக்குறதால கண்டிப்பா கேக்கலாம் கிருஷ்ணா.

anamika said...

very goood advice... i must follow it

கொல்லான் said...

இதை நான் அட்வைசா எடுத்துக்கறேன்.

அமுதா கிருஷ்ணா said...

சரிங்க கிருஷ்ணா...

சுசி said...

ரொம்ப நன்றி பரிசல்..

//முடியாவிட்டால் என்ன என்று யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். அது வெறும் முன்னேற்பாட்டுக்காகத்தானே ஒழிய, அதையே நினைத்துக் கொண்டிராதீர்கள்.//

:))

pichaikaaran said...

"அவர் பேசும்போது அது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் தோன்றினாலும் இடைமறிக்காதீர்கள்"


சிலர், அவ்வப்போது குறுக்கிட்டு கேள்வி கேட்பதை , தங்களுக்கு கிடைக்கும் பாராட்டாக எடுத்து கொள்வதும் உண்டு... கடினமான , அல்லது பெரிய விஷ்யங்ககளை பேசுபவர்கள், நாம் சும்மா கேட்டு கொண்டு இருந்தால், நமக்கு ஆர்வம் இல்லை என நினைக்க வாய்ப்பு இருக்கிறது..

ஆனால், நீங்க சொல்ல வந்த விஷயம் புரிகிறது... குட்

Eswari said...

//ஃப்ரெண்டு அனுப்ச்ச லெட்டர்ல இருந்த க்ரீட்டிங்ல எல்லாமே நல்ல நல்ல விஷயமா இருந்தது... அதுல சில...//
ஃப்ரெண்டு இப்படி எல்லாமா க்ரீடிங்க்ஸ் அனுப்புறாங்க?

CrazyBugger said...

http://loshan-loshan.blogspot.com/2010/06/blog-post.html

Bossu unga review eppo?

Sabarinathan Arthanari said...

நல்ல ஆலோசணைகள்

பிரதீபா said...

//ஒருவர் பேசும்போது நடுவே பேசாமல் மௌனமாயிருங்கள். அவர் முழுதும் பேசி முடிக்கும்வரை உன்னிப்பாக கவனியுங்க/

ஹிஹிஹி..இதுல எனக்கு எதுவும் மெசெஜ் இல்லையே...//

எப்படி கார்க்கி இல்லைன்னு சொல்றீங்க.. தோழி பேசும்போது நடுவே பேசாம மௌனமாயிருங்க. முழுதும் பேசி முடிக்கும்வரை உன்னிப்பாக கவனியுங்க-எப்படியும் அவங்களை ரசிச்சுட்டே தானே இருப்பீங்க? நாஞ்சொல்றது சரிதானுங்களே? :-)

பிச்சைப்பாத்திரம் said...

உங்களை எப்படி கிழக்குபதிப்பகம் இன்னும் விட்டு வைத்திருக்கிறது? :)

சிநேகிதன் அக்பர் said...

நன்றி பரிசல்

priyamudanprabu said...

நல்ல அட்வைஸ்ங்க!!!!!!!!!!

priyamudanprabu said...

http://priyamudan-prabu.blogspot.com/2010/06/complete-guide-for-bachelors.html

இதை கொஞம் பாருங்க

தமிழ் உதயன் said...

சூப்பருங்கோவ்

கயல் said...

நல்லாயிருக்குங்க! கேட்டுக்கறோம்!

கபிலன் said...

உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி
அறிவுரைகள் சொன்னதற்கு மிகவும் நன்றி!

எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா.....?

-கபிலன்.

Thamira said...

இது மாதிரி அலுவலகத்தில் எப்பிடி நடந்துக்குவது? போன்ற சுய முன்னேற்ற பதிவுகளைப் படிச்சாலே கடுப்பாவுது. அப்படி இல்லாமல் ஒழுங்காக கேட்டுக்கொள்ள ஒரு அறிவுரை சொல்லவும். :-(

Senthilmohan said...

சொல்லிட்டீங்கல்ல. Follow பண்ணிட்டு தான் மறுவேலையே.


அட கிண்டலுக்கு இல்லீங்க. நெசமாத்தான் சொல்றேன்.

Ranjithkumar said...

நானும் உங்க பரிசலில் ஏறிட்டேன்...