Tuesday, September 22, 2009

உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது...

ஆம் நண்பர்களே..

உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ஒரு படம் வருகிறது. இரண்டு மணிநேரம் அதை ரசிக்கிறீர்கள். பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற இரண்டு கோணங்களுக்கு மேல், மூன்றாவது கோணமாய் அதில் அவன் என்ன சொல்கிறான் என்று அலசி ஆராய்கிறீர்கள்.

ஆராய்ந்ததன் பயனாக உங்களுக்குக் கிடைத்ததெல்லாம் அதிர்ச்சிகள்தான். ஒரு பெயர், வெறும் பெயரல்ல.. அது குறியீடு என்கிறீர்கள். இசம் என்கிறீர்கள். சாதீயம் என்கிறீர்கள். கொண்டை தெரிகிறது, பூணூல் தெரிகிறது என்கிறீர்கள். நீங்கள் மெத்தப்படித்தவர்கள்.

எங்களுக்கு இடைவேளையில் பப்ஸ் இருக்குமா, இல்லை முறுக்குதானா என்ற விவாதம்தான் ஓடுகிறது மனதில். நாங்கள் அறிவிலிகள்.

படம் முடிந்ததும் என் வாகனத்தை பிற வாகனங்கள் மோதாமல் எடுக்க முடியுமா, வீட்டுக்கு வரும்போது ஏதோ வாங்கிவரச் சொன்னாளே என்றெல்லாம் கேள்விகளோடு வெளிவருகிறோம் நாங்கள். இடையே படம் தந்த சில நல்லுணர்வுகளின் நினைவுகள் இதம் தருகிறது எங்களுக்கு. நீங்கள் அதையெல்லாம் விடுத்து, வேறேதோ சிந்தனைகளில் உங்கள் நிகழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள். முன்னர் நடந்த நிஜ நிகழ்வுகளும், திரைப்படமும் சொல்வது என்ன என்று யோசித்து யோசித்து படம் எடுத்தவன், நடித்தவன், பார்த்தவன், விமர்சனம் எழுதினவன் என்று போட்டுத் தாக்குகிறீர்கள். தாக்குவது என்று தீர்மானித்தபின் நாசூக்காவது மண்ணாவது. இருக்கவே இருக்கிறது வார்த்தைகள். வந்து விழுகின்றன உங்களுக்கென்றே....

எங்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை.

நாங்கள் சொல்வது பொதுப்புத்தி. அதாவது அதிகமான பேரால் ஏற்றுக் கொள்ளப்படுவது பொதுப்புத்தி. அதை எதிர்ப்பதே அறிவுஜீவித் தனம். அது எங்களுக்கு வாய்க்கவில்லை. இதையே வேறுவிதமாய் சொல்வதானால் எல்லாவற்றிலும் நேர்சிந்தனையை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது பொதுப்புத்தி. இல்லை அதில் என்ன நெகடீவ் இருக்கிறது என்றும் நான் பார்ப்பேன் என்பது உங்கள் இசங்களும், தத்துவார்த்த சிந்தனைகளும் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த அல்லது தானாய் உங்களுக்கு அமைந்த வரம். எங்களுக்கு அது கைகூடி வரவில்லை. நாங்கள் சாபம் பெற்றவர்கள்.

ஒரு நடிகன் சொல்லி கேட்டுவிடக் கூடிய நிலையில்தான் நான், நீங்கள், நாம் இருக்கிறோம் என்று நீங்கள் முடிவு செய்யக் காரணியாய் இருந்தது எதுவென எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு படம் வந்ததும் நாளையே நான் குறிப்பிட்ட பிரிவினரை தீவிரவாதியென்றால் என்னைவிடக் **யன் யாருமிருக்கப் போவதில்லை. அப்படியிருக்க அந்த நடிகன் சொல்லாத விஷயத்தை நீங்கள் உரைபோட்டு விளக்கிச் சொல்லி இப்படி ஊரையே பேச வைத்திருப்பது எவ்விதத்தில் நியாயமாய்ப் படுகிறது உங்களுக்கு?

நீங்கள் தாக்கி எழுதுவதென்று தீர்மானித்து விட்டீர்கள். உங்களை யாரும் தடுக்க முடியாது. எல்லாவற்றிற்கும் நீங்கள் பதில் வைத்திருக்கிறீர்கள். எங்களிடம் இருப்பதில்லை. பதில் கொடுக்க முடியாததற்கு ‘இதற்கெல்லாம் பதில் கொடுக்க முடியாது’ என்று சொல்லிவிடுவீர்கள். நாங்கள் எல்லாவற்றிற்கும் பதில் தேடிக் கொண்டே இருப்போம். கிடைப்பதற்குள் நீங்கள் எங்களுக்கு முன்னே போய்விட்டிருப்பீர்கள். எப்போதுமே உங்கள் சிந்தனைகளையும், வேகத்தையும் பார்த்து பிரமித்துக் கொண்டிருப்பதே எங்களுக்கு வேலையாகிப் போய்விட்டது!

நீங்கள் எழுதிய கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லையெனினும் இப்படியெல்லாம் சிந்திக்க/எழுத முடியுமாவென அதையும் ரசித்துப் புளகாங்கிதமடைந்து அடுத்த படைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.


நாங்கள் பொதுமனிதர்கள். எங்களுக்குத் தெரியாததையெல்லாம் சொல்லிக் கொடுத்து, கெடுத்துவிடாதீர்கள். அடுத்த வாரம் துவரம் பருப்பு விலையேறுமா, சர்க்கரை இதே விலையில்தானிருக்குமா என்பது தொடங்கி பல கவலைகள் எங்களுக்குண்டு. முடிந்தால் அதைத் தீர்க்க வழிசொல்லுங்கள்.

என்ன செய்ய.. நாங்கள் சராசரிகள்.

:-(


.

77 comments:

சிவக்குமரன் said...

பரிசல்?

sriram said...

நல்லா சொன்னீங்க கிருஷ்ணா,
வர வர இந்த பின் நவீனத்துவ சினிமா விமர்சகனுங்க தொல்ல தாங்க முடியல
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ILA (a) இளா said...

கமல் பாணியில சொன்னா We are Stupid Common Bloggers from Bloggers world

Anonymous said...

இந்த டெம்ப்ளேட் பளிச்சுனு இருக்கு. மத்த அறிவு ஜீவிகள கண்டுக்காம விடவேண்டியதுதான்.

வெட்டிப்பயல் said...

:)

ILA (a) இளா said...

//வெட்டிப்பயல் said.. :)//
பாருய்யா, ம்ம்ம்ம்ம்மூத்த்த்த்த்த்தப்பதிவரோட பின்னூட்டத்த...

ஆயில்யன் said...

//Blogger வெட்டிப்பயல் said...

:)//

ரிப்பிட்டேய்ய்ய்ய்!

(இளா & பாரா சேர்ந்து என்னிக்கு அட்டாக் பண்ணப்போறாங்களோ அவ்வ்வ்வ் :))

Cable சங்கர் said...

பரிசல் **யன் எல்லாம் கெட்ட வார்த்தையா என்ன..

பாமரன்
கேபிள் சங்கர்

ILA (a) இளா said...

ஒரு முஸ்லிமை தீவிரவாதியாக மட்டும் பார்க்கத்தெரிந்திருக்கும் நம் மக்களுக்கு, முதலில் உங்கள் குறுகிய புத்திய எண்ணிப்பாருங்கள். முஸ்லிமை தீவிரவாதியாக மட்டுமே எண்ணும் உங்கள் பின்நவீனத்துவத்தை எதால் அடிக்கிறது? திடீரென கமல் ஒரு பேட்டியில் அந்த வேடம் ஒரு முஸ்லிம் என்பதை தெளிவு படுத்திவிட்டால், உங்கள் குறுகிய மனதை/எழுத்தை எங்கே போய் வெச்சுப்பீங்க? உங்களுக்கு மட்டும் அவர் ஜாதி தெரிகிறது.. எங்களுக்கு படம்தான் தெரிகிறது.

ச.ஜெ.ரவி said...

நடிகன் சொல்லாத விஷயத்தை நீங்கள் உரைபோட்டு விளக்கிச் சொல்லி இப்படி ஊரையே பேச வைத்திருப்பது எவ்விதத்தில் நியாயமாய்ப் படுகிறது உங்களுக்கு?

//////////////////////////

அழகான பதிவு.
அது சரி
இது ‘உன்னைப்போல் ஒருவன்’
பட விமர்சனத்தால் வந்த பாதிப்பா?

மணிஜி said...

அறிவிலிகள்???என்னையும் அப்படி கூப்பிடுங்கள் ப்ளிஸ்

மணிஜி said...

நீங்கள் டெலிட் செய்ய தூண்டுமளவிற்கு ஒரு பின்னூட்டம் போட ஆசை?

பரிசல்காரன் said...

@ இரா.சிவக்குமரன்

ஆமா.

நன்றி ஸ்ரீராம்.

@ இளா

கி கி கி

@ சின்ன அம்மணி

சரிங்கோவ்...

@ வெட்டிப்பயல்

சீரியஸா இருக்கேன்.. சிரிப்பு போலீங்கறீங்களே...

@ ஆயில்யன்

ஏன்யா இப்படி?

@ கேபிள் சங்கர்

அதச் சொல்லக்கூட பயப்படற பொதுஜனம்க நானு!

@ இளா

விளம்பரப் பணத்தை எப்ப தர்றீங்க...

@ ச ஜெ ரவி

நீங்க என்னைவிட அப்பாவிங்க..

@ இராம்

:-)))

@ தண்டோரா

ண்ண்ணா... பாவம்ணா நானு... உங்களவு ரௌடி இல்லண்ணா..

தீப்பெட்டி said...

உங்களுக்கு கூட இவ்வளவு தெரிஞ்சிருக்கிறதே பாஸ்..
எனக்கு இது கூட நீங்க சொல்லித்தான் தெரியுது:(

//நாங்கள் சராசரிகள்//

அப்போ நான்:(

Subha said...

well said Krishna, I wonder how your fellow bloggers have got that much time to analyze(most of the time being cynical) a movie while watching it....

Sanjai Gandhi said...

//**யன்//

இதைக் கூட சொல்லத் தயங்கற ஒரு பச்ச மண்ணை இப்படி தனியா பொலம்ப வச்சிட்டாங்களேய்யா.. :))

இந்தப் பதிவை செல்வேந்திரன் சொல்லித் தான் எழுதியதாக சொல்றாங்களே நிஜமா மாமா?
( நாராயண.. நாராயண.. )

அமுதா கிருஷ்ணா said...

உண்மை நாமெல்லாம் சராசரிகள்...

பரிசல்காரன் said...

@ தீப்பெட்டி

சரி!

@ சுபா

யோசிங்க..

@ சஞ்சய்

செல்வாவிடம் நான் விவாதித்ததில் எந்த விஷயமும் இதில் இடம் பெறவில்லை. இதை எழுதுவதற்கான மனநிலையை வளர்க்க சிலரிடம் பேசியது உண்மை.

(&***)*)*& - இது உங்களுக்கு மாப்பி!

நன்றி அமுதாகிருஷ்ணா

Sanjai Gandhi said...

//@ சஞ்சய்

செல்வாவிடம் நான் விவாதித்ததில் எந்த விஷயமும் இதில் இடம் பெறவில்லை. இதை எழுதுவதற்கான மனநிலையை வளர்க்க சிலரிடம் பேசியது உண்மை.//

அய்யா சாமி.. நீங்க செல்வா கிட்ட பேசினதுக்கும் என் பின்னூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை. அவரும் தன் எதிர்வினையை எழுதி இருப்பதால் 2 பேரும் எனக்கு வேண்டியவங்க என்பதாலும் விளையாட்டா போட்ட பின்னூட்டம் அது. அடக் கொடுமையே.. நகைச்சுவையைக் கூட புரிஞ்சிக்காத அளவுக்கு உங்கள “அநியாயத்துக்கு சராசரி” ஆக்கிட்டாங்களே மாமா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :)))
//

//(&***)*)*& - இது உங்களுக்கு மாப்பி!//

பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.. ;))

Subbu said...

//நாங்கள் சொல்வது பொதுப்புத்தி. அதாவது அதிகமான பேரால் ஏற்றுக் கொள்ளப்படுவது பொதுப்புத்தி.//

அந்த பொதுப்புத்தி யாரால் தீர்மானிக்கப்படுகிறது என்று யோசிக்கவும். அதை நாமா தீர்மானிக்கிறோம்...? அதாவது மக்களா தீர்மானிக்கிறார்கள்? இது சரியென்று பல்வேறு வடிவங்களில் நமக்குள் திணிக்கப்படுகிறது என்றே நான் கருதுகிறேன். அதுதான் பிரச்சினை.

தீவிரவாதத்தைப் பற்றிய படம் என்றால் ஏன் முஸ்லிம் தீவிரவாதிகளாகவே காண்பிக்கவேண்டும்? இந்து தீவிரவாதமே இல்லையா? நான் உன்னைப்போல் ஒருவன் படத்தை மட்டும் சொல்லவில்லை. பொதுவாக சொல்கிறேன்.

மத அடிப்படைவாதமே பிரச்சினை. அது யார் செய்தாலும் சரி... இந்துவோ முஸ்லிமோ கிறித்துவனோ இல்லை வேறு எந்த மதத்தினரோ... அடிப்படைவாதம் தவறு. தீவிரவாதத்திற்கு தீவிரவாதம் பதிலாகாது. கண்ணுக்குக் கண் என்று அலைந்தால் நாம் எல்லாரும் குருடர்களாகத்தான் அலைய வேண்டியிருக்கும்.

சமூகத்தில் ஊடகத்திற்கு பொறுப்புண்டு. ஆனால் நம் நாட்டில் அவர்கள் பொறுப்புள்ளவர்களா என்பதுதான் கேள்வி. கமல் முதற்கொண்டு பெரும்பான்மையானோர் பொறுப்பற்றவர்களே... கமல் திறமையானவர்தான். ஆனால் பொறுப்பானவரா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.

நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

தராசு said...

இந்த சிறிய பின்னூட்டத்திற்கு மன்னிக்க வேண்டாம்.

Sanjai Gandhi said...

//அந்த பொதுப்புத்தி யாரால் தீர்மானிக்கப்படுகிறது என்று யோசிக்கவும். அதை நாமா தீர்மானிக்கிறோம்...? அதாவது மக்களா தீர்மானிக்கிறார்கள்? இது சரியென்று பல்வேறு வடிவங்களில் நமக்குள் திணிக்கப்படுகிறது என்றே நான் கருதுகிறேன். அதுதான் பிரச்சினை.//

நண்பரே மன்னிக்க.. அனைத்து அடிப்படை உரிமைகளும் பெற்று வாழுல் ஒரு சுதந்திர நாட்டில் யாரும் எதையும் திணிக்க முடியாது. சோற்றிற்கு பதில் ஒருவர் வாயில் மலத்தை திணித்தால் அவர் அதை சரி என்று நினைத்து ஏற்றுக் கொள்வாரா? . சுய புத்தி இல்லாதவர்கள் மட்டுமே திணிப்பை ஏற்றுக் கொள்வார்கள். அது ஒருவருக்கு இல்லாமல் போவது யாருடைய குற்றமும் இல்லை.

//தீவிரவாதத்தைப் பற்றிய படம் என்றால் ஏன் முஸ்லிம் தீவிரவாதிகளாகவே காண்பிக்கவேண்டும்? இந்து தீவிரவாதமே இல்லையா? நான் உன்னைப்போல் ஒருவன் படத்தை மட்டும் சொல்லவில்லை. பொதுவாக சொல்கிறேன்.//

நீங்கள் தீவிரவாதியை தீவிரவாதியாய் மட்டுமே பாருங்க. ஏன் முஸ்லிமா பாக்கறிங்க? அவர்கள் நெற்றியில் முஸ்லிம் என்று ஒட்டி வைத்து காண்பிக்கிறார்களா? ஒருவனின் பெயரை மட்டுமே வைத்து அவன் சார்ந்த மதத்தின் பிரதிநிதி போல் நினைத்து அந்த மதத்தை அவமதிப்பதாக நினைப்பதே கேவலம். முதலில் உங்கள் பார்வை விரிவடைய வேண்டும்.
ஒருவன் தன் மனைவியின் மரணத்தை சொல்லும் போது, அதான் இன்னும் 2 இருக்கே என்று சொல்வது மட்டமான ரசனை என்றாலும் அவர்களுக்கு ஆளுக்கொரு மத அடையாளம் கொடுப்பது அதைவிட மட்டமானது.

Subbu said...

//நண்பரே மன்னிக்க.. அனைத்து அடிப்படை உரிமைகளும் பெற்று வாழுல் ஒரு சுதந்திர நாட்டில் யாரும் எதையும் திணிக்க முடியாது. சோற்றிற்கு பதில் ஒருவர் வாயில் மலத்தை திணித்தால் அவர் அதை சரி என்று நினைத்து ஏற்றுக் கொள்வாரா? . சுய புத்தி இல்லாதவர்கள் மட்டுமே திணிப்பை ஏற்றுக் கொள்வார்கள். அது ஒருவருக்கு இல்லாமல் போவது யாருடைய குற்றமும் இல்லை.//

அப்படித்தான் திணித்துக்கொண்டிருக்கிறார்கள். திணிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தால் அது நமது அறியாமைதான். தினந்தோறும் செய்திகளைப் பார்த்தாலோ உள்ளங்கை நெல்லிக்கனியாய் இந்த உண்மை புரியும்.

//நீங்கள் தீவிரவாதியை தீவிரவாதியாய் மட்டுமே பாருங்க. ஏன் முஸ்லிமா பாக்கறிங்க? அவர்கள் நெற்றியில் முஸ்லிம் என்று ஒட்டி வைத்து காண்பிக்கிறார்களா? ஒருவனின் பெயரை மட்டுமே வைத்து அவன் சார்ந்த மதத்தின் பிரதிநிதி போல் நினைத்து அந்த மதத்தை அவமதிப்பதாக நினைப்பதே கேவலம். முதலில் உங்கள் பார்வை விரிவடைய வேண்டும்.
ஒருவன் தன் மனைவியின் மரணத்தை சொல்லும் போது, அதான் இன்னும் 2 இருக்கே என்று சொல்வது மட்டமான ரசனை என்றாலும் அவர்களுக்கு ஆளுக்கொரு மத அடையாளம் கொடுப்பது அதைவிட மட்டமானது.//

ஆனால் தீவிரவாதி என்றாலோ முஸ்லிம்தான் என்றுதானே ஊடகங்கள் பேசுகின்றன. அதைத்தான் சுட்டிக்காட்டினேன். தீவிரவாதிகள் எல்லா மதத்திலும்தான் இருக்கிறார்கள். ஊடகங்கள் நடுநிலைமையாக எல்லாரையும் பற்றி பேசினால் விமர்சித்தால் நியாயம். நான் மத முத்திரை குத்தவில்லை. தீவிரவாதம் எல்லா மதங்களிலும் உள்ள போது ஊடகங்களில் ஒன்றை மட்டும் பயங்கரமாக காண்பிப்பது என்ன நியாயம்? எல்லாவற்றையும்தானே காண்பிக்க வேண்டும்?

பரிசல்காரன் said...

@ மாப்பி

//அடக் கொடுமையே.. நகைச்சுவையைக் கூட புரிஞ்சிக்காத அளவுக்கு உங்கள “அநியாயத்துக்கு சராசரி” ஆக்கிட்டாங்களே மாமா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//

யோவ்.. நேரடியாவே திட்டுவேன் நானு இப்ப. என்னாதுக்கு நீ இவ்ளோ சீரியஸாவற? செந்தமிழ்ல பின்னூட்டினா சீரியஸாய்டுதுபா!

பரிசல்காரன் said...

@ சுப்பு

நன்றி

@ தராசு

ரொம்ப நன்றி!

அறிவிலி said...

நான் இன்னும் படமே பார்க்கவில்லை.
ஏன் என் பெயரை வம்புக்கு இழுக்கிறீர்கள்.

:)))))))))))))))

மற்றபடி இசங்கள்,ஈயங்கள் பற்றிய கருத்துகள் முற்றிலும் சரி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பிரதியிலுள்ள மௌனத்தைப் பேச வைப்பதே விமர்சனம் எனத் திடமாக நம்புகிறேன். எல்லாரும் படத்தை ஆஹா ஓஹோ எனக் கூடிக் கும்மியடிக்க ஒரு சிலராவது படத்தின் பின்னுள்ள அரசியலைப் பேசட்டுமே...

Sanjai Gandhi said...

//ஆனால் தீவிரவாதி என்றாலோ முஸ்லிம்தான் என்றுதானே ஊடகங்கள் பேசுகின்றன.//

இது உங்கள் வாதத்துக்காக பேசுகிற மேலோட்ட்அமான பார்வையாகவே தெரிகிறது. தீவிரவாதி என்றாலே முஸ்லிம் தான் என்று சொல்லும் ஊடகம் எது? பால் தாக்கரேவின் சாம்னாவா? அபப்டியே ஊடகாங்களோ சினிமாவோ தவறான பிம்பத்தை எற்படுத்த முயற்சித்தாலும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். இந்தியா ஜனாதிபதிகளிலேயே அதிகம் நேசிக்கப் பட்டவர் அப்துல்கலாம். அவர் முஸ்லிம் மதத்தில் பிறந்தார் என்பதற்காக இந்துக்கள் எல்லாம் அவரை வெறுக்கவில்லை. மிக அதிகமாகவே மதித்தார்கள். அவர்கள் எல்லாம் கேனையர்களா? நீங்கள் படிக்கும் பார்க்கும் ஊடகங்களை எல்லாம் அவர்கள் படிப்பதில்லையா பார்ப்பதில்லையா? அவ்வளவு ஏன்?
வலைப்பதிவும் எழுதுபவர்கள் பலராலும் நேசிக்கப்படுவதோடு இல்லாமல் உறவு முறை வைத்தி அழைத்து பழகும் அப்துல்லா, தமிழ்பிரியன், ஜமால் முகமது போன்றவர்கள் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களிடும் அன்பாக இருக்கும் நாங்கள் ஊடகங்களை கவனிப்பதில்லையா? எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் வித்தத்தில் தான் இருக்கு நண்பரே. அதனால் திணிப்பு என்பதெல்லாம் சும்மா.. எதிர் கருத்து சொல்வதற்காக நம் வசதிக்கு பயன்படுத்தும் வார்த்தை.

முடிந்தால், தீவிரவாதி என்றாலே முஸ்லிம் தான் என்று சொல்லும் ஊடகம் எது என்று மட்டும் சொல்லுங்க. நானும் பார்க்கறேன். எனக்கு தெரிஞ்சி அப்டி எதும் இல்லை.

butterfly Surya said...

We are Stupid Common Bloggers from Bloggers world ////

Very True..

கார்க்கிபவா said...

சகா, எல்லாம் சரி. ஆனால் ஒரு திரைப்படம் சொல்லி மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? பம்பாயில் ஒரு முஸ்லீம் தான் பிரச்சினையை தொடங்குவது போல் காண்பிப்பார்கள். அதைப் பார்த்துவிட்டு என் நண்பனே அதை ஒரு ஆதாரமாக பேசினான்.

படம் பார்க்கவில்லை. இருந்தாலும் கேட்டு தெரிந்ததில் சொல்கிறேன். தேவையில்லாமல் பெஸ்ட் பேக்கரி வழக்கையும், கோவை குண்டு வெடிப்பையும் காட்டும்போது அதை நியாயமாக, சரியாக சொல்ல வேண்டுமல்லவா? எதற்கு இந்த முரண்? தெரியாமல் செய்ய வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகிறது. கமல் மீது நம்பிக்கை இருக்கிறது.இருந்தாலும்.. சுகுணா வாதம் சற்று அதிகம் தான் என்றாலும் முற்றிலும் ஒதுக்க முடியாது.

SurveySan said...

நைஸ்!!

ILAவின் பதிவும், சென்ஷியின் பதிவும் கூட வெகுவாய் ரசித்தேன்.

அதையும் படிங்க, படிக்கலன்னா.

நர்சிம் said...

பரிசல்.. நல்லா எழுதி இருக்கீங்க..ஆனாலும் டு த பாயிண்ட் இல்லையே நண்பா.

வெண்பூ said...

சரியா சொன்னீங்க பரிசல்... எனக்கெல்லாம் அது ஒரு படம் அவ்வளவே, அதை எடுத்தவனும் நடித்தவனும் பிராமணனா, முஸ்லீமா, திமுகவா, அதிமுகவா என்பதெல்லாம் தேவை இல்லை. தியேட்டருக்குப் போவதே ஒரு மூணு மணிநேரம் பொழுது போக்கதான், அதுல அந்த இசம், இந்த இசம், பூணூல், குடுமி, கொண்டை இதெல்லாம் பாக்குறது ரொம்ப ஓவர்.

பரிசல்காரன் said...

@ அறிவிலி

அது நீங்க இல்ல

@ ஜ்யோவ்ராம் சுந்தர்

அதற்காக மௌனத்திற்கு என்ன வேண்டுமானாலும் அர்த்தம் கற்பிப்பதை என்னால் ஏற்க முடியவில்லை ஜி..

@ சஞ்சய் காந்தி & சுப்பு

உங்கள் ஆரோக்யமான விவாதம் மகிழ்வைத் தருகிறது

@ சூர்யா

ஏன்??

@ கார்க்கி

ஒருசோறு பதமென்பது எல்லாவற்றிற்கும் பொருந்தாது சகா.

சுகுணாவின் பதிவை ஒதுக்க நான் சொல்லவே இல்லையே? இன்னும் இப்படியும் பார்வை இருக்குமா என்ற பிரமிப்பு இருக்கத்தான் செய்கிறது!

@ சர்வேசன்

படிச்சேன்!

@ நர்சிம்

அதுக்கு நான் நீங்க இல்லையே பாஸூ!! (என்னாச்சு நீங்க எழுதறதா சொன்னது?)

Thamira said...

@கார்க்கி : இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பின் படம் பார்க்கப்போகிறாயா? முன்முடிவுகள், பின்முடிவுகள் இல்லாமல் போக சாத்தியமாகுமா?

சுந்தர்ஜி சொல்லும் கருத்துகள் நியாயமானதே. மாற்றுப்பார்வைக்கும் இடம் வேண்டும்தான்.

நம்மை பெரிதும் பாதிப்பது நண்பரின் நடை மற்றும் சொற்களே.!

பரிசல்காரன் said...

@ வெண்பூ

க்ளிக்கிப் போய் சரிபார்த்தேன்... இது நீங்க போட்ட பின்னூட்டம்தான்!

கார்க்கிபவா said...

//தியேட்டருக்குப் போவதே ஒரு மூணு மணிநேரம் பொழுது போக்கதான்//

இதையே நாங்க கத்தனப்ப படம்ன்னா இப்படி இருக்கனும்.. மன்ச தொடனும்.. கனமாக்கனும்ம்ன்னு குரல் கொடுத்தாங்க..

சரியோ தவறோ கமலை விமர்சனம் பண்ணா மட்டும் ஏன் காண்டாவறோம்?

பரிசல்காரன் said...

//முன்முடிவுகள், பின்முடிவுகள் இல்லாமல் போக சாத்தியமாகுமா?//

சகா.. பதில் ப்ளீஸ்...

Sanjai Gandhi said...

////முன்முடிவுகள், பின்முடிவுகள் இல்லாமல் போக சாத்தியமாகுமா?//

சகா.. பதில் ப்ளீஸ்...//

எப்டி எல்லாம் துக்கத்தை தோண்டறாங்கய்யா.. முன் பின் 2 முடிவுகள் மட்டும் இருந்து பார்த்தா பரவால்லை.. இந்நேரம் ஒரு 63 முடிவுகள் வெளிவந்திருப்பதாக சொல்றாங்க. இதோட போய் பார்த்தா அந்த மோப்ப நாய் பாம் கண்டுபிடிக்கறதுல கூட எதுனா இசம் இருக்கான்னு பார்க்கத் தோனும். கார்க்கி, நாம வேட்டைக்காரன் போய் பார்க்கலாம். அவசரப் படாதிங்க. :))

யுவகிருஷ்ணா said...

எல்லாரும் ரொம்ப நல்லவங்க :-)

இன்ஷா அல்லா!

கார்க்கிபவா said...

////முன்முடிவுகள், பின்முடிவுகள் இல்லாமல் போக சாத்தியமாகுமா?///

எந்த படம் பார்க்கப் போனாலும் அது எந்த மாதிரியான படம், நாம் எந்த மனநிலையில் அதை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னரே செல்வேன் சகா. ஏழாயிரத்து முப்பது முறை சொன்னதுதான், ரஜினி, விஜய் படத்திற்கு சென்று லாஜிக் தேட மாட்டேன். ஆனால் உன்னைப் போல் ஒருவனில் கட்டாயம் அதை தேடுவேன்.

இந்த விஷயத்தில், குற்றசாட்டு முன்னரே தெரிந்ததால் அதற்கான நியாயம் படத்தில் இருக்கா என்று பார்க்க இயலும். என்ன, ஒரு படம் பார்ப்பது போல் என்ஜாய் பண்ணி பார்க்க முடியாது. சுந்தர்ஜி சொன்னது போல் சத்தத்திற்கு அரங்கம் சிரிக்கும் போது அதன் பின்வரும் மெளனத்திற்கு அர்த்தம் தேடவே மனசு சொல்லும். ஒரு முறை இப்படி செய்துதான் பார்ப்போமே.

கார்க்கிபவா said...

//கார்க்கி, நாம வேட்டைக்காரன் போய் பார்க்கலாம். அவசரப் படாதிங்க. ://

நாம் என்பதில் இருந்து இன்னும் காங்கிரஸ் விஜய்க்கு காத்திருப்பது புரிகிறது சகா.. :))))

ஒரு தகவல், நாளை ஆடியோ ரிலீஸ், என் பிறந்த நாளன்று.. காலை 7 மணிக்கு ரிச்சி தெருவில் ஆட்டம் அரம்பம். சன் டிவி ரெக்கார்ட் செய்ய வருகிறார்களாம்

மணிகண்டன் said...

***
நாங்கள் பொதுமனிதர்கள். எங்களுக்குத் தெரியாததையெல்லாம் சொல்லிக் கொடுத்து, கெடுத்துவிடாதீர்கள்.
***

பரிசல், இதை நீங்க கமல் கிட்ட தான சொல்லி இருக்கணும். அவரு பொது மனிதனுக்கு குண்டு வைக்க சொல்லிக்கொடுக்கராரே :)

யோவ் கார்க்கி,

குருவி, வில்லு, வேட்டைக்காரன், அழகிய தமிழ் மகன் எல்லாமே கலக்கல். லாஜிக் எல்லாம் பாத்தாலும் சூப்பர். தயவு செய்து ஒவ்வொரு முறையும் குருவி வந்தபோது நானும் அதை தானே சொன்னேன்னு சொல்லாதீங்க :)

Thamira said...

சரியோ தவறோ கமலை விமர்சனம் பண்ணா மட்டும் ஏன் காண்டாவறோம்?//

மனம் வருந்துகிறேன் கார்க்கி.

அப்படி இல்லை. வேறெந்த நல்ல திரைக்கலைஞனுக்கும் இந்நிலை நேர்வதில்லை என்றுதான் நினைக்கிறேன். கமல் ரசிகன் என்று எந்த ஒளிவுமில்லாமல் ஒத்துக்கொள்ளும் அதே நேரம், எழுத்துகளிலும், ஏற்பட்ட நெருங்கிய நட்பிலும் என் நேர்மையை நீ அறிந்திருக்கலாம். நிச்சயமாக சொல்கிறேன், இந்தக்கதை ஒரு ஐடியல், கமல் காரெக்டரில் வேறு யார் நடித்திருந்தாலும் (விஜய் உட்பட பாப்புலர் ஆர்டிஸ்ட் அல்லது புத்தம் புதியமுகம்) நிச்சயம் பொருத்தமாக இருந்திருக்கும். அப்போதும் இதே விமர்சனம் எழுந்திருந்தால் நான் இதே நிலைப்பாட்டில்தான் இருந்திருப்பேன், கருத்துகளைப் பதிவு செய்திருப்பேன், நம்பலாம்.

மேலும் நான் தீவிர பெரியார் பக்தன் என்பது அறிவாய், உலக வரலாற்றில் எங்குமே நிகழ்ந்திருக்கமுடியாத ஆனால் நிகழ்ந்த ஒரு இனத்தின் மீதான பார்ப்பனீய விழுங்குதலுக்கு எதிரானவன்தான். ஆனால் என் உயிர்த்தோழன் கண்ணனுக்கு எதிரானவனல்ல நான்.

கமல் ஒரு பார்ப்பனர் என்ற முன்முடிவோடு அணுகுதலையும், (அதிகாரமிருந்தால்) கொலையாயுதத்தால் குத்திக்கிழிப்பதற்கு ஈடாக நான் என் பேனாவை பயன்படுத்துவேன் (வன்முறை) என்ற வேகத்தையும் எதிர்த்துதான் நான் என் கருத்தைப்பதிவு செய்திருக்கிறேன்.

Sanjai Gandhi said...

//நாம் என்பதில் இருந்து இன்னும் காங்கிரஸ் விஜய்க்கு காத்திருப்பது புரிகிறது சகா.. :))))//

தோடா.. யாரு யாருக்குக் காத்திருக்கிறது..பத்தோட பதினொன்னா இருந்துட்டுப் போகட்டுமேன்னு நினைச்சிக்கிறோம்..:))

//ஒரு தகவல், நாளை ஆடியோ ரிலீஸ், என் பிறந்த நாளன்று.. காலை 7 மணிக்கு ரிச்சி தெருவில் ஆட்டம் அரம்பம். சன் டிவி ரெக்கார்ட் செய்ய வருகிறார்களாம் //

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்க்கி.. :)

Sanjai Gandhi said...

//. வேறெந்த நல்ல திரைக்கலைஞனுக்கும் இந்நிலை நேர்வதில்லை என்றுதான் நினைக்கிறேன்.//

கரெக்ட்.. எத்தனைக் கான்களை தீவிரவாதியாக்கினார் விஜய்காந்த்? அவர் இந்தளவு காயப்படவில்லை. ஏன்னா விஜயகாந்த் பிராமனர் இல்லை. கார்க்கி, தாமிரா கமலுக்கு வக்காலத்து வாங்குவதாய் தெரியலை. எதுக்கு அவருக்கு அனாவசியமாய் பார்ப்பனிய சாயம் பூசனும்னு தான் கேட்கிறார் என நினைக்கிறேன். இதுக்கும் ரசிக மனோபாவத்துக்கும் என்ன தொடர்பு? பைதிவே மிஸ்டர் தாமிராஸ்.. ஞானும் கமலு ரசிகனுலுதான்லு.. :)

//மேலும் நான் தீவிர பெரியார் பக்தன்// அடக் கொடுமையே.. பக்தனா இருக்காதிங்கன்னு தானே ராமசாமி பெரியார் சொன்னார். இவரு அவருக்கே பக்தனாமாம்.. பெரியார் ஆவி மன்னிக்கவும்.. :)

( ப்ளீஸ் நோ சீரியஸ் பதில் :) )

Prabhu said...

பரிசல் அண்ணே ந்ல்லா சொல்லிக் கொடுத்தீங்க! இப்படி போடலாம்னு இருந்தேன். நீங்க போட்டு பின்விளைவுகள், பக்க விளைவுகள் எப்படி இருக்கும்னு காண்பிச்சிட்டீங்க!
நான் யோசிச்சுக்கிறேன்!

கார்க்கிபவா said...

ஆதீ!!!!,
இதில் வருந்த என்ன இருக்கிறது?

//அப்படி இல்லை. வேறெந்த நல்ல திரைக்கலைஞனுக்கும் இந்நிலை நேர்வதில்லை என்றுதான் நினைக்கிறேன்//

இப்போது புரிகிறதா காய்த்த மரம் தான் கல்லடிப்படும் என்று. மணிரதனம், பால்சந்தர் என எல்லாருக்கும் நேர்ந்ததுதான். கமலுக்கு நேரும்போது அதன் தீவிரம் அதிகம். காரணம் அவர் ரொம்ப பெரியாளு..

உங்கள் நேர்மையை மற்ற சகாக்களை விட அதிகமாகவே நான் அறிவேன். இங்கே அது குறித்த விளக்கம் எதற்கு?

//நிச்சயம் பொருத்தமாக இருந்திருக்கும். அப்போதும் இதே விமர்சனம் எழுந்திருந்தால் நான் இதே நிலைப்பாட்டில்தான் இருந்திருப்பேன், கருத்துகளைப் பதிவு செய்திருப்பேன், நம்பலாம்//

இங்கேதான் சறுக்கல். விஜய் நடித்து இந்த மாதிரி விமர்சனம் வந்திருந்தால் ஒரு சிறு புன்னகையோடு போயிருப்பீர்கள். கமல் என்னும்போதுதான் உங்கள் எதிர்ப்பு பதிவு செய்யப்படுகிறது. ஏனெனில் கமல் உங்கள் ஆதர்ச நாயகன். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இதே வேறு சிலர் அவரவர் ஆதர்சங்களுக்கு செய்யும் போது நக்கல் அடிக்கவில்லை?

ரஜினி உண்ணாவிரதம் இருந்த போது, கமல் சொன்னது நினைவிருக்கா? அவரது அரசியல் வாழ்விற்கு வாழ்த்துகள் என்றார். நிருபர்கள் எப்படி என்றபோது பார்த்தால் தெரியவில்லையா என்றார். நான் சிரித்தேன். என் அண்ணன் கமல் சொலவ்து சரி, வருவார் என்றான். புஸ்ஸாகி போகவில்லையா? அப்போது அந்த பார்வையில் அவர் ஏன் அபப்டி சொல்ல வேண்டும்? அது அவர் பார்வை. அது போல் விம்ர்சனங்கள் அவரவர் பார்வை. அவ்வளவே..

பல விஷயஙக்ளை உள்ளடக்கி நாம் பேசுவதால் குறி தவறுவது போல் இருக்கிறது.

நான் சொல்ல வருவது, இந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அது அவர் பார்வை அவ்வள்வே. பிரதி சொல்லாத பல குறியீடுகளை பைத்தியக்காரன் நான் கடவுளுக்கு சொல்லவில்லையா? அது போலத்தான் இதுவும். அது பாசிட்டிவ், இது நெகட்டிவ்

Unknown said...

என்னமோ போங்க..

பரிசல் உங்க கருத்துதான் என் கருத்தும்.. என்னால அத தாண்டி யோசிக்க தோணல..

வெண்பூ said...

கார்க்கி, நல்லா பாத்தீங்கன்னா கமலை திட்டுனா காண்டாவுறவுங்க யாருமே இந்த முறை வாய்ஸ் அதிகமா குடுக்கலை. பரிசல் மாதிரி, சஞ்சய் மாதிரி நடுநிலை ரசிகர்கள் மட்டும்தான் வாய்ஸ் குடுத்திருக்குற மாதிரி இருக்கு. கமலைத் திட்டுறவங்க எல்லாருமே, கமல் எப்படி படம் எடுத்திருந்தாலும் திட்டி இருப்பாங்க..

//
சுந்தர்ஜி சொன்னது போல் சத்தத்திற்கு அரங்கம் சிரிக்கும் போது அதன் பின்வரும் மெளனத்திற்கு அர்த்தம் தேடவே மனசு சொல்லும். ஒரு முறை இப்படி செய்துதான் பார்ப்போமே.
//
படுபாவி.. ஒரு நல்ல படத்தைப் பாக்குற எக்ஸ்பிரீயன்ஸைக் கெடுத்துக்கப்போறே.. வேறென்ன சொல்ல.

வெண்பூ said...

//
SanjaiGandhi said...
கார்க்கி, நாம வேட்டைக்காரன் போய் பார்க்கலாம். அவசரப் படாதிங்க. :))
//

சஞ்சய், என்னாச்சி, ஏன் இந்த விபரீத முடிவு???? ராகுல் உங்களுக்கு இளைஞர் அணியில சீட் இல்லைன்னு சொல்லிட்டாரா?

தற்கொலைன்றது கோழைகள் எடுக்குற முடிவு.. வேற ஒண்ணும் சொல்லறதுக்கில்லை
:))))

Thamira said...

ரொம்பவும் சவ்வாக இழுத்துக்கொண்டு போகிறது. முடிச்சுக்கலாம்.. ஹிஹி.

இறுதியாக சில வரிகள்.

சுந்தர்ஜி சொல்வதைப்போல, கார்க்கி ஆசைப்படுவதைப்போல எந்தப்படைப்பையும் அதிலிருக்கும் மறைபொருளை கண்டு, எடுத்துச்சொல்பவையாகவும், மாற்றுக்கருத்துகளை பதிவு செய்வதாகவும் ஆன பதிவுகள் வேண்டியவைதான்.

விமர்சிக்கலாம், படைப்பை புறந்தள்ளலாம். அதில் மாற்றுக்கருத்து நமக்கில்லை.

அது உதாரணமாக மாதவராஜுடையதைப் போல இருக்கலாம் என்பதையும், படைப்பையும், படைப்பாளியையும் சிதைப்பதாக அமையாமலிருக்கலாம் என்பதுமே நம் ஆசை.

Thamira said...

விஜய் நடித்து இந்த மாதிரி விமர்சனம் வந்திருந்தால் //

இதில் நடித்து என்ற சொல்லில் இருக்கும் உள்ளரசியல், நுண்ணரசியல் ஆகியவற்றை வன்மையாக கண்டித்து என் உரையை நிறைவுசெய்கிறேன். ஹிஹி.!!

selventhiran said...

நர்சிம் கவனித்ததைப் போல இதை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக எழுதி இருக்கலாம்தான். ஆனால், எந்த வரிகளின் திருப்பத்திலும் ஆயுதத்தைத் தாங்கிக்கொண்டு எவரேனும் ஒளிந்திருக்கலாம் எனும் பயமும், வீண்சர்ச்சைகள் வேண்டாமெனும் மனோபாவத்துடன் அடக்கி வாசித்திருக்கிறார் என எண்ணுகிறேன்.

சஞ்ஜெய், கார்க்கியின் பின்னூட்டங்களில் ஒளிந்திருக்கும் நகைச்சுவைகள் புன்சிரிப்பைத் தருகின்றன. அதிலும் சஞ்ஜெயின் மோப்ப நாயின் இசன், விஜயகாந்த் கொன்றொழித்த கான்கள் - கார்க்கியின் விஜய்க்கு காங்கிரஸ் காத்திருக்கிறது... அட்டகாசம் போங்கள்.

அதே சமயத்தில் பின்னூட்டம் இடும்போதெல்லாம் ஸ்மைலி போட்டாக வேண்டி இருப்பது ஒரு மனத்தாங்களைக் கொடுக்கிறது. ஸ்மைலி என்பது வெறும் ஸ்மைலி மட்டுமல்ல... விளையாட்டுக்குத்தான் சொல்றேண்டா மாப்பிள்ளை எனும் டிஸ்கி என்பதுதான் ஸ்மைலியின் நுண்ணர... ச்சே எழவு இந்த ஒருவார்த்தை படுத்தர பாடு... :)

வால்பையன் said...

மற்றொரு சராசரியின் பின்னூட்டம் இது!

samundi said...

பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்
http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post_21.html

கார்க்கிபவா said...

//படுபாவி.. ஒரு நல்ல படத்தைப் பாக்குற எக்ஸ்பிரீயன்ஸைக் கெடுத்துக்கப்போறே.. வேறென்ன சொல்ல//

சகா, நல்லதொரு ஞாயிற்றுக்கிழமையில் புதன்கிழமையை பார்த்துவிட்டேன். அதனால் பாதிப்பில்லை..

//ராகுல் உங்களுக்கு இளைஞர் அணியில சீட் இல்லைன்னு சொல்லிட்டாரா?//

அட இவரு இளைஞரே இல்லைன்னு சொல்லிட்டாராம் சகா

//இதில் நடித்து என்ற சொல்லில் இருக்கும் உள்ளரசியல், நுண்ணரசியல் ஆகியவற்றை வன்மையாக கண்டித்து என் உரையை நிறைவுசெய்கிறேன்//

ஆதி, குறும்படம்.. நினைவில் இருக்கட்டும், :))


/யோவ் கார்க்கி,

குருவி, வில்லு, வேட்டைக்காரன், அழகிய தமிழ் மகன் எல்லாமே கலக்கல். லாஜிக் எல்லாம் பாத்தாலும் சூப்பர். தயவு செய்து ஒவ்வொரு முறையும் குருவி வந்தபோது நானும் அதை தானே சொன்னேன்னு சொல்லாதீங்க//

மணிகண்டன், கையில் சேறோடுதான் அலைவீர்களா? அல்லது கையே?????

பரிசல்காரன் said...

@ வெண்பூ

என்னை நடுநிலைவாதியென்றிருக்கிறீர்கள். நானும் சில கருத்துகளில் அடமாகவே இருக்கிறேன். செல்வேந்திரன் தனது அட்டகாசமான பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல் ஒளிந்திருக்கும் வாள்(அரிவாள்?)கள் பயமுறுத்துகின்றன. அவற்றை எதிர்கொள்ள திராணி, நெஞ்சுரம் எல்லாவற்றையும் தாண்டி நேரமும் தேவைப்படுகிறதென்பதுதான் கொடுமையே. நமக்கது கிடையாது. எதிலும் ஆழச் சென்று ஆராயும் பக்குவமும் கிடையாது. நுனிப்புல்லின் ருசியில் மயங்கி மயங்கி சொக்கி தன்வசமிழந்து கொண்டிருக்கும் சாதாரணனாய் வாழ நடுநிலையென்ற கவசம் நன்றாகவே பொருந்துகிறது என்பதால் அதை அணிந்து கொண்டிருக்கிறேன்.

மணிகண்டன் said...

****
/யோவ் கார்க்கி,

குருவி, வில்லு, வேட்டைக்காரன், அழகிய தமிழ் மகன் எல்லாமே கலக்கல். லாஜிக் எல்லாம் பாத்தாலும் சூப்பர். தயவு செய்து ஒவ்வொரு முறையும் குருவி வந்தபோது நானும் அதை தானே சொன்னேன்னு சொல்லாதீங்க//


மணிகண்டன், கையில் சேறோடுதான் அலைவீர்களா? அல்லது கையே?????

****
:)- இனி துடைத்து கொள்கிறேன்.

கார்க்கிபவா said...

மணிகண்டன், வெண்பூ, சஞ்சய், ஆதி, அபரிசல் எல்லோரும் வாங்க பாடுவோம்..

லாலாலாலாலாலா

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..

Sanjai Gandhi said...

//சஞ்சய், என்னாச்சி, ஏன் இந்த விபரீத முடிவு???? ராகுல் உங்களுக்கு இளைஞர் அணியில சீட் இல்லைன்னு சொல்லிட்டாரா?

தற்கொலைன்றது கோழைகள் எடுக்குற முடிவு.. வேற ஒண்ணும் சொல்லறதுக்கில்லை//

ராகுல், இளைஞர் அணில இடம் இல்லைனு சொன்னதுக்கு தற்கொலை பண்ணிக்கனும்னா மொதல்ல பண்ணிக்க வேண்டியது வேற ஒருத்தர். நான் இல்லை வெண்பூ.. :))

Sanjai Gandhi said...

//அபரிசல்//

கார்க்கி, இதிலும் நுண்ணரசியலா..? அபலை ரேஞ்ச்ல அபரிசல் என்பதெல்லாம் ரொம்பவே ஓவரப்பு.. ;))

Saminathan said...

எல்லா இடத்திலும் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க ஆரம்பித்தால் இவனுங்கெல்லாம் ஒரு மயிரைக்கூட புடுங்க முடியாது...ஒரு வாய் சாப்பாடுகூட நிம்மதியா சாப்பிட முடியாது...

அதனால நீங்க போய்ட்டே இருங்க ப்ரதர்...

Kumky said...

அடாடாடா..

நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு..

ஒரு பட்டறைய போட்டாலும் போட்டாங்க...நுண்ணரசியல்,மறை பொருள், பிரதியினுள் ஒளிந்திருக்கும் ரகசியம்,கொலையாயுதம்.......

என்னப்பா இதெல்லாம்?

கார்க்கிபவா said...

//ராகுல், இளைஞர் அணில இடம் இல்லைனு சொன்னதுக்கு தற்கொலை பண்ணிக்கனும்னா மொதல்ல பண்ணிக்க வேண்டியது வேற ஒருத்தர். நான் இல்லை வெண்பூ.. :)//

ஹிஹிஹி.. அவருக்கு காங்கிரஸ் இல்லைன்னா திமுக, இல்லைன்னா தேமுதிக.. இல்லைன்னா சொந்த கட்சி..இல்லைன்னா பேக் டூ பெவிலியன் கோட்டைசாமி, பருந்துன்னு போயிடுவாரு.. ஆனா நீங்க சஞ்சய்?

வெண்பூ said...

கார்க்கி,

முதல்ல போய் படம் பாருங்க, உங்க ஆளைக்கூட ஒரு சீன்ல போட்டு தாக்கியிருக்காரு கமல் :))))

ambi said...

கடைசியா ஒரு லைன் சேக்க மறந்துட்டீங்க கிருஷ்ணா!

"நான் ஒரு ரஜினி ரசிகன்"

பரிசல்காரன் said...

நன்றி மணிகண்டன்

நன்றி வாலு

நன்றி ஈரவெங்காயம்

நன்றி அம்பி!

பரிசல்காரன் said...

நன்றி கும்க்கி!

Sanjai Gandhi said...

//கார்க்கி,

முதல்ல போய் படம் பாருங்க, உங்க ஆளைக்கூட ஒரு சீன்ல போட்டு தாக்கியிருக்காரு கமல் :)))) //

ஹிஹி.. செம டமாசு.. :))
ஜெட்டு பாதுகாப்பு இல்லைனாலும் பரவால்ல.. எக்சொய்னாலும் பரவால்லையாம்.. ஹய்யோ ஹய்யோ.. அந்த மேனரிசம் எல்லாம் அப்டியே அச்சு அசல் விசய் தான்.. ஒன்னு மட்டும் மிஸ்ஸிங்.. “சைலன்ஸ்.. பேசிட்டிருக்கோம்ல..” :))

வெட்டிப்பயல் said...

//சீரியஸா இருக்கேன்.. சிரிப்பு போலீங்கறீங்களே...//

அப்ப சீரியசா பேசிடுவோம் :)

//எங்களுக்கு இடைவேளையில் பப்ஸ் இருக்குமா, இல்லை முறுக்குதானா என்ற விவாதம்தான் ஓடுகிறது மனதில். நாங்கள் அறிவிலிகள்.

படம் முடிந்ததும் என் வாகனத்தை பிற வாகனங்கள் மோதாமல் எடுக்க முடியுமா, வீட்டுக்கு வரும்போது ஏதோ வாங்கிவரச் சொன்னாளே என்றெல்லாம் கேள்விகளோடு வெளிவருகிறோம் நாங்கள். இடையே படம் தந்த சில நல்லுணர்வுகளின் நினைவுகள் இதம் தருகிறது எங்களுக்கு.//

இது எல்லாம் விஜய், விஜயகாந்த், சரத்குமார் படங்களுக்கும் பொருந்தும் தானே? அதையெல்லாம் கிண்டல் பண்ணி எவ்வளவோ விமர்சனங்கள் வந்திருக்கு. அதையெல்லாம் பார்த்து சீரியசானீங்களா? (நானே நிறைய கிண்டல் பண்ணியிருக்கேன்)

அதை ரசிச்ச மக்களும் இருக்க தானே செய்கிறார்கள். சொல்லப் போனா உன்னை போல் ஒருவனை விட போக்கிரி மெகா ஹிட். அதை எத்தனை பேர் கிழிச்சி தொங்கப் போட்டாங்க. அப்ப எல்லாம் இத்தனைப் பேர் டென்ஷன் ஆகலையே. அந்த அறிவு ஜீவிகள் லிஸ்ட்ல நாமலும் இருக்கோம்.

இப்ப நம்ம ரசிச்ச படத்தை கிழிக்கறாங்கனு எல்லாரும் பொங்கறீங்க. கந்தசாமிக்கு கூட தான் கோடி கோடியா கொட்டி எடுத்தாங்க. சிவாஜியை எத்தனைப் பேர் பிரிச்சி மேஞ்சாங்க. அப்ப இத்தனைப் பேர் டென்ஷன் ஆனீங்களா?

நான் கடவுளுக்கு பைத்தியக்காரன் அண்ணாச்சி எவ்வளவு குறியீடு சொன்னாரு. நான் அதெல்லாம் ஜெமோக்கிட்ட கேட்ட போது அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைனு சொல்லி சிரிச்சாரு.

அவுங்க அவுங்க புத்திசாலித்தனத்தைக் காட்ட தான் இங்க விமர்சனமே எழுதப்படுகிறது. மத்தபடி சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.

சிம்பா said...

என்ன நடக்குது இங்க...

சிம்பா said...

அண்ணாத்த நாமெல்லாம் தியேட்டர்க்கு போனா படம் பார்போம். படம் நல்ல இல்லன படத்துல நடிச்ச ஹீரோயின பார்போம்... அதுவும் சரி இல்லனா ஹப் கோக்ல ஒரு கல்ப் அடிச்சு அப்பீட் ஆவோம்...

இப்படி மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிசுப்போட்ற ஒரு வெட்டி வேலை இருக்கு, அதையும் ஒரு கூட்டம் செஞ்சுட்டு இருக்கு என்று வெளிச்சம் போட்டு காட்டிடீங்க..

நடக்கட்டும் நடக்கட்டும்...

பெருசு said...

முதலிபாளயத்துலேயிருந்து இரவு 12 மணீக்கு மேலே
தனியா வராதீங்கன்னு சொன்னா கேக்கறதே கிடையாது.

இப்ப என்ன செய்யறது கிருஷ்ணா.

Beski said...

//படம் முடிந்ததும் என் வாகனத்தை பிற வாகனங்கள் மோதாமல் எடுக்க முடியுமா, //

இதே கவலைதான் இங்கும்.

செந்தில் நாதன் Senthil Nathan said...

உங்க பதிவுக்கு ஒரு ரிப்பிட்டு தலிவா....வேற என்னத்த சொல்ல? விடுங்கப்பா...

Karthik said...

//என்ன செய்ய.. நாங்கள் சராசரிகள்.

தப்பா எடுத்துக்காதீங்ணா, படமே நம்மைப் போல் சராசரி ஒருவனின் அரசியல் பற்றியதுதானே?

ஆனா உண்மையிலேயே அட்டகாசமா எழுதியிருக்கீங்க. :)