Monday, November 2, 2009

ஆள விடுங்க சாமிகளா....

ரவணனுக்கு வழித்தடங்களை ஞாபகம் வெச்சுக்கறதுன்னா அவ்ளோ கஷ்டம். கார்ல எப்பவுமே தமிழ்நாடு, இந்தியா மேப் வெச்சுகிட்டுதான் சுத்துவான். பலதடவை, அவன் ஆஃபீஸுக்கே அட்ரஸ் கேட்டுத்தான் போவான். ஆனாலும் அவனையே யார்கிட்டயும் வழி கேட்க்கூடாதுன்னு முடிவெடுக்க வெச்சது அவனோட ஊட்டி ட்ரிப்.

குடும்பத்தோட ஊட்டி போனான் சரவணன். ஊட்டியில் கொடுமையான விஷயம் வழித்தடம் கேட்கறது. கேட்டா ஊட்டிய பத்தி ஒனக்கென்ன தெரியும்ங்கற மாதிரியேதான் பதில் சொல்வாங்க. ஒரு வளைவுல ரோடு ரெண்டா பிரியுதே-ன்னு நிறுத்தி ஒரு நேவிப்ளூ கலர் ஸ்வெட்டர் போட்டவர்கிட்ட (ஊட்டில ஸ்வெட்டர் போட்டிருந்தா மாக்ஸிமம் அவர் உள்ளூர்க்காரரா இருப்பார். அதுவும் நேவிப்ளூ கலர் ஸ்வெட்டர்!) ‘ஊட்டி நேராவா?”ன்னு கேட்டான் சரவணன்.

”இல்ல ரைட் டர்ன் எடுத்துப் போங்க”ன்னாரு. சரி.. ஒரு பொது அறிவுக்காக இருக்கட்டுமேன்னு “நேராப் போனா எங்க போகும்?”ன்னு கேட்டான் இவன்.

அவ்ளோதான்.. அதென்னவோ ராணுவத் தடவாளம் இருக்கற ரகசிய ரூட்டோ என்னமோ.. உடனே மூஞ்சி அவருக்கு கடுமையா ஆகிடுச்சு... “ஹலோ நீங்க எங்க போகணும்?”ன்னு கேட்டார். சரவணனுக்கு டரியலாய்டுச்சு. ஏதாவது தப்பா கேட்டுட்டோமோன்னு நடுங்கீட்டே.. “ஊ..ஊட்டிதாங்க போகணும்”னான்.

“அதான் நேராப் போனா போகாதுன்னு சொல்லீட்டேன்ல? ரைட்ல போங்க”

இவன் விடல.. “இல்லீங்க... இந்த ரூட் எங்க போகும்ன்னு...”

“ஊட்டிதானே போகணும் நீங்க? ஊட்டிதானே? போங்க.. ரைட் எடுத்து போன்னா போய்யா”ன்னு சொல்லிகிட்டே பக்கத்துல இருந்தவர்கிட்ட “இப்படிப் போனா அங்கியும் இங்கியும் சுத்தும்.. இதெதுக்கு கேக்கறான் அவன்? ரைட்ல போன்னா போக வேண்டியதுதானே?”ன்னு முனகினார். இவன் பொண்டாட்டி இவனைப் பார்த்து.. “சரி.. சரி.. காரைத் திருப்புங்க”ன்னு சொல்லவே. ‘ங்க’ – ‘ய்யா’வாய்டுச்சு ‘டா’வாகறதுக்குள்ள போயிடலாம்னு திரும்பீட்டான்.

அதே மாதிரி ஒருத்தரைக் கேட்டா அவர்கூட இருக்கற ரெண்டு மூணு பேர் கூட்டா சேர்ந்து கும்மியடிச்சு பதில் சொல்லி குழப்பறது-அடுத்த நாள்- ஊட்டிக்குள்ள இன்னொரு இடத்துல நடந்தது.

பைகாரா ஃபால்ஸுக்குப் போகணும் முடிவு பண்ணினாங்க. ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் பார்த்ததும் காரை ஓரங்கட்டி நிறுத்தி இறங்கிப் போய்க் கேட்டான்.

“சார் பைகாரா ஃபால்ஸ் எப்படிப் போகணும்?”

“பை காரா?”

“ஆமாங்க பைகாராதான்”

“இல்ல... பை காரா?”

-இதென்னடா வம்பாப்போச்சு.. “பைகாராதாங்க”

“ஐயோ.. கார்ல போறீங்களான்னு கேட்டேன்..”

‘அடக் கொடுமையே By Carஆ-ங்கறதயா அப்படிக் கேட்டான்’ னு நெனைச்சுட்டு ‘ஆமாம்’னான்.

“இதே ரூட்ல நேராப் போனீங்கன்னா...” ன்னு ஆரம்பிச்சான். ‘ஊட்டில எல்லா ரூட்டுமே வளைஞ்சு வளைஞ்சுல்ல போகும்.. அதெப்படி நேராப்போறது’ன்னு குதர்க்கமா நெனைச்சவன் “சொல்லுங்க”ன்னான்.

“சிக்னல் ஒண்ணு வரும்.. அந்த சிக்னல்லேர்ந்து ரைட்ல போகக்கூடாது... லெஃப்ட்ல போனீங்கன்னா”

-ரைட்ல போகக்கூடாதுன்னா அத ஏன் சொல்லணும்? நேரடியா லெஃப்ட்ல போன்னு சொல்ல வேண்டியதுதானே??

“ரோடு ரெண்டா பிரியும்.. அதுலயும் லெஃப்ட் பிடிச்சு போங்க.. 24 கிலோமீட்டர்.. பைகாரா வரும்”

ஓரளவு இதை மனதில் வைத்துக் கொண்டு திரும்பிட்டான்... “சார்..” என குரல் கேட்டது... பார்த்தா அவனுக்கு வழி சொன்னவரோடு இன்னொருவர் நின்று கொண்டிருந்தார். “எங்க போகணும்?”

“பைகாரா”

“நேராப் போய் லெஃப்ட்ல போங்க”

அதற்குள் முதலாமவர் “நீ சொல்றது சிக்னலுக்கு முன்னாடி வர்ற லெஃப்ட்.. சிக்னல்ல லெஃப்ட் போனாத்தான் கரெக்டா வரும்”

“இல்லடா... இந்த ரூட்ல சிக்னலுக்கு முன்னாடி எங்கடா லெஃப்ட் வருது?”

“ஆமா வருதுல்ல” – இது புதிய குரல். அவர்களோடு இன்னொருவரும் சேர்ந்திருந்தார். மூணாவதா இன்னொருத்தரா? கடவுளே..

“யோவ்.. இந்த ரோட்ல எங்கடா லெஃப்ட் வருது?”

“நம்ம கிறிஸ்டி வீடு இருக்குல்ல? அதுக்கு அடுத்ததா....”

“கிறிஸ்டியா?.. ஆமா.. அவ ஊர்லேர்ந்து லீவுக்கு வந்திருக்காளாமே?”

சரவணனுக்கு கடுப்பாச்சு.. இருந்தாலும் கிறிஸ்டிங்கற பேர் பிடிச்சிருந்தது. அதுனால பொறுமையா நின்னுட்டிருந்தான். கிறிஸ்டி ஏர் ஹோஸ்ட்ரஸா இருக்காங்க. இப்ப ஏதோ லீவு போலிருக்கு. வந்திருக்காங்க.. இவங்க மூணுபேரும் அடுத்தநாள் கிறிஸ்டி வீட்டுக்கு மரியாதை நிமித்தமான சந்திப்புக்கு போகப் போறாங்க. ஒருவழியா எல்லாம் முடிவானப்பறம்தான் ஒருத்தன் அட்ரஸுக்காக நிக்கறாங்கறதே அவங்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

“நீங்க என்ன பண்றீங்க....”

“நான் கோவைல மொபைல் ஷாப் வெச்சிருக்கேன்.. க்ளாட் டு மீட் யூ.”ன்னான் சரவணன்.

“அதில்லீங்க.. இப்ப என்ன பண்றீங்க..”

“இப்ப வீக் எண்ட்க்காக ஊட்டி வந்திருக்கேன்..”

“ஐயோ கடவுளே.... பேச விடுங்க.. இப்ப என்ன பண்றீங்கன்னா.. நேராப் போயி..”

“ஒண்ணும் பண்ணல.. கெளம்பறேன்” னான் இவன்.

அதுக்குள்ள பின்னாடிலேர்ந்து இன்னொரு குரல் “நீங்க எங்க போகணும்க”ன்னு கேட்டது. ரஜினி படமா இருக்கேன்னு (எங்கேயோ கேட்ட குரல்) திரும்பினான் சரவணன்.

நேத்து எண்டராகும்போது ஊட்டிக்கு ரைட்ல போகச் சொன்ன நேவிப்ளூ ஸ்வெட்டர் பார்ட்டி!

‘ஐயோ ஆள விடுங்கப்பா’ன்னு ஓடி வந்தவன்தான். அதுக்கப்பறம் யார்கிட்டயும் வழியே கேட்கல. அங்கங்க இருக்கற போர்டைப் பார்த்து போய்ட்டே இருந்தான்!


.

24 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

மொக்கை..
நல்லாவேயில்லை...

லதானந்த் said...

சின்னத்திரை சீரியல்களில் நகைச்சுவைக்கு இடமேயில்லை.
சினிமாவிலோ இரட்டை அர்த்தமும் பின்புறத்தில் அடிப்பதும் அடிவாங்கிக் கொள்வதுமே நகைச்சுவாய்கிவிட்டது. பத்திரிக்கைகள் கடி ஜோக்கில் சுருண்டுகொண்டன.
உண்மையான நகைச்சுவை உணர்வும அதை எழுத்தில் கொண்டு வரவும் தெரிந்த நீங்கள் புலாங்குழலால் அடுப்பு ஊதிக்கொண்டிருக்கிறீர்கள்!

Cable சங்கர் said...

பரிசல் அருமை..

ஆனா ஒரு விஷயம் சரவணன்ங்கிற இடத்தில எல்லாம் பரிசல்னு போட்டிருக்கணும்..:) நிஜம் அதானே..

கார்க்கிபவா said...

சகா, விழப்போகும் கும்மிகளை நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள். எங்காவது என் பேரு ரிப்பேரு ஆச்சு.. சொல்லிப்புட்டேன்..

//அதை எழுத்தில் கொண்டு வரவும் தெரிந்த நீங்கள் புலாங்குழலால் அடுப்பு ஊதிக்கொண்டிருக்கிறீர்கள்!//

கிகிகிகி.. இவர விட அதிகமா யாரு காமெடி பண்ண முடியும்?

பரிசல்காரன் said...

@ பி.வசந்த்

ரீ டைரக்ட் டூ கார்க்கி

@ லதானந்த்

ஊட்டியப்பத்தி எழுதின உடனே வந்துட்டீங்களா...!

@ கேபிள் சங்கர்

நன்றி!

@ கார்க்கி

ஐடியாவுக்கு தாங்க்ஸ் சகா!

தராசு said...

ரெண்டு பேரும் அடங்கவே மாட்டீங்களா????

செல்ல நாய்க்குட்டி மனசு said...

முதல்ல பின்னூட்டம் போடுறதுங்க்றது நடக்கவே மாட்டேங்கிது. முதல் 10 க்குள் போட்டிரலாம்.
அங்கங்க எல்லோரும் ஸ்வெட்டர் போட்டிருகிறதால அடையாளம் தெரியாதுன்னு இந்த குசும்பா? ஊட்டியில இருந்து திரும்பும்போதாவது வழி கேட்காம வந்தீரா ? மன்னிக்கவும் வந்தாரா?

Thamira said...

சேர்க்கை சரியில்லைன்னு நல்லா தெரியுது.. ஹிஹி.!

Kumky said...

ஏங்க, அநியாயத்துக்கு ஊட்டிக்காரங்களை தப்பா சொல்லாதீங்க..
வழி கேட்டா பொறுப்பாவும் பொருமையாவும் சொல்றவங்க அவங்க...

இதுக்கு கார்க்கியே மேல்.

எம்.எம்.அப்துல்லா said...

இடுகை இல்லை ஆனா இடுகை மாதிரி

:)

Unknown said...

இது யாருக்கோ நடந்த மாதிரி தெரியலையே கிருஷ்ணா...

Unknown said...
This comment has been removed by the author.
மங்களூர் சிவா said...

???@#$%

GHOST said...

[[Labels: Comedy , நகைச்சுவை இல்ல ஆனா நகைச்சுவை மாதிரி , புனைவு இல்ல ஆனா புனைவு மாதிரி ]]

இது இன்னும் காமெடியா இல்ல இருக்கு

Mahesh said...

என்னாச்சு பரிசல்?

Truth said...

முடியலப் பா..

AvizhdamDesigns said...

"பூக்களோடு சிலநேரம்" பதிவையும் இந்த குதர்க்கமான டயலாகையும் வெச்சு பார்க்கும்போது ஊட்டி போனது நிஜமா சரவணன் தானா..?

பின்னோக்கி said...

பை காரா?”
“ஆமாங்க பைகாராதான்”

:)))

-- said...

.
.
.
.
.
இன்றைய பொழுது இனிதே கழிந்தது..!

Beski said...

ரசித்தேன், அருமை.

அறிவிலி said...

ஹா.. ஹா.. ஹா

(இது பின்னூட்டம் மாதிரி, ஆனா...)

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

உங்க ஊட்டி அனுபவம் சூப்பர்.. ;)

பல இடத்துல பல்பு வாங்கியிருக்கீங்க போலயிருக்கே.. :))

லதானந்த் said...

இந்த லிங்கை டைம் கெடைக்கிறப்போப் படிச்சுப் பாருங்க பரிசல்காரரே!
http://lathananthpakkam.blogspot.com/2009/11/blog-post.html

ஸ்வாமி ஓம்கார் said...

தி பெஸ்ட் ஒன்