ஒரு விழாவிற்கு குடும்பத்தோடு சென்றிருக்கிறார் நண்பர் அப்துல்லா. அவரது மனைவியிடம் யாரோ ‘உங்களுக்கு ரெண்டுமே மகளாமே? மகன் இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார்கள். நம் அப்துல்லா சும்மா இருப்பாரா? ‘அவங்களுக்காவது ரெண்டு பொண்ணுங்களோட ஒரு பையனும் இருக்கான்.. எனக்கு மூணுமே பொண்ணுங்க’ என்றாராம் மனைவியின் தோளைப் பிடித்தபடி.
சமீபத்தில் நான் மிக மிக ரசித்த விஷயம் அவரது இந்தப் பதில்.
****************************************
ரோபோ இந்தி இசைவெளியீடு. ரஜினியின் பேச்சைப் பாருங்கள். தன்னைப் பற்றித் தானே எப்படி கமெண்ட் அடித்துக் கொள்கிறார் என்று கவனியுங்கள்.. கொஞ்சம் சிரத்தையாக கவனித்தால் சூப்பர் ஸ்டார் ஏன் ஸ்டைல் மன்னன் என்பதும் தெரியும்...
இதில் ஸ்டைலுக்கு எங்கே விளக்கம் என்று கேட்கிறீர்களா? ‘நான்’ என்பதைச் சுட்டிக் காட்ட நீங்கள் எப்படி கைகாட்டிக் கொள்வீர்கள்? ஒரு அரைநிமிடம் யோசியுங்கள்.
யோசிச்சாச்சா? சரி... இதில் 2.12 நிமிடத்தில் ரஜினி ‘நான்தான் ஹீரோ’ எனும்போது எப்படி அவர் கை காட்டிக் கொள்கிறார் என்று மீண்டும் கவனியுங்கள்.
படையப்பாவில் கே.எஸ்.ரவிகுமார் எழுதியது மெத்தச் சரி: ஸ்டைல் இவரது ரத்தத்திலேயே இருக்கிறது!
*****************************************
செல்வா என்றொரு பதிவர் இருக்கிறார். என் நண்பன். நாள்தவறாமல் - தினமும் - ஒரு மொக்கையை எஸ்ஸெம்மெஸ் அனுப்பும் நண்பன். ரொம்பவும் வெறுப்பில் இருக்கும்போது இவன் அனுப்பும் எஸ்ஸெம்மெஸ் ஆறுதல் தரும்.
இரண்டு நாள் முன்பு இவன் அனுப்பிய ஒரு கேள்வி மண்டையைக் குழப்பியது. உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்:
‘இந்தத் தவளை இருக்குல்ல தவளை.. அது உட்கார்ந்திருக்கா.. நின்னுகிட்டிருக்கா.. இல்ல படுத்துட்டிருக்கா? இதுல ஏதோ ஒண்ணுதான் பதில்ன்னா அதோட மத்த ரெண்டு வடிவத்தோட போஸ் எப்படி இருக்கும்?’
ஹையோ... ஹையோ!!
**********************************************
நான் மகான் அல்ல படத்துக்குப் போனப்ப பாஸ் என்கிற பாஸ்கரன், மங்காத்தா மற்றும் கீழ இருக்கற படத்தோட -ன்னு மூணு ட்ரெய்லர் போட்டாங்க. அதுல அனானிமஸா எல்லாராலும் ரசிக்கப்பட்டது இந்தப் படத்தோட ட்ரெய்லர்தான்:
படம் பேரு: ‘வ க்வாட்டர் கட்டிங்’ (எழுத்துப் பிழையெல்லாம் இல்லை. வ - க்வாட்டர் கட்டிங்தான் பேரு) ஆண்டவா வரி கிரின்னுட்டு பேரை மாத்தாம இருக்கணுமே..
அதுல வ-வுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியல. ஆனா ரகளையா இருக்கு ட்ரெய்லர். நீங்களே பாருங்க...
இந்த ட்ரெய்லர் பார்க்கறப்ப எனக்கு கார்க்கியும், வெண்பூவும் நினைவுக்கு வந்தாங்க.. கார்க்கி ஏன்னு சிவா எண்ட்ரி பார்த்தா உங்களுக்கு தெரியும். (சிவா 1:26ல கேட்கற கேள்வியும் மாடுலேஷனும் செம!)
வெண்பூ ஏன்-னா, எஸ்பி சரணைப் பார்த்தா எனக்கு வெண்பூ ஞாபகம் வரும். பாடி சைஸும், பாடி லேங்க்வேஜும் ஒரு காரணம். அதுவும் இதுல சரண் 1:47 நிமிஷத்துல சொல்றதப் பார்த்தா கன்ஃபர்மா இனி எஸ்பிசரண்னா வெண்பூ ஞாபகம்தான் வரும்!
*******************
என்னைக் கவர்ந்த கவிதை:
யாரென்று தெரியாது
சிரித்து விட்டுப் போனாய்
குளுமை குளுமை
உனக்குத் தெரிந்திருக்கலாம்
சூழலுக்கு அர்த்தமூட்ட
இப்படித்தான்
கற்றுப் பழக வேணும்
சிரிப்பை
வாய்ப்பு நேர்ந்தால்
அடுத்தமுறை சந்திக்கும்போது
நான் சிரிப்பேன்
முதலில்
-ரவி சுப்பிரமணியன்
*
28 comments:
Avial alliruchu. Thavalai sms super
Ada me the 1 and 2
அவியல் நலம்.. தவளை மேட்டர் படா சூப்பரு :)
அப்துல்லா :)))))
வ - என்றால் தமிழ் எண்களில் கால் (1/4).
குவாட்டர் கட்டிங் என்பதற்காக வ என்று பெயர் வைத்திருப்பார்களோ?
தவளை மேட்டர் super.
ரொம்ப நாள் கழிச்சு சாட்ல ஸ்ரீராம் என்று ஒரு நண்பர் வந்தப்போ நானும் இது போன்ற ஒரு பதில்தான் தந்தேன் (அப்துல்லா). கார்க்கி, எங்கிருந்தாலும் உடன் வரவும். great men think alike என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.
தவளை மேட்டர் சூப்பர். நீங்களும் யார்ட்டயாவது வட்ட வட்டம் சிக்கிக்கிறீங்க.
செல்வாவோட எஸ்.எம்.எஸ் இம்சை உலகப்புகழ்ப்பெற்றது.. இந்த முகப்பு பக்கம் ரொம்ப அழகா இருக்கிறது :)
அடப்பாவிகளா.. என் இமேஜை டேமேஜ் பண்ணுறதுல உங்களுக்கு என்னய்யா அவ்வளவு சந்தோசம்??? ராகவன் அண்ணன் சென்னை வந்தப்ப என்னை பாத்துட்டு என்ன சொன்னாருன்னு அவர்ட்டயே கேளுங்க.. :))
இந்த ஃபோட்டோல க்ரீம் கலர் டீ சர்ட்ல இருக்குற ஒருத்தனைப் பாத்து உமக்கு எஸ் பி சரண் நினைவுக்கு வந்தா நீங்க ஒரு நல்ல கண் டாக்டரை பாக்கணும் பரிசல்.. :)
//இந்தத் தவளை இருக்குல்ல தவளை.. அது உட்கார்ந்திருக்கா.. நின்னுகிட்டிருக்கா.. இல்ல படுத்துட்டிருக்கா? இதுல ஏதோ ஒண்ணுதான் பதில்ன்னா அதோட மத்த ரெண்டு வடிவத்தோட போஸ் எப்படி இருக்கும்///
அய்யோ காப்பாத்துங்க.......
தலைவர் - இதே போல தான் "குசேலன்" ஆரம்ப விழாவுல தலைவரு காமெராவுக்கு போஸே கொடுப்பார்....பாருங்க...!!!! ஒரே தலைவர்...அவர் மட்டும் தான்...
அப்துல்லா - அட்டகாசம்...
வழக்கம் போல கலக்கல் காக்டெயில் பரிசல்!
நேரமிருப்பின் இங்கயும் கொஞ்சம் வாங்க..
http://balajisaravana.blogspot.com/2010/08/blog-post_23.html#comments
அவியல் நல்லா அவிஞ்சி இருக்கு....
வ என்றால் தமிழில் குவாட்டர்... அதாவதுண்ணா 1/4.... ;)
Rajini Rocks
அட செல்வா எனக்கும் அதே மெசேஜ் அனுப்பியிருந்தார்.... :)
Cool@@
rompa nallaa iruthathu.
thavalai joke. veku arumai!
ஹய்யோ ஹய்யோ ..
ரொம்ப நன்றி அண்ணா ..என்ன பத்தி சொன்னதுக்கு ..
நான் அனுப்புற sms பத்தி சொன்னதுக்கு நன்றி.
ஆனா நீங்க இன்னும் விடையே சொல்லல ..?!?
அவியல் சூப்பர்,அதிலும் தவள மேட்டர் பின்றிங்க போங்க.
அ.அ.ப.
நம் நண்பர் செல்வா பற்றி சொன்னதற்கு நன்றி பாஸ்
நல்ல இருக்குங்க பரிசல்..
மேலே முகப்புப் படம் பழைய சஞ்சிகைகளை நினைவுப்படுத்துகிறது. ரஜினி ஸ்டைலை பற்றித்தான் எல்லோருக்கும் தெரியுமே. எத்தனை சுவாரசியமாய் கதை சொல்கிறார் பார்த்தீர்களா?
// செல்வாவோட எஸ்.எம்.எஸ் இம்சை உலகப்புகழ்ப்பெற்றது //
இந்த இம்சை தான் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு, நிச்சயம் தவறவிடக்கூடாத படம்னு எனக்கொரு குறுஞ்செய்தி அனுப்பியது.
மறுநாள் அதே படத்துக்கு இப்படியொரு பதிவு (http://www.vadakaraivelan.com/2010/08/blog-post.html) வந்தபின் தான் உண்மை புரிந்தது.
அவியலின் குவியல் --ரசனை
ரஜினி வீடியோ டாப்பு.
செம செம
செல்வாவின் குறுஞ்செய்திகள் எப்போதும் சிந்திக்கும்,சிரிக்கவும்
வாழ்த்துக்கள் செல்வா :)
Post a Comment