Wednesday, August 12, 2009

அவியல் 12.08.09

தய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிட்சைக்காக உதவி வேண்டி காத்திருக்கும் பதிவர் சிங்கை நாதனுக்கு உதவும் உள்ளமிருப்பவர்கள் நண்பர் கே.வி.ராஜா எழுதிய இந்தப் பதிவைப் படிக்க விழைகிறேன்.

அவர் விரைவில் நலம்பெறப் பிரார்த்திப்போம்!

******************

ந்தப் பள்ளி இசைப் போட்டி விழாவுக்குப் பரிசளிக்க வந்திருந்தார் பாடகி எஸ்.ஜானகி. நீங்கள் தேர்வு செய்த மூவரையும் எனக்கு முன்னால் பாடச் சொல்லுங்கள் என்கிறார் எஸ்.ஜானகி. பாடுகிறார்கள். மூன்றாவதாக தேர்வாகியிருந்த மாணவனின் பாடல் திறனைப் பாராட்டிய எஸ்.ஜானகி அவருக்கே முதல் பரிசு என அறிவித்தாராம்!

அவர்தான் பின்னாளில் எஸ்.ஜானகியுடன் பல பாடல்கள் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியன்!

************************************
ங்கோ படித்தது அல்லது கேட்டது.. (எதுதாண்டா உன் சொந்தச் சரக்குன்னு கேட்கப்படாது!)

ஒரு இஞ்சினியரிடம் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த மேஸ்திரி ஒருவர், ‘அவ்வளவுதான். என்னால் முன்பு போல வேலை செய்ய முடியவில்லை. வேலையிலிருந்து நின்று கொள்கிறேன்’ என்கிறார். இஞ்சினியரோ.. ‘சரி.. இன்னும் ஒரு ஆறு மாதம் வேலை செய். ஒரு வீட்டு வேலை இருக்கிறது. அதை நீ முடித்துக் கொடுத்தபின் நின்றுவிடு’ என்கிறார்.

வேண்டா வெறுப்பாக சரியெனச் சொல்கிறார் மேஸ்திரி. ‘நாமதான் நிக்கப்போறோமே’ என்கிற அலட்சியமும் சேர்ந்து கொள்ள முடிந்த வரை தரமில்லாத பொருட்களை வைத்து, கமிஷனும் அடித்து அந்த வீட்டை அரைகுறையாக முடிக்கிறார்.

ஆறுமாத முடிவில் வீடு தயாராகிவிட.. அந்த வீட்டுச் சாவியை இஞ்சினியரிடம் ஒப்படைக்கிறார். இஞ்சினியர் சொல்கிறார்.

“சாவியை நீயே வைத்துக்கொள். அந்த வீடு உனக்குத்தான். இத்தனை வருடங்கள் என்னுடன் உழைத்ததற்கான என் பரிசு”

************************************************
ரையாடல் சிறுகதைப் போட்டியை ஆரம்பித்தவுடனே ஒரு இதமான தென்றல் வீசியதைப் போலத்தான் இருந்தது. பிறகு அதுவே புயலாக சுழன்றடிக்குமளவு பதிவர்களின் எந்த உரையாடலிலும் இந்த உரையாடல் இடம்பெற்றது!

சிறுகதைப் போட்டி நடத்துவதென்பது சிறுகதை எழுதுவதை விடக் கஷ்டமான ஒன்று. இப்படித்தான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து.... சரி விடுங்க வேண்டாம். இருவது கதைல கூட ஒண்ணா தேறல.. இவன்லாம் பேசறான்’ என்று நீங்கள் எண்ணக்கூடும்.

பைத்தியக்காரனும், ஜ்யோவ்ராம் சுந்தரும் நடுவர்களாக இருந்திருந்தால் நான் அவர்களுக்குத் தகுந்தமாதிரி எழுதியிருப்பேன் என்று பலர் சொல்வதைக் கேட்க முடிகிறது. எனக்குத் தெரிந்து அப்படி ஒரு வட்டத்துக்குள்ளோ, கட்டத்துக்குட்பட்டோதான் அவர்கள் தேர்வு இருந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்களின் வாசிப்பனுபவதுக்கு முன் யார் எழுதுவதும் அவர்களுக்கு யானைகண் எறும்பாகத்தான் பட்டிருக்கும். அவர்கள் தரத்திற்கு அல்லது அவர்கள் தரம் என்று நினைக்கும் எழுத்திற்கு பக்கத்தில் வந்தவற்றைத்தான் அவர்கள் தேர்வு செய்திருக்கக் கூடும். அதில் தவறேதுமில்லையே...

(அவர்கள் வாசிப்பனுபவம் என்று நான் குறிப்பிடக்காரணம்: பைத்தியக்காரன் தனக்குப் பிடித்ததாகக் குறிப்பிட்ட 10 புத்தகங்களை நான் படிக்கவே முடியவில்லை. அதாவது அவர் குறிப்பிட்டிருந்த புத்தகங்களின் பெயர்களையே படிக்க முடியவில்லை என்னால்.. பின்னெங்கே அந்தப் புத்தகங்களைப் படிக்க!)

மற்றபடி அத்தனை கதைகளையும் படித்து ‘அடக்கடவுளே... இவர்களுக்கு உருப்படியாக சிறுகதை எழுதக்கூடத் தெரியவில்லையே’ என்று வருத்தப்பட்டதன் மூலம்தான் அடுத்ததாக சிறுகதைப் பட்டறை நடத்தும் எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கக் கூடும். அதற்குப் பின்னால் நானும் இருக்கிறேன் என்றெண்ணும்போது பெருமையாகத்தான் இருக்கிறது!

***********************

ண்புடனில் படித்தது...

மல் 78ல் ரோஜாக்களில் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு சைக்கோ ராமன் எனப்படும் பெண்களை குறி வைத்து கொல்லும் ஒரு கொலையாளி பிடிபட்டார். 1988ல் வேலையற்ற இளைஞனாக நடித்த படம் சத்யா வெளியானது. 89-90களில் நமது தேசம் வேலையில்லா திண்டாட்ட பிரச்சனையை சந்தித்தது. 1992ல் இரு சமுகங்களில் நடக்கும் கலவரம் சம்பந்தமான கதையான தேவர் மகன் என்ற படம் வெளியானது. 1993ல் தென்மாவட்டங்களில் சாதி மோதல்கள் தோன்றின. 94ல் ஃபைனான்ஸ் கம்பெனிகள் ஏமாற்றி ஓடுவதாய் மகாநதியில் காட்டியிருந்தார்கள். ஃபைனான்ஸ் கம்பெனிகள் 1996களில் ஏமாற்றி ஓடியது எல்லாரும் அறிந்த ஒன்று.

2000ல் வந்த இந்து-முஸ்லிம் சச்சரவு பற்றிய படமான ஹேராம் வெளியானது, நாடே அதிர்ந்த கோத்ரா கலவரம் அரங்கேறியது, அதற்கு பின்பே. 2004 டிசம்பரில் வந்த பேரலைக்கு பின்பே சுநாமி என்ற வார்த்தை தமிழக மூலை முடுக்கெல்லாம் பரவியது, 2003ல் வந்த அன்பே சிவமில் சுநாமி பற்றி பேசி இருக்கிறார்.

இரட்டை சைக்கோ தொடர் கொலையாளிகள் பற்றிய படமான வேட்டையாடு விளையாடு. 2006ல் வந்த பின்பே மொனீந்தர் & சதீஷ் எனும் சைக்கோ தொடர் கொலையாளிகள் நொய்டாவில் பிடிபட்டனர்.

இதெல்லாம் பரவாயில்லை........

கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படமானதசாவதாரத்தில் அமெரிக்காவில் உலகையே அழிக்கும் ஒரு கிருமி உருவாக்கப்பட்டது போல் கதையமைக்கப்பட்டிருந்தது, இன்று இந்தியாவையே கலங்கடிக்கும் ஸ்வைன் ப்ளூ அமெரிக்காவில் இருந்துதான் பரவியதாம்.

என்ன கொடுமை கமல் இது!

****************************************

இந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்....?


அதிகமாக கண்ணம்மாவைப் பற்றி பாடிய பாரதியாரைப் புதைத்த இடம் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு.

கடைசி காலத்தில் அதிகமாக கிருஷ்ணனைப் பற்றி எழுதிய கண்ணதாசனைப் புதைத்த இடம் கண்ணம்மாபேட்டை சுடுகாடு.



.

53 comments:

தாரணி பிரியா said...

//இந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்....?’


அதிகமாக கண்ணம்மாவைப் பற்றி பாடிய பாரதியாரைப் புதைத்த இடம் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு.

கடைசி காலத்தில் அதிகமாக கிருஷ்ணனைப் பற்றி எழுதிய கண்ணதாசனைப் புதைத்த இடம் கண்ணம்மாபேட்டை சுடுகாடு.//

எப்படிங்க இப்படி எல்லாம்

தாரணி பிரியா said...

ஹை ஆதியோட அவியலும் இன்னிக்கு நாந்தான் மொத போணி இங்க உங்க அவியலிலும்

பரிசல்காரன் said...

நன்றி தாரணி!

//ஆதியோட அவியலும்//

ஆதியோட அவியலா? ஏய்ய்ய்ய்ய்ய்...

GHOST said...

அவியல் நல்லாதான் இருக்கு

சின்னப் பையன் said...

எப்படிங்க இப்படி எல்லாம்?????

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

anujanya said...

ரொம்ப நாட்களுக்குப் பின் Vintage Parisal.

இப்ப தான் தமிழ்மணத்தில் சிங்கை நாதன் உடல் நிலை பற்றி படித்தேன். உங்கள் பதிவிலும் அதைப் பற்றி எழுதினால் நிறைய பேரை சேரும். நீங்க, கார்க்கி, தாமிரா, நர்சிம் எல்லோரும் அவர் உடல்நிலை பற்றி எழுதினால், அவருக்கு உதவும் நபர்களின் எண்ணிக்கை பெருகும். Please.

("அப்ப நீ?" என்று கேட்டு அவமானப் படுத்தாதீர்கள். இதுவரை இன்று 'அங்க' வந்தவர்கள் 18 பேர். என் பதிவில் போடுவதற்கு பதில் இங்க பின்னூட்டத்தில் போட்டால் நிறைய பேர் படிப்பார்கள்)

அனுஜன்யா

Thamira said...

வருத்தப்பட்டதன் மூலம்தான் அடுத்ததாக சிறுகதைப் பட்டறை நடத்தும் எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கக் கூடும். அதற்குப் பின்னால் நானும் இருக்கிறேன் என்றெண்ணும்போது பெருமையாகத்தான் இருக்கிறது!
//

ஊஹூம்.. என் கதையை படித்தபின்னாடிதான் அந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். போன் பண்ணினால் கதையை தவிர வேறென்ன வேண்டுமானாலும் பேசுங்கிறாங்க.. ஹிஹி..

லோகு said...

எல்லாமே புதிய தகவல்கள்... நல்லா இருந்துச்சு.. நன்றி..

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அவியல் நல்லா இருக்குங்க..
//என்ன கொடுமை கமல் இது?//
கொஞ்சம் காரம் அதிகம்
//அமெரிக்காவில் உலகையே அழிக்கும் ஒரு கிருமி உருவாக்கப்பட்டது// இதை பார்த்தவுடன் குறுஞ்செய்தியில் வந்த ஜோக் ஞாபகம் வந்தது:
"when a black becomes president,
after 100days, pigs started to flew
& becomes Swine flu" அனுப்பியவர் ஒரு பிரிட்டிஷ், விளையாட்ட இருக்ராங்க..

மண்குதிரை said...

rasiththeen

பரிசல்காரன் said...

@ ghost

Thanks!

@ ச்சின்னப்பையன்

அது அப்படித்தான்!

@ டி வி ஆர்

நன்றி ஐயா!

@ அனுஜன்யா

இணைச்சாச்சு தல!

@ ஆதி

நம்ம கதைகளை ப்ரிண்ட் பண்ணி எடுத்து வெச்சிருந்தாங்களாம். வடிவேலு வடை சாப்பிட யூஸ் பண்ணின லவ் லெட்டர் மாதிரி அதுதான் யூஸாச்சாம்!

விடுங்க நண்பா.. நெக்ஸ்ட் ட்ரிப் பார்த்துக்கலாம்.

@ லோகு

டேங்க்ஸூங்க!

பரிசல்காரன் said...

@ Balakaumaran

காரமா? ச்சும்மா கொஞ்சலா கேட்டேங்க!

@ மண்குதிரை

நன்றி!

Beski said...

தகவல்கள் அனைத்தும் அருமை.

‘எப்படி இப்படியெல்லாம்....?’ டாப்பு.
---
அடிக்கடி ஏன் சட்டையை மாத்திக்கிட்டே இருக்குறீங்க?
---
அப்புறம், அந்த விளம்பரத்தைக் காணோம்?

ஸ்வாமி ஓம்கார் said...

சிறுகதை பட்டறை இருக்கட்டும்...

இப்படி கன்ஸிஸ்டண்டா சிறப்பா எழுதுவது எப்படினு ஒரு பட்டறை ஒன்றை நீங்கள் வைக்க கூடாதா?

இந்த ஈ அந்த பட்டறைக்கு வரும் :)

அவியல் அசத்தல்.

கார்க்கிபவா said...

ஏதாவ்து சொல்லிட போறேன்.. எத்தனை படத்தில் கிஸ் அடிக்கிராரு.. அதெல்லாம் நடக்குதா? எனக்கு நடக்க மாட்டேங்குது

Truth said...

பரிசல், அவியல் சூப்பர். இந்த கமல் மேட்டர் நான் கொஞ்சம் கூட யோசித்ததே இல்லை. சூப்பர் தலை.

ரொம்ம்ம்ம்ப நாள் கழித்து உங்கள் பதிவ முழுசா படிச்சேன். நல்லாருக்கு பரிசல்.

அப்பாவி முரு said...

//கார்க்கி said...
ஏதாவ்து சொல்லிட போறேன்.. எத்தனை படத்தில் கிஸ் அடிக்கிராரு.. அதெல்லாம் நடக்குதா? எனக்கு நடக்க மாட்டேங்குது//



யாரோ, என்னமோ, யார் பெத்த பிள்ளையோ???

என்ன பாடுபடப்போகுதோ?

Cable சங்கர் said...

kamal மேட்டர் சூப்பர்.. உக்காந்து யோசிக்கிறீஙக் தலைவரே.

Cable சங்கர் said...

இதே போல் சுஜாதாவுக்கு ஒரு லிஸ்ட் இருகிறது. பரிசல்

ILA (a) இளா said...

//ப்ளூ அமெரிக்காவில்//
இது மெக்ஸிக்கோவுலதானே உருவாச்சு. கமல்தான் எல்லாத்துக்கும் காரணமா? எகொஇச?

ஆ.சுதா said...

எப்படி இப்படி எல்லாம்!!!

அவியல் அமர்க்களம்!

sriram said...

அன்பின் கிருஷ்ணா,
கமல் மேட்டர், சுடுகாடு மேட்டர் - எப்படி இப்படியெல்லாம்?? - ஒக்காந்து ரூம் போட்டு யோசிப்பீங்களோ???
அவியல் செம டேஸ்ட்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பரிசல்காரன் said...

@ எவனோ ஒருவன்

//அடிக்கடி ஏன் சட்டையை மாத்திக்கிட்டே இருக்குறீங்க?//

புரியலைங்க..

@ ஸ்வாமி ஓம்கார்

//இந்த ஈ அந்த பட்டறைக்கு வரும்//

நீங்க ஈன்னு நம்ப நான் ’இ’ கிடையாது ஸ்வாமி!

@ கார்க்கி

நீதான் வித்தியாசமா மூக்குல குடுக்கறியே

@ ட்ரூத்

//கமல் மேட்டர் நான் கொஞ்சம் கூட யோசித்ததே இல்லை. சூப்பர் தலை.//

அது நானெழுதியதில்லை. பண்புடன் குழுமத்தில் படித்தது!

@ அப்பாவி முரு

அது!

Jawahar said...

எஞ்சினியர்-மேஸ்திரி சமாச்சாரத்தை ஒரு சிறுகதையாகவே எழுதியிருக்கலாம். சிறப்பாக இருக்கிறது.

http://kgjawarlal.wordpress.com

பரிசல்காரன் said...

@ கேபிள் சங்கர்

ஐய.. நீங்களுமா.. அது படிச்சதுங்க.. படைச்சதில்ல!

@ இளா

தெரிஞ்சதாலதான் ‘அமெரிக்காவில் இருந்துதான் பரவியது’ன்னு எழுதியிருந்தத மாத்தி பரவியதாம்-ன்னு மாத்தினேன். நாங்கள்லாம் ஆரூ?

@ நன்றி ஆமுராமு!

@ ஸ்ரீராம்

தேங்க்ஸ்!

பரிசல்காரன் said...

மிக்க நன்றி ஜவர்லால்!

கார்க்கிபவா said...

//நீதான் வித்தியாசமா மூக்குல குடுக்கறியே//

விட மாட்டிங்களே... இன்னைக்கு ஒருத்தர் மெயில் பண்ணாரு. பல இடஙக்ளில் தேடி என் வீடியோவ பார்த்துட்டாராம்..

சொல்ல மறந்துட்டேனே, நல்லா நடிச்சி இருகெகெனாம்..

Muthu said...

எப்படிங்க இப்படி எல்லாம்...
Ukkanthu Yosipaangalo?

அறிவிலி said...

எப்படிங்க இப்படியெல்லாம்? - கமல் மேட்டருக்கு

//@ கார்க்கி

நீதான் வித்தியாசமா மூக்குல குடுக்கறியே//

ROTFL

//

///கார்க்கி said...
//நீதான் வித்தியாசமா மூக்குல குடுக்கறியே//

விட மாட்டிங்களே... இன்னைக்கு ஒருத்தர் மெயில் பண்ணாரு. பல இடஙக்ளில் தேடி என் வீடியோவ பார்த்துட்டாராம்..

சொல்ல மறந்துட்டேனே, நல்லா நடிச்சி இருகெகெனாம்..///

தப்பு கார்க்கி, அவர கரெக்ட் பண்ணுங்க, நீங்க அந்த கேரக்டராவே வாழ்ந்துருக்கீங்க...

முரளிகண்ணன் said...

அட்டகாச அவியல் பரிசல்

வெட்டிப்பயல் said...

ப‌ரிச‌ல்,
என்ன‌ ஆச்சு? க‌டைசியா இருக்குற‌ மேட்ட‌ர் த‌விர‌ எதுவுமே புதுசா தெரிய‌லை :(

அவிய‌லோட‌ ஸ்பெஷ‌லே உங்க‌ சொந்த‌ வாழ்க்கைல‌ பாக்க‌ற‌, ந‌ட‌க்க‌ற‌ விஷ‌ய‌ங்க‌ளை சுவார‌ஸுய‌மா கொடுக்க‌ற‌து தான்.

சுரேகா.. said...

கமல் மேட்டர்...!
அட ..ஆமா..போடவைக்குது!
பண்புடன்ல படிக்க விட்டுட்டேன்.
எடுத்துப்போட்டதுக்கு நன்றி தலைவா!

கண்ணம்மா..கிருஷ்ணாம்பேட்டை...
கண்ணதாசன்..கண்ணம்மா பேட்டை..
அடடே!

என்னமோ போங்க..! கலக்குறீங்க!
:)

வெட்டிப்பயல் said...

ஆஹா.. நான் யார் பின்னூட்ட‌மும் ப‌டிக்காம‌ க‌ருத்து சொல்லிட்ட‌னோ? இருந்தாலும் இது தான் ம‌ன‌சுல‌ தோணுச்சு. சொல்லிட்டேன். த‌ப்பா எடுத்துக்காதீங்க‌ :)

எஸ்.பி.பி மேட்டர் காஃபி வித் அணுனு நினைக்கிறேன். மேஸ்திரி ‍இஞ்சினியர் மேட்டர் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (அ) கதவைத் திற காற்று வறட்டும். உரையாடல் :), கமல் மேட்டர் ஃபார்வேர்ட்ல வந்தது (ப்ளாக்ல கூட எப்பவோ வந்துடுச்சினு நினைக்கிறேன்) ஆனா அப்ப தசாவதாரத்திற்கு பிறகு என்ன நடக்க போகுதோனு கேள்வியோட நிக்கும், பாரதி, கண்ணதாசன் மேட்டர் மட்டும் புதுசு.

அவியலோட எக்ஸ்பெக்டேஷன் கொஞ்சம் அதிகம்...

பரிசல்காரன் said...

@ Muthu

இல்ல, நின்னுகிட்டு..

@ அறிவிலி

கார்க்கிக்கு அப்படி மெயிலனுப்பினவரு மட்டும் சிக்கினாரு...

@ முரளிகண்ணன்

நன்றி!

@ சுரேகா

மிக்க நன்றி!

@ வெட்டிப்பயல்

ஏங்க நல்லால்லனு சொல்லீட்டீங்கள்ல... அதோட விட வேண்டியதுதான.. நான் ஏதாவது சொன்னேனா? ஏன் இப்படி அதுல சுட்டது இதுல சுட்டதுன்னு போட்டுத் தாக்கறீங்க.. வலிக்குதுல்ல.. மேட்டருக்கு (எழுதற மேட்டர்ங்க..) நாங்க படற பாட்டை ஆதிகிட்ட கேளுங்க சொல்லுவாரு..

:-)))))

BTW, அங்கங்க கேக்கற ார்க்கற இதுமாதிரி மேட்டர்ஸை ட்ராஃப்ட்ல வெச்சு எழுதறேன். அவ்ளோதான்.

புடிக்காம இருந்தாலும் படிக்காம இருந்துடாதீங்க...

:-)))

பீர் | Peer said...

அவியல் கலவை குறைவு, சுவை தூக்கல்.

butterfly Surya said...

வேலை பளுவிலும் இப்படியா..??

அடை + அவியல் = கலக்கல்.

Unknown said...

அவியல் அருமை..

கமல் துணுக்கும், மேஸ்திரி துணுக்கும் படித்த ஞாபகம்..

//.. இந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்....?’ ..//

எப்படி இப்படியெல்லாம்...!

கார்ல்ஸ்பெர்க் said...
This comment has been removed by the author.
கார்ல்ஸ்பெர்க் said...

//இந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்....?//

--எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுது?

//அவர்தான் பின்னாளில் எஸ்.ஜானகியுடன் பல பாடல்கள் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியன்!//

--நான் கூட உங்களைப் பத்திதான் ஏதோ சொல்லப் போறீங்களோன்னு முதல்ல நெனச்சுட்டேன்..

அப்பறம், கமல் ஒருத்தர் தான் இப்ப ஏதோ ஓரளவுக்கு உருப்படியா பண்ணிட்டு இருக்காரு.. அவர விட்டுரலாமே.. பாவம்'ணா அவரு..

பரிசல்காரன் said...

மிக்க நன்றி பீர்..

@ வண்ணத்துப்பூச்சியார்

அடை-யா? அது எங்க இருந்து வந்தது???

@ பட்டிக்காட்டான்

அது அப்படித்தான்...

@ கார்ல்ஸ்பெர்க்

ஏங்க நானெங்க சொன்னேன் கமலை?

நாஞ்சில் நாதம் said...

:))

அன்பேசிவம் said...

தல கமலைத்தவிர எனக்கு எல்லாமே புதுசாத்தான் இருந்தது.:-))

பரிசல்காரன் said...

நன்றி நாஞ்சிலாரே!

@ முரளிகுமார்

அது!

மங்களூர் சிவா said...

nice!

Unknown said...

Romba super aviyal anna.. :))

butterfly Surya said...

அட...

அடை = பரிசல்.

பரிசல் + அவியல் = கலக்கல்

கூட்டி கழிச்சு பாருங்க.. கணக்கு சரியா வரும்..

நிகழ்காலத்தில்... said...

//இந்த ஈ அந்த பட்டறைக்கு வரும்//

நீங்க ஈன்னு நம்ப நான் ’இ’ கிடையாது ஸ்வாமி!

:))))

வெட்டிப்பயல் said...

தல,
சாரி... நான் எந்த பின்னூட்டமும் படிக்காம கருத்து சொல்லிட்டேன்... அப்பறம் மக்கள் வந்து மொக்கிட போறாங்கனு தான் ஏன் அப்படி பின்னூட்டம் போட்டேனு சொல்ல வேண்டியதா போயிடுச்சி... வேண்டாம்னா முன்னாடி போட்ட இரண்டு பின்னூட்டத்தையும் இதையும் சேர்த்து தூக்கிடுங்க...

தராசு said...

அவியல் அருமை,

அப்புறம் அந்த அமெரிக்கா, மெக்சிகோ மேட்டரை பின்னூட்டத்தில் அப்படியே டாப் ஸ்பின்னில் திருப்பி அனுப்பிய விதம் ரசிக்க முடிந்தது.

ப்ரியமுடன் வசந்த் said...
This comment has been removed by the author.
சரவணகுமரன் said...

//என்ன கொடுமை கமல் இது!//

இப்ப 2008 – தசாவதாரம். அப்புறம்?

http://www.saravanakumaran.com/2008/07/blog-post_7098.html

R.Gopi said...

//என்ன கொடுமை கமல் இது!//

இப்போ கைப்பைல குண்டு எடுத்துட்டு போய் வைக்கிற மாதிரி ஒரு படத்தில் நடிக்கறாராம்....

அது இனிமே நடக்க போகிற நிகழ்வு இல்லை... ஏனெனில், அது ஏற்கனவே நீக்கமற எல்லா இடங்களிலும் நடக்கும் ஒரு அன்றாட நிகழ்வுதான்...

இதில், கமலுக்கு தோல்வியே.... வேற ஏதாவது ட்ரை பண்ண சொல்லுவோம்...