Monday, August 2, 2010

எந்திரன் - இசை

ஜினியைப் பற்றி கே.பாலச்சந்தர் கல்கி தொடரில் ஒருமுறை குறிப்பிட்டிருந்தது..

ஒரு நடிகனுக்கு அவன் கேரியரில் ஐந்து நிலைகள்.

1) இந்தப் படத்தில் அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் யார் என எல்லாராலும் கேட்கப்படுவது முதல்நிலை.

2) இந்தப் படத்தில் இன்ன பாத்திரத்தில் நடித்தவர் சூர்யகுமார் என்று மக்களால் அறியப்படுவது சொல்லப்படுவது இரண்டாம் நிலை.

3) அந்தப் படத்தில் சூர்யகுமார் நடித்திருக்கிறார் என்று மக்கள் பார்க்க வருவது மூன்றாம் நிலை.

4) சூர்யகுமார் நடித்திருக்கும் படம்தான் பார்க்க வேண்டும் என்று மக்களை நினைக்க வைப்பது நான்காம் நிலை.

5) ஏதாவது ஒரு படத்தில் ஏதாவது ஒரு சீனில் சூர்யகுமார் என்று பெயர் வந்தாலே விசிலடித்து மக்கள் ரசிப்பது ஐந்தாவது நிலை.

இதைச் சொன்ன கே.பாலச்சந்தர், அடுத்த வரியாக ‘ரஜினிகாந்த் இந்த ஐந்து நிலைகளையும் தாண்டி எங்கேயோ போய்விட்டார்’ என்றிருப்பார்.
அது கிட்டத்தட்ட பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை. இப்போது அதே ரஜினிகாந்த் அதையும் தாண்டி எங்கேயோ போய்தான் விட்டார். அவர் பெயர் வந்தால், அவர் பேசினால், பேசாவிட்டால் எல்லாமே நியூஸ்தான். அப்படிப்பட்டவர் ஏன் ரிஸ்க் எடுத்து சவாலான கேரக்டரில் எல்லாம் நடிப்பதில்லை?

சேலத்தில் ஒரு திரையரங்க முதலாளி தனது தியேட்டர் இருக்கும் வீதியில் காரில் நின்று கொண்டிருந்தபோது அந்த வீதியில் போண்டா, வடையைத் தள்ளுவண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் தனது மனைவியிடம் ‘அடுத்தவாரம் சாமான்லாம் அதிகமா வாங்கணும் புள்ள. தலைவர் படம் ரிலீஸ் ஆகுதுல்ல’ என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அடுத்தவாரம் அவரது திரையரங்கில் ரஜினி படம். சேலம் விநியோகஸ்தராகவும் இருக்கும் அவர் சென்னையில் ரஜினியைச் சந்தித்தபோது இதைச் சொல்லி ‘உங்க படம் ரிலீஸ்னா வீதில வடை போண்டா விக்கிறவர் வரைக்கும் பிழைக்க முடியுது சார்’ என்றாராம். ‘இந்தக் காரணத்துனாலதான் ரிஸ்க் எதுவும் எடுக்காம மக்களுக்கு பிடிச்ச மாதிரி கேரக்டர்ஸ் மட்டும் பண்றேன்’ என்று சொன்ன ரஜினி, ‘இப்ப தயாரிப்பாளர்களுக்குத்தான் பஞ்சம். அடுத்த முறை என்னைச் சந்திக்கறப்ப ஒரு வெற்றிப்பட தயாரிப்பாளரா உங்களை நான் பார்க்கணும்’ என்றாராம் சிரித்தபடி. அதேபோல தனது இரண்டாவது படம் நல்ல வெற்றியை ஈட்ட ரஜினியைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அவர் கஜினி தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன்.

சும்மா இருந்தாலே நியூஸ் என்ற நிலையில் சூப்பர் ஸ்டாரை வைத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் எந்திரன் படம் இயக்குகிறார் என்றதுமே காட்டுத்தீயாக அதைப் பற்றி நியூஸ்கள். எப்படா படம் ரிலீஸ் என்றிருந்த ரசிகர்களுக்கு இப்போது இசை வந்து கொஞ்சம் தீனி போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது.

31ம்தேதி இசை வெளியீடு என்றதும் நான் வழக்கமாக வாங்கும் சி.டி.கடைக்கு ஃபோன் செய்தபோது ‘காலைல ஏழு மணிக்கெல்லாம் கடையைத் திறந்துடுவோம்’ என்றார்கள். எட்டு மணிக்கு அலுவலகம் செல்லும் வழியில் போய் வாங்கும்போது அந்தக்கடையிலும், பக்கத்துக் கடையிலுமாக மொத்தம் 20, 25 பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ரஜினிக்கு மட்டும்தான் இது சாத்தியம். (தளபதி கேசட் ரிலீஸ் ஆனபோது உடுமலையில் ஒரு கேசட் செண்டரில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸை அழைத்திருந்தார்கள். இன்றைய டவுன்லோடிங் யுகத்தில் 25 பேரே ஜாஸ்திதான்!)

பாடல்கள் குறித்த எனது ஒருவரி விமர்சனமும் பிடித்த வரிகளும்..

1) புதிய மனிதா..
குரல்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரஹ்மான், கதீஜா ரஹ்மான்.
வரிகள்: வைரமுத்து

மெதுவாக ஆரம்பிக்கும் பாட்டில் ‘நான் கண்டது ஆறறிவு’ என்று எஸ்.பி.பி-யின் கம்பீர குரல் வரும்போது நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

கவர்ந்த வரிகள்: ஆரம்ப வரிகளான ‘எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து, வயரூட்டி, உயிரூட்டி ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி அழையாத உடலோடு வடியாத உயிரோடு..’

2) காதல் அணுக்கள்...
குரல்கள்: விஜய் ப்ரகாஷ், ஸ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து

ஒருமாதிரி ஹஸ்கியாக விஜய் ப்ரகாஷ் இந்தப்பாடலை ஆரம்பிக்கும் இடம் மிக அற்புதம்.

கவர்ந்த வரிகள்: ஆரம்ப வரிகள் மற்றும்.. ‘நீ முற்றும் அறிவியல் பித்தன் ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்’

3) இரும்பிலே ஓர் இருதயம்
குரல்கள்: A R ரஹ்மான், Kash n' Krissy
வரிகள்: மதன் கார்க்கி

இந்தப் பாடலின் ஆரம்ப இசை இனி தியேட்டர்களில் ஸ்க்ரீனை உயர்த்தும்போது உபயோகப்படுத்தப்படலாம். பாடலில் பெண்குரல் வசீகரிக்கிறது.

கவர்ந்த வரிகள்: ‘உயிரியல் மொழிகளில் எந்திரன்தானடி. உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி’

4) சிட்டி டான்ஸ் ஷோ கேஸ்

5) அரிமா அரிமா..
குரல்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து

இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் என்று ரஜினி புகழோடு ஆரம்பிக்கும் டூயட்!

கவர்ந்த வரிகள்: ‘அஃறிணையின் அரசன் நான். காமுற்ற கணினி நான். சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும் சிலிகான் சிங்கம் நான்...’

6) கிளிமாஞ்சாரோ..
குரல்கள்: ஜாவேத் அலி, சின்மயி
வரிகள்: பா.விஜய்

முதல்வனே வனே-வை ஞாபகப்படுத்தும் பாடல்.

கவர்ந்த வரிகள்: ‘வேர்வரை நுழையும் வெய்யிலும் நான் - நீ இலைத்திரை ஏன் இட்டாய்?’

7) பூம் பூம் ரோபோடா..
குரல்கள்: யோகி பி, கீர்த்தி சகாதியா, ஸ்வேதா மோகன், தன்வீ ஷா
வரிகள்: மதன் கார்க்கி

ஆரம்பமே கலக்கல். டெக்னிகல்+காதல் கலந்து வாலி இன்னும் இளமையானால் எப்படி எழுதியிருப்பாரோ அப்படி எழுதியிருக்கிறார் கார்க்கி. துள்ளலான பாடல்.

கவர்ந்த வரிகள்: ஏறக்குறைய எல்லாமே...

இரண்டு நாளில் கேட்டதில் சட்டென எனக்கு பிடித்த மாதிரி இந்தப்படத்தின் பாடல்களை வரிசைப்படுத்தினால்...

1) பூம் பூம் ரோபோடா
2) காதல் அணுக்கள்
3) இரும்பிலே ஒரு இருதயம்
4) புதிய மனிதா
5) கிளிமாஞ்சாரோ
6) அரிமா அரிமா

விண்ணைத் தாண்டி வருவாயா-வில் புதிய முயற்சிகளும், மெலடி, ஸ்பீட் என்று எல்லா வகையையும் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான் ரஜினி + ஷங்கர் படத்தில் ஏதும் முயற்சிக்க முடியாமல் நின்றிருப்பது தெரிகிறது. பார்க்கலாம் போகப் போக என்ன தாக்கத்தைத் தருகிறதென்று..


.

25 comments:

Cable சங்கர் said...

எந்திரன் பற்றிய நானும் என் பங்குக்கு கருத்து சொல்லியிருக்கிறேன்.:)

ரிஷபன்Meena said...

ரஜினி ஐந்தாம் நிலையை எல்லாம் கடந்துட்டார் சரி.

நம்ம விஜய் -கூட நிலைகளைக் கடந்தவர் தான்.

விஜய் நடித்த படம்டா போயிடாதே என்று மக்களை நினைக்க வைக்கும் உன்னத நிலை

சுசி said...

:))

Subash said...

//எல்லா வகையையும் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான் ரஜினி + ஷங்கர் படத்தில் ஏதும் முயற்சிக்க முடியாமல் நின்றிருப்பது தெரிகிறது. பார்க்கலாம் போகப் போக என்ன தாக்கத்தைத் தருகிறதென்று..
//

anna, இந்த இசை முழுக்க முழுக்க Techno genere வகை இசை. தமிழில் றாரும் முயற்சிக்கவில்லை இதுவரை.

யுவனின் சில இசை வடிவங்கள் இந்த வகையாக வந்ததுண்டு. ஆனால் அவை ராக் கலந்திருக்கும். எந்திரனில் எல்லாமே pure techno :)

நிச்சயமாக புதிதுதான்.
hehehe
Subash

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல அலசல்...

பாடல்களும் அருமை..

http://rkguru.blogspot.com/ said...

yellamey magic...mayam

Unknown said...

நல்ல அலசல்.....

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்கள் கொண்டுதான் ருசியரியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்கள் கொண்டே ருசியரியும்.

எனக்கு எல்லாமே பிடித்திருக்கிறது.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

waiting for enthiran.
ரஜினியின் வாழ்நாள் கனவல்லவா 'ஐஷு'வுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்பது.

தமிழ் குமார் said...

ரஜினி படத்த பத்தி பேசணும்னா,ரஜினிய பத்தி மட்டும் பேசுங்க பாஸ்,விஜய ஏன் இங்க வந்தாரு.என்னமோ விஜய் மட்டும் தான் தமிழ் சினிமாவ கெடுக்குற மாதிரி,மத்த நடிகர்லாம் வாழ வைகற மாதிரி

தமிழ் குமார் said...

என்னமோ விஜய் மட்டும் தான் தமிழ் சினிமாவ கெடுக்குற மாதிரி,மத்த நடிகர்லாம் வாழ வைகற மாதிரி.எந்திரன் பாடல்கள் பத்தி மட்டும் பேசுங்க

கார்க்கிபவா said...

அய்.. சொல்லிவைக்காமலே போட்டு இருக்கோமா?

சில இடங்களில் இருவரின் விருப்பமும் ஒன்றாக இருந்தாலும் வரிசைப் படுத்தியதில் மாறுகிறோம்.. எனக்கு அரிமா அரிமா ரொம்ப புடிச்சிருக்கு பாஸ்

கார்க்கிபவா said...

தமிழ், கூல் சகா..

ரஜினி என்றவுடன் விஜய் நினைப்பு வருவது தவிர்க்க முடியாதது என்று தெரிகிறது :)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

எல்லா பாடல்களையும் வீடியோவுடன் பார்க்கும் போது இன்னும் நல்லாயிருக்கும் என் நினைக்கிறேன்.

Anonymous said...

இப்படி பேசியே ஏத்தி தலைல தூக்கி வைச்சு ஆடுங்க...என்னதான் அறிவுஜீவிதனமா படிச்சாலும் எழுதினாலும் நம்ம உள்ள இருக்கற பாமரதனமான தனிமனித வழிபாட விடவே முடியாது.

jokkiri said...

பரிசல்....

என்ன தான் சொன்னாலும், “சிவாஜி” படத்திற்கு பின் (3 வருடங்களுக்கு பின்) ஒரு முழு நீள் ஹிட் ஆல்பம் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை....

ஆடியோ கடை வாசலில் கூட்டம் நின்றிருந்ததை இந்த இண்டர்நெட் யுகத்தில் அதிசயம் என்று சொன்னது சால சரியே....

என்னை மிகவும் வசீகரித்த பாடல் “அரிமா அரிமா”

ARAN said...

சாரு புழிஞ்சதா நண்பரே
இது போன்ற தருணங்கள் எங்களை போன்ற ரசிகர்களை ஒரு குழந்தையை போல் குதூகலமாக அந்த பருவத்துக்கே அழைத்து செல்கிறது மீண்டும் குழந்தை பருவம் என்பதே சந்தோஷமான விஷயம்தானே ? இது போன்ற சில விஷயங்கள் அவ்வப்போது நிகழ்வதால் தான் பலரும் மிருகமாகாமல் மனதளவில் குதூகலிக்கின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து. 10TH ,+2 ,திருமணம்,குழந்தை பிறக்கும் தருணம் ,அது போல ரஜினியின் படங்களும் 3 வருடங்களுக்கு ஒரு முறை நிகழக்கூடிய விஷயமாகி விட்டதில் இந்த சந்தோசமெல்லாம் அனுபவிப்பவருக்கு புரியும்.மத்தபடி பிள்ளைகுட்டிகளை படிக்க வைங்க குடும்பத்த பாருங்கன்னு எல்லாம் யாரும் COMMENT போட வேண்டாம் அழகாக குடும்பத்தை கவனித்து கொள்ளும் அன்பான ரஜினி ரசிகன் நான்.

ARAN said...

parisal ungal vimarsanam arumai.

Ganpat said...

எந்திரன்,விஜய் படம் என்று எண்ணி பாடல்களுக்கு விமர்சனம் எழுதுங்கள்
தயக்கம் இன்றி எழுதலாம்.

ஆதவா said...

உங்கள் விமர்சனத்தை முழுக்க ஏற்கிறேன்.

அன்புடன்
ஆதவா

a said...

//
இன்றைய டவுன்லோடிங் யுகத்தில் 25 பேரே ஜாஸ்திதான்!)
//

கூட்டம் ரஜினிக்கா இல்லை ரஹ்மானுக்கா இல்லை ரெண்டு பேருக்கும் சேர்த்தா...

Thamira said...

நல்லாருந்தது பகிர்வு.

பிரபல பதிவர் said...

//ரஜினி என்றவுடன் விஜய் நினைப்பு வருவது தவிர்க்க முடியாதது என்று தெரிகிறது //

ஒத்துக்கிறேன்....

காந்தின்னு சொன்னதும் கோட்சே ஞாபகம் வருவதை போல‌

வண்ணான் said...

உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி!
//

ஹி ஹி

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சும்மா ஃபிரியா தான் இருக்கேன்

பிரபல பதிவர் said...

//வெடிகுண்டு முருகேசன் said...
உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி!


ஹி ஹி

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சும்மா ஃபிரியா தான் இருக்கேன்
//

அப்ப பின்னூட்டம் இட கூடாது

thina said...

‘உங்க படம் ரிலீஸ்னா வீதில வடை போண்டா விக்கிறவர் வரைக்கும் பிழைக்க முடியுது சார்’ என்றாராம். ‘இந்தக் காரணத்துனாலதான் ரிஸ்க் எதுவும் எடுக்காம மக்களுக்கு பிடிச்ச மாதிரி கேரக்டர்ஸ் மட்டும் பண்றேன்’ என்று சொன்ன ரஜினி"

இது எப்படி இருக்கு?