Wednesday, November 4, 2009

அவியல் 04.11.09




இந்தப் படத்தில் இருப்பவர்களெல்லாம் யார்?

1) ஆதவனுக்கு டிக்கெட் கிடைக்காமல் வெளியே காத்துக் கொண்டிருப்பவர்கள்

2) குருவி படம் பார்த்துவிட்டு, டிக்கெட் காசைத் திருப்பிக் கேட்டு வெளியே காத்துக் கொண்டிருந்தவர்கள்

3) நமீதாவைப் பார்க்க சென்னை சென்று, பார்க்க முடியாமல் ஏமாற்றத்தோடு நின்று கொண்டிருப்பவர்கள்

விடை கடைசி பாராவில்.

**********************************

ண்பன் பணிபுரியும் நிறுவனத்தில் நடந்தது இது. அன்றைய தினம் பாஸ் நேரத்திலேயே அலுவலகம் வந்துவிட்டார். பார்த்தால், அவரது மேனேஜர் அதுவரை வரவேயில்லை. அரைமணி நேரம் காத்திருந்து மேனேஜரின் அலைபேசிக்கு அழைத்திருக்கிறார். நாட் ரீச்சபிள். சரி என்று தனது அலைபேசியில் இருந்த மேனேஜரது வேறொரு எண்ணுக்கு அழைத்திருக்கிறார் பாஸ். மேனேஜர்தான் ஃபோனை எடுத்திருக்கிறார்.

“எங்கய்யா இருக்க? இன்னும் ஆஃபீஸுக்கு வர்லியா?”

“சார் நான் வந்துட்டே இருந்தேன்.. திடீர்னு அந்த ப்ரிண்டிங்ல்ர்ந்து அப்ரூவலுக்கு வரச்சொன்னாங்க.. இப்ப ப்ரிண்டிங்லதான் இருக்கேன். ஓகே பண்ணீட்டு டென் மினிட்ஸ்ல அங்க வந்துடுவேன் சார்..”

“ஓகே ஒகே’ என்று பாஸும் ஃபோனை வைத்துவிட்டாராம்.

இதிலென்ன இருக்கு?

பாஸ் அழைத்த வேறொரு எண் மேனேஜரின் வீட்டு லேண்ட்லைன்! ‘செல்லுல பேசற ஞாபகத்துலயே சொல்லீட்டேன்... அவரும் சரி சரின்னு ஃபோனை வெச்சுட்டாருப்பா’ என்றாராம் மேனேஜர்!

*********************

ன் தோழி ஒருத்தி தனக்குப் பிறந்த மகளுக்காக ஒரு பெயர் வேண்டுமென்று ரொம்ப நாளாக செலக்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒரு சீரியலில் வந்த (செல்வி?) கேரக்டர் ஒன்றின் மஹிமா என்ற பெயர் குடும்பத்தில் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது. அதையே தேர்வு செய்திருக்கிறார்கள். பெயர் வைப்பதற்கு சில நாட்களுக்கு முன், அந்த சீரியலில் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரம் இறந்துவிட்டதாகக் காட்டியிருக்கிறார்கள். உடனேயே எல்லாரும் கெட்ட சகுனமாக நினைத்து பேரை மாற்றிவிட்டார்களாம்! சீரியல்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள்.

****************************************

நண்பர் ஒருவர் அடிக்கடி அலைபேசியில் அழைப்பார். எப்போதாவது நானும் எடுப்பேன். அரைமணிநேரம் பேசுவோம். கடைசியில் சொல்லுவார்.. “சரி..சரி.. பிஸியா இருக்கீங்க போல... நீங்க எப்ப ஃப்ரீயா இருக்கீங்களோ அப்பச் சொல்லுங்க.. கொஞ்சம் பேசணும்”

‘கொஞ்சம்’ பேசணுமா? அப்ப அரை மணிநேரம்கறது ‘கொஞ்சம்’கூட அல்லவா உங்களுக்கு?’ என்று நினைத்துக் கொள்வேன்!

*****************************
சில நாட்களுக்கு முன் நண்பர் செல்வேந்திரன் ஒரு எஸ்ஸெம்மெஸ் அனுப்பியிருந்தார்.

I'm happy to inform that my bike is crossing 10000 kilometers today. I take this opportunity to convey my sincere thanks to Honda company, Ministry of Transport, Road contractors, Indian Oil Corporation, Hindustan Oil Corporation and Mechanic Murugesan.

எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்கப்பா...


***************************

கீழே சில கவிதைகள். எழுதியது நானல்ல.. என் வலையில் போட்டுக் கொள்ள பிரபலம் ஒருவர் எழுதியது. யாரென்று கண்டுபிடியுங்களேன்...


ஏறுவரிசை - இறங்குவரிசை

அசோகர்
போர்
உயிர்பலி
போதனை
புத்தர்
ஞானம்

புத்தம் சரணம் கச்சாமி

யாழ்பாணம்
சோதனை
ரச பாணம்
மக்கள்
ராஜபக்‌ஷே

புத்தம் ரத்தம் கச்சாமி..!

----------------------

கருணை

எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!

--------------------------

போதனை

நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!

--------------------------

அதிகப்பிரசங்கம்

இன்று மெளனமாய் இருப்பது
எப்படி என வகுப்பு எடுத்தேன்.
அதில் நான் பேசியது
....................................!

----------------------------

முரண் முக்தி

இறவாநிலை பற்றி
பிரசங்கம் செய்த யோகி
இதற்கு முன் ஒருமுறை கூட
இறந்ததில்லை.

-----------------------
அவதார புருஷன்

கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!

------------------------

வேதாந்த விவாதம் 2009

அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.

மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.

நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரதில் சூப் வைத்தேன்.

கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.

----------------------------

ஐங்கரன்


பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.

அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.

என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?

----------------------------

மேலே படங்களில் நீங்கள் கண்டதெல்லாம் நான் சொன்ன ஆப்ஷன்களில் ஏதுமில்லை. அவர்களால் ஆதவனையோ, குருவியையோ, நமீதாவையோ பார்க்க முடியாது. அவர்கள் பார்வையற்ற மாணவ சகோதரர்கள். Visually Challenged Students. இவர்கள் தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. சென்ற நவம்பர் ஒன்றாம்தேதி வந்திருந்த 180க்கும் மேற்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டவர்கள் படித்துக் காட்ட தோழமை இல்லாததால் தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவலாமே...

மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைப் படியுங்கள்.

(இந்தத் தகவலை என்னோடு பகிர்ந்து கொண்ட நண்பர் குமார் சுப்ரமணியனுக்கு நன்றி!)


.

29 comments:

Vidhoosh said...

இனி ஒவ்வொரு ஞாயிறும் அங்கு ஆஜராகிடுவேன். கண்டிப்பா படிச்சு காட்டறேங்க. தகவலுக்கு நன்றி பரிசல்.
--வித்யா

Vidhoosh said...

கவிதைகளை சுவாமி ஓம்கார் எழுதினாரா? :))
-வித்யா

அப்பாவி முரு said...

படத்தைப் பற்றிய செய்தி வருத்தம் தருகிறது.

என் நண்பனின் தம்பியுடன் போய் அவருக்காக English II செமஸ்டர் எழுதிக்கொடுத்தது ஞாபகத்திற்கு வருகிறது.

இளவட்டம் said...

///உடனேயே எல்லாரும் கெட்ட சகுனமாக நினைத்து பேரை மாற்றிவிட்டார்களாம்! சீரியல்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள்.///

இந்த சீரியல் ரொம்ப நல்லா இருக்கு சார்.

அப்பறம் லாஸ்ட் மேட்டர்:கண்டிப்பா செய்யலாம் சார்.
மற்றபடி அவியல் ஓகே.

தராசு said...

தல,

சென்னையிலிருந்தால் பத்மா ஷேஷாத்திரியில் கண்டிப்பாக ஆஜராகிறேன். தகவலுக்கு டேங்சு.

அப்புறம் அந்த மேனேஜர் மேட்டர்.
அது எப்படிங்க உங்களுக்கு மாத்திரம் இப்படியெல்லாம் நடக்குது.

ராஜன் said...

தகவலுக்கு நன்றி பரிசல்...இனி ஒவ்வொரு ஞாயிறும் அங்கு ஆஜாராகப்போகும் விதூஷ் அக்காவுக்கும் அட்வான்ஸ் நன்றிகள்...

Unknown said...

கவிதைகள் ஸ்வாமி ஓம்கார்??

Unknown said...

கண்டிப்பாகப் பின்னூட்டியே தீரணும் என்று
என்னை உந்திய இன்றைய 'அவியல் - சூப்'பர்

யோ வொய்ஸ் (யோகா) said...

அந்த சகோதரர்களை நினைக்க மனது கனக்கிறது..

Unknown said...

அவியல் டேஸ்ட்டி :-).

//புத்தம் ரத்தம் கச்சாமி..!//

இது “ரத்தம் சரணம் கச்சாமி”ன்னு இருந்திருக்கலாமோ?

தமிழினிமை... said...

Nandri parisal...

ஸ்வாமி ஓம்கார் said...

பரிசல் என்னதான் நம் டையரியில் எழுதினாலும் அவைகள் பத்திரிகையில் வெளியிடப்படும் பொழுது ஒரு சந்தோஷம் வரும் அல்லவா? அது போன்ற சந்தோஷம் எனக்கு :)

இதோ இந்த லிங்கில் என் பக்கதில் மேலும் சில வரிகளுன்..
http://vediceye.blogspot.com/2009/09/blog-post_26.html

நர்சிம் said...

மதியம்..சுவை..அருமை

பரிசல்காரன் said...

@ Vidhoosh

வித்யா... இந்த மாதிரியான ஒரு கமெண்ட் முதல் கமெண்டாய் வருவது மிக மகிழ்வாய் இருக்கிறது. நன்றி!

//கவிதைகளை சுவாமி ஓம்கார் எழுதினாரா? //

ஆம்!

@ அப்பாவி முரு

நன்றி

@ இளவட்டம்

அது சீரியல் அல்ல. உண்மை. அதற்குப் பின் அவர்கள் வைத்த பெயர் மிருதுளா.

//மற்றபடி //

???

@ தராசு

அது ஞானில்லா! என்ர வூட்ல லேண்டுலைனு இல்லீங்கோவ்...

ஆரூரன் விசுவநாதன் said...

கவிதை வரிகள் இனிமை.

வாழ்த்துக்கள்

Truth said...

நல்லா இருக்குங்க பரிசல்

அன்பேசிவம் said...

தல அவியல் சூப்பர்ப்

Ashok D said...

கவிதைகளில் ஐங்கரன் மற்றும் வேதாந்த விவாதம் டாப்புங்க.

Kumky said...

நண்பர் ஒருவர் அடிக்கடி அலைபேசியில் அழைப்பார். எப்போதாவது நானும் எடுப்பேன்...

அவர் அடிக்கடி அழைத்தாலும் நீங்கள் எடுப்பது எப்போதாவதுதானே....சொல்ல ஏதேனும் மிச்சமிருக்கும்.

Kumky said...

பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ள பேரே நன்றாக இருக்கிறது.வாழ்க சீரியல்..

Kumky said...

கவிதைகள் நன்று...

சென்னையில் இல்லையே என்ற வருத்தம் மேலோங்குகிறது...

தகவலால் பலன் கிடைக்குமென நம்புவோம்.

Thamira said...

ஒரு ஞாயிறாவது உருப்படியான அந்தக்காரியத்தை பண்ணிவிட்டு போன் பண்ணுகிறேன் பரிசல்.!

Prabhu said...

நான் எங்க கல்லூரியில் இந்த மாதிரி பார்வையற்றோர்க்கு பரிட்சை எழுதிக் கொடுத்திருக்கேன். ஆனா அவங்க படிக்கிறதுக்கு கொஞ்சம்கஷ்டம்தான் என உணர்கிறேன்.

பரிசல்காரன் said...

@ ராஜன்

நன்றி

@ ஸ்ரீமதி

ஆம்.

@ மாங்க்ஸ்

தாங்க்ஸ்!

@ யோகா

உண்மை.

@ கேவியார்

அட.. ஆமால்ல..

@ தமிழினி

நன்றி

@ ஸ்வாமி ஓம்கார்

இதெல்லாம் ஓவர் ஸ்வாமிஜி..!!!

@ நர்சிம்

நன்றி பாஸு

பரிசல்காரன் said...

@ ஆரூரன் விசுவநாதன்

மிக்க நன்றி. ஸ்வாமிஜியிடம் தெரிவித்துவிடுகிறேன்!

@ ட்ரூத்

டாங்க்ஸ்

@ முரளி

நன்றி தோழர்!

@ Ashok

என் ஃபேவரைட் வேதாந்த விவாதம்!

@ கும்க்கி

நன்றி தோழர். நானும் பல விஷயங்களில் சென்னையை மிஸ் செய்கிறேன்!

@ ஆதிமூலகிருஷ்ணன்

வாவ்.. க்ரேட் ஸ்ப்ரிட்!

@ பப்பு

நன்றி!

Jawahar said...

நண்பர் ஒருவர் அடிக்கடி அலைபேசியில் அழைப்பார். எப்போதாவது நானும் //எடுப்பேன். அரைமணிநேரம் பேசுவோம். கடைசியில் சொல்லுவார்.. “சரி..சரி.. பிஸியா இருக்கீங்க போல... நீங்க எப்ப ஃப்ரீயா இருக்கீங்களோ அப்பச் சொல்லுங்க.. கொஞ்சம் பேசணும்”//

உங்களிடம் அரை மணி பேசியும் அவருக்கு திருப்தி வரவில்லை என்று அர்த்தம்! உங்கள் அலைபேசி எண் என்ன?

http://kgjawarlal.wordpress.com

மங்களூர் சிவா said...

nice aviyal.

சி. சரவணகார்த்திகேயன் said...

ur first one is now floating around the corporates as an e-mail forward..

A K Ravishankar said...

nalla valaipoo