Monday, June 14, 2010

அவியல் 14.06.2010

ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் என்றால் இந்த செல்ஃபோன் கம்பெனிக் காரர்களுக்கு அப்படி என்ன இளப்பம் என்று தெரியவில்லை. ஏர்டெல், ஏர்செல் என்று எல்லாரும் ஒரே கதைதான். (இதில் ஏர்செல், ஏர்டெல்லை விட மிக மோசம் என்று கேள்விப்பட்டேன். அனுபவித்தும் இருக்கிறேன்) திடீர் திடீரென்று நீங்கள் இதற்கு சப்ஸ்க்ரைப் செய்துள்ளீர்கள் அதற்கு சப்ஸ்க்ரைப் செய்துள்ளீர்கள் என்று காசைக் கழித்து விடுகிறார்கள். புகார் செய்ய கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டால்.. நாம் கூப்பிடுகிற நேரத்தில்தான் உலகத்தில் எல்லாரும் கூப்பிடுகிறார்களாம். பிஸியாம். எப்போதுமே லைன் கிடைப்பதில்லை. உடனேயே வேறொரு போஸ்ட் பெய்ட் கனெக்‌ஷனிலிருந்து அழைத்தால் மிக மரியாதையாக எடுத்து பொறுப்பாக பதில் வருகிறது.

ப்ரீபெய்டிலிருந்து கஸ்டமர் கேர் எக்ஸிக்யூடிவிடம் பேசினால் மூன்று நிமிடத்திற்கு ஐம்பது காசு. போஸ்ட் பெய்டில் ஃப்ரீ.

ஒரு கஸ்டமர் கேர் அதிகாரியிடம் கேட்டேன்: ‘நாங்கள் முன் பணம் கொடுத்து உங்கள் சேவையை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். போஸ்ட் பெய்ட் சேவையை உபயோகப்படுத்துபவர்கள் இன்னும் பணம் கட்டாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏன் இந்த மரியாதை? ப்ரீ பெய்ட் கஸ்டமர்களை ஏன் இப்படி இழிவாய் நடத்துகிறீர்கள்?’

‘நன்றி கிருஷ்ணா. உங்களுக்கு வேறு ஏதாவது உதவிகள் தேவையா?’

‘இல்லைங்க மேடம்.. நான் என்ன கேட்கறேன்னா...’

‘வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’

‘வீட்ல எல்லாரையும் கேட்டதா சொல்லும்மா’ என்றுவிட்டு கட் செய்தேன்.

*******************************

ண்பன் வீட்டுக்கு அலைபேசினேன். சினிமாவுக்குப் போயிருக்காருங்க என்றான் அவரது மகன். என்ன படத்துக்கு போயிருக்காரு எனக் கேட்டேன்.

“தெரியலைங்க. சிங்கம்தான். வெறும் சிங்கமா, பெண் சிங்கமா, முரட்டு சிங்கமான்னுதான் தெரியல”


**********************************

ண்பன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது கூட இருந்த ஒருவன் குடித்து விட்டு உளறிக் கொண்டே வந்திருக்கிறான். இவன் ‘பேசாமப் படுங்க. யாராவது கம்ப்ளெய்ண்ட் பண்ணிடப் போறாங்க.. குடிச்சிருக்கீங்கன்னு’ என்றிருக்கிறான். அவன் சொன்னானாம்: ‘அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுங்க. பப்ளிக்ல செக்ஸ் வெச்சுக்க கூடாது. வீட்ல வெச்சிட்டு வெளில வந்தா எவன் கேட்பான்? அத மாதிரி பப்ளிக்லதான் குடிக்கக் கூடாது. வீட்ல குடிச்சுட்டு வந்தா எவனுக்கென்ன?’

மேற்கொண்டு அவனுக்கு விளக்கி வாங்கிக் கட்டிக் கொள்ள தயாரில்லாததால் போத்திக் கொண்டு படுத்து விட்டானாம் இவன். (எழுத்துப் பிழை ஏதுமில்லை!)

*******************************************

ட்விட்டர் மோகம் அதிவேகமாகப் பரவுகிறது. முன்புபோலல்லாமல் அடிக்கடி OVER CAPACITY என்று பதில் வருகிறது. அதுவும் நமீதா ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பித்தது குறித்து வெள்ளை மாளிகையில் ஒபாமா அறிக்கை விடாதது ஒன்றுதான் குறை. சிம்பு முதல் கமல்ஹாசன் வரை எல்லார் பெயரும் இருக்கிறது ட்விட்டர் அக்கவுண்டில். அது உண்மை எது டுபாக்கூர் என்றுதான் தெரியவில்லை.

ட்விட்டரில் அதிஷா கேட்டது: ‘அல்லாரும் என்னை எதோ ஒரு காரணத்துக்கு பாய்காட் பண்ணுங்கறாங்க. எனக்கு ஜெஃப்ரி பாய்காட்டைத்தான் தெரியும். அவரை என்ன பண்றது?’

*******************************

வாசகர் (சத்தியமாங்க. பெயர் - ஐன்ஸ்டீன், மதுரை) ஒருவர் எஸ்ஸெம்மெஸ்ஸினார்:

“Is it parisalkaaran @ luckykrishna?"

நான் பதில் சொன்னேன்:-

"I'm parisalkaaran, I'm lucky and My name is Krishna. But I'm not luckykrishna"

**********************************

ரோடு புத்தகத் திருவிழா 2005ன் ஆடியோ சிடி கேட்டுக் கொண்டிருந்தேன். கவியரங்கம். பழனிபாரதி, நெல்லை ஜெயந்தா, விவேகா மற்றும் பலர்.

நெல்லை ஜெயந்தா பாரதி பற்றி பாடுகையில்:

‘எமன்
மனிதர்கள் என்றால் கயிறுடன் வருவான்
இவன் - மகாகவி என்பதால்
களிறுடன் வந்தான்’ என்றது கவர்ந்தது.

அதேபோல விவேகா எல்லாருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். ஸ்டாலின் குணசேகரன் என்பவர் அவையில் அமர்ந்திருந்தார். விவேகா சொல்கிறார்:-

‘ஸ்டாலின் குணசேகரனுக்கும், ஸ்டாலின் உரிமையாளர்களுக்கும் வணக்கங்கள்’

அது கேட்டது. பார்த்தது முதல்வன் பட டிவிடி. இறுதியில் அர்ஜூன் ரகுவரனை சுடும்போது, இறக்கும் தருவாயில் ரகுவரன் சொல்வார்: ‘It was a Good Interview' எனக்கு ஏனோ ஆதிமூலகிருஷ்ணன் ஞாபகத்துக்கு வந்தார்!

*******************************************

‘ஜீனியஸ் இன் கார்ப்பரேட் கம்பெனி’ என்று ஒரு மெய்ல் வந்தது. ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் பணிபுரிகிற கம்ப்யூட்டர் ஆசாமி (ஆமாம்!) கன்சல்டன்சியின் just ask சேவைக்கு மெய்ல் அனுப்பி கேட்டிருக்கிறான்.

‘என்னுடைய முதலாளி எல்லா பேப்பரின் இரண்டு புறமும் ப்ரிண்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார். நான் மைக்ரோசாஃப்ட் எம் எஸ் வேர்ட் பயன்படுத்துகிறேன். ஒரு பக்கத்தை முடித்ததும் நேரடியாகவே அது இரண்டாம் பக்கத்துக்குச் சென்று விடுகிறது. முதல் பக்கத்தின் பின்புறம் டைப்படிக்க நான் என்ன செய்ய வேண்டும்?’

இதைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அவர்கள் சந்தித்த ஜீனியஸ்கள் பற்றி சொன்னது அதைவிட சுவாரஸ்யம்:

ரெண்டு கம்ப்யூட்டர் வேண்டும் என்றிருக்கிறார் ஒரு கல்லூரி HOD. எதுக்குங்க என்றால் ‘இண்டர்நெட் பார்க்க ஒண்ணு, ஈமெய்ல் பார்க்க ஒண்ணு’ என்றிருக்கிறார்.

CPU வில் உள்ள காஃபி ஹோல்டர் காஃபி கப் வைத்ததும் உள்ளே போய்விடுகிறது என்று ஒரு கம்ப்ளெய்ண்ட். அதுல எங்கடா காஃபி ஹோல்டர் என்று போய்ப் பார்த்தால் அவன் காட்டியது டிஸ்ட் ட்ரைவ்.

சிடியை அஞ்சாறு கவர் போட்டு வைத்திருந்திருக்கிறார் ஒருவர். எதுக்குங்க என்று கேட்டதற்கு சொன்னாராம்: ‘வைரஸ் வராம இருக்கத்தான்’

********************************************

ண்பன் கேட்ட கேள்வி:-

‘ஒரு பெண் காது கேட்காது, வாய் பேச மாட்டார், கண்ணும் தெரியாது. அவளிடம் காதலை ஒருவன் எப்படித் தெரிவிப்பான்? ஒரு நிபந்தனை: அவளைத் தொடக்கூடாது’

யோசித்து, தயங்கித் தயங்கி விடை சொல்லி விட்டேன். நீங்களும் ட்ரை பண்ணுங்களேன்...

**********************************

.

53 comments:

நிகழ்காலத்தில்... said...

\\‘ஒரு பெண் காது கேட்காது, வாய் பேச மாட்டார், கண்ணும் தெரியாது. அவளிடம் காதலை ஒருவன் எப்படித் தெரிவிப்பான்?’\\

ஒரு முத்தம் கொடுத்து...

அவ்வ்.....

பரிசல்காரன் said...

@ நிகழ்.சிவா
நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க..

அவன் விரல்கூட அவமேல படக்கூடாது! இத சொல்லாம விட்டுட்டேன்!

Madumitha said...

அவியல் நல்லாருக்கு.
கூட கொஞ்சம்
வறுவல் வைத்திருக்கலாம்.

Jackiesekar said...

‘நன்றி கிருஷ்ணா. உங்களுக்கு வேறு ஏதாவது உதவிகள் தேவையா?’

‘இல்லைங்க மேடம்.. நான் என்ன கேட்கறேன்னா...’

‘வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’

‘வீட்ல எல்லாரையும் கேட்டதா சொல்லும்மா’ என்றுவிட்டு கட் செய்தேன்.///

பரிசல் இப்படித்தான் நான் எர்டெல் கஸ்டம்ர் கேர் கடன்காரனுக்கு பேசிகிட்டு இருந்தேன்...

யோவ் வீட்ல சிக்னல் கட்டாவதுன் சொல்லறேன் நீங்க இல்லைன்னு சொல்றிங்கன்னு ரொம்பவும் டெனசனாகி...

சார் உங்களுக்கு வேற எதாவது தகவல் வேனுமான்னு கேட்க...

நித்யானந்தா ரூம்ல இருந்த வீடியோ கேமரா எங்க கிடைக்கும்னு கேட்க???

கீங் கிங் பீப் சவுண்ட் மட்டும் வந்தது...

Unknown said...

செல்போன் கம்பெனிகள் போட்டிகள் நிறைய இருந்தாலும் கேவலமாகத்தான் நடந்து கொள்ளும்,

நாங்கல்லாம் கோக் அல்லது பெப்சியில் கலந்து எடுத்துக் கொண்டு ரயிலேருவோம்.. ஈஸி...

that was a good interview.. அப்படியா?..

முத்தம் .. நிகழ்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் சரியான விடைதான்..

Jackiesekar said...

அது கேட்டது. பார்த்தது முதல்வன் பட டிவிடி. இறுதியில் அர்ஜூன் ரகுவரனை சுடும்போது, இறக்கும் தருவாயில் ரகுவரன் சொல்வார்: ‘It was a Good Interview' எனக்கு ஏனோ ஆதிமூலகிருஷ்ணன் ஞாபகத்துக்கு வந்தார்!


பத்தவச்சிட்டியே பரட்டை... இது எப்படி இருக்கு...???

ஷர்புதீன் said...

"உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி!"

என்னோட நேரம் ஜஸ்ட் 50 ரூபாதான் ஒரு மணிநேரத்திற்கு.,
(என் சம்பளத்தை கணக்கு போடுபவர்களுக்கு..... கிம்பலத்தை இதில் சேர்க்கவில்லை )

--
என்றும் அன்புடன்
ஷர்புதீன்
http://rasekan.blogspot.com

தராசு said...

தல,

ஒரு சின்சியர் அட்வைஸ்.

ட்விட்டர் அடிமைகள அதிகமாயிட்டு வர்றாங்களாம். வேற எந்த வேலையும் செய்யாம, அதுக்குள்ளயே உக்கார்ந்திருக்காங்களாம். இன்னும் நிறைய சொல்றாங்க, பாத்து இருந்துக்குங்கப்பு.

Sridhar Narayanan said...

//@ நிகழ்.சிவா
நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க..

அவன் விரல்கூட அவமேல படக்கூடாது! இத சொல்லாம விட்டுட்டேன்!
//

ப்ரெய்லியில ‘காதலிக்கறேன்’னு எழுதிக் கொடுத்திருவான்னு சொல்லலாம்னு நினச்சேன்.

‘அவளுக்கு ப்ரெய்லி படிக்கத் தெரியாதுன்னு’ சொல்ல மறந்துட்டேன்னு சொல்லிடுவீங்களோன்னு சொல்லல. சரியா? :)

குசும்பன் said...

//சிடியை அஞ்சாறு கவர் போட்டு வைத்திருந்திருக்கிறார் ஒருவர். எதுக்குங்க என்று கேட்டதற்கு சொன்னாராம்: ‘வைரஸ் வராம இருக்கத்தான்’//

Tell to him KS is more safe!:)

கார்க்கிபவா said...

/ நீங்களும் ட்ரை பண்ணுங்களேன்.../


அப்படி தீட்ர்ன்னு எல்லாம் நாங்க லவ் பண்ணிட மாட்டோம். பொண்ண காட்டுங்க. பழகி பார்த்துட்டு சொல்றோம்..

அப்புறம் முதல்வன் மேட்டர்... ஸப்பா.... யோசிச்ச மூளைக்கு தங்க காப்பே போடலாம்...

புன்னகை said...

Prepaid, postpaid எதுவாக இருந்தாலும், Vodafone-இன் வாடிக்கையாளர் சேவை நன்றாகவே உள்ளது! U can try it...

Unknown said...

அவளிடம் ஒரு ரோஜா பூவை கொடுப்பேன்

Unknown said...
This comment has been removed by the author.
கார்க்கிபவா said...

//புன்னகை said...
Prepaid, postpaid எதுவாக இருந்தாலும், Vodafone-இன் வாடிக்கையாளர் சேவை நன்றாகவே உள்ள/

ஏர்டெல்லில் இருந்து அவரக்ளை அழைக்க எந்த எண்னை தொடர்பு கொள்ள வேண்டும்???

அண்ணாமலை..!! said...
This comment has been removed by the author.
அண்ணாமலை..!! said...

பரிசல் என் நண்பர்கள் பேசிக்கொண்டார்கள்,

இப்போ என்ன படம்லாம் ஓடிக்கிட்டிருக்கு..??

"சிங்கமும்", "பெண்சிங்கமும்" ஓடிக்கிட்டிருக்கு!

நண்பர் சொன்னார்!

அப்போ கொஞ்ச நாள் கழிச்சு
"சிங்கக்குட்டி" வரும்னு சொல்லுங்க!

ஏற்கனவே வந்துருச்சோ! :)

அவியல் சூப்பர்!!!!!

நிகழ்காலத்தில்... said...

//‘ஒரு பெண் காது கேட்காது, வாய் பேச மாட்டார், கண்ணும் தெரியாது. அவளிடம் காதலை ஒருவன் எப்படித் தெரிவிப்பான்? ஒரு நிபந்தனை: அவளைத் தொடக்கூடாது’//

தொடாமல் அப்படின்னா...

எப்படித்தெரிவிப்பான் ?... ம்ம்ம்ம்

அட எப்பவும்போல அன்பே நான் உன்னை காதலிக்கிறேன் அப்படின்னுதான்... இதிலென்ன கஷ்டம் :))

HVL said...

//‘ஒரு பெண் காது கேட்காது, வாய் பேச மாட்டார், கண்ணும் தெரியாது. அவளிடம் காதலை ஒருவன் எப்படித் தெரிவிப்பான்?’//

எப்படி????

அதையேத் தான் நானும் கேட்கிறேன்!

Santhappanசாந்தப்பன் said...

ஆதியின் பேட்டியில், நர்சிம் சொன்னது இது, பிர‌ச்ச‌னைக‌ள் ஓர‌ள‌வு த‌ணிந்த‌ பிற‌கு, இதை ப‌டித்த‌ போது, ஏதோ செய்த‌து.

//(இதை பேட்டியாகப் போடும் அளவிற்கு என் நிலமை மோசமாகப் போய்விட்டதா ஆதி? நான் இன்னமும் எழுதிக்கொண்டுதானே இருக்கிறேன்.. பேட்டி அது இது என்று மூலையில் அமரவைக்காமல் போகமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்..;-) -நர்சிம்)//

சிநேகிதன் அக்பர் said...

அவியல் சூப்பர்.

புன்னகை said...

//கார்க்கி said...
ஏர்டெல்லில் இருந்து அவரக்ளை அழைக்க எந்த எண்னை தொடர்பு கொள்ள வேண்டும்???//
9789887048 இந்த நம்பர் தாங்க!

Sanjai Gandhi said...

//வாசகர் (சத்தியமாங்க. பெயர் - ஐன்ஸ்டீன், மதுரை) ஒருவர் எஸ்ஸெம்மெஸ்ஸினார்://

டைம் கேக்கறவனை மட்டும் தான்யா நாட்ல வாசகர்னு சொல்லாம விட்டு வச்சிருக்காங்க.. :))

கார்க்கிபவா said...

//9789887048 இந்த நம்பர் தாங்க/

அதான் நம்பர் தெர்ஞ்சு வச்சிருக்கிங்களே..

அப்புறமும் தாங்க தாங்கன்னு எதை தர்றது???????

CrazyBugger said...

Kargi very humorous girl.. chee boy.. chai man

Eswari said...

Aviyal nalla iruku

சுசி said...

அவியல் நல்லா இருக்கு.

வணங்காமுடி...! said...

விடுகதையின் விடையை யாராவது சொல்வார்களா?

வணங்காமுடி...! said...

ஃபாலோ அப்...

வால்பையன் said...

எப்படி காதலை சொன்னானாம்!

a said...
This comment has been removed by the author.
a said...

பரிசல்,

உங்களுடைய கேள்வி அவன் தன்னுடைய காதலை எப்படி தெரிவிப்பான் என்பது மட்டும்தான், அவளுக்கு புரிகிற/ தெரிகிற மாதிரி எப்படி தெரிவிப்பான் என்பது அல்ல, அதனால், எல்லோரையும் போல வாயால் சொல்லவேண்டியதுதான்(
பிம்பிலிக்கி பிலேப்பி...)

அனு said...

அவியல் சூப்பருங்க!!

-------------------------------

Love-அ சொல்றதுக்காங்க வழி கிடையாது..

1. Braille மொழியில எழுதி குடுக்கலாம்... (அவங்களுக்கு படிக்கத் தெரிஞ்சா)
2. நல்ல costlyயா wedding ring வாங்கி கொடுக்கலாம்.. (நிறைய காசு இருந்தால்)
3. ஏதாவது ஒரு heart shaped card கொடுக்கலாம்.. (கொஞ்சம் காசு இருந்தால்)
4. ஒரு ரோஜா வாங்கி கொடுக்கலாம்.. (கொஞ்சூண்டு காசு இருந்தால்)
5. ஒரு குச்சிய வச்சு கைல எழுதி காட்டலாம்.. (காசே இல்லைன்னா)
6. வேற வழியே இல்லாட்டி அவங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி சொல்ல வைக்கலாம்..

டிஸ்கி: மேல இருக்கிற விடைகள் நிஜ answerக்கு பக்கத்தில கூட வராதுன்னு நினைக்கிறேன்.. அதனால் தான்,சும்மா follow up-காக இந்த கமெண்ட்-ட போட்டு வைக்கிறேன்...

Karthik said...

//இறக்கும் தருவாயில் ரகுவரன் சொல்வார்: ‘It was a Good Interview' எனக்கு ஏனோ ஆதிமூலகிருஷ்ணன் ஞாபகத்துக்கு வந்தார்!

:-) Good one!

ராம்ஜி_யாஹூ said...

Sujatha has written this deag blind love story and Ignorance of blizz long back.

The boy will take a pen and write on her palm as I LOVE YOU.

But in the real quiz she was uneducated too.

http://www.ultimate-guitar.com/tabs/s/sneeze/deaf_girl_dumb_guy_blind_love_crd.htm

ராம்ஜி_யாஹூ said...

he can write with a pencil or pen or small stick on her hand or back on forehead or head

அதிலை said...

floppy disc காலத்தில் எங்க HOD ஒரு வைரஸ் பாதிக்கப்பட்ட டிஸ்க்கை போடா போனார் ..... நான் "சார் அதுல வைரஸ் இருக்கு"
அவர் அத நல்லா ஊதிட்டு போட்டாரு... நெசமா நடந்தது...

Unknown said...

//காது கேட்காது, வாய் பேச மாட்டார், கண்ணும் தெரியாது//
இப்போ பதிவு படிக்கிற, எழுதுற நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க பாஸ்!

பரிசல்காரன் said...

@ எல்லாருக்கும்

காதலைச் சொல்லும் வழி - ஒரு முழம் மல்லிகை அல்லது ஒரு ரோஜா.

நுகரும் சக்தி இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. ஒரு நாளில் இல்லை என்றாலும், தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் கொடுத்தால் தன்னை யாரோ நேசிக்கிறார்கள் என்பது புரிந்துவிடும்.

கார்க்கிபவா said...

மல்லிப்பூவா?

நீங்க காதலதானே சொல்லனும்ன்னு சொன்னிங்க?

ஆவ்வ்வ்வ்

ராம்ஜி_யாஹூ said...

if you ask Barathiraja or T Rajender the answer will go this way:

He should lend his ears or eyes to her then he should communicate his love.

HVL said...

இவ்வளவு தானா !!!!!!

pichaikaaran said...

"He should lend his ears or eyes to her then he should communicate his love"

what will happen if she refuce to accpet his love as he is blind man?

pichaikaaran said...

"இரண்டு மூன்று நாட்கள் கொடுத்தால் தன்னை யாரோ நேசிக்கிறார்கள் என்பது புரிந்துவிடும்."


யாரவது பூக்காரன் ( "நர"கல் பதிவர் அல்ல ) சும்மா ஒரு அன்புக்காகவோ , பரிதாப பட்டோ, அந்த பக்கம் வரும்போது, பூ கொடுத்தால், அது காதல் என்று சொல்ல முடியாதே...

Raghav said...

"காதலைச் சொல்லும் வழி - ஒரு முழம் மல்லிகை அல்லது ஒரு ரோஜா.

நுகரும் சக்தி இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. ஒரு நாளில் இல்லை என்றாலும், தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் கொடுத்தால் தன்னை யாரோ நேசிக்கிறார்கள் என்பது புரிந்துவிடும்.
"

சார்லீ சாப்லினின் City Lights படம் பார்ததுன்டா?

இன்த பதிலை ஒப்புக்கொள்ள முடியாட்து!

விக்னேஷ்வரி said...

இப்போ தான் ஒரு ஃபார்ம்ல நார்மலா வந்திருக்கீங்க. சுவாரசிய அவியல்.

pichaikaaran said...

கொடுப்பது ஒ கே என்றால், ஒரே நாளில், இதயம் போன்ற பொம்மை அல்லது தாஜ் மஹால் என கொடுத்து காதலை உணர்த்தலாம்.. பூ எல்லாம் ரிஸ்க்

Thamira said...

டிரில்லிங் மிஷின் வேலை செய்யலைன்னா முதல்ல ரீமிங் பண்ண வேண்டியதுதானேன்னு ஒரு மேலாளர் சொன்ன சம்பவம்தான் ஞாபகம் வருது. :-))

Thamira said...

கடைசியா வந்தாலும் இன்னும் புதிருக்கு பதில் சொல்லாமல் வைத்திருக்கும் உங்களை என்ன பண்ணலாம்?

(இது மாதிரி புதிர்னாலே ரொம்ப கடுப்பாவுது என்பதை நினைவில் கொள்ளவும்)

Joseph said...

பாரதியார் மகா கவி அப்டிங்கிறதால காலன் களிறுல வரலை அண்ணா.
அவரு சும்மா இருக்கா ஒரு பாட்டுல

காலா, வாடா உன்னை காலால் எட்டி உதைக்கிறேன்னு சொல்லிப்புட்டாரு. அத கேட்டுட்டு காலனுக்கு பயம், இந்தாளு செஞ்சாலும் செய்வான்னு. அதான் களிறுல வந்து முடிச்சுட்டான்.

mathu said...

அவள் தோழியின் உதவியுடன்

mathu said...

அவள் தோழியின் மூலம்

mathu said...

அவள் தோழியின் உதவியுடன்