கவிஞர். மகுடேசுவரனுடனான சந்திப்பு குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். முடிந்த பாடில்லை. ‘இப்பொழுது இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் நடுவில் ஏன் அதிகம் எழுதவில்லை’ என்று கேட்டதற்கு அவர் ‘போதுமென்று நினைத்ததுதான்’ என்று கூறியதும் காரணமாக இருக்கலாம்.
********************
டாகடர்கள் பற்றிய விஜய் டிவி நீயா நானா’ வில் எழுத்தாளர் ஜெயமோகனின் நியாயமான கேள்விகளுக்கு எதிர்கேள்விகள் கேட்டே கடத்தினரே ஒழிய நேரடியான பதிலை அவர்கள் சொன்னார்களில்லை. அதுவும் விதண்டாவாதம் போல பேசிவிட்டு அது சரி என்பது போல அவர்கள் கைதட்டிச் சிரித்துக் கொண்டது அதைவிடவும் கேவலமாகவே இருந்தது. மக்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறைகளில் மேல் முழு நம்பிக்கை இல்லை. வெறுப்புதான் இருக்கிறது. வேறு வழியில்லை என்பதால் போகவேண்டியிருக்கிறது என்று ஜெமோ சொன்னது நூற்றுக்கு நூறு சரி.
இதைப் படியுங்கள்...
பீகாரில் மின்சார வசதியே இல்லாத கிராமங்களிலிருந்து வரும் நோயாளிகளை எக்ஸ்ரே எடுத்து வரும் படி அருகிலிருக்கும் எக்ஸ்ரே செண்டருக்கு அனுப்புவார்கள் டாக்டர்கள். அங்கே எக்ஸ்ரே இருக்காது. ஆளுயர ஃப்ரிட்ஜ் இருக்கும். அதன்முன் நோயாளியை நிற்க வைத்து படக்கென்று கதவைத் திறந்து மூடுவார்கள். லைட் வேறு எரியுமா... கிராமத்து ஆசாமியும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு விட்டதாக நினைத்துக் கொள்வார். கீழே தயாராக வைக்கப்பட்டிருக்கும் பழைய எக்ஸ்ரே ஒன்றைக் கொடுத்து விடுவார்கள். டாக்டர் அதைப் பார்த்து சிகிட்சை என்ற பெயரில் ஏதாவது சொல்லி அனுப்புவார். மீண்டும் அந்த பழைய எக்ஸ்ரே அந்த செண்டருக்கே போய்விடுமாம்.
நம்பவே முடியவில்லையல்லவா? விகடன் பிரசுரமான ‘போஸ்ட் மார்ட்டம்’ நூலில் படித்தது இது. டாக்டர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்று தனது Trick or Treat ஆங்கிலப் புத்தகத்தில் எழுதிய டாக்டர் கே.ஆர். சேதுராமன் (புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் சீனியர் டாக்டர்) ஜூனியர் விகடனில் எழுதிய தொடர்தான் போஸ்ட் மார்ட்டம். இதைப் படித்தாலே போதும் Noble Profession எனப்படும் மருத்துவத்துறையில் என்னென்ன அவலங்கள் நடக்கிறது என்று புரியும்.
****************************************
சில பிரபலங்கள் வரும் விளம்பரங்கள் எரிச்சலடையச் செய்கிறது. உச்சபட்ச உதாரணம் விவேக் வரும் நாதெள்ளா ஜூவல்லரிஸ் விளம்பரம். ஒரு க்ரியேட்டிவிட்டியும் இல்லாத தட்டையான விளம்பரம். பிரகாஷ்ராஜ், நாசர், அர்ஜூன், நமீதா என்று ஆறுக்கொரு இரும்புக் கம்பியை விளம்பரம் செய்கிறார்கள். சூர்யா வரும் விளம்பரங்கள் ஓரளவு பரவாயில்லை என்று நினைத்தால் அவரும் நவரத்னா தைலத்தின் மொக்கையான ஸ்க்ரிப்டில் நடித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. ஆசிஷ் வித்யார்த்தி ஏதோ ஒரு ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ் விளம்பரத்தில் வந்து மகனைத் திட்டிவிட்டுப் போகிறார்.
நான் சொல்வது பொருட்களின் தரம் பற்றியெல்லாம் இல்லை. விளம்பரங்களின் க்ரியேட்டிவிட்டியை. கொஞ்ச நாட்களாகவே நல்ல க்ரியேட்டிவான விளம்பரங்களையே காணமுடியவில்லை.
******************************************
கவி.மகுடேசுவரனுடனான சந்திப்பில் கி.ராஜநாராயணன் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது எழுத்தில் எழுத முடியாத ’ஊமையன் சாட்சி சொல்லும் கதை’ யூ டியூபில் இருக்கிறது என்றேன். செல்வேந்திரன் இதையெல்லாம் சொல்ல மாட்டீரா ஐயா’ என்று கடிந்து கொண்டார். அவருக்காக...
****************************************
ஈரவெங்காயம் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த எங்கள் சேர்தளம் (திருப்பூர் வலைப்பதிவர் குழுமம்) பொருளாளர் சாமிநாதன் பூந்தளிர் என்று தன் வலைப்பூ பெயரை மாற்றியது பலருக்கும் தெரிந்திருக்கும். நான் உட்பட பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்தது அவரது கவிமுகம்.
சமீபத்தில் அவர் தன் வலையில் எழுதிய நானும் மரணமும் கவிதை கவிதையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடிக்கடி அவர் எழுத வேண்டும் என்பதே எங்கள் அவா.
***********************************
கார்க்கி சொன்னது போல எந்திரன் பாடல்களை ஹெட்ஃபோனில் கேட்கும்போது புதுப்புது ஒலிகள் கேட்டு புல்லரிக்க வைக்கிறது. இரண்டு நாட்களாக அங்குமிங்கும் கேட்ட வரையில் மக்களுக்கு பிடித்திருக்கிறது என்பது தெரிகிறது. புதிய மனிதா முந்திக் கொண்டிருக்கிறது. ரஜினி உருவாக்கிய ரோபோ ‘என் தந்தைமொழி தமிழல்லவா’ என்று சொல்வதில் கவிஞர் வைரமுத்து தெரிகிறார். அந்தப் பாடலில் எந்த வரி வசீகரன் பாடுவது, எந்த வரி சிட்டி பாடுவது என்று தெரியவில்லை. ஆவலாக இருக்கிறது திரையில் காண.
(வசீகரன் = விஞ்ஞானி ரஜினி, சிட்டி = ரோபோ ரஜினி)
**************************************************
.
32 comments:
ம்..நல்லாருக்கு ஜி
கேபிள் சங்கர்
ம்..நல்லாருக்கு ஜி
கேபிள் சங்கர்
ப்ரொஃபைல் போட்டோ சூப்பரு...!
எக்ஸ்ரே மேட்டர் வருத்தம்தான்..
கி.ரா.பிரமிப்பு..
ப்ரொபைல் போட்டோ, கலக்கல்.
ஆமா, டாக்டர்கள் மேல் ஏன் இத்தனை காண்டு????
உங்களை யாரு தல விளம்பரங்களை எல்லாம் பார்க்கச் சொன்னது???
பாஸ் நீங்களும் மேல பாக்க ஆரம்பிச்சுட்டீங்களா?......ரைட்டு!....
////பீகாரில் மின்சார வசதியே இல்லாத கிராமங்களிலிருந்து வரும் நோயாளிகளை எக்ஸ்ரே எடுத்து வரும் படி அருகிலிருக்கும் எக்ஸ்ரே செண்டருக்கு அனுப்புவார்கள் டாக்டர்கள். அங்கே எக்ஸ்ரே இருக்காது. ஆளுயர ஃப்ரிட்ஜ் இருக்கும். அதன்முன் நோயாளியை நிற்க வைத்து படக்கென்று கதவைத் திறந்து மூடுவார்கள். லைட் வேறு எரியுமா... கிராமத்து ஆசாமியும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு விட்டதாக நினைத்துக் கொள்வார். கீழே தயாராக வைக்கப்பட்டிருக்கும் பழைய எக்ஸ்ரே ஒன்றைக் கொடுத்து விடுவார்கள். டாக்டர் அதைப் பார்த்து சிகிட்சை என்ற பெயரில் ஏதாவது சொல்லி அனுப்புவார். மீண்டும் அந்த பழைய எக்ஸ்ரே அந்த செண்டருக்கே போய்விடுமாம்./////
அண்ணே ,
இதெல்லாம் பிஸ்கோத்து ,படிக்காத பாமரமக்களை ஏமாற்றுவது ,இங்கே இன்னும் நிறைய இருக்கிறது ...,நான் மொத்த கொள்முதல் மருந்தகத்தில் வேலை பார்க்கும் போது நடந்த கொள்ளை இதை விட மோசமானது...மெடிக்கல் ஷாப்பில் margin profit என்ன என்று நினைகீர்கள் ....,நீங்கள் தலைவலி ,சளி போன்ற மருந்துகளை வாங்கும் போது , 200 - 300 % லாபம் ...,அதை விட கொள்ளை surgical items நான் வேலை பார்க்கும் போது அதில் MRP யே இருக்காது...,மெடிக்கல் ஷாப் காரர்கள் சொல்வது தான் விலை ....
//மருத்துவத்துறையில் என்னென்ன அவலங்கள் நடக்கிறது என்று.//
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும்
//புதுப்புது ஒலிகள் கேட்டு புல்லரிக்க வைக்கிறது.///
பாத்து நண்பா... மாடு, ஆடு மேஞ்சுட போகுது
//.. கொஞ்ச நாட்களாகவே நல்ல க்ரியேட்டிவான விளம்பரங்களையே காணமுடியவில்லை. ..//
சில காலம் முன்பு ஒரு சில விளம்பரங்களுக்காக காத்திருந்து பார்த்ததுண்டு.. இப்போது விளம்பரம் என்றாலே கடுப்பு வருகிறது..
ஆமா மேல என்ன தெரியுதுங்க..??!!
ஒரு மாத்திரை விலை டாக்ஸ் எல்லாம் சேர்த்து 3 .00 ருபாய் ...,ஆனால் அதே மாதிரி பல கம்பனிகள் at same combination same drug ,same packing ,same design ஒரு மாத்திரை 0.15 காசுகளுக்கு மொத்தகொள்முதல் மருந்தகம் கொடுக்கும் ...அதை அவர்கள் 3 .00 ருபாய் விற்பார்கள் ....,இதில் offer வேறு கொடுப்பார்கள் ...10 +1 ,10 +5 என்று
பதிவு அருமை.
மருத்துவ கொள்ளைகளுக்கு நாம் பீகாரோ, ஜூனியர் போஸ்டோ போக வேண்டாம்.
லேசாக முழங்கால் வலிக்கிறது என்று மலர் மருத்துவ மனை அல்லது அப்பல்லோ அல்லது காளியப்பா மருத்துவமனை செல்லுங்கள். உடனே எக்ஸ்ரே, மண்டையில் ஸ்கேன், ரத்த அழுத்தம், கொழுப்பு, உறிஞ டெஸ்ட் எனப் பார்த்து குறைந்த பட்ச பில் இரண்டாயிரம் போட்டு விடுவார்கள். அதுவும் நிறுவன காப்பெடு இருக்கிறது என்றால் கேட்கவே வேண்டாம், அவர்களுக்கு அன்று தீபாவளி தான்.
////ஆனால் அதே மாதிரி பல கம்பனிகள் at same combination same drug ,same packing ,same design ஒரு மாத்திரை 0.15 காசுகளுக்கு மொத்தகொள்முதல் மருந்தகம் கொடுக்கும் ...அதை அவர்கள் 3 .00 ருபாய் விற்பார்கள்////
ஆனால் இதன் தரம் குறைவாகத்தான் இருக்கும்
வானத்துல அண்ணாந்து என்னப்பார்க்குறிங்க பரிசல்... கூரையை பிச்சுட்டு ஏதாச்சும் விழும்னா??? :))
பீகார் எக்ஸ்ரே மேட்டரு படிச்சு ஷாக்காயிட்டேன்... இப்படியுமா பண்ணுவானுங்க...??
trick or treat ஜெமோ எழுதனதா???
//இதைப் படித்தாலே போதும் Noble Profession எனப்படும் மருத்துவத்துறையில் என்னென்ன அவலங்கள் நடக்கிறது என்று.//
டாக்டர் புரூனோ எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து இந்த பின்னூட்ட பக்கத்தை அதகளப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :))
அவியல் அருமை.
நல்லாருக்கு.
(வசீகரன் = விஞ்ஞானி ரஜினி, சிட்டி = ரோபோ ரஜினி)
//
அப்படியே முடிச்சிருக்க வேண்டியதுதானே. ஏன் இந்த விளக்கம்? அந்த பயம் இருக்கட்டும்.
எக்ஸ்ரே - இப்பிடியெல்லாமா நடக்குது?
பூந்தளிர் - அறிமுகத்துக்கு நன்றி,.
@ நாஞ்சில் ப்ரதாப்
Trick or Treat மற்றும் ’போஸ்ட் மார்ட்டம்’ - இரண்டுமே புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் சீனியர் டாக்டர் கே.ஆர்.சேதுராமன் எழுதிய நூல். நான் அதை எழுதாமல் விட்டுவிட்டதால் தகவல் பிழையாகப் போய்விட்டது. குறிப்பிட்டமைக்கு நன்றி. இப்போது திருத்திவிட்டேன்..
மிக பெரிய ஆஸ்பத்திரிகளில் வேலை பார்க்கும் டாக்டர்களும் அதில் கலந்து கொண்டார்களா?அரசாங்க டாக்டர்கள் மட்டுமா? டாக்டர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசிய டாக்டர் ரவிசங்கர் மிக குறைந்த அளவிலே ஃபீஸ் வாங்கிய ஒரு மருத்துவர்.
பதிவு அருமை.
பீகார் எக்ஸ்ரே மேட்டர் ............... எப்படியெல்லாம் காசு பிடுங்குறாங்க...
fm ல கவின்ஸ் தயிர் பற்றி ஒரு விளம்பரம் வரும் கேட்டுப் பாருங்க பரிசல், ரொம்ப அருமையா இருக்கும். அம்மாவின் குரலும் மகனின் குரலும் அப்படி ஒரு அழகு.
//இதைப் படித்தாலே போதும் Noble Profession எனப்படும் மருத்துவத்துறையில் என்னென்ன அவலங்கள் நடக்கிறது என்று.//
டாக்டர் புரூனோ எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து இந்த பின்னூட்ட பக்கத்தை அதகளப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :))
பீகாரில் தொடர்வண்டியில் பயணச்சீட்டு எடுக்க வேண்டாம்
ஆகவே பரிசல் சென்னைக்கு வரும்போதெல்லாம் பயணச்சீட்டு இல்லாமல் தான் வருகிறார் என்று கூறலாமா
போத்திஸீன் ஆடி விளம்பரம் செம ஹிட். ஒரு முறை தி.நகர் போத்திஸூக்கு சென்றால் அதன் வீரியன் உணரலாம். எனக்கு சமீபத்திய கேட்பரிஸ் புடிச்சிருக்கு. சுரேகா அண்ணன் டீம் அடுத்த விளம்பரம் எடுக்கும்போது சேர்ந்துக்கொங்க. என்னை சேர்க்க மாட்டாரு. காரணமிருக்கு :))
எந்திரன் எல்லோருக்கும் புடிச்சிருக்கு சகா, ரஜினியை வெறுப்பவர்களைத் தவிர எல்லோருக்கும்
நல்ல அலசல் :))
ப்ரொபைல் போட்டோ, கலக்கல்.
பீகார்ல நடந்ததது கேவலம். அதற்காக மருத்துவர்கள் எல்லாருமே அப்படி என்று சொல்ல முடியாதே.
தலைவன் = ரஜினி = தலைவன் = ரஜினி = தலைவன் = ரஜினி.
எல்லோரும் புரொஃபைல் ஃபோட்டோ நல்லா இருக்குன்னே சொல்றாங்க. எடுத்த கைக்கு வைரத்துல ஏதாவ்து செஞ்சு போடுங்க
அறிமுகத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி ப்ரதர்..கண்டிப்பாக எழுதுகிறேன்..
மேலும் மகுடேசுவரன் உடனான சந்திப்பில் நான் கேட்ட கேள்விகளையும் கொஞ்சம் நினைவில் வையுங்கள்..
//shortfilmindia.com said...
ம்..நல்லாருக்கு ஜி
கேபிள் சங்கர்//
Repeatttuuuu
Post a Comment