Friday, June 18, 2010

அவங்க கேட்பாங்களாம். இவர் சொல்வாராம்.

 

சுஜாதா ஒரு தடவ எழுதி இருந்தாரு, கேள்வி கேட்கிறதுல 4 வகை இருக்குன்னு.

”சமீப” கேள்விகள்,

சமீபத்தில் நீங்க பார்த்த படம்?
சமீபத்தில் நீங்க அடிவாங்கிய இடம்?

”ஒப்பிடுக” கேள்விகள்

ரஜினி –விஜய்,
ராஜா-ரகுமான் ஒப்பிடுக.

“பற்றி” கேள்விகள்

உலகத் தமிழ் மாநாடு பற்றி?
தோழி அப்டேட்ஸ் பற்றி?

“உண்டா” வகை.

மழையில் நனைந்தபடியே ஐஸ்க்ரீம் சாப்பிட்ட அனுபவம் உண்டா?
அனுஷ்கா போஸ்டரை பார்த்துக் கொண்டே மோதிய அனுபவம் உண்டா?

   டோண்டூ ராகவனும், லதானந்தும் அடித்து ஆடிக் கொண்டிருக்கும் களம்.நாமும் இறங்கணுமான்னு யோசித்தேன். இரண்டு நாட்களுக்குப் பதிவு எழுத மேட்டர் கிடைக்கும் போது என்ன கவலை? இன்றும், திங்கள் வெளியாகவிருக்கும் பதில்களையும்தான் சொல்கிறேன்.

உடனே பேனா எடுத்து, கேள்வியை எழுத தேவையில்லை. மெயில் திறந்து டைப்பினால் போதும். நிபந்தனைகள்ன்னு பெருசா எதுவும் இல்ல. பிரச்சினை எதுவும் வராம(எனக்கு) , பதில்கள் சுவாரஸ்யமா இருக்கும்படியான(அது உன் கைல இருக்குடான்னு சொல்றிங்களா.. சரி) கேள்விகள்

நல்ல கேள்வி கேட்பவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு.அதுக்குன்னு பரிசல் நீங்க நல்லவனா, இல்ல ரொம்ப நல்லவனா டைப் கேள்விகள் வேண்டாமே.

பரிசு என்னன்னா. என் பதில்கள். கூடவே சர்ப்ரைசாக வேறு எதுவும் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.

ரெடி ஜூட். kbkk007@gmail.com

23 comments:

நட்புடன் ஜமால் said...

'வாதி/என்னா' வகை

ஆணிய-வாதி-ன்னா என்னா
பெண்ணிய-வாதி-ன்னா என்னா

நோ :) சீரியஸ் கேள்வி

HVL said...

இரண்டாவதா கமெண்ட் போட்டா பரிசு உண்டா? (‘உண்டா’ வகைக் கேள்வி)

priyamudanprabu said...

இதுக்கு முன்னாடி கடினமா கேள்விக்கு பதில் சொன்ன அனுபவம் உண்டா ?

ராம்ஜி_யாஹூ said...

ஒப்பிடுக - கேள்விக்கு உதாரணம் தவறு:

நீச்சல் உடையில் சிறப்பாக இருப்பவர் த்ரிஷாவ , தமன்னா வா

அனுஷ்காவின் கண்கள் அழகா அல்லது பிரியா மணியின் கண்கள் அழகா.


குருவியார் பாணியில் நன் என் முதல் கேள்வியை தொடுக்கிறேன்:

என் ஆசை நாயகி தமன்ன நடிக்க இருக்கும் அடுத்த தமிழ் படங்கள் எவை?

வால்பையன் said...

என் கேள்வி


நீங்கள் முட்டாள் என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா!?

DR said...

Windows live writer use panna aarambichchiteenga pola...
Oru Temp post vilundhirukku...
( idhu endha category la varra question theriyalai...)

Eswari said...

நீங்க நல்லவனா, கெட்டவனா?

சுசி said...

//நிபந்தனைகள்ன்னு பெருசா எதுவும் இல்ல.//

ஐ.. தேங்க்சு..

//பிரச்சினை எதுவும் வராம(எனக்கு) ,//

அப்புறம் எப்டி கேள்வி கேக்கிறதாம்??

ஷர்புதீன் said...

i like this Q%A., can i ask serious type of q?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஏன் இந்த வேலையத்த வேலை? (இது பின்னூட்டமில்லை, கேள்வி)

pichaikaaran said...

நல்லவர்கள் என நினைப்பவர்களின் , "நர"கல் மனம் தெரிய வருவது, - மோசமவர்கள் என நினைப்பவர்களின் நல்ல மனம் தெரிய வருவது - எதில் அதிர்ச்சி அதிகம் ?

ஒருவரின் நண்பரை வைத்து , அவரை மதிப்பிட முடியுமா?

ப்ரியமுடன் வசந்த் said...

ஏதாவது வெளியிடங்களுக்கு போகும்பொழுது நாம் அணிந்திருந்த சட்டை போலவே அச்சு அசலாக சட்டை அணிந்திருக்கும் முன் பின் அறிந்திருக்காத ஒருவர் மீது அந்த நேரத்தில் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு அவரையே வெறித்து பார்க்கிறோமே ஏன்?

Senthilmohan said...

யாருமே பேட்டி எடுக்க மாட்டீங்கறாங்கன்றதால இப்படியா?
ரைட்டு. எதுக்கும் பாத்து சூதானமா இருந்துக்கோங்க.

Senthilmohan said...

//*கூடவே சர்ப்ரைசாக வேறு எதுவும் கிடைக்கலாம்.**/
இது என்ன முன்னெச்சரிக்கையா?

Senthilmohan said...
This comment has been removed by the author.
Thamira said...

ஏன் இப்படி இறங்கிட்டீங்க.?

ப்ரியமுடன் வசந்த் said...

பரிசல்காரனுடன் ஒரு நேர்காணல்
பதிவுலக பிரபல பதிவரும் எழுத்தாளருமான பரிசல்காரன் என்ற கே.பி.கிருஷ்ணகுமாரிடம் ப்ரியமுடன் தொலைக்காட்சிக்காக ஒரு ஈ மெயில் நேர் காணல்

தல இங்கதான் பேட்டி கொடுத்தாச்சே பின்ன என்ன இப்டி ஒரு போஸ்ட் பாருங்க எல்லாரும் எப்டி கேள்வி கேட்குறாங்கன்னு ஒரு புயலோட ஆரம்பமே இங்கனதான்னு யாருக்காவது தெரியுமா?



1.பதிவுலகத்திற்க்கு வராமல் இருந்திருந்தால் ஓய்வு நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்திருப்பீர்கள்?

பரிசல் :ஃபோட்டோகிராஃபியில் இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்திருப்பேன். எழுத்து என்பதை இணையத்தில் இல்லாமல் வேறு வடிவங்களில் எழுதிக் கொண்டிருந்திருக்கக் கூடும். ஆனால் எந்த இதழ்களுக்கும் அனுப்பியிருக்க மாட்டேன்.

2.நீங்கள் பதிவுலகத்தில் நுழைந்த பொழுது பதிவுலகம் இருந்த நிலைக்கும் இன்றைய பதிவுலக நிலைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

பரிசல் :இதற்கு பதில் சொல்லும் அளவுக்கு தற்போதைய வலையுலகை கூர்ந்து கவனிக்க வில்லை என்பதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்கிறேன்.

3.தங்களின் பதிவுக்கு முக்கியமான ஒருத்தர் இன்றுவரை வந்து பின்னூட்டம் இடவில்லையென்று வருந்தியது உண்டா?

பரிசல் :நிச்சயமாக இல்லை. தொடர்ந்து பின்னூட்டம் போடும் சில நண்பர்கள் பின்னூட்டங்கள் சடாரென நிற்கும் போது அப்படி நினைப்பதுண்டு. அதுவும் கடந்து போகும்.


4.ஒவ்வொரு பதிவுக்குமான கரு தங்களுக்கு எப்பொழுது தோன்றும்?

பரிசல் :அதிகாலை நான்கிலிருந்து நாலேமுக்காலுக்குள் என்று சொல்ல ஆசைதான்! ஆனால் அப்படியெந்த நேரமுமே இல்லை. பிராயணங்களின் போதும், மனதுக்கொத்த நண்பர்களுடன் இருக்கும்போதும் சற்று அதிகமான உற்சாகமாய் எழுத்து மனதிற்குள் ஓடும். ஸ்ரீரங்கம் பற்றிய கட்டுரையை திருச்சியிலிருந்து திரும்பி வந்தபிறகு, கேரளா செல்லும்போது இரயிலில் அப்பர்பெர்த்தில் அமர்ந்தபடியே எழுதினேன்.

5.ஒரு சென்சிட்டிவான பதிவெழுதி பதிவிலிட்டதும் அதற்காக வரும் மற்றவர்களின் எதிர் கருத்துக்காக காம்ப்ரமைஸ் செய்து கொள்வீர்களா? இல்லை கோபம் வருமா? இல்லை கண்டு கொள்ளமாட்டீர்களா?
பரிசல் :மூன்றுமே நிகழ்ந்திருக்கிறது வசந்த். அதிகப்படியாய் காம்ப்ரமைஸ் செய்து கொள்வேன். அதற்கடுத்ததாய் கண்டு கொள்ளாத தருணங்கள். கோவம் வந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டேன். ஒரு சில நண்பர்களின் அழைப்பில் அது அழிந்துவிடும்.

6.பதிவெழுத பிடிக்குமா? பதிவுகளை வாசிக்க பிடிக்குமா?

பரிசல் :நேர்மையாகச் சொல்வதானால் எழுதத்தான் பிடிக்கும். படிப்பதென்றால் புத்தக வடிவில்தான். பெங்களூரில் ஆடிட்டராகப் பணிபுரியும் நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது ‘எல்லாரும் சிஸ்டத்துலயே டிக் அடிச்சு அக்கவுண்ட்ஸ் சரி பார்க்கறாங்க. எனக்கு ப்ரிண்ட் அவுட் எடுத்து டேபிள்ல வெச்சு பேனால டிக் அடிச்சுப் பார்க்கறதுதான் பிடிக்குது’ என்றார். நான் அவர் ஜாதி. யாராவது இணையத்தில் வந்த ஒரு குறிப்பிட்ட பதிவை/படைப்பைச் சுட்டி கொடுத்துப் படிக்கச் சொன்னால் மேக்ஸிமம் ப்ரிண்ட் அவுட் எடுத்து வீட்டில் அமைதியாகப் படித்து ரசிப்பேன். யாராவது அவர்கள் படைப்பைப் படித்துக் கருத்துக் கேட்டாலும் அதே.

7.தங்கள் சம கால அளவில் பதிவுலகில் நுழைந்த பல பதிவர்கள் காணாமல் போய்விட்டனரே ஏன்?

மேலும்..

http://priyamudanvasanth.blogspot.com/2010/03/blog-post_20.html

HVL said...

கேள்வி நம்பர் 2:
பரிசல், சுஜாதா ஒப்பிடுக.

pichaikaaran said...

நண்பர்களுக்கிடையே பிரச்சினை வரும்போது, பண உதவி செய்தேன் குறும்படம் சிக்கலில் மாட்டியபோது காப்பாற்றினேன் என்றெல்லாம் சொல்லிக்காட்டும் டிரண்ட் உருவாகி வருவது குறித்து உங்கள் கருத்து ?

ஜெயந்தி said...

//வால்பையன் said...
என் கேள்வி


நீங்கள் முட்டாள் என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா!?//
இதே ரக கேள்வி ஆம் இல்லை என்ற பதில்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.
இப்போது உங்கள் மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டீர்களா?

கொல்லான் said...

கேள்வி பதில கண்டு பிடிச்சது யாரு?

மனைவி ராஜியத்த மதுரைன்னும், கணவன் ராஜ்ஜியத்த சிதம்பரம்ன்னும் சொல்றவங்க, திருச்செங்கோடுன்னு மட்டும் சொல்லறது இல்லையே , அது ஏன்?

Kumky said...

கே.கே.

ஏன்..?

Bala said...

இந்த பின் நவீனத்துவம், பின் நவீனத்துவம்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன?