நேற்று முன்தினம் நண்பர்கள் முரளிகுமார் பத்மநாபன், பேரரசன் செந்தில்நாதன் அடங்கிய 'குழு' செம்மொழி மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது ரைட்டர் பா.ரா-வைச் சந்தித்திருக்கிறார்கள். சும்மாயிராமல், 'நீங்கதான் பேயோன்-ன்னு பரிசல் சொல்றாரே' என்றிருக்கிறார்கள். அவர் உடனே எனக்கு அலைபேசி 'யோவ்.. உன்னை திட்டத்தான் கூப்ட்டேன்.. நான் உனக்கு என்னய்யா பாவம் பண்ணினேன்' என்று திட்ட 'சார்.. திட்டாதீங்க.. நாளைக்கு உங்கள வந்து பாக்கறேன்' என்றேன் சிரித்தபடி. நேற்று (வெள்ளிக்கிழமை) போக முடிவு செய்தேன். சங்கத் தலைவர் வெயிலான் உட்பட எல்லாருமே பிஸியாக இருந்தனர். வெயிலானிடம் பேசியபோது 'சிவகுமார்-ன்னு நம்ம நண்பர்.. அவரும் பிளாக்கர்தான். புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்காரு. அவருக்கு பா.ரா-வைப் பாக்கனும்னு ரொம்ப ஆவல். ரெண்டு பேருமா போங்களேன்.." என்றார். சிவகுமாரை அழைத்து என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு அவரை ஒரு இடத்துக்கு வரச் சொல்லிவிட்டு, அவர் வர இருவருமாய் அவர் பைக்கிலேயே கிளம்பினோம். 'ஒரு எழுத்தாளரை சந்திக்கப் போறது இதுதான் முதல் தடவைங்க' என்று அவர் படபடத்தபடி சொன்னபோது 'அதான் பத்து நிமிஷம் முன்னாடியே சந்திச்சுட்டீங்கள்ல. ரிலாக்ஸா இருங்க' என்றது அவருக்கு புரியவில்லை. என்ன கொடுமைடா.. என்று என் நிலைமையை நானே நினைத்தபடி விரைந்தேன்.
*************************
கோவை குதூகலத்துடன் இருந்தது. எங்கெங்கு காணிடும் முகங்களடா' என்பதாய் மக்கள் அலை. நடக்கும்போது தலையை வலது இடதுபுறங்கள் திருப்பக் கூட முடியாத அளவு ஜன நெருக்கடி. அலைபேசி அலறியபோது பாக்கெட்டில் கை விட்டு அதை எடுக்க முடியவில்லை.
இருவருமாய் புத்தக கண்காட்சி நடக்கும் CIT வளாகத்தை அடைந்தபோது மணி எட்டரை. பா.ரா-சாரை அழைத்தபோது 'நான் இணைய அரங்கத்துல இருக்கேன் கிருஷ்ணா.. அங்கிருந்து மூணு கிலோமீட்டர் நீங்க நடந்து வரணும்' என்றார். அதற்குள் 'வருங்கால பிரதமர்' சஞ்சய் காந்தி எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார். 'இந்தக் கூடத்துல இவ்ளோ லேட்டா என் மாம்ஸ் வந்தீங்க?' என்று கேட்டார். நான் சிவகுமாரை அறிமுகப்படுத்தி "ரைட்டர் பா.ரா-வைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டார்.. அதான் லேட் ஆனாலும் பரவால்லை-ன்னு கூட்டிட்டு வந்தேன் சஞ்சய்" என்றேன். அவருடன் பேசிக் கொண்டே நடந்தபோது யுவகிருஷ்ணாவும் எங்களோடு வந்து கலந்து கொண்டார். 'மூணு நாலா கிட்டத்தட்ட ஆறு லட்சம் மூஞ்சிகளைப் பார்த்துட்டேன். மைண்ட் பூரா ஒரே முகங்களா இருக்கு கிருஷ்ணா' என்று அவர் சொன்னது குறிப்பிடப்படவேண்டியது. நடுநடுவே நம்ம சிவகுமார் 'ஏங்க.. ரைட்டர் பா.ரா-வை எப்ப பாப்போம்?' என்று ஆவலாய்க் கேட்டுக் கொண்டே இருந்தார். 'அவரு வெளில வந்துட்டாரு. ஆனா எங்கயோ கூட்டத்துல மாட்டிகிட்டாரு' என்றார் யுவா. சிவகுமாரோ ஆர்வத்தை அடக்க மாட்டாமல் இருந்தார். நான் அவரை ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தேன்.
புத்தக கண்காட்சியில் மனுஷ்யபுத்திரனைக் கண்டோம். அவரோடு ஆசையாய்ப பேசினார் சிவகுமார். இரண்டொரு புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். மணி ஒன்பதை நெருங்கியது. கண்காட்சி அடைக்கப்பட்டது. நாங்கள் பேசிக் கொண்டே வெளியில் வந்தோம்.
"லேட்டாகுதுங்க.. பா.ரா-வைப் பாக்க முடியாதா" - மறுபடி கேட்டார் சிவகுமார். 'எனக்கொண்ணும் பிரச்சினை இல்லைங்க.. 3, 4 கிலோ மீட்டர்னாலும் பரவல்ல.. கொடீசியா-வுக்குள்ள போலாம்க' என்றார்.
"அதுக்கில்லை சிவா. அவரு வெளில வந்துட்டு இருக்காரு. நாம உள்ள போய் யூஸ் இல்ல. அவரு எங்கயோ கூட்டத்துல மாட்டிக்கிட்டிருக்காரு. வரட்டும்" என்று நாங்கள் அவரை சமாதானப்படுத்தினோம்.
நேரம் ஆக ஆக இனி அவரைச் சந்திப்பது கடினம் என்று புரிந்தது. காரணம் எல்லா மக்களும் வீடு போகும் அவசரத்தில் கலையத் துவங்கியிருந்தனர். ஜனத்திரள். நிஜமாகவே கடல் போன்ற கூட்டம் என்பதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. புறப்படுவது என்று முடிவானதும் சிவகுமார் மனது ஒடிந்து போனார். "ரைட்டர் ப.ரா-வைப் பார்க்க முடியாதா அப்ப?" என்று அவர் கேட்டதைப் பார்க்க பாவமாக இருந்தது. 'கவலைப் படாதீங்க சிவா. ரெண்டு மூணு மாசத்துல திருப்பூர் கூப்ட்டுவோம். ஏற்பாடு பண்ணலாம். அப்படி இல்லேன்னா நான் உங்கள சென்னை கூட்டிட்டு போய் அவரை சந்திக்க வைக்கறேன்' என்றேன். சமாதானமாகாமல் அரைகுறை மனதோடு கிளம்பினார்.
வழியில் ஒரு ஹோட்டலில் உணவருந்த நிறுத்தினோம். உணவருந்திவிட்டு கிளம்பும்போது மறுபடி கேட்டேன்.
'அது ஏங்க ரைட்டர் பா.ரா.மேல அவ்ளோ ஆர்வம் உங்களுக்கு?' "எனக்கு எழுத்தாளர்கள்-னாலே பிடிக்கும்க. அதுவும் பா.ரா மாதிரி ஒருத்தர் எனக்கு வந்து பின்னூட்டம் எல்லாம் போட்டு ஊக்கப்படுத்தும்போது அவரை சந்திக்கணும்ன்னு தோணாதா?'
'என்னது.. பா.ரா. பின்னூட்டம் போட்டாரா? எந்த பா.ரா-வைச் சொல்றீங்க?'
"என்னங்க எந்த பா.ரா-ன்னு கேட்கறீங்க? பா.ரா. தெரியாதா உங்களுக்கு? கருவேல நிழல்-ன்னு புக் எல்லாம் போட்டிருக்காருங்க. பா.ராஜாராம்"
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........
*
30 comments:
பார்ரா!........
பார்ரா!........
அப்ப இது க. சீ. சிவக்குமார் இல்லையா?!
செம... கலக்கல்.. சூப்பர்.. அருமை.. ஆஹா..
(வேற எதாவது டெம்ள்டேட் பின்னூட்டங்கள் இருந்தாலும் சொல்லவும், சனிக்கிழமை ஆதலால் மற்றவர்கள் பிஸியாக இருப்பார்கள், நானே இன்றைய முதுகு சொறிதலை முடிச்சிடுறேன்.)
வரிக்கு வரி பா.ரா,,, பா.ரா ங்கும்போதே நெனச்சேன். இந்த மாதிரி எதாவது கோக்கு மாக்கா பண்ணுவீங்கன்னு
சு.சிவக்குமாரா கிருஷ்ணா? அவர் அழை எண் இருந்தால் மின் முகவரிக்கு அனுப்பி தர்றீங்களா?
சிவா, ஊர் வரும்போது பார்த்துட்டா போகுது.
நன்றி கிருஷ்ணா!
பாசக்கார மக்கா! :)
:))
தப்பிச்சிட்டீங்க..
பா.ரா. என்பதால்.
அந்தக் காலத்தில நான் உங்களைப் பார்க்க சென்னையில அலைஞ்ச மாதிரியே இருக்கு சிவக்குமார் ஃபீலிங்ஸ்
:)
::))
உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி!
//
அவ்வளவுதானா பொற்கிழி ஒண்ணும் கிடையாதா..:)
படிக்கும் பொழுதே ஏதோ உள்குத்து இருக்கும்னு நெனச்சேன்..
//சு.சிவக்குமாரா கிருஷ்ணா? அவர் அழை எண் இருந்தால் மின் முகவரிக்கு அனுப்பி தர்றீங்களா?
சிவா, ஊர் வரும்போது பார்த்துட்டா போகுது. //
மகாப்பா, நான் முரளி ஊர் வரும்போது அப்படியே பார்த்துட்டா போச்சு.... :-)
பரிசல்,
தலைவரே! அதெப்படி இருவரும் போய் சேரும்வரை இதைபற்றீ பேசிக்கொள்ளவே இல்லையா?
:-)
ஹா ஹா
நானும் கருவேலநிழல் பா.ரா வைத்தான் தலைப்புல சொல்லியிருக்கிங்கன்னு உள்ளே வந்தேன். :)
@ Rangan Kandaswamy
தயவு செய்து உங்கள் கருத்தை அவருக்கு நேரடியாக தெரியப் படுத்துங்கள். யாரைப் பற்றியுமான மரியாதைக் குறைவான பின்னூட்டங்களுக்கும், அதற்கான விளம்பரத்துக்கும் நான் இடம் தர முடியாது. மன்னிக்கவும். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். இல்லையேல் எனக்கு தனி மடல் இடுங்கள். பேசுவோம். நன்றி!
பரிசல்.....நானும் அந்தக் குழுவில் இருந்தேன். திருப்பூர்தொழில் VS சினிமாதொழில் என்ற புத்தகம் எழுதுவது பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். மீண்டும் அவரைச் சந்திக்க முடியாதது வருத்தமே. நிறைய பேசியிருக்கலாம். நாங்கள் தான் மாற்றி மாற்றி பேயோன் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்.
I miss him.
கடலையூர் செல்வம்
:)))
//நானும் கருவேலநிழல் பா.ரா வைத்தான் தலைப்புல சொல்லியிருக்கிங்கன்னு உள்ளே வந்தேன். :)//
ஹி..ஹி.. நானும் அதாங்க!
-----------------------------
அப்புறமா வர்றேன் ஆனா பதிவு உண்மையிலேயே விரர்ர்ர்ருன்னு தான் இருந்தது. கிர்ர்ர்ருன்னு வரல.
paa rajaram or paa ragavan, who
பா.ரா.வை 'பாரா'மல் வந்துவிட்டீர்களே,
நீங்களும் சிவக்குமாரும். பாவம்
சிவக்குமார்! (நல்ல லொள்ளு இடுகை!)
இது நிஜமாவே பெருமை படக் கூடியது தானுங்களே ?(பா ரா விற்கு) முதல் எழுத்தாளரை அவர் கண்டுகொள்ளாமல் விட்டுடார்ன்னு காண்டுங்களா. :)).
நல்ல அனுபவம் தான் :)).
ஹ் ஹா...பேயோன் 1000 கட்டுரையை படிக்கும்போது
எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது.
ராஜாராம் கவிதைகளை படிக்கும்போது
அது அதிகமானது. சிவக்குமார் மூலம் இப்போது நானும் தெளிவுக்கு வந்திருக்கிறேன்.
நன்றி பரிசல். நாங்கள்-ல்லாம் புதுசுதானே.
என்ன ஆச்சு உங்கள் கேள்வியும் பதிலும்?
அன்புடன் கபிலன்.
//'அதான் பத்து நிமிஷம் முன்னாடியே சந்திச்சுட்டீங்கள்ல. ரிலாக்ஸா இருங்க' என்றது அவருக்கு புரியவில்லை.//
எனக்கு நல்லாவே புரிஞ்சுது.
பா.ராவை பார்க்கப் போனது பற்றி பாரா பாராவா எழுதும் போதே நெனச்சேன்.
ஹா ஹா
நல்ல கூத்து நடந்திருக்கு!
:)
பரிசல்,
நல்ல வேளையாக நீங்கள் பா.ரா ( பா.ராகவன்) வை சந்திக்கவில்லை.
நீங்கள் சந்தித்து... சிவகுமார் " நீங்க பா.ராஜாராம் தானே" என்று கேட்டிருந்தால் அவ்வளவு தான்.
பா.ரா உங்களை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பார்.
நல்ல பதிவு. நன்றி கார்க்கி.
:)
அது சரி!! :)
Post a Comment