ஏன் இத்தனை நாள் இடைவெளி என்பதை, எப்படியெப்படியெல்லாமோ கேட்ட நண்பர்களுக்கு, தனியஞ்சலில் பதிலனுப்பியாயிற்று. நான் எழுதாமல் இருந்த இந்தக் காலகட்டத்தில் வலையுலகில் என்னென்ன நடந்தது என்று க்ளிக்கிப் பார்க்காமல் நேரடியாக எழுத உட்கார்ந்து விட்டேன்.
எதுவும் நிகழாமலும், ஏதாவது நிகழ்ந்து கொண்டும் அதனதன் போக்கில் அதது...
********************************
வாரிசுகள் வளர்ந்து விட்டார்கள். அவர்களின் கமெண்டுகளை ரசிப்பது, ரசனையான ஒன்றாக இருக்கிறது.
குடும்பத்தோடு சாப்பிடப் போனபோது, மீராவிடம் என்ன சாப்பிடுகிறாயெனக் கேட்டபோது ‘நான் மீன் சாப்பிடுகிறேன். அதுதானே அம்மாவிற்கு நல்லது’ என்றாள். ‘மீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அம்மாவுக்கு நல்லதா?’ என்று கேட்டேன்... மீரா சொன்னாள்: ‘அம்மாதாம்ப்பா என் கண்ணு...”
அதேபோல,
'Which is the Longest Wall' என்று மீரா படித்துக் கொண்டிருக்கும் போது, மேகா சொன்னாள் ‘ஒனக்கிருக்கறதுதான் லாங்கஸ்ட் வாலு...’
*************
சமீபத்தில், கேட்டுக் கொண்டேயிருக்கும் பாடல் ‘பையா’வில் ‘என் காதல் சொல்ல நேரமில்லை’. டிபிகல் யுவன் சாங். அவரே பாடியிருக்கிறார். இதுபோன்ற பாடலில், அவர் உயிர்ப்போடு அடிவயிற்றிலிருந்து பாடும்போது நமக்கு கிடைக்கும் உணர்வு, ப்பா...!
***************
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு போயிருந்தபோது, நண்பனொருவன் கேட்டான்.. ‘ரயிலில் எக்ஸ் சர்வீஸ் மேன், ஆர்மிக்காரர்கள் ஆகியோர்கள் வீட்டு ஜன்னல்களைத் தூக்கிப் போக எதற்காக சலுகை அறிவிக்கிறார்கள்?’ என்றொரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டான். ஒன்றுமே புரியாமல் மரியாதையாக முழித்துக் கொண்டிருந்தபோது (திரு திரு ன்னு) அருகிலிருந்த போர்டைக் காட்டினான்..
"Concessions Details" என்ற தலைப்பில் பயணக் கட்டணத்தில் யார் யாருக்கு என்னென்ன சலுகைகள் என்றறிவிக்கப்பட்டிருந்த போர்டில் 'Windows of Ex-Serviceman' 'Windows of Policeman' என்று Widowவுக்கு பதில் எல்லா இடங்களிலும் windows இருந்தது.
கொடுமைடா சாமி!
*****************************
திருப்பூர் வலைப்பதிவர் சங்கத் தலைவர் வெயிலான், பொருளாளர் சாமிநாதனுடன் லவ்டேல் மேடியின் திருமணத்திற்கு சென்று வந்தேன். காரில் சென்று கொண்டிருக்கும்போது சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பித்து நிறையபேரின் விண்ணப்பங்கள் நிலுவையிலிருப்பதாகச் சொன்னார். சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக, ஏஞ்சல் ஹோட்டலில் ஞாயிறன்று கூட்டம் நடத்தவிருப்பதாகவும் சொன்னார்.
அதுபோக, எஸ்.ராவை சங்கத்தின் சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பதாகவும் ஜனவரியில் அவர் கலந்து கொள்ளச் சம்மதித்திருப்பதாகவும் சொன்னார்.
வெயிலான் போல செயல்திறமிக்க தலைவரைப் பெற, திருப்பூர் வலைப்பதிவர் பேரவை என்ன தவம் செய்ததோ....
.........................
35 comments:
மீ த பர்ட்ஸ்ட்டு
அண்டு செக்கண்டு
3rd
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
ஏன் இந்தக் கொல வெறி செயலாளரே :)
5th....
விண்ணப்பம் எங்கே கிடைக்கும்? சாப்பாடு உண்டுல்ல?
வாரிசுகள் அசத்துகிறார்கள்:)!
வாங்க ஜெனெரல் மேனேஜர்.... உடம்பெல்லாம் சௌரியமா?
9th-a
//வாரிசுகள் அசத்துகிறார்கள்:)!
//
துணை-முதல்வரைப் பாராட்டிய அக்காவைப் பாராட்டுகின்றேன்.
:)
//துணை-முதல்வரைப் பாராட்டிய அக்காவைப் பாராட்டுகின்றேன்.
:)//
ஆகா அப்படி வருகிறீர்களா அப்துல்லா:))?
அம்மாதாம்ப்பா என் கண்ணு...”
'Which is the Longest Wall' என்று மீரா படித்துக் கொண்டிருக்கும் போது, மேகா சொன்னாள் ‘ஒனக்கிருக்கறதுதான் லாங்கஸ்ட் வாலு...’//
:)) ஒண்ணும் சொல்ல முடியாது. இளவரசிகளாச்சே..
தல எஸ்.ராவை பார்க்கப்போகும்போது என்னை கூப்பிடுங்கள், வாரிசுகளுக்கு வாழ்த்துகள். :-)
"இது அவியலா???"
தெரியலையேப்பா............
//உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி!
good idea to get comment...
வாலின் வால் வாலறியும்...
//விண்ணப்பம் எங்கே கிடைக்கும்? சாப்பாடு உண்டுல்ல?//
சாப்பாடு இல்லாம திருப்பூர்ல பதிவர் சந்திப்பா..?
மேலும் சங்கத்தை செம்மையாக்க ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன...
அடுத்த பதிவில் மெனுவை எதிர்பார்கிறேன்...
அதுதான் அவியல்...
☼ வெயிலான்
ஏன் இந்தக் கொல வெறி செயலாளரே :)
//
எஸ்ரா வருகிறாரா.? பரிசல் வாருகிறாரா?
என்ன நடக்குது இங்கே?
வெல்கம் பேக் சூப்பர்ஸ்டார்.!
Windowக்கும், Widowக்கும் வித்தியாசம் தெரியாத படிப்பாளிங்க நிறைய பேரு இன்னும் சென்ட்ரல் கவேர்மென்ட்ல இருக்குறது வெக்ககேடு தல .
//'Which is the Longest Wall' என்று மீரா படித்துக் கொண்டிருக்கும் போது, மேகா சொன்னாள் ‘ஒனக்கிருக்கறதுதான் லாங்கஸ்ட் வாலு...’//
செம டைமிங் :-)
//.. ‘ஒனக்கிருக்கறதுதான் லாங்கஸ்ட் வாலு...’ ..//
இந்த கமெண்ட் மீராவுக்கா இல்ல உங்களுக்கான்னு சொல்லவே இல்ல..
வருக வருக.. :-)
Welcome back...
அவியல்தான்..
அப்பாடி ஒரு வழியா வந்தாச்சா.. சரி.. போய்ட்டு ஒரு ரெண்டு மாசம் க்ழிச்சு வந்து இன்னொரு பதிவு போடுங்க..
ஆவ்வ்வ்வ்...
"இது அவியலா???" பின்ன புவியியலா?
பதிவையும், அப்துல்லா மற்றும் கேபிள் சங்கரின் பின்னூட்டத்தையும் மிகவும் ரசித்தேன்.
//‘ஒனக்கிருக்கறதுதான் லாங்கஸ்ட் வாலு...’
//
சீக்கிரம் 'வால்பொண்ணு' வலைப்பதிவை எதிர்பார்க்கிறேன்.
cute
/
எல்லா இடங்களிலும் windows இருந்தது.
/
windows XP யா இல்ல windows 7 ஆ??
:)))
\\எதுவும் நிகழாமலும், ஏதாவது நிகழ்ந்து கொண்டும் அதனதன் போக்கில் அதது...// அப்படித்தான் அதனதன் போக்குல நடந்து போச்சுங்கய்யா நான் பிளாக் எழுத வந்ததும். சீனியரான நீங்க அதைப் படிச்சுட்டு உங்க கருத்தைச் சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்; நன்றிக்கடனும் படுவேன்.
ரொம்ப நல்லது செயலாளரே.
ஜி.எம் ஆனதுக்கு பார்ட்டி ஏதும் இல்லையா?
ஜொள்ளவேயில்ல....?
//‘ஒனக்கிருக்கறதுதான் லாங்கஸ்ட் வாலு...’//
:)
போட்டிக்கு நிறைய பேர் இருப்பாங்க போலயே!
// /வாரிசுகள் அசத்துகிறார்கள்:)!
//
ராகுல்காந்தியை பாராட்டிய அக்காவைப் பாராட்டுகின்றேன்.
:)
@அப்துல்லா & சஞ்சய்,
தெரியாம சொல்லிப்புட்டேன் சாமிங்களா:))!
உங்க அவியலை விடவும் பின்னூட்ட அவியல் சூப்பரா இருக்கு.
Post a Comment